-
Ulagam Sutrum Vaaliban (1973)
Randor guy
This film, starring MGR, is one of the biggest box-office hits in the history of Tamil cinema and ran for 25 weeks, not only in India, but also in places like Sri Lanka, U.S, Canada and the United Kingdom. Assisted by Pa. Neelakantan, the film was directed by M. G. Ramachandran himself for his family firm MGR Pictures Private Limited.
This commercial entertainer had several songs and dance numbers featuring both classical Indian and western styles. It also had many fight sequences that were shot abroad in the Far East, with the highlight being the climax which was set in Japan.
Written by R.M. Veerappan, Vidwan Ve. Lakshmanan and S.K.T. Sami, the film had dialogues by K. Sornam.
The story is about Indian scientist Murugan (MGR), who has recently discovered how to store a part of the energy unleashed by lightnings, and reports this in theHong Kong scientists conference. He subsequently announces that he would not reveal his discovery, as the world is on the brink of World War III and his research may be used for destructive purposes.
Scientist Bairavan (S.A. Asokan) accuses Murugan of false claims. Murugan then conducts a demonstration, and at the end of it, destroys the vital research notes, which upsets all the scientists. Bairavan tries to negotiate with him to sell the research to a foreign country, but Murugan refuses.
Murugan then departs with his girlfriend, Vimala (Manjula) on a world tour. He discloses to Vimala that he only pretended to destroy the research notes, and that he has kept them in a safe place. He has plans of using them further, so that his research is used for productive purposes. Bairavan, who has been following them, overhears this, and plans to steal the research notes.
While in Singapore, Bairavan shoots Murugan but he does not die. Murugan, however, suffers from a mental disorder as a result and is subsequently taken into Bairavans custody.
Soon, Vimala too is abducted by Bairavan, who expects the former to cure Murugan, so he can steal the research documents.
Raju (MGR), a CBCID officer and Murugans younger brother, arrives in Singapore in search of his brother. Here, he meets a classic dancer (Chandrakala), who soon falls in love with him. The secret research documents are hidden in a locket; all the villains go after it, but nobody succeeds. Two guys (Asokan and Gopalakrishnan) even try to kill MGR with their own brand of weapons, but are finally killed by the same arms.
The films melodious music, composed by maestro M.S. Viswanathan (aided by Joseph Krishnas orchestration), was a major highlight. There are as many as 15 songs, with many of them not finding a place in the movie. The lyrics were written by Kannadasan, Vaali, Pulavar Vedha and Pulamaipithan. The songs were rendered by S. P. Balasubrahmanyam, K. J. Yesudas, Sirgazhi Govindarajan, P. Susheela, S. Janaki, L. R. Eswari and some unnamed Japanese singers.
-
-
-
http://i67.tinypic.com/9apqu9.jpg
உடம்பு சரியில்லா விட்டாலும் கடைசி வரைக்கும் உழைக்கும் கரங்களுக்கு சொந்தக்காரர் நமது தெய்வம்.
-
http://i63.tinypic.com/jpkndt.jpg
உடம்பு சரியில்லா விட்டாலும் கடைசி வரைக்கும் உழைக்கும் கரங்களுக்கு சொந்தக்காரர் நமது தெய்வம்.
-
http://i68.tinypic.com/11awj6q.jpg
உடம்பு சரியில்லா விட்டாலும் கடைசி வரைக்கும் உழைக்கும் கரங்களுக்கு சொந்தக்காரர் நமது தெய்வம்.
-
http://i66.tinypic.com/eir0uw.jpg
உடம்பு சரியில்லா விட்டாலும் கடைசி வரைக்கும் உழைக்கும் கரங்களுக்கு சொந்தக்காரர் நமது தெய்வம்.
-
http://i1170.photobucket.com/albums/...psmxzlqemj.jpg
இடம் : கோவில்பட்டி
இப்படியும் ஒரு பிழைப்பு. கேவலம். தூ
நன்றி : பேஸ்புக்
-
-
-
மக்கள் திலகத்தின் தீர்க்க தரிசனம்
அரசியல்வாதிகளின் அநீதிகளை மக்களுக்கு எடுத்துக்காட்டியவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
1969ல் வெளிவந்த நம்நாடு படத்தில் இடம் பெற்ற வசனங்கள் , காட்சிகள் என்றென்றும் எல்லோருக்கும் பொருத்தமானதாக இருப்பது மூலம் மக்கள் திலகத்தின் தீர்க்க தரிசனம் அறிய முடிகிறது .
https://youtu.be/1RxyvmUxYIE
-
http://i68.tinypic.com/2q0sf7l.jpg
உலகம் சுற்றும் வாலிபன் - பட வேலைகள் நிறைவு பெற்று இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் உலகம் சுற்றும் வாலிபன் வெளியீடு பற்றிய விரிவான தகவல்கள் அறிவிக்கப்படும் என்று திரு நாகராஜன் கூறினார் .
-
உழைப்பாளிகள் எல்லோர்க்கும்
உழைப்பாளர்கள் தின
நல்வாழ்த்துக்கள்
கல்லை கனியாக்கும் மாற்றும் தொழிலாளி கவனம் ஒரு நாள் திரும்பும்.
அதில் நல்லவர் வாழும் புதிய சமுதாயம் நிச்சயம் ஒருநாள் மலரும்!!
உழைக்கும் கைகளே!!
உருவாக்கும் கைகளே !!
உலகை புது முறையில் உண்டாக்கும்
கைகளே ...!
உழைப்பவரே!! உயர்ந்தவர்!!
நமது இதயதெய்வத்தின் பொன்மொழிகள்
http://i1170.photobucket.com/albums/...psjdu22pyd.jpg
-
-
-
2016 தேர்தல் களத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் .
எல்லோருக்கும் சொந்தம் எம்ஜிஆர் .
அனல் பறக்கும் தேர்தல் கூட்டங்களிலும் , ஊடகங்கள் நடத்தும் விவாத மேடைகளிலும் , மக்கள் மன்ற பட்டி மன்றங்களிலும் , புரட்சித்தலைவர் எம்ஜிஆர் . பெயரை குறிப்பிட்டு அவருடைய அரசியல் சாதனைகளை பற்றி அதிமுக மற்றும் இதர கட்சிகள் பேசுகிறார்கள் .
-
ஒரு மாமனிதர் இருந்தார்!
கோடை காலம் விடை பெற்றுக் கொண்டிருந்த ஒரு ஜூலை மாதம் அது…
கல்லூரியின் இளங்கலை வகுப்பில் அப்போதுதான் அடியெடுத்து வைக்கிறார்கள் அந்த மாணவர்கள்.
கல்லூரியைப் பற்றியோ அந்த கடற்கரைச் சாலை பற்றியோ எந்த விவரமும் தெரியாத கிராமத்து மாணவர்கள்…
கல்லூரி அலுவலகத்தில் சேர்க்கைக் கட்டணம் செலுத்தப் போனபோது, திடீரென்று கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்கள்.
