http://i63.tinypic.com/219q4a1.jpg
Printable View
http://i66.tinypic.com/1z6a4rc.jpg
Justice M.M. ISMAIL with our beloved MAKKAL THILAGAM.
Courtesy : by A.R. Hussain in the Facebook
http://i63.tinypic.com/16acevt.jpg
Courtesy : by A.R. Hussain in the Facebook
மக்கள்திலகம் அபிமானி திரு முத்தையன் அம்மு எதற்கும் வருந்த வேண்டாம்...நம் சகோதரர்கள் இடையே அவ்வ பொழுது சிற்சில மன கிலேசங்கள் ஏற்பட்டாலும், அதுவும் கூட மனித புனிதர் பொன்மனச்செம்மல் ஆசியால் நிவர்த்தியாகி விடும்...எனவே எந்நேரமும் தங்களின் ஏதுவான பதிவுகளை வழங்கிடவும், தங்கள் உடல் நலத்தை முழுமையாக பேணி காத்து மக்கள்திலகம் அவர்கள் அறவே வெறுத்த பழக்கத்தையும் கைவிட்டு விடுமாறும் கேட்டு கொள்ளும் சக உறுப்பினன்...
திரு லோகநாதன் அவர்களின் பதிவுகள் சிறப்பாக இருக்கிறது...மக்கள்திலகம் - வசூல் சக்கரவர்த்தி (எப்பொழுதும்) அவர்களின் "தேடி வந்த மாப்பிள்ளை"-எத்தனை தடவைகள் தொலைகாட்சிகளில் ஒளி பரப்ப பட்டாலும் தாங்களும் அதற்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல ...என திரைப்பட விநியோகஸ்தர்களும், திரை அரங்க உரிமையாளர்களும் மறு வெளியீடுகள் செய்வது இணையே இல்லாதது...அதுவும் இப்படிப்பட்ட மழை பெய்த நேரத்திலும் என்பது நினைத்து பார்க்க இயலாத விஷயம்... புரட்சி நடிகர் காவியம் திரையிட்டால் தான் , ரசிகர்களும், பொதுமக்களும் திரளுவர் என நம்பிய மகாலக்ஸ்மி திரை அரங்க நிர்வாகிகளுக்கும் நன்றி...
http://s22.postimg.org/wcxar1std/scan0002.jpg
Courtesy : Kumudham - Weekly.
http://s18.postimg.org/9iv0x4hqh/scan0001.jpg
DIRECTOR K.S.GOPALAKRISHNAN WITH MAKKAL THILAGAM
COURTESY - CINEMA EXPRESS
http://s8.postimg.org/p27fzjptx/scan0002.jpg
Courtesy : Dinamalar - Vaaramalar
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் பாடும் பணியில் அயராது ஈடுபட்டு, மதுரை மாநகர
செய்திகள் / புகைப்படங்கள், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பட வெளியீடுகள், வசூல்
சாதனை விவரங்கள், அடுத்து வெளியாகும் படங்கள் பற்றிய முன்னறிவிப்புகள்
போன்ற பல தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டு , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் பதிவிட உதவிடும் பாசமிகு அன்பு சகோதரர் திரு. எஸ். குமார் அவர்கள்
கடந்த 29/11/2015 அன்று தனது பிறந்த நாளை விமர்சையாக, மதுரையில் கொண்டாடினார்.
ஆனால், இடைவிடாத மழை, மின்சாரம் துண்டிப்பு, கணிணி பழுது, போன்ற பல
காரணங்களால் உடனடியாக பிறந்த நாள் வாழ்த்து கூற இயலவில்லை.
எனவே , கால தாமதத்திற்கு மிகவும் வருந்துகிறேன்.
ஏறத்தாழ 10 நாட்களுக்கு பின் , தெரிவிக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்களை
மதுரை திரு. எஸ். குமார் அவர்கள் மனமுவந்து ஏற்றுக்கொள்ளும்படி அன்புடன்
கேட்டுக் கொள்கிறேன்.
