http://i1065.photobucket.com/albums/...psx8qcvoqm.gif
கொங்கு தமிழ் விளையாடும் கோவை பாஷையில்
சிறுத்தையும அஞ்சும்
சிங்கத்தமிழனின்
கௌ
********ர
************வ
*****************ம்
மொத சீனே பட்டைய கெளப்புது.அந்த மொத சீனிலும் அவரு நடிக்கிறத எங்க காமிக்கிறாங்க?அவுரு பூட்ஸ் காலு நடிக்கிறததான காமிச்சாங்க?அதே அவ்வளவு அட்டகாசம் போ!
பெரிய வக்கீலு,நல்லாப் படிச்சவரு,
அப்பிடித்தேன் சீனுகளும
இ ருக்கும்னுநினைச்சா அடுத்த சீனே பகீர்னு ஆயிடுச்சு.ஏன்னா அடுத்த சீனே தீர்த்தம் சாப்பிட்டுட்டு இருப்பாரு.அதுவும் வீட்டுக்குள்ளையே.பத்தாதுக்கு ஹரே ராமா ஹரே ராமா ன்னு பஜனை பாட்டெல்லாம் பாடுவாரு.ஆனா
அ தெல்லாம்அவுரு குடுக்குற ஆக்டடுலவைச்ச கண்ண விலக்க தோணாது.
http://i1065.photobucket.com/albums/...psyuybxdnt.jpg
அந்த ரெண்டாவது சீனூலேயே நல்லா தெரிஞ்சு போச்சு.மனுஷன்
நல்லா தெனாவட்டான ஆளு. எதுக்குமே பயப்படமாட்டாருனு.அப்பிடியோரு குணம்னு.பேப்பரு படிக்கிற சீனு வரும் பாரு.அந்த பேப்பர்ல இருக்குற விஷயத்தைஎன்னா ஒரு ஏத்த இறக்ககத்தோட பேசுவாரு பாருங்க.இன்னும் கொஞ்சம் அப்பிடியே படிச்சுட்டு இருக்கமாட்டாரா?நாமளும் அத கேட்டுக்கிட்டே இருக்கலாமேன்னு தோணும்.படிச்சு முடிச்சுக்குங்கூட இருக்க மாட்டாரு.
டேய்ய்ய் கண்ணா
அப்பிடின்னு ஒரு சவுண்டு விடுவாரு பாருங்க. சும்மா தியேட்டரா கப்சிப்னு ஆயிடும்.கண்ணன் வந்து (அதாங்க சின்ன சிவாஜி)ஏதோ சொல்ல வருவாரு.அவுரு அடுத்த வார்த்தைங்ககூட சொல்லியிருக்க மாட்டாரு.அதுக்குள்ள இங்கிலூசுல கத்துவாரு.அடேயப்பா! என்னா ஒரு, கோவம் மனுஷனுக்கு.பத்தாயிரம் வெடி வெடிச்ச மாதிரி இருக்கும்தியேட்டருக்குள்ள.
அப்புறமாசுந்தரராஜனை கூப்பிட்டு விசாரிக்கிற சீனு.உக்கார்ந்து இருக்குற போசும்.,பைப் புடிக்குற ஸ்டைலும்.,
பயங்கர பந்தாவா இருக்கும்.சுந்தராஜன் எல்லாத்தையும் சொல்லி முடிச்ச பின்னாடி.எங்கிட்ட சொல்லிட்டியல்ல நான் பார்த்துக்கிற போடாம்பாரு. அதுல என்னா ஒரு அசால்ட்டாஅந்த மனுஷன் ஏக்ட்பண்ணியீருக்கிறாருப்பா. நெம்பர் ஒண்ணு ஏக்ட்டு. அப்புறமா,
வீட்டுக்குள்ளையே அந்தக் கேஸை விசாரிக்கிறமாதிரிசீன் வெச்சுருப்பாங்க.சீனா அது? சீனா வெடிகுண்டு.அப்படியொரு சீனை உலத்துலய எங்கயும் யாராலயும் எடுக்க முடியாதுய்யா!
