http://i47.tinypic.com/b7b8y1.jpg
Printable View
Some one in this thread has updated the airport photo, our MGR being welcomed by Japanese.
குறைந்த காலத்தில் 100 பதிவுகள் தந்த செல்வகுமார் மற்றும் 1000 பதிவுகள் தந்த திருப்பூர் ரவிச்சந்திரன் இருவருக்கும் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். இதே போல் விரைவில் 3000 பதிவுகளைக் கடக்க உள்ள வினோத் மற்றும் 200 பதிவுகளைக் கடக்க உள்ள எம்ஜிஆர்ரூப் இருவருக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள்.
PERUMUGAI VELLORE
http://i45.tinypic.com/245yb5u.jpg
Only Book MGR completed is திரை கடலோடித் திரைப்படம் எடுத்தோம்
A review of this book.
Vijaya Publications have released a paper back edition of MGR’s experience in filming “Ulagam Sutrum Vaaliban” as “எம்.ஜி.ஆர், எழுதிய உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை”. MGR wrote his overseas film shooting experience in Bommai Magazine from July 1971 to September 1972 titled “திரை கடலோடித் திரைப்படம் எடுத்தோம்”
http://i125.photobucket.com/albums/p...ps2b611890.jpg
இனிய நண்பர் செல்வகுமார் சார்
உங்களின் நூறு பதிவுகளும் மிகவும் அருமை .
மக்கள் திலகம் தனது துணைவியாருடன் தோன்றும் நிழற் படம் மிகவும் அருமை .
Continued...
I was searching this article for several years because this is the only literary work completed by MGR. All other works such as his Biography நான் ஏன் பிறந்தேன்?, என் காதலி etc were unfinished due to several reasons to name one is, after the party formation in 1972.
This book contains about 14 chapters it starts from getting permission from the Indian Government and how they procrastinated.
MGR narrates about how many of his fans were waiting near the Airport and the same when the plane takes off that he saw only the crowd beneath. Apart from MGR Fans the people who came to wish him for his success are N.T.Ramarao, Director Krishnan Panju, Actors Srikanth and Gemini Ganesan, Director and Producer Banthalu and also the Chief Minister of Tamilnadu Karunanidhi.
In the second chapter MGR tells about the outline of the story, real life characters of his Heroines from Chandrakala, Manjula and Latha. And also he tells us how much responsibility he has in taking care the whole crew which appears a Himalayan task at that time.
We will come to know about the hilarity of Nagesh and Asokan in Plane. How many airplanes they changed to reach Osaka for Expo 70.
The first shot in Expo 70 was taken on 8.9.1970 and the next day is the “Ulagam azhagu” song was shot, MGR explains how the shot was done and how many hours the crew spent in taking that particular first stanza of the song.
MGR also mentions the part played by Director P.Neelakandan in filming Ulagam Sutrum Valiban and MGR highlights the one take of MGR, Chandrakala, Nagesh, Asokan and MGR, Manjula in Expo 70 and he describes the situation how other actors co-operated.
The book ends with Hong Kong shots and how a Indian helped MGR in making the song and scenes in his own house.
The book has several unseen images, deleted scenes from Ulagam Sutrum Valiban, behind the scenes. I have upload some of the images for you.
will be continued.
http://i125.photobucket.com/albums/p...psd06f22b3.jpg
கலிய பெருமாள் சார்
இது வரை காணாத மக்கள் திலகத்தின் சினிமா - அரசியல் அபூர்வ படங்கள் -கட்டுரைகள் -அருமை .
உங்களது பதிவுகள் மக்கள் திலகம் திரிக்கு பெருமை சேர்க்கிறது .
தொடர்ந்து அசத்துங்கள் சார்
A special mention is about the writing skill of MGR I have read some of his literary works in every work his writing skill is like conversing with us and not just a write up. This book is no different. When we read a chapter in some places our mind will ask a question, that question will be in the next sentence and when MGR explains that question some times we find a doubt and that same doubt will be in next line. It appears that we are not reading the book, it is like MGR talking to us.
http://i125.photobucket.com/albums/p...ps7ec40948.jpg
More images can be found in this post.
http://mgrroop.blogspot.in/2009/07/mgr-book.html
MGR Speech
Below is the part of the speech delivered by MGR in front of highly educated people in Chennai Manavazhagar Mandram Muthamil Vizha held in the year 1964. He spoke for two days yes, not two hours. Without any body help and any hints.
The Extract of his speech
வைத்திய நிபுணரிடம் ஒரு கத்தியைக் கொடுத்து, அறுத்து விடு என்று கூறுவதற்கும் ஒரு கொலைகாரனிடம் கத்தியைக் கொடுத்து அறத்துவிடு என்பதற்கும் அதிக வித்தியாசமிருக்கிறது. இதன் பொருளை இடம், பொருள், ஏவலாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அறுத்து விடு என்பது ஒரு கருத்தைத்தான் எடுத்துக் காட்டுகிறது என்றாலும் வைத்தியனிடம் கொடுக்கப்படும் கத்தி ஒரு குழந்தையின் வாழ்வுக்கு வழி செய்வதாக அமையும். அதே போல, கொலைகாரனிடம் கொடுக்கப்பட்ட கத்தி, ஒன்று மறியாத குழந்தையைக் கொலை செய்யப் பயன்படும் என்ற வித்தியாசம் இருப்பதை உணரலாம். உண்மையான பொருளை ஒரு வார்த்தையில் அடைத்துவிட முடியாது.
அடிமை என்ற சொல்லுக்கும் பல பொருள்கள் இருக்கலாம். அடிமை என்பவன் பிறருக்கு ஏவலனாக ஆக்கப்பட்டவன் என்றும் கூறலாம். பொதுவாக அடிமை என்பதற்குத் தொண்டு செயல் என்ற பொருளையும் கொள்ளலாம்.
வாழ்வுக்கும் எண்ணத்திற்கும் வரம்பு கட்டி விட்டால், அதையும் அடிமையென்று சொல்லத்தானே வேண்டும்?
