http://www.youtube.com/watch?v=2Tap59Hh56A
Printable View
Sivakarthikeyan, the likeable boy next door, has transformed into Sivakarthikeyan, the big star – and Maan Karate is less a film than a ticker-tape celebration of this reality. He’s given a hero-introduction song, where he’s surrounded by posters of films of our two big “mass” heroes, MGR (Naalai Namathey) and Rajinikanth (Uzhaipaali). - Maan Karathey review in net
கண்ணன் என் காதலன் -படம் முதல் வெளியீட்டில் பிரபாத் டாக்கீஸில் 2 வது
வாரத்தில் பார்த்தது நன்றாக நினைவு இருக்கிறது.
குடியிருந்த கோயில் வெளியாகி 40 நாள் கழித்து வெளியானது.
கருப்பு வெள்ளை படம். கு. கோயில் படத்துடன் ஒப்பிடமுடியாத வகையில்
இருப்பினும் அனைத்து அரங்கிலும் 50 நாட்கள் ஓடிய சராசரி வெற்றி படம்.
இப்போது பார்த்தாலும் படம் விறுவிறுப்பாக உள்ளது. இனிமையான பாடல்களுக்க்காகவும், புரட்சி தலைவரின் ஸ்டைல்க்காகவும் திரும்ப திரும்ப
பார்க்க தூண்டும் படம்.
பாடுவோர் பாடினால் பாடலில் பியானோ இசை அமைக்கும் ஸ்டைல் .
கிளப் டான்ஸ் பாடலில் கிடார் வாசித்து கொண்டு ஜஸ்டின்உடன் சண்டை போடும்
காட்சிகள் (டான்ஸ் ஆடி கொண்டே ) வெகு ஜோர் .அபாரமும் கூட.
ஆர். லோகநாதன்.
aan pavam title song
http://www.youtube.com/watch?v=7Z4QfCBUCCc
thalaivar appeared in graphics
https://www.youtube.com/watch?v=j0jb8oEqqGs
KANNAN EN KATHALAN - 47TH ANNIVERSARY 25.4.2014
http://i60.tinypic.com/qs8fvc.jpg
தம்பி ....நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
-அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று !
என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை !
http://i1170.photobucket.com/albums/...psf7c15979.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் '' கண்ணன் என் காதலன் '' 25.4.1968
46 வருடங்கள் முடிந்த நேரத்தில் அதே நாளில் 25.4..2014 மீண்டும் இந்த படம் சென்னை - மகாலக்ஷ்மியில் திரைக்கு வருவது மகிழ்ச்சியான தகவல் .
படம் முழுவதும் இசைக்கு முக்கியவத்துவம் தந்த காட்சிகள் - ரசிகர்களுக்கு விருந்து . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்.
மக்கள் திலகம் இந்த படத்தில் வித விதமான இசைக்கருவிகளை கையாண்டிருப்பார் . ஒரு காட்சியில் இசைக்கருவியோடு எதிரிகளிடம் சண்டை போடும் காட்சி அற்புதம் .
மக்கள் திலகம் - வாணிஸ்ரீ காதல் ஜோடி மிகவும் அழகாக இருக்கும் .காதலர்களுக்கே உரிய கிண்டல் - பொய்க்கோபம்
இளமை துள்ளல காட்சிகளில் மக்கள் திலகம் பிரமாதமாக நடித்திருப்பார் . வாணிஸ்ரீயும் ஈடு கொடுத்து நடித்திருந்தார் .
கண்கள் இரண்டும் விடி விளக்காக .......பாடலில் மக்கள் திலகத்தின் இளமை தோற்றமும் , முக பாவங்களும் சூப்பர் .
கெட்டிக்காரியின் பொய்யும் .... பாடலில் மக்கள் திலகத்தின் நடனம் சூப்பர் .
பாடுவோர் பாடினால் ...... தேனமுது
சிரித்தாள் தாங்க்ஸ் பதுமை ... காதல் இலக்கிய பாடல் .
மின் மினியை ...கண்மணியாய் .... மனதை மயக்கும் பாடல் .....
மொத்தத்தில் கண்ணன்[எம்ஜியார் ] என் [எங்கள்] காதலன் [உயிர்தலைவன் ]
தேர்தல் களத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள்
http://i58.tinypic.com/108cydy.jpg
1957 பொது தேர்தலில் முதல் முறையாக திமுக போட்டியிட்ட நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். திரை உலகில் மக்கள் திலகத்தின் செல்வாக்கும் அவருடைய படங்கள் படைத்த சாதனைகள் மூலமும் பல ரசிகர்கள் எம்ஜிஆர் மீது கொண்டுள்ள அபிமானத்தால்திமுக உறுப்பினர்களாகவும் - அனுதாபிகளாகவும் மாறினார்கள் . தேர்தல் நேரங்களில் களப்பணி ஆற்றி திமுக வெற்றிக்கு கடுமையாக உழைத்தார்கள் .
