அண்ணன் தம்பியுடன் தலைவரின் வெற்றி படங்களின் இயக்குனரான சங்கர், அண்ணனின் மகன் ராமமூர்த்தியுடன் ..
http://i47.tinypic.com/2cctqnp.jpg
Printable View
அண்ணன் தம்பியுடன் தலைவரின் வெற்றி படங்களின் இயக்குனரான சங்கர், அண்ணனின் மகன் ராமமூர்த்தியுடன் ..
http://i47.tinypic.com/2cctqnp.jpg
ஒப்பனையாளர் ராமதாசை வைத்து சவாரி செய்யும் நமது தெய்வம்..கொடுத்து வைத்த ஒப்பனையாளர்
http://i49.tinypic.com/2gv6g4k.jpg
ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தியுடன் வெளிநாட்டு படப்பிடிப்பில்
http://i48.tinypic.com/2hegjmc.jpg
ஒப்பனை செய்யும் ராமதாஸ்
http://i48.tinypic.com/211rkwh.jpg
மழலைசெல்வங்களின் விழா
http://i50.tinypic.com/a3oax2.jpg
உரிமைக்குரல் படபிடிப்பில் புரட்சிதளைவருடன் லதா, இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் தேவர்
http://i50.tinypic.com/nv8bx4.jpg
அண்ணனுடன் தம்பி அண்ணாவுடன்
http://i47.tinypic.com/2wn9sup.jpg
அன்பு ரவிச்சந்திரன் சார்,
மிக குறுகிய காலத்தில், பொன்மனச் செம்மலின் ஆசிகளுடன், இத்திரியில் 1000 பதிவுகளை கடந்து சாதனை படைத்த தங்களுக்கு எனது உளங்கனிந்த பாராட்டுக்கள். மக்கள் திலகத்தை தலைவராக ஏற்றுக் கொண்ட நாமெல்லாம் உண்மையிலேயே பாக்கியசாலிகள்.
எங்கள் அனைவரையும் இத்தருணத்தில் நினைவு கூர்ந்து நன்றி கூறியமைக்கு மிக்க நன்றி.
ஓங்குக இறைவன் எம்.ஜி.ஆர். புகழ்
தொடர்க தங்கள் பணி
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
பொன்மனச்செம்மல் பட்டதை அளித்த கிருபானந்த வாரியாரின் வாழ்த்து
http://i50.tinypic.com/20tgiso.jpg
அன்பு கலியபெருமாள் சார்,
ஒப்பனையாளர் ராமதாஸ் மட்டும் கொடுத்து வைத்தவர் மட்டுமல்ல. இந்த அரிய புகைப்படத்தை காணும் மக்கள் திலகத்தின் பக்தர்களாகிய நாங்களும் கொடுத்து வைத்தவர்கள்.
எந்தவிதமான "பந்தாவும்" இல்லாமால் ஒரு புகழ் பெற்ற திரைப்பட தொடர் வெற்றி நாயகன் எளிமையாக, சர்வ சாதாரணமாக தொழில் நுட்பக் கலைஞர்ளுடன் பழகியுள்ளார் என்பதும், எந்த அளவுக்கு அவர்களை நம் இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்கள் மதித்துள்ளார் என்பதும் இந்த நிழற்படம் மூலம் புலனாகிறது..
சபாஷ் கலியபெருமாள் சார்.
