-
அன்பு மாடரேட்டர் திரு .P_R அவர்கள் கூறியது போல 'காத்தவராயன்' திரைப்படத்தில் உலக அனுபவம் பெறுவதற்காக வேண்டி பலஊர்கள் சென்று, சுற்றி கோவில்கள்,திருத்தலங்கள்,மற்றும் ஓடப் போட்டி, இவைகளை நமது நடிகர் திலகம் அவர்கள் கண்டு மகிழ்ந்து ரசிப்பதாக வரும் காட்சிகளில் நடிகர் திலகத்தின் முக பாவங்கள் வெகு அருமை. வெகு நேர்த்தி.
திரு .P_R அவர்கள் விருப்பத்திற்காகவும் நமக்காகவும் அந்த வீடியோக் காட்சி.
http://www.youtube.com/watch?feature...&v=P0OHDJvcjnw
அன்புடன்,
வாசுதேவன்.
-
-
டியர் வாசுதேவன்,
தங்களின் மேலான பாராட்டுக்கு மிக்க நன்றி.
காத்தவராயன் மல்யுத்தக்காட்சியை நீங்கள் ஆய்வு செய்திருந்த விதம் உண்மையிலேயே அசர வைத்தது. எப்படி ஸ்டெப் பை ஸ்டெப்பாக உன்னிப்பாக கவனித்ததோடு அக்காட்சியை மென்மேலும் மெருகேற்றி அந்தக்காட்சிக்கே ஒரு சிறப்பை ஏற்படுத்தி விட்டீர்கள். நீங்கள் மிகத்தெளிவாகச்சொன்னது போல, டூப் எதுவும் போடாமல் அக்காட்சி முழுவதும் தானே மல்யுத்தம் செய்து ஆச்சரியப்படுத்தியிருப்பார் நடிகர்திலகம்.
தங்களின் சிறப்பான ஆய்வுக்கு எனது பாராட்டுக்கள், நன்றிகள்,
-
மதிப்பிற்குரிய சாரதா மேடம்,
தங்களின் இதயபூர்வமான பாராட்டுக்கள் சந்தோஷம் அளிக்கிறது. அதைவிட மகிழ்ச்சி தங்கள் பதிவுகளைப் படிக்கும் போது கிடைக்கிறது. நன்றி!
பணிவுடன்,
வாசுதேவன்.
-
நடிகர் திலகம்-கமலாம்மாள் தம்பதியரின் பேரப்பிள்ளை
ராம்குமார்-கண்ணம்மாள் தம்பதியரின் தீரப்பிள்ளை
அன்னை இல்லத்துச் செல்லப்பிள்ளை
சிரஞ்சீவி துஷ்யந்துக்கும்,
ராஜேந்திரன்-ராஜலட்சுமி தம்பதியரின் திருமகள்
சௌபாக்கியவதி அபிராமிக்கும்
இன்று 7.11.2011 திங்களன்று
சென்னையில் திருமணவிழா
மிக இனிதே நடந்தேறியது !
இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் புதுமணத்தம்பதியர்
இல்லற ஜோதியாய்த் திகழ்ந்த சிவாஜி-கமலா தம்பதியர் போல்
வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று
வாழ்வாங்கு வாழ வளமான வாழ்த்துக்கள் !
பாசத்துடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
இன்றைய [7.11.2011] 'தினத்தந்தி'யிலிருந்து...
http://i1110.photobucket.com/albums/...GEDC4974-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
-
இன்றைய [7.11.2011] 'மாலை தமிழகம்' நாளிதழிலிருந்து...
http://i1110.photobucket.com/albums/...GEDC4979-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் ராகவேந்திரன் சார்,
வான்புகழ் கொண்ட நமது நடிகர் திலகத்தை நாம் அனைவரும் என்றென்றும் மலைப்புடன் அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருக்கிறோம் !
மழையெனத் தாங்கள் பொழியும் பாராட்டுக்கும், காட்டும் அன்பிற்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
netru nadantha nigazchi pola neenga solli irukeenga
-
Dear Mr Vasu
Kaathavarayan padam romba varusham mun parthiruken-ana intha wrestling really superb-thrilling-realistic neenga solliyathu pola-we enjoyed the wrestling video