-
" அவ்வை இல்லத்திற்கு நன்கொடையாக 30 ஆயிரம் வழங்கிய
எம்.ஜி.ஆர் அவர்களைப் பாராட்டும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன். நல்ல பல காரியங்களைச் செய்து அதற்கு உறுதுணையாக இருந்து வருகிற என் தம்பி எம்.ஜி. ஆர் அவர்களைப் பாராட்டுகிறேன்.
நான் எம்.ஜி.ஆர். அவர்களைப் பல கோணங்களிலிருந்து பாராட்டியிருக்கிறேன். ஆனால் நானும் நிதியமைச்சர் சுப்பிரமணியம்அவர்களும் சேர்ந்து பாராட்டுவது என்பது இதுதான் முதல் தடவை .
நம்முடைய நிதியமைச்சர் அவர்கள் எம்.ஜி.ஆர். அவர்களை ஊக்குவிக்க, வாழ்த்திய வாழ்த்துரை பிறரைத் தூண்டுவதற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறது .
ஆதரவற்றவர்கள் அனாதைகள் ஆகியோருக்கு இல்லம் ஆற்றி வருகிற தொண்டு மிக நல்ல தொண்டாகும்.
இயேசு கூட “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும்” என்று கூறியுள்ளார். எனவே அப்படிப்பட்டவர்களைக் கேளுங்கள் தரப்படும்.
எம்.ஜி.ஆர். இப்பொழுது மட்டுமல்ல; ஏற்கெனவே வேறு பல காரியங்களுக்குத் தாராளமாக அளித்துள்ளார்.
அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள் இப்படிப்பட்ட காரியங்களில் அளிப்பதற்குப் போட்டி மனப்பான்மை வளரவேண்டும் என்று. இதை நானும் வரவேற்கிறேன். சட்டமன்றத் தலைவர் அவர்கள் பேசும்போது, ‘அப்படி ஏற்படும் போட்டியிலும் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்’ என்று சொன்னார். இதை நான் வரவேற்கிறேன்.
நிதியமைச்சர் அவர்கள், ‘இப்படிப்பட்ட விழாவில் கட்சி எதுவும் கிடையாது’ என்று கூறினார். எம்.ஜி.ஆர். அவர்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். அப்படியிருப்பினும் நிதியமைச்சர் அவர்கள் கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் இவ்விழாவில் கலந்து கொண்டு அவ்வை இல்லத்தின் வளர்ச்சிக்கு நல்ல பல வழிவகைகள் கூறியுள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
எம்.ஜி.ஆர் அவர்களின் உடல் மட்டும் அல்ல உள்ளம் கூட தங்கம் போன்றதாகும். தங்கம் உருக்கி வார்க்கப்பட்டு அடிதெடுக்கப்பட்ட பின்னரே பளபளப்பைப் பெறுகிறது. எம்.ஜி.ஆர் அவர்களும் வாழ்வில் வறுமையால் வாட்டப்பட்டு உருக்கி எடுக்கப்பட்டவர்.
ஏறக்குறைய எல்லா நடிகர்களின் வாழ்வும் இப்படிப் பட்டதாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்பட்டு வறுமை சூழ்ந்து மிகச் சிரமப்பட்டுப் பத்து பதினைந்து ஆண்டுகள் நடித்து அதற்குப்பின் அய்ம்பதுஆண்டுகள் உழைத்தால்தான் பல இலட்சங்களைப் பார்க்க முடியும். ‘அப்படியெல்லாம் இருந்தாரே அவரா இவர்? என்று சிலர் பார்த்துக் கேட்கக் கூடிய நிலை பிறக்கும்.
ஆனால் என் தம்பி எம்.ஜி.ஆர் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாது இந்தத் தொகை தன்னிடமே இருந்தால் பின்னால் பயன்படுமே என்றும் நினைக்காது குறைவின்றிக் கொடுத்து வருகிறார். ரூ.10 லட்சம் சம்பாதிப்பவர் ஒரு லட்சத்தில் மண்டபம் கட்டுவதை நாம் பார்க்கிறோம். கட்ட ஆரம்பிக்கும்போதே பணம் சம்பாதிப்பவர்களையும் கூட நாம் சந்திக்கிறோம்.
அப்படியில்லாது எம்.ஜி.ஆர் காத்திருக்கிறார் பணத்தை நோக்கி. எங்கே வருகிறது எங்கே வருகிறது என்று வழி பார்த்திருக்கிறார். வந்ததும் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று வழங்குகிறார்.
ஆக, இந்த இல்லத்தைப் பொறுத்தவரை, அவர் எப்போதாவது பணம் தரவேண்டும் என்று சொன்னால் நான், ‘அட்டியில்லை’ என்று சொல்வேன். இந்த இல்லம் செழிக்கப் பாடுபடுவேன் என்று உறுதி தருகிறேன்."
- அறிஞர் அண்ணா . (நம்நாடு - 30.1.61)
courtesy chandran veerasamy
-
-
எம்ஜிஆர் 100 | 54 - ரத்தம் கொடுத்து படம் பார்த்த ரசிகர்கள்!
Mgr தன் ரசிகர்களை எந்த அளவுக்கு நேசித்தாரோ, அதேபோல அவர் மீதும் ரசிகர்கள் உயிரையே வைத்திருந்தனர். உயிருக்கு ஆதாரமான ரத்தத்தைக் கொடுத்து அதன்மூலம் கிடைத்த பணத்தில் படம் பார்த்த வெறி பிடித்த ரசிகர்களும், உயிரைப் பற்றி கவலைப்படாமல் அவரை பார்க்கத் துடித்த, அளவுக்கு மீறிய பாசக்கார ரசிகர்களும் உண்டு.
எம்.ஜி.ஆர். இருவேடங்களில் நடித்த ‘நாளை நமதே’ படத்தின் சில காட்சி கள் பெங்களூர் விமான நிலையத் துக்கு உள்ளேயும் வெளியேயும் படமாக் கப்பட்டன. எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக ஏராளமான கூட்டம். எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் தன்னைச் சுற்றி நடப்பவற்றில் எம்.ஜி.ஆர். ஒரு கண் வைத்திருப்பார். திடீரென, கேமரா இருந்த இடத்தைத் தாண்டி ஓடிய எம்.ஜி.ஆர். மேலே பார்த்தபடி, ‘‘இறங்கு… இறங்கு’’ என்று சத்தம் போட்டார். எல்லோரும் மேலே பார்த்தால், அங்கே ஒரு ரசிகர் மின்சாரக் கம்பத்தில் ஏறிக் கொண்டிருந்தார்.
