NT ரசிகர் ஒருவர் கொடுத்த தகவல். 70களிலும் 80களிலும் தென் மாவட்ட மக்களின் மிகப்பெரிய பொழுது போக்காக இருந்தது இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவை. அப்துல் ஹமீது போன்ற பல அறிவிப்பாளர்களின் கவர்ச்சியான குரல் வளம் மற்றும் (ஆல் இந்தியா ரேடியோவில் கேட்கமுடியாத) புதிய திரைப்படப் பாடல்களால் தென் மாவட்ட மக்களின் மனம் கவர்ந்தது இலங்கை வானொலி. அதில் ஒவ்வொரு வாரமும் பாடல்கள் ரசிகர்களின் வாக்குகள் ( போஸ்ட் கார்டில் அனுப்பலாம்) அடிப்படையில் வரிசைப்படுத்தப்படும்.
10 வது பாடலில் தொடங்கி வாக்குகளின் எண்ணிக்கையோடு ஒவ்வோரு பாடலும் அறிவிக்கப்படுவதைக் கேட்க வீடுகளிலும், டீக்கடைகளிலும் பெரும் திரளான மக்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருப்பார்களாம்.
இந்தப் போட்டியில் மிக அதிகமான வாரங்கள் ( 50க்கு மேல் இருக்கக்கூடும்) முதலிடத்திலேயே இருந்த பாடல்கள் "எங்கெங்கோ செல்லும்" மற்றும் சங்கிலி படத்தில் வரும் " நல்லோர்கள் வாழ்வைக் காக்க" இரன்டும் தானாம். இவை இரண்டுமே NT + S.P.B யின் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1983க்குப் பின் இலங்கை வானொலியின் ஒலிபரப்பு சக்தி குறைக்கப்பட்ட பிறகு தென் மாவட்டங்களில் கேட்பது நின்றுவிட்டது.
ஒரு உபரி தகவல் - இதே நிகழ்ச்சியில் அதிக வாரங்கள் முன்னணியில் இருந்த மற்றொரு பாடல் இளையராஜா இசையமைத்த "ஓரம்போ..ஓரம்போ" என்ற பாடல். அதாவது T.M.S அவர்களால் விமர்சிக்கப்பட்டு சர்ச்சையை ( between Ilayaraaja and TMS) ஏற்படுத்திய பாடல்.