கருத்துக்குக் கருத்து விவாதிக்க வேண்டும் அதற்குப் பிறகே ஒரு முடிவைச் சொல்ல வேண்டும். அதை விட்டு விட்டு, எல்லாம் எனக்குத் தெரியும் என்று ஆட்சிப் பீடத்திலிருப்போர் தம் கருத்தையே சாதித்தால் அது மற்றவரை அடிமைப்படுத்துகிற செய்கைதானே நீதி மன்றத்திற்கு வருவதற்கு முன்னரே, நீதிபதி தீர்ப்பபை எழுதி விடுகிறார் என்றால் என்ன அர்த்தம்? இப்படி இருக்கலாமா சுதந்திர நாட்டில்?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆட்சியாளர் ஆட்சிப் பீடமேறிய பிறகு, மக்களை அடிமையாக அவர்களைப் பலவந்தபடுத்திக் கருத்துக்களைத் திணிக்கின்றனர். இதுதான் நாம் பெற்ற சுதந்திரமா?
தொண்டு என்பது விரும்பி ஏற்றுக் கொள்வது, அடிமை என்பது அடிமைகளாக ஆக்கிக் கொள்ளுகிற, அல்லது ஆக்கப்படுகிற நிலை.
கட்சிக்கு அடிமைகளாக்க நிர்ப்பந்தப்படுத்துகிறார்கள். இன்று நாட்டிலே உள்ள நிலைமை இது. ஆட்சியினரிடத்திலே எந்தக் கருத்தை சொல்வதற்கும் அதிகாரம் இல்லாமல் மக்கள் பேசாமலிருக்கிறார்களென்றால், அடிமைத்தனம் என்பதுதான் பொருளே தவிர, அது தொண்டு அல்ல.
நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உன்னத இலட்சியத்திற்கு என்னைத் தொண்டனாக ஆக்கிக் கொண்டவன். நான் விரும்பி ஏற்றுக் கொணட் தலைவன் முன்னால் தொண்டனாக இருக்கிறேன்.
மக்கள் குறைகளை மந்திரிகளிடம் கூற வந்தால், அதைக் கேட்காமல், ஆறுதல் கூடக் கூறாமல் அலட்சியமாக இருப்பது சுதந்திரம் பெற்றதற்கு அடையாளமா? ஏழைகள் வாழ்வை ஏற்ற செய்ய வேண்டிய அமைச்சர்கள், அவர்களை மென்மேலும் வாட்டி வதைக்கும் போக்கில் அரசு செலுத்தும் போது, சுதந்திரம் என்பது வெறும் கேலிக் கூத்தென்பது தவிர வேறென்ன?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி பீடத்தில் உள்ளவர்கள், மக்களை அடிமைகளாக நினைக்கும் அவல நிலை மாறினாலன்றிச் சுதந்திரம் என்ற சொல்லுக்கு அடிமை என்றே பொருள் கொள்ள வேண்டும்.
PERUMUGAI VELLORE
http://i45.tinypic.com/erhead.jpg
MGR has written an account about Gandhiji and Nethaji Subash Chandra Bose in his Biography “Nan En Piranthen”. In this chapter MGR goes into details the feeling towards Gandhiji and Nethaji and also mentions the reason why he left the Congress party.
Below article was forwarded K.P.Ramesh from Dubai. This post is from srimgr.com
நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பேச்சுக்கள் என்னை மிகவும் கவர்ந்திருந்தன. என் உள்ளத்தில் அவரை ஒரு ஆதர்ச புருஷராக ஏற்றுக் கொண்டிருந்தேன். நிமிர்ந்த அவருடைய முகம், கம்பீரமான பார்வை, சின்னஞ் சிறு கைக் குழந்தையின் முகத்தில் எப்படிக் களங்கமே காண முடியாதோ, அதுபோல் தெளிவான, பசுமையான, சுய நலத்தின் வரிக்கோடுகள் எதுவும் இல்லாத தெளிந்த முகம்...
இப்படிப்பட்ட அவருடைய படத்தைப் பார்க்கும் போதெல்லாம், சுவாமி விவேகானந்தரின் உருவம்தான் என் நினைவுக்கு வரும். அப்படிப் பட்டவர், பட்டாபி சீதாராமை எதிர்த்து, அகில இந்திய காங்கிரசின் தலைவர் பதவிக்குப் போட்டி இட்டார்.
வெற்றி நேதாஜிக்குத்தான்! ஆனால், முடிவு அறிவிக்கப்பட்டவுடன், காந்திஜி, "பட்டாபி தோல்வி, என் தோல்வி...' என்று சொன்னார்; காங்கிரஸ் கட்சியே அதிர்ந்தது. அரசியலைப் பற்றி எதுவும் சரியாகப் புரியாத எனக்குக் கூடக் கலக்கம்.
"அப்படியானால், நேதாஜி, காந்திஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் இல்லையா?' என்ற கேள்வியால் ஏற்பட்டதல்ல அக்கலக்கம்.
காந்திஜியின் மனதில் கூட தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற எண்ணத்திற்கு இடமிருக்கிறதா!
காந்திஜியைப் பற்றி விமர்சனம் செய்ய எனக்கு சிறிதும் அருகதை இல்லை என்பதை உண்மையாக இப்போதும் உணர்ந்தவனே ஆனாலும், அவர் மீது நான் வைத்திருந்த நம்பிக்கையில் ஒரு சிறு விரிசல், எப்படியோ என், உலகம் அறியாத உள்ளத்தில் ஏற்பட்டு விட்டது.
திரும்பத் திரும்ப என்னை நானே கேட்டுக் கொண்டேன்... "காந்திஜிக்கு கூட இப்படித் தோன்ற இயலுமா?' என்று. ஆனால், "விருப்பு வெறுப்புகளைப் பாராது, வேண்டியவர், வேண்டாதவன் என்பதைப் பற்றி கவலைப்படாது, தன் தூய லட்சியத்திற்கு சேவை செய்கிறவர்கள் யார் என்பதைத் தெரியப்படுத்தாவிட்டால், தன்னைப் பின்பற்றுகிறவர்கள் தவறான பாதையில் அழைத்துச் செல்லப்படும் நிலை ஏற்பட்டு விடுமானால், தன் லட்சியமே தவறான பாதைக்கு இழுக்கப்பட்டு விடுமானால், அதை எப்படி அந்தப் புனித உள்ளம் அனுமதிக்கும்; ஏற்கும்?' என்று இன்னொரு மனம் சொல்லிற்று.
