அன்னை சத்தியத்தாய் பெற்ற மாணிக்கங்கள் தலைவர் MGR அவர்அண்ணன்சக்ரபானியும் வறுமையிலும் செம்மையாய் வாழ்ந்தவர்கள் என்றென்றும் போற்றப்பட வேண்டியவர்கள்.... Thanks...
Printable View
அன்னை சத்தியத்தாய் பெற்ற மாணிக்கங்கள் தலைவர் MGR அவர்அண்ணன்சக்ரபானியும் வறுமையிலும் செம்மையாய் வாழ்ந்தவர்கள் என்றென்றும் போற்றப்பட வேண்டியவர்கள்.... Thanks...
அனைத்திலும் அவர் மக்களின் முன்னோடிதான், மனிதர்கள் இப்படி இருக்க வாய்ப்பு இல்லை, அவர் தெய்வத்தின் தெய்வம், அதாவது தெய்வத்திற்கு மேலானவர்...... Thanks...
https://youtu.be/58SjCwGZiqU.... Thanks...
நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டையில் வசிக்கும் மக்கள்திலகம் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான பஸ் டிரைவர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டது. காலில் பலத்தகாயம். அறுவை சிகிச்சை செய்து காலை எடுக்காவிட்டால் உயிரே பறி போகும் அபாயம். ‘பிறருக்கு பாரமாக இருப்பதை விட சாவதே மேல்’என்ற எண்ணத்தில் அறுவை சிகிச்சைக்கு டிரைவர் மறுத்தார். பெற்ற மனம் கேட்குமா? மகனைக்காப்பாற்றத் துடித்தார் தாய். ஆனால், அவர் என்ன சொல்லியும் மகன் கேட்கவில்லை. ‘காலை இழந்துவாழ்வதை விட சாவதே மேல்’ என்று உறுதியாகக்கூறிவிட்டார். எம்.ஜி.ஆர். ரசிகனான தன் மகன் அவர் சொன்னால் கேட்பான் என்ற நம்பிக்கை பிறந்தது அந்தத்தாய்க்கு... எம்.ஜி.ஆரை சந்தித்து தன் மகனின்நிலையைக் கூறி அவரைக் காப்பாற்றும் படி கேட்டுக்கொண்டார். அந்த தாயின்வேண்டுகோளை ஏற்று மருத்துவமனைக்கே எம்.ஜி.ஆர் சென்று தனது ரசிகரை சந்தித்து ஆறுதலும் தைரியமும் கூறினார். சூரியனைக் கண்ட பனி போல டிரைவரின்கவலையும் அச்சமும் மிச்சமில்லாமல் பறந்தன. அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார். பாதிக்கப்பட்ட கால் அகற்றப்பட்டு டிரைவர் உயிர் பிழைத்தார். எம்.ஜி.ஆரின் செலவிலேயே அவருக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. பின்னர், அவர் கடை வைத்து நடத்தவும் எம்.ஜி.ஆர். உதவிசெய்தார். டிரைவராக இருந்தவர் முதலாளியாகிவிட்டார். நல்ல நிலைமைக்கு வந்தவுடன் தாயும் மகனும் எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினர். தங்கள் விருப்பத்தை எம்.ஜி.ஆருக்கு தெரியப்படுத்தி சந்திக்க அனுமதி கோரினர்... அதற்கு எம்.ஜி.ஆர். அளித்த நெகிழ வைக்கும் பதில் இது...!!! ‘‘தன் மகன்களில் ஒருவனாக கருதித்தான் என்னைத்தேடி அந்த அன்னை வந்தார். டிரைவரை நானும் என் தம்பியாக நினைத்துத்தான் உதவிசெய்தேன். தாயாக, தம்பியாக எப்போது வேண்டுமானாலும் அவர்கள் என்னைப் பார்க்க வரலாம். நன்றி சொல்வதற்கு என்று வந்தால் நான் அந்நியனாகி விடுவேன். அந்த வயது முதிர்ந்த தாயை அந்த சகோதரர் நன்றாக கவனித்துக் கொண்டாலே போதும் அதுவே என்னைப் பார்ப்பதற்கு சமம்.’’ ‘ஆனந்த ஜோதி ' திரைப்படத்தில் இடம் பெற்ற, ‘ஒருதாய் மக்கள் நாமென்போம், ஒன்றே எங்கள் குலமென்போம்...’ பாடலுக்கு வெறுமனே வாயசைத்து விட்டுப் போனவரல்ல , அதன்படியே வாழ்ந்தவர்... நம் இதயதெய்வம் பொன்மனச்செம்மல். ...... Thanks...
