நேற்று (புதன்) இரவு, சன் டி.வி.யின் முத்தான திரைப்படங்கள் வரிசையில் ஒரு இன்ப அதிர்ச்சி.
இதுநாள்வரை புதனன்று 'டாக்டர் சிவா' ஒளிபரப்பப்போவதாக விளம்பரம் காட்டி வந்தனர். நேற்றிரவு படம் பார்க்க உட்கார்ந்தால் அவர்கள் திரையிட்டது 'சுமதி என் சுந்தரி'.
படம் துவங்கியதுமே, மனம் துள்ளிக்குதித்தது. நேரம் போனதே தெரியாமல் ஓடிப்போனது. படம் முடிந்ததும், மீண்டும் ஒளிபரப்ப மாட்டார்களா என்றிருந்தது.
சன் தொலைக்காட்சிக்கு நன்றி....