பாக்யா வார இதழ் -30/12/2016
http://i63.tinypic.com/xkwz6h.jpg
http://i63.tinypic.com/1z96kw.jpg
Printable View
பாக்யா வார இதழ் -30/12/2016
http://i63.tinypic.com/xkwz6h.jpg
http://i63.tinypic.com/1z96kw.jpg
தற்போது ஜெயா மூவிஸில் , இரவு 10 மணி முதல் ,பாரத ரத்னா எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த "இதய வீணை " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i63.tinypic.com/24zdil3.jpg
தின இதழ் -30/12/2016
http://i67.tinypic.com/2gv4y09.jpg
http://i65.tinypic.com/2nris7p.jpg
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த மாதம் முழுவதும் ராஜ் டிவியில் மக்கள் திலகத்தின் படங்கள் ஒளி பரப்புகிறார்கள் .
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை பெங்களுர் நகரில் பல எம்ஜிஆர் மன்றங்கள் அமைப்பை சார்ந்தவர்கள் மிக சிறப்பாக கொண்டாட உள்ளார்கள் .
5.2.2017 அன்று பெங்களூர் தமிழ் சங்கத்தில் உரிமைக்குரல் எம்ஜிஆர் மன்றத்தின் சார்பாக நடை பெற உள்ளது .
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிறைவு நேரத்தில் ........
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் துவக்கிய அண்ணா திமுக இயக்கம் 45 வது ஆண்டில் வெற்றி நடை போடுகிறது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் - திரைப்படங்கள் மறு வெளியீடுகளில் 1947- 2017
70 ஆண்டுகள் தொடர்ந்து திரை அரங்குகளில் பவனி வருகிறது .
ஆயிரத்தில் ஒருவன் , ரிக் ஷாக்காரன் தொடர்ந்து அடிமைப்பெண் , உலகம் சுற்றும் வாலிபன் , நாடோடி மன்னன் படங்கள் இந்த ஆண்டில் டிஜிட்டல் மற்றும் ஸ்கோப் வடிவில் திரைக்கு வர உள்ளது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் - 100 சாதனைகள் தொடரும் ....
M.G.R. தமிழர்களைப் பொறுத்த அளவில் தமிழாகி விட்ட ஆங்கில எழுத்துக்கள்.
ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெறுவதே கடினம். அதிலும் முதலிடம் பெறுவது இன்னும் கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது அதைவிட கடினம். சினிமா, அரசியல் இரண்டு துறைகளிலும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், முதலிடம் பெற்று, அதை கடைசி வரை தக்க வைத்துக் கொண்ட அதிசயமே அசந்து போகும் அதிசயம் எம்.ஜி.ஆர்.
தமிழர்களை மயக்கும் மந்திரச் சொல்லாக அவர் பெயர் ஆனது ஏதோ மாயா ஜாலத்தால் அல்ல. அதற்கு பின்னணியில் இருக்கும் அவரது திட்டமிட்ட கடும் உழைப்பு. அவருக்கே அமைந்த வசீகரம். இந்த இரண்டும் கூட எல்லா நடிகர்களுக்கும் இருந்து விடலாம். ஆனால், மற்றவர்களுக்கு இல்லாத புகழும் பெருமையும் மக்கள் ஆதரவும் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே ஏன்? இவற்றை எல்லாம் தாண்டிய மனிதாபிமானம் என்பதே பதிலாக இருக்கும். இந்த குணத்தால் மக்களை அவர் நேசித்தார். அதனால்தான் மக்கள் அவரை நேசித்தனர். அதனால்தான், இதுவரை எந்த தமிழக முதல்வரும் செய்யாத சாதனையாக அடுத்தடுத்து மூன்று முறை ஆட்சியைக் கைப்பற்றினார்.
courtesy - the hindu
உலகத் தமிழ் மாநாட்டில் கருத்தரங்கு ஒன்றில் எம்.ஜி.ஆர். பேசினார். கவிதையைப் பற்றிய நயமான விளக்கம் அளித்தார். ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை ’ என்று கூறினார். கூடியிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பினர்.
