https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...0c9e0dd75e88b5
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
Printable View
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...0c9e0dd75e88b5
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...677478fe358a45
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
அவன் ஒரு சரித்திரம் 001:
பிறந்தது முதலே தான் ஒரு அநாதை என்று நம்பி வரும் ஒரு இளைஞனுக்கு தனக்கும் தாய் தந்தையர் இருக்கிறார்கள் என்பது தெரிந்ததும் என்ன உணர்ச்சிகள் தோன்றும்? அதிலும் தனது குடும்பத்தாரைக் கண்டவுடன் மனதில் பொங்கி வரும் உணர்ச்சி வெள்ளத்தை நடிகர் திலகம் வெளிப்படுத்தும் விதம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. அதிலும் தனது தம்பியைக் கண்டவுடன் பாசத்துடன் அவனை நெருங்க அவன் இவரை தாக்கியது குறித்து அவர் கூறும் வரிகள் அற்புதம். பிறந்தது முதலே தான் ஒரு அநாதை என்று நம்பி வரும் ஒரு இளைஞனுக்கு தனக்கும் தாய் தந்தையர் இருக்கிறார்கள் என்பது தெரிந்ததும் என்ன உணர்ச்சிகள் தோன்றும்? அதிலும் தனது குடும்பத்தாரைக் கண்டவுடன் மனதில் பொங்கி வரும் உணர்ச்சி வெள்ளத்தை நடிகர் திலகம் வெளிப்படுத்தும் விதம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. அதிலும் தனது தம்பியைக் கண்டவுடன் பாசத்துடன் அவனை நெருங்க அவன் இவரை தாக்கியது குறித்து அவர் கூறும் வரிகள் அற்புதம்.
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
அவன் ஒரு சரித்திரம் 002:
தங்கை மீது மட்டற்ற பாசத்தை வெளிப்படுத்தும் வேடம் என்றால் நடிகர் திலகத்தை மிஞ்ச வேறு எந்த நடிகரும் கிடையாது. அண்ணன் ஒரு கோயில், தங்கை, தங்கைக்காக போன்ற படங்களில் அவர் இத்தகைய வேடங்களை சிறப்பாக செய்திருந்தாலும் இவற்றிற்க்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல் அமைந்த படம் பாசமலர். சிறு வயது முதலே தங்கைக்கு தாயாகவும் தந்தையாகவும் இருந்து பாசத்துடன் வளர்த்து, தங்கையே தனது உலகம் என்று வாழ்ந்திருந்தவருக்கு, சூழ்நிலையின் காரணாமாக தங்கையை பார்க்க முடியாமல் போய்விடுகிறது. அப்போது இருவரும் ஒருவரை எண்ணி மற்றொருவர், அவர்கள் தன மீது தன மீது எவ்வளவு பாசத்துடன் இருந்தனர் என்பதை தனது குழந்தைகளிடம் கூறுமாறு அமைந்த பாடல். பார்ப்பவர்களின் கண்களில் நீரை வரவழைத்து விடும். அண்ணன் தங்கை பாசத்துக்கு இது வரை இந்தப் படத்தை மிஞ்ச வேறு படம் வரவே இல்லை என்பதே உண்மை.
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...c39a36b759e249
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
அவன் ஒரு சரித்திரம் 003:
பிரஸ்டிஜ் பத்மநாபன் - எந்த நிலையிலும் ஒரு மனிதன் தனது கௌரவத்தை இழக்கக் கூடாது என்பதை கொள்கையாகக் கொண்டிருக்கும் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மனிதர். வேலையிலிருந்து ஒய்வு பெற்றதும் தனக்கு அந்த வீட்டில் மெல்ல மதிப்பு குறைவதை உணர்ந்து தனது ஒரே ஆறுதலான மனைவியிடம் மனம் வெதும்பி பாடும் பாடல். கவிஞரின்
"ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் இருந்துமென்ன,
வேரென நீயிருந்தாய், அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்"
என்ற வரிகளில் அவர் மனைவியின் மீது கொண்டிருக்கும் மட்டற்ற அன்பும், மற்ற சொந்தங்களின் நிலையும் நன்கு புலப்படுகிறது. 60தைக் கடந்த ஒவ்வொரு கணவனுக்கும் தனக்கு இது போல ஒரு மனைவி இல்லையே என்று ஏங்க வைக்கும் ஒரு பாடல்.
