சொல்லப்பட்ட விடயம் என்னவென்று புரிந்துகொள்ளாமல்
வாந்தி எடுப்பதே பிழைப்பாய் போச்சு சிலருக்கு
என்ன மனிதர்கள்? …. திருந்தவே மாட்டார்கள். கருமம்.. கருமம்.
Printable View
சொல்லப்பட்ட விடயம் என்னவென்று புரிந்துகொள்ளாமல்
வாந்தி எடுப்பதே பிழைப்பாய் போச்சு சிலருக்கு
என்ன மனிதர்கள்? …. திருந்தவே மாட்டார்கள். கருமம்.. கருமம்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...4a&oe=59AD8AFD
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவரும், தமிழ்நாடுகாங்கிரஸ் கலைப்பிரிவு தலைவருமான திரு.K.சந்திரசேகரன் அவர்களின் தாயார் திருமதி. ராஜலெட்சுமி அவர்கள் (வயது 82) இன்று (16-05-2017) அதிகாலை காலமானார். அன்னாரின் இறுதிச்சடங்கு (17-05-2017, புதன்கிழமை) காலை 8 மணியளவில் (புதிய என்.38. பழைய எண்.29. 5வது மெயின் ரோடு, நங்கநல்லூர், பங்கஜம் மருத்துவமனை எதிரில்) நடைபெறுகிறது.
தாயை இழந்து வாடும் நடிகர்திலகத்தின் அன்பு இளவல் சந்திரசேகரன் அவர்களுக்கு ஆறுதலையும் அவரது தாயாரின் ஆன்மா சாந்தியடைய உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும், அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பிலும் இறைவனை வேண்டுகிறோம். —
ஆழ்ந்த இரங்கல்கள்
My Hearty Condolences Chandrasekar.
ஆழ்ந்த இரங்கல்கள்.
தாயாரை இழந்து வாடும் நண்பர் சந்திரசேகர் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல்களை தெரிவிக்கிறோம்.
திரு.சந்திரசேகரின் அன்னையாரின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
இப்பட விவரங்களை சீனியர்கள் எழுதவும்.
https://uploads.tapatalk-cdn.com/201...0158120a37.jpg
அன்பின் k.c.s. சார்.. அன்னையாரின் மறைவுச் செய்தியறிந்து வருத்தமானேன்.
உலகத்தின் மிகப் பெரிய சோகம்.. தாயைப் பிரிந்து தவித்து நிற்பதே!
அந்த மாபெரும் சோகத்திலிருந்து காலமும், கடவுளும் தங்களை மீட்டெடுக்கட்டும்.
மேன்மை மிகுந்த அந்தத் தாயுள்ளம் தன் பிரிவின் துயர் பிள்ளையைத் தாக்காமல் காக்கட்டும்.
அன்னையாருக்கு எனது இறுதி வணக்கம்.
தங்களுக்கெனது ஆறுதல்கள்.
திரு சந்திரசேகரன் அவர்களின் தாயார் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
மதுரையை மகிழ்விக்கும் "ராஜபார்ட் ரங்கதுரை"
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...6f&oe=5974BC12
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...4c&oe=59C03110
இன்று (20/05/2017) இரவு 10 மணிக்கு ஜெயா மூவியில்
" பாக்யவதி"
Nadigar Thilagam present Amazing Acting & Super Hit Movie.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...b0&oe=59A9FF6D
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...15&oe=59B826A7
அருமை நண்பர் திரு சந்திரசேகரன் அவர்களின் தாயார் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் . அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். இந்த பேரிழப்பை தாங்கும் சக்தியை இறைவனும், தலைவரும் திரு.சந்திரசேகரன் சாருக்கு அளிக்க வேண்டுகிறேன்.