நன்றியுடன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
"எங்க வீட்டு பிள்ளை" ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தில் பிரசுரமான நமது இதய தெய்வத்தின் பொங்கல் நல்வாழ்த்து செய்தியினை இங்கு பதிவிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
தைத்திங்கள் முதல் நாள்
தமிழர் தம் திருநாள்
இல்லங்கள் தோறும் மகிழட்டும்
இதயங்கள் தோறும் வாழ்த்தட்டும்
செந்நெல் தலை சாய்ந்து
செங்கரும்பு குலை சாய்ந்து
நாளை வருகின்ற நல் வாழ்வை
வரவேற்கட்டும்
================================================== ================================================== ==========
சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
நண்பர் திரு வேலூர் ராமமூர்த்தி அவர்களின் உழைப்பு மகத்தானது. வேலூர் காவேரிப்பாக்கம் மணி போலவே பச்சையப்பனும் தலைவரின் பிறந்த நாளுக்கு அளித்த போஸ்டர்களை பார்த்து வியந்து போனேன்...ஒப்பனையாளர் ராமதாஸ் புகைப்படத்திற்கு வாழ்த்து சொன்ன திரு செல்வகுமார் அவர்களுக்கு நன்றி..மேலும் 1000 திரிகளை கடந்த திருப்பூர் ரவி சார் அவர்களுக்கு இறைவனின் பக்தர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்
மக்களின் பார்வையில் வெள்ளிவிழா கண்ட என்தங்கை
http://i49.tinypic.com/5dvyw0.jpg
10.01.1988 ராணி வார பத்திரிகையின் தலையங்கம்
http://i48.tinypic.com/k55v7c.jpg
SATHUVACHARI VELLORE
http://i47.tinypic.com/98t66x.jpg
இறைவன் இன்றிருந்தால் ஈழத்திற்கு விடிவுகாலம் பிறந்திருக்கும்.
http://i49.tinypic.com/rw1h93.jpg
கொடுத்து கொடுத்து கைகளும் மனதும் சிவந்த பொன்மனசெம்மலை சுமக்க சந்தன மரம் கொடுத்த திருப்பத்தூர் சவ்வாது மலை செய்த பாக்கியம்தான் என்ன.
http://i49.tinypic.com/2vj3am9.jpg
முதல்வருக்கு வாழ்த்து சொல்லும் நடிகர் சங்கம்
http://i47.tinypic.com/2uoph8p.jpg
மேலே தெய்வம் சொன்ன அறிவுரை புனே திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு மட்டும்தானா..மற்ற மாணவர்களுக்கும் தானே. இதையெல்லாம் பின்பற்றினால் டெல்லி சம்பவம் போல் ஒரு சம்பவம் நடக்குமா..
http://i48.tinypic.com/30u6c82.jpg
வினா : வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி ! மக்களின் மனதில் நிற்பவர் யார் ?
விடை : நமது இதய தெய்வம் எம். ஜி. ஆர்.
மறைந்து 25 ஆண்டுகள் ஆனாலும், இன்றும் மக்கள் மனதில் (கலை மற்றும் அரசியல் சேவை காரணமாக) நிலையாக, நீங்காத நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் திலகம், தனது திரைப் படங்கள் மற்றும் பாடல்கள் மூலம் ஒரு எழுச்சியை ஏற்படுத்தி தமிழ் திரை உலகின் புரட்சி நாயகனாக திகழ்ந்து, நற்போதனைகளை வழங்கி மக்களை நல்வழிப்படுத்தியது மட்டுமல்லாமல், பதவி வரும் போது பணிவும் வர வேண்டும், துணிவும் வர வேண்டும், பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வர வேண்டும் என்ற தனது பாடலின்படி எளிமையாக வாழ்ந்து, மக்களோடு மக்களாக கலந்து, வீரத்தின் விளை நிலமாய் வெற்றி உலா வந்து, இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்று நினைக்க வைத்து, தமிழகத்தை ஆண்ட 10 ஆண்டுகளில் எந்த சொத்தையும் வாங்காமல் பொது நலம் கருதி மக்கள் நலன் ஒன்றையே, குறிக்கோளாக கொண்டு பொற்கால ஆட்சியை தந்த பொன் மனச் செம்மல் அவர்களின் ஆசியுடன் இத்திரியினில் எனது 100வது பதிவினை வெற்றிகரமாக பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
எல்லா புகழும் எங்கள் குல தெய்வமாம் இறைவன் எம்.ஜி. ஆர். அவர்களுக்கே - என்று கூறி,
என்னை உற்சாகப் படுத்தியும், ஊக்கப்படுத்தியும் வருகின்ற மங்காப் புகழ் மனிதப் புனிதரின் அன்பர்களாகிய -
திருவாளர்கள் :
பெங்களூர் வினோத், திருப்பூர் ரவிச்சந்திரன், சென்னை ரூப் குமார், வேலூர் ராமமூர்த்தி, புதுவை கலியபெருமாள், மற்றும்
திருவாளர்கள் ஜெய்சங்கர், மாசானம், சைலேஷ் பாபு, tfm lover, ஆகியோருக்கும்,
பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்களின் அபிமானிகள் திருவாளர்கள் ராகவேந்திரா, பம்மல் சுவாமிநாதன், நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கும்
எனது பணிவான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பன் : புரட்சித் தலைவரின் புனிதப் பாசறையில் அணி வகுத்து நின்று என்றும் அவர் புகழ் பாடும் சௌ. செல்வகுமார்
http://i47.tinypic.com/1sjxuo.jpg
மனமார்ந்த பாராட்டுக்கள் செல்வகுமார் சார்
தொடரட்டும் உங்கள் சேவை ஆவளோடு எதிர்பார்கிறேன்
மற்றும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
அன்புடன் வேலூர்
எம்ஜியார் இராமமூர்த்தி
Happy Pongal to All my Hub friends.