பின்னர், அண்ணா பேச வந்தார். எம்.ஜி.ஆருக்கே குருவாயிற்றே? கேட்க வேண்டுமா? கவிதை பற்றி அவர் கூறும்போது,
‘அறிந்ததனை அறிந்தோர்க்கு
அறிவிக்கும் போதினிலே
அறிந்ததுதான் என்றாலும்
எத்துணை அழகம்மா? என்று
அறிந்தோரையும் வியக்க வைக்கும்
அருங்கலையே கவிதையாகும்’
... என்று கவிதையாலேயே கவிதைக்கு விளக்கம் அளித்தார் அறிஞர் அண்ணா. மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேர மாயிற்று.
தொடர்ந்து அண்ணா பேசும்போது, ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை என்று எம்.ஜி.ஆர். கூறினார். நீங்கள் கைதட்டினீர்கள். எதற்கு என்று யோசித்தேன். பிறகுதான் தெரிந்தது. அவர் தன்னைப் பற்றியே சொல்லியிருக்கிறார். ஆம். அழகும் உணர்ச்சியும் சேர்ந்த எம்.ஜி.ஆரே ஒரு கவிதைதானே...’ என்றார் அண்ணா.
மக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. இதயக்கனியின் ஈர்ப்பு ரகசியம் அறிந்தவர் அண்ணா!
courtesy - the hindu
மக்கள் திலகம் எம்ஜிஆர் உயிரோடிருந்தவரை அவரின் கருத்துக்கும் கொள்கைக்கும் வேண்டாதவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வெளியேதான் இருந்திருக்கின்றனர், ஆட்சியிலும் சரி மற்ற விசயங்களிலும் சரி. இது மறுக்கப்பட முடியாத உண்மை.
அவரின் அழகான தோற்றத்தினால் மக்கள் அவர்பால் கவரப்படுகின்றனர் என சிலர் எண்ணியிருக்கக்கூடும். அதனால், இப்படி நினைப்போர் எதிர் தரப்பில் இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆயினும், அழகுக்கும் அப்பாற்பட்ட பல அரிய, உன்னதமான கொள்கைகளைக் கொண்டவர் எம்ஜிஆர் எனத் தெரிந்ததனால்தான் பெரும்பாலோர் அவரைத் தங்களின் இதயதில் வைத்துப் பூஜிக்கிறார்கள்.
அவர் காலமான பின், அவரின் உயிலைப் படித்து உள்ளம் உருகி அதனால் ஈர்க்கப்பட்டோரும் உண்டு. ஊடல் நலக் குறை உள்ளோருக்கு அவர் விட்டுச்சென்றது போல் வேறு யாரேனும் செய்யக்காணோம். வாய் நிறைய பலர் பேசலாம். செயலில் காட்டி சிகரத்தைத் தொட்டவர் பொன் மனச் செம்மல் எம்ஜியார் அவர்கள் மட்டுமே.
தனி நாடு கோரி பல இடர்பாடுகளில் சிக்கித் தவித்த இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வு ஏற்படும் என பெரிதும் நம்பினார். ( பின்னாளில், அவர் ஆட்சியில் இல்லாதபோது ஏற்பட்ட போரைத் தடுக்க முடியாது அந்த இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் பலியை பார்க்க நேர்ந்தது தமிழகம்).
காலத்துக்கேற்ப தன்னை புதுமையாக காட்டியவர் எம்ஜிஆர். ராஜா ராணி பாணியிலான காலங்களில் இருந்து சமூக படங்களில் 'பேண்ட் சூட்' என கண்களைக் கவரும் வண்ணம் திரையில் தோன்றி பார்ப்போரைக் கவர்ந்தவர் அவர்.
“ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை….” ஏன அவர் பாடியபோது, அவரை தங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி உள்ளம் குளிர்ந்த பெரியோர் பலர்.
60ம் ஆண்டுகளில், எனக்கு விவரம் தெரிந்து கண்கூடாக நான் கண்ட உண்மை இது. அவர் அங்கே செய்யும் ஒவ்வொரு நல்ல விசயமும் இங்கே நமது நாட்டிலும், வேறு பல அயல் நாடுகளிலும் எதிரொலித்தது. அதுவே அவரின் புகழை உச்சிக்கு கொண்டு சென்று சேர்த்தது. இது ஒரு நடிகராக இருப்பதனால் மட்டுமே சாதிக்க முடியாத ஒன்று. அதையும் தாண்டி உயர்தர எண்ணம் கொண்டோர் மட்டுமே இதுபோன்ற இமாலய சாதனைகளைச் செய்ய இயலும்.
