http://i58.tinypic.com/zu1fz5.jpg
Printable View
நன்றி திரு.வினோத் சார். தாங்கள் பதிவிட்ட இணையதள செய்தியோடேயே தங்களது கண்டனத்தையும் பதிவிட்டிருந்தால் யாருடைய மனமும் புண்பட்டிருக்காது. உடனடியாக பதிவினை நீக்கியமைக்கு நன்றி. இது போன்ற பிறரது கருத்துக்களைப் பதிவிடும் போது தங்களது கருத்தையும் அத்துடன் பதிவு செய்ய வேண்டுகிறேன். மிக்க நன்றி.
நாடோடி மன்னன் முழு வண்ணத்தில் வெளிவரவிருக்கிறது என்ற தங்களது செய்தி உள்ளங்களில் எல்லாம் தேன் பாயச் செய்கிறது. இன்றே அந்த நாளாய் இருக்கக் கூடாதா?
சத்தியத் தாய் பெற்ற அழகுத் திருமகனை சத்யா கிரியேஷன்ஸ் விதவிதமாக அழகு படுத்தி நம் உள்ளங்களைக் கொள்ளைகொள்கிறது. பாராட்டுக்கள்.
அருமை நண்பர் திரு.ஜெய்சங்கர் சாரின் கருத்து வரவேற்கத்தக்கது. இது எனக்கும் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்துகிறது. நான் ஜாக்கிரதையாகத்தான் எழுதுவேன். இனி, வார்த்தைகளை தேர்ந்தெடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவேன். தலைவர் மீது கொண்ட விசுவாசத்தில் நாம் ஒருவருக்கொருவர் குறைந்தவர்கள் அல்ல. என்றாலும், எல்லார் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்படுவது முக்கியம்.
இணையதளத்தில் வெளியாகியிருந்த சில வார்த்தைகளை சுட்டிக் காட்டியதன் மூலமும், அதை ஏற்று, பெருந்தன்மையோடும் அனைவரையும் அரவணைக்கும் பண்போடும் பதிவை நீக்கியதன் மூலமும் எங்களுக்கு முன்மாதிரியாக திகழும் திரு.ஜெய்சங்கர் சாருக்கும் திரு.வினோத் சாருக்கும் நன்றிகள்.
திரு.முத்தையன் சார், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் திரு.நம்பியார் சொல்வது போல சந்தோஷத்தில் உங்களை உதைக்க வேண்டும் போல் உள்ளது. (மன்னிக்கவும் சார். உங்கள் பதிவுகளை பார்த்த சந்தோஷத்தில் சொல்லி விட்டேன்) நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பெரிய இடது பிள்ளை என்ற திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கலகலப்பாகவும், நகைச்சுவையாகவும்
வில்லுபட்டாக பாடுகிறார் நடிகர் திரு. கவுண்டமணி மற்றும் நடிகர் திரு. செந்தில் அவர்கள்
https://www.youtube.com/watch?v=KjKM...ature=youtu.be
Periya Idathu Pillai is a 1990 Indian Tamil language film, written and directed by Senthilnathan. The film features Arjun and Kanaka in the lead roles, while Goundamani plays a supporting role and he explains the life history of Makkal Thilagam MGR thru Villupattu.