தீர்ப்புக்கு அப்புறம் , என்னடா கண்ணாஇந்தக் கேஸை ஜெயிக்கவே முடியாதுன்னியே? அப்படிம்பாரு பாருங்க.அதுலதான் என்ன ஒரு கெத்து.உடனே கொஞ்சம் மெதுவா
ஜ ஸ்டீஸ் வைப் என்னா சொல்லறா?ன்னு ஒரு கேள்வி.ஜஸ்டீஸே இல்லைன்னு சொல்லறா ன்னு பதில் வரும்.அப்ப எல்லாம்அவரோட அந்த பந்தா அவுரு விடுற அந்த புகையிலேயே தெரியும்.அவுரு விடுற அந்தப் புகை கூட ரவுண்டு கட்டி அடிக்கும்.
சுந்தரராஜன் வைக்கிற பார்ட்டிக்கு போவாரு.அப்ப ஒரு பாட்டு. கிளப் பாட்டு மாதிரி. அட இவரு இருக்குற சீனுல எதுக்குடா இப்படி ஒரு பாட்டுன்னு நெனப்பு போகும்.ஆனாஅந்தப் பாட்டுல அவுரு பண்ற ரவுசு அது ஆகாசத்திற்கும் மேல.உக்காந்து கிட்டே ரெண்ட கையையும்அப்பிடி இப்பிடின்னு ஆட்டுவாரு. சாமி ! அது பின்னியெடுக்க ற ஸ்டைல்லுப்பா
http://i1065.photobucket.com/albums/...psng6z1zfy.jpg
அப்புறமா அதே மாதிரி வம்புல மாட்டிட்டு வந்து நிப்பாரு சுந்தராஜன்.
அப்பவும் அவனுக்கு சப்போட்டு பண்ணுவாரு.சின்ன சிவாஜிக்கு இது புடிக்காம பிரச்சனை ஆக,வீட்டை விட்டு வெளிய போகச் சொல்லிடுவாரு.
அய்யோ சாமி!கொப்புரானே!பாலூட்டி வளர்த்த கிளின்னு ஒரு பாட்டுஙக.கொன்னுப்புட்டாரு.எந்தப் பயலும் எதுக்க நிக்கவே யோசிக்கனும்.அப்படி ஒரு மொறைப்பு.அப்படி ஒரு ஆக்ரோஷம்.
இதெல்லாம் நிஜமா?இப்புடியல்லாம் ஆக்ட்டு குடுக்க முடியுமா?ன்னு எல்லாரையும் யோசிக்க வைக்குற பாட்டு சீனுங்க.செல படங்கள்ல்ல பாட்டு நல்லா இருக்கும்.அந்தப் பாட்டுங்களில் யார் வேணாமுனாலும் நடிச்சு பேர் வாங்க முடியும்.ஆனா இந்த மாதிரி பாட்டுகள்ள எல்லாம் எவனுமே எட்டடி இல்ல பதினாறு அடி தள்ளி நின்னு யோசிக்கனும்.
சின்ன சிவாஜி கோட்டு எடுக்க வீட்டுக்கு வருவாரு.பெரியம்மாகிட்ட பேசிட்டு இருப்பாரு.சித்த நேரம் ரெண்டு பேரும் பேசிகிட்டே எதார்த்தமா திரும்புவாங்க.மாடியிலிருந்துஒரு புகை மேகக்கூட்டமா தவழ்ந்துட்டுஇருக்கும்.காமிராவைக்
கொண்டு போவான் பாரு.என்னா
ஒரு அட்டகாசமா!வலது காலைத் தூக்கி இடது கால் பக்கத்துல சாச்சு இடது கையால பைப் புடிச்சுகிட்டு
எங்க வந்தே?ன்னு பைப் புடிச்சிருக்கிற
இடது கைய ஆட்டி சைகை செஞ்சுகிடே கேப்பாரு.அவரோட அந்த தோரணைகதி கலங்க வைச்சுடும். அந்தஒரு சீனைப்பத்திஅவுரு நடிச்சிருக்குற அளவுக்கு விலாவாரியா எழுதனும்னு நினைச்சா எவனா இருந்தாலும் கஷ்டம்தான்.அப்பிடி ஒரு ஜம்பமான ஆக்டடுப்பா.
