http://i58.tinypic.com/ilvuaq.jpg
Printable View
மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்களுக்கு ஓர் இனிய செய்தி
நம் இனிய நண்பர் திரு பம்மலார் அவர்களின் கை வண்ணத்தில் பிரமாண்ட சைசில் கண்ணைகவரும் 2015 புத்தாண்டு காலண்டர் இன்று வெளியிட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் .
பணத்தோட்டம்
தலைவர் நடித்த பணத்தோட்டம் திரைப்படம் 52 ஆண்டுகள் நிறைவு செய்கிறது. இன்றைய சூழலுக்கும் அந்தப் படம் பொருத்தமாகத்தான் உள்ளது. கள்ள நோட்டை சமூகத்தில் புழக்கத்தில் விட்டு நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் கூட்டத்தை தலைவர் முறியடிக்கும் கதை. கள்ள நோட்டும் கறுப்புப் பணமும் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய சவாலாக உள்ளன.
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பணம் 2 லட்சம் கோடி பதுக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கறுப்புப் பணத்தை மீட்போம் என்று மார் தட்டியவர்களுக்கும் பெப்பே காட்டி கறுப்பு பணம் என்ற மாய மானின் மர்ம ஓட்டம் தொடரத்தான் செய்கிறது. கறுப்புப் பணம் வைத்திருப்போர் பற்றிய விவரங்களை பெறுவதற்காக சுவிட்சர்லாந்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் அறிவித்தார். இங்கிருந்து ஒரு குழுவும் சுவிட்சர்லாந்து சென்று வந்தது. உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில் கறுப்பு பண மீட்பு தொடர்பாக விசாரணையை கண்காணிக்க நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு முஸ்தீபு காட்டினாலும் கறுப்புபணத்தை மீட்க முடியாது என்று தெரிந்து விட்டது. ‘ஆதாரம் இருந்தால் கொண்டு வாருங்கள். சும்மா விவரம் கேட்டால் தர முடியாது. மீன்பிடிப்பது போல இந்திய அதிகாரிகள் வந்துபோவதில் அர்த்தமில்லை’ என்று பட்டவர்த்தனமாக போட்டு உடைத்து விட்டார் மும்பையில் பேட்டியளித்த இந்தியாவுக்கான சுவிஸ் தூதர் லினஸ் காஸ்டல்மல். அப்படியானால், அந்நாட்டுடன் எப்படி ஒப்பந்தம் ஏற்பட்டதாக நிதியமைச்சர் அறிவித்தார்? அந்த ஒப்பந்தம் செல்லாதா? இதுவும் கறுப்புப் பணம் போலவே மர்மம்தான். இந்தியாவிலேயே நிறைய கறுப்புப் பணம் உள்ளதாக காஸ்டல்மல் கூறியிருப்பது ஹைலைட்.
50 ஆண்டுகளுக்கு முன் கவியரசர் கண்ணதாசன் கறுப்புப் பணம் என்ற படத்தை எடுத்தார். அதில் பெரிய மனிதர் தணிகாசலம் என்ற பாத்திரத்தில், அந்த பாத்திரத்துக்கேற்ற கண்ணியம் + மிடுக்குடன் நடித்திருந்தார். பெரிய மனிதராக வெளியுலகுக்கு காட்சியளித்தாலும் கறுப்பு பணத்தை பதுக்கியுள்ளவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கும் கும்பலின் தலைவராக இருப்பார். கிளைமாக்சில் கோர்ட்டில், ‘வறுமையின் கொடுமையால் இந்த நிலைக்கு வந்ததாகவும், நான் கொள்ளையடித்தது இரண்டரை கோடி. ஆனால், இந்த நாட்டிலே உள்ள கறுப்புப் பணம் இரண்டாயிரம் கோடி’ என்று கவியரசர் கூறுவார். 50 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி என்றால் இப்போது எவ்வளவு கோடி கறுப்புப் பணம் இருக்கும்? தலையை சுற்றுகிறது.
திமுகவில் இருந்து விலகி ஈ.வி.கே.சம்பத்துடன் சேர்ந்து தமிழ் தேசிய கட்சியை தொடங்கிய கவிஞர், படத்திலும் சம்பத் கெட்அப்பிலேயே நடித்திருப்பார். அய்யா பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், நடிகர் திலகம், மக்கள் திலகம், திரு.கருணாநிதி என்று எல்லாரோடும் கவியரசர் முரண்பட்டார். ஆனாலும், அவர் கவியரசர் என்பதில் யார்தான் முரண்பட்டார்? அதனால்தான், தன்னை கடுமையாக தாக்கியவர் என்றபோதும், புரட்சித் தலைவர் முதல்வரானபின் அவரை அரசவைக் கவிஞராக்கி அழகுபார்த்தார்.
பணத்தோட்டம் படத்தில் கவியரசர் கண்ணதாசன் இயற்றிய அருமையான பாடல்.
குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம்
வண்டுவரும் தோட்டமடி மலர்த் தோட்டம்
மனிதனுக்கு தோட்டமடி மனத்தோட்டம்
அந்த மனிதன் விளையாடும் இடம் ... பணத்தோட்டம்...பணத்தோட்டம் .. பணத்தோட்டம்
.........தெருவில் திரியும் அசடன் போல பாடிக் கொண்டே கள்ளநோட்டுக் கும்பலை நோட்டம் விடும் தலைவரின் உன்னதமான நடிப்பில் தெய்வப் பாடகர் டி.எம்.எஸ்.சின் குரலில் அருமையான பொருள் பொதிந்த பாடல்.
தன்னுடைய தேவைகளுக்காக மனிதன் உருவாக்கிய பணமே, அந்த மனிதனை என்ன பாடுபடுத்துகிறது?
‘பணத்தோட்டம்’ பற்றிய முக்கியமான செய்தி ஒன்று உண்டு. இந்த தலைப்பில் பேரறிஞர் அண்ணா எழுதிய புத்தகத்தை படித்து விட்டுத்தான் காங்கிரஸ்காரனாக இருந்த தான் அண்ணா பக்கமும் அவர் கண்ட திமுகவின் பக்கமும் ஈர்க்கப்பட்டதாக தலைவர் கூறியிருக்கிறார்.
பணத்தை துச்சமென நினைத்து அள்ளிக் கொடுத்த வள்ளலின் ராமாவரம் தோட்டம் ஏழைகளுக்கு வாழ்வளித்தது. அயோக்கியர்களின் பணத்தோட்டம்.....?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
சகோதரர் திரு.யுகேஷ் பாபு,
உங்கள் மகனுக்கு எனது அன்பு கலந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். தலைவரின் ஆசி எப்போதும் உங்கள் மகனுக்கு கிடைக்க வேண்டுகிறேன்.
ரகசிய போலீஸ் பற்றிய உங்கள் சின்ன சின்ன விமர்சனங்கள் அருமை. தொடர்ந்து எதிர்பார்க்கிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i59.tinypic.com/2a7x7xc.jpg
Thanks to Sri. Vivekanandan Krishnamoorthy