இதையும் என் உள்ளம் எனக்கு அறிவுறுத்தாமலில்லை. இருப்பினும், ஏதோ ஒரு பெரிய ஏமாற்றம். அதிலும், மகாத்மாவை வணங்கிப் பதவியேற்றுப் பேசிய நேதாஜியின் பேச்சு, எனக்கு மேலும் நேதாஜியின் மேல் அனுதாபத்தையே ஏற்படுத்தியது.
அவர் பதவியிலிருந்து விலகியது என்னை மீளாத் துன்பத்துக்குள்ளாக்கியது என்றால் பொருத்தமுடையதே ஆகும்.
நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதற்கு இது மட்டும்தான் காரணம் என்றில்லாவிட்டாலும், இதுவும் ஒரு காரணம் என்று சொல்வதில் தவறில்லை.
— "நான் ஏன் பிறந்தேன்' கட்டுரைத் தொடரில், எம்.ஜி.ஆர்.,
VALLALAR SATHUVACHARI VLR
http://i46.tinypic.com/2emddlg.jpg
A short story written by MGR.
MGR wrote an article titled “After Fame” (புகழுக்குப்பின்) in 1961. This is an extract from the article. MGR narrates a small story how a person should lead the life, how much fame lasts in this world.
ஒரு ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். அவன் புகழ் பெற்ற ஒரு திறமைசாலியைக் கண்டான். அந்தத் திறமைசாலி மாடு பிடிப்பதில் மாவீரன். இவனுக்கு அவன் மீது அளவற்ற பற்று ஏற்பட்டது. அந்த திறமைசாலிக்கு ஒரு நாள் மிகப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு திறமைசாலியைப் போற்றிப் புகழ்ந்தனர் மக்கள். சிறுவனும் உள்ளம் பூரித்துத் திறமைசாலியைப் போற்றினான்.
அந்தத் திறமைசாலியை ஒரு முறையாவது தொட்டு மகிழ வேண்டுமென்ற ஆர்வம் அவனுக்கு ஏற்பட்டது. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்து விட்டால் அதுவே தன் வாழ்வில் பெறக்கூடிய பெரும் பாக்கியமாகக் கருதினான். அந்தப் பாக்கியத்தைப் பெறுவதற்காக அவன் எடுத்த முயற்சி மிகப் பெரியதாக இருந்தது.
காலம் சுழன்றது.
இப்போது சிறுவன் வாலிபனானான். இவனுக்கு இருந்த ஆர்வத்தால் இவனே பெரிய திறமைசாலியானான். சந்தர்ப்பமும் கிடைத்தது திறமையைக் காட்ட…
நாளடைவில் மிகப் பிரபலமானவனாக மாறி, ஏராளமான புகழ் மாலைகள் சூட்டப்பட்டான்.
ஒரு நாள் இந்த புதிய திறமைசாலியான வாலிபனுக்கு மாபெரும் வரவேற்பு விழா நடந்தது. இவனை பலரும் சூழ்ந்து கொண்டார்கள். எல்லாருக்கும் தர்மம் செய்து கொண்டே வந்தான். அப்போது ஒரு பிச்சைக்காரன் அவனிடம் காசு கேட்டதோடு உன் புகழாவது நிலையானதாக இருக்கட்டும் என்று வாழ்த்துக் கூறவே, வாலிபன் அவனை உற்று நோக்கினான்.
அவனுக்குத் திகைப்பாகி விட்டது. காரணம் இது தான். முன்பு யாரைத் தொடுவதைப் பெரிய பாக்கியமாக இவன் கருதினானோ, அவனே தான் இப்போது இவனிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான்.
வருவான், போவான் என்பவை வாழ்க்கையின் இரு வினை முற்றுக்கள். அவை திரும்பத் திரும்ப வரும் போகும் இதுவே இயற்கை.
ஆகவே கலைஞர்களைப் பொறுத்த வரையில் திறமையைக் காண்பிப்பதிலே போட்டியேற்படுவதில் தவறில்லை. ஆனால் இன்னொருவனுடைய திறமை தன்னுடைய அழிவுக்குக் காரணமென்று நினைப்போமானால் – நம்மையும் நம்மை ஆட்டிப்படைக்கிற சக்தியையும் ஏமாற்றுகிறோம் என்று தான் பொருள்.
ராமமூர்த்தி சார்
மக்கள் திலகத்தின் பிறந்த நாள் போஸ்டர்ஸ் அணி வகுப்பு அபாரம் .
வேலூர் நகரம் மட்டுமின்றி அதன் சுற்று இடங்களில் வைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவரின் நிழற் படங்கள் மக்கள் திலகத்தை
நேரில் பார்ப்பது போல் உணர்வு ஏற்படுகிறது .
இன்னும் மூன்று நாட்களுக்கு எண்களின் கண்களுக்கு விருந்து வைக்க போகும் உங்களுக்கு நன்றி
================================================== ================================================== ============
சினிமாவின் சக்தியை எம்.ஜி. ஆர். தவிர ஒருவரும் நன்றாக பயன் படுத்திக் கொள்ளவில்லை. இனி எவரும் இவ்விதம் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் சொல்ல முடியாது.
ஒரு முறை இயக்குனர் காசிலிங்கம், ஏ.எஸ்.ஏ. சாமி, டான்ஸ் மாஸ்டர் குமார், நான் (மறைந்த எம்.என்.நம்பியார்) ஆகியோர் சினிமாவுக்கு போனோம். யார் டிக்கெட் எடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, சற்றும் யோசிக்கமால் திரு. எம்.ஜி. ஆர். அவர்களே எங்கள் எல்லோருக்கும் டிக்கெட் எடுத்து விட்டார்கள்.
வசதியாக இல்லாத காலத்தில் கூட எம்.ஜி.ஆர். மற்றவர்களுக்கு அதிகம் உதவியிருக்கிறார்கள். தன்னை நேசித்தவர்களுக்கன்றி தன்னை பகைத்தவர்களுக்கும் அவர் அதிகம் உதவியது எனக்கே தெரியும். உதாரணம் சொல்ல தேவையில்லை.
எல்லோருக்குக்ம் மரியாதை தருவது என்பது அவருடன் பிறந்த ஒரு பெரிய குணம். யாராயிருந்தாலும் அவர்களுக்குரிய மரியாதையை தர அவர் தயங்கியதே இல்லை.