https://youtu.be/1ZQhbhO_Df8.... Thanks...
https://youtu.be/UJe6I8WZ058.... Thanks...
நான் முன்பு படித்தது,உறந்தை உலகப்பன் நிகழ்ச்சிக்கு தலைவர் மட்டும்தான் அழைக்கப் பட்டிருந்தார்,அங்கு தலைவருக்குப் புரட்சி நடிகர் பட்டம் வழங்க ஏற்பாடு செய்திருந்தார்,தலைவர் தன்னோடு கருணாநிதியையும் அழைத்து வந்து விட்டதால்,கருணாநிதிக்கு மரியாதை செய்யும் விதமாகத்தான் அவர் கையில் புரட்சிநடிகர் என்று எழுதிய பேழையைக் கொடுத்து தலைவரிடம் அதை வழங்கும்படி கேட்டுக் கொண்டனர் என்றுதான் படித்துள்ளேன்....... Thanks SDN
சென்னை - அண்ணா சாலை ''தேவி பாரடைஸ் '' 70 MM., A/C திரை அரங்கு பொன்விழா ஆண்டு 1970 - 2020
21.07.1970 தேவிபாரடைஸ் - துவக்க தினம் . 49 ஆண்டுகள் நிறைவு . பொன்விழா துவக்கம்
.
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் மலரும் நினைவுகள்
1970ல் திரை உலக ரசிகர்களால் கவரப்பட்ட மிக சிறந்த குளிர்சாதன திரை அரங்கு ''தேவி பாரடைஸ் ''
1. மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ரிக் ஷாக்காரன் படம் ''தேவி பாரடைஸ் அரங்கில் 29.05.1971 அன்று வெளிவந்தது, முதல் நாள் சிறப்பு காட்சியில் அன்றைய தமிழக முதல்வர் முன்னலையில் எம்ஜிஆர் திரை நட்சத்திரங்கள் , அரசியல் பிரபலங்கள் ஏராளமான எம்ஜிஆர் மன்றங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் . முதல் முறையாக இத்திரை அரங்கில் தொடர்ந்து 100 காட்சிகள் , 125.காட்சிகள் 151 காட்சிகள் அரங்கு நிறைந்து 147 நாட்கள் ஓடி வசூலில் பிரமாண்ட சாதனை நடைபெற்றது .
2. தீபாவளி விருந்தாக 18.10 .1971 அன்று மக்கள் திலகத்தின் '' நீரும் நெருப்பும்'' திரைக்கு வந்தது . சிறப்புக்காட்சிகள் நடந்தது .9 வாரங்கள் படம் ஓடியது .
3. பரப்பரப்பான சூழ் நிலையில் 11.05.1973 அன்று வெளிவந்த படம் ''உலகம் சுற்றும் வாலிபன் ''. முன்பதிவில் 7.05.1973ல் ரசிகர்களின் கூட்டமே சாட்சி .63 நாட்கள் தொடர்ந்து அரங்கு நிறைந்து 182 நாட்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்தது .
4. மக்கள் திலகத்தின் ''நினைத்ததை முடிப்பவன் '' 9.05.1975 வெளியானது . தொடர்ந்து 101 காட்சிகள் அரங்கம் நிறைந்து வசூலில் சாதனை .12 வாரங்கள் ஓடியது .
5. மக்கள் திலகத்தின் லட்சிய படைப்பான ' பல்லாண்டு வாழ்க '' 31.10.1975ல் திரைக்குவந்து 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது .
6. '' தேவிகலா '' அரங்கில் முதல் முறையாக 18.03.1976 எம்ஜிஆரின் '' நீதிக்கு தலை வணங்கு '' தினசரி 4 காட்சியுடன் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது
7. எம்ஜிஆர் தமிழக முதல்வராக தேர்வு செய்வதற்கு முன்னர் 5.05.1977 ல் வெளி வந்து 100 நாட்கள் ஓடியது . 100 வது நாள் விழா நேரத்தில் தமிழக முதல்வர் எம்ஜிஆர் என்பது குறிப்பிடத்தக்கது .
8. தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆன பின்னர் 14.08.1977 அன்று திரைக்கு வந்த படம் ''மீனவ நண்பன் '' 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது
9. மக்கள் திலகம் எம்ஜிஆரின் கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் '' 14.01.1978 திரைக்கு வந்து 50 நாட்கள் மேல் ஓடியது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் சினிமா துறை விட்டு விலகிய பின்னர் அவருடைய பல படங்கள் ''தேவி பாரடைஸ் ' அரங்கில் வைகுண்ட ஏகாதசி நள்ளிரவு சிறப்பு காட்சிகளாக திரையிடப்பட்டது .
எம்ஜிஆரின் நாடோடிமன்னன் , படகோட்டி , மாட்டுக்கார வேலன் படங்கள் 1977-1989 இடைப்பட்ட காலங்களில் தேவி பாரடைஸில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது .
எம்ஜிஆரின் டிஜிட்டல் படங்கள்
2014- 2018 கால கட்டத்தில்
ஆயிரத்தில் ஒருவன்
ரிக் ஷாக்காரன்
அடிமைப்பெண்
எங்கவீட்டுப்பிள்ளை
நினைத்ததை முடிப்பவன்
போன்ற படங்கள் தேவி வளாகத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது .
49 ஆண்டுகள் கடந்தாலும் தேவிபாரடைஸ் பெயரும் எம்ஜிஆர் படங்கள் திரைக்கு வந்த இனிய நாட்களும் ரசிகர்கள் கொண்டாடிய விழாக்கோலங்களும் என்றென்றும் மறக்க முடியாது .
விரைவில் இதே அரங்கில் ''உலகம் சுற்றும் வாலிபன் '' டிஜிட்டல் படம் இந்த ஆண்டு திரைக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது .
''தேவி பாரடைஸ் '' திரை அரங்கு உரிமையாளருக்கும் ஊழியர்களுக்கும் எங்களது அன்பு கலந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறோம்
எம்ஜிஆர் படங்கள் விளம்பரங்களை . இணைத்துள்ளோம் .
அன்புடன்
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் ....... Thanks WA., Groups..........
.
தலைவர் 1962 இல் ராமாவரம் தோட்டத்தில் குடியேறினார்..14.06.1962 அன்னை ஜானகி அவர்களை பதிவு திருமணம் செய்து கொண்டார்.
கன்னிதாய், முகராசி, குடியிருந்த கோவில், ரகசிய போலீஸ் 115 படங்களை அடுத்த முறை நீங்கள் பார்க்கும் போது கவனிக்கவும். தலைவர் தன் ஆட்காட்டி விரலில் ஒரு மோதிரம் போட்டு கொண்டு இருப்பார். அந்த மோதிரம் ஒரு தீவிர ரசிகரால் தலைவருக்கு பரிசாக அளிக்க பட்டது.
அதை எப்போதும் கழற்ற கூடாது என்ற அந்த ரசிகரின் கோரிக்கை...குண்டடி பட்ட போது கழற்ற பட்ட அந்த மோதிரத்தை பிறகு அணிந்து பின் பத்திரமாக காத்து வந்தார்.
14.06.1987 இல் அந்த மோதிரத்தை மற்றும் அன்னை சத்தியா அம்மா உருவம் பொதிந்த டாலர் கொண்ட நகைகள் மற்றும் அன்னை ஜானகி அவர்களும் நகைகள் போட்டு கொண்டு தன் திருமண நாள் அன்று. கீழே இருக்கும் படமே கடைசியாக இருவரும் விரும்பி சேர்ந்து எடுத்து கொண்ட கடைசி புகைப்படம் ஆகும். அப்புறம் வந்த படங்கள் மற்றவர்கள் எடுத்தது ஆகும்.