அழைப்புக் கடிதத்தில் சொன்னதைவிட 400 ரூபாய் அதிகம். அது ஒரு பெரிய தொகைதான். ஊருக்குப் போய் வாங்கி வந்தால்தான் உண்டு. மணியார்டர் அனுப்பச் சொல்லாம் என்றாலும், முகவரி கிடையாது.
கலங்கி நின்ற அனைவரையும் ஒன்று திரட்டினர் சிலர். ‘முதல்வரைப் பார்க்கப் போகலாம் வாருங்கள்’ எனப் புறப்பட்டனர். கல்லூரி முதல்வரையல்ல… கருணையின் அடையாளமான தமிழக முதல்வர் எம்ஜிஆரை!
20 மாணவர்கள் சென்றார்கள் தலைமைச் செயலகத்துக்கு. வாயிலில் இருந்த இரு காவலர்கள்தான் முதல்வர் அறையைக் காட்டினர். மெட்டல் டிடெக்டர் சோதனையெல்லாம் கிடையாது. மனித நேயத்தின் உணர்வுகள் தெரியாத கருவிகளின் பாதுகாப்பு தேவை இருக்கவில்லை அப்போது.
அட, ‘முன் அனுமதி வாங்கினீர்களா?’ என்றுகூட மாணவ்ரகளிடம் யாரும் கேட்கவில்லை.
முதல்வரின் உதவியாளர் அந்த மாணவர்களில் நால்வரை மட்டும் முதல்வரின் அறைக்குள் அனுமதித்தார்.
எதிரியையும் தன் வசப்படுத்தும் அசாத்தியப் புன்னகையோடு அந்த மாமனிதர், மாணவர்களை வரவேற்றார். அவரால் சரியாக பேச முடியாத காலகட்டம் அது. பக்தர்களிடம் என்ன மொழியில் பேசுகிறார் கடவுள்… அந்த மாமனிதரும் அப்படித்தான். எத்தனையோ லட்சம் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கண் திறந்த ஆண் சரஸ்வதி அவர்.
மாணவர்கள் கண்ணீருடன் சொன்னதைக் கருணையுடன் கேட்டவர்… சற்று தடுமாறியபடி சொன்ன வார்த்தை, ‘நல்லா படிக்கணும்… வகுப்புக்குப் போங்க. நான் பார்த்துக்கறேன்..!’
எழுந்து வந்து தோளில் கையை வைத்து, தேவ ஆசி மாதிரி கூறினார்.
அந்த வார்த்தைகள் இப்போதும், காதுகளில் ஒலித்தபடி இருக்கின்றன… நினைக்கும் போதெல்லாம் நெகிழ்வில் கண்களை நீர் முத்துகள் மறைக்கின்றன.
அந்த அறையை விட்டு வெளியில் வந்த சில வினாடிகளில் முதல்வரின் உதவியாளர் மீண்டும் வந்தார்.
‘போகும்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரைப் பார்த்துவிட்டுப் போங்கப்பா… முதல்வர் உத்தரவு போட்டுட்டார்… கவலைப்படாம பத்திரமா கல்லூரிக்கு போகச் சொன்னார்…’ என்றார்.
தலைமைச் செயலகத்திலிருந்து எழிலகம் செல்வதற்குள் உத்தரவு தயாராக இருந்தது.
‘அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் ரத்து… முதல்வர் எம்ஜிஆர் உத்தரவு!!’
நம்பினால் நம்புங்கள்… இந்த உத்தரவுக்குப் பின் கல்லூரிக்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கட்டிய தொகை வெறும் ரூ.65 மட்டும்தான். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கட்டியது ரூ.15!!
அந்த ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் உதவித் தொகையை உயர்த்தி படிப்புச் செலவு குறித்த கவலையின்றி படிக்கும் வகை செய்தார்…
பொதுவாகவே பெயருக்கு முன்னாலும் பின்னாலும் பட்டங்களையும் படிப்புகளையும் சுமந்து கொண்டே திரியும் வழக்கம் பிடிக்காதவன் நான். எம்ஜிஆர் பார்க்காத பட்டமா…
ஆனால் இப்போது நிச்சயம் அவற்றை என் பெயருக்கு முன்னாலும் பின்னாலும் போட்டுக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்…
ஏன் தெரியுமா?
இந்த நாட்டின் அடையாளம் காணப்படாத ஒரு குக்கிராமத்தில், ஏழ்மையில் பிறந்தவனும்கூட, சர்வதேச பொருளாதாரத்தில் பிஎச்டி பட்டம் வாங்குமளவுக்கு படிக்க முடியும். அதற்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கத்தாலேயே செய்து தர முடியும் என்ற நிலையினை முதலில் உருவாக்கிக் கொடுத்தவர் எம்ஜிஆர்தான்!
இன்றைய உயர் அதிகாரிகளில் பலர் அப்படிப் படித்து ஐஏஎஸ் ஆனவர்கள்தான்… மருத்துவர்களில் பலர் வெறும் 1200 ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்தி எம்பிபிஎஸ் படித்தவர்கள்தான்… முனைவர் பட்டம் பெற்று கல்லூரிகளில் ‘ஆதிக்கம்’ செலுத்தும் பல பேராசிரியர்களுக்கும் கல்விக் கண் திறந்த வள்ளல், இரண்டாம் வகுப்பு கூட படிக்காத அந்த மாமேதைதான்… நிஜமாகவே பாரதத்தின் ஒப்பற்ற ரத்தினம் அவர்.
வாழ்க நீ எம்மான்…!
courtesy டாக்டர் எஸ்.சங்கர் M.A., M.Phil., Ph.D.
net- envazhi
-
மதுரை சென்ட்ரல் சினிமாவில் கடந்த வாரம் வெளியாகி 6 நாட்கள் ஓடிய
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் :"மதுரை வீரன் " வசூல் வேட்டை
ரூ.81,000/-
http://i64.tinypic.com/i4e5ps.jpg
குறிப்பு: திரை அரங்க நிர்வாகிகளில் ஒரு பங்குதாரர் மறைவையொட்டி ஒரு நாள்
(4 காட்சிகள் ) ரத்து செய்யப்பட்டன .
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார்.
-
தினமணி நாளிதழில் ''நினைவலைகள் '' என்ற தலைப்பில் பல அரசியல் தலைவர்கள் , முன்னாள் சட்ட மன்ற , பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய அந்த கால தேர்தல்[1957,1962,1971, 19771980] அனுபவங்களை கூறும் போது மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் செய்த உதவிகள் , நன்கொடைகள் தொடர் பிரச்சாரங்கள் பற்றி மறக்காமல் குறிப்பிடுகிறார்கள் .
