உண்மை..உண்மை...
யாரோ ஒரு உணர்ந்தவர் உரைத்த அறிவுரை ...
உணராதவர்க்கு உரை ஒரு குறை ...
உணர்பவர்க்கு உரை ஒரு உறை !
Printable View
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=_AyD...ature=youtu.be
FROM ITHAYAKKANI MAGAZINE
http://s29.postimg.org/40ksv5ufr/scan0004.jpg
மக்கள் திலகத்தின் 100 வது படம் ''ஒளிவிளக்கு '' இலங்கை நாட்டில் 14.1.1969ல் வெளியானது .
1969ல் இலங்கையில் அதிக நாட்கள் ஓடி வசூலில் மாபெரும் புரட்சியினை உண்டாக்கிய படம் .
கொழும்பு - ஜெயின் ஸ்தான் - 162 நாட்கள் .
கொழும்பு - முருகன் 62 நாட்கள்
கொழும்பு - ஓடியன் 36 நாட்கள்
யாழ் நகர் - ராஜா 160 நாட்கள்
யாழ் நகர் - சாந்தி 82 நாட்கள்
10 ஆண்டுகள் கழித்து ஒளிவிளக்கு மறு வெளியீட்டில் 100 நாட்கள் ஓடியது மிகபெரிய சாதனை .
குடியிருந்த கோயில் -
****************
கொழும்பு - செல்ல மஹால் - 68 நாட்கள் .
யாழ் நகர் - வின்சர் 50 நாட்கள்
அடிமைப்பெண்
************
கொழும்பு - சென்ட்ரல் - 105 நாட்கள்
மாட்டுக்கார வேலன்
******************
கொழும்பு - சென்ட்ரல் - 126 நாட்கள் .
நீரும் நெருப்பும்
*************
கொழும்பு - ஜெயின் ஸ்தான் - 84 நாட்கள்
ரிக்ஷாக்காரன்
************
கொழுப்பு - கேபிடல் - 54 நாட்கள்
இதய வீணை
************
கொழும்பு - நவா - 100 நாட்கள் .
எங்கள் தங்கம்
************************
கொழும்பு - செல்ல மஹால் - 57 நாட்கள்
ராமன் தேடிய சீதை
*****************
கொழுப்பு - கேபிடல் - 105 நாட்கள்
யாழ் நகர் - வெலிங்டன் - 75 நாட்கள் .
நல்ல நேரம்
*********
கொழும்பு - செல்ல மஹால் - 105 நாட்கள்
யாழ் நகர் - வின்சர் 89 நாட்கள்
நான் ஏன் பிறந்தேன்
*****************
கொழும்பு - ஜெசீமா - 77 நாட்கள்
யாழ் நகர் - ராணி 77 நாட்கள்
நினைத்ததை முடிப்பவன்
**********************
கொழும்பு - சென்ட்ரல் - 77 நாட்கள்
யாழ் நகர் - வின்சர் - 84 நாட்கள் .
நன்றி திரு டேவிட்
நாளை நமதே - இதயக்கனி விபரங்கள் தொடரும் .....
மக்கள் திலகத்தின் 100 வது படம் - ஒளிவிளக்கு
http://i57.tinypic.com/ayn29w.jpg
தமிழ் நாட்டில் மதுரை - திருச்சி - குடந்தை மற்றும் கொழும்பு - யாழ் நகர் 5 அரங்குகளில் 100 நாட்கள் மேல் ஓடியுள்ளது .
மதுரையிலும் - இலங்கையிலும் வெள்ளி விழா ஓட வேண்டிய படத்தை அதிக பட்சமான 23 வாரங்களில் எடுத்து
விட்டார்கள் . அதே போல் 100 நாட்கள் பல இடங்களில் ஓடியிருக்க வேண்டிய படம் .
மறு வெளியீட்டில் இலங்கையில் 1979ல் 100 நாட்கள் ஓடியது மாபெரும் சாதனை . 1968முதல் 2014 தற்போது வரை
ஒளிவிளக்கு 46 ஆண்டுகளாக பிரகாசமாக ரசிகர்களுக்கு திரை அரங்கில் ஜொலித்து கொண்டு வருகிறது .
MAKKAL THILAGAM MGR IN ACTION - SUPER SCENE
http://youtu.be/1PrG_eyTAPQ
1964ல் மக்கள் திலகத்தின் 7 படங்கள் வெளிவந்து ரசிகர்கள் - மக்கள் - திரை உலகினர் - விநியோகஸ்தர்கள் - திரை அரங்கு உரிமையாளர்கள் - தயாரிப்பாளர்கள் மத்தியில் மிகப்பெரிய
தாக்கத்தை உருவாக்கியது .
தேவர் பிலிம்ஸ் - வேட்டைக்காரன் - தொழிலாளி
சத்யா மூவிஸ் - தெய்வத்தாய்
ஆர்.ஆர் பிக்சர்ஸ் - பணக்கார குடும்பம்
நடேசன் ஆர்ட்ஸ் - என் கடமை
பாலன் பிக்சர்ஸ் - தாயின் மடியில்
சரவணா பிலிம்ஸ் - படகோட்டி
1964 மத்தியில் தமிழ் திரை உலகினரை வியக்க வைத்த அறிவிப்பு ஒன்று வெளியானது .
''பந்துலு தயாரிப்பில் - இயக்கத்தில் எம்ஜிஆர் நடிக்கிறார் ''. என்ற செய்தி திரை உலகினரை வியப்பில் ஆழ்த்தியது . பலவிதமான கருத்துக்கள் - விமர்சனங்கள் நடுவில்''ஆயிரத்தில் ஒருவன்
எம்ஜிஆர் '' வருகிறார் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர் பார்ப்பினை உண்டாக்கியது .
1964ல் காதலிக்க நேரமில்லை - கர்ணன் - புதிய பறவை - படகோட்டி , தொடர்ந்து 1965ல் எங்க வீட்டு பிள்ளை - வெண்ணிற ஆடை படங்கள் ரசிகர்களுக்கு விருந்து படைத்த படங்கள் .