அப்போதைய திரையரங்குகள் மற்றும் டூரிங் கொட்டகைகளில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் யாவும் அதிக நாட்கள் ஓடிக்கொண்டிருந்தமையால் பிலிம் சுருள் அறுந்து விடுவதுண்டு அதை தியேட்டர் புரஜெக்டர் ஆபரேட்டர் பெரும் சிரமப்பட்டு ஒட்டவைத்து மீண்டும் படத்தை ஓட வைப்பார், அதற்குள் ரசிகர்கள் போடும் கூப்பாடு காதை கிழித்து விடும், அப்படியே படம் தொடரும்போது துண்டாகிப் போன பிலிம் சுருளில் நடிகர்திலகத்தின் காட்சிகள் இடம் பெற்று படம் பார்க்கும் போது அது இல்லாமல் போனால் படத்தின் முக...்கியத்துவமே இல்லாமல் போய் விடும்,
மற்ற ஏனைய நடிகர்களின் படங்களுக்கு இந்த குறை ஏற்பட வாய்ப்பில்லை, மற்ற நடிகர்கள் எல்லாம் எந்த வித முக பாவனைகளையும் காட்டத் தெரிவதில்லை, வசனம் பேசும்போது முகத்தில் எந்த மாற்றமும் வெளிப்படையாக தொற்றுவிக்கத் தெரியாது, நடிப்பு என்ற ஒன்று இருக்கவே இருக்காது எனவே அந்தப் படங்களில் ஏதாவது பிலிம் சுருள் துண்டாகிப் போனாலும் படத்தின் தன்மை மாறாது, ஆனால் நடிகர் திலகம் மட்டுமே அவர் தோன்றும் காட்சிகள் காட்சிக்கு காட்சி நடிப்பிலும் வசனம் பேசுவதிலும் அசத்தியிருப்பார், எனவே 3 அடி பிலிம் சுருள் விடுபட்டு போனாலுமே படத்தின் சுவராஸ்யம் குறைந்து விடும்
நடிகர் திலகத்தின் நடிப்பை திரும்ப திரும்ப பார்த்த காலங்களில் எல்லாம் அதிக நாட்கள் என 175 நாட் களுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருந்ததனால் பிலிம் சுருள் தேய்ந்து கோடுகள் விழுந்து விடும், அப்போது அது ஒரு பெரிய கவலை,
ஆனால் இப்போதெல்லாம் வெளியாகும் படங்களுக்கு டிஜிட்டல் வசதி வந்து விட்டது தியேட்டரில் 1000 காட்சிகள் ஓடினால் கூட ஒரு கீரல் விழ வாய்ப்பில்லை, ஆனால் படத்தை பார்க்கத்தான் யாரும் இல்லை.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...9f&oe=59BB0C2A
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...0b&oe=59A25770
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...2b&oe=59A7BBD5
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...f9&oe=59A734B7
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...23&oe=59A9B0F2
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...4b&oe=59C0AA1B
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...09&oe=59B01A58
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...6a&oe=59B2FC1E
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...6b&oe=5976226E
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...6b&oe=59BD4C4A
அப்போதைய திரையரங்குகள் மற்றும் டூரிங் கொட்டகைகளில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் யாவும் அதிக நாட்கள் ஓடிக்கொண்டிருந்தமையால் பிலிம் சுருள் அறுந்து விடுவதுண்டு அதை தியேட்டர் புரஜெக்டர் ஆபரேட்டர் பெரும் சிரமப்பட்டு ஒட்டவைத்து மீண்டும் படத்தை ஓட வைப்பார், அதற்குள் ரசிகர்கள் போடும் கூப்பாடு காதை கிழித்து விடும், அப்படியே படம் தொடரும்போது துண்டாகிப் போன பிலிம் சுருளில் நடிகர்திலகத்தின் காட்சிகள் இடம் பெற்று படம் பார்க்கும் போது அது இல்லாமல் போனால் படத்தின் முக...்கியத்துவமே இல்லாமல் போய் விடும்,
மற்ற ஏனைய நடிகர்களின் படங்களுக்கு இந்த குறை ஏற்பட வாய்ப்பில்லை, மற்ற நடிகர்கள் எல்லாம் எந்த வித முக பாவனைகளையும் காட்டத் தெரிவதில்லை, வசனம் பேசும்போது முகத்தில் எந்த மாற்றமும் வெளிப்படையாக தொற்றுவிக்கத் தெரியாது, நடிப்பு என்ற ஒன்று இருக்கவே இருக்காது எனவே அந்தப் படங்களில் ஏதாவது பிலிம் சுருள் துண்டாகிப் போனாலும் படத்தின் தன்மை மாறாது, ஆனால் நடிகர் திலகம் மட்டுமே அவர் தோன்றும் காட்சிகள் காட்சிக்கு காட்சி நடிப்பிலும் வசனம் பேசுவதிலும் அசத்தியிருப்பார், எனவே 3 அடி பிலிம் சுருள் விடுபட்டு போனாலுமே படத்தின் சுவராஸ்யம் குறைந்து விடும்
