http://i64.tinypic.com/wcdao1.jpg
Printable View
http://i64.tinypic.com/2rfg235.jpg
....தொடரும் ....
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''பெற்றால்தான் பிள்ளையா '' இன்று 49 ஆண்டுகள் நிறைவு பெற்று பொன் விழா ஆண்டு துவங்குகிறது . '' ஒரு தாய் மக்கள் '' இன்று 44 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது .
குறவர் வேஷம் போட்டு
குறவஞ்சி பாடிய
தேடி வந்த மாப்பிள்ளை யாரோ?
படகோட்டி சென்று மீனவ நண்பனை
கண்டது யாரோ?
நாளை நமதே என்று
நம்பிக்கை அளித்தவர் யாரோ?
என் அண்ணன்
என்று சொல்லும்
ஊருக்கு உழைப்பவன் யாரோ?
பணத்தோட்டத்தை தேடிச் சென்ற
மலைக் கள்ளன் யாரோ?
ஓரம் போ! என்று சொல்லும்
ரிக் ஷாக்காரன் யாரோ?
காதல்வாகனம் ஏறி
குமரிக்கோட்டம் சென்றவர் யாரோ?
அடிமைப் பெண்னை
விடிதலை செய்தது யாரோ?
கூண்டுக் கிளியை
பறக்க விட்டது யாரோ?
மந்திரி குமாரியை
மணக்கச் சென்றவர் யாரோ?
ராஜ குமாரியை
கண்டவர்தான் யாரோ?
பெற்றால்தான் பிள்ளையா?
என்று கேட்டவர்தான் யாரோ?
நீரும் நெருப்புடனும்
விளையடியவர்தான் யாரோ?
தாழம் பூவை அழகு என்று
சொன்னவர்தான் யாரோ?
தொழிலாளிக்கு
தோள் கொடுத்த தோழர்தான் யாரோ?
யார் அவர்?
புதுமை பித்தனா?
ராஜா தேசிங்கா?
நாடோடியா?
நாடோடி மன்னனா?
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனா?
யார்தான் அவர்?
அவர்தான்........!
எதிர்வரும் 2017-ல்
நூற்றாண்டு விழா காணப் போகும்
புது யுகத்தின் புரட்சி நாயகர்
டாக்டர் எம்.ஜி.ஆர்!
courtesy -புதுவை வேலு
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.
எல்லோரிடமும் அன்பு பாராட்டிய
அரும்பெரும் தலைவர் எம்.ஜி.ஆர்.
தேசத் தந்தை காந்தியிடம் - நேசம்
மூதறிஞர் ராஜாஜியிடம் - பாசம்
கர்மவீரர் காமராஜரிடம் - எளிமை/பற்று
அறிஞர் அண்ணாவிடம் - தலைமை பண்பு
கலைஞர்/ சிவாஜி இருவரிடம் - நட்பு (பாராட்டிய)
சமத்துவ தலைவர் எம்.ஜி.ஆர்.
"கட்டழகர்களில் கண்டாலே போதுமென!
காந்தப் பார்வை பட்டாலே போதுமென!
பசும்பொன் மேனி தொட்டாலே போதுமென!
பாசத்தோடு
கை கொடுக்க வேண்டும் என எண்ணம், எண்ண!
இயற்கையோடு கலந்துவிட்ட
"காஞ்சித் தலைவனை"
நமது நெஞ்சத்தில் வைத்து
அவரின் புகழை
போற்றுவோமே!
இந்நாளில்!
தொடர்ந்து
மூன்று முறை முதல்வராய்
இருந்த
முத்தமிழ் முதல்வருக்கு
நூற்றாண்டு!(1917 – 2017)
வாருங்கள் ரத்தத்தின் ரத்தங்களே!
மங்காத புகழுக்கு
ஊறு விளைவிப்போரை
வேறோடு சாய்ப்போம்!
காலத்தை வென்ற காவிய நாயகனுக்கு
அன்பு என்னும் மாலையை
அவரது அழியாப் புகழுக்கு சூடுவோம் !.
மனித புனிதர் எம்.ஜி.ஆர் புகழ்
இன்று போல் என்றும் வாழ்க!
பல்லாண்டு வாழ்க!
