http://i63.tinypic.com/w1blox.jpg
Printable View
Heartfelt wishes to Mr Aadhavan Ravi and Greetings to bear the torch for NT 18!
Varaverkirom Aadhavanai Aayiram Karangal neetti....
https://www.youtube.com/watch?v=HJmHP3NVYY4
with regards,
senthil
Mr Athavan is the right person to start the next part of our Acting God.
Congratulations Mr Athavan Ravi
ஆதவன் கை வண்ணம் அடுத்தப் பாகத்தின் தொடக்கம்... ஆமாம் நீங்கள் தான் சரியான தேர்வு... தொடரட்டும் உங்கள் கவிதை நடை... வாழ்த்துகள்.. நன்றி
முத்தையன் அம்மு அவர்களே .. மோட்டார் சுந்தரம் பிள்ளை புகைப் படங்கள் தரம் அருமை... நன்றி...
நினைவுகள்
சிறுவயதில் நடிகர்திலகத்தின் படங்களை தவிர வேறு படங்களை பார்த்து வளர்க்கப்பட்டதல்ல எங்கள் குடும்பம்.நான் கிராமத்திலே பிறந்து வளர்ந்தவன்.மின்சாரஒளி விளக்குகளை கொண்டிராத பெரும்பாலான வீடுகள் அடங்கியது நான் வசித்த கிராமம்.1970 கால கட்டம் அது.நானும் நிலாச்சோறு ஊட்டி வளர்க்கப்பட்டவன் தான்.நிலாவில் கூட நடிகர்திலகம் தெரிவாரா என்று நான் யோசித்த நினைவுகள் இன்றும் வந்துபோவதுண்டு. நடிகர்திலகத்தின் படங்கள் அடிக்கடி டூரிங் தியேட்டர்களில்
ஓடிக்கொண்டிருக்கும்.அன்று காலையில் தெருக்களில் நடிகர்திலகத்தின் பட போஸ்டர் பார்த்தால் மாலை அந்த திரைப்படம் பார்ப்பதுதான் தான்
எங்களது தவிர்க்க முடியாத நிகழ்ச்சி.அதில் எந்த மாற்றமும்
ஏமாற்றமும் நான் அனுபவித்ததில்லைஇந்த சூழ்நிலைகளில் வளர்ந்து வந்தவன் நான்.
கால சுழற்சி.
1986 ஆம் வருடம்.10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
எப்பொழுதும் போல் 4மணிக்கு பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தேன்.நடிகர்திலகம் நம் ஊருக்கு வந்திருக்கிறார் என்ற தகவல் காதினில் வந்து விழுந்தது.நம்ப மறுத்தது மனம்.அவர் எதற்கு இந்த ஊருக்கு வருகிறார்.வீடு வந்து சேர்ந்தேன்.
காலடி எடுத்து வைப்பதற்குள் அம்மாவிடம் இருந்து பதில்.
"சிவாஜி வந்திருக்கிறார்.சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது."
எங்கே? என்று கேட்டேன்.
அடுத்த நிமிடம் புயலென விரைந்தேன்.ஷூட்டிங் நடந்த இடம் நோக்கி.ஸ்கூல் யூனிபார்மிலேயே ஓடிக் கொண்டிருந்தேன்.மனம் எண்ணியது.
வந்திருப்பது...
கர்ணனா
கட்டபொம்மனா
கப்பலோட்டிய தமிழனா
spசௌத்ரீயா
பாரிஸ்டர் ரஜினிகாந்தா
பிரெஸ்டீஜ் பத்மநாபனா
ஒவ்வொரு வேடமும் மனத்திரையில் காட்சிகளாய் ஓடின.
சூட்டிங் இடம் வந்தது.கும்பலாய் ஜனங்கள்.எட்டி எட்டி பார்த்தேன்.எதுவும் தெரியவில்லை. ஏதேதோ சத்தங்கள்.ஜனக்கூட்டத்திற்குள் நுழைந்து காமிரா வைத்த இடத்திற்கு அருகில் சென்று விட்டேன். ஐந்து அல்லது ஆறு அடிகள் இருக்கும்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!என் கண்களில் தெரியும் உருவம் நிஜம்தானா.?அவர்தானா? ஆகா அவரேதான்.அந்த உண்மையை உணரவே பல நிமிடங்கள் ஆயிற்று.உடமபில் இருக்கும் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்திருக்கும் அந்த தெய்வமகன் என் எதிரில்.சதா சர்வ காலமும் யாரை நினைத்து உருகிக் கொண்டிருந்தோமோ அவர் என் எதிரில்.