தலைவர் அமெரிக்க சிகிச்சை முடிந்து மீண்டும் வந்து முதல்வர் ஆகி தன் கடைசி டிசம்பர் மாதத்தில் அடிக்கடி
அண்ணா அவர்கள் தலைவருக்கு முதன்முதலில் போட்ட சால்வயை எடுத்துவர சொல்லி அதை முகத்தில் போட்டு கொண்டு கதறி கண்ணீர் சிந்தி இருக்கிறார்.
குண்டடி பட்டு கழுத்தை சுற்றி போடப்பட்ட அந்த கட்டு துணியை எடுத்து அதை பார்த்து கண்ணீருடன் இருந்து இருக்கிறார்.
தன் தாயின் படத்தை வெறித்து பார்த்து கொண்டு இருக்கும் போது அவர் கண்களில் இருந்து அருவியார் கண்ணீர் கொட்டுமாம்.
ஒரு நாள் கடைசிவரை தன்னுடன் இருந்த மாணிக்கத்தை அழைத்து கொண்டு அவர் கையை பிடித்து கொண்டு தோட்டத்தில் நடக்கும் போது ஒரு பெரியவர் பேத்திக்கு பேச்சு வரவில்லை என்று சொன்னதால் அந்த குழந்தையை தன் வீட்டில் தங்க சொல்லி தனக்கு பேச்சு பயிற்சி கொடுத்த மருத்துவர் கொண்டு சிகிச்சை அளிக்க பட்டு கொண்டு இருந்த அந்த பெண் குழந்தை தன் எதிரே வர....
கொஞ்ச நாட்கள் சிகிட்சையில் அந்த குழந்தை முன்னேற்றம் அடைந்து அன்று தலைவரை பார்த்து நன்கு பேச துவங்க அன்று இரவு அவர் பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தனக்கும் அப்படி வரவேண்டும் என்று நினைத்து கலங்கி இருக்கலாம்.
விரைவில் விடை பெற போகும் உணர்வு அவருக்குள் மேலோங்கி இருந்தது என்பதையே மேற்கண்ட நிகழ்வுகள் காட்டியதோ என்னமோ...இன்னும் வரும்...கடைசி நாட்களில் நடந்தவை.
வாழ்க எம்ஜியார் புகழ்.
நன்றி...உங்களில் ஒருவன் நெல்லை மணி....தொடரும்....... Thanks.........
Nellaimani Admk அண்ணா... தயவுசெய்து குறைத்து கொள்ள வேண்டாம்...
என்னைப் போன்ற பலர் தலைவரை நேரில் சந்திக்கும் பாக்கியத்தைத்தான் பெறவில்லை உங்களைப் போன்ற உண்மை பக்தர்கள் சிலர் மூலம் தான் நாங்கள் அற்புதமான ,
எதிர்பாராத நிதழ்வுகள் ஆகியவைகளை இதுபோன்ற பதிவுகள்மூலம் தான்
தெரிந்து கொள்கிறோம்...
ஆகையால் தயவுசெய்து எதையும் குறைத்து கொள்ளாதீர்கள் அண்ணா...... Thanks...