உதவியாளர்களை அனுப்பி அந்த ரசிகரை கீழே இறக்கி அழைத்துவரச் சொன்ன எம்.ஜி.ஆர்., அவரிடம் விசாரித் தார். குதிரை வண்டி ஓட்டும் தொழில் செய்பவர் அவர். கூட்டம் சூழ்ந்திருந்த தால் அதைத் தாண்டி வரமுடியவில்லை. எம்.ஜி.ஆரை பார்க்க வேண் டும் என்ற ஆவலில் ஆபத்தை உணரா மல் மின்சாரக் கம்பத்தின் மீது ஏறியுள்ளார்.
அந்த ரசிகரை அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., படப் பிடிப்பு நடக்கும் இடத் திலேயே ஒரு நாற் காலி போடச் சொல்லி அவரை உட்காரச் சொன் னார். படப் பிடிப்பு குழு வினருக்கு அளிக்கப்பட்ட மதிய உணவை அவருக்கும் கொடுக்கச் சொன்னார். அன்று முழுவ தும் நாற்காலியில் அமர்ந்தபடி படப்பிடிப்பைக் கண்டு ரசித்தார் அந்த ரசிகர். படப்பிடிப்பு முடிந்ததும் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., 500 ரூபாயையும் அன்பளிப் பாகக் கொடுத்தார். நடப்பது கனவா? நனவா? என்று புரியாத நிலையில் எம்.ஜி.ஆரை வணங்கி விடைபெற்றார் அந்த ரசிகர். படப்பிடிப்பை காண வந்த ஏராளமான ரசிகர்களோடும் எம்.ஜி.ஆர். புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
‘நாடோடி மன்னன்’ திரைப்படம் எப்போது திரையிடப்பட்டாலும் அரங்கு நிறையும். அந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பதற்காக ஏழை ரசிகர்கள் தங்கள் ரத்தத்தை ஆஸ்பத்திரியில் கொடுத்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வாங்கி படம் பார்ப்பதாகவும் அடிக்கடி ரத்தம் கொடுப்பது அவர்களுக்கே ஆபத்தாகி விடும் என்றும் போடிநாயக்கனூரைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், எம்.ஜி.ஆரின் குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியத் துக்கு கடிதம் எழுதினார். இதைத் தடுக்க எம்.ஜி.ஆரிடம் சொல்லி ஏதாவது செய்யுமாறும் கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
பி.ஆர்.சுப்பிரமணியம் மூலம் இதை அறிந்த எம்.ஜி.ஆர். மிகவும் வேதனைப் பட்டார். போடிநாயக்கனூரில் ரசிகர் மன்ற கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. சென்னையில் இருந்து இதற் காகவே போடிநாயக்கனூருக்கு எம்.ஜி.ஆர். சென்றார். ரசிகர் மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எம்.ஜி.ஆர்., ‘‘நீங்கள் என் படத்தை பார்ப்பது மகிழ்ச்சி. ஆனாலும் உங்களை உடன் பிறப்புகளாக நினைக்கும் நான், உங்களுக்கு பாதிப்பு ஏற்பட விடமாட்டேன். என் படங்களை பார்ப்பதற்காக உடலை வருத்திக் கொள்ளக் கூடாது’’ என்றார்.
கூட்டத்தில் இருந்த பலர், ‘‘உங் கள் படத்தை தினமும் பார்க்கத் தோன்றுகிறது. ஆனால், எங்களிடம் பணம் இல்லை. அதனால்தான் இப்படி செய்கிறோம்’’ என்றனர்
அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘பணம் இருக் கும்போது பாருங்கள். என்னை நேசிப் பது உண்மையாக இருந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த செயலையும் செய்யாதீர்கள். பணம் தேவை என்றால் எனக்கு கடிதம் எழு துங்கள். நான் மணியார்டரில் பணம் அனுப்பி வைக்கிறேன்’’ என்றார். கூட்டம் நடந்த மண்டபமே இடிந்துவிழும் அளவுக்கு ரசிகர்கள் கரகோஷம் செய்தனர்.
பின்னர், ஏராளமான ரசிகர்கள் பணம் தேவை என்று எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதி, அவர்களுக்கெல்லாம் உதவியாளர்களை விட்டு மணியார்டர் மூலம் எம்.ஜி.ஆர் பணம் அனுப்பச் சொன்னார்.
ஒருமுறை ஒரு பத்திரிகையில் ரசிகர் களின் கேள்விக்கு எம்.ஜி.ஆர். பதிலளித் தார். அதில் ஒரு ரசிகர், ‘‘நான் மீண்டும் மீண்டும் உங்கள் படங்களைப் பார்க் கிறேன். எனக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’’ என்று கேட்டிருந்தார். ‘மிக்க மகிழ்ச்சி. எவ்வளவு முடியமோ அவ்வளவு முறை பாருங்கள்’ என்று எம்.ஜி.ஆர். பதிலளிக்கவில்லை. அந்தக் கேள்விக்கு பதிலளித்த எம்.ஜி.ஆர்., ‘‘உங்கள் வருமானம் எவ்வளவு?’’ என்று நறுக்கென மூன்றே வார்த்தைகளில் பொருள் பொதிந்த கேள்வியையே பதிலாக அளித்தார்.
தனது படங்களைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் வரவுக்கு அதிகமாக செலவு செய்வதையோ, உடலை வருத்திக் கொள்வதையோ எம்.ஜி.ஆர். விரும்பிய தில்லை. தங்களுக்கு பிடித்தமான நடிகர் என்பதைத் தாண்டி, தங்கள் மீது எம்.ஜி.ஆர். காட்டிய இந்த அக்கறையும் அன்பும்தான், அவர் மீது ரசிகர்களுக்கு மேலும் பற்றை ஏற்படுத்தின.
நடிகரும் பத்திரிகையாளருமான சோ ஒருமுறை கூறினார்… ‘‘எல்லா நடிகர் களுக்கும் ரசிகர்கள் உண்டு. எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பக்தர்கள் உண்டு!’