நடிகர் திலகத்தின் நடிப்பை திரும்ப திரும்ப பார்த்த காலங்களில் எல்லாம் அதிக நாட்கள் என 175 நாட் களுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருந்ததனால் பிலிம் சுருள் தேய்ந்து கோடுகள் விழுந்து விடும், அப்போது அது ஒரு பெரிய கவலை,
ஆனால் இப்போதெல்லாம் வெளியாகும் படங்களுக்கு டிஜிட்டல் வசதி வந்து விட்டது தியேட்டரில் 1000 காட்சிகள் ஓடினால் கூட ஒரு கீரல் விழ வாய்ப்பில்லை, ஆனால் படத்தை பார்க்கத்தான் யாரும் இல்லை.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...06&oe=59BEBE1D
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...fd&oe=59A6BC24
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...c5&oe=59BD981F
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...c6&oe=59BB6A0F
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...49&oe=59A3E9DA
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...c4&oe=59BE23BF
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...c1&oe=59A13D3C
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...8a&oe=59A32B11
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...55&oe=59A3771F
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...b0&oe=59BC5F2E
Sun life TV - padithal mattum poduma - going on
http://i1110.photobucket.com/albums/...GEDC5720-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5721-1.jpg
http://i1110.photobucket.com/albums/...DC5723-1-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5724-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5725-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5726-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5727-1.jpg
http://i1110.photobucket.com/albums/...r/PMP100-1.jpg
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...7f&oe=59AA5083
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...5a&oe=59BF7962
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...f4&oe=59B71133
கப்பலோட்டிய தமிழன் படத்தில் செக்கிழுக்கும் காட்சியில்,
நடிகர்திலகம் கீழே விழவும், சிறை அதிகாரி, அவரை அடித்து காலால் மிதிப்பது போலவும் ஒரு காட்சி வரும். இக்காட்ச...ியில் வி.பி.மணி என்கிற நடிகர் சிறை அதிகாரியாக நடித்தார், நடிகர்திலகத்தை காலால் மிதிக்க மிகவும் தயங்கினார். அவரைச் சமாதானப்படுத்த படப்பிடிப்புக் குழுவினர் மிகவும் சிரமப்பட்டனர். பின் நடிகர்திலகம் அவரை அழைத்துச் சமாதானப்படுத்தி ' இந்தக் காட்சியில் நீ ஒரு சிறை அதிகாரி என்பதை நினைவில் கொண்டு நடிக்க வேண்டும், என்னைக் கைதியாக நினைத்துக் கொள்... என்று கூறி, சமாதானம் செய்த பிறகே அவர் சம்மதித்தார். காட்சி மிகச்சிறப்பாக அமைந்தது, காட்சி முடிந்த பின், அந்த நடிகர், கண்ணீர் விட்டு அழுததோடு நடிகர்திலகத்தின் காலில் விழுந்து வணங்கினார்.
நடிகர் திலகத்தின் சிறந்த படங்களை வரிசைப்படுத்தும்போது
வண்ணத்தில் வந்து வானவில்லாய் நம் இதயத்தில் அமர்ந்த, காலத்தால் அழியாத காதல் ஓவியம் என பெயர் வாங்கிய நம்மால் தவிர்க்க இயலாத ஒரு படம் ' வசந்த மாளிகை '
சமீபத்தில் ரசிக்கும் அரியதொரு வாய்ப்பு கிட்டியது. பன்முக திறன் கொண்ட ஒரு கலைஞன் தன திறமைகளை வெளிக்காட்ட அருமையான களம் அமைத்து கொடுத்த தமிழ் திரை உலகத்தையும்... அவரை எப்படி எல்லாம் பட்டை தீட்டி ஜொலிக்க வைக்க முடியும் என்று பலவித திறமையாளர்கள் அவரை பயன் படுத்தி கொண்டதும்...சரித்திர நிகழ்வுகள்...