திரு.எஸ். குமார் அவர்கள் , எல்லா வளமும், நலமும் பெற்று இன்று போல் என்றும்
வாழ்க , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆசி, மற்றும் அருளுடன் பல்லாண்டு வாழ்க
என்று மனமார வாழ்த்துகிறேன்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் பதிவிடும் அன்பர்கள், அனைவரும் மதுரை
பக்தர் திரு. எஸ். குமார். அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும்படி
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சிவகங்கை நகரில் அமைந்துள்ள மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை
அணிவித்து , தலைவரின் ஆசி பெற , அவரை வணங்கிடும் திரு. எஸ். குமார் அவர்கள் அனுப்பிய புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு.
http://i67.tinypic.com/2vvniie.jpg
ஆர். லோகநாதன்.
மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரையுலகின்
"ஒளிவிளக்கு " கடந்த 27/11/2015 முதல் , தினசரி 4 காட்சிகளில் வெளியாகி , 9 மாத இடைவெளியில் ரூ.101000/- வசூல் ஈட்டி சாதனை புரிந்தது.
செய்தி / புகைப்படங்கள் உதவி : மதுரை திரு. எஸ். குமார்..
http://i65.tinypic.com/4jutld.jpg
பிரபல நாவலாசிரியர் சாண்டில்யன் அவர்கள் மக்கள் திலகத்தை பற்றி
http://i64.tinypic.com/5f3cp0.jpg
இன்று மூதறிஞர் ராஜாஜி அவர்களின் பிறந்த நாள் .
http://i65.tinypic.com/5f4x9w.jpg
எம்.ஜி.ஆர் திரைபடப்பட வசனங்களும் & பாடல்களும்
சினிமாவில் லாபம் மட்டுமே நினைப்பவர்களுக்கு மத்தியில், தரமான சிந்தனைகளையும், ஒழுக்கம் தரும் பண்புகளையும் தமது படங்களின் கதாபாத்திரங்களின் மூலம் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தவ்ர் எம்.ஜி.ஆர். அநாகரீக வார்த்தைகளை பேசுதல். புகைபிடித்தல், குடிபழக்கம் போன்றவறை தமது படங்களில் முற்றார் தவிர்த்த இவர் நடிகர் என்பதையும் மீறி, சமுதாய பற்றாளராகவும் பரிணாமித்தார். எம்.ஜி.ஆர். ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய கருத்துக்களை வசனமாக இடம் பெற செய்வார். அவை மக்கள் மனதில் மிகவும் பிரபலமடைந்தன.
சமூகத்திற்குண்டான நல்ல கருத்துக்களை தன் படத்தில் இடம்பெற வைப்பது எம்.ஜி.ஆரின் பாணி. இப்படி, சினிமாவின் மூலம் எவ்வளவு கருத்துக்களையும் நல்ல விஷயங்களையும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க முடியுமோ. அத்தனையயும் தமது திரைப்படங்களின் வழி கொண்டு போர் சேர்த்த பெருமை இவருக்கு உண்டு. அதே வேளையில் தமது திரைப்படங்களின் இடம் பெறும் பாடல்களும் குழந்தைகள், பெண்கள், உழைப்பாளிகள், பாட்டளிகள், இளைஞர்கள், பெரியோர்கள் என்று எல்லா தரப்பினருக்கும் நன்மையையும், தன்முனைப்பான விஷயங்களை எடுத்துணர்த்தும் வகையிலேயே எழுத செய்திருப்பார். தமது பாடல்களின் மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன் பொதுவுடமைக் கொள்கையை எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். மூட நம்பிக்கையைச் சாடியிருக்கிறார். இலக்கியத்தை எல்லா மக்களின் மனதிலும் பதியவைக்க முடியாது. சினிமா மூலம் தான் இதை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லமுடியும். இதற்கு, சினிமாவைவிடச் சிறந்த சாதனம் கிடையாது என்று நம்புகிறவர் எம்.ஜி.ஆர்..
நாடோடி: படிக்கிறவங்க புத்திசாலியாகலாம் எல்லோரும் அறிவாளி ஆக முடியாது. அனுபவந்தான் அத தர முடியும்.
நம்நாடு: எனக்குள்ள மூலதனம் என்ன தெரியுமா? மக்களுடைய அன்பும், என்னுடைய நாணயமுந்தான். அதுக்கு என்றுமே மோசம் வராது.