எம்.ஜி.ஆர். புகழேணி யில் ஏறிக் கொண்டிருந்த போது, 1950-ம் ஆண்டி லேயே மதுரையில் முதன்முதலாக எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றம் தொடங் கப்பட்டது. பின்னர், எம்.ஜி.ஆர். பெயரில் பல்வேறு அமைப்புகள் தொடங்கப்பட்டன. 1960களில் இவற்றை ஆர்.எம்.வீரப்பன் ஒருங்கிணைத்து ‘எம்.ஜி.ஆர்.ரசிகர் மன்றங்கள்’ என்று பெயர் சூட்டினார். பிறகு, திமுக தலைமையின் அங்கீ காரத்தோடு, ‘அனைத்துலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம்’ உருவானது.
-
http://i63.tinypic.com/295bxif.jpg
எவனையும் எந்த பத்திரிகயின் ஆதரவயோ நம்பி நம் தெய்வம் இல்லை. அவர் வெற்றி பெற்ற பிறகுதான் பத்திரிகைகள் அவருக்கு ஆதரவு தந்தன. இப்பவும் அவர் புகழை பாடுகின்றன. இருட்டிப்பு செய்த ஆதித்தனார் சிலையை நமது தெய்வம் புரட்சித் தலைவர் திறந்து வைத்தார். புரட்சித் தலைவரை குறையும் கிண்டலும் செய்த குமுதம் பத்திரிகை இன்று அவர் பற்றி புகழ் பாடுகிறது. பொன்மனச் செம்மல் மனித தெய்வம் என்பதர்கு இதுவே போதும்.
வெறும் சினிமா நடிகர் என்பதை எல்லாம் தாண்டி பாரத ரத்னாவாக மனிதப் புனிதானாக தெய்வமாக உயர்ந்துவிட்டவர் புரட்சி தலைவர். அவரை மற்றவர்களோடு ஒப்பிடுவதே தப்பு.
பொன்மன செம்மல் மனிதனாக வந்த தெய்வம் வாழ்க.
-
http://i67.tinypic.com/2vjtlbk.jpg
தலைவரே, தலகீழா நின்ணு தண்ணியை குடிச்சாலும் உன்ன யாரும் நெருங்கலாம் என்று கனவு கூட காண முடியாது
-
-
எஸ்.வி. என்ற பெயரில வரும் நண்பரே, ஏன் நீங்க போட்ட தினத்தந்தி பற்றிய பதிவை தூக்கிட்டீர்கள்? அதைப்படித்துவிட்டு நான் அடுத்தது பத்திரிகை பற்றி எழுதியிருப்பதை படிச்சால்தான் எல்லாருக்கும் புரியும். இல்லாவிட்டால் நான் சம்ப்ந்தம் இல்லாமல் எழுதியிருப்பது போல இருக்கும்.
புரட்சித் தலைவர் வாழ்க!
-
-
-
-
-
-
-
-
-
மே மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள்
என் தங்கை
பாக்தாத் திருடன்
பெரிய இடத்து பெண்
சந்திரோதயம்
அரசகட்டளை
அடிமைப்பெண்
என் அண்ணன்
ரிக்ஷாக்காரன்
உலகம் சுற்றும் வாலிபன்
நினைத்தை முடிப்பவன்
உழைக்கும் கரங்கள்
இன்று போல்என்றும் வாழ்க
-
மக்கள் திலகத்தின் '' அடிமைப்பெண் '' இன்று 47 நிறைவு தினம் .
https://youtu.be/UMcJl5D5qU4
-
எம்.ஜி.ஆரைப் பற்றி டைரக்*டர் சங்*கர்.....
‘அடிமைப்பெண்’ அவருடைய சொந்தப் படம். அதை இயக்கப் பலரும் முன்வந்தனர். அவர் என்னை அழைத்து உங்க திறமை எனக்குத் தேவை என்றார். ஒப்புக்கொண்டேன்.
‘அடிமைப்பெண்’ பட ஸ்டோரி டிஸ்கஷனுக்காக ஒரு மாதம் அவரது வீட்டிலேயே இருந்தேன். படத்தை ஜெய்பூரில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நான் சொன்னதை ஏற்க ஆரம்பத்தில் தயங்கினாலும் பின்பு, அங்கேயே படமாக்க ஒப்புக்கொண்டார். படத்தைப் பார்த்தவுடன் அவர் சொன்ன வார்த்தை 'படத்தின் உயிர்நாடியே ஜெய்பூர் தான்'. இந்த சந்தர்ப்பத்தில் ஜெய்பூர் அனுபவத்தை சொல்லியாக வேண்டும்.
நாங்கள் ஜெய்பூரில் போய் இறங்கியவுடனேயே ராஜஸ்தான் வறட்சி நிதிக்காக ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தார். அதனால் ஜெய்பூரில் நாங்கள் எந்த இடத்திலும் படப்பிடிப்பை நடத்தலாம் என்கிற நிலைமை உருவாகியது. ஜெய்பூர் அரண்மனையில் ஆறாவது மாடியில் மன்னரின் படுக்கை அறை உள்ளது.
இங்கேயே பாடல் காட்சியை எடுத்தால் நன்றாக இருக்கும் என்றேன். என்ன பெட்ரூமி லேயா? என்று சொல்லி வாய் விட்டுச் சிரித்தார். ''ஆமாம். ஆனால் இங்கே ஒரு குறை. நாம் படமெடுக்க முடியாதபடி உள்ளது. அதை நிவர்த்தி செய்தால் எடுக்கலாம்'' என்றேன். என்ன அது?
இந்த அறையில் கார்ப்பெட் மட்டும்தான் உள்ளது. அதற்கு பதிலாக சன்மைக்காவை பதித்து காட்சிகளை எடுத்தால் ரொம்ப சிறப்பாக இருக்கும்.
சன் மைக்கா அப்போதுதான் அறிமுகமான சமயம். டில்லிக்கு ஒருவரை விமானத்தின் மூலம் அனுப்பி சன் மைக்காவை வரவழைத்துவிட்டார். அந்நாளில் அதன் மதிப்பு நாற்பதாயிரம் ரூபாய்.