-
எம்ஜிஆர் 100 | 56 - கேட்காமலேயே கொடுத்தவர்!
m.g.r. சொந்தமாக மூன்று படங்களை தயாரித்தார். நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய இரண்டு படங்களை அவரே இயக்கினார். மற்றொரு படமான அடிமைப் பெண் படத்தை அவர் இயக்கவில்லை. தானே சிறந்த இயக்குநராக இருந்தும் தனது சொந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை வேறு இயக்குநருக்கு கொடுத்தார். அந்தப் பெருமையைப் பெற்றவர் இயக்குநர் கே.சங்கர்.
நல்லவன் வாழ்வான் படப்பிடிப்பு மெஜஸ்டிக் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருந்தபோது, முதன்முத லாக எம்.ஜி.ஆரை சந்தித்தார் கே.சங்கர். தான் பணியாற்றிய படங்களைப் பற்றி கே.சங்கர் கூறினார். ஒவ்வொரு படத்திலும் சிறந்த காட்சிகளையும் ஷாட்களையும் குறிப்பிட்டு எம்.ஜி.ஆர். பாராட்ட, இந்த அளவுக்கு தனது படங்களை கவனித்திருக்கிறாரே என்று வியந்துபோனார் கே.சங்கர்.
ஜி.என்.வேலுமணி தயாரிப்பில் தான் நடித்த பணத்தோட்டம் படத்தை கே.சங்கர் இயக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விரும்பினார். சங்கர் அதுவரை எம்.ஜி.ஆர். பாணியிலான படங்களை இயக்கியதில்லை. இந்த தயக்கத்தால், கதையை காரணம் காட்டி படத்தை தட்டிக் கழிக்க விரும்பினார். ஆனால், கதையை மாற்றும்படி எம்.ஜி.ஆர். கூறிவிட்டதால், கள்ள நோட்டு பிரச்சினையை மையமாக வைத்து 18 நாட்களில் தயாரிக்கப்பட்டது பணத்தோட்டம் படம்.
எம்.ஜி.ஆர். படங்களில் வேலை செய் தால் நிறைய குறுக்கீடுகள் இருக்கும். தொந்தரவுகள் இருக்கும் என்று படவுல கில் பயமுறுத்தியிருந்தார்கள். ஆனால் அது உண்மையல்ல. அவர் நல்ல ரசிகர். ஒவ்வொரு காட்சியையும் கேமரா கோணத்தில் கண்டு மகிழ்வார் என்று சங்கர் பின்னர் தனது அனுபவத்தைக் குறிப்பிட்டார். பணத்தோட்டம் பட வெற்றிக்குப் பின், சங்கரிடம் எம்.ஜி.ஆர். , என் படத்தை டைரக்ட் செய்யத் தயங்கி னீர்களே? இப்போது என்ன சொல்கிறீர் கள்? என்று கேட்டார். அதற்கு சங்கரின் பதில், என்னை மன்னித்து விடுங்கள்.
பின்னர், கலங்கரை விளக்கம், சந்தி ரோதயம், குடி யிருந்த கோயில், உழைக்கும் கரங் கள், பல்லாண்டு வாழ்க, இன்று போல் என்றும் வாழ்க என்று இரு வர் கூட்டணியில் வெற்றிப் படங்கள் வந் தன. தனது சொந்தத் தயா ரிப்பான அடிமைப் பெண் படத்தை இயக்கும் வாய்ப்பை சங்க ருக்கு எம்.ஜி.ஆர். கொடுக்கும் அளவுக்கு இருவரின் நட்பும் பலப்பட்டது. படத்தை ஜெய்ப்பூரில் எடுக்கலாம் என்று யோசனை சொன்னதே சங்கர்தான். அதை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார்.
சாதாரணமாகவே எம்.ஜி.ஆர். செலவு செய்வார். தனது சொந்தப் படம் என் றால் கேட்கவே வேண்டாம். படத்துக்காக மட்டுமின்றி, படப்பிடிப்புக் குழுவினருக் கும் எந்த குறையும் வைக்காமல் தாராள மாக செலவு செய்தார். பாலைவனப் பகுதியில் குடிநீர் கிடைப்பது கஷ்டம் என்பதால் கோக கோலா வேனையே கொண்டுவந்து நிறுத்தினார்.
ஜெய்ப்பூர் அரண்மனையில் ஆறா வது மாடியில் உள்ள மன்னரின் அறையில் காட்சிகளை படமாக்கினால் நன்றாக இருக்கும். ஆனால், தரையில் உள்ள விரிப்புக்கு பதிலாக சன்மைக்கா பதித்து காட்சிகளை எடுத் தால் சிறப்பாக இருக்கும் என்பது சங்கரின் யோசனை. சன்மைக்கா அறிமுக மான சமயம் அது. எம்.ஜி.ஆர். உடனே, டெல் லிக்கு ஆள் அனுப்பி விமானம் மூலம் சன்மைக்காவை வரவழைத்தார். அந்த நாளிலேயே அதன் மதிப்பு ரூ.40 ஆயிரம். படத்தின் காட்சிகள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, அரண்மனை யில் தன் செலவிலேயே சன்மைக்காவை பதித்துவிட்டார் எம்.ஜி.ஆர்.! ஆயிரம் நிலவே வா
பாடலின் இறுதியில் வரும் காட்சிகள் அந்த அறையில்தான் படமாக்கப்பட்டன.
கலங்கரை விளக்கம் படத்தின் படப் பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, தன் மகளுக்கு வரன் பார்த்து வரும் விஷ யத்தை எம்.ஜி.ஆரிடம் சங்கர் சொன்னார். கல்யாண வயதில் உங்களுக்கு மகள் இருக்கிறாளா? கொஞ்சம் இருங்கள் என்று கூறிய எம்.ஜி.ஆர்., உடனே தனது அண்ணன் சக்ரபாணிக்கு போன் செய்து, சங்கரின் பெண்ணை நம்ம ராமுவுக்கு (சக்ரபாணியின் மகன் ராம மூர்த்தி) பார்த்தால் என்ன? என்று கேட் டார். சங்கருக்கோ தயக்கம் ஒருபக்கம், மகிழ்ச்சி மறுபக்கம். சார் ஏன் அவசரப் படுறீங்க? என்றார்.
அதற்கு, ராமுவை நான் வளர்த்து படிக்க வைத்தேன். அவன் என் பையன். அவனுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார். சங்கர் அவரது சம்பந்தியானார். ஐயப்ப பக்த ரான சங்கர், எம்.ஜி.ஆர். படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது மட்டு மின்றி, அவருக்கே சம்பந்தியாக என்னை ஆக்கியது ஐயப்பனின் கருணை என்று சிலிர்த்துப் போனார்.