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் - 25/04/20 அன்று வின் டிவியில்*வெளியான*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இந்த மூன்றெழுத்து மந்திரத்திற்கு சொந்தக்காரர் .குற்றால*, குறவஞ்சி பாடல் ஆகியவற்றிற்கு ஆதரவு காட்டிய எட்டாவது வள்ளல். கவிஞர்களுடன் எம்.ஜி.ஆருக்கு இருந்த உறவு என்பது மிக பெரிய* இலக்கியத்தோடு அமைந்த நாடக தன்மை வாய்ந்தது .குறிப்பாக கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் கவித்துவம் கொண்டதாகவும், தமிழின் பெருமையை உணர்த்துவதாகவும் இருந்தன.* ஆகவே எம்.ஜி.ஆர். அவர்கள் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் பற்றிய விவரம் அறிந்து அவற்றை தன்னுடைய திரைப்படங்களில் புகுத்தி , அவருக்கு புகழ் சேர்ப்பதோடு, மக்களுக்கு நன்மை பயக்கும் கருத்தான பாடல்களை அறிமுகப்படுத்தினார் .* சந்திரோதயம் படத்தில் எம்.ஜி.ஆர். பத்திரிகை ஆசிரியராக நடித்தார் .* ஒரு பத்திரிகையானது மக்களுக்கு எந்த மாதிரி செய்திகளை பிரசுரம் செய்து வெளியிட வேண்டும். எந்த மாதிரி செய்திகளை வெளியிடக்கூடாது என்ற கருத்தை மேம்படுத்தி சொல்லியிருப்பார் . பத்திரிகை என்பது என்ன ? அதன் குணாதிசயங்கள் என்ன என்பதை விளக்கும் டைட்டில் பாடலாக புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்று பாடல் அமைந்திருக்கும் .
கவிஞர் பாரதிதாசன் , கவிஞர் பாரதியாருக்கு தாசனாக , எங்கெங்கு காணினும் சக்தியடா என்ற திரைப்பட பாடலில் அறிமுகம் ஆனார் .கவிஞர் பாரதிதாசன் இயற்றிய சித்திர சோலைகளே, உமை இங்கு திருத்த இப்பாரினிலே என்ற பாடல் நான் ஏன் பிறந்தேன் என்ற படத்தில் இடம் பெற்றது .* இந்த பாடலில் தொழிலாளர் வர்க்கத்திற்கும் கவிஞருக்கும் உள்ள**ஈடுபாட்டை உணர்த்துவதாகவும் தொழிலாளர்களின் சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமாக முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே என்கிற அற்புதமான வரிகள் அமைந்திருக்கும் .. இந்த பாடலை விரும்பி ஏற்று, பட தயாரிப்பாளரான காமாட்சி ஏஜென்சிஸ் (நடிகை கே.ஆர். விஜயாவின் நிறுவனம் ) நிறுவனத்திடம் வலியுறுத்தி , வெள்ளை உடையில் , இயல்பான தன் நடிப்பில்*அசத்தியிருப்பார் .**
1965ல் வெளியான கலங்கரை விளக்கம் என்ற படத்தில் முதன் முதலாக கவிஞர் பாரதிதாசன் பாடலான சங்கே முழங்கு பாடலை இடம் பெற செய்தார் .* படத்தில் ஒரு காட்சியில் தன் காதலியை இழந்து சோகமாக இருக்கும்போது ,தன்* நண்பரின் வேண்டுகோளுக்கு ஏற்ப அந்த பாடல் காட்சியை நாடக அரங்கில் காண்பதாக அமைக்கப்பட்டிருக்கும்.* இந்த பாடலில் வரும் எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்ற வரிகள்* இன்றைக்கும் மேடைகளில் தமிழின் பெருமையை உணர்த்தும் வகையில்*இந்த வரிகளை பேச்சாளர்கள் பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம் .அவ்வளவு சிறப்பு வாய்ந்த பாடல்.* தமிழுக்கு எதிராக இந்தி எதிர்ப்பு என்கிற மொழி போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்த நேரம். எம்.