http://i58.tinypic.com/2dme108.jpg
Printable View
"மய்யம்" திரியின் அனைத்து பதிவாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும், எனது இனிய " தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ".
http://i61.tinypic.com/2s8ir89.jpg
திரு எஸ்வி சார்,
திரு யுகேஷ்,
திரு கலைவேந்தன்,
மரியாதைக்குரிய பழுத்த அனுபவஸ்தர் பக்தர் திரு பேராசிரியர் அவர்கள்,
திரு பெங்களூர் குமார் அவர்கள்,
திரு ரவிச்சந்திரன் அவர்கள்,
திரு சைலேஷ் பாபு அவர்கள்
திரு லோகநாதன்,
திரு கலியபெருமாள்
திரு முத்தையா மற்றும் இந்த திரியில் பங்களித்துவரும் அனைத்து பக்தர்களுக்கும் என்னுடைய இனிய தமிழர் புது வருட விழா வாழ்த்துக்கள். அனைத்து செல்வங்களும் பெற்று அனைவரும் நன்றாக வாழ எல்லாம் வல்ல இறைவனை, இறைவனோடு கலந்த இரண்டு திலகங்களின் ஆன்மாவையும் வேண்டுகிறேன்.
Rks
நேற்று வரை அடிமைபெண் மதுரை சென்ட்ரலில் ருபாய் 70,600 வரை வசூல் செய்திருப்பதாக தகவல். 9 வழி (ரூட்) விளம்பரம் அடிமைபெண் திரைப்படத்திற்கு செய்துள்ளனர். இது தவிர தினசரிகளில் விளம்பரம் வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மையம் திரியின் அனைத்து அன்பர்களுக்கும் இதயம் கனிந்த தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இன்று பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட எங்கவீட்டுப்பிள்ளை திரைப்படத்தின் 50வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் அருமை. அதிலும் அபிநயசரஸ்வதி அவர்களின் உரை உச்சம். எம்.ஜி.ஆரோடு எவரையும் ஒப்பிடாதீர்கள் என்றது ஒன்று போதும், வேறு ஏதும் சொல்லத் தேவையில்லை. பாராட்டுக்கள். He was (is) the first and no second in the world.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரியின் பதிவாளர்கள், பார்வையாளர்கள், விமர்சகர்கள்
அனைவருக்கும், மற்றும், திரு. ரவிகிரன் சூர்யா அவர்களுக்கும், இனிய தமிழ்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
http://i58.tinypic.com/viejc.jpg
ஆர். லோகநாதன்.
originally Posted by murali srinivas in the N.T. Thread.
செல்வகுமார் சார்,
சத்தியமாக இப்படி ஒரு பதிவை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நான் நட்பான முறையில்தான் உங்களிடம் ஒரு சில கேள்விகளை முன் வைத்தேன். கோபாலுக்கு வக்காலத்து வாங்கி எழுப்பட்ட கேள்விகள் அல்ல அது. பல நாட்களாக உங்கள் இருவரிடமும் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்ததுதான். கோபாலுக்கு நீங்கள் போட்ட பதில் அதற்கு ஒரு காரணியாக அமைந்திருந்தது என்பதுதான் உண்மை. ஆனால் உங்கள் பதிலை பார்த்தவுடன்தான் அதில் தெறிக்கும் கோபத்தை பார்த்தவுடன்தான் என் தவறு எனக்கு புரிந்தது. உங்களை கேள்வி கேட்க கூடாது என்று எனக்கு தெரியாது. தெரியாமல் நடந்த தவறை மன்னிக்கவும்.
என் செய்கைக்கு ஒரு உள்நோக்கமும் கற்பித்திருக்கிறீர்கள். சிவாஜியை திட்டினாலும் பரவாயில்லை. எம்ஜிஆரை குறை கூறுவதால் கோபாலை ஆதரிக்கிறேன் என்று. நான் யாரையும் என்றுமே திட்டியதில்லை. இந்த இணையதளத்தில் 9 வருடங்களாக பயணிக்கிறேன். நான் என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேனோ அதை நான் நேரிடையாகவே சொல்லி விடுவேன் எனக்கு வேறு யார் துணையும் தேவையில்லை. இங்கே தொடர்ந்து வருபவர்களுக்கு நான் சொலவது புரியும்.