இன்றுபோல் என்றும் வாழ்க படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மணிப்பாலில் நடந்தது. அந்த சமயத்தில் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோயி லுக்கு முதன்முதலில் எம்.ஜி.ஆரை சங்கர் அழைத்துச் சென்றார். கோயிலுக்கு பின்புறம் சங்கரபீடம் இருக்கிறது. அங்கே தான் ஆதிசங்கரர் தவம் செய்து பின்னர், மூகாம்பிகையை பிரதிஷ்டை செய்தார். சிறப்பு அனுமதி பெற்று சங்கரபீடத்தின் உள்ளே எம்.ஜி.ஆர். தனிமையில் தியானம் செய்ய சங்கர் ஏற்பாடு செய்தார். ஒரு மணி நேரத் துக்கு பின் வெளியே வந்த எம்.ஜி.ஆர்., நிம்மதியாக இருந்த இந்த தருணத்தை வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்று கூறியிருக்கிறார்.
சங்கர் வீட்டில் மற்றொரு திருமணத் தின்போது, அவருக்கு பண உதவி செய் வதாக கூறியவர்கள் கடைசி நேரத்தில் கைவிட்டனர். திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்தது. அது முடிந்தவுடன் வேலை செய்தவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். என்ன செய்வ தென்று தெரியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருந்தார் சங்கர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்., மணமக்களை வாழ்த்திவிட்டு சங்கர் கையில் இரண்டு பாக்கெட்களை திணித்தார். அவற்றில் சங்கருக்குத் தேவையான பணம் இருந்தது.
சங்கர் நெகிழ்ந்து கூறினார்: மகாபார தக் கர்ணன்கூட கேட்டவர்களுக்குத்தான் கொடுத்தான். கேட்காமலேயே மற்றவர் களுக்கு கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.!
பிறருக்கு உதவும் குணமும் மொழி, இன, மாநில எல்லைகளைத் தாண்டி மக்களின் துயரைத் துடைக்க உதவும் மனப்பான்மையும் எம்.ஜி.ஆரின் உடன்பிறந்தவை. அடிமைப் பெண் படப்பிடிப்புக்காக அவர் ராஜஸ்தான் சென்றபோது, அங்கு கடும் வறட்சி. மாநில அரசிடம் வறட்சி நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரத்தை எம்.ஜி.ஆர். அளித்தார்.
-
-
-
-
5.5.1977
மக்கள் திலகத்தின் ''இன்று போல் என்றும் வாழ்க'' இன்று 39 ஆண்டுகள் நிறைவு தினம் . 1977 சட்ட சபை தேர்தல் நேரத்தில் வெளிவந்த வெற்றி காவியம் .
-
எம்ஜிஆர் 100 | 57 - ஏவுகணைகளையே ஏணிப்படிகளாக்கியவர்!
M.G.R. தன் மீது வீசப்பட்ட ஏவுகணைகளையே ஏணிப்படிகளாக்கி வெற்றி கண்டவர். இயற்கையாக ஏற்பட்ட தடைகள் மட்டுமின்றி, செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட தடைக் கற்களையும் படிக்கற்களாக்கி உயர்ந்தவர். ஒரு காலகட்டத்தில் அவரது படங்களின் ரிசர்வேஷன் சாதனைகூட, படத்துக்கு சிக்கலையும் கெடுபிடியையும் ஏற்படுத்தின.
பேரறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திமுக- வில் எம்.ஜி.ஆர். இணைந்தார். திமுக-வில் அவர் சேர்ந்தபோது, அது தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியல்ல. 1956-ம் ஆண்டு திருச்சியில் நடந்த மாநாட்டில் தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, அவர்கள் விருப்பப்படி 1957-ம் ஆண்டில்தான் திமுக தேர்தலில் போட்டி யிட்டது. அப்போது, காங்கிரஸ்தான் ஆளும் கட்சி. அதனால், எந்த லாப நோக்கத்தோடும் திமுகவில் எம்.ஜி.ஆர். சேரவில்லை. சொல்லப்போனால், அன்றைய சூழலில் திமுகவில் இருந்ததால் அவருக்கு இழப்புகளும் சோதனைகளும்தான் அதிகம். அவரது படங்களுக்கு சென்சாரின் பிடி இறுகும். புராணப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தபோது, திமுகவின் கொள்கைகளை மனதில் கொண்டு அந்த வாய்ப்புகளை எம்.ஜி.ஆர். நிராகரித்தார்.
1959-ம் ஆண்டில் நாடகத்தில் நடித்தபோது அவருக்கு காலில் மிகக் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். இனிமேல் அவரால் நடிக்க மட்டுமல்ல; நடக்கவே முடியாது என்றனர். ஆனால், நடக்காது என்பது எம்.ஜி.ஆரின் வாழ்வில் நடக்காது. வெற்றிகரமாக மீண்டு முன்பை விட வேகமாகவும் வலிமையோடும் சண்டைக் காட்சிகளில் நடித்தார். 1967-ம் ஆண்டு துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின், அவர் உயிர் பிழைத்திருக்கலாம்; ஆனால், சினிமா வாழ்வு முடிந்தது என்றனர். அதைப் பொய்யாக்கி சினிமாவில் ஏற்கனவே இருந்த சாதனைகளை முறியடித்தார்.
அப்படி, ரிசர்வேஷனிலேயே சாதனை படைத்த படம் இதயக்கனி. 1950-களில் தியேட்டர்களில் அலங்காரம், கொடி, தோரணங்கள், கட் அவுட்கள், ரசிகர்களின் கொண்டாட்டங்கள் ஆகியவை எம்.ஜி.ஆர். படங்களில் இருந்துதான் முதலில் ஆரம்பித்தன. எம்.ஜி.ஆர்.படங்களை பார்க்க ரிசர் வேஷனுக்கு முதல் நாள் இரவில் இருந்தே தியேட்டர்களில் ரசிகர்கள் காத்திருந்த அதிசயமும் நடந்தது.
இதயக்கனி திரைப்படம் சென்னையில் மட்டும் ரிசர்வேஷனிலேயே மூன்றே நாட்களில் வசூல் ரூ.90 ஆயிரத்தைத் தாண்டியது. அந்த நாட்களில் ஒரு டிக்கெட் விலை எவ்வளவு என்று தெரிந் தவர்களுக்கு, இந்த 90 ஆயிரம் வசூல் எத்தகைய சாதனை என்பது புரியும். அதுவரை இல்லாத இந்த சாதனையை, படத்தை தயாரித்த ஆர்.எம்.வீரப் பன், தி இந்து ஆங்கில நாளிதழில் விளம்பரமாக வெளியிட்டார். அந்த விளம்பரம் இங்கே இடம் பெற்றுள்ளது. அந்த விளம்பரமே படத்துக்கு சோதனையை ஏற்படுத்தியது. அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கி மக்களின் ஆதரவோடு கட்சி வேகமாக வளர்ந்து வந்த நேரம் அது. படத்துக்கு கெடுபிடி தொடங்கியது.