மறைந்த நடிகர் எம்.என்.நம்பியார் அவர்கள் - ஒரு பேட்டியில்
================================================== ================================================== =============
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i49.tinypic.com/2m61laa.jpg
SATHUVACHARI GANDHI NAGAR VLR
http://i48.tinypic.com/35mf5na.jpg
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். 1977ல் அ.தி.மு.க சந்தித்த முதல் பொது தேர்தலுக்கு எழுதிய கடிதம்
ரத்ததின் ரத்தமே
1967 1976
இந்த எண் மாற்றத்தைப் புரிந்து கொள்ளுங்கள் - லஞ்ச ஊழலாட்சியைத் தமிழக மக்கள் தூக்கி எறிந்தது 1967 - 1976. இருமுறையும் அமரர் அண்ணாவின் கொள்கையை மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்ற வரலாறு உருவாக்கப்பட்டு விட்டதாக உலகம் இப்போதே பேசுகிறது. எத்தனை பேர்களைக் கொலைக்காரக் கொடுமையாளர்களால் பலி வாங்கிவிட முடியும்? நூறா? ஆயிரமா? பத்தாயிரமா? ஒரு லட்சம் என்றே வைத்துக் கொள்வோம் இப்போதே அண்ணா தி.மு.கழகத்தில் ஏறத்தாழ பதினேழு லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறோம். மீதியுள்ள கழகக் கண்மணிகளாகிய நம்மை என்ன செய்து விட முடியும்? அப்போது சட்டம் இந்த கொலைக்கார, கொள்ளைக்கார கும்பலை நேர்மையின் உதவியுடன் நீதியின் முன் நிறுத்தும் நியாயச் சட்டமும் உங்களின் உரமிக்க கொள்கைப் பிடிப்பில் வலிவும், இப்போது நம்மைத் துன்பத்திற்குள்ளாக்கும் தீயவர்களைச் சுட்டெரிக்கும். ஆம் இந்தத் தமிழகத்தில் இதுவரை இந்தத் துன்மதியாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட களங்கம் துடைக்கப்படும்.
எனது ரத்ததின் ரத்தமே! எழுந்திருங்கள்! கச்சையை இறுகக் கட்டுங்கள் நாம் எதற்கும், யாருக்கும் பயந்தவர்களோ, பதுங்கி ஒடிவிடுபவர்களோ அல்ல என்பதை நமது வீரமிக்க செயலால் தமிழகத்தின் நல்ல விதியை உலக வரலாற்றில் எழுதிக் காட்டுவோம். நாம் அமரர் அண்ணாவின் தம்பிகள். நமக்கு என்றும் தோல்வியே கிடையாது. நாளை நமதே மக்கள் நம் பக்கம் வெற்றியும் நமதே.
வேள்வி பதில் பகுதி
(1) அரசியல், கலை இரண்டுக்குமுள்ள வேறுபாடு என்ன?
எம்.ஜி.ஆர் பதில் - அரசியல் மேடை அரசியலுக்காக உள்ளது. சமூக, பொருளாதாரத்தைப் பாதுகாக்க இயங்கும் ஒரு அமைப்பு அரசியல். கலை மேடை கலைக்காக உள்ளது. மனித உணர்ச்சிகளை நேர்மையான வகையில் உருவாக்கவும், கட்டுப்படுத்தவும், சோர்வுற்ற மனித உள்ளத்திற்கு அமைதியைக் கொடுக்கவும், மறந்துவிட்ட பண்பினை நினைவு படுத்தவும் தெரிய வேண்டிய உண்மைகளை உணர்த்தவும், வாழ வேண்டிய முறைகளை வகுத்துக் கொடுக்கவும், வாழ்க்கை நிலையிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றிச் சமத்துவ போதனை செய்யவும் உள்ளது கலை.
(2) ராஜாஜி அவர்களைப் பற்றிய உங்கள் கருத்து யாது?
எம்.ஜி.ஆர் பதில் - விலைமதிக்க முடியாத முத்துக்களோடு விவரமறிய முடியாத எத்தனையெத்தனையோ விந்தைப் பொருள்களை யெல்லாம் தன்னகத்தே மறைத்து வைத்துக் கொண்டு, அலைக்கரங்களால் மண்ணைத் தழுவியும் தழுவாமலும், ஒரு நிலையில் ஒருபோதும் அமைதியாக இருக்க முடியாத ஆழ்கடல் போன்றவர் ராஜாஜி என்று கூறலாம் அல்லவா.
(3) பெரியாரை எதற்கு ஒப்பிடலாம்?
எம்.ஜி.ஆர் பதில் - தானும் வளர்ந்து, தன்னில் தோன்றும் விழுதுகளையும் தனித்து ஊன்றச் செய்து, தன்னில் வந்து ஒதுங்குவோருக்கெல்லாம் (அவர்கள் கள்வர்களாகவும் இருக்கலாம் களவு கொடுத்தவர்களாகவும் இருக்கலாம்) நிழல் தரும் ஆலமரத்திற்கு ஒப்பிடலாம்.
ரூப் சார்
மக்கள் திலகத்தின் புத்தகங்கள் பற்றிய தொடர் பதிவுகள் அருமை ,
இது வரை படித்திராத பல தகவல்கள் -உங்கள் பதிவுகள் மூலம் படிக்க முடிந்தது .
நன்றி ரூப்
(4) தமிழ்நாட்டில் வறுமை அடியோடு தீரும் நிலை என்று பிறக்கும்?
எம்.ஜி.ஆர் பதில் - எல்லா வளங்களும் இருந்து அன்புவளம், பண்புள்ள அறிவு வளம் ஆகியவை இரண்டுமே அதிக அளவில் வற்றாத ஊற்றுப் போல் சுரக்கும் நிலையில் இன்றைய தமிழ்நாடு இருக்கின்ற காரணத்தால், அதன் வளமெல்லாம் சுரண்டப்படுவதை கூடப் பெருந்தன்மையோடு பொறுத்துக் கொண்டிருக்கிறது. அந்த அன்பும் பண்புள்ள அறிவும் எந்த அளவுக்கு எத்தகையவரிடம், எவ்விதம் செலுத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு என்றைக்கு முடிவு செய்து செயற்படுமோ, அன்று தான் வறுமை அடியோடு தீரும் நிலை பிறக்கும்.