49 ஆண்டுகள் முன்பு 9.7.1965 அன்று பந்துலுவின் ''ஆயிரத்தில் ஒருவன் '' திரைக்கு வந்தது .
http://i62.tinypic.com/14jwwt0.jpg
திரை உலக வரலாற்றில் மாபெரும் புரட்சியினை மக்கள் திலகம் தந்த படம் .
பிரம்மாண்டம் -மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு - இனிய பாடல்கள் - சண்டை காட்சிகள்
எல்லா தரப்பு ரசிகர்களையும் ஈர்க்க வைத்து சாதனைகள் புரிந்த ஆயிரத்தில் ஒருவன் - இன்று
பொன்விழா ஆண்டினை துவக்குகிறது .
Best review by saradha madam about ''ayirathil oruvan ''
thanks saradha madam
சாரதா சிவாஜியின் முரட்டு பக்தை என்பது இந்த தளத்தின் வாசகர்களுக்கு தெரிந்த விஷயம். அவர் எம்ஜிஆருக்கு “எதிரி” இல்லை என்பதும் இந்த விமர்சனத்தைப் படித்தால் புரியும். ஓவர் டு சாரதா!
தமிழ்ப் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு ஒரு தனிச் சிறப்பு எப்போதுமே உண்டு. தமிழ்ப் படங்களில் புராணப் படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. ராஜா ராணியை மையமாக வைத்து சரித்திரப் படங்களும் அதிக அளவில் வந்துள்ளன. சமூகப் படங்கள், மற்றும் நாட்டு விடுதலையை மையமாகக் கொண்ட படங்களும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் அராஜகங்களை தோலுரித்துக் காட்டும் படங்களும் அதிகமாக வந்துள்ளன. நகைச்சுவைப் படங்களின் பட்டியலும் நீளம்தான். காதலை மையமாகக் கொண்ட படங்களோ திகட்டத் திகட்ட வந்திருக்கின்றன.
ஆனால் இது வரை கடற் கொள்ளையர்களை கதைக் கருவாகக் கொண்டு வெளி வந்த ஒரே படம் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே. கதை, வசனம், காட்சியமைப்புகள், பாடல்கள், இசை, பொருத்தமான நடிகர் நடிகையர் தேர்வு, பொழுதுபோக்கு அம்சங்கள், கதையோடு ஒன்றிய கதைக் களங்கள் என, ஒரு வெற்றிப் படத்துக்குரிய எல்லா அம்சங்களும் ஒரு சேர அமைந்த படம் ஆயிரத்தில் ஒருவன்.
இப்படத்தின் கதாநாயனான ‘மக்கள் திலகம்’ எம்ஜியார் ஏற்றிருந்த மணிமாறன் என்ற கதாபாத்திரம், ஒரு கை தேர்ந்த தையற் கலைஞர் அளவெடுத்து தைத்த சட்டை பொருந்துவது போல வெகு அருமையாகப் பொருந்தியது. அவர் திறமைக்குத் தீனி போடுவது போல கத்திச் சண்டைக் காட்சிகள், அளவு மீறாத காதல் காட்சிகள், அவருக்கே பொருந்துவது போல அற்புதமாக அமைந்த பாடல்கள் என கனகச்சிதமாகச் சேர்ந்திருந்தது.
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதைச் சுருக்கத்தைச் சொல்வது என்பது அவசியமில்லாத ஒன்று. அந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு பழகிப்போன திரைப்படம் இது. இன்றைய இளம் தலைமுறையினரும் கூட அறிந்து கொள்ளும் விதமாக, இன்றைக்கும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும் படம்.
கதாநாயகியாக ஜெயலலிதா. இதிலும் பந்துலு மற்றும் எம்ஜியாரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அது வரை (பானுமதிக்குப் பின்) சரோஜா தேவிதான் எல்லாப் படங்களிலும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார். அப்படியிருக்க, திடீரென்று அப்போதுதான் அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜெயலலிதாவை கதாநாயகியாக (அதுவும் எம்ஜியாருக்கு ஜோடியாக) போட்டிருந்தார்கள். (ஜெயலலிதா இப்போது நாடறிந்த புள்ளியாக இருந்தாலும், அப்போது அவர் புது முகம்தானே). ஆனால் படத்தில் அவர் நடிப்பைப் பார்க்கும்போது அவரை புதுமுகம் என்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அந்த அளவுக்குத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
பருவம் எனது பாடல் என்ற பாடல் காட்சியில் ஜெயலலிதாவை அறிமுகம் செய்வதே அழகாக இருக்கும். கண்ணின் கருவிழியிலும், தாமரைப்பூவின் நடு இதழிலும்,கோயிலின் நடு மண்டபத்திலும் அவருடைய முகத்தை அறிமுகப்படுத்துவதே ஒரு அழகு.
எம்.ஜி.ஆரின் அறிமுகம் வழக்கம் போல “வெற்றி… வெற்றி…” என்ற வசனத்துடன் துவங்கும். (பாம்பு கடிக்கு மருந்து கண்டுபிடிப்பதில் வெற்றியடைந்திருப்பார்). சர்வாதிகாரி மனோகரால் கன்னித் தீவுக்கு அடிமைகளாக விற்கப்படும் போதாகட்டும், கப்பலில் பாயாசம் கேட்டு போராட்டம் செய்வதாகட்டும், தன்னை விரும்பும் இளவரசி பூங்கொடியிடம் அவருடைய காதலுக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவன் என்பதை விளக்குவதாகட்டும், நம்பியாரை நல்லவர் என்று நம்பி அவரிடம் மாட்டிக் கொண்டபின் தன்னை நம்பி வந்தவர்களின் உயிரைக் காக்க தன் மனச்சாட்சிக்கு விரோதமாக ‘கடற் கொள்ளையனாக’ சம்மதிப்பதாகட்டும், மனோகர் தன் எதிரியாக இருந்தபோதும் கூட கோழைத்தனமாக நம்பியார் விஷம் தோய்ந்த கத்தியை அவர் மீது வீசியதைக் கண்டு கொதித்துப் போய் அவரைக் காப்பாற்றும் இடத்திலாகட்டும்… இப்படி எல்லா காட்சிகளிலும் எம்.ஜி.ஆரின் நடிப்பு பாராட்டும்படியாக இருக்கும்.