இப்போது நம் நாட்டில் உள்ள மற்ற இனத்தவரிடம் தங்களுக்கு பிடித்த ஒரு நடிகரை சொல்லச் சொன்னால், அவர்கள் சொல்வதில் தமிழ் நடிகர்கள் பெயர் இடம் பெறுவது அபூர்வமானாதாக இருக்கும். சிலருக்கு ரஜினியைத் தெரிந்திருக்கலாம். ஆனல், அன்று கிட்டத்தட்ட அனைவருக்கும், அதாவது மலாய், சீன இனத்தவருக்கும் எம்ஜிஆரைத் தெரிந்திருந்தது. தோட்டப் புறங்களில் திரையிடப்பட்ட அவர் படங்களை சீனர்களும் மலாய்க்காரர்களும் ஆர்வத்தோடு அமர்ந்து கண்டு களித்தனர். இது மக்கள் திலகத்துக்கே உரிய தனிச் சிறப்பு.
அவர் திரையில் பாடிய "ஹெல்லோ மிஸ் ஹெல்லோ மிஸ் எங்கே போரீங்க..." எனும் பாடலை அந்த காலத்தில் பாடதவர்களே இல்லை எனலாம். எல்லா இனத்தவர் வாயிலும் புகுந்து விளையாடிய பாடல் இதுவாகும். இதுவும் எம்ஜிஆர் சிறப்புகளில் ஒன்று. வேறு எந்த நடிகரின் பாடலுக்கும் இப்படி ஒரு காந்த சக்தி இருந்ததாக நான் பார்த்ததும் இல்லை, கேள்வி பட்டதும் இல்லை.
அவரின் பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தைப் போல் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் படங்கள் பல. அதே கதை, அதே பாணியிலான நடிப்பு. திரைக்கதைகளில் மட்டுமல்ல, சினிமாவில் அவர் கையாண்ட பல விசயங்களையும் பின்பற்றுவோர் இன்று நிறைய உண்டு. அப்படி பின்பற்றி வெற்றிபெற்றோரும் அதிகம்.
அன்றைய நடிகர்களில் சுறுசுறுப்பாக திரையுலகில் ஆட்சி புரிந்தவர் பொன்மனச் செம்மல் அவர்கள். ஸ்டன்ட் நடிகர்களின் வயிற்றுப் பிழைப்புக்காகவே தனது எல்லாப் படங்களிலும் சண்டைக் காட்சிகளை வைத்த ஒரே நடிகர் இவர்தான் எனலாம். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.
எம்ஜிஆர் பாடல்களில் புத்துணர்வு பெருகும். ஆது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி, நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி. எதிர் மறை எண்ணங்கள் எங்கேயும் இல்லாது பார்த்துக் கொண்டார். மற்ற நடிகர்களைப் போல ஒரு சில பக்கங்களில் இவரின் இசையார்வத்தை வெளிப்படுத்திவிட முடியாது. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, காதுக்கினிய இசையுடன் திரையில் ஒலிக்கச்செய்த மாபெரும் கலைஞர் இவர்.
'டி.எம்.எஸ்ஸின்' குரல் வலிமையை வெளிக்கொணர்ந்தது எம்ஜிஆருக்காக அவர் பாடிய பாடல்களே. அதன் பின்னர் மற்ற நடிகர்களுக்கு குரல் கொடுத்து பேரும் புகழும் பெற்றார் 'டி.எம்.எஸ்'. அதே நேரத்தில் எம்ஜிஆர் யாரையும் சார்ந்து அவர்களது கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. இதற்கு உதாரணமாக இன்றும் நம்மிடையே கம்பீரமாக உலாவருபவர்தான் எஸ் பி பாலா.
‘கண் கவரும் சிலையே, காட்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே…”
எனும் மென்மையான குரலும் ஒத்துப்போகும்.
‘பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று….’
ஏனும் வித்தியாசமான குரலும் ஒத்துப்போகும்.