ஜி.ஆர். தி.மு.க. வில் இருந்த சமயம்* தமிழனின் உணர்ச்சிகளை விவரிக்கும் இந்த பாடலை தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணியின்* அனுமதியோடு இடம் பெற செய்தார் எம்.ஜி.ஆர்.*. இந்த பாடலில் கவிஞர் பாரதிதாசன்*, உருவம் இரு பக்கமும் அடங்கிய புத்தகம் ஒன்றுசுழன்று கொண்டே* இரண்டாக பிளந்து அதில் இருந்து நடிகை சரோஜாதேவி சங்கு முழங்கியபடி தோன்றும் காட்சி இடம் பெற்றிருக்கும் .**
மன்னாதி மன்னன் படத்தில் கவிஞர் கண்ணதாசனின் அச்சம் என்பது மடமையடா , அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற , தமிழன் உணர்ச்சியும், திராவிடர் எழுச்சியும் நிறைந்த பாடலை அறிமுகப்படுத்தினார் எம்.ஜி.ஆர். 1960ல் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அந்த காலத்தில்* ஒலிக்காத தி.மு.க. மேடைகளே இல்லை .* அ தி.மு.க. வை எம்.ஜி.ஆர். தொடங்கிய பின்னரும் ,அ. தி.மு.க. மேடைகளில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டன .எம்.ஜி.ஆர் தன் காரில் பயணிக்கும்போது ஒலிக்காத நாளே இல்லை எனலாம் .*
பொதுவுடமை கருத்துக்களை தனது திரைப்பட பாடல்களில் புகுத்துவதற்கு பிரத்யேக கவனம் செலுத்தினார் எம்.ஜி.ஆர். அதன்படி கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின்* பாடல்கள் பலவற்றை* தன் படங்களில் பயன்படுத்திக் கொண்டார் . இந்த படத்தில் எம்.ஜி.ஆரும், பானுமதியும் மாட்டு வண்டியில் பயணித்தபடி வயக்காட்டில் பாடும் காடு வெலெஞ்சு* என்ன மச்சான் நமக்கு கையும் காலும்தான் மிச்சம் என்ற பாடலில்* பட்ட துயர் இன்னும் மாறும், ரொம்ப கிட்ட நெருங்குது நேரம், நானே போட போறேன் சட்டம், பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம். நாடு நலம் பெறும் திட்டம் , என்ற வரிகளின்படி , தனிக்கட்சி ஆரம்பித்து, முதல்வராக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து பல நல்ல திட்டங்களை தீட்டினார் . தான் முதல்வராவதற்கு 20 ஆண்டுகள் முன்பு எழுதப்பட்ட பாடல்.**இதில் இருந்து எம்.ஜி.ஆர். எப்படிப்பட்ட ஒரு தீர்க்கதரிசி என்பதை அறிந்து கொள்ளலாம் .* பாடலில் பானுமதி மாடாய் உழைப்பவன் வாழ்க்கையில் பசி வந்திட காரணம் என்ன மச்சான் என கேள்வி கேட்க , அங்கு சேரக்கூடாத இடத்தில செல்வம் சேருவதால் அவனுக்கு* வரும் தொல்லையடி என்று எம்.ஜி.ஆர். பதிலளிப்பார் .**
1975ல் பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் , கவிஞர் பாரதிதாசன் பாடலான*புதியதோர் உலகம் செய்வோம் , கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் .* இதே வரிகள் சந்திரோதயம் டைட்டில் பாடலிலும் இடம் பெற்றிருக்கும்.* ஆனால் அதே வரிகள் இந்த படத்தில் வேறு ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பொதுவுடமை கொள்கை திசை எட்டும் சேர்ப்போம் .புனிதமாக அதை எங்கள் உயிர் என்று காப்போம் என்று வரிகள் வரும்படி*புதிய விளக்கத்தை பொதுவுடைமை பற்றி* கவிஞர் பாரதிதாசன் எளிதாக எழுதினார். எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்து, வளர்ந்து வந்த சமயத்தில் மிக சரியான வகையில் , மக்களை கவரும் வண்ணம் பயன்படுத்திக் கொண்டார் .*