நமக்கோ...ரசிப்பு திறன் கொண்டோர்க்கோ...பசியுடன் உள்ளவன் அருஞ்சுவை உணவினை..அள்ளி அருந்துவது போன்ற உணர்வுதான்...வெகு எளிமையான கதைதான்...எந்த ஒரு சிறிய கதையையுமே மிகப்பெரும் விருந்தாக மாற்றதான் நடிகர் திலகம் உள்ளாரே...
அழகாபுரி ஜமீனின் இளைய ஜமீன்தார் ஆனந்த், அன்பும் கருணையும் மிகக்கொண்டவன் ஆயினும் தாயின் அன்பும் அரவணைப்பும் முறையாக கிட்டாததாலும், தாயுடன் தொடர்புடைய ஒரு கொடூர கொலை சம்பவத்தினை சிறுவயதில் நேரில் பார்த்ததாலும் மனம் நொந்து...அந்த கவலையை மறக்க அவன் தந்தையே கூறிய ஒரு அறிவுரையினை ஏற்றதால் தொற்றிய குடிப்பழக்கம் அளவுக்கு மீறியது...குடும்ப உறுப்பினர்களை சற்றே விலகி இருக்க வைத்தது...
ஒரு சந்தர்ப்பத்தினில் நட்சத்திர ஹோட்டலில் நேர்முகத்தேர்வுக்கு வந்த முன்னாள் விமான பணிப்பெண்ணான லதாவை அந்த ஹோட்டலின் மேனேஜர் கெடுக்க முயல, முழு போதையில் அறையினை கடக்கும் ஆனந்த், சப்தம் கேட்டு உள்ளே நுழைந்து அவளை காப்பாற்ற, மறுநாள் அவள் அவனது கோட்டினை திரும்ப தருவதற்கு வந்த லதாவிடம் என்ன நடந்தது என்று கேட்டறிந்து...நீ விருப்பப் பட்டால் இங்கேயே தனது செயலாளராக இருக்கலாம் என்று வேலை தர, ஏழையாக இருந்தாலும் தன்மான உணர்வு மிகுந்த லதா, என் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்பட்டாலோ...அத்தகைய சூழலை எதிர்கொள்ளும் சந்தர்ப்பத்திலோ நான் இங்கு நிற்க மாட்டேன் என்ற கண்டிஷனுடன் வேலைக்கு உடன்படுகிறாள்.
மதுப்பழக்கத்தினால் அந்த நாட்டத்தினால் ஜமீனில் நடைபெறும் பல விஷயங்களை கண்டும் காணாமல் இருந்து வந்த ஆனந்துக்கு பல விஷயங்கள் செயலாளரின் வருகைக்கு பிறகு தெரிய வருகிறது...லதாவின் செயல்பாடுகள் அனைவரையும் கவருகிறது...இவளின் வருகையினை மற்றும் தலையீடுகளை ஆனந்தின் உடன் பிறந்த சகோதரனும் அவன் மனைவிக்கும் அவ்வளவாக பிடிப்பதில்லை.
உடன் பிறந்த அண்ணனோ..பேராசைக்காரன்...இவனது குடிப் பழக்கத்தினை பயன்படுத்தி சிறிய அளவு சொத்துக்களை மட்டும் அவனுக்கு கொடுத்து ஒதுக்கி விட முயல...அதற்கென ஒரு பத்திரம் தயாரித்து கையெழுத்து கேட்க...அலட்சியமாக ஆனந்த் ஒப்பமிட முயல, செயலாளர் லதா தடுத்து, அதனை படித்து பார்க்க வேண்டும் என கேட்டு படித்து உண்மையை உடைக்க...முயற்சி தடைப்படுகிறது. லதாவின் வருகையினால் ஆனந்தின் வாழ்வில் பலப்பல நல்ல மாற்றங்கள்...ஒரு கட்டத்தில் ஆனந்தின் தாயாரே அவளிடம் எப்படியாவது...அவனது குடிப்பழக்கத்தினை தடுத்து நிறுத்து என கெஞ்சுகிறார்...அதனையும் சாதிக்கிறாள் லதா... லதாவின் அன்பும், அறிவும், குண நலன்களால் பெரிதும் கவரப்பட்ட ஆனந்த் அவளை உயிரினும் மேலாக காதலிக்கிறான்.. அவளுக்காக ஒரு வசந்த மாளிகையை கட்டுகிறான்...