http://i46.tinypic.com/10h1rmc.jpg
வேலூர் மாநகரத்தின் புரட்சித்தலைவரின் பிறந்தநாள் பேனர்
அணிவகுப்பு உங்களுக்காக
http://i45.tinypic.com/qz3zhh.jpg
VELLORE FORT CIRCLE
http://i45.tinypic.com/2v80msp.jpg
I congratulate Tirupur Ravichandran for completing 1000 posts in makkal thilagam thread.
VELLORE SARATHI MANSION
http://i48.tinypic.com/2zr3nyw.jpg
Soon Vellore Ramamurthy will enter Guiness records for capturing MGR banners in and around Vellore. I think what he will be doing on 17th January? he may cross another 100 posts by that day.
VELLORE RAJAN MEDICAL OPP..
http://i45.tinypic.com/23v0nxl.jpg
Our MGR blog updated for Pongal.
Below are the posts.
http://mgrroop.blogspot.in/2013/01/p...se-movies.html
http://mgrroop.blogspot.in/2013/01/p...movies-ii.html
மிக்க நன்றி ரூப் சார்
உங்க்கள் பார்வைக்கு தலைவரின் பிறந்தநாள் பேனர்கள்
http://i45.tinypic.com/14oa8uh.jpg
MGR Visiree Abul Hassan has sent this article to us which was featured in Ananda Vikatan in 1970.
செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி; சனிக்கிழமை இரவு மணி பத்து.
டோக்கியோ நகர ஹனீதா விமான நிலையத்தில், தமிழர்களின் சிறு கூட்டம் ஒன்று காணப்பட்டது. கூடவே, ‘கிமோனோ’ அணிந்த ஜப்பானிய பெண்கள்! எல்லோர் முகத்திலும் புன்னகை; கையில் பூமாலை.
”’ஏர் ஃபிரான்ஸ்’ விமானம் இன்னும் சிறிது நேரத்தில் வரப்போகிறது. இதோ, வந்துவிட்டது. பிரயாணிகள் இறங்கிவிட்டார்கள். பஸ்ஸில் ஏறிவிட்டார் கள். இமிக்ரேஷன் பகுதிக்கு வந்தாகிவிட்டது. கஸ்டம்ஸ் பகுதியைக் கடந்துவிட்டார் கள்…”- டோக்கியோ விமான நிலைய நுழைவாயிலில் உள்ள ஒரு போர்டு இந்தத் தகவல் களைச் சொல்லிக்கொண்டு இருந்தது.
”அதோ, வேஷ்டியும் ஜிப்பாவும் அணிந்து தலையில் குல்லாயுடனும் முகத்தில் புன்னகையுடனும் வரு கிறாரே… அவர்தான் எம்.ஜி.ஆரா? மிகவும் ஸிம்பிளாக இருக்கிறாரே?” – ஜப்பானிய பெண்களின் வியப்புக் கேள்வி.