இனி நீங்களும் சரி கலைவேந்தனும் சரி சென்ற வாரம் கோபால் எழுதிய சில பதிவுகளைப் பற்றி குறிப்பிட்டு நான் அதை கண்டிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறீர்கள். உண்மையில் நடந்தது என்ன என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் குறிப்பிடும் சம்பவம் நடப்பது ஏப்ரல் 3 வெள்ளியன்று. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் வெளியூர் பயணம் மேற்கொண்டிருந்தேன். சென்ற இடத்தில கணினி இல்லை. என்னிடம் laptop மற்றும் mobile-ல் படிக்கும் வசதிகளும் இல்லாததால் என்னால் மய்யம் இணையதளத்தை பார்க்க முடியவில்லை. சென்ற இடத்தில அலைபேசி சிக்னலும் இல்லை என்பதால் நான் எவருடனும் அல்லது மற்றவர்கள் என்னிடமோ தொடர்பு கொள்ள இயலாத சூழல். இரவு 10 மணிக்கு மேல் தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியில் வந்தபோது அலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பர் ஒருவர் திரியில் பதியப்பட்ட சில விரும்பத்தகாத பதிவுகளைப் பற்றி குறிப்பிட்டார், என்னால் access பண்ண முடியாத காரணத்தினால் உடனே மலேசியாவில் வசிக்கும் ஹப் அட்மினை (hub admin ) சார்ந்த சீனியர் மாடரேட்டரான nov அவர்களை தொடர்பு கொண்டு (மலேசியாவில் அப்போது நள்ளிரவு) விஷயத்தை விளக்கி பதிவுகளை நீக்கி விடுமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் நமது இந்திய நேரத்தின்படி சனிக்கிழமை அதிகாலை சர்ச்சைக்குரிய பதிவுகள் அனைத்தையும் நீக்கி விட்டார். நான் ஞாயிறு நள்ளிரவுதான் சென்னை வந்தேன். என்னால் திங்கள் மாலைதான் ஹப் பர்ர்க்க முடிந்தது. பதிவுகள் நீக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று தினங்கள் ஆன நிலையில் மீண்டும் நடந்தவற்றைப் பற்றி பகிரங்கமாக குத்தி கிளற விரும்பவில்லை. இவை அனைத்தும் ராகவேந்தர் சாருக்கு தெரியும். மற்ற பல ஹாப் உறுப்பினர்களுக்கும் தெரியும்.
இப்போதும் கூட இவற்றையெல்லாம் சொல்லித்தான் என் நேர்மையை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. ஆனால் இந்த விவரங்களெல்லாம் தெரியாத திரியின் வாசகர்கள் ஒரு சிலருக்கேனும் இப்படிப்பட்ட சந்தேகங்கள் இருக்குமானால் அவர்களுக்காகவே இந்த விளக்கம்.
நான் மாடரேட்டர் ஆன பிறகு மிக அதிகமாக எடிட் செய்தது கோபாலின் பதிவுகளைத்தான். அதையும் நான் திரியில் பதிவு செய்திருக்கிறேன். ஆக கோபாலுக்கு சலுகை என்பதெல்லாம் அவரவர் கற்பனையே தவிர வேறொன்றில்லை
current affairs section பற்றி சொன்னது உங்களை அங்கே போய் எழுத் சொல்லவில்லை. அரசியல் பற்றிய விவாதங்கள் இடம் பெறும் இடம் என்பதை மட்டுமே சுட்டிக் காட்டினேன்.
அதே போல் எம்ஜிஆர் பற்றி விமர்சனம் வந்தால் எதிர்ப்போம். ஆனால் கருணாநிதி பற்றி நாங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம் என்று சொல்லியிருக்கிறீர்கள். புரிந்துக் கொண்டேன்.
அதே போல் இந்த திரியில் காங்கிரஸ்காரர்கள் யாருமில்லை. ஆகவே இன்றைய தமிழக காங்கிரஸில் நடைபெறும் விஷயங்களை நடிகர் திலகம் திரியின் பங்களிப்பாளார்களோடு தொடர்புபடுத்துவதை தவிர்க்கலாமே என்றுதான் சொன்னேன். அதற்கும் நீங்கள் தொடர்பேயில்லாமல் ஏதோ சொல்லியிருக்கிறீர்கள்.