இதற்கிடையில் ஜமீனில் லதாவை வெளியேற்ற மிகப்பெரும் சதி நடைபெற்று, திருட்டு குற்றம் சாட்டப்பட்ட லதா ஜமீனை விட்டு வெளியேறுகிறாள்...அதன் பிறகு என்ன நடந்தது...இருவரும் ஒன்று சேர்ந்தார்களா...? என்பதே கதை..
பொதுவாக உயர்ந்த நிலையில் இருக்கும் சில நடிகர்கள் எதிர்மறை பாத்திரங்களை ஏற்க மாட்டார்கள். படம் வெளியான அந்த காலக்கட்டத்திலே...இதைப்போன்ற கேரக்டர்களை நடிகர் திலகம் ஏற்று நடிக்கத்தான் வேண்டுமா என்று விமர்சித்தவர்களும் உண்டு....நடிகர் திலகத்துக்கோ...எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது...இமேஜ் பார்ப்பதும்..கிடையாது நாளை தலைவனாக மாற தடையாக இருக்குமோ என்று பயமும் கிடையாது, என்பதனாலோ என்னவோ... எந்த ஒரு கதாபாத்திரத்தினையும் ஏற்று நடிக்க தயக்கமும் கிடையாது...நடிப்பு என.... வந்து விட்டால்... அந்த கேரக்டர்தான்....முக்கியம்... என்று அந்த கதாபாத்திரத்துடன் ஒருங்கிணைந்து அதுவாகவே மாறிவிடுவது செவாலியருக்கு புதியதல்லவே...
இங்கே...ஒரு மிகப்பெரும் பணக்காரனாக குடிப்பழக்கத்துக்கு ஆட்பட்ட மனிதாபிமானமுள்ள அன்பு நிறைந்த ஒரு அப்பாவி ஜீவனாக அற்புதமாக வாழ்ந்து காட்டியுள்ளார் கலைக்குரிசில்.
மது அருந்தும்....காட்சியோ.. புகைக்கும் காட்சியோ...என்ன ஒரு ஸ்டைல், அலட்சியப்புன்னகை, அருமையான நடன அசைவுகள்..கொடுமைகள் கண்டு பொங்குவதும்...காதலில் மயங்குவதும் காதலியின் பிரிவினில் உருகுவதும்,
தவிப்பதும், துடிப்பதும், மருத்துவர் குடிக்ககூறி வற்புறுத்த, நோ...உயிரே போனாலும் காதலிக்கு கொடுத்த வாக்கினை மீறி இனி மதுவை தொட மாட்டேன்... என்பதும்...
இறுதிக்காட்சியில் யாருக்காக ...இது யாருக்காக...இந்த மாளிகை வசந்த மாளிகை...காதல் ஓவியம் கலைந்த மாளிகை... என விஷமருந்தி பாடுவதாகட்டும்....ஆகா...என்ன ஒரு உச்சக்கட்ட நடிப்பு...
படத்தின் துவக்கத்தில்......ஓ...மானிட ஜாதியே...என்ற பாடலுடன் அறிமுகமாகி...கடைசிக்காட்சி வரையினில் முழுமையாக படத்தினை தாங்கிப்பிடித்து நம்மை பரவசப்படுத்தி விட்டார் நடிப்புசெம்மல்.
அவருடன் பொருத்தமான கதாபாத்திரங்களுடன் ...கலையரசி வாணிஸ்ரீ, சி.ஐ.டி. சகுந்தலா, நடிகர் பாலாஜி, ஸ்ரீகாந்த், பண்டரிபாய், புஷ்பலதா, எஸ்.வீ. ரங்காராவ், நாகேஷ், சுந்தரராஜன், வீ.கே.ராமசாமி, சுகுமாரி, வீ.எஸ்.ராகவன், சாந்தகுமாரி, என ஒரு பட்டாளமே...படத்தின் வெற்றிக்கு துணை நின்றுள்ளனர்.
நகைச்சுவை திலகம்...நாகேஷ்...V.K. ராமசாமியுடன் இணைந்து தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருந்தார்...எனினும்..(உண்மையிலேயே குடியினால் பாதிக்கப்பட்டது போன்று இருந்தார்) சில பல இடங்களில் காமெடி..முகம் சுளிக்க வைத்தது...