வெள்ளை வேட்டி.பிரௌன் கலர் கோடு போட்ட சட்டை.செக்கச் செவேலென்ற முகம்.சுருட்டை முடி.அடர்த்தியான நுனி முறுக்கிய மீசை.மேல் பட்டன்கள் அணியாமல் அணிந்த சட்டை.அதனால் தெரிந்த மார்பு.எவரும் எதிர்த்து பேச அஞ்சும் விழிகள்.
நடிகர்திலகம்
கலையுலகச்சக்கரவர்த்தி
தெய்வப்பிறவி
எங்கள்
சிவாஜிகணேசன்.
அவர் முகம் தவிர்த்து எதையும் பார்காமல் நான்.
ஷுட்டிங் தொடங்குகிறது.
வீகே ஆர் சில துணை நடிகர்கள் பங்கு பெற்ற ஒரு காட்சியின் படப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது.காட்சி அமைப்பின்படி நடிகர்திலகம் வீகேஆருடன் பேசிக்கொண்டிருக்க, அப்போது இடையில் வந்து வேலையாள் வேடத்தை தாங்கிய நடிகர் ஒருவர் ஒரு செய்தியை நடிகர்திலகத்திடம் சொல்வதாக அமைக்கப்பெற்ற காட்சி.டைரக்டர் ஸ்டார்ட் சொல்ல காமிரா பதிவு தொடங்குகிறது.அதுவரை சாதாரணமாக மௌனமாக நின்று கொண்டிருந்த நடிகர்திலகம் ஸ்டார்ட் என்று சொன்னவுடன் மாறிய விதம் பார்த்து ஊரே அசந்துவிட்டனர்.நெஞ்சை நிமிர்த்தி பார்வையை கூர்மையாக்கி குரல் ஒலித்த கம்பீரத்தில் மொத்த கூட்டமும் நிசப்தமாகிப்போனது.
வேலையாளாக நடித்த நடிகர் செய்தியைசொல்லிவிட்டு சட்டென்று சென்று விட்டார். ஷாட் முடிந்தபின்பு நடிகர்திலகம் அவரையழைத்து"சொல்லிட்டு நீ பாட்டுக்குநகர்ந்து போயிர்றதா.அதுல என்ன எதார்த்தம் இருக்கு. காட்சியில் நாங்கள் எவ்வளவு சிறப்பாக நடித்திருந்தாலும் நீ வந்துசெல்லும் காட்சி ஒரு நெருடலாய் இருக்காதா.அடுத்த ஷாட்ல இப்படிச் செய்யாதே" என்றுசொல்லி அந்த ஷாட் அந்த மேற்சொன்ன தவறு வராமல் மீண்டும் சரியாக எடுக்கப்பட்டது.
சிவாஜின்னா சிவாஜிதான்.
தொழில்பக்தின்றது இதுதான்.
சிவாஜி படசீன்ஸ் எல்லாம் பின்னுதுன்னா இதுதான் காரணம்.
இவை ஜனக்கூட்டத்தில் இருந்து வந்து விழுந்த கருத்துக்கள்.
வாழ்நாளின் சிறப்பு மிக்க நாளாக அந்த நாள் அமைந்து விட்டது.
தொடர்ச்சியாக பல காட்சிகள் எங்களூரில் படமாக்கப்பட்டது.ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன் அன்று.
படம்:வீரபாண்டியன்.
பின் குறிப்பு:
அதற்கு முன்னர்1980 கால வாக்கில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் காங்கிரஸ் கூட்டணி பிரச்சாரத்திற்காக பேசியதை கேட்டிருக்கிறேன்.அந்த நாளுக்கு முன்பாக சூளூரில் நடைபெற்ற பொதுக்கூடட் த்தில் பேசியபோது எவனோ ஒருவன் இரும்பு போல்ட் ஒன்றை வீசியதால் தலையில் காயம் ஏற்பட்டுவிட்டது.தலைக்கு கட்டு போட்டு பிங்க் கலர் பைஜாமா வேட்டியில் அவர் பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் பேசியதை மறக்க முடியாது."நான் பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டேன் "என்று கம்பீரமாக பேசியதை தான் மறக்க முடியுமா?
தலைவன் அடிபட்ட சம்பவம் காட்டுத்தீ போல் பரவியது.அந்த நாளிலேதான் சிவாஜியின்மறவர்படை பீளமேட்டிலிருந்து சூளுர் வரை எதிர்முகாமை சேர்ந்தவர்களின் போர்டுகள் மன்றங்கள் ஒன்று விடாமல் சூறையாடப்பட்டன என்பது எங்களுக்கு கிடைத்த செய்தி.மிகப்பெரிய பரபப்பை உண்டு செய்த சம்பவம் அது.