(5) சிறந்த பேச்சாளராக விளங்க நாங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை பற்றி விரிவாக விளக்கவும்?
எம்.ஜி.ஆர் பதில் - ஒரு கொள்கையில் பரிபூரண நம்பிக்கை வேண்டும். அந்தக் கொள்கை பற்றிய விரிவான - ஆழமான விளக்கங்களை அறிந்திருக்க வேண்டும், எந்த மொழியில் கருத்துக்களை வெளியிட விரும்புகின்றோமோ அந்த மொழியில் பேசும்போது வார்த்தைப் பஞ்சம் இல்லாமல் இருக்க வேண்டும். நமது பேச்சைக் கேட்கின்றவர்கள் அதிசயத்தோடு கவனிக்காமல் அக்கறையோடு கவனிக்கும்படி பேச வேண்டும்.
Everybody knows about MGR's philanthropic nature. Here in this answer MGR says the difficulties he faced when he tried to get a conclusion to help or not.
(6) தாங்கள் அளிக்கும் நன்கொடைகள் நல்ல முறையில் செலவழிக்கப் பட்டிருக்கின்றனவா? என்று தாங்கள் கவனிப்பதுண்டா?
எம்.ஜி.ஆர் பதில் - சிலவற்றைப் பற்றிச் சொன்னால் எனக்கும் உங்களுக்கும் வேதனை தருவதாயிருக்கும் சிலர் நான் நம்பும்படியான பொய்களைச் சொல்லிப் பலனைப் பெற்றதண்டு. அதை அறிந்த நான் எச்சரிக்கையாக இருக்க முயன்றதன் விளைவாக உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு நான் பயன்பட முடியாமற் போனதும் உண்டு.
(7) உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
எம்.ஜி.ஆர் பதில் - ரசிகர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான் உண்மையான ரசிகர்களாக இருக்க வேண்டும். வேறு குழப்பங்களில் சிக்கிக் கொண்டு தேவையற்ற விபரீதத்திற்கு ஆளாகி விடக்கூடாது.
The above question and answers were taken from Samaneedhi.
This is the speech given by MGR on 14th August 1981 on the eve of Indian Independence day celebration.
This speech was telecasted in Doordarshan and AIR.
சுதந்திர தின விழாவில் வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் பரட்சித்தலைவர் உரை.
நாம் வடுதலை பெற்றது ஏதோ நேற்று நடந்தது போல் இருக்கிறது. நாம் விடுதலை பெற்று 34 ஆண்டுகள் ஒடிவிட்டன.
விடுதலை பெற்ற அன்றைக்கு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15ம் நாள் நள்ளிரவில் அமரர் பண்டித நேரு அவர்கள் இன்று உலகம் துயில் கொண்டிருக்கும் இந்த நள்ளிரவு நேரத்தில் இந்தியா சுதந்திரத்திற்குள் விழித்தெழுகிறது என்று குறிப்பிட்டார்கள்.
அமரர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் முதல் தவறுகளுக்காக நாம் வெள்ளைக்காரர்களை குற்றம் சாட்டவோ குறை சொல்லவோ இயலாது என்றார்கள்.
என்றைக்கோ எப்போதோ பேசப்பட்ட அவர்களின் வார்த்தைகளை இன்றைக்கும் நினைத்து பார்ப்பதற்கு நாம் கடமைபட்டவர்களாக இருக்கின்றோம்.
நமது விடுதலை போராட்டம் வரலாற்று சிறப்புமிக்கது. தன்னை அதற்கு முன்பாக உலகில் வேறு எந்த பகுதியிலும் இந்த அளவு அற வழியில், அன்பு வழியில் போராடி ஒரு நாடு விடுவித்து கொண்டதில்லை.
இன்று பட்டொளி வீசி பறக்கிற தாயின் மணிக்கொடியை பார்த்திருக்கிறோம். பரசவமடைகிறோம். ஒங்கி பறக்கிற இந்த கொடியை உயர பறக்க விடுவதற்காக சொந்த பந்தங்களை சொத்து சுகங்களை ஏன் தங்கள் இன்னுயிர்களை ஈந்தவர்கள் எத்தனை பேர்.
பெண்ணிற் பெருந்தக்க யாவுள? என்று ஒரு வினாவைத் தொடுத்து, அதற்கு ஒரு நிபந்தனையாக கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின், என்று விதிவகுத்தார் திருவள்ளுவர். கற்பு என்ற ஒரு சொல்லில் எல்லா நற்பண்புகளுமே அடங்கும் என்ற உண்மையை உறுதிபடுத்தவே கற்பென்னும் திண்மை என்று வலியுறுத்திக் கூறினார் வள்ளுவர். பெண் கற்புடன் அதாவது, நற்பண்புகளுடன் விளங்கினால் அவளைக் கைப்பிடித்த ஆண் மகனின் வாழ்வு விளங்கும். அது மட்டுமல்ல, அந்தப் பெண்ணும், ஆணும் சேர்ந்து வாழும் வாழ்வினால், அவர்களின் குடுமப்ம் ஒரு கோயிலாக ஒளி வீசும். அந்த இல்லற ஆலயத்தில் இல்லை, என்ற குறை இராது. இன்பம் பொங்கிப பெருகும். இதனால் இவர்கள் வாழும் ஊர் விளங்கும். இவர்கள் பிறந்த நாடு உயரும். நாட்டில் நல்லறங்கள் செழிக்கும். செல்வம் கொழிக்கும். பெண் என்ற ஒரு சக்தி சமுதாயத்தின் கண் என்று சொல்லத்தக்க அளவுக்கு ஆற்றலுடையதாக இருப்பதை உலகம் என்றுமே அறிந்து பாராட்டியுள்ளது. ஆண் அறிவும், ஆற்றலும் நிரம்பப் பெற்றவனாக இருப்பினும். அவனுக்கு வாய்க்கும் பெண் எழிலும், ஏற்றமும் பெற்றிந்தால் மட்டும் போதாது. எல்லா நற்பண்புகளுக்கும், பிறப்பிடமாகத் திகழ்ந்தேயாக வேண்டும். இல்லையென்றால், அதாவது எதிரிடையான குணங்களைப் பெற்றிருந்தால், இருவருடைய வாழ்வுமே பாதிக்கப்படும். இல்லறமும், நல்லறமாக இராது.