படத்தை தூக்கி நிறுத்தியதில் பாடல்களும் இசை அமைப்பும் நிச்சயம் நல்லதொரு பங்கு வகித்துள்ளது. திரை இசை திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில் காவியத்தாயின் இளையமகன் கண்ணதாசனின் அற்புதமான வரிகள்...அதுவும் அவருக்கே உரித்தான ரசனை மிகுந்த விஷயங்களை பற்றி எனும்போது...கவிஞர் புகுந்து விளையாடி விட்டார் ...
இரண்டு மனம் வேண்டும்...இறைவனிடம் கேட்டேன்....
ஓ....மானிட ஜாதியே....
மயக்கமென்ன...இந்த மௌனமென்ன...
கலைமகள் கைப்பொருளே....உன்னை கவனிக்க...
குடிமகனே...பெருங்குடிமகனே....நான் கொடுக்கட்டுமா..
ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்....
யாருக்காக...இது...யாருக்காக....
குரல் நடிகர்...T.M. சௌந்தரராஜன்...பாடல் காட்சிகளில் நடிகர் திலகமாகவே மாறி அசத்தி விட்டார்...
மற்றும்...இசைக்குயில். P. சுசீலா,.. கவர்ச்சிக்குரலுக்கு உரிய.. .L.R. ஈஸ்வரி, பின்னணி பாடகி..வசந்தா...என்று அற்புதமான இசைக்கூட்டணி...திரையிசை திலகத்தின் கற்பனைக்கு உயிரூட்டி விட்டனர்...
ரசித்த காட்சிகள் பல...ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்....பாடலில் உள்ள நடிகர் திலகத்தின் உற்சாக துள்ளல் நடனம்...ஒரு கட்டத்தில்...கட்டழகானதோர் ...கற்பனை ராஜ்ஜியம்...கட்டி முடிந்ததடா...அதில் கட்டில் அமைந்ததடா...வெறும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை என்று...சக்கரம் சுற்றுதடா...(இப்போது...ஏராளமான கனமுள்ள ஒரு மஞ்சள் நிற ஆடை அழகியை சர்வ சாதாரணமாக தூக்கி ஒயிலாக வீசுவார்...) அதில் நான் சக்கரவர்த்தியடா....என்ற வரிகளுடன் ஒரு அட்டகாசமான சிரிப்பு....
இரண்டு மனம் வேண்டும்...இறைவனிடம் கேட்டேன்...பாடலில்...
கண்களின் தண்டனை காட்சி வழி...
காட்சியின் தண்டனை காதல் வழி...
காதலின் தண்டனை கடவுள் வழி...
கடவுளை தண்டிக்க என்ன வழி...?
மயக்கமென்ன...இந்த மௌனமென்ன... பாடலில்
ஆண்:மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே
மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன, அன்பு காணிக்கைதான் கண்ணே
பெண்:கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே, நினைத்ததில்லை கண்ணா
ஆண்:தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் - அதில்தேவதை போலே நீயாட
பெண்:பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட
ஆண்:கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட
பெண்:கைவளையும் மைவிழியும் கட்டியணைத்துக் கவி பாட (மயக்க)
ஆண்: ஆடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்து வர
பெண்:ஓடி வரும் வண்ண ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர
ஆண்:மல்லிகைக் காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்ட
பெண்:வள்ளி மலைத் தேன் அள்ளி எழுந்த வண்ண இதழ் உன்னை நீராட்ட (மயக்க)
ஆண்:அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுகிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்
பெண்:கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மது அருந்தாமல் விட மாட்டேன்
ஆண்:உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொடமாட்டேன்
உன் உள்ளமும் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தரமாட்டேன் (மயக்க)
கலைமகள் கைப்பொருளே....உன்னை கவனிக்க...ஆளில்லையோ... பாடலில்
ஆஹா...கேட்கும்போதே...மெய்சிலிர்க்கும் வரிகளும்...இசையும்...குரலும்....அற்புதம்...இச ை என்றால்...தேன்மழை என்பதா...? மதுக்குடத்தை சுற்றும் வண்டுகளாக...மனதையும் காதுகளையும்
நாம் பறிகொடுத்து நிற்கின்றோம்...இசையும் கவிஞரின் பாடல் வரிகளும்...நம்மை எங்கோ...கொண்டுசெல்லும் வண்ணம் உள்ளது...