பாடலின் சில வரிகளை மட்டும் எடுத்தால் போதும் என்றிருந்த நாங்கள், பாடலின் முக்கால்வாசியை அந்த அறையிலேயே எடுத்தோம். அந்தக் காட்சியைப் பார்த்த சின்னவர் முதல் முறையாக என்னைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டினார்.
படம் திரையிடப்பட்ட பிறகு ரசிகர்களின் பெரிய பாராட்டையும் பெற்ற அந்தப்பாட்டு ‘ஆயிரம் நிலவே வா’. ஜெய்பூரில் ஷூட்டிங் முடிந்தவுடன், அங்கேயே கிரேன் தள்ளியவர் உட்பட எல்லோருக்கும் அன்பளிப்பு வழங்கினார்.
சரியாக திட்டமிட்டு செலவைப் பற்றித் கவலைப்படாமல் எடுக்கப்பட்டதால்தான், ‘அடிமைப்பெண்’ படவுலக வாலாற்றில் இடம் பெற்றது.
‘அடிமைப்பெண்’ பட எடிட்டிங் நடந்து கொண்டிருந்தது. இந்திப்பட வேலைக்காக மும்பைக்குப் போய்விட்டேன். ‘அடிமைப்பெண்’ படத்திற்காக சில காட்சிகளை எடுக்க வேண்டியிருந்தது. நான் மும்பையிலிருந்து வராததால் அதை சின்னவரே எடுத்துவிட்டார்.
அந்தக் காட்சிகளை ஏற்கனவே எடிட் செய்த காட்சிகளுடன் அவர் இணைத்த விதம் அருமை. தொழில்நுணுக்கம் தெரிந்தவர்கள் கூட எளிதில் கண்டுபிடிக்க முடியாது.
இந்தப் படம் வெளியாவதற்கு முன், டைட்டிலில் என் பெயரை போடும்போது சங்கருடைய உழைப்பு… ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தப் படத்தில் உள்ளது என்று பாராட்டி இருக்கிறார். பிறருடைய திறமையைப் பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவரேதான்.
-
எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பல படங்களில் நடிக்கும்போதும் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது. பொது இடங்களில் சினிமா நட்சத்திரங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எம்.ஜி.ஆரிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். நமது சொந்த உணர்ச்சிகள் எதையும் பொது இடத்தில் காட்டிக் கொள்ளக்கூடாது. நமது இமேஜுக்கு பங்கம் வரும்வகையில் எக்காரணத்தை முன்னிட்டும் நடந்து கொள்ளக் கூடாது, லேடி ஆர்டிஸ்ட் என்றால் மற்றவர்கள் கை எடுத்து கும்பிட்டு, "வாங்கம்மா உட்காருங்கம்மா'' என்று சொல்லி வரவேற்கும் அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்லுவார் என்று எம்.ஜி.ஆரை பற்றி நம்முடன் பகிர்ந்துக் கொள்கிறார் 'புன்னகை அரசி' கே.ஆர்.விஜயா.
''அண்ணா முதல்வராக இருந்தபோது அவர் கையால் தமிழக அரசின் 'கலைமாமணி விருது' வாங்கிய பெருமை எனக்கு உண்டு. எம்.ஜி.ஆரும் அதே ஆண்டுதான் 'கலைமாமணி விருது' பெற்றார்.
எம்.ஜி.ஆர். கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்றால் கூட்டத்துக்கு கேட்கவா வேண்டும்? நிகழ்ச்சி முடிந்ததும் அரங்கிலிருந்து வெளியே வந்து கார் இருக்கும் இடத்திற்கு செல்லக்கூட முடியவில்லை. எம்.ஜி.ஆரைச் சுற்றிலும் மக்கள் வெள்ளம்தான். ஆயினும் அவர் தன்னைப்பற்றிக் கவலைப்படாமல் என்னை பத்திரமாக அழைத்துச் சென்று என் காரில் என்னை ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அதுதான் எம.ஜி.ஆர். இதேபோல் அவர் முதல்வராக இருந்தபோது அரசு சார்பில் சேலத்தில் நடந்த ஒரு விழாவிற்கு சென்றிருந்தேன். விழா முடிந்ததும் இரவு கணவருடன் காரில் புறப்பட்டபோது, "இரவில் நீண்ட தூரம் காரில் செல்ல வேண்டாம். தங்கிவிட்டு காலையில் புறப்பட்டுச் செல்லுங்கள்' என்று அதே பழைய அன்போடும் அக்கறையோடும் எம்.ஜி.ஆர். கூறவே அதன்படியே நாங்கள் அன்றிரவு அங்கு தங்கிவிட்டு அடுத்த நாள் பகலில் புறப்பட்டு சென்னை வந்தோம்.
எனது நூறாவது படம் "நத்தையில் முத்து'' வெளியானபோது ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, என்.டி.ராமாராவ் மற்றும் முன்னணி இயக்குனர்கள் அனைவரும் கலந்து கொண்டு என்னை வாழ்த்தியதை என்றென்றும் என்னால் மறக்க முடியாது. இவர்கள் எல்லோருடைய வாழ்த்தும்தான் இருநூறு, முன்னூறு, என்று படங்களின் எண்ணிக்கையை கடக்கச் செய்து இன்று நானூறாவது படத்தை நான் நெருங்குவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.
-
எம்.ஜி.ஆரைப் பற்றி டைரக்*டர் சங்*கர்.....
‘பணத்*தோட்*டம்’ படத்*தின் க்ளைமேக்ஸ் காட்*சியை எடுக்*கும்*போது காலை ஏழு*மணி. படப்*பி*டிப்பு தொடங்கி, அடுத்*த*நாள் காலை ஏழு*ம*ணி*வரை தொடர்ந்து நடந்*தது. பதி*னெட்டு நாளும் எங்*க*ளுக்கு சாப்*பாடு ராமா*வ*ரம் தோட்*டத்*தி*லி*ருந்*து*தான்.