இறுதியில் முக்கியமான ஒன்றை குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த திரியின் நடுநிலை பற்றி. அந்த வார்த்தைக்கு அர்த்தமே இந்த நடிகர் திலகம் திரிதான். நீங்கள் கலைவேந்தன் இளைய சகோதரர் யுகேஷ் பாபு போன்றவர்கள் பலமுறை கடுமையான வார்த்தைகளை இங்கே பயன்படுத்தியிருக்கிறீர்கள். அவை அனைத்தும் இன்னமும் அதே போல்தான் இருக்கிறது. இவ்வளவு ஏன், நண்பர் கலைவேந்தனின் பதிவுகளில் இருந்த ஒரு சில முரண்களை நான் சுட்டிக் காட்டியபோது என் மீது கோவம் கொண்டு என்னை வரலாறு தெரியாதவன் என்று எழுதினார். அதைகூட நீக்காமல் அப்படியேதான் வைத்திருக்கிறோம். நடிகர் திலகத்தின் மீது வைக்கப்படும் விமர்சனங்களை கூட நாங்கள் நீக்கியதில்லை.
என்னால் இனி உங்களுக்கு தொந்தரவு இருக்காது. வருகை தந்து பதில் சொன்னதற்கு நன்றி!
அன்புடன்
================================================== ================================================== ============================================
அன்பு சகோதரர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் அறிவது :
முதலில் உங்களுக்கும் நடிகர் திலகம் திரி நண்பர்களுக்கும் எனது இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தங்கள் விளக்கத்தைப் பார்த்தேன். நானும் உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதில் பதிவை எதிர்பார்க்கவில்லை.
எங்கள் புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மலைப் பற்றிய , நண்பர் திரு.கோபால் அவர்களின் சமீபத்திய பதிவு குறித்து அவரை நீங்கள் கேட்க மாட்டேன் என்கிறீர்களே என்று நானும் பல நாட்களாகவே உங்களிடம் கேட்க வேண்டும் என்றுதான் இருந்தேன்...... சகோதரர் கலைவேந்தன் கூறியது போல கடந்த வார பதிவை நான் மேற்கோள் காட்டியது ஒரு உதாரணம்தான். சிற்சில சமயங்களில், அவ்வாறு சுட்டி காட்டப்படும் உதாரணங்கள் தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதுதான் உண்மை.
ஒரு MODERATOR ஆக தாங்கள் திகழ்ந்து, சில பதிவுகளில் சில தேவையற்ற வார்த்தைகளை நீக்கியதற்கு நன்றி கூறும் இந்த வேளையில், நடிகர் திலகம் திரி நண்பர்கள் சிலர் எங்கள் மக்கள் திலகம் திரியினில் வந்து பதிவிடுவது திரு.கோபால் அவர்களுக்கு பிடிக்காமல் அவர்களை குறை கூறி எழுதுயதை நீங்கள் கண்டிக்கவில்லை என்றுதான் வருத்தம் கொள்ளச் செய்கிறது. ஒரு சமீபத்திய உதாரணம் : ஐதராபாத் திரு. ரவி அவர்கள் எங்கள் திரிக்கு வந்து நற்கருத்துக்களை கூறுகிறார் என்பதற்காக அவரை, ‘’ரவி’க்கை அணிந்து சரணாகதி அடைந்து விட்டார்’ என்று திரு.கோபால் தனக்கே உரிய நையாண்டியுடன் கிண்டல் செய்தார். அதை நீங்கள் இது வரை கண்டிக்காதது மட்டுமல்ல, அந்த பதிவையும் நீக்கவில்லை.
அனைவருக்கும், திரி மூலம் நேற்று வேண்டுகோள் விடுத்த தாங்கள், திரு. கோபால் அவர்களுக்கு அறிவுரை கூற வில்லையே என்ற ஆதங்கம் தான் எனக்கு மேலோங்கி நிற்கிறது. இது ஒரு தலை பட்சமாகவே என் கண்ணுக்கு புலப்படுகிறது.
எந்த காலத்திலும், சுயமரியாதை காத்து வரும், திராவிட இயக்கத்தை சார்ந்த நாங்கள், மற்றவர்களின் சுயமரியாதையை வெகுவாகவே மதித்து வருகிறோம். எனவே மன்னிப்பு என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை. மன்னிப்பு கோரும் அளவுக்கு தாங்கள் எந்த தவறும் செய்ய வில்லையே !