வாழ்க! வளர்க! எம்.ஜி.ஆர் திருநாமம்.
courtesy -புதுவைவேலு
சத்துணவு தந்த
சரித்திர நாயகனே!
முத்தமிழ் உள்ளவரை
முழங்கும்
உனது பெருமை!
பாட்டுக்கோர் புலவன் பாரதியின்
நூற்றாண்டு
புகழ்
பரப்ப
மகா கவிக்கு
சிலை எடுத்து சிறப்பித்தாய்
உனது புகழ் - மங்காது
வாழிய! வாழியவே!
நெஞ்சை அள்ளும் தஞ்சையிலே!
தமிழ் பல்கலைக் கழகம் தந்தாய்
தலைநகர் டில்லியிலே
தமிழ்ச் சங்கம் தோன்ற
பேருதவி புரிந்தாய்!
வையகம் போற்றும் வண்ணம்
மாட மதுரை மாநகரில்
ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டை
உவகையுடன் செய்திட்டாய்!
மதுரை வீரனே!
உம்-புகழ்வாழ்க!
"இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்
ஊர் மட்டுமல்ல உலகமும்
சொல்லும்படி வாழ்ந்த
திலகம் இவர்!
மக்கள் திலகம் இவர்!
கழகம் துவங்கி
ஐந்து ஆண்டுகளில்
மகுடம் சூடிய
மன்னாதி மன்னன் நீங்கள்!
'தொட்டனை ஊறும் மணற் கேணி
மந்தர்க்கு கற்றனை ஊறும் அறிவு'
தொட்டது துலங்கும்
ஆசியும், ராசியும்
மேலோங்கி வளரும்
இவரது கை பட்டால்?
நடிகர் சிவகுமாரின்
கல்வி அறக்கட்டளை
தழைத்தோங்கி
வளர்வதற்கு காரணம்
இவரது கைராசி !
திரை படங்களில்
சூளுரைக்கும் வசனத்தை
சுருக்கி சொன்னவர் நீவீர்!
தற்போது
தமிழ் படங்களில்
பவனி வரும் "பன்ச்ச்" வசனத்தின்
முன்னோடியும்
நீ(ர்)தான்!
கேள்வி = நிலைத்து நிற்கும் எனது அதிகாரத்தின் ஆழம் தெரிய வில்லையா உமக்கு?
பதில் = உங்களது அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா?
நிலைத்து நிற்பதற்கு?
கேள்வி = மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?
பதில் =சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஒடும்.
கேள்வி = தோல்வியே அறியாதவன் நான்!
பதில் = தோல்வியை எதிரிக்கு பரிசளித்தே பழகியவன் நான்!
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்
அல்லாவா?
courtesy- புதுவைவேலு
http://i68.tinypic.com/2dtygk7.jpg
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு, சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில், முழங்கால் அளவு நீரில், இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழுவுடன், அனைத்துலக
எம். ஜி. ஆர். பொது நல சங்கம் இணைந்து, அனைத்து எம். ஜி. ஆர். பக்தர்கள் என்ற பெயரில், உணவுப்பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாக்கெட்களை, கடந்த புதன் கிழமை முதல், காலை மற்றும் மதியம் என இரண்டு வேளைகளில், ஞாயிற்று கிழமை மதியம் வரை தொடர்ந்து வழங்கி வந்தது.
சென்னையில் திங்கள் கிழமை முதல் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும், இன்று (08-12-15) பழைய துணிகளை சேகரித்து கொண்டு, நாளை (09-12-15) உடமைகளை இழந்தோருக்கு வழங்கவுள்ளது. மேலும், 15 மூட்டை (1,500 பாக்கெட்) குடிநீர் வழங்கவும், பிஸ்கட் பாக்கெட் மற்றும் ரொட்டி பாக்கெட், மின்சார இணைப்பு இன்னும் கொடுக்காத பகுதிகளில் கொசு வத்தி வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
இதற்கான செலவுகள், இந்த இரு அமைப்புக்களின் நிதியிலிருந்தும், மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அன்பர்கள் அளிக்கும் நன்கொடைகளின் மூலமும், ஈடு கட்டப்படுகிறது.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சி பின்னர் பதிவிடப்படும்.
பொன்மனச் செம்மலே
பொங்கு தமிழ் அண்ணலே!