’பணத்*தோட்*டம்’ மிகப்*பெ*ரிய வெற்*றி*ய*டைந்*த*தும் சின்*ன*வர் என்னை அழைத்*தார். என் படத்தை டைரக்ட் செய்*ய*மாட்*டேன் என்று சொன்*னீர்*களே? இப்*போது என்ன சொல்*கி*றீர்*கள்? என்று கேட்*டார்…
…
அப்*போது நான் சொன்ன பதில், ’என்னை மன்*னித்து விடுங்*கள்’. அவ*ரு*டைய நட்பு தொடர்ந்*தது, அவர் நடித்த ‘கலங்*கரை விளக்*கம்’, ‘சந்*தி*ரோ*த*யம்’, ‘குடி*யி*ருந்த கோயில்’ படங்*களை டைரக்ட் பண்*ணி*னேன்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த படங்*களை ஒரே நாளில் டைரக்ட் செய்த பெருமை எனக்*குத்*தான்
.
‘ஆல*ய*மணி’, ‘பணத்*தோட்*டம்’ படங்*கள் ஒரே சம*யத்*தில் தயா*ரா*னவை. வாகினி ஸ்டுடி*யோ*வில் காலை ஏழு மணி முதல் ‘ஆல*ய*மணி’ படப்*பி*டிப்பு., பிற்*ப*கல் இரண்டு மணி*யில் இருந்து சத்யா ஸ்டுடி*யோ*வில் ‘பணத்*தோட்*டம்’ ஷூட்*டிங்.
வாகி*னி*யில் ஒரு மணிக்கே சூட்*டிங் முடிந்து சத்யா ஸ்டுடி*யோ*விற்*குப் போவ*தற்*குள் சின்*ன*வர் மேக்*கப் போட்டு இரண்டு மணிக்*குத் தயா*ராக இருப்*பார்.
சத்*யா*வுக்கு யூனிட் போன*வு*டன் லைட்*டிங் பண்ணி ஷூட்*டிங் ஆரம்*பிக்க நேரம் சரி*யாக இருக்*கும். எங்*க*ளுக்கு சாப்*பிட நேரம் இருக்*காது. இதை ஓரிரு தினங்*கள் கவ*னித்த சின்*ன*வர் நீங்க எல்*லோ*ரும் சாப்*பிட்*டாச்சா என்று கேட்*டார்.
இல்லை?
ஏன்?
நீங்க இரண்டு மணிக்கு மேக்*கப்*போட்டு காத்*துக்*கிட்*டி*ருப்*பீங்க, அத*னால் நேரா சாப்*பி*டாம இங்கே வந்*துட்*டோம்.
நாளை*யி*லி*ருந்து நான் இரண்டு மணிக்கு வர்*ரேன், நீங்க இங்*கேயே சாப்*பிட்ட பின் ஷூட்*டிங் ஆரம்*பிக்*க*லாம். இன்*னொரு விஷ*யம் கூட, நீங்க சாப்*பிட்*டு*விட்டு லைட்*டிங் பண்ணி ஷூட்*டிங் ஆரம்*பிக்*க*லாம் என்*றார் அவர்.
குடி*யி*ருந்த கோயில் நமக்*கென ஒரு யூனிட், அந்த யூனிட்*டு*டன்*தான் கண்*டிப்*பு*டன் வேலை செய்*ய*வேண்*டும் என்று இருந்*தேன்.
‘ஆல*ய*மணி’ படத்தை இந்*தி*யில் டைரக்ட் செய்ய வாய்ப்பு வந்*த*போது நடி*கர் திலீப்*கு*மார் ஒளிப்*ப*தி*வா*ளரை மாற்*ற*வேண்*டும் என்*றார். நான் மறுத்*து*விட்*டேன். இதைக் கேள்*விப்*பட்ட சின்*ன*வர் என்*னி*டம் நீங்*கள் யூனிட் என்று பணி*யாற்*று*வதை மதிக்*கி*றேன் அதே சம*யத்*தில் தொழி*லை*யும் கவ*னிக்க வேண்*டும், வாழ்க்*கை*யில் பிற*ரு*டன் அனு*ச*ரித்*துப்*போ*க*வேண்*டும். இதற்*காக நீங்*கள் பின்*னால் வருத்*தப்*ப*டு*வீர்*கள் என்*றார். அபோ*தும் அவர் சொன்*னதை நான் ஏற்*க*வில்லை.
‘குடி*யி*ருந்த கோயில்’ படத்*தில் நடித்*துக் கொண்*டி*ருந்த போது தான் அவர் சுடப்*பட்டு சிகிச்சை பெற்*று*வந்*தார். ஒன்*பது மாதங்*கள் ஷூட்*டிங் இல்லை.
சங்*கர் எம்.ஜி.ஆர் படங்*கள் தான் பண்*ணு*வார். அத*னால் அவ*ருக்கு படங்*கள் கிடை*யாது. எம்.ஜி.ஆருக்*கும் அடி*பட்*டுப்*போச்சு இனி சங்*கர் ஊருக்*குப் புறப்*ப*ட*வேண்*டி*யது தான் என்று சொல்லி எந்த யூனிட்*டுக்*காக பல படங்*களை தியா*கம் செய்*தேனோ அதே யூனிட் என்*னை*விட்டு பிரிந்*தது. இந்த சம்*ப*வம் எனக்கு ரொம்ப வேத*னை*யைத் தந்*தது. தனித்து விடப்*பட்*டேன்.
சின்*ன*வர் உடல் நலம் பெற்*ற*வு*டன் ‘குடி*யி*ருந்த கோயில்’ ஷூட்*டிங் மீண்*டும் ஆரம்*ப*மா*னது. முதல் நாள் ஷூட்*டிங், வேறு டெக்*னீ*ஷி*யன்*க*ளு*டன் அரங்*கில் படப்*பி*டிப்பு ஏற்*பா*டு*களை செய்*து*கொண்*டி*ருந்*தேன்.
சின்*ன*வர் வந்*தார்… பார்த்*தார்..
’என்ன யூனிட்டா’ அவர் இப்*ப*டிக் கேட்*ட*வு*டன் என்*னை*ய*றி*யா*மலே என் கண்*ணில் நீர் நிறைந்*து*விட்*டது.
வாழ்க்கை வேறு, கொள்கை வேறு என்*கிற உண்,மையை எனக்கு உணர்த்*தி*ய*வர் சின்*ன*வர், எதை*யும் முன்*கூட்*டியே தீமா*னிப்*ப*தில் வல்*ல*வர் என்*ப*தற்கு என் வாழ்க்*கை*யில் நடந்த இந்த சம்*ப*வமே ஒரு எடுத்*துக்*காட்டு.
-
நினைவலைகள்...எம்ஜிஆரின் விடியோவால் வெற்றி!