”அவரேதான்! லட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயத்தைக் கொள்ளை கொண்ட புன்னகை அது!” – ஜப்பானில் வாழும் தமிழர்களின் பதில்.
இரவு மணி ஒன்று.
டோக்கியோ. பிரபல இம்பீரியல் ஹோட் டலில் எம்.ஜி.ஆர் குழு இறங்கியது.
டோக்கியோ வாழ் தமிழரான மிஸ்டர் சந்தானம் எல்லோரையும் அழைத்துக்கொண்டு போய், தம் வீட்டில் சுடச்சுட ரசம் சாதமும் அப்பளமும் பரிமாறினார்.
தனக்கென்று அதிக வசதிகள் உள்ள அறையையோ, சௌகரியங்களையோ தேடிக்கொள்ள விரும்ப வில்லை எம்.ஜி.ஆர். மேக்கப் செய்யும் முத்து எங்கே இருந்தாரோ… தம்முடைய உதவியா ளர் எங்கே இருந்தாரோ அங்கேயேதான் அவரும் இருந்தார். வாழைப்பழம் சாப்பிடுவது என்றால் கூட, குழுவிலிருந்த 12 பேருக்கும் கிடைத்தால்தான் அவரும் சாப்பிடுவார். எல்லாவற்றிலும் அப்படி ஒரு சமத்துவம்!
அன்று ஞாயிற்றுக் கிழமை. ‘எக்ஸ்போ’ கண்காட்சியில் கூட்டம் நிறைந்து விட்டது. ”எட்டு லட்சம் பேர் உள்ளே போய்விட்டார் கள். இனிமேல் உள்ளே வர இடம் இல்லை” என்று எலெக்ட்ரானிக் இயந்திரம் அறிவித்துவிட்டது. முக்கியமான ‘கேட்’டுகள் எல்லாம் மூடிக்கொண்டுவிட்டன.
உள்ளே எப்படியாவது போகவேண்டும் என்ற துடிப்பு எம்.ஜி.ஆருக்கு. ஆனால், காவல்காரன் உள்ளே விட சம்மதித்தால்தானே? ஒரு கணம் யோசித்தேன். நேராகக் காவல் நிலைய அதிகாரி ஒருவரை அணுகி, ”இந்தோகா தகஹாஷி ஹிதேகி!” என்றேன். அவர் கண்கள் ஆவலில் மினுமினுத்தன. வியப்போடும் பணிவோடும், அருகில் இருந்த சிறிய கேட் ஒன்றின் வழியே ஸ்பெஷலாக எம்.ஜி.ஆரை உள்ளே அனுப்பி வைத்தார்.
‘தகஹாஷி ஹிதேகி’ என்பவர் ஜப்பானில் புகழ்பெற்ற, எல்லோரும் விரும்புகிற திரைப் பட நடிகர். ‘இந்தியாவின் தகஹாஷி ஹிதேகி’ என்று எம்.ஜி.ஆரை அறிமுகப்படுத்தியதும், அந்த அதிகாரியின் வியப்புக்கும் பணிவுக்கும் கேட்பானேன்?
எக்ஸ்போ கண்காட்சியில் உயரமான கூண்டு ஒன்றின் அருகே ‘ஷூட்டிங்’ நடந்துகொண்டிருந்தது. ஒரு தமிழர் அங்கே வந்து சேர்ந்தார். தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகள், சென்னைச் செய்திகள் எல்லாவற் றையும் சொல்லிவிட்டுக் கடைசி யில், ”ரொம்பப் பணக் கஷ்டம். நீங்கள் ஏதாவது உதவி செய்தால் தேவலை” என்றார்.
உடனே, தன் கால் சராய்ப் பையில் கையை விட்டு 20,000 யென் (சுமார் 400 ரூபாய்) எடுத்துக் கொடுத்துவிட்டார் எம்.ஜி.ஆர். அந்த நபர் போன பிறகு, ”என்ன ஸார் இது? அந்நியச் செலாவணி கிடைப்பது எவ்வளவு கஷ்டம்! நீங்கள்பாட்டுக்கு 400 ரூபாய் மதிப்புள்ள தொகையைத் தூக்கிக் கொடுத்துவிட்டீர்களே?” என்றேன் கொஞ்சம் பதற்றத்துடன்.