பின் 1988 ஆம் வருடம் தமிழக முன்னேற்ற முண்ணனி யின் பிரச்சாரத்திற்காக வந்த தலைவர் வேனை நிறுத்தி நாங்கள் எங்கள் ஊர் ஜமீன் ஊத்துக்குளியில் வைத்த கொடி கம்பத்தில் கொடியெற்ற வைத்து மாலைகளும் சால்வைகளும் கொடுத்து வழி அனுப்பி வைத்தோம்.அந்த போட்டோவை ஏற்கெனவே நான் பதிவிட்டுள்ளேன்.ஒரு சிறிய கிராமமான ஜமீன் ஊத்துக்குளியில் நாங்கள் வைத்த 60 அடி கொடிகம்பம்தான் பொள்ளாச்சி நகரில் வைக்கப்பட்ட மிகப்பெரிய கொடி கம்பம் அப்போது.அந்த முயற்சி என் அண்ணன் சிவாஜி வெற்றிவேல் அவர்களின் தனிப்பட்ட முயற்சி.
பின் தேவர்மகன்,பசும்பொன் ஷுட்டிங்கில் அவருடன் கலந்து உரையாடியது பசுமையிலும் பசுமையான நினைவுகள்.
தாதா சாகேப் பால்கே விருது பெற்றமைக்காக தஞ்சையில் நடைபெற்ற விழாவுக்கு வந்திருந்த போது சூரக்கோட்டை பண்ணை வீட்டில் ஐந்து அடி தூரத்தில் வைத்து அவரை மட்டும் தனியாக ஒரு பிலிம்ரோல் முழுவதும் பிளாஷ் அடித்து 36 போட்டோக்கள் எடுத்தேன்.அவர் ஏதாவது சொல்வார் என்று பார்த்தேன்.என் ஆர்வம் அவரின் பார்வையில் தெரிந்தது.ஒன்றும் சொல்லவில்லை.
சந்தோசமாக எல்லோரையும் அனுப்பி வைத்தார்.
ஆதவனாரே வருக
அடுத்த பாகத்தை தொடர்க
இன்பமான தரிசனத்தை தருக.
சிவந்த மண் படத்தின் பல தங்க புதையல்களின் நடுவே தொலைந்து விட்ட பிளாட்டின புதையலை பற்றி இந்த பதிவு.பிளாட்டினத்தின் மதிப்பு மக்களுக்கு புரியாததாலோ என்னவோ.
ஒரு நாளிலே உறவானதே
கனவாயிரம் நினைவானதே
வா வெண்ணிலா இசையோடு வா
மழை மேகமே அழகோடு வா
மகராணியே மடி மீது வா
நாளை வரும் "நாளை" என நானும் எதிர்பார்த்தேன்.
காலம் இது காலம் என காதல் மொழி கேட்டேன்
போதை தரும் பார்வை எனை மோதும் அலை மோதும்
போதும் என கூறும் வரை பூவே விளையாடு
வரும் நாளெல்லாம் இது போதுமே
மஞ்சம் இது மஞ்சம் என மார்பில் விழி மூடு
கொஞ்சும் இதழ் சிந்தும் என் நெஞ்சில் ஒரு கோடு .
தஞ்சம் இது தஞ்சம் என தழுவும் சுவையோடு.
மிஞ்சும் சுகம் யாவும் பெற வேண்டும் துணையோடு
வரும் நாளெல்லாம்.இது போதுமே
ஒரு நிர்ப்பந்தமாய் நடந்த காதல் ஜோடியின் நாலு பக்கம் வேடர் சூழ்ந்த நிலையில் (நண்பர் செஞ்சியும்)மானிரெண்டின் காதல்.(மகாராணியின் முதலிரவு கட்டாந்தரையில்).இரவு ஊருறங்கிய பின் குளிக்கும் மனைவியிடம் தாபத்தை கண்ணியமாய் வெளியிடும் புரட்சியாளன்.
காஞ்சனாவின் தாபம் நிறைந்த விழிகளும்,நடிகர்திலகத்தின் காதல் வயப்பட்ட மோவாய் முத்தங்களும்.போதும் என கூறும் வரை அணைத்து,வினாடி கண் சொக்குவாரே !!!!!வரும் நாளெல்லாம் என்று வீணை மாதிரி மடி கிடத்துவாறே (50 ஆவது நாள் போஸ்டர் என நினைவு),மிஞ்சும் சுகம் யாவும் வரிகளில் காஞ்சனாவின் கண்களை பாருங்கள் .வரும் நாளெல்லாம் என மடியில் இரு கால்களை வெவ்வேறு நிலை மடித்து மயக்குவாறே....