***
எம்.ஜி.ஆர். தன் திரைப்படங்களில் தன்னை பாட்டாளிகளின் தோழனாக, மீனவ சமுதாயத்தின் காவலனாக, ஏழை எளியோரின் துயர் துடைப்பவனாக நடித்த*படங்களின் எண்ணிக்கை அதிகம் .* குறிப்பாக படகோட்டி படத்தில் வரும் தரைமேல் பிறக்க வைத்தான் , எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான் , கரைமேல் இருக்க வைத்தான், பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான் .என்ற பாடலில் ஒருநாள் போவார், ஒருநாள் வருவார் , ஒவ்வொரு நாளும் துயரம். ஒரு ஜான் வயிறை , வளர்ப்பவர் துயரை ஊரார் நினைப்பது சுலபம் என்ற கவிஞர் வாலியின் பாடலில் மீனவ சமுதாயத்தின் ஒட்டு மொத்த வாழ்க்கை துயரத்தை அடக்கி , தனக்கே உரிய பாணியில், சோகத்தோடு நடித்து அசத்தினார் .தொடர்ந்து* கொடுத்ததெல்லாம் கொடுத்தான், பாடலில் உனக்காக ஒன்று, எனக்காக ஒன்று, ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை .* படைத்தவன் மேல் பழியுமில்லை. பசித்தவன்மேல் பாவமில்லை, கிடைத்தவர்கள் பிழைத்துக் கொண்டார் . உழைத்தவர்கள் தெருவில் நின்றார்.* இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார். மடி நிறைய பொருளிருக்கும் . மனம் நிறைய இருள் இருக்கும் .* என்றகவிஞர் வாலியின்* வைர வரிகள்*எம்.ஜி.ஆரின் இமேஜுக்கு பெரும் பலம் சேர்த்தன . இந்த பாடல்கள் மூலம் கவிஞர் வாலி உச்சத்தை தொட்டார். எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞர் ஆனார் வாலி .* ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆர். நாடக துறையில் இருந்த சமயத்தில் ஆர்வத்தின் காரணமாக இசை ஞானத்தை வளர்த்துக் கொண்டதால், பிற்காலத்தில் அந்த திறமையை தன்* பாடல்களில் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக அமைந்தது .* அதன் காரணமாக அவரது பாடல்கள்* காலத்தால் அழியாமல் , இன்றும் மக்களால் ரசிக்கப்படுகின்றன .
எம்.ஜி.ஆர். முதல்வரானபின் 1977ல் வெளியான**படம் மீனவ நண்பன்*தேர்தலில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதல்வரானதும், ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக சில நாட்கள் மீனவ நண்பன் படத்திற்கான தன்னுடைய* காட்சிகளில் நடித்து முடித்துதான் பதவி ஏற்றார். இந்த படத்தில் மீனவ சமுதாயத்தின் குறை தீர்க்கும் தலைவனாக நடித்திருப்பார் .* இந்த படத்தில்*அப்போதைய எதிர் கட்சியான தி.மு.க.வை சாடும் வகையில் பட்டத்து ராஜாவும், பட்டாள சிப்பாயும் ஒன்றான காலமிது* என்ற பாடல் அமைந்திருக்கும் . இந்த பாடலில் கோட்டை கட்டி கும்மாளம் போட்ட கூட்டங்கள் என்னானது . பல ஓட்டை விழுந்து தண்ணீரில்**மூழ்கும் ஓடங்கள் போலானது என்ற வரிகள் வரும்இந்த பாடல்கள் வரிகள்*எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மத்தியில் அப்போது பலத்த வரவேற்பை பெற்றது .***.