போற்றுகிறேன் -உம் புகழை
பிரான்சு எம்.ஜி.ஆர். பேரவையிலே
ஆன்றோரே! சான்றோரே!
செவி சாய்ப்பீர்
செம்மலின் சிறப்புரைக்கும்
புதுவை வேலுவின்
கவிதை (கவிமலர்) கேளீர்!
தெய்வத் தாய் "சத்திய பாமா"
ஈழத்தில் ஈன்றெடுத்த
ஈகை குணம் படைத்த
ஈசன் (கர்ணன்)
மருதூர் கோபால மேனன்
இராமச் சந்திரன் என்னும்
தமிழ் நேசன்!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவரே!
வையகம் போற்றிடும் வள்ளலே!
ஏழைகளின் இதயக் கனியே
உமது திருநாமம் போற்றுகிறோம்
இன்று!...
நாங்கள் ஏற்றுகிறோம்
உனது
புகழ் - என்னும்
"ஒளி விளக்கை"
அகிலமெல்லாம்
"ஆனந்த ஜோதியாய்"-அது
எரியட்டும்!
உனது
வரலாற்று காவியத்தில்
"கலங்கரை விளக்கமாய்"-
அதன் ஒளி பரவட்டும்!.
புரட்சி நடிகரே!
"இளமையில் கல்"
என்பார்கள்
ஆன்றோர்கள்.
அது!
உனது வாழ்வில்
இயலாமல் போனதால்தான்
பால்ய பருவத்தில்
"பாய்ஸ் கம்பெனியில்"
பால பாடம் படித்தாயோ?
அவர்கள் நடத்தும்
நாடகத்திலும்...
நன்றாக நடித்தாயோ?
காலத்தை வென்றவரே!
இரட்டை விரல் காட்டி
இரு முறை எமனையே
எச்சரித்தவர் நீங்கள்!
கரை வேட்டிதான்
(கருப்பு சிகப்பு - வெள்ளை)
நீங்கள்! அணீவீர் !
என்றாலும்,
உங்களது கரங்களோ
« உழைக்கும் கரங்கள் ».
எங்கேயும் எப்போதும்
தப்பாது…
« அன்னமிட்ட கை »
அது!
வாள் ஏந்தும் வீரக் கை!
வஞ்சகத்தை வீழ்த்தும் கை!
சூல் ஏந்தும் கொள்கை துலங்கும் கை!
துன்புறுவோர் தோளேந்தும் துயரத்தை
துடைக்கும் கை!
பாரி வள்ளல்
பாரத் எம்.ஜி.ஆர்.
அவர்களது « கை »
" நீர் இன்றி அமையாது உலகு »
மக்கள் திலகமே
நீர் (எம்.ஜி.ஆர்) இன்றி
இல்லை!
திரை உலகு.
திரைப் பட துறையில்
நீங்கள் ஒரு
பன்முகப் படைப்பாளி!
ஆம்!
அன்பு, பண்பு, தாய்ப் பாசம்,
வீரம், புரட்சி, நாட்டுப் பற்று,
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு,
தியாகம், தர்மம், சமுதாயத் தொண்டு,
போன்ற
பன்முக பாத்திரங்களை
ஏற்று நடித்த ஆற்றல்மிகு நடிகர்.
அழகை அள்ளி அள்ளிக் கொட்டும்
எழில் வனப்பு
உமது மேனி!
முத்தமிழை சுவைப்பதிலோ
நற்றமிழ் தேனீ!
தங்கத்தையொத்த உமது நிறம்
"எங்கள் தங்கத்தின் மேனி என்பர்!
அறிஞர் அண்ண இருந்த
தி மு க
உனது
தாயின் மடி
"குடியிருந்த கோயில்"
என்பர்!
பாட்டுலகில்
பாட்டாலே புத்தி சொல்லும்
பாவலர்கள் பலர் உண்டு!
அவர் தொண்டு
அறிந்து கொண்டு! வாய்ப்பளிக்க!
திரையுலகில் உனைப் போல்
யாருண்டு?
புரட்சி தலைவரே!
உமது வாழ்க்கை
வெற்றிகளும் சாதனைகளும்
நிறைந்த
வீரம் செறிந்த காவியம்!
புகழ் மணக்கும்
புதிய புறநானூறு!