சகோதரர் கலைவேந்தன் ‘அன்னை மடியை விரித்தாள் எனக்காக..’ என்று பதிவு போட்டால் அதை புரட்சித் தலைவர் நீக்கச் சொன்னார் என்றும் திரு. கண்ணதாசன்தான் பிடிவாதமாக அந்த வரியை சேர்த்தார் என்ற அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடுகிறார் திரு. கோபால். “தன் நெஞ்சறிவது பொய்யற்க ... பொய்த்த பின் தன் நெஞ்சே தன்னைச் சுடும்” என்ற வள்ளுவரின் குறள்தான் நினைவுக்கு வருகிறது. தாயை தெய்வமாக மதிப்பவர் எட்டாவது வள்ளல், எங்கள் புரட்சித் தலைவர். இது உலகறிந்த உண்மை. அப்படிப்பட்ட எங்கள் பொன்மனச் செம்மல், அந்த வரியை நீக்க சொல்வாரா? வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது.
கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்களைப் பற்றி மக்கள் திலகம் திரியில் நாங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம் என்று நான் கூறியதாக சொல்லியுள்ளீர்கள். நான் அப்படி கூறவேயில்லை. இது அபாண்டமான பழி. கலைஞர் திரு. மு.கருணாநிதி அவர்களைப் பற்றிய தவறான தகவல்கள், மக்கள் திலகம் திரியினில் பதிவிடப்பட்டால், அதற்கு ஆதாரப்பூர்வமான மறுப்பினை தாரளமாக தெரிவிக்கலாம் என்றுதான் கூறினேன். மேலும், கலைஞர் திரு. கருணாநிதி அவர்களைப்பற்றிய பதிவுகளை நான் கண்டிக்கவில்லை என்றும் கூறுகிறீர்கள். அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருப்பினும், அண்ணாவின் தம்பிகளில் ஒருவர், புரட்சித் தலைவரின் நண்பர், திராவிட இயக்க தளபதிகளில் ஒருவர் என்ற வகையிலும், எங்கள் பொன்மனச்செம்மல் ஒரு காலத்தில் ஏற்றுக் கொண்ட தலைவர் என்ற காரணத்தாலும், சட்ட சபையில் அவை நாகரீகம் காத்து, எதிர் கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் மீது ஒரு முதல்வராக இருந்த எங்கள் புரட்சித்தலைவர் எந்த அளவுக்கு மரியாதை வைத்திருந்தார் என்பதை நான் முற்றிலும் உணர்ந்தவன் என்ற காரணத்தாலும், கலைஞர் கருணாநிதி மீது எனக்கு மரியாதை உண்டு. நான் அவரை கலைஞர் கருணாநிதி என்றே எப்போதும் மரியாதையாக கூறுவேன். என்னுடைய கடந்த கால பதிவுகளில் இதனை உறுதி செய்து கொள்ளலாம். இங்கே நான் புரட்சித்தலைவரின் தீவிர அபிமானி, பக்தன் என்பதால், கலைஞர் கருணாநிதி அவர்களை எதிர்ப்பவன் என்று நீங்களாகவே அர்த்தம் கற்பித்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
ஆனால், இங்கே இந்த ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி' யில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், தென்னாட்டு காந்தி பேரறிஞர் அண்ணா, பாரத ரத்னா புரட்சித் தலைவர், கலைஞர் கருணாநிதி ஆகியோரைப் பற்றியும் திராவிட இயக்கங்களைப் பற்றியும் மிகவும் மோசமாக விமர்சனங்கள் வருகிறதே. அதை நீங்கள் கண்டிக்கவில்லையே ?
என்னைக் கேள்வி கேட்கக் கூடாது என்று நான் கூறவில்லை. தாராளமாக நீங்கள் கேட்க உரிமை உண்டு. அதற்கு தக்க ஆதாரத்துடன் விளக்கமளிப்பது என் கடமை. அதேசமயத்தில், நாங்கள் உங்களை கேட்டால் இப்படி பதிவை எதிர்பார்க்கவில்லை என்று கூறுகிறீர்கள்.
சகோதரர் கலைவேந்தனின் பதிவை ஏன் நீக்கவில்லை என்று கேட்கிறீர்கள். நாங்கள் அனாவசியமாக நடிகர்திலகம் மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களை விமர்சிப்பதில்லை.