தொடர்ந்து 1962 பொது தேர்தலிலும் எம்ஜிஆர் மன்றங்கள் மற்றும் ரசிகர்கள் தீவிரமாக ஒட்டு வேட்டையாடி திமுகவின் வெற்றிக்கு உழைத்தார்கள் .1967ல் நடந்த எதிர்பாராத மக்கள் திலகத்தை கொல்ல நடந்த முயற்சி எம்ஜிஆர் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்த நேரத்தில் மக்கள் திலகம் உயிர் பிழைத்த சம்பவம் ரசிகர்களுக்கு மேலும் அவர் மீது பக்தியும் அளவு கடந்த பாசமும் ஏற்பட்டு ஒரு ஆட்சி மாற்றத்தையே உருவாக்கி விட்டது .
1971ல் நடந்த பொது தேர்தலில் எம்ஜிஆரின் முழு சக்தியும் , அவருடைய மன்றங்களின் பேராதரவும் எந்த அளவிற்கு வலிமையாக இருந்தது என்பதை அறிய முடிந்தது .
1972 - அரசியல் மாற்றங்கள் - 1973 திண்டுக்கல் இடைதேர்தல் - 1974 கோவை - புதுவை நாடாளுமன்ற சட்ட மன்ற இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் திலகத்தின் அரசியல் சக்தி பற்றி உலகமே வியந்து பாராட்டியது .
1977-1980 -1984 நடந்த மூன்று பொது தேர்தல்களிலும் மக்கள் திலகத்தின் செல்வாக்கு மீண்டும் நிரூபிக்கப்பட்டது .
மக்கள் திலகத்தின் மறைவிற்கு பின்பும் நடந்த 1989-1991-1996-1998-1999-2001-2004 - 2009-2014-ஒன்பது பொது தேர்தல்களிலும் எம்ஜிஆரின் பெயரும் , அவருடைய மன்ற உறுப்பினர்களின் தீவிர ஆதரவும் ஒரு மாபெரும் சக்தியாக இருப்பது ஒரு உலக சாதனை .
57 ஆண்டுகள் தேர்தல் களத்தில் தொடர்ந்து மக்கள் திலகம் எம்ஜிஆரும் - அவருடைய ரசிகர்களும் ஈடு பட்டு வருவது உலகில் எந்த ஒரு தலைவருக்கும் தொண்டருக்கும் கிடைக்காத பெருமை .
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நாடோடி " -46 ஆண்டுகள் நிறைவடைந்தது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
சமுதாய/சமூக சீர்திருத்த கருத்துக்கள் நிறைந்த நிறைவான படம்.
கருப்பு வெள்ளை படம்.
அன்பு மனம் ,கொடை குணம் ,தேச சேவை இவற்றினை ஒருங்கிணைத்து
குணக்குன்றாக , தியாகு என்கிற கதாபாத்திரத்தில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி
என்கிற பேதத்தை ஒழித்து உலகில் ஒரே ஜாதி மனித ஜாதிதான் சாலச் சிறந்தது
என்னும் தத்துவத்தை போதித்த வேடத்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தனது
இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இனிமையான பாடல்கள் நிறைந்த படம்.
முதல் வெளியீட்டில் வண்ணப்படமான அன்பே வா , நான் ஆணையிட்டால், முகராசி, [போன்ற படங்களுக்கு இடையே வெளியாகி சராசரி வெற்றியை பெற்றாலும் மறு வெளியீடுகளில் சக்கை போடு போட்ட படம்.
1966-ல் புரட்சி நடிகர் நடித்து வெளிவந்த 9 படங்களில் இதுவும் ஒன்று.
முதல் வெளியீட்டில் பார்க்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் மறு வெளியீடுகளில்
பலமுறை பார்த்து ரசித்த படம்.
நாகேஷின் நகைச்சுவை , புரட்சி நடிகரின் சுறுசுறுப்பான சண்டை காட்சிகள்
சிறப்பு அம்சம்.
ஆர். லோகநாதன்.
நாடோடி - பாடல்கள்
----------------------------------
1.உலகமெங்கும் ஒரே மொழி.