1974ல் வெளியான,நடிகர்*அசோகன்*சொந்தமாக தயாரித்த* நேற்று இன்று நாளைதிரைப்படத்தில்* அரசியல் நெடி மிகுந்த வசனங்கள் இருந்தன* தனது கட்சியின்*கொள்கைகள், எதிர்க்கட்சியின் ஊழல்கள் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துரைக்க நல்ல வாய்ப்பாக*எம்.ஜி.ஆர். பயன் படுத்தி வெற்றியும் பெற்றார் .**நான் படித்தேன்*காஞ்சியிலே நேற்று என்ற பாடலில், மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார் , தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் .வீதிக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே, தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்துவிட்டார் நகரசபையிலே.* ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார். தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்.* இந்த வரிகள்*தி.மு.க. கட்சியை*நேரடியாக தாக்குவது போலிருக்கும்.**
1971ல் வெளியான ரிக்ஷாக்காரன் திரைப்படத்தில்* கவிஞர் வாலியின்*அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் . அது ஆணவ சிரிப்பு என்கிற*பாடல் வரும் எம்.ஜி.ஆர். தி.மு.க. வில் இருந்தபோது வெளியான படமாக இருப்பினும் , பாடலிலுள்ள வரிகள்*, கருத்துக்கள்*, அவர் அ தி.மு.க.வை தொடங்கியபின்* பார்க்கும்போது*தி.மு.க.விற்கு எதிரான கருத்துக்கள், எம்.ஜி.ஆர். கணக்கு கே*ட்டது*குறித்த*எழுப்பிய* கேள்விகள்**போன்று பாவித்து ரசிகர்கள் இந்த பாடலுக்கு*நல்ல வரவேற்பை அளித்தனர் .*.**
தேர்தல் பிரச்சாரங்கள், பொது கூட்டங்களில் கலந்து கொள்ள செல்லும்போது*எதிர்க்கட்சியினர் எம்.ஜி.ஆரைதிரைமறைவாக இருந்து**தாக்க முற்படுவதாக அவ்வப்போது தகவல்கள் அவருக்கு கிடைக்கும் . எப்போதும்*தன்னுடன் சில*ஸ்டண்ட் நடிகர்கள் பாதுகாப்பிற்கு உடன் வைத்துக் கொள்வார் .* காவல்துறையினரை விட அவர்களையே அதிகம் நம்புவார் .* ஒருமுறை திண்டுக்கல் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும்போது மணப்பாறை அருகிலே உள்ள கிராமத்தில் ஒரு ஓலை குடிசையில் வயதான பெண்மணி தயார் செய்த சாப்பாட்டை*சாப்பிட்டு*அங்கேயே தங்கியுள்ளார் . பின்னர் திண்டுக்கல் வெற்றிக்கு பிறகு மறுமுறை மணப்பாறை சென்றபோது அதே ஓலை குடிசைக்கு*சென்று தனக்கு*உணவளித்த அந்த தாயை சந்தித்து ஒரு தூக்கு வாளியில் பணக்கட்டுகளை அடுக்கி*பரிசளித்தார்* வள்ளல் எம்.ஜி.ஆர்.*.இந்த சம்பவம் பின்னர் அந்த ஊர் முழுவதும் பரவி,அந்த பெண்மணி பிரபலம் ஆனார் .** இதே போன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த வரலாறு உண்டு. சொல்லிக் கொண்டே*போகலாம் . தான் ஆட்சிக்கு வந்ததும்* ஏழை எளியோர் தங்கும் ஓலை குடிசைகளுக்கு இலவசமாக ஒரு விளக்கு என்ற திட்டத்தை*உருவாக்கி*ஏழை மக்களின் ஒளி விளக்காக திகழ்ந்தார் .**
ஒரு தொண்டனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் பயணித்து*பின்னர் சாலைகளில் கார்*செல்லமுடியாத தருணத்தில்*, குறுகலான பாதைகளில்*நடந்தே சென்று*பங்கேற்று , மணமக்களுக்கு பரிசளித்து அவர்களை*ஆசிர்வதித்து வந்தார் . இந்த மாதிரி சம்பவங்கள் கூட நிறைய உண்டு .நீதிக்கு தலைவணங்கு படத்தில் நான் பார்த்தா பைத்தியக்காரன் பாடலில்*ஜாதி, மதம் ,இனம்,மொழி***பார்ப்பவன் நானில்லை. நான் நெருப்பினால் நடப்பவன்டா* ஆனால் நீதிக்கு பயந்தவன்டா , தர்மத்தை அழிக்க வந்தால்*உயிரை தந்தேனும் காப்பவன்டா*,* ஊருக்குள் நீ செய்யும் அநியாயம் நான் உள்ளவரை*நிச்சயம் நடக்காது .இந்த உண்மைகளை ஊரறிய எடுத்துரைப்பேன் நாளை உன்னுடைய ஆட்டத்தை நான் முடித்து வைப்பேன்*என்ற பாடல் வரிகள்*தி.,.மு.க.வின் அராஜக ஆட்சிக்கு எதிராக*எழுதப்பட்டு அரங்குகளில் எம்.ஜி.ஆர். ரசிகர