புரட்சியாளனின் இயல்பான முடியழகும் ,ஆண்மை நிறைந்த கட்டம் போட்ட சட்டையும்,make -up மிதமாக திராவிட மன்மதனின் இளமை பொங்கும் handsome என படும் ஆணழகும்(அந்த மூக்கு ...அடடா) ,காஞ்சனாவின் நாணம்,தாபம் நிறை பெண்மையும், ஆபாசமில்லாத உறுத்தாத ஈர உடையும் உங்களை வேறு உலகத்துக்கே அனுப்பும்.
நடிகர்திலகத்தின் முதல் ஐந்து காதல்களுக்குள் வரும். நல்ல வேளை ...அசல் திட்ட படி பாலமுரளி இதை பாடவில்லை. டி.எம்.எஸ் -சுசிலாவின் மயக்கும் குரலும் (ரெண்டு பெரும் சௌகரியமான pitch இல் ),எம்.எஸ்.வியின் சாதனை பாடல்களில் ஒன்று.
பார்த்து பார்த்து பார்த்து பார்த்து ,கேட்டு,கேட்டு,கேட்டு,கேட்டு மகிழவும்.
https://www.youtube.com/watch?v=ZNQSCPPTFzc
எங்கள் ஆதவனின் கைவண்ணத்தில் ஒளிரப்போகும் நடிகர்திலகத்தின் 18 வது திரி காண்போர் வியக்க படித்தோர் பரவசமடைய விருந்தினராய் வருபவர்கள் வியப்படைய இப்படி பல தரப்பட்டோர் பயன் பெற மொத்தத்தில் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன்
தங்கள் அன்புள்ள
ராமச்சந்திரன், திருச்சி
மயக்கும் மோகனப் புன்னகையா?
அல்ல அல்ல மயக்கும் மந்திரப் பன்னகை
http://oi65.tinypic.com/2cndyte.jpg
மக்களைபபெற்ற மகராசி படம் தயாரிப்பில் இருந்தபோது நடந்த நிகழ்வுகளைப்பற்றி
ஒருமுறை v k ராமசாமியிடம் கேட்டபோது அவர் சொன்ன வாசகம்
படம் தயாரித்து வெளியாகி வெற்றி பெற்றது வரை சிவாஜியின் பங்குதான் அதிகம்
யாருக்கு உதவினாலும் வெளியே சொல்லாதது அவரின் உயரிய பண்பு.
எனக்கு உதவியதையும் வெளியே சொல்லவிடவில்லை.
வாழ்க...வளர்க சிவாஜி என்றார்.
நடிகர் திலகம் செய்த பல உதவிகள் மறைந்துபோய் கிடக்கின்றன
முத்தையன் சார் மோட்டார் சுந்தரம் பிள்ளை
ஸ்டில்கள் பிரமாதம் நன்றி நன்றி .
Congrats Mr. Adhavan Ravi for going to start next part. Welcome.
Breaking News
சாதனை படைத்தார் சின்ன ஜமீன்!
சென்ற வெள்ளி முதல் இன்று வியாழன் இரவு வரை ஒரு வார காலத்தில் மதுரை சென்ட்ரலில் ஒரு லட்ச ருபாய் வசூலை அள்ளினார் ஆனந்த். பண்டிகை நாட்கள், விசேஷ நாட்கள், விடுமுறை நாட்கள், சிறப்பு தினங்கள் (பிறந்த நாள் போன்றவை) இவை எதுவும் இல்லாத ஒரு வார காலத்தில் ஒரு லட்ச ருபாய் வசூல் செய்திருக்கிறார் என்றால் அதிலும் அதிக பட்ச டிக்கெட் கட்டணமே 30 ரூபாய் எனும்போது என்றென்றும் சாதனை சக்கரவர்த்தி நமது நடிகர் திலகம்தான் என்பதை மீண்டும் ஆணித்தரமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் உறுதிப்படுத்தியிருக்கிறது நான்மாடக்கூடல். வசந்த மாளிகை என்றுமே வசந்த மாளிகைதான் என்பதன் சான்று இது!
ஒரு வார மொத்த வசூல் Rs 1,00,200/- [தோராயமாக]
இந்த சாதனைக்கு உறுதுணையாய் இருந்த அனைத்து நல்லிதயங்களுக்கும் சிரந்தாழ்ந்த நன்றி!
அன்புடன்
https://scontent.fdel1-1.fna.fbcdn.n...51&oe=574E7F64
தகவல். நண்பர் சந்திரசேகர், மதுரை.