வசனம்...திரு.பாலமுருகன்...ஆகா..அற்புதம்...வெக ு பொருத்தமானவை...
தன்னிடம் புதிதாக வேலைக்கு வரும் லதாவிடம்:
இதுதான் அழகாபுரி ஜமீன். இங்கே இருக்கிற ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் எங்களுக்குத்தான் சொந்தம்னு எல்லோரும் சொல்லிக்கிறாங்க ஆனால் கடைசியில் மனுஷனுக்கு தேவை ஆறடிமண்!
* தன்னைப்பெற்ற தாய்ப்பாசமில்லா அம்மாவிடம்:
பாசமா? அது ஏதும்மா இந்த வீட்டிலே?
*லதாவை கற்பழிக்க முயலும் கெட்டவனிடம்:
இடியட்! சரினா யாரா இருந்தாலும் விடக்கூடாது. வேண்டாம்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது. அதுதான் நம்ம ப்ரின்சிப்பிள்.
* தன்னை தன் சுற்றத்தார் அவமானப்படுத்தும்போது, லதாவிடம்:
குடிகாரன்கூட வருத்தப்படுமளவுக்கு பேசுவதுதான் இவர்களுக்கு தெரிந்த மரியாதை.
விசுவாசமான பணியாளராக வரும் ராகவனிடம்...பிறந்த நாளுக்கு மாலை அணிவித்து வாழ்த்தும் இடத்தில் உள்ள வசனங்கள்..
பொறந்தநாளா? எனக்கா? நான் பிறந்தது எப்போ என்று என்னைப்பெத்த தாய்க்கும் தெரியாது, என்னை படச்ச ஆண்டவனுக்கும் தெரியாது, ஏன் எனக்கே தெரியாது. ஆனால் என் பொறந்த நாளை நீ மட்டும் ஞாபகம் வச்சிருக்கியே? இதை பாசம்னு சொல்வதா? இல்லை விஸ்வாசம்னு சொல்வதா? இதுதான் தூய்மையான அன்பு! அதான் அன்பை கடவுளுக்கு சமமா சொல்றாங்க இல்லையா? நான் யாருக்காக் பிறந்தேனோ, தெரியலை? ஆனால் நீ பிறந்தது மட்டும் எனக்காகத்தான்!
.டேய்...ஒன்ன போல உள்ள நல்லவங்களோட அன்பு இருந்தா...போதும்டா...நூறு வருஷம் என்னா...ஆயிரம் வருஷம் நான் நல்லா இருப்பேன்...
வாணிஸ்ரீயிடம்...வசந்த மாளிகைக்கு அழைத்துசென்று...தன் காதலியினை காண்பிக்கிறேன்...என்று...காதலை வெளிப்படுத்தும் இடம்.....
என் காதல் தேவதைக்காக நான் கட்டியுள்ள இந்த ஆலயத்தை..பார்...என் இதய சாம்ராஜ்ஜியத்தின் தலைவியின்..அன்பு வாழ்க்கை...ஆரம்பிக்கபோகும் அன்பு மாளிகையை..பார்...என் கண்களை திறந்து விட்ட காதல் தெய்வம் காலமெல்லாம் களித்திருக்க நான் கட்டி இருக்கும் வசந்த மண்டபத்தை பார்.... தொடரும்...வசனங்கள்...மறக்கவே முடியாதவை..
ஏராளமான இடங்களில் இப்படிப்பட்ட முத்தாய்ப்பான வசனங்களால் நம்மை ஆட்கொள்ளுகிறார்... படத்தினை பற்றி குறிப்பிட்டுக் கூற...வசனம்...பாடல் வரிகள்... என்று...எவ்வளவோ..உள்ளது...
மொத்தத்தில் வசந்தமாளிகை....நமது காலத்தால் அழிக்கமுடியாத ரசிகர்களின் உள்ளத்தில் கட்டப்பட்ட ஒரு அருமையான 'காதல் மாளிகை '...மீண்டும்....ரீ ..ரிலீஸ் செய்வதற்கு பொருத்தமானதொரு உன்னதமான பொழுது போக்குப்படைப்பு...
(முகநூல் விருந்து)