உண்மையிலேயே அவ்வளவு டிக்கெட்கள் முன்பதிவு ஆகியிருக்கிறதா? என்று வணிகவரித் துறை அதிகாரிகள் படம் வெளியாக இருந்த தியேட்டர்களை கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கினர். படம் பார்க்க வரும் மக்கள் மிரண்டு திரும்பிப் போகும் அளவுக்கு டிக்கெட் கவுன் டர்களுக்கு வெளியே பலமான கண்காணிப்பு களும் கட்டுப்பாடுகளும் போடப்பட்டன. தியேட் டர்களின் அலுவலகத்திலும் கெடுபிடிகள். இவ்வளவையும் தாண்டி இதயக்கனி படம் அபார வெற்றி பெற்றது. சென் னையில் சத்யம் தியேட்டரில் முதன்முதலில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையையும் பெற்றது இதயக்கனி.
உலகம் சுற்றும் வாலிபன் படம் சென்னையில் தேவி பார டைஸ் அரங்கில் ரிசர்வேஷனின் போதே, 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைவது உறுதியாகிவிட்டது. அந்தப் படம் வெளியாவதற்குள் எத் தனையோ இடையூறுகள். 2014-ம் ஆண்டு செப்டம்பர் 14-ல் தி இந்து தமிழ் நாளித ழில், உலகம் சுற்றிய வாலிபன் தூத்துக்குடிக்கு வந்த கதை என்ற கட்டுரை வெளியானது. அதில், பஸ் இன்ஜின் உள்ளே பாதுகாப்பாக மறைத்து ரீல் பெட்டியை தியேட்டருக்குள் கொண்டு சென்ற செய்தி இடம் பெற்றது நினைவிருக்கலாம்.
கெடுபிடிகள் காரணமாக, போஸ்டர்கூட ஒட்டப்படாமல் படம் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடி, எம்.ஜி.ஆர். வசூல் சக்கரவர்த்தி என்பதை உலகம் சுற்றும் வாலிபன் நிரூபித்தது. படத்துக்கான பணிகள் நடக்கும்போது அடிக்கடி மின்தடை ஏற்படும். அதை எல்லாம் எம்.ஜி.ஆர். சமாளித்தார். அந்த நெருக்கடியிலும் நண்பரின் பிள்ளைகளுக்காக படத்தை அவரது வீட்டுக்கே அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.!
படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஏ.பி.நாகராஜன், உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்துவிட்டு, தனது மகன்கள் வெங்கடசாமி, பரமசிவம் ஆகியோரிடம் படத்தின் சிறப்புகளை தெரிவித் தார். அவர்களுக்கு உடனடியாக படம் பார்க்க ஆசை. தியேட்டருக்குச் சென்றால் படத்துக்கு டிக்கெட் கிடைக்காது என்பதால் எம்.ஜி.ஆரைத் தொடர்பு கொண்ட ஏ.பி.நாக ராஜன், தனது மகன்களுக்காக இரண்டு டிக்கெட்களை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனால், ஏ.பி.நாகராஜனின் மகன்களுக்காக படத்தின் பிரின்ட்டையே எம்.ஜி.ஆர். அனுப்பிவைத்தார். படத்தை பார்த்துவிட்டு உடனடியாக அவற்றை பல்லாவரம் லட்சுமி திரையரங்கிற்கு அனுப்பி வைத்துவிடும்படி கூறினார். உருகிவிட்டார் ஏ.பி.நாகராஜன். இத்தனைக்கும் அவர் அதுவரை எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்தது இல்லை.
திமுகவின் முக்கிய பிரமுக ராக விளங்கிய மதுரை முத்து, உலகம் சுற்றும் வாலிபன் வெளியானால் புடவை கட்டிக் கொள்கிறேன் என்றுகூட சவால்விட்டார். படம் வெளியான பிறகு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அவருக்கு புடவைகளை பார்சலில் அனுப்பி வைத்தனர். இங்கே எம்.ஜி.ஆரின் பெருந்தன்மைக்கு ஒரு உதாரணம். பின்னர், அதே மதுரை முத்து அதிமுகவில் சேர்ந்தபோது அவரை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டதோடு, மதுரை மாநகராட்சி மேயராகவும் ஆக்கினார்.
எதிரிகளையும் நண்பர்களாக்கி, சோதனை களை சாதனைகளாக மாற்றியவர் எம்.ஜி.ஆர்.!
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் அதுவரை வெளியான தமிழ் படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது. எம்.ஜி.ஆர். திரையுலகில் இருக்கும் வரை அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, சென்னை தேவி திரையரங்கில் 1970-ல் வெளியான மெக்கனாஸ் கோல்ட் (Mackennas Gold) ஆங்கிலப் படம்தான் அதுவரை இந்தியாவில் ஒரே திரையரங்கில் அதிக நாள் ஓடியதில் அதிக வசூல் செய்த படமாக இருந்தது. அந்த சாதனையையும் தேவி பாரடைஸ் அரங்கில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் முறியடித்தது.
-
திரு முத்தையன் அவர்களுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
-
எம்ஜிஆர் 100 | 58 - நடனக் கலைஞர்!
எம்ஜிஆர் நடனக் காட்சிகளில் தூள் கிளப்புவார். அவரது ஆட்டத்தில் புயலின் வேகமும் தென்றலின் சுகமும் இருக்கும். திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களையும் ஆடவைப்பது அவரது ஆட்டத்தின் சிறப்பு.
‘மதுரை வீரன்’ படத்தில், ‘ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா?...’, ‘ராஜா தேசிங்கு’ படத்தில், ‘கானாங்குருவி காட்டுப் புறா...’ ஆகிய பாடல்களில் பத்மினியுடன் எம்.ஜி.ஆர். ஆடும் நடனங்கள், ‘மன்னாதி மன்னன்’ படத்தில் பத்மினியுடன் ஆடும் போட்டி நடனம், ‘கலங்கரை விளக்கம்’ படத்தில், ‘பல்லவன் பல்லவி பாடட் டுமே…’ பாடலில் அவரது பரத நாட்டிய அபிநயங் கள், ‘மீனவ நண்பன்’ படத்தில், ‘பட்டத்து ராஜாவும்…’ பாடலுக்கு அவர் போடும் ஸ்டெப்ஸ் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
சுருக்கமாக, படங்களில் எம்.ஜி.ஆர். ஆடிய எல்லா நடனக் காட்சிகளுமே ‘டாப்’ என்று சொல்லிவிடலாம். என்றாலும், இரண்டு நடனக் காட்சிகள் ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாதவை. ‘அன்பே வா’ படத்தில் ‘நாடோடி, நாடோடி…’ பாடலிலும், ‘குடியிருந்த கோயில்’ படத்தில் ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு…’ பாடலிலும் அமர்க்களப்படுத்தியிருப்பார்.
எம்.ஜி.ஆரின் மிகப் பெரிய பலமே தனக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் அடக்கத்தோடு இருப் பதுதான். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரைப் பார்த்து நடிகை பத்மபிரியா, ‘‘உங்களை தாழ்த்திக் கொண்டே உயர்ந்து விடுகிறீர்கள்’’ என்று கூறுவார். இந்த வசனம் எம்.ஜி.ஆருக்கு முற்றிலும் பொருந் தும். வழக்கம் போல, தனது இந்த அடக்க குணம் காரணமாக முதலில் ‘அன்பே வா’ படத்தின் பாடலுக்கு ஆட எம்.ஜி.ஆர். மறுத்துள்ளார்.