”என்ன செய்வேன்? ஒரு தமிழர் வந்து கஷ்டம் என்று கேட்கும்போது மறுக்க எனக்கு மனமில்லை” என்றார் எம்.ஜி.ஆர்.
அந்நியச் செலாவணி சுருக்கமான அயல் நாட்டிலும், கொடுத்துப் பழகிய அவருடைய கை சுருங்கவே இல்லை.
ஜப்பானிலிருந்து ஹாங்காங்குக்குப் புறப்படுகிற நாள்.
அன்று காலையில், பாங்க் ஆஃப் ஜப்பானில் உயர் அதிகாரியாக உள்ள சைகோ என்பவரைச் சந்திப்பதற்காக எம்.ஜி.ஆர். சென் றார். சைகோ, சிறுசேமிப்புத் துறைத் தலைவர். எம்.ஜி.ஆரும் அவரும் சிறுசேமிப்பு பற்றிக் கருத் துப் பரிமாறிக்கொண்டார்கள். அந்தச் சந்திப்பு முடிந்ததும் டோக்கியோவில் உள்ள இந்தியத் தூதரைப் பார்க்கச் சென்றார். அவரோடு பேசி முடித்துவிட்டுக் கிளம்பியபோது மணி 11.30. பிற்பகல் 2 மணிக்கு விமானம்.
இந்தியத் தூதுவரின் அந்தரங் கக் காரியதரிசியான ஜெயராம னின் வீட்டுக்குப் போனோம். அவர் மனைவி அப்போது ஊரில் இல்லாததால், அவரே சமைத்து ஃபிரிஜ்ஜில் வைத்திருந்த சாப்பாட்டை எடுத்துத் தந்தார். சாம் பார், ரசம், தயிர் போட்டுச் சாப்பிட்டார் எம்.ஜி.ஆர்.
அதன்பின், விமான நிலையம் கிளம்பினோம்.
ஜப்பானில் எம்.ஜி.ஆர் இருந்த பத்துப் பதினைந்து நாட்களும் அவர் ஒரு சுதந்திர மனிதராக நடமாடினார். தெருக்களில் காலாற நடந்தார். எலெக்ட்ரிக் ட்ரெயினில் நின்றுகொண்டு பிரயாணம் செய்தார். வெகு வருஷங்களுக்குப் பிறகு கிடைத்த சுதந்திரம்… பரிபூரணமான சுதந்திரம்..!
ஹாங்காங் வந்து சேர்ந்ததுமே எம்.ஜி.ஆரின் சுதந்திரம் பறிக்கப் பட்டுவிட்டது.
காரணம் – விமான நிலையத்தில் நிறைய தமிழர்களும், வேறு பல இந்தியர்களும் எம்.ஜி.ஆரை வரவேற்பதற்காக வந்து கூடியிருந் தார்கள். பலர் மாலை அணிவித் தார்கள். பலர் கட்டித் தழுவி முத்தமிட்டார்கள்.
ஜப்பான் எம்.ஜி.ஆர். ஹாங்காங் வந்ததும், தமிழ்நாட்டு எம்.ஜி.ஆர். ஆகிவிட்டார்.
”ஏதேது..! இங்கே படப்பிடிப்பே வைத்துக்கொள்ள முடியாது போலிருக்கே!” என்று எம்.ஜி.ஆரே சொல்லும் அளவுக்கு ஹாங்காங் விமான நிலையத்தில் ரசிகர்களின் அன்புத்தொல்லை ஆரம்பமாகி விட்டது.
அதைப் பார்த்தபோது என் மனத்தில் ஏற்பட்ட எண்ணம் இதுதான்…
எம்.ஜி.ஆர். இன்னும் ஓரிரு மாதங்கள் ஜப்பானில் இருந்திருந்தால், அங்கேயும் இப்படிப்பட்ட ரசிகர் கூட்டம் உருவாகிவிடும்!
காரணம் – அவருடைய ராசி அது!