நான் கூட, மிருதங்கச் சக்கரவர்த்தி, தில்லானா மோகனாம்பாள் ஆகிய படங்களை புரட்சித் தலைவர் பார்த்துவிட்டு மறைதிரு.சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பை பாராட்டினார் என்று நடிகர்திலகம் திரிக்கு வந்து சமீபத்தில் பதிவிட்டேன். அதை நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்கள் கூட பாராட்டினார்.
நான் சகோதரர் கலைவேந்தன் அவர்களைப் பற்றி முழுமையாக அறிந்தவன். அவர் யார் மனதையும் புண்படுத்த விரும்பாதவர். நீங்கள் குறிப்பிட்டபடி, ‘வரலாறு தெரியாதவன்’ என்ற வார்த்தையை உங்களைப் பார்த்து அவர் பயன்படுத்தவில்லை.
ஒருவர் தன் தாய்க்கு சிலை வைத்து அதை திறப்பதற்கு தகுதியான ஆள்
http://i57.tinypic.com/r0basp.jpg
யார் என்று பார்த்துதான் தேர்ந்தேடுப்பார். நீங்கள் போற்றும் நடிகர் திலகம். பல முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வேண்டியப்பட்டவராக இருந்த போதிலும், எங்கள் மக்கள் திலகத்தை வைத்து தான் தனது தாயின் சிலை திறப்பு விழாவை நடத்தினார். ஒரு குழந்த பிறந்தால் அது அண்ணன் எம். ஜி. ஆர். அவர்கள் போல்தான் வாழ்ந்து புகழ் பெற வேண்டும், என்று எங்கள் புரட்சித்தலைவரின் மறைவுக்கு இரங்கல் செய்தி தெரிவித்த உங்கள் அபிமான நடிகர் போற்றிய எங்கள் பொன்மனச் செம்மலைப் பற்றி இங்கே, இந்த நடிகர் திலகம் திரியினில், எவ்வளவு மோசமான விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளன என்பதனையும் தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அதையெல்லாம் நீங்கள் நீக்கத் தயாரா ?.
நேற்று கூட, “ சாந்தி” திரைப்படத்தின் 50வது ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மறைதிரு.சிவாஜிகணேசன் அவர்களின் ரசிகர்களான எனது நண்பர்கள் சிலர், விழாவில் திரு. ஜி. .உமாபதி அவர்களின் மைந்தர், ‘தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டத்தை உணர்ந்து ஒத்துழைப்பு கொடுத்த நடிகர்கள் எனக்குத் தெரிந்து மக்கள் திலகமும் நடிகர் திலகமும்’ தான், என பேசியதாக சொன்னார்கள். அப்படி புகழ் பெற்று விளங்கும் இரு திலகங்கள் புகழை மட்டும் கூறுவோம்.
நாங்கள் எல்லாருமே நட்புணர்வோடு இருக்கவே விரும்புகிறோம். மறுபடியும், கூறுகிறேன் : நீங்கள் தாராளமாக என்னை கேள்வி கேட்கலாம். அதேபோல, எட்டாவது வள்ளல், பொன்மனச் செம்மலைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களை நாங்களும் ஏற்றுக் கொள்ள மாட்டோம், விளக்கம் அளிப்போம். அதையும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
மீண்டும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பின் குறிப்பு : திராவிட இயக்கத்தின் எழுச்சியால் இந்த தமிழகம் அடைந்த வளர்ச்சியையும், திராவிட இயக்கத்தலைவர்கள் தமிழ் சமுதாயத்துக்கு ஆற்றிய பணிகளும், சீர் திருத்தங்களும் பற்றிய விரிவான தொகுப்பினை விரைவில் எழுதவுள்ளேன் என்பதனையும், இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி திரு. ரவி கிரண் சூர்யா அவர்களே ! இந்த மன்மத ஆண்டில், தாங்களும், தங்கள் குடும்பத்தாரும், நோயற்ற வாழ்வு மேற்கொண்டு, அளவற்ற செல்வம் ஈட்டிட, இதயப்பூர்வமாக, நான் வணக்கும் எங்கள் குல தெய்வமாம் பாரத ரத்னா புரட்சித்தலைவரை வேண்டுகிறேன்.