இறவாப் புகழை
இறந்தும் பெற்ற
இதயவீணை! – இவர்
தாய் மூகாம்பிகையின்
அருளைப் பெற்ற
ஆன்மீகப் புரு-ஷர்! - இவர்
உலகம் சுற்றும் வாலிபனே!
அரசியல் உலகில்...
சூது கவ்வியபோது!
உனது
ரத்தத்தின் ரத்தங்களை
நீதிக்கு தலை வணங்க சொன்னவர்
நீங்கள்!
ஆம்!
நீதிக்கு பின் பாசம் என்று
உணர்த்தியவரும்
நீங்கள்தான்!.
தூய உள்ளம் படைத்த தூயவரே!
தாயை வணங்கும்
"தலைவன்" - நீவீர்!
ஆம்!-அதனால்தான்
தாயைக் காத்த தனயன் ஆனாயோ?
சோசலிசம்
முதலாளித்துவம்
இரண்டும் கலந்து கொள்கையை
வகுத்து
அதிமுக வை உருவாக்கிய
அரும்பெரும் தலவர்!
எம்.ஜி.ஆர்.
சலிப்பும் ஓய்வும்
தற்கொலைக்கு சமம்
என்னும்
பெருந்தகை பெரியாரின்
கோட்பாட்டை
கோட்டையில் பொறித்தவர்
நீங்கள்!
கடமை
கண்ணியம்
கட்டுப் பாடு என்னும்
பேரறிஞர் அண்ணாவின்
தத்துவத்தை
காலத்தால் அழியாது
பாது காத்தவர் நீங்கள்!
கர்மவீரர் காமராஜரின்
திருவுருவபடத்தை
சட்டமன்றத்தில்
திறந்து வைத்து -அதில்
"உழைப்பே உயர்வு தரும்"
என்னும் வாசகத்தை
கலைஞரிடம் யாசகம் பெற்று
பதிவு செய்த
அரசியல் நாகரிகம் அறிந்த
முன்னோடி எம்.ஜி.ஆர்.
கொடுத்து சிவந்த கரங்களுக்கு
"நம் நாடு"
கொடுத்த பட்டங்கள்
"நவ ரத்தினமாய்"
ஜொலிக்குதப்பா!
புரட்சி நடிகர் - கலைஞர்
பொன்மனச் செம்மல் - வாரியார்
மக்கள் திலகம் - தமிழ் வாணன்
புரட்சி தலைவர் - கே.ஏ.கிருஷ்ணசாமி
இதயக் கனி பட்டம் = அறிஞர் அண்ணா வழங்கியது
பாரத் ரத்னா விருது= இந்திய அரசின் உயர்ந்த விருது
டாக்டர் பட்டம் = சென்னை பல்கலைக் கழகம் தந்தது
சென்னை நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாக பல இடங்களில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி .பெங்களூர் நகர பல எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாக பல உதவி பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . தொடர்ந்து உதவிகள் செய்ய பல எம்ஜிஆர் மன்றங்கள் தங்களை ஈடு படுத்தி கொண்டு வருகிறார்கள் .
திரு முத்தையன் அவர்களுக்கு
மக்கள் திலகத்தின்
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் திரைக்காவியத்தில் இருந்து அற்புத படங்களை பதிவிட்டமைக்கு நன்றி.
புத்தன் ஏசு காந்தி எம்.ஜி.ஆர் பிறந்தது பூமியில் எதற்காக .... ? தோழா ... ஏழை நமக்காக....
என உலகறிய உரக்க சொல்லி வரும் அனைத்துலக எம்.ஜி.ஆர்.பொதுநல சங்க உறுப்பினர்கள் மற்றும் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு அன்பர்கள் சென்னையில் களமிறங்கி அரும்பணி செய்து வருகிறார்கள் கடந்த ஒரு வாரமாக....