இயக்குநர் திருலோகசந்தரை எம்.ஜி.ஆர். அழைத்து, ‘‘நாடோடி, நாடோடி… பாடலுக்கு நவீன ஆங்கில இந்திய ‘கதக்’ பாணி களில் நடன அசைவுகளை நடன இயக்குநர் சோப்ரா அமைத்துள்ளார். என் னால் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். யாராவது நடனக்காரப் பையனை ஆடச் சொல்லி படமாக்கிவிடுங்கள். என் ‘குளோஸ் அப்’களை அங் கங்கே சேர்த்துக் கொள்ள லாம்’’ என்றார்.
ஆனால், திருலோகசந்தருக்கு எம்.ஜி.ஆரின் திறமை தெரியும். இருந்தாலும் எம்.ஜி.ஆர். சொல்லும்போது உடனே மறுத்தால் மரியாதை இல்லை என்பதால் அப்போதைக்கு சரி என்றார். அவர் சொன்னபடியே, ஒரு இளைஞரை வைத்து நடனக் காட்சியில் சில ஷாட்களை எடுத்தார். அவர் மனதில் வேறொரு திட் டம் இருந்தது. பின்னர், பாடல் காட்சியை படமாக்க வேண்டிய நாள் வந்தது. திருலோகசந்தரிடம் எம்.ஜி.ஆர். ‘‘அந்த இளைஞர் ஆடிய நடனக் காட்சிகளைப் பார்க்கலாமா?’’ என்றார்.
திருலோகசந்தர் ஏற்கெனவே போட்டு வைத்திருந்த திட்டப்படி, ‘‘எடிட்டர் ஊரில் இல்லை. அந்த ஷாட்களை எங்கே வைத்திருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நான் படமாக்கிய காட்சிகள் நினைவில் இருக்கின்றன. இப்போது உங்களை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்துவிடுவோம்’’ என்றார்.
திருலோகசந்தரும் நடன இயக்குநர் சோப்ரா வும் கேமராமேன் மாருதி ராவும் ஏற்கெனவே பேசி வைத்துக் கொண்டபடி வேலையைத் தொடங் கினர். எம்.ஜி.ஆர். அட்டகாசமாக ஆடினார். ‘ட்விஸ்ட் டான்ஸ் பாருங்கள்..’ என்று அந்தப் பாடலில் வரும் வரியின்போது அதற்கேற்ற மூவ்மென்ட்களை ஊதித் தள்ளினார். பாடலுக்கு ஆடிய நடனக் கலைஞர்கள் உட்பட யூனிட்டில் இருந்த எல்லோரும் அசந்து போய் நின்றனர்.
பின்னர், எம்.ஜி.ஆரிடம் திருலோகசந்தர் உண் மையைக் கூறி, ‘‘இளைஞர் ஆடிய ஷாட்களை பார்க்கிறீர்களா?’’ என்று கேட்டு போட்டுக் காட்டினார். எம்.ஜி.ஆர். ஆடியதில் பத்தில் ஒரு பங்கு கூட அந்த இளைஞர் ஆடவில்லை என்பது தெரிய வர, திருலோகசந்தரின் தோளைத் தட்டி, சிரித்தபடியே எம்.ஜி.ஆர். எழுந்துவிட்டார்.
இதேபோலத்தான், ‘குடியிருந்த கோயில்’ படத் தில், ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு...’ பாடலுக்கும் நடனமாட முதலில் எம்.ஜி.ஆர். மறுத்தார். பாடலில் அவருடன் கூட ஆடுபவர் எல்.விஜயலட்சுமி என்ற நடிகை. மிகப்பெரிய டான்ஸர். ‘பஞ்சாப் பாங்க்ரா’ நடனக் காட்சி இடம் பெற்ற பாடல் அது. ‘‘மூவ் மென்ட் தவறினால் தப்பா இல்ல ஆயிடும்’’ என்று எம்.ஜி.ஆர். தயங்கினார். ‘‘அண்ணே, உங்க திறமை எனக்குத் தெரியும். டான்ஸ் மாஸ்டர் சொல்றதை அப்படியே நீங்க ஆடணும்னு இல்லை. உங்களுக்கு பிடிக்கலைன்னா அப்புறம் தூக்கிடுவோம்’’ என்றார் இயக்குநர் கே.சங்கர்.
நடனத்துக்காக பயிற்சி எடுத்துக் கொண்டு மிகச் சிறப்பாக ஆடி முடித்தார் எம்.ஜி.ஆர்.! இன்றும் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் பாடல் காட்சி அது. அதன் பின்னர், பல படங்களிலும் ‘பஞ்சாப் பாங்க்ரா’ நடனக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்றாலும், எம்.ஜி.ஆரின் நடனம் போல அமையவில்லை.
‘இதயக்கனி’ படத்தில் ‘அழகை வளர்ப்போம் நிலவில் மயங்கி...’ என்று தொடங்கும் கவிஞர் நா.காமராசனின் அருமையான பாடல். கதைப் படி, போலீஸ் அதிகாரியான எம்.ஜி.ஆர்., மாறுவேடத்தில் வில்லன் கோஷ்டியினர் இடத்துக்குச் செல்வார். அங்கு அளிக்கப்படும் விருந்தின்போதுதான் இந்தப் பாடல் காட்சி.
இந்தப் பாடலிலும் நடிகைகள் ராதா சலூஜா, ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா ஆகியோருக்கு ஈடு கொடுத்து ஆடி எம்.ஜி.ஆர். அசத்தியிருப்பார். பாடல் முடிந்ததும், வில்லியாக நடிக்கும் நடிகை ராஜசுலோசனாவும் அவரது கையாளாக வரும் நடிகர் ஆர்.எஸ். மனோகரும் எம்.ஜி.ஆரிடம் ‘‘பிரமாதமாக ஆடினீர்கள்’’ என்று பாராட்டுவார்கள்.
அதற்கு, வில்லன் கோஷ்டியை கிண்டல் செய்யும் வகையிலும் அப்போதைய சூழலில் தனது அரசியல் எதிரிகளுக்கு பதில் சொல்லும் வகையிலும் எம்.ஜி.ஆர். கூறும் பதிலால் தியேட்டரே அதிரும். தனது ஆட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்ட வில்லன் கோஷ்டிக்கு எம்.ஜி.ஆரின் பதில் இது...
‘‘நீங்க போட்ட ஆட்டத்தை விடவா?’’