அப்புறமா கண்ணா நீயும் நானுமா?ன்னு பாட்டு.இந்தப் பாட்டுல அவுரோட ஏக்ட்டசொல்ல ஆரம்பிச்சா நாள் பூராவும் சொல்லிட்டேதான் இருக்கணும்.பிச்சு உதறியிருப்பாரு.அந்தப்பாட்டுலபடில இருந்து இறங்கி வர்ற சீனு வரும்.ரெண்டு மூணுபடி மொள்ள (மெதுவாக)இறங்கி வருவாரு.மிச்சப்படிகளையும் அதே மாதிரி தான் மொள்ள நடந்து வருவாருன்னு பார்த்தா தீடீர்னு தளந்த(தளர்ந்த)மாதிரி ஒரு ரெண்டு ஸ்டெப் நடை மறுபடி நெஞ்ச நிமித்திட்டு கெத்தா ஒரு நட அப்பிடின்னு மாறி மாறி நடந்து பொளந்து கட்டியிருப்பாரு.ராஜாமேக்கப் போட்டுகிட்டு வர்ற சீனெல்லாம் உடம்புல உயிர் இல்லாமப் பண்ணிடும்.
நம்மளுக்கே இப்படின்னா சூட்டிங் எடுத்தப்போ அவுகளுக்கு (அவர்களுக்கு)எல்லாம் எப்புடி இருந்திருக்கும்.தெனாவட்டான பாட்டுன்னா இதுதான்யா.tms அய்யா உங்கோளுக்கோரு சல்யூட்டு.
கோர்ட்டு சீனெல்லாம் முடிஞ்ச பின்னாடி தீர்ப்பு நாளன்னிக்கு வீட்டுல, படிக்கட்டுலஉட்கார்ந்திருப்பாரு.
உக்காந்து இருக்குற போசு இருக்குதே.அதைப் பாத்தா, கொலவெறியோட வர்ற புலி கூட பயந்து ஓடிடும்.அப்புடி இருக்கும்யா.
பண்டரிபாய்கிட்ட கேசுகள்ள(கேஸ்கள்) படிப்படியா ஜெயிச்ச விதத்தைபுட்டு புட்டு வைப்பாரு பாருங்கோ.அடிவயிரு கலங்கிடும்.காலைத்தூக்கி ஸ்டுலு மேலவச்சு சடார்னு தலையத் திருப்பி
பைப் வச்சுருக்கிற இடது கைய தூக்கி ஒரு லுக் விடுவாருப்பா.அந்த இடத்துலய நாம செத்தம் போ!
அவரோட சாதாரண நடிப்பே மிரட்டலாஇருக்கும்.இது பயங்கரம்.
இவ்வளவெல்லாம் பார்த்துட்டு அந்தக் கடைசி சீனை நம்மனால சொல்ல முடியாதுப்பா.திராணி இல்ல.அது ரொம்ப உருக்கிடும்.
சுந்தரம் அய்யா உங்களுக்கு இந்த ஒரு படமே போதும்யா.
அடடா!சின்ன சிவாஜியப்பத்தி ஒரு வரி கூட சொல்லலியேப்பா.
அவரோட அந்த பிம்பமே கண்ண விட்டு மறைய மாட்டேங்குது.என்ன பண்றது?இன்னொரு நாளு பாப்பம்.(பார்ப்போம்)
http://i1065.photobucket.com/albums/...shfal28b3.jpeg
தன்நிலை தாழாமையும் அந்நிலை தாழ்ந்தக்கால்,உயிர் வாழாமையும் மானம் எனப்படும்.
இதுதான் கௌரவம்.