கத்திச் சண்டைக் காட்சிகள் மூன்று இடங்களிலும் மிக அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். மணிமாறனும் பூங்கொடியும் (எம்ஜிஆர்+ஜெ) குடியிருக்கும் குடிலில் எம்ஜியாருக்கும் நம்பியாருக்கும் நடக்கும் கத்திச் சண்டை (முழுக்க முழுக்க மூங்கிலிலேயே அமைக்கப்பட்ட அருமையான செட்), கார்வார் மலைப் பகுதியில் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாள் சண்டை (நம்பியார்: “இப்போட்டியில் வெற்றி பெறுபவனே இந்த தீவின் தலைவனாவான். முடிந்தால் நீ தலைவனாகு. இருந்தால் நான் தொண்டனாகிறேன்”), மூன்றாவதாக மனோகரின் படை வீரர்களோடு கப்பலில் மோதும் வாள் சண்டை. இவையனைத்திலும் எம்.ஜி.ஆர். (வழக்கம் போல) தன்னுடைய திறமையைக் காட்டி அசத்தியிருப்பார்.
பின்னர் வரப் போகும் மூன்று கத்திச் சண்டைக் காட்சிகளும் ரொம்ப சீரியசாக இருக்கும் என்பதால்தானோ என்னவோ, இவற்றுக்கு முதலில், கன்னித் தீவில் கொள்ளையடிக்க வரும் நம்பியாரின் ஆட்களோடு நடக்கும் சண்டையை ரொம்பவும் நகைச்சுவை ததும்பும் விதமாக படமாக்கியிருப்பார் பந்துலு.
பாடல்களும் இசையும்:
இப்படம் இன்னொரு விதத்திலும் மறக்க முடியாத படமாக அமைந்தது. ஆம், அது வரை தமிழ்த் திரை இசையில் இரட்டையர்களாக கோலோச்சி வந்த ‘மெல்லிசை மன்னர்கள்’ விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் கடைசியாக இணைந்து இசையமைத்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்குத்தான். அதனால்தானோ என்னவோ இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெரைட்டியாகவும், இசையில் இன்றைக்கும் ஒரு சாதனையாகவும் திகழ்கின்றன. பாடல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்ட ஒன்று. இன்றைக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றன. சிறப்பு தேன்கிண்ணம் வழங்க வரும் திரையுலக வி.ஐ.பி.க்கள் மறக்காமல் தொடும் பாடல்கள் இடம் பெற்ற படங்கள் ஆயிரத்தில் ஒருவன், புதிய பறவை, அன்பே வா… இவற்றிலிருந்து பாடல்களைச் சொல்லாமல் அவர்கள் நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதேயில்லை. காரணம் அந்த அளவுக்கு தேன் சொட்டும் பாடல்கள்.
1. பருவம் எனது பாடல்
நான் முதலிலேயே சொன்னபடி, கதாநாயகி ஜெயலலிதா அறிமுகம் ஆகும் பாடல். தோழிகளோடு அவர் ஆடிப்பாடும் காட்சி என்பதால், பி.சுசீலாவின் குரலோடு கோரஸ் சிறப்பாக சேர்க்கப்பட்டிருக்கும்.
பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில் கலைகள் எனது காவல்
கருணை உனது கோயில் கலைகள் உனது காவல்
பல்லவியை பாடி முடித்த சுசீலா, உச்ச ஸ்தாயியில் ஹம்மிங் ஆரம்பித்து அப்படியே படிப்படியாக கீழ் ஸ்தாயி வரையில் கொண்டு வர*, கூடவே அதுக்கு அனுசரணையாக கோரஸ் கலந்து ஒலிக்க, அப்பப்பா.. மெல்லிசை மன்னர்கள் இங்கு மெல்லிசை சக்கரவர்த்திகளாக உயர்ந்து நிற்பார்கள். பல்லவி முடிந்து
இதயம் எனது ஊராகும் இளமை எனது பேராகும்
என்று சரணம் தொடங்கும்போது, பாங்கோஸ் அருமையாக பாடலை அணைத்துச் செல்லும். அதனால்தான், பிற்காலத்தில் எத்தனையோ இசைக்கொம்பர்கள் வந்தும் கூட இந்தப் பாடல்களை மக்கள் மனத்திலிருந்து அகற்ற முடியவில்லை.
(நண்பர்கள் நிச்சயம் இங்கு அதற்கான ‘link’ தருவார்கள். Songs கேட்டுப் பாருங்கள். வேறொரு உலகத்துக்குப் போவீர்கள்).
2. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை
வழக்கம் போல எம்.ஜி.ஆரின் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் வரிசையில் ஒன்று.
ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் எல்லாம் இப்படி எண்ணியதால்தானே இன்று நாம் சுத*ந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம்.
3. ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
இந்தப் பாடலைப் பற்றி நண்பர்கள் ஏற்கெனவே இங்கு சொல்லியிருக்கிறார்கள். மக்கள் திலகம் பல கவிஞர்களிடம் பாடல் எழுதியும் திருப்தியடையாமல், அப்போது தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த கவியரசர் கண்ணதாசனை அழைத்து இந்தப் பாடலை எழுதச் சொல்லி திருப்தியடைந்தார் என்பார்க*ள். பாதிப் பாட*ல் அர*ண்ம*னை செட்டிலும் பாதிப்பாட*ல் கார்வார் க*ட*ற்க*ரையிலும் க*ண்டினியூட்டி கெடாம*ல் எடுக்க*ப்ப*ட்டிருக்கும்.