நடிகர்களைக் கூத்தாடிகள் என்று சமூகம் கேவலமாக பேசிய காலம் இருந்தது. நடிகர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்கக்கூட யோசிப்பார்கள். அதை மாற்றி நடிகர்களுக்கு மரியாதையும் சமூக அந்தஸ்தும் கிடைக்க எம்.ஜி.ஆர்.காரணமாக இருந்தார். படங்களில் பாடி, ஆடி நடிக்க மட்டுமல்ல, நடிகனுக்கு நாடாளவும் தெரியும் என்பதை முதன்முதலில் உலகுக்கு நிரூபித்தவர் எம்.ஜி.ஆர்.!
-
கோவை ராயல்
திரை அரங்கில்
06.05.2016 முதல்
மக்கள் திலகத்தின்
பெரிய இடத்துப் பெண்.
-
Emperor of Cinema - Makkalthilagam presents ... "Nadodi" & " Rakasiya Police 115" prepare- processing under Qube- Digital Format...receiving informations by some friends...
-
-
-
-
-
-
எம்ஜிஆர் வாழ்க்கை சம்பவங்களை கூறி வாக்காளர்களை கவரும் பொன்னையன்
சைதை தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக அரசின் சாதனைகளுடன் எம்ஜிஆர் வாழ்க்கை சம்பவங்களை கூறி வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்.
அதிமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகியான சி.பொன்னையன் சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக தினமும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் அமைச்சரவையில் இருந்து பணியாற்றிய மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருந்துள்ளார். இதனால், தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுக அரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டு, எம்ஜிஆரின் வாழ்க்கை சம்பவங்களையும் கூறி வருகிறார். இது சைதாப்பேட்டை வாக்காளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
சைதாப்பேட்டை தொகுதியில் பொன்னையன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:
சைதாப்பேட்டையில் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் அதிகம் என்பதால், எம்ஜிஆர் முதல்வராக இருக்கும்போது, இந்த தொகுதியில் பல்வேறு சிறப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் வழியில்தான் முதல்வர் ஜெயலலிதா நல்ல சுகாதாரம், தரமான கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி உட்பட பல்வேறு நலத்திட்டங்களை கட்சி பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் அளித்து வருகிறார்.
பசியின் கொடுமை
ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் சத்துணவு திட்டத்தை கொண்டு வரும்போது, ரூ.300 கோடி செலவாகும், அதற்கு போதுமான நிதி ஆதாரம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது இருந்த மத்திய அரசு கைவிரித்து விட்டது. ஆனால், எம்ஜிஆர், பசியின் கொடுமை எனக்கு தெரியும். எனவே, நான் பட்ட துயரத்தை இனி எந்த குழந்தையும் படக்கூடாது எனக் கூறி அரசின் மற்ற துறைகளில் சிக்கனத்தை கடைபிடித்து, அதன்மூலம் கிடைத்த நிதி ஆதாரம் கொண்டு சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தார். அதன்பிறகு, இத்திட்டத்தை பெரிய அளவில் கொண்டு சேர்த்தது முதல்வர் ஜெயலலிதாவை சேரும். அதிமுக தொடர்ந்து நல்லாட்சி வழங்கிட எங்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
காரை மறித்த பெண்கள்
பொன்னையன் பேசும்போது, கடந்த 1977-ல் சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் எம்ஜிஆருடன் காரில் சென்று கொண்டிருந்தேன்.
அப்போது, அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் சுமார் 10 பேர் திடீரென காரை மறித்தனர். உடனே காரில் இருந்து இறங்கிய எம்ஜிஆர், அவர்களிடம் விசாரித்தார். எங்களுக்கு வேலை எதுவும் இல்லை, பணம் கொடுங்கள் என்று அந்த பெண்கள் கூறினர். எவ்வளவு வேண்டுமென எம்ஜிஆர் கேட்டார். அதற்கு ரூ.300 கொடுங்கள் என்றனர்.
அது போதுமா? என்று கேட்டபடியே, எம்.ஜி.ஆர். தன்னிடம் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை தலா ரூ.4 ஆயிரம் என 10 பெண்களுக்கு பிரித்துக் கொடுத்தார். நீங்கள் வெவ்வேறு இடங்களில் காய்கறி கடை, இட்லி கடை, பழக்கடை என வைத்து வியாபாரம் செய்யுங்கள். இனி யாரிடமும் பணம் கேட்கக் கூடாது என அந்தப் பெண்களிடம் அறிவுரை கூறிய எம்ஜிஆரை பார்த்ததும் நான் வியந்துபோனேன் என மக்களின் கரகோஷத்துக்கிடையே பொன்னையன் தெரிவித்தார்.
-
எம்ஜிஆர் 100 | 59 - உரிமைக்குரல்!
M.g.r. படங்களின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன், படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகையர் யார் என்பதை தேர்வு செய்யும் பொறுப்பை பெரும்பாலும் அவரிடமே தயாரிப்பாளர்கள் விட்டுவிடுவது வழக்கம். எம்.ஜி.ஆர். குறிப்பிடும் நடிகர்கள் பட்டியலில் முக்கியமாக இடம் பெறுபவர் பண்பட்ட நடிகரான வி.எஸ்.ராகவன்.
எம்.ஜி.ஆரின் 100-வது படமான ‘ஒளி விளக்கு’ படத்தில்தான் முதன்முத லில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வி.எஸ்.ராகவனுக்குக் கிடைத் தது. அதன்பிறகு, ‘எங்கள் தங்கம்’, ‘சங்கே முழங்கு’, ‘உரிமைக்குரல்’ உட்பட எம்.ஜி.ஆர் நடித்த கடைசி படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை பல படங்களில் அவரோடு வி.எஸ்.ராகவன் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். படங்களில் நடிக்க நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆர்வம் காட்டுவார்கள். காரணம், மற்ற படங்களில் கிடைப்பதை விட, அவர் நடிக்கும் படங்களில் கூடுத லான சம்பளம் கிடைக்கும். அதோடு, பேசியபடி சக கலைஞர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுவிட்டதா என்பதை எம்.ஜி.ஆர். உறுதிப்படுத்திக் கொள் வார்.
‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் நடிக்க வி.எஸ்.ராகவனுக்கு குறிப்பிட்ட தொகை சம்பளமாக நிர்ண யிக்கப்பட்டது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, சம்பளத்தை குறைத்துக் கொள்ளுமாறு தயா ரிப்பு தரப்பில் இருந்து வி.எஸ்.ராகவ னுக்கு கோரிக்கை விடப்பட்டது. அவருக்கோ தர்மசங்கடம். தனது நிலையை கவிஞர் வாலியிடம் கூறினார். உடனே, வாலி ஒரு யோசனை கூறினார்.