உணவு உடை உறக்கம் என அனைத்திலும் கவனம் செலுத்தி கொசு வத்தி முதற்கொண்டு அளித்து வரும் இப்பெருமான்கள் நம் மக்கள் திலகம் இல்லாத குறையை மக்கள் உணர விடாமல் - அவர் இருந்து இருந்தால் என்ன வெல்லாம் யோசித்து களப்பணி ஆற்றி இருப்பார்... ஆற்ற பணித்து இருப்பார் என யூகித்து செயல்பட்டு வரும் அந்த உன்னதர்களின் தாழ் பணிகிறேன்.....
http://i66.tinypic.com/2aet8u8.jpg
Courtesy : Facebook - By A.R. Hussain
மக்கள் திலகத்தின் மாண்பு குறித்தும் அவர் இயற்கையாக நடிக்க கூடியவர் என்றும் புகழாரம்சூட்டி, வாசகர் கேள்வி ஒன்றுக்கு, அக்கால பத்திரிகை தெரிவித்த பதில் :
http://i63.tinypic.com/16iidsw.jpg
நன்றி : முகநூலில் பதிவிட்ட திரு. ஏ. ஆர். ஹுசைன்
மக்கள்திலகம் வழங்கும் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் "- பதிவுகள் நன்று... திரு முத்தையன் அம்மு அவர்கள் சிறப்பான 9001 பதிவுகளை கடந்ததற்கு இனிய நல்வாழ்த்துக்கள்...மேலும் பற்பல பதிவுகள் காண ஆவல்...திரு வினோத் அவர்கள் ராமவரம் தோட்டத்தில் பொன்மனசெம்மலின் இல்லத்தில் எடுத்த புகைப்படங்கள் பதிவிட்டதற்கு நன்றி. இதயம் கனத்தது... திரு செல்வகுமார் மழை , வெள்ளத்தில் மக்கள்திலகம் ஆற்றிய பாங்கினை கூறியுள்ளது சிறப்பானது...
மக்கள் திலகம் திரி நண்பர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் வணக்கம்.
சமீபத்தில் பெய்த அடை/தொடர் /பேய் மழையால் , ஏற்பட்ட மின் தடை/
நிறுத்தம் /துண்டிப்பு , மற்றும், கணிணி பழுது , பராமரிப்பு ஆகிய காரணங்களால்
நமது திரியில் பங்கு கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டது .
இப்பொழுது அனைத்தும் சரியாகிவிட்டது. கடந்த 10 நாட்களாக நண்பர்களுடன்
செய்திகளை பகிர்ந்து கொள்வதில் தடை ஏற்பட்டது குறித்து வருந்துகிறேன்.
கடந்த வாரத்தில் உள்ளூர் நண்பர்களின் அலைபேசி /தொலைபேசி தொடர்புகள்
துண்டிப்பால் நண்பர்களின் நலம் , பாதுகாப்பு குறித்து விசாரிக்க கூட முடியவில்லை.நல்லவேளையாக அனைத்து நண்பர்களும் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் மதுரை, கோவை, திருப்பூர், பெங்களுரு, திண்டுக்கல் ,நகர நண்பர்கள் சென்னைவாழ் நண்பர்களின் நலம், வீடு, உடைமைகள் , பொருள்கள் பாதுகாப்பு,மழை நிலவரம், வெள்ள சேதம் ஆகியன குறித்து மிகுந்த அக்கறையுடன் விசாரித்து விவரங்கள் அறிந்து கொண்டனர்.
அவர்கள் அனைவருக்கும், சென்னை வாழ் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்கள்
சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்.! ! !
ஆர். லோகநாதன் .
கடந்த 27/11/2015 முதல் சென்னை சரவணாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "விவசாயி " 25 வது காவியம் (இந்த ஆண்டில் வெள்ளிவிழா காவியம் )
ஆக தினசரி 3 காட்சிகளில் திரையிடப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு முறையும், இப்போது 2 வது முறையாகவும் திரையிடப்பட்டுள்ளது என்பது நண்பர்களின் கவனத்திற்கு.
http://i67.tinypic.com/rtnazr.jpg
04/12/2015 முதல் சென்னை மகாலட்சுமியில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
வழங்கும் "தேடி வந்த மாப்பிள்ளை " தினசரி 3 காட்சிகளில் வலம் வருகிறார்.