4. உன்னை நான் ச*ந்தித்தேன் நீ ஆயிர*த்தில் ஒருவ*ன்
பி.சுசீலா தனியாக*ப் பாடிய* பாட*ல். கூட*வே ஆண்க*ளின் கோர*ஸ். ம*ணிமாற*னைப் பிரிந்த* பூங்கொடி, செங்க*ப்ப*ரின் அர*ண்ம*னையில் சோக*மே உருவாக* பாடும் பாட*ல், கூட*வே க*ப்ப*லில் போய்க்கொண்டிருக்கும் ம*ணிமாற*னைக் காண்பிக்கும்போது, அவ*ர*து கூட்டாளிக*ளின் உற்சாக*மான* கோர*ஸ்.
பொன்னைத்தான் உட*ல் என்பேன் சிறு பிள்ளை போல் ம*ன*மென்பேன்
க*ண்க*ளால் உன்னை அள*ந்தேன் தொட்ட* கைக*ளால் நான் ம*ல*ர்ந்தேன்
உள்ள*த்தால் வ*ள்ள*ல்தான் ஏழைக*ளின் த*லைவ*ன்
அடுத்து வ*ரும் இசை ‘பிட்’டைக் கேட்க* முடியாது, கார*ண*ம் ப*ல*த்த* கைத*ட்ட*லும், விசில் ச*த்த*மும். பாட*ல் முடியும்போது, கோர*ஸுட*ன் க*ப்ப*ல்க*ள் முல்லைத்தீவு க*ரையில் ஒதுங்குவ*தாக* காட்டுவ*து அருமை. (கப்பல்கள் கரை ஒதுங்கும்போது, முல்லைத்தீவின் அரசியான எல்.விஜயலட்சுமி கறுப்பு நிற உடையில் அழகுப் பதுமையாக நடந்து வருவது எடுப்பான காட்சி).
4. ஆடாமல் ஆடுகிறேன்
கடற்கொள்ளையின்போது கிடைத்த பொருட்கள் மட்டுமின்றி, மனிதர்கள் கூட பொருட்களாக கருதப்பட்டு ஏலத்தில் விடப்பட வேண்டும் என்ற தீவின் சட்டப்படி, ஜெயலலிதா ஏலம் விடப்படும்போது அவர் மனம் நொந்து ஆண்டவனை அழைக்கும் பாடல். சுசீலா மேடத்துக்கு இப்படத்தில் அற்புதமான மூன்று தனிப்பாடல்கள், அதில் இதுவும் ஒன்று. இசை அருமையோ அருமை. முதலில் சாட்டையடி சத்தம், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு சாட்டையடிக்கும் அதைப் பிரதிபலிக்கும் வண்ணம் வயலினின் ஓசை.
ஆடாமல் ஆடுகிறேன்… பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா…வா…வா….
நான் ஆண்டவனைத் தேடுகிறேன்
வா…வா…வா…. வா….வா…வா…
முதல் இரண்டு வரிகளுக்கு பாங்கோஸ் இசைக்க, ‘ஆண்டவனைத் தேடுகிறேன்’ என்ற வரி ஆரம்பிக்கும்போது அருமையாக தபேலா ஆரம்பிக்கும். இடையிசையில் முதலில் வயலின், பின்னர் கிடார், அடுத்து ஃப்ளூட், பின் மீண்டும் வயலின் அடுத்து தபேலா சோலோ என்று மாறி மாறி ஒலித்து பாடலை எங்கோ கொண்டு செல்லும்.
விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்
அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்
‘கன்னித்தீவின் இளவரசியாக கவலையில்லாமல் வாழ்ந்தேனே, இன்று இவர்கள் கையில் மாட்டி ஏலம் போகவா செங்கப்பரை வற்புறுத்தி கடல் பயணம் வந்தேன்’ என்ற ஏக்கம் பொங்க ஜெயலலிதா காட்டும் முகபாவம் நம் கண்களில் நீரை வரவழைக்கும். வயலினும் தபேலாவும் உச்ச ஸ்தாயியில் போய் பாடல் முடியும்போது மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கும்.
(மெல்லிசை மன்னர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அருமையான ‘send off ‘கொடுத்திருக்கிறார்கள் இப்படத்தில்).
5. நாணமோ… இன்னும் நாணமோ
நீ இளவரசி, நான் அடிமை யென்று பேதம் பார்த்து ஒதுங்கிருந்த மணிமாறனை ஒருவழியாக (விஷம் அருந்தியதாக பொய் சொல்லி) தன் காதலுக்கு சம்மதிக்க வைத்தாயிற்று. பின்னர் என்ன? காதலர்களுக்கு ஒரு பாடலாவது வேண்டாமா? அதுதான் இந்தப் பாடல். சிங்கம் ஒரு குட்டி போட்டாலும் அது சிங்கக் குட்டியாக இருக்கும் என்பது போல, படத்தில் இடம் பெற்றது ஒரேயொரு டூயட் பாடல் என்றாலும், மனதை அள்ளிக்கொண்டு போகும் பாடல். பாடலின் ‘prelude’அருமையாக துவங்கும். (prelude, interlude என்பவை என்ன என்று தெரிந்து கொள்ள இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற படங்களின் பாடல்களைக் கேட்பது நல்லது).
தோட்டத்துப் பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது – அது எது?
ஆடவர் கண்கள் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது – அது இது
பாடலின் முதல் பாதியில் ஜெயலலிதாவுக்கு பூக்களால் ஆடை செய்திருப்பார்கள். மறுபாதியில் எம்ஜியார், ஜெயலலிதா இருவருக்கும் ஆடை அழகாக கண்ணைக் கவரும் வண்ணம் இருக்கும்.
6. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
அடிக்கடி தொலைக்காட்சியில் கேட்டு, பார்த்து ரசித்த பாடல். எல்லோருமே இப்பாடலை பாராட்டிப் பேசுவார்கள். ஆகவே நானும் இழுத்துக் கொண்டு போவது அவசியமற்றது. கப்பலில் எம்ஜியார், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார் என அனைவரும் இடம்பெறும் பாடல் காட்சி. பாடலின் பல்லவியை முதலிலேயே கிடாரில் ‘prelude’ ஆக வாசித்துக் காட்டுவார்கள். இதன் இடையிசையில் வரும் ல..லா..லா.. ல..லா.. லா என்ற கோரஸ் ரொம்ப பிரசித்தம்.
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை
இன்றைக்கு இந்தப்பாடல்களை தொலைக்காட்சியில் வசதியாக கண்டு ரசிக்கிறோம். ஆனால், இது போன்ற வசதியற்ற அந்நாட்களில் இப்படத்தின் பாடல்களை தமிழர்களின் காதுகளுக்கு கொண்டு சென்று சேர்த்த பெருமை இலங்கை வானொலியைச் சேரும் என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.
இப்படத்தில் நாகேஷின் நகைச்சுவை நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும். உதாரணத்துக்கு ஒன்று. பூங்கொடியின் தோழி தேன்மொழியை (மாதவி) நாகேஷ் ஏலத்தில் எடுத்து வருவார். அப்போது எம்ஜியார் “என்னப்பா, தேன்மொழியை நீ ஏலத்தில் எடுத்தியா?”
நாகேஷ்: “அட நீங்க வேறே. இவள் வாயைப் பார்த்ததும்தான் திடலே காலியா போச்சே. பழகின தோஷத்துக்காக சும்மா பாத்துக்கிட்டு நின்னேன். என்னைப்பார்த்து ‘ஈ’ன்னு சிரிச்சா. ‘கொன்னுடுவேன்’ அப்படீன்னு ஒரு விரலைக் காட்டினேன். அந்த ஏலக்காரன், நான் ஒரு பவுனுக்கு இவளைக் கேட்கிறேனாக்கும்னு நினைச்சு இவளை என் தலையில் கட்டிட்டான்”.
‘ஆயிரத்தில் ஒருவன்’ திரையிடப்பட்டபோது சென்னை புரசைவாக்கம் மேகலா தியேட்டரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் பந்துலுவும் அமர்ந்து படத்தைப் பார்த்தார். படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது, படம் மாபெரும் வெற்றி யென்பது. தமிழ்நாட்டின் பல ஊர்களில மாபெரும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.
எப்போது பார்த்தாலும் புத்தம் புதியதாகவும் பிரமிப்பூட்டும் படமாகவும் அமைந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தைப்பற்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது பற்றி மிகவும் சந்தோஷம்.
‘ஆயிரத்தில் ஒருவன்’ பற்றிய எனது கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.
" அரச கட்டளை " காவியத்தின் தொடக்கத்தில், நடிகை அஞ்சலி தேவி அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு காட்சி : மக்கள் திலகத்துடன் நடிகை அஞ்சலி தேவி.
http://i58.tinypic.com/2qtehxe.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
தனது பிளைமவுத் காரின் முன் ... தன்னிகரில்லா தலைவர் எம். ஜி. ஆர்.
.http://i57.tinypic.com/idt5xx.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
ஆர். எம். வி. அவர்களின் திருமணத்தின் போது ...... பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் மற்றும் பலர்
http://i62.tinypic.com/2upee5g.jpg
" உலகம் சுற்றும் வாலிபன் " உருவான கதையில் நம் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள், தனது மேலாளராக இருந்த திரு. ஆர். எம். வி. அவர்களின் நம்பகத்தன்மையினை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார். அது தொடர்பான செய்தி நேற்றைய முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) தினமலர் வாரமலரில் கூட பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன் .
தி. மு. க. தொண்டர்களிடையே ஓர் எழுச்சி மிகு உரை நிகழ்த்துகிறார் நிருத்தய சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். தி. மு.க வின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான என். வி. நடராசன் மற்றும் செழியன் உள்ளிட்ட பலர் அமர்ந்திருக்கின்றனர்.
http://i62.tinypic.com/2n8sy9w.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
திரு. கலிய பெருமாள் அவர்களுக்கு :
மக்கள் திலகத்தின் பால் பேரன்பு கொண்ட பாட்டாளி மக்கள், அவரை தங்களின் இதயக்கோவிலில் வைத்து பூஜிக்கும் தெய்வமாக கருதுகின்றனர் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தாங்கள் பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள் கலந்த நன்றி !
நன்றி மறவாத நல்ல மனம் கொண்ட அந்த உழைக்கும் வர்க்கம் தான், புரட்சித் தலைவர் சேர்த்து வைத்திருக்கும் என்றும் அழியாத சொத்து.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகி விட முடியாது.
உயர உயர பறந்தாலும் ஊருக்குருவி பருந்தாகி விட முடியாது.
எல்லோரும் வையகம் போற்றும் எம்.ஜி. ஆர். ஆகி விட முடியாது.
ஒரு நிலவு, ஒரு பகலவன், ஒரு எம்..ஜி. ஆர். தான் ..... இருக்க முடியும்
இத்திரியினில் வந்து வீண் விவாதங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தி சவடால்கள் விடுப்பதை மாற்று திரி அன்பர்கள் தவிர்த்தால் நலம்.
எங்களுக்கு உங்கள் திரியினில் வந்து சவால் விடும், நிலையை உருவாக்கி, உங்களுக்கு தர்ம சங்கடமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள்.
இந்த பூவுலகுள்ளவரை புரட்சித் தலைவரின் புகழ் இருந்து கொண்டே இருக்கும். விநியோகஸ்தர்களுக்கு குபேரனாக விளங்கும் நம் மக்கள் திலகத்தின் திரையுலக (இந்திய மற்றும் இலங்கை) சாதனைகளை சகித்துக்கொள்ள முடியாத ஜீரணிக்க முடியாத சிலரின் கூக்குரலுக்கு நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன்.