அந்த யோசனையை வி.எஸ்.ராகவன் செயல்படுத்தினார். வாலியின் யோச னைப்படி தயாரிப்பு தரப்பிடம் வி.எஸ்.ராகவன் ஏவிய அஸ்திரம் இதுதான். ‘‘என் சம்பளம் எம்.ஜி.ஆரின் ஒப்புதலோடு முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் முடிவு செய்த தொகையைவிட குறை வாக நான் வாங்கிக் கொண்டால் அவர் வருத்தப்படுவார். அவருக்கு நான் என்ன பதில் சொல்வது?’’ என்றார். மறுபேச்சு இல்லாமல் ஏற்கெனவே பேசிய சம்பளமே அவருக்கு கிடைத்தது.
வி.எஸ்.ராகவனின் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார். தாயாரை கவனித்துக் கொள்வதற்காக மருத்துவமனையில் வி.எஸ்.ராகவன் இருந்தபோதுதான் இயல், இசை, நாடக மன்றத்துக்கு கவுரவச் செயலாளராக அவரை எம்.ஜி.ஆர். நியமித்தார்.
அந்த சமயத்தில் எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஒருநாள் திடீரென வி.எஸ்.ராகவன் வீட்டுக்கு வந்து அவரிடம் ஒரு பெரும் தொகையை கொடுத்து, ‘‘உங் கள் தாயாரின் மருத்துவ செலவுக்காக எம்.ஜி.ஆர். கொடுக்கச் சொன்னார்’’ என்றார். அதை ஏற்க மறுத்த வி.எஸ்.ராகவன், ‘‘இந்தப் பணத்துக்கு இப்போது அவசியம் இல்லை. என்னோட நன்றி யைத் தெரிவித்து பணத்தை திருப்பி அவர்கிட்ட கொடுத்துடுங்க’’ என்றார்.
‘நாம் கொடுக்கும் பணத்தை மறுக் கிறாரே? நம்மை வி.எஸ்.ராகவன் நெருக்கமாக நினைக்கவில்லையோ? ’ என்று எம்.ஜி.ஆருக்கு அவர் மீது வருத் தம். அரசின் இயல், இசை, நாடக மன்றத் தின் செயலாளர் என்ற முறையில் முதல் வர் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது வி.எஸ்.ராகவன் தனது நிலையை விளக்கினார்.
‘‘உங்களுக்குத் தெரியாதது இல்லை. என் தாயாரின் மருத்துவ செலவுக்கு நான் கேட்காமலேயே பெரிய தொகையை கொடுத்து அனுப்பினீர் கள். என் தாயாருக்கு உடல்நிலை சரியாகிவிட்டது. வீட்டுக்கு வந்துவிட்டார். இனி மருத்துவ செலவு கிடையாது. அப் படியிருக்கும்போது, தாயாரின் மருத் துவ செலவுக்காக என்று நீங்கள் அனுப் பிய பணத்தை நான் ஏற்றுக் கொள்வது சரியாக இருக்காது என்பதால்தான் திருப்பி அனுப்பினேன்’’ என்று வி.எஸ். ராகவன் கூறினார்.
அவரது விளக்கத்தை பொறுமை யாகக் கேட்ட எம்.ஜி.ஆர்., அவரை மன தார பாராட்டினார். உணர்ச்சிவசப்பட்ட ராகவன், ‘‘எனக்கு ஏதாவது கஷ்டம் என்றால் உங்களிடம்தான் வருவேன். வேறு யாரிடம் போவேன்?’’ என்றதும் எம்.ஜி.ஆர் அவரை ஆதரவாக அணைத்துக் கொண்டார்.
ஆரம்ப காலத்தில் ஏச்சுக்களையும் பேச்சுக்களை யும் உரமாகக் கொண்டே வளர்ந்த எம்.ஜி.ஆருக்கு சக நடிகர்கள் யாரையும் மற்ற வர்கள் கிண்டல் செய்வதோ, குறை கூறுவதோ பிடிக் காது. புதிய நடிகர் களை உற்சாகப் படுத்தி வாழ்த்து வார். வி.எஸ்.ராக வனும் எம்.ஜி.ஆரும் கலந்து கொண்ட ஒரு படப்பிடிப்பு.
காட்சிப்படி மாடிப்படி களில் இருந்து எம்.ஜி.ஆர். இறங்கி வரவேண்டும். அப் போது, வாசலில் வரும் தபால்காரர் ‘சார் போஸ்ட்’ என்று கூறி எம்.ஜி.ஆரிடம் தபாலைத் தர வேண்டும். தபால்காரர் வேடத்தில் நடித்தவர் புதுமுக நடிகர். ‘சார் போஸ்ட்’ என்ற இரண்டே வார்த்தைகள்தான் அவருக்கு வசனம். என்றாலும் பதற் றத்தில் இருந்தார். ‘‘தம்பி, எம்.ஜி.ஆரு டன் நடிக்கிறே. ஜாக்கிரதை’’ என்று இயக்குநர் ப.நீலகண்டன் வேறு எச்சரித் ததில் அவரது பதற்றம் அதிகரித்தது.
படப்பிடிப்பு தொடங்கியது. திட்டமிட்ட படி, எம்.ஜி.ஆர். புயலாக மாடிப்படிகளில் இருந்து இறங்கி வந்தார். பதற்றத்தில் இருந்த தபால்காரராக நடித்த புதுமுக நடிகர், எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘‘சார் போஸ்ட்’’ என்று சொல்வதற்கு பதிலாக, ‘‘சார் பேஸ்ட்’’ என்று சொல்லிவிட்டார். செட்டில் சிரிப்பலை எழுந்தது. அதை அடக்கியபடி ஒலித்தது எம்.ஜி.ஆரின் குரல். ‘‘நிறுத்துங்க. ஒரு நடிகர் தப்பு பண் ணிட்டா இப்படித்தான் சிரிக்கிறதா? நாம எல்லாம் தப்பே பண்ணலையா? யாரை யும் கிண்டல் பண்ணாதீங்க’’ என்று வெடித்தார். செட்டில் மயான அமைதி!
பின்னர், அந்த புதுமுக நடிகரை தனியே அழைத்துச் சென்ற எம்.ஜி.ஆர்., அவரது தோளில் கைபோட்டபடி, ‘‘கவ லைப்படாதீங்க. சரியா நடிங்க. உங்க ளால் முடியும்’’ என்று உற்சாகப்படுத்தி னார். அவர் கொடுத்த ஊக்கத்தில் அந்த நடிகர் சரியாக நடித்தார். ஷாட் ஓ.கே. ஆனது. உணர்ச்சிவசப்பட்டு காலில் விழுந்த நடிகரைத் தூக்கி வாழ்த்திய எம்.ஜி.ஆரின் பண்பைப் பார்த்து வி.எஸ். ராகவன் சிலிர்த்துப் போனார்.
எம்.ஜி.ஆரின் குரல் எப்போதுமே சமு தாயத்தில் ஏளனத்துக்கு உள்ளாகி கடை நிலையில் இருக்கும் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஆதரவாகத்தான் ஒலிக்கும். அது உரிமைக்குரல்!
-
5.6.1982
JAYALALITHA JOINED ADMK.
http://i68.tinypic.com/k48a2t.jpg
-
-
-