திருக்குறள் விழாவில் எம்.ஜி.ஆர். பேசியது - 1972.
நன்றி வினோத் சார்
என்னால் போய்தான் படம் எடுக்க முடியவில்லை
முடிந்தால் நம் மக்கல்திலகம் ஒப்பற்ற மாசற்ற பாசமிகு
தலைவனை பற்றிய செய்திகளை தினமும் ஒரு லைவ்
ப்ரோக்ராமே நடத்தலாம் எங்கள் ஊரில் மட்டும்
Actor jayam ravi
தமிழில் வந்த எந்தப் படத்தை ரீமேக் செய்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?
- ரஜினி, புதுச்சேரி.
நிறைய படங்கள் இருக்கு. எனக்கு எம்.ஜி.ஆரின் படங்களை ரொம்பவே பிடிக்கும். நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். இப்போதும் எம்.ஜி.ஆர். படங்களின் தீவிர ரசிகன் நான். அவரின் படங்களில் மட்டும்தான் ஒரு மேஜிக் இருக்கும். "உலகம் சுற்றும் வாலிபன்', "எங்கள் வீட்டுப் பிள்ளை', "மதுரை வீரன்' என எல்லாப் படங்களும் பிடிக்கும்.
அதில்... "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' படம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். நான் பார்த்த பொழுதுபோக்குப் படங்களில் ரசனையான படம் அதுதான். இப்போது வரை ""திறந்துடு சீசே... வசனத்தின் வரிகள் மனசில் பச்செக்கென ஒட்டியிருக்கு. சினிமாவின் தொழில்நுட்பம் வளராத கட்டத்தில் வந்த அந்த சினிமா, இப்போதுள்ள பிரம்மாண்டங்களை விட எனக்கு பெரிதாகத் தெரிகிறது. இப்போது அந்த படத்தை ரீமேக் செய்ய பெரும் தொகை பிடிக்கலாம். ஆனால் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்
புதிய பஸ் நிலையம் கிரீன் சர்கள்
முன்பகுதி மற்றும் பின் பகுதி
http://i48.tinypic.com/evcm1e.jpg
http://i45.tinypic.com/14oa8uh.jpg
Some more information from unfinished MGR Movie Inaithakaigal
By the end of 1969 that is after the successful release of Adimai Penn, MGR went on to make a movie under the Banner MGR Productions “Inaintha Kaigal”. The story was inspired from a Hindi film Prithiviraj Kapoor's “Daktha Mansoor”. The story is real one from the life of Muslim Chief Mansoor who lived in Iran.
Arrangements were made the story draft was changed 3 times before it went on to shooting stage. N.T.Ramarao was booked for the Telugu version of this movie. A grand function was held in Sathya studios on the first day shooting of the movie, presided by Kalaignar Karunanidhi.The crew involved in this movie are M.S.Viswanathan – Music, Lyrics by Vali and Pulavar Vedha, Camera by V.Ramamurthy, Story – Syed Hajah Mohideen alias Ravindran, Dialogues by Sornam, Jambu for Editing, Stunts by Shyam Sundar, Arts by Anga Muthu and Direction by Chanakya.
http://i125.photobucket.com/albums/p...psce2683fd.jpg
Story : Mansoor was born in Royal family, circumstances make Mansoor and his mother get separated from the family. Mansoor was raised by a Poor man named Moosa. Mansoor becomes a thief for living. Years roll by, Mansoor helps the poor and needy by giving them food, care and money, and stand for their cause and against the reigning King. An incident happens that he becomes changed man when he falls in Love with a girl who is a princess. Her father is Harun Al Rashid. Mansoor gets to know his birth mystery. He get assisted by his Lover. A greater task was kept in front of Mansoor to provide water to her Kingdom. He triumphantly performs the task by breaking the mountain with that he gets to know about his Mother and finds her and finally the throne he rightly owned.
MGR planned to introduce Iranian Actress as the heroine for this movie.
Four songs were recorded three usual movie songs and one lengthy Kavali type song. The songs such as
a. Nilavu Oru Pennagi (the song later used in Ulagam Sutrum Valiban – MGR and Manjula)
b. Aval Oru Navarasa Nadagam (this song also used in Ulagam Sutrum Valiban – MGR and Latha the one with water ballad)
c. Konjam Neram Ennai Marenthan (this song was used in Sirithu Vazha Vendum – MGR and Latha, remember both of them in lots of costumes for that song)
A forest set was made in Sathya Studio and shots were taken as MGR saving four girls and some dialogue scene between MGR and orphan children.
When the shots in studio were completed MGR asked Chitra Krishnasamy to get the permission from the Iran Government to shoot the movie in their country. The situation changed when Chitra Krishnasamy went to meet the Government they asked the story, after reading the story they denied permission. The reason the then Iran country was ruled by a King, it is capital punishment to mock a King or telling a story a thief becoming a King. King and Queen are highly placed and they do not want such a story to be shot in their country. Chitra Krishnasamy returned home and he told the sad story.
Story writer had a chance meeting Fartheen an International actor who is also one of the member from the Royal Family and asked can he do any help regarding picturising the movie. He firmly said you can ask the King to give the greatest treasures from his kingdom but not this kind of story. We are very strict we did not like disrespecting the King and Queen. You might have seen that all the foreign movies running in Iran are dubbed and released in Persian language. The Censor board is very powerful than our Police. I cannot help regarding this movie.
Then MGR made a 4th draft changing the back drop to India. Some characters are to be deleted and new ones to be created. When M.G.Chakrapani was asked to take the role of the King Rashid he did not accept and went on to take the role of Poor Moosa. He acted in the role of raising the child character Mansoor because he desired to raise MGR's son in real life but that did not happen for that he wanted to act as Poor Moosa to raise MGR's son in reel life. 5th draft was made and Actress Geethanjali acted with MGR for some scenes.
The movie was dropped the reason unknown then MGR went on to make “Ulagam Sutrum Valiban”.