இதற்குக் காரணம், எம்ஜியாரின் பாடல்களை யார் பாடினாலும், படத்தைப் பார்த்த அடுத்த சில தினங்களில் அந்தப் பாடலை எம்ஜிஆர் அவர்களே பாடுவது போல தோன்றியதால்தான். அப்படி ஒரு மகிமையை எம்ஜிஆர் கொண்டிருந்தார்.
பூவோடு சேர்ந்து தங்களை மணக்கச்செய்தவர் பலர். அவர்கள் அனைவரும் நன்றியோடு பார்ப்பது பொன் மனச் செம்மலை. இப்போதும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என தங்களது மலரும் நினைவுகளில் அவரை குறிப்பிடத் தவறுவதில்லை.
“காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ…….”
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ராஜ் டிவியில் புரட்சி நடிகர் / மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "நாடோடி மன்னன் " ஒளிபரப்பாகியது
http://i67.tinypic.com/2zz15wk.jpg
http://i64.tinypic.com/el72og.jpg
இன்று பிற்பகல் 3 மணிக்கு மெகா டிவியில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"கன்னித்தாய் " ஒளிபரப்பாகியது .
தற்போது ஜெயா மூவிஸில், இரவு 10மணி முதல் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த "நல்ல நேரம் " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i66.tinypic.com/2igncic.jpg
வரும் வெள்ளி முதல் (06/01/2017) சென்னை கிருஷ்ணவேணியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடிப்பில், 13 நாட்களில், குறைந்த செலவில், எளிய தயாரிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற " முகராசி " தினசரி 3 காட்சிகளில் நீண்ட இடைவெளிக்கு பின் கோலாகல ஆரம்பம் .
http://i68.tinypic.com/2lxt5zp.jpg
ரத்னா பிக்சர்ஸ் வெளியீடு
மக்கள் குரல் -04/01/2017
http://i66.tinypic.com/20i7ts.jpg
இன்று (05/01/2017) பிற்பகல் 1.30 மணிக்கு ராஜ் டிவியில், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
நடித்த , தேவரின் "தாய் சொல்லை தட்டாதே " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/33lp0rn.jpg
இன்று பிற்பகல் 2 மணிக்கு ஜெயா டிவியில், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த
"குமரிக்கோட்டம் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i63.tinypic.com/23vgpqv.jpg
அன்பு நண்பர்கள் திரு வினோத் & லோகநாதன் ஆகியோருக்கு
தாங்கள் இருவரும் இடைவிடாது
மக்கள் திலகத்தைப்பற்றி அரிய தகவல்களையும்
புகைப்படங்களையும் பதிவிட்டு நமது திரிக்கு பெருமை சேர்க்கின்றீர்கள்.
மகிழ்ச்சி - பாராட்டுக்கள்
அன்புடன்
- எஸ் ரவிச்சந்திரன்
https://s30.postimg.org/5x46puvxd/IMG_3011.jpg
Courtesy - Mr. S S Ramakrishnan- Madurai
http://i63.tinypic.com/20h7h4l.jpg
http://i65.tinypic.com/2j61ert.jpg
என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மதுரையில் தமிழகத்தை தவிக்கவிட்டுச் சென்ற தாய் புரட்சித் தலைவியின் 30வது நாள் நினைவு மவுன ஊர்வலம் கூட்டுறவுத் துறை அமைச்சர் அண்ணன் செல்லூர் ராஜூ தலைமையில் சற்று முன் நடந்தது.
http://i68.tinypic.com/1o8wap.jpg
உலகமே அழிந்தாலும் புகழ் அழியாத தலைவன் வாழ்க.
கடந்த வருடம் 16/12/2016 முதல் , மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "நினைத்ததை முடிப்பவன் " வெளியாகி வெற்றி நடை போட்டு, ஓராண்டு இடைவெளியில் , ஒரு வார வசூலாக ரூ.87,000/- ஈட்டியது என்று மதுரை நண்பர் திரு. எஸ். குமார். தகவல் அளித்துள்ளார்
http://i68.tinypic.com/33cxfn6.jpg
அதன் சுவரொட்டிக்கான புகைப்படங்கள் /செய்திகளுடன் அனுப்பிய நண்பர் திரு. எஸ். குமார். அவர்களுக்கு நன்றி.