தாயைக் காத்த தனயன்:பிள்ளைகளின் ஆசையை தீர்த்து வைக்கும் பெற்றோர்கள் இருந்து விட்டால் நாட்டில் தற்கொலை என்ற சொல்லுக்கு இடம் இருக்காது.
ஆயிரத்தில் ஒருவன்: யாரோட தாகமாக இருந்தாலும் தாகத்தை தீர்ப்பதுதான் தண்ணீரின் கடமை.
விவசாயி: நாம் பிறர் திருந்துவதற்கு உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர கெடுவதற்கு காரணமாக இருக்கக் கூடாது.
கணவன்: சத்தியம் சில நேரம் தூங்கும். ஆனால் என்றுமே சாகாது.
வேட்டைக்காரன் - உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
நாளை நமதே - நாளை நமதே இந்த நாளும் நமதே, தாய்வழி தங்கங்கள் எல்லாம் நேர்வழி
சென்றால் நாளை நமதே
நம்நாடு - அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம், பேரை வாங்கலாம்.
உலகம் சுற்றும் வாலிபன் - சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைக்க வாழ்ந்திடாதே.
திருடாதே - திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே..!
மன்னாதி மன்னன் : அச்சம் என்பது மடமயடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா! ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயாகம் காப்பது கடமையடா..
படகோட்டி : கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவர் யாருக்காக கொடுத்தார், ஒருத்தரக்கா கொடுத்தார் இல்லை ஊருக்காக கொடுத்தார்.
courtesy - ARUNTHALIR- NET
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும்
என் பேச்சிருக்கும்..
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்...
மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழ வேண்டும்
ஒரு மாசு குறையாத மன்னன் நீ என்று
உலகம் உன்னை போற்றி வணங்க வேண்டும்..
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்..?
மாபெரும் வீரம் மானம் காத்தோர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்....
இப்படி எந்த வரிகளை எழுதினாலும், அந்த வரிகளுள் குணத்தாலும் மனத்தாலும் அடங்கிபோகும் ஒரே திலகம் மக்கள் திலகம் மட்டுமே. வறுமைக் கோட்டில் அல்லல்பட்டு, துன்பத்தின் பிடியில் இன்னல்பட்டு, கலையில் உச்சாணம் அடைய அயார உழைக்கபட்டு, மக்களின் துயர் போக்க அரியணை ஏறபட்டு, அரசியல் சாசனத்தில் சரித்திரம் படைக்கப்பட்டு,
ஈழமக்களின் விடுதலைக்கு பாடுபட்டு, மூன்றெழுத்து கொண்டு உலக மக்களால் ஈர்க்கபட்டு, புரட்சித் தலைவா என்று அழைக்கபட்டு, இறுதியில் யாருக்கும் சொல்லாமல் மூச்சைவிட்டு மக்களை தவிக்க விட்டுசென்றார் இந்த இதயதெய்வம். இன்று நம்மிடையே அவர் இல்லை என்றாலும், கசிந்துருகும் கண்களின் கண்ணீராய், பாடல்களின் பிம்பமாய், சொல்லிய சொல்லின் சித்தராய், அன்பின் புத்தராய், அவர் தெய்வமாக நினக்கும் மக்களின் உள்ளத்தில் என்றும் மங்காத ஒளிவிளக்காய் வாழ்ந்தும் கொண்டே இருக்கிறார்..இருப்பார்..!
courtesy - arunthalir - net
கடந்த வார பாக்யா இதழில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த "புதிய பூமி " திரைப்பட
கதையை தொகுத்து பிரசுரம் செய்துள்ளனர்.
http://i63.tinypic.com/2ymyik6.jpg
http://i63.tinypic.com/10gwr5i.jpg
http://i67.tinypic.com/htctxg.jpg
http://i66.tinypic.com/35lgubn.jpg
http://i65.tinypic.com/2eed93n.jpg
வண்ணத்திரை -சென்ற வார இதழ்
http://i66.tinypic.com/30wwio4.jpg
http://i67.tinypic.com/w86rf5.jpg
http://i67.tinypic.com/1t0go3.jpg