MGR asked the story department for lavishness in the movie. Imagine the scene of breaking the mountain and the rushing water in those days. 3 Dream songs in Iranian back drop. The sets are inspired from Arabian Nights story. Costumes that MGR used is very different and shows individuality. Apart from the head dress MGR keeps the knife padded in his throat.
திருப்புமுனை திரைப்படங்கள் - 29
அ-பாபாவும் நாற்பது திருடர்களும் (1956)
பாக்தாத் நகரின் ஆடல் அழகி மார்ஜியானா. அவளது ஆடல் பாடலில் மயங்கியவர்களில் ஒருவன் ஷேர்கான். இவன் அமிர்காசிம்கானின் தளபதி. ஷேர்கான் அவளை அரண்மனைக்கு இழுத்துச் செல்ல முயற்சிக்கிறான். அப்போது அங்கு வந்த அலிபாபா என்ற இளைஞன் ஷேர்கானை விரட்டி அடிக்கிறான். அலிபாபாவின் வீரத்தை பார்த்த மார்ஜியானா தன் மனதைப் பறி கொடுக்கிறாள்.
அலிபாபாவின் தங்கை ஆயிஷாவும் உடன் இருக்கிறாள். அவள் வேண்டுகோளுக்கிணங்கி, மார்ஜியானாவையும், அவளது உதவியாளர்களான தெüலத்தையும் அழைத்து வந்து தன் வீட்டிலே அடைக்கலம் கொடுக்கிறான் அலிபாபா.
காட்டுக்குச் சென்று விறகு வெட்டி கழுதை மேல் ஏற்றிக் கொண்டு வந்து விற்பது அலிபாபாவின் தொழில். ஒரு நாள் அலிபாபாவின் கழுதை திடீரென்று ஓடிவிட, அதைத் தேடி காட்டுக்குள் போகிறான். அங்கே பெரிய கொள்ளைக் கூட்டத்துத் தலைவன் அபுஹுசேன் "அண்டா காகஸம் அபு காகஸம், திறந்திடு சீசேம்' என்று சொல்லவே, ஒரு மலை குகை கதவு திறந்து கொள்கிறது. உள்ளே போனவுடன் "மூடிடு சீசே' என்கிறான். கதவு மூடிக் கொள்கிறது. அவன் சொன்னதை மனதிற்குள் அலிபாபா சொல்லிப் பார்த்துக் கொள்கிறான்.
அபுஹுசேனும், அவனது குழுவினரும் குகையை விட்டு வெளியே சென்றதை மறைந்திருந்து பார்த்த அலிபாபா, அந்த குகை முன்னால் போய் நின்று அந்த கடவு வார்த்தைகளை பலமாகச் சொல்கிறான். குகைக் கதவு திறந்து கொள்கிறது. உள்ளே போய்ப் பார்க்கிறான். எங்கு பார்த்தாலும் தங்கக் காசுகளும், வைர ஆபரணமும் குவியல்களாக இருக்கின்றன. அவற்றை மூட்டையாகக் கட்டி, கழுதை சுமக்கும் அளவுக்கு பொதிகளாக்கி வீடு திரும்புகிறார்கள்.
அலிபாபா பெரும் பணக்காரனாகிறான். பணத்தை ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்குகிறான். ஏழைகள் அலிபாபாவை ஒரு கடவுளாக நேசிக்கத் தொடங்குகிறார்கள். இதை அறிந்த அலிபாபாவின் சகோதரன் அமீர் அவன் மீது பாசம் கொண்டவனாக நடித்து, குகையை திறக்கும் சொல்லைத் தெரிந்து கொள்கிறான். அலிபாபாவை சூழ்ச்சி செய்து மரண தண்டனை பெற்றுக் கொடுத்து விடுகிறான்.
மார்ஜியானா அமீரிடம் தானே அலிபாபாவை கொல்லுவதாகக் கூறி அலிபாபாவின் கட்டுகளை கத்தியால் அறுத்து விடுகிறாள். அலிபாபா எதிரிகளுடன் மோதுகிறான். பேராசை காரணமாக அமீர் குகையை நோக்கி விரைகிறான். சூஸக வார்த்தையைச் சொல்லி குகையை திறக்கிறான். ஏராளமான நகைகளை அள்ளி மூட்டையாகக் கட்டிக் கொள்கிறான். குகையை திறக்க செய்யும்போது கொள்ளைக்காரர்கள் வரும் சப்தம் கேட்டு, மூட்டையோடு ஒளிந்து கொள்கிறான்.
நகைகள் கொட்டிக் கிடப்பதை பார்த்த தலைவன் அங்கிருக்கும் அமீரை பிடித்து சிரச் சேதம் செய்து விடுகிறான்.
சிரச் சேதம் செய்த சடலத்தை குகையிலிருந்து எடுத்துச் சென்ற அலிபாபா அவர்கள் வழக்கப்படி அடக்கம் செய்கிறான். குகைக்குத் திரும்பிய கொள்ளைத் தலைவன் அபு ஹுசேன் சடலம் காணாமல் ஆத்திரம் அடைகிறான். அலிபாபாவின் வேலைதான் இது என்பதை அறிந்து கொள்கிறான்.
அலிபாபாவை நயவஞ்சகமாக ஒழிக்கத் திட்டமிடுகிறான். தன்னை பாரசீக எண்ணெய் வியாபாரி என்று அறிமுகம் செய்து கொண்டு, முப்பத்தி ஒன்பது கொள்ளையர்களை பீப்பாயில் மறைவாக பதுங்கி இருக்கச் செய்கிறான் அவை எண்ணெய் பீப்பாய் என்று கூறுகிறான். அதை நம்பிய அலிபாபா அவர்கள் தங்குவதற்கு சம்மதித்து விடுகிறான்.
மார்ஜியானா, எண்ணெய் வியாபாரிக்கு கொடுக்கப்படும் விருந்தில் ஆடிப் பாடுகிறாள். முப்பத்தி ஒன்பது பீப்பாய்களும், மலையிலிருந்து உருட்டி விடப்பட்டு, அத்தனை பேரும் மாண்டு விடுகிறார்கள். உண்மையை புரிந்து கொள்கிறான் அலிபாபா. தனது வாழ்க்கையில் பல துரோகங்களைச் செய்த அபுஹுசனை அடையாளம் கண்டு மார்ஜியானா பழி தீர்த்துக் கொள்கிறாள். அலிபாபா வெற்றி பெறுகிறான்.