"எம்ஜிஆரிடம் ரூ.60 ஊதியத்தில் வேலைக்கு சேர்ந்து, அவரை வைத்தே 6 திரைப்படங்கள் எடுத்து, அவருக்கு லட்சக்கணக்கான பணத்தை ஊதியமாகக் கொடுத்தேன். அவர் கட்சி தொடங்கிய போது, பிரசார வியூகம் வகுத்துக் கொடுத்தேன். அவருடனான எனது அரசியல் பயணத்தில் நிறைய சுவாரஸ்யங்கள் நிறைந்திருந்தாலும், தொகுதிக்கு பிரசாரத்துக்கே போகாமல், எம்ஜிஆர் வெற்றி பெற்ற தேர்தல்கள்தான் என்னால் மறக்க முடியாதவை' என்று நினைவு கூர்கிறார் மூத்த அரசியல்வாதியான இராம.வீரப்பன் (90).
41 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், அண்ணா, எம்ஜிஆர், மு.கருணாநிதி, ஜெயலலிதா என 4 முதல்வர்களுடன் நட்பு பாராட்டியவர்
ஆர்.எம்.வீ.என்று அழைக்கப்படும் இராம. வீரப்பன். 1963-இல் "சத்யா மூவிஸ்" திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய அவர், இரு முறை மாநில சட்ட மேலவை உறுப்பினராகவும், இரு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராகவும் இருந்துள்ளார். 1995-ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். தன்னுடைய தேர்தல் அனுபவம் குறித்து இராம.வீரப்பன் கூறியதாவது:
எனது வாழ்வில் மறக்க முடியாத இரண்டு தேர்தல்களிலுமே வேட்பாளரான எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்தார். 1967-ஆம் ஆண்டு
நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அண்ணா தலைமையில் திமுக சார்பில் பரங்கிமலை தொகுதியில் எம்ஜிஆர் போட்டியிட்டார். ஆனால், அவரால் பிரசாரத்துக்கு போக முடியவில்லை. ஏனெனில், அப்போது நடிகர் எம்.ஆர். ராதாவால் சுடப்பட்டு, எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்தார். மிகப்பெரிய தொகுதியான பரங்கிமலை காங்கிரஸ் கட்சியின் கோட்டை. பல இடங்களில் பிரசாரத்துக்கு போக முடியாமல் கலவரம் வெடித்தது.
ஆனால், அந்தத் தேர்தலில் எம்ஜிஆர் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பொதுவாக, எம்ஜிஆர் தனது அழகான புகைப்படம் மட்டுமே வெளிவர வேண்டும் என்று நினைப்பார். ஆனால், மருத்துவமனையில் கட்டுடன் இருந்த அவரின் புகைப்படத்தை வெளியிடப் போராடி அனுமதி பெற்று வெளியிட்டபோது தேர்தலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.
அதன்பிறகு, 1984-ஆம் ஆண்டில், எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல், சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டார் எம்ஜிஆர். அப்போது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் எம்ஜிஆர் போட்டியிட்டார்.
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்த பிறகு இங்கு வந்த சில நாள்களில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே ஜப்பான் டாக்டர் கானு அளித்த சிகிச்சைக்குப் பிறகு எம்ஜிஆர் குணமடைந்தார். ஆனால், "அதற்குள் எம்ஜிஆர் இறந்துவிட்டார், அவரைக் கண்ணாடிக் கூண்டுக்குள் வைத்திருக்கிறார்கள்' என்று எதிர்க்கட்சியினர் பொய் பிரசாரம் செய்தனர். உடனே நாங்கள், எம்ஜிஆர் நலத்துடன் இருக்கும் புகைப்படங்களை நாளிதழ்களில் வெளியிட்டோம். ஆனாலும், யாரும் எதிர்பார்க்காத விதமாக புதிய உத்தியை அந்தத் தேர்தலில் பயன்படுத்தத் திட்டமிட்டேன்.
எம்ஜிஆர் சாப்பிடுவது, ஜானகி அம்மாள், டாக்டர் பெரியசாமியுடன் பேசுவது, நடப்பது ஆகியவற்றை விடியோ எடுத்தோம். பலரின் உதவியுடன், வலம்புரி ஜான் வர்ணனையுடன், ஒரே நாளில் 100 திரையரங்குகளில் அந்த விடியோ பதிவு வெளியானது. இந்தியாவிலேயே தேர்தலுக்காக விடியோ பயன்படுத்தப்பட்டது அதுவே முதலாவதாகும்.
அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதும், எம்ஜிஆர் முதல்வராகப் பதவி ஏற்பதில் சிக்கல் எழுந்தது. அப்போதைய ஆளுநர் குரானா, முதல்வராகப் பதவியேற்க எம்ஜிஆர் உடல் தகுதியுடன் இருக்கிறார் என்ற சான்றிதழைப் பெற்றுத் தரச் சொன்னார்.
அதை எம்ஜிஆரே கொண்டு வருவார் என்று கூறிவிட்டு வந்தேன். அதன்படி பிரம்மாண்ட விழா எடுத்து, அவர் பயன்படுத்திய அம்பாஸிடர் காரிலேயே அவரை மேடை ஏற்றினோம். லட்சக்கணக்கான மக்களின் கரகோஷத்துக்கு இடையே எம்ஜிஆர் மேடையில் தோன்றினார். அதைத் தொடர்ந்து, மீண்டும் முதல்வராகப் பதவியேற்ற எம்ஜிஆர், 3 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். அவருக்காகப் பணியாற்றிய அந்த நாள்கள் மறக்க முடியாதவை என்றார் இராம. வீரப்பன்.
-
அதிகாலையிலும் பிரசாரம்! எம்ஜிஆரை காண அலைமோதிய கூட்டம்
நினைவலைகள்...
1977 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் கடையநல்லூர் தொகுதியில் களம் கண்டு பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றவர் எம்.எம்.ஏ. ரசாக். இவர், எம்எல்ஏவாக இல்லாத நிலையிலும் தொடர்ந்து இன்றுவரை மக்களுக்குச் சேவைகள் செய்து வருகிறார்.