2.அன்றொரு நாள் இதே நிலவில் (பி.சுசீலா /எல்.ஆர். ஈஸ்வரி )
3.பாடும் குரல் இங்கே. பாடியவன் எங்கே.
4.ரசிக்கத்தானே இந்த அழகு.
5.நாடு அதை நாடு .
6.அன்றொரு நாள் இதே நிலவில் (டி.எம்.எஸ்./பி.சுசீலா )
7.கடவுள் செய்த பாவம்.
8. திரும்பி வா. ஒளியே திரும்பி வா.
அன்பர்களே நம் நண்பர் திரு Boominathan Andavar ன் தந்தையார் இன்று காலை கோபிச்செட்டிபாளையத்தில் காலமானார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் ,அன்னாரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கு நம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்போம் RIP
இனிய நண்பர் திரு பூமிநாதன் அவர்களின் தந்தை இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன் . அவருடைய ஆத்மா சாந்தியடைய பிராத்தனை செய்கிறேன்
PANAKKARA KUDUMBAM - MAKKAL THILAGAM
COURTESY- PAMMALAR SIR- MALAR MALAI -1
http://i58.tinypic.com/11i0pjt.jpg
KANNAN EN KATHALAN - MAKKAL THILAGAM
http://i57.tinypic.com/rbmzhj.jpg
அன்பு நண்பர் திரு.பூமிநாதன் ஆண்டவர் அவர்களின் தந்தையார் இறந்த செய்தி கேட்டு மிகவும் துயரமுற்றேன்.
அன்னாரின் மறைவிற்கு அனைத்துலக எம்.ஜி. ஆர்.பொதுநல சங்கம் சார்பாக
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
ஆர். லோகநாதன்.
எனது அருமை நண்பர் திரு பூமிநாதன் அவர்களின் தந்தை இன்று இறைவன் அடி சேர்ந்தார் என்ற செய்தி என்னை மிகவும் துயரம் அடைய செய்துவிட்டது அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் அன்னாரின் பிரிவாள் வாடும் எனது அருமை நண்பர் பூமிநாதன் மற்றும் அவருடைய குடும்பத்தார் அனைவர்க்கும் எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன்
அன்புடன்
வேலூர் எம் ஜி ஆர் இராமமூர்த்தி
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i59.tinypic.com/k3rv2o.jpg
கொள்கையென மடிந்த வீரா.
மதுரை வீரன் வெளியாகி (13/04/1956) 58 ஆண்டுகள் நிறைந்துவிட்டது.
-----------------------------------------------------------------------------------------------------------------------
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். வீரன் என்கிற கதாபாத்திரத்தில் தோன்றி அழகாக
காட்சியளித்த படம்.
பி.பானுமதி /பத்மினி இரு கதாநாயகிகளுடன் பொருந்தி பட்டொளி வீசி
உணர்ச்சிகளுடன் நடித்த படம்.
அருமையான பாடல்கள் நிறைந்த படம்.
சென்னையில் சித்ரா, பிரபாத், சரஸ்வதி, காமதேனு திரை அரங்குகளில்
100 நாட்கள் ஓடிய முதல் படம்.
தமிழகத்தில் 35 அரங்குகள் மேல் 100 நாள் ஓடிய கருப்பு வெள்ளை படம்.
இந்த சாதனையை புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தவரையில்
எந்த நடிகரின் படமும் முறியடிக்கவில்லை.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கட்டுடலுடன் ,தன் புஜ பல பராக்கிரமத்தோடு
எதிரிகளுடன் சண்டை போடும் காட்சிகள் கண்களுக்கு விருந்து.
கதையோடு ஒத்து போன கருத்தான வசனங்கள் செவிக்கு விருந்து.
1973-ல் உ .சு.வாலிபன் வெளியான நேரத்தில் முதன் முதலாக பழனியப்பா
அரங்கில்தான் கண்டு களித்தேன். இந்த படம் அந்த காலங்களில் ஆறு மாத
இடைவெளியில் அடிக்கடி வெளியிட்டு வந்தார்கள். அப்போது கல்லூரியில்
படித்து வரும்போது பலமுறை பார்க்க நேர்ந்தது.
நெகடிவ் பழுது அடைந்துள்ளதால் இப்போது திரை அரங்குகளில் அதிகம் காண முடியவில்லை. கடைசியாக மேகலாவில் பார்த்ததாக நினைவு
இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியின் காரணமாக தமிழகம் முழுதும்
எம்.ஜி.ஆர். மன்றங்கள் ஏராளமாக பெருக ஆரம்பித்தன என்பது வரலாற்று செய்தி.
ஆர். லோகநாதன்.