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...fb53a6e825f730
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
இது ஒரு தன்னிலை விளக்கமே . முரளியின் பார்வையில்.
மிக நெருங்கிய நண்பர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி .உன்னை மாதிரி சிவாஜியை வாழ்வின் முக்கியமாய் ,தெய்வ ஸ்தானத்தில் கொண்டாடும் நபரையும் பார்த்ததில்லை, விமர்சிப்பவனையும் பார்த்ததில்லை என்று ஏன் இதை செய்கிறாய் என்று.இதை எதிர் அணியினர் மேற்கோள் பேச ஏதுவாகி விடுமே. பிடிக்கவில்லையென்றால் மூடி கொண்டு இரேன் என்று.என் விளக்கம்.
1)நாம் எப்போதுமே உன்னதம் என்று கொண்டாடி தொழும் ஒன்றின் நிலை தாழ்வில் சமநிலை குலைவோம். அதிர்ச்சி அடைவோம்.நம் கோபமும் பல மடங்கு உக்கிரம் பெறும் .இடித்து சொல்லும் உரிமை கொண்டாடுவோம்.
2)என்னை பொறுத்த வரை நடிப்பின் உன்னதம் ,கலையின் உன்னதம் சிவாஜியே. ஆனால் அவர் எந்த காரணங்களுக்காகவும் ,அந்நிலை பிறழ்ந்தால் ,அதனால் சமக்குலைவு அடைந்து மன உளைச்சல் அடைவது, அதை உக்கிரமாக வெளியிடுவது ஞாயமே. இதுதானே ஐய்யா உரிமை,ஈடுபாடு,பக்தி,உண்மையான காப்புணர்வு.
3)உலகிலேயே ஆண்மைக்கு,அழகிற்கு சிவாஜிக்கு நிகராய் இன்னொருவனை நான் கண்டதில்லை.அது கடவுள் அவருக்கு அளித்த முக்கிய வரம் .அதை போற்றி பாதுகாத்து ,இளமையை உடலை பேணி காக்க தவறியதால் , ஆஹா நாம் போற்றும் திராவிட மன்மதன் தன்னை பேணி ,போற்றி கொண்டிருக்கலாமே என்று ஆதங்கம் .
4)இந்த உணர்வு ,அவருக்கு எந்த விதத்திலும் சமமாகா மனிதர்களை பற்றி ,அவர்கள் எப்படி புகழ் அடைந்திருப்பினும் நமக்கு எழாது .எப்படி போனால் என்ன என்ற உதாசீனம் மட்டுமே மிஞ்சும்.(சிலசமயம் பரபரப்புக்காக உதவுலாம்)
5)மாற்றணியினர் மகிழ்ந்து என் எழுத்தை மேற்கோள் காட்டுவரே என ஒரு சிலர் வருந்துவார். விமர்சகர்களுக்கும், பஜனை கோஷ்டிக்கும் வித்யாசம் தெரியாத இவர்கள் தங்களுக்கு வசதியான பகுதிகளை மட்டுமே சம்பந்தமில்லாமல்,பொருட்படுத்தி மேற்கோள் காட்டுவதன் மூலம் ,என்னை மறைமுகமாக அங்கீகரித்து , நான் எழுதிய அனைத்தையுமே ஒப்பு கொள்கிறார்கள் என்ற ஒப்புதல் வாக்கு மூலமே ,நம் நோக்கத்தை நிறைவேற்றி விடுமே?
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...9154bf67492d5e
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
https://scontent-sin.xx.fbcdn.net/hp...96&oe=5597E510
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...0d36c37e6c832d
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
https://scontent-sin.xx.fbcdn.net/hp...4e&oe=559D9054
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,