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள வடகரையில் வசித்து வரும் அவர், 29 வயதில் பேரவை உறுப்பினராக வெற்றி பெற்ற போது இருந்த அதே உற்சாகத்துடன் தனது கடந்தகால நினைவலைகள் குறித்து கூறியதாவது:
1977 பேரவைத் தேர்தலின் போது கடையநல்லூர் தொகுதிக்கு நான் அறிமுகம் இல்லாத புதிய வேட்பாளர். ஆனால், அன்றைய காலகட்டத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எஸ்.கே.டி. ராமச்சந்திரன், ஜனதா தலைவர்களில் ஒருவரான லெட்சுமண நாடார் ஆகியோர் எனக்கு எதிராகப் போட்டியிட்டனர். திமுக சார்பில் கட்டாரிப்பாண்டியன் களம் இறக்கப்பட்டார்.
எனக்கு வாக்கு கேட்டு எம்.ஜி.ஆர். கடையநல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். கடையநல்லூர் அரசு ஆண்கள் பள்ளியில் அதிகாலை 5 மணிக்கு கூட்டம் தொடங்கி நடைபெற்றது. அதிகாலை கூட்டம் என்றாலும், எம்ஜிஆரை காண்பதற்கும், அவரது பேச்சைக் கேட்பதற்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அன்றைய காலகட்டத்தில் காலை முதல் இரவு வரை எப்பொழுது வேண்டுமானாலும் வாக்கு சேகரிக்கலாம் என்ற நிலை இருந்தது.
அப்பொதெல்லாம், வாக்குச் சாவடிக்கு இவ்வளவு பணம் என கட்சித் தலைமை சார்பில் தொண்டர்களுக்கு நிதி எதுவும் வழங்கும் வழக்கம் இல்லை. வேட்பாளர்கள் அவர்களின் சொந்தப் பணத்தைக் கொண்டே செலவழிப்பர். வாக்குச் சாவடிகளில் பணியாற்றிய கட்சித் தொண்டர்களுக்கு ஒரு வாக்குச் சாவடிக்கு ரூ. 50 முதல் 100 வரை கொடுத்ததாக ஞாபகம். தேர்தல் ஆணையம் வரையறுத்துக் கூறியதைவிட பாதியளவுக்குத்தான் செலவு செய்தேன்.
கடையநல்லூர் அரசு ஆண்கள் பள்ளியில்தான் வாக்குகளை எண்ணினார்கள். இரவு 10 மணியளவில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டேன்.
அந்தத் தேர்தலில் நான் 29,347 வாக்குகள் பெற்றேன். எஸ்.கே.டி. ராமச்சந்திரன் (காங்கிரஸ்) 23,686 வாக்குகளும், கட்டாரிப்பாண்டியன் (திமுக) 16,329 வாக்குகளும், லட்சுமணநாடார் (ஜனதா) 5,623 வாக்குகளும் பெற்றனர்.
எம்ஜிஆரை எளிதில் அணுகலாம்: எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அவரை எளிதில் சந்திக்க முடியும். காலை 9 மணியளவில் சென்னையில் உள்ள அவரது தோட்டத்துக்குச் சென்று, பேரவை உறுப்பினர்களுக்கான பகுதியில் அமர்ந்து கொள்ளலாம். எம்.ஜி.ஆர். அறைக்கு வந்த பின்னர் சந்தித்துப் பேசலாம்.
பொதுமக்கள் தினமும் அவரைச் சந்திக்க முடியும். இன்னும் சொல்லப் போனால் முதல்வரின் உதவியாளர்களான பரமசிவம், லட்சுமிநாராயணன் ஆகியோரைச் சந்தித்து பிரச்னைகள் குறித்து தெரிவித்துவிட்டால் போதும். அவர்கள் முதல்வர் எம்ஜிஆரிடம் தெரிவித்து பிரச்னைக்கு தீர்வு காண்பர்.
எம்.ஜி.ஆரின் வீட்டுக்கு செல்பவர்களுக்கு அவரே உணவைப் பரிமாறுவார். சாப்பிடாமல் அனுப்பமாட்டார்.
1989-இல் அதிமுக (ஜா) அணியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தேன்.
-
எம்ஜிஆர் 100 | 55 - இசைபட வாழ்ந்தவர்!
m.g.r. ரசிகர்கள் பலதரப்பட்ட வகையினர். அவர்களில் ஒருவர் கர்னாடக இசைத்துறையைச் சேர்ந்த, மறைந்த மாண்டலின் இசைமேதை யூ. ஸ்ரீனிவாஸ். தனது தீவிர ரசிகராக இருந்தவரின் இசைக்கு, பின்னர் எம்.ஜி.ஆரே ரசிகராக மாறினார். அத்தகைய பெருமையை பெற்றவர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ்
‘நவரத்தினம்’ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருடன் குன்னக்குடி வைத்தியநாதன். தூர்தர்ஷனில் 1983-ம் ஆண்டு இசை அரங்கம் நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸின் மாண்டலின் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பானது. நிகழ்ச்சி முடிந்தவுடன் தூர்தர்ஷன் இயக்குநருக்கு தொலைபேசி அழைப்பு. மறுமுனையில் பேசியவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.! எதற்காக அழைக்கிறார் என்று அவர் யோசித்துக் கொண்டிருந்தபோதே, ‘‘இப்போது தூர்தர்ஷனில் மாண்டலின் வாசித்த சிறுவனின் வாசிப்பு அபாரம். அந்தப் பையனின் தொலைபேசி எண் வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.
அப்போது, வடபழனியில் தனது குருவின் வீட்டிலேயே தங்கி மாண்டலின் கற்றுக் கொண்டிருந்தார் ஸ்ரீனிவாஸ். அந்த வீட்டில் தொலைபேசி கிடையாது. எனவே, வீட்டு முகவரியை எம்.ஜி.ஆருக்கு தூர்தர்ஷன் இயக்குநர் அளித்தார். மறுநாள், எம்.ஜி.ஆர். அனுப்பி வைத்தவர் வந்து ஸ்ரீனிவாஸை சந்தித்து, முதல்வர் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், ‘‘எம்.ஜி.ஆர். தலைமையில் விரைவில் நடக்க உள்ள விழாவில் மாண்டலின் கச்சேரி செய்ய வேண்டும்’’ என்றும் கூறினார். அந்த விழா, நடிகர் கமல்ஹாசனுக்கு எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்த பாராட்டு விழா!
கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் கலந்துகொள்ள வந்த எம்.ஜி.ஆரை வெகு அருகில் பார்த்து மகிழ்ச்சியில் மனம் நிறைந்தார் ஸ்ரீனிவாஸ். அந்த விழாவில் மாண்டலின் கச்சேரியை ரசித்துக் கேட்ட எம்.ஜி.ஆர், தமிழக அரசின் ஆஸ்தான கலைஞராக ஸ்ரீனிவாஸை நியமிக்கப் போவதாக மேடையிலேயே அறிவித்தார். அந்த வருடம் வெளியான ஆஸ்தான கலைஞர்கள் பட்டியலில் வாய்ப்பாட்டு கலைஞர் மகாராஜபுரம் சந்தானம், பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்டவர்களுடன் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பெயரும் இடம் பெற்றது.
ஆஸ்தான கலைஞராக நியமிக்கப் பட்டபோது மாண்டலின் ஸ்ரீனிவாஸுக்கு வயது பன்னிரண்டுதான்! ஒருவரிடம் இருக்கும் திறமையை மட்டுமே எம்.ஜி.ஆர். பார்ப்பாரே தவிர, வயதை அல்ல என்பதற்கு இது ஓர் உதாரணம். பின்னர், தஞ்சையில் ஆஸ்தான கலைஞர்களை நியமிக்கும் விழா நடந்தபோதும் ஸ்ரீனிவாஸின் மாண்டலின் கச்சேரியை எம்.ஜி.ஆர். ரசித்துக் கேட்டார்.
அதன் பின்னர், கச்சேரிகள் செய்வதற் காக விமானப் பயணம் மேற்கொள் ளும்போது, சென்னை விமான நிலையத்தில் சில சமயங்களில் அங்கு வந்த முதல்வர் எம்.ஜி.ஆரை மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பார்த்திருக்கிறார். எம்.ஜி.ஆரிடம் பேச வேண்டும் என்று அவருக்கு ஆசை. என்னதான் இசைமேதையாக இருந்தாலும் சிறுவனான அவருக்கு எம்.ஜி.ஆரிடம் போய் பேசத் தயக்கம். அதுபோன்ற நேரங்களில், எம்.ஜி.ஆரே ஸ்ரீனிவாஸை அழைத்து, அன்புடன் விசாரிப்பார். ‘‘அது நான் செய்த பாக்கியம்’’ என்று பெருமை பொங்கக் குறிப்பிட்டிருக்கிறார் மாண்டலின் ஸ்ரீனிவாஸ்.
எம்.ஜி.ஆரின் வசீகரமான முகமும் பார்ப்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் துடிப்பான நடிப்பும் சிறுவயதிலேயே மாண்டலின் ஸ்ரீனிவாஸை ஈர்த்தது. அவரது படங்களில் இடம் பெற்ற அற்புதமான பாடல்கள், அதற்கான அபாரமான இசை ஆகியவற்றால் சொக்கிப்போனார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக மாறிய ஸ்ரீனிவாஸ், மீண்டும் மீண்டும் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து ரசிப்பார். அவர் மட்டுமின்றி, டி.வி.யில் எம்.ஜி.ஆர். படங்கள் ஒளிபரப்பானால் அவரது ஒட்டுமொத்த குடும்பமுமே பார்த்து ரசிக்கும்.
1984-ம் ஆண்டு கச்சேரிக்காக ஆஸ்திரேலியாவுக்கு ஸ்ரீனிவாஸ் சென்றிருந்தார். அப்போது ஓய்வு நேரங்களில் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து தீர்த்தார். எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதால், காரில் வெளியூர்களுக்கு ஸ்ரீனிவாஸ் செல்லும்போது எம்.ஜி.ஆர். படப் பாடல்களைத்தான் விரும்பிக் கேட்பார். ‘‘தன் படத்தில் இடம் பெறும் பாடல்களை எம்.ஜி.ஆரே கேட்டு டியூன்களை ஓ.கே. செய்வார் என்று கேள்விப்பட்டது உண்டு. அந்தப் பாடல்களை கேட்கும்போது, அவரது அபாரமான இசை ரசனையை புரிந்துகொள்ள முடிகிறது’’ என்று சிறுவயதிலேயே இசைப் புலமை மிக்கவராகத் திகழ்ந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ், எம்.ஜி.ஆரின் இசை ரசனையை வியந்து போற்றியுள்ளார்.
இசையை ரசித்தவர் மட்டுமல்ல; இசைபட வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.!
.
இந்தத் தலைமுறையினர் பலர் அறிந் திராத செய்தி இது. எம்.ஜி.ஆர். நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இசையமைப்பாளர் வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்திய நாதன் என்றுதான் முதலில் விளம்பரம் வெளியானது. ஆனால், பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். 1977-ம் ஆண்டு மார்ச் 5-ல் வெளியான எம்.ஜி.ஆர். நடித்த ‘நவரத்தினம்’ படத்துக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்தார். அவர் இசையமைத்த ஒரே எம்.ஜி.ஆர். படம் ‘நவரத்தினம்’.
-
-
-
-
-
-
-
-
மே மாதம் - மக்கள் திலகத்தின் வெற்றி சரித்திரம் .
மக்கள் திலகத்தின் என் தங்கை -1952 , பெரிய இடத்து பெண் -1963 , அடிமைப்பெண் -1969, என் அண்ணன் -1970ரிக்ஷாக்காரன் -1971 , உலகம் சுற்றும் வாலிபன் -1973 , நினைத்ததை முடிப்பவன் -1975 , இன்றுபோல் என்றும் வாழ்க -1977 படங்கள் மிகப்பெரிய வெற்றிகளை அடைந்தது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் துவங்கிய அண்ணா திமுக முதல் முறையாக சந்தித்த தேர்தல் களம் -திண்டுக்கல்
மே - 1973. தேர்தலில் அமோக வெற்றி . மக்கள் திலகம் எம்ஜிஆர் சினிமா மற்றும் அரசியலில் கொடிக்கட்டி பறந்தஅந்த நாட்கள் மறக்க முடியாதவை .
-
உழைப்பாளர் தினம் . மக்கள் திலகத்தின் சிறப்பு பாடல்கள் .
https://youtu.be/gIjdgwEzd04
-
-
-
-
-
-
-
-