வானில் நிலவில்லையேல் ஒளி இல்லை. தர்மதேவன் எம். ஜி. ஆர். இல்லையேல் தமிழ் பட உலகமே இல்லை !
Our Great M.G.R. is the only ever green hero of the Tamil Cine field. This is Accepted Truth in the field.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன் .
19-06-60 அன்றைய தேதியிட்ட " கல்கண்டு " (ஆசிரியர் : தமிழ்வாணன் ) வார இதழிலிருந்து ..............
1. வாசகர் எரியோடு ஏ. பூபாலன் அவர்கள் தொடுத்த வினா .. எம். ஜி. ஆர். இலவச மருத்துவமனை எப்படி இருக்கிறது ?
தமிழ்வாணன் அவர்ளின் பதில் : ஒரு நாளைக்கு 500 ரூபாய் கேட்கிறது. கோடீசுவரனால் கூட இன்று (1960ல்) ஒரு நாளைக்கு 500 ரூபாய் தர்மம் செய்ய முடியாதே ! தன் எதிர்காலத்திற்கென்று ஒரு சிறு தொகையை ஒதுக்கி கொள்ளும் ஒர் எண்ணம் கூட இன்னும் பிறக்க வில்லையே இந்த எம். ஜி. ஆருக்கு.
2. வாசகர் திருவானைக்காவல் எஸ். தென்னரசு விடுத்த மற்றொரு வினா : விஜயபுரி வீரனில் நடித்த ஆனந்தன், எம். ஜி. ஆராக வந்து விட்டார். இனி மேல் எம். ஜி. ஆருக்கு ஆபத்து தான் என்று பெசிக்கொண்டார்களே, என்ன ஆயிற்று ?
தமிழ்வாணன் அவர்ளின் பதில் : காக்கை எத்தனை முறை முழுகி முழுகி குளித்தாலும் கொக்காக முடியுமா ? எம். ஜி. ஆர். கத்தியாலோ, புத்தியாலோ மக்கள் மனதில் இடம் பெற வில்லை. தன்னுடைய பண்பால் மக்கள் மனதைப் பற்றிகொண்டவர் எம். ஜி.ஆர். ஆனந்தர்கள் ஆயிரவர் வந்தாலும் எம். ஜி. ஆரை அசைக்க முடியாது.
மேற்கூறிய இந்த இரு பதில்களில், பொது நலன் ஒன்றையே கருதி சுயநலமின்றி வாழ்ந்தவர் நம் வள்ளல் பெருமான் எம். ஜி. ஆர். என்றும், எத்தனை நடிகர்கள் வந்தாலும், எம். ஜி. ஆருக்கு நிகராக முடியாது என்ற உண்மையை உணர்த்தியிருக்கிறார் தமிழ்வாணன். இன்று வரை அது தான் நிலை.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
10-07-1960 அன்றைய தேதியிட்ட " கல்கண்டு " (ஆசிரியர் : தமிழ்வாணன் ) வார இதழிலிருந்து
வாசகர் கோ. கருப்பூர் ரெங்கநாதன் கேட்டிருந்த கேள்வி : தமிழ் நாட்டில் ஒரே ஊரில் அண்ணாத்துரை, எம். ஜி. ஆர்., எஸ். எஸ். ஆர். , சிவாஜி கணேசன், நெடுஞ்செழியன், கருணாநிதி ஆகியவர்கள் ஒரே நேரத்தில் தனித்தனியாக பேசினால் யாருக்கு கூட்டம் அதிகமாக வரும் ?
தமிழ்வாணன் அவர்ளின் பதில் : எம். ஜி. ஆருக்குத் தான் கூட்டம் அதிகமாக வரும். அடுத்து சிவாஜிக்கு. அப்புறம் அண்ணாத்துரைக்கு. அப்புறம் எஸ். எஸ். ஆருக்கு. அப்புறம் கருணாநிதிக்கு. கடைசியாக நெடுஞ்செழியனுக்கு. ஏனென்றால், நெடுஞ்செழியனுக்கு சினிமா தொடர்பே இல்லையே.
மேற்கூறிய இந்த பதிலிருந்து, சினிமா தொடர்புகள் உள்ள இதர நடிகர்களாகிய சிவாஜி கணேசன் மற்றும் எஸ். எஸ். ஆர். ஆகியோரை விட மக்கள், பொன்மனச்செம்மல் அவர்களையே முதன்மைப் படுத்தியுள்ளார்கள் என்பது புலனாகிறது.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
விடுங்கள் வினோத் சார். வீண் சர்ச்சை எதற்கு. அங்கைப்புண்ணுக்கு ஆடியும் வேண்டுமோ என்பது போல, தமிழகம் மட்டுமல்லாது உலக அளவில் திரையுலகத்தின் சக்ரவர்த்தி என்றும் எம்ஜிஆர்தான் என்பது உலகறிந்த விஷயம். முன்னர் சொன்னது போல் தேவையில்லாத பதிவுகளுக்கு பதில் தந்து நேரத்தை வீணடிக்க வேண்டாமென்பது என்னுடைய பணிவான கருத்து. இன்றைக்கும், என்றைக்கும் மன்னாதி மன்னன்தான் வசூல் மன்னன் என்பதை அன்றைய வரலாறும் இன்றைய வரலாறும் நிரூபித்துள்ளன.
நான் முன்னர் சொன்னது போல அவரவர் திரியில் அவரவர் இருந்தால் அபாயம் ஒன்றுமில்லை. அடுத்தவர் திரியில் மூக்கை நுழைத்தால் அதனால் வரும் தொல்லை. தொல்லை தராதீர்கள் நண்பர்களே. ப்ளீஸ்.
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு..
இங்கே நீ சிரிக்கும் புண் சிரிப்போ ஆனந்த சிரிப்பு..
நல்ல தீர்ப்பை என்றோ உலகம் வழங்கி மக்கள் திலகத்திடம் திரையுலகை ஆண்டது போதும். தமிழகத்தை நீ ஆள வேண்டும் என்று கூறிவிட்டது. இதற்கு மேல் என்ன வேணும் சார். விடுங்கள்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
சமீபத்தில் வெளியான மஞ்சப்பை,வடகறி ஆகிய படங்களில் மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் காட்சிகள் அமைந்துள்ளது.மஞ்சப்பை படத்தில் ராஜ்கிரண் மக்கள் திலகத்தின் ரசிகராக வருகிறார்.அவர் எம்ஜிஆர் நினைவிடம்,எம்ஜிஆர் நினைவு இல்லம் போன்ற இடங்களுக்கு செல்வது போலவும் மக்கள் திலகத்தின் கட் அவுட்டுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.அதே போல வடகறி படத்தில் கதாநாயகனின் அண்ணன் எம்ஜிஆரின் ரசிகராக வருகிறார்.வீட்டில்,ஆட்டோவில் என்று திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் திலகத்தின் புகைப்படங்கள் பூஜை அறையில் மக்கள் திலகத்தின் போட்டோ என்று காட்சிகள் அமைந்துள்ளன.குறிப்பாக கதாநாயகனிடம் அவரது அண்ணன் மக்கள் திலகத்தை பற்றி கூறும் வசனம் நம் கண்களில் நீரை வரவழைக்கும்.மஞ்சப்பை படத்தின் இயக்குனர் ராகவன் அவர்களுக்கும்,வடகறி படத்தின் இயக்குனர் சரவண ராஜன் அவர்களுக்கும் மக்கள் திலகத்தின் கோடான கோடி ரசிகர்கள் சார்பில் இதயம்கனிந்த நன்றி.இதில் கூடுதல் விசேஷம் என்னவென்றால் வடகறி படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி. தாத்தா செய்த பாவங்களுக்கு எல்லாம் பேரன் பிராயச்சித்தம் தேடுகிறாரோ?
courtesy - net
http://i1170.photobucket.com/albums/...psecb92537.jpg
31.10.1975ம் ஆண்டு வெளியான படம் பல்லாண்டு வாழ்க.இந்தியில் தோ ஆங்கே பாரா ஹாத் என்ற பெயரில் இயக்குனர் சாந்தாராம் எடுத்த படம் இது.மக்கள் திலகத்தின் 127 வது படம் இது. இந்த படத்தை பார்த்த இயக்குனர் சாந்தாராம் கலைநயமிக்க இந்த படத்தை வியாபார ரீதியில் வெற்றி படமாகவும் கொடுத்துள்ளீர்கள் என்று மக்கள் திலகத்தை பாராட்டினார்.1975ம ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்து நூறு நாட்கள் ஓடிய படம் இது.
31.10.1975ம் ஆண்டு வெளியான படம் பல்லாண்டு வாழ்க.இந்தியில் தோ ஆங்கே பாரா ஹாத் என்ற பெயரில் இயக்குனர் சாந்தாராம் எடுத்த படம் இது.மக்கள் திலகத்தின் 127 வது படம் இது. இந்த படத்தை பார்த்த இயக்குனர் சாந்தாராம் கலைநயமிக்க இந்த படத்தை வியாபார ரீதியில் வெற்றி படமாகவும் கொடுத்துள்ளீர்கள் என்று மக்கள் திலகத்தை பாராட்டினார்.1975ம ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்து நூறு நாட்கள் ஓடிய படம் இது.
http://i1170.photobucket.com/albums/...psb03b52c9.jpg
4.2.1972ம் ஆண்டு மக்கள் திலகம் நடித்து வெளிவந்த படம் சங்கே முழங்கு.இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் திரைக்கதை வசனம் எழுத ப.நீலகண்டன் இயக்கிய இந்த படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் அனைத்துப் பாடல்களும் இனிமையானவை.
http://i1170.photobucket.com/albums/...psdf465f05.jpg
1963ம் ஆண்டும் 1966ம் ஆண்டும் மக்கள் திலகம் நடித்த அதிகமான படங்கள் வெளியாகின. 1963ம் ஆண்டு 9 படங்களிலும் 1966ம் ஆண்டு 9 படங்களிலும் மக்கள் திலகம் நடித்தார்.
அ தி மு க துவங்கி , திண்டுக்கல் நாடாளமன்ற இடைத் தேர்தலில் முதல் வெற்றியை பெற்றது அனைவருக்கும் தெரியும் , ஆனால் முதல் சட்டமன்ற இடைத் தேர்தல் வெற்றி எப்பொழுது , எந்தத் தொகுதி என்று தெரியுமா ?
கோவை மேற்கு .... 1974 ... 517 வாக்குகள் வித்தியாசத்தில் அ தி மு க வேட்பாளர் சி . அரங்கநாயகம் வெற்றி பெற்றார் .... இரண்டாம் இடத்தில காங்கிரஸ் , மூன்றாவது இடத்தில அப்பொழுதைய ஆளும் கட்சியான தி மு க .
courtesy net
any body tell name of the film ?
http://i1170.photobucket.com/albums/...ps20fd3045.jpg
http://i1170.photobucket.com/albums/...psa0cd76be.jpg
Still Running Sucessfully mass da thalaivar than endraikum mass
50yrs movie Hit in present Generation also this is what called mass
MGR the Evergreen Superstar Dr. MGR
http://i1170.photobucket.com/albums/...ps793a66c9.jpg
Loyalist: A fan paying homage to former Chief Minister of Tamil Nadu M.G. Ramachandran on the occasion of his birth anniversary in Chennai on Saturday.
CHENNAI: His evergreen film songs woke up many of his fans on Saturday.
Hundreds of fans of ‘Puratchi Thalaivar’ celebrated the immortal star’s birthday on Saturday by distributing sweets, playing his songs on loudspeakers and organising medical camps.
S. Vijayan, founder of the Tamizhaga MGR Manidha Neya Mandram, said MGR’s films always had a message and the actor showed respect for every character in the film.
There are several cinema theatres in the city that run his films from time to time.
Fan clubs, including the Kalaivendan MGR Bhakthargal Arakattalai, organise programmes in his memory.
“He is my God,” averred die-hard fan S.S. Perumal, who is treasurer of the Arakattalai.
The association members mostly spend Sunday evenings at cinema theatres watching special re-runs of MGR films.
Helping the needy
“Today, we organised a function to mark the day and listened to our favourite songs. We have planned to distribute clothes to orphans and elders at a later date,” Mr. Perumal added.
Another ardent fan said, “MGR radiated positive energy and his songs are foot-tapping. I listen to them on the go and whenever I have time to spare.”
Apolitical
The love for MGR is apolitical.
“I do not belong to any political party and though I have watched only a few of his films I respect him for the way he bequeathed his property to the less-privileged,” said Raju, an autorickshaw driver, who hails from Madurai.
Many of his friends at the CIT Nagar autorickshaw stand celebrated the actor’s birthday by distributing sweets.
http://i1170.photobucket.com/albums/...ps0a49735f.jpg
Fans throng Tiruvallur for MGR temple consecration
R Vasundara TNN
Chennai: Arulthangam of Erode balanced his seven-year-old son,Ezhumalai on his shoulder against the buffeting crowd as he stood on tiptoe to catch a glimpse of actor and former chief minister MG Ramachandrans idol.He was one among the 2,000 people who had travelled from all over Tamil Nadu to an MGR temple in a small village,Nathamedu in Tiruvallur district,located 40km from Chennai.
On Monday,a consecration ceremony of the idol was conducted by priests,drawing a big crowd of MGR fans.I have been an ardent fan of his since childhood, said Arulthangam.To be able to visit a temple built for the Puratchi Thalaivar himself and to be able to witness a ceremony like this is an honour indeed.My entire family accompanied me.
The temple itself was built by an MGR fan,Kalaivanan who sold his property and pawned his wifes jewellery to garner funds for it.Costing over Rs 21.5 lakh,the temple has three idols of MGR,a six-foot tall one in the inner sanctum,a two-foot long idol inside the temple and a third one on the temple tower.We performed an alankaram (dressing up) ceremony for the six-foot tall idol, said Kalaivanan,who was one of organisers.And for the two-foot idol,we performed over 12 different kinds of abhishekams (offerings) using 60 litres of milk,curd,coconut water,panchamirtam and holy ash among others. The bigger idol was clothed in the usual attire of MGR,the politician,with a white dhoti and shirt,a gold wrist watch,a fur cap on his head and dark glasses.People then garlanded the idol, said Kalaivanan.
Standing apart from the crowd was a photograph of the leader adorned with a few relics donated by the actors surviving relatives.Sudha Vijayan,wife of MGRs adopted daugther along with his grandnephew,Pratik,donated a shirt of the actor for display in the temple.To B S Raju,temple committee member,the crowning moment was when he poured a pot of milk over the idol.The milk offering was only by 108 select members nominated by the committee, he said proudly.
thanks sir
MGR taking Director M.Krishnan Nair for a cycle rickshaw ride !
The world Luckiest man Mr.M.krishnan
http://i1170.photobucket.com/albums/...ps62ad7dc5.jpg
thlaivar old photo
http://i1170.photobucket.com/albums/...psa959440e.jpg
22-12-1960 அன்றைய தேதியிட்ட " கல்கண்டு " (ஆசிரியர் : தமிழ்வாணன் ) வார இதழிலிருந்து
வாசகர் சா, முத்துகுமரப்பன், தென்காசியிலிருந்து ........கேட்டிருந்த கேள்வி : நீங்களும், எம். ஜி. ஆரும் எப்படி நண்பர்கள் ஆனீர்கள் ?
தமிழ்வாணன் அவர்ளின் பதில் : கலைவாணர், வருகிறவர்களிடமெல்லாம் நான் எழுதிய அறிவு நூல்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்லி, என்னைப் பற்றி இரண்டு வார்த்தைகளும் சொல்லி வைப்பார். கலைவாணர் இப்படி என்னிடத்திலே நிறைந்த அளவில் மதிப்பு வைத்திருந்ததை எம். ஜி ஆர். பல தடவைகள் பார்த்திருக்கிறார். அதனால் என். மீது எம். ஜி. ஆருக்கு மதிப்பு உண்டாயிற்று. கலைவாணர் எம். ஜி. ஆருடைய ஒழுக்கத்தைப் பற்றி சொல்லி " சுத்தமான மனுஷன் " என்று என்னிடம் அடிக்கடி சொல்வார். இதனால் எம். ஜி. ஆரிடம் எனக்கு மதிப்பும், மரியாதையும் உண்டாயின. அப்புறம் கலைவாணரால் மதிக்கப்பட்ட நாங்கள் இருவரும் நண்பர்களானோம். இப்போது எங்களிடம் அரசியல் பிரச்சினைகளில் மட்டும் தான் வேற்றுமை இருந்து வருகிறது. இதனால், நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டால் அரசியல் பற்றி எதுவும் பேசிக் கொள்வதில்லை. எம். ஜி. ஆரை அடிக்கடி பார்த்தால் நான் அவர் ஆள் ஆகி விடுவேனோ என்று பயந்து அவரை நான் அடிக்கடி இப்போது பார்ப்பதில்லை.
http://i59.tinypic.com/15yx0k6.jpg
மேற்காணும் படத்தில் மக்கள் திலகத்துடன் கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் (கண்ணாடி அணிந்திருப்பவர்) உடன் " வெண் திரை " இதழ் ஆசிரியர் எம். பி. ஸ்ரீநிவாசன்
இடம் : ராமாபுரம் தோட்டம்
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்