இதற்கு முன்பு கடந்த ஆண்டில் 31/10/2014 முதல் சென்னை மகாலட்சுமியில்
தினசரி 2 காட்சிகள் திரையிடப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.
http://i65.tinypic.com/33vf9jl.jpg
இதற்கு முன்பு கடந்த ஆண்டில் 31/10/2014 முதல் சென்னை மகாலட்சுமியில்
தினசரி 2 காட்சிகள் திரையிடப்பட்டசமயம்
http://i65.tinypic.com/x6kc2d.jpg
இன்று காலை 11மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் திரை எழில் வேந்தன்
எம்.ஜி.ஆர். நடித்த "கண்ணன் என் காதலன் " ஒளிபரப்பாகிறது.
http://i66.tinypic.com/15s6f5x.jpg
சென்னை சைதாபேட்டை கோடம்பாக்கம் சாலையில் உள்ள உணவகத்தில்
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை
முன்னிட்டு, வைக்கப்பட்ட பேனர் நண்பர்களின் பார்வைக்கு .
http://i65.tinypic.com/102ns5f.jpg
மக்களுக்கு துன்பம் வரும்போது அது அந்த காலமாக இருந்தாலும் சரி...எந்த காலமாக இருந்தாலும் சரி....நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகம் ரசிகர்கள், பக்தர்கள் தம்மால் இயன்ற உதவிகள் செய்திருக்கிறார்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
சமீபத்திய வெள்ள நிகழ்வுகளில் இரு ரசிகர்கள் குழுக்களும் தம்மால் இயன்ற அளவிற்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உதவிகள் செய்துள்ளதை நண்பர்கள் வாயிலாக தெரிந்துகொள்ள, இணையதளங்கள் மூலம் பார்க்க, நேர்ந்தது...!
இந்த நல்ல காரியங்களை செய்த மக்கள் திலகம் பக்தர்களுக்கும், உதவிகள் செய்வதற்கு ஒரு குழுவாக செயல்பட திட்டமிட்டு வழிநடத்தியுள்ள, திரு எம் ஜி ஆர் அவர்களின் வயதில் மூத்தவராக இருந்தும் செயலில் இளைஞராக உள்ள "முரட்டு பக்தர்" "பழுத்த அனுபவசாலி" மற்றும் "சிறந்த அறிவு" "ஆற்றல்" கொண்டவருமான பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கும், சைதாபேடையை சேர்ந்த "இளம் புயல்" "செயல் வீரர்" திரு ராஜ்குமார் அவர்களுக்கும் நடிகர் திலகம் திரியின் சார்பாக எனது வாழ்த்துக்களையும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.
இரு திலகங்களின் ஆன்மாக்கள் தங்களுடைய இந்த நற்செயல்களை பார்த்து பெருமைகொள்ளும், ஆசீர்வாதம் செய்யும் என்பது நிச்சயம் !
வளர்க உங்கள் நற்பணி ! வாழ்க உங்கள் தொண்டுள்ளம் !
Rks
மக்கள் திலக மனிதநேயர்களை மனங்கனித்து வாழ்த்திய மதிப்புமிகு. ரவிகிரண் சூர்யா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை மக்கள் திலகத்தின் திரி அன்பர்கள் சார்பாக தெரிவித்து கொள்கிறேன்.....
நான் என்ன நினகிரோனோ அதை சொல்லிவிடுவேன்..
சகோதரர் திரு. ரவி கிரண் சூர்யா அவர்கள் அறிவது :
தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி !
வெள்ளம் வந்த அன்றே, இந்த நிவாரண பணிகளில் முழுமையாக புயல் வேகத்தில் இறங்கி, சமூக பணியாற்றியவர் சைதை திரு. ராஜ்குமார் அவர்கள். இத்தனைக்கும், பிரதான ஜோன்ஸ் சாலையில், முழங்கால் அளவு நீர் ஓடிகொண்டிருக்கும்போதே, அவர் களப்பணியாற்றினார். பின்னர்தான் நான் அவருடன் இணைந்து செயலாற்றினேன். மேலும், நான் கல்லூரியில் பணிபுரிவதால், அரசாங்கமும், கல்லூரி நிர்வாகமும் எனக்கு தொடர் விடுமுறை அளித்த காரணத்தால்தான், நானும் இந்த பணியில் பங்கேற்க முடிந்தது. எனவே என்னுடைய பங்கு பெரிதல்ல.
இந்த வெள்ள நிவாரணப் பணிகளில் பங்கேற்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும், தேறுதலும், உதவிகளும் நல்கிய நடிகர் திலக திரி அன்பர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.