தின இதழ் -14/04/2015-தொடர்ச்சி .....
http://i60.tinypic.com/2j341nb.jpg
http://i58.tinypic.com/27y4ykw.jpg
http://i58.tinypic.com/30rus05.jpg
ராணி வார இதழ் -19/04/2015
http://i62.tinypic.com/3169sms.jpg
http://i58.tinypic.com/6fzdae.jpg
நடிகர்திலகம் திரியின் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன திரு, கலைவேந்தன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் அனைவரின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன், அன்புடன் சுந்தராஜன்.
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் பெரிய இடத்து பெண் திரைபடத்திற்கு வைக்கப்பட்ட பேனர். இதை டிசைன் செய்தது ஒரு சிவாஜி ரசிகர் என்பது தாங்கள் தெரியாத விசயமாக இருக்கலாம். மேலும் விவசாயி. குடியிருந்த கோயில், நான் ஆணையிட்டால் போன்ற படங்களுக்கும் பேனர் டிசைன் செய்தது சிவாஜி ரசிகர் என்பதை தங்களுக்கு தெரியபடுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்,
http://i1369.photobucket.com/albums/...psvrkni6ms.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
நன்றி திரு.சுந்தரராஜன். தங்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள். மக்கள் திலகம் நடித்த பெரிய இடத்துப் பெண், விவசாயி, குடியிருந்த கோயில், நான் ஆணையிட்டால் படங்களுக்கு பேனர் டிசைன் செய்தது சிவாஜி ரசிகர் என்பதை தங்கள் மூலம் அறிந்தது மிக்க மகிழ்ச்சி.
மதுரையில் மதிமுகவைச் சேர்ந்த டாக்டர் சரவணன் அவர்களை அழைத்து நீங்கள் செய்த நற்பணிகளை அறிந்தேன். பாராட்டுக்கள். நீங்கள் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். தொடரட்டும் உங்கள் தொண்டு. எங்கள் திரிக்கு வந்து வாழ்த்து தெரிவித்ததற்கு மீண்டும் நன்றி. அடிக்கடி வாருங்கள். வரவேற்கிறேன்.நன்றி
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார் அவர்கள்
சென்னை சைதாபேட்டை ஜோன்ஸ் சாலையில் பொதுமக்கள் தாகம் தீர்க்கும்
தண்ணீர் பந்தல் கடந்த ஞாயிறு அன்று (12/04/2015) ஏற்பாடு செய்தார்.
தென் சென்னை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர், தென் சென்னை மாவட்ட
செயலாளர், துணை செயலாளர், பகுதி செயலாளர், வட்ட செயலாளர், சைதை
சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் கழக பிரதிநிதிகள் முன்னிலையில் விழா
நடைபெற்றது.
இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம், கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை, பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம், இறைவன் ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம் ஆகிய அமைப்புகளைச் சார்ந்த எண்ணற்ற
பக்தர்கள் /ரசிகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவில் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் மோர், ரஸ்னா , கூழ்,
போன்ற பானங்களும், தர்பூசணி, அன்னாசி, வெள்ளரிக்காய் போன்றவைகளும்
இலவசமாக அளிக்கப்பட்டன.
முன்னதாக தென் சென்னை, எம்.பி. மற்றும், சைதை எம்.எல்.ஏ. ஆகியோர் வரும்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
திரு. எஸ். ராஜ்குமார் அவர்கள் , மழை மேகமே, ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா.
என்று பல்லாண்டு வாழ்க படப்பாடல் கொண்ட பேனர் அமைத்த நல்ல வேளையில் இருந்து சென்னை புறநகர், மற்றும் சென்னை மாநகரில் இரு நாட்களாக ஆங்காங்கே விட்டுவிட்டு மழை பெய்து பூமியை குளிரவைத்தது . வெயிலின் கொடுமையும் சற்று தணிந்தது.
விழா பற்றிய புகைப்படங்கள் நமது நண்பர்களின் பார்வைக்கு பதிவிடுகிறேன்.
ஆர். லோகநாதன்.
http://s10.postimg.org/e2zynz8zt/IMG...413_WA0006.jpg
FORWARDED BY MR.R.SARAVANAN, MADURAI
http://i60.tinypic.com/2na8ux3.jpg
திருவாளர்கள் : இளங்கோ, கேசவன், செல்வகுமார், தாமோதரன், நாகராஜன், மனோகரன்,ராஜ்குமார், பாண்டியராஜன், கண்ணன், லோகநாதன், ரகு ஆகியோர்.