"அழகான பொண்ணுதான்' "மாசிலா உண்மைக் காதலே' "உல்லாச உலகம் உனக்கே சொந்தம்' "சலாம் பாபு சலாம் பாபு என்னைப் பாருங்க' போன்ற பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டன.
தமிழ் சினிமா உலகில் முதல் முறையாக கேவா கலரில் தயாரிக்கப்பட்ட படம் என்ற சிறப்பை பெற்ற இந்த படத்தின் ஒளிப்பதிவாளர், டபிள்யூ.ஆர். சுப்பாராவ்.
நடிகர்கள் : எம்.ஜி.ஆர்., சாரங்கபாணி, வீரப்பா,
தங்கவேலு, சக்ரபாணி, பானுமதி,
எம்.என். ராஜம், வித்யாபதி மற்றும் பலர்.
வசனம் : ஏ.எல். நாராயணன்
பாடல்கள் : மருதகாசி
இசை : தட்சிணாமூர்த்தி
தயாரிப்பு : மாடர்ன் தியேட்டர்ஸ்
டைரக்ஷன் : டி.ஆர்.சுந்தரம்.
இணைந்த கைகள் படத்தின் விவரங்கள் அனைத்தும் நெஞ்சில் நிறைந்த பொன்மனச் செம்மல் என்ற தொடரிலிருந்து எடுத்து ஆங்கிலத்தில் வெளியிட்டேன்.
http://mgrroop.blogspot.in/2008/03/m...movies-ii.html
நடிகர் சிவாஜி கணேசனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்ட போது அவரைப் பாராட்டும் வகையில், சாராத ஸ்டுடியோவில் மறைந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தலைமையில் மாலை 6 மணிக்கு ஒரு விழா நடந்தது. அன்று எம்.ஜி.ஆருக்கு
இரவு 9.00 மணி வரை தேவர் பிலிம்ஸ் ஷூட்டிங் வாகினி ஸ்டுடியோவில் இருந்தது.
தேவர் பிலிம்ஸ் அதிபர் மறைந்த சின்னப்பா தேவரிடம் எம்.ஜி.ஆர். அவர்கள், "இன்று மாலை தம்பி சிவாஜிக்கு பாராட்டு விழா நடக்கிறது. சக கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடக்கும் போது அதில் நாம் எல்லோரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். அதுதான் நமக்கு பெருமை. ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்றால் ஷூட்டிங்கை நள்ளிரவு வரை நடத்துவோம். அதனால் ஏற்படும் செலவுகளை நானே ஏற்றுக் கொள்கிறேன்" என்று கூறி அவரை ஒப்புக் கொள்ள வைத்தவுடன், சின்னப்பா தேவர், அசோகன் உட்பட அப்படத்தில் நடித்த அத்தனை
பேரையும் அந்த விழாவுக்கு அழைத்து வந்து விட்டார் எம்.ஜி.ஆர்.
என்னே அவர் பாசம்.
அதுதான் எம்.ஜி.ஆர். http://i46.tinypic.com/35laxdh.png
பத்திரிகையாளர் திரு. வி. ராமமூர்த்தி அவர்கள் - " தமிழர் வாழ்வில் எம்.ஜி.ஆர்." என்ற பத்திரிகை கட்டுரையில் தெரிவித்தது.
================================================== ================================================== ==========
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
நாடோடியின் மகன் (நாடோடி மன்னன் படத்தின் தொடர்ச்சி)
http://i125.photobucket.com/albums/p...ps5ede82a8.jpg
Kathiravan Pictures produced this film. The crew involved in Nadodi Mannan was also involved in this movie. The story is by MGR Pictures Story department, Kannadasan wrote dialogue and songs and music by S.M.Subbiah Naidu. The Heroine was G.Sakunthala (the heroine of Manthiri Kumari, who later went to act in comic role) The story starts with the resurrection of N.M.Nambiyar who takes revenge by killing Nadodi and taking up the throne and how Nadodi's son avenges his father death is the remaining story.
http://i125.photobucket.com/albums/p...ps9d25770c.jpg
The movie has breathtaking sets and costumes. Some establishing shots and climax are to filmed but unfortunately the movie was dropped.
Now the question arise were is the negative. With today's technology the movie can be finished and can be released. Can some one do it?
http://i125.photobucket.com/albums/p...psb80d2f4a.jpg
Images from MGR Ninaivugal, 1994 edition.
இந்த வெளிவராத படத்தின் மற்ற நிழற்படங்களுக்கு.
http://mgrroop.blogspot.in/2007/12/m...-movies-i.html
MGCB Pradeep told me that Nadodiyin Magan was actually produced by Emgeeyar Pictures initially and the movie was then produced by Kathiravan pictures. The reason not known.
Five years back I received an email from Radha, she being doing a Doctrate in Leo Tolstoy and she asked me about the information and CD regarding Panakari movie.
Because Panakari is the tamil version of Leo Tolstoys Anna Karenina. Unfortunately we did not have any copy of the movie. I gave her about 4 images from Panakari movie to her. Later she thanked me and forwarded some images of her with MGR. She further told that she worked as a translator in Russian Embassy. And she helped MGR in translating Russian when Russian Ministers and Officers (names with held for some reason) visited Madras, then MGR was the Chief Minister of Tamil Nadu.
Madam Radha is of Indian origin and now she is living in the U.S. She searched for MGR movies on the internet and found our Blog and was very happy to see such thriving interest in MGR and his contribution.
http://i125.photobucket.com/albums/p...psdef069aa.jpg
http://i125.photobucket.com/albums/p...psa8dda638.jpg
She has had the good fortune of having known MGR professionally and has met him a couple of times. On every one of those occasions she was impressed with MGR’s memory to remember people, his attentiveness to everyone who was present, his respect to the artists and his sense of humor.
She is not a MGR Fan but she respect him deeply and consider him as a unique individual who gave a lot to the people he served and entertained.
They offered some sweets with coffee and MadamRadha did not have any, MGR asked her, if she was trying to be careful about what she eats. That is why she is smiling.
More images and information here.
http://mgrroop.blogspot.in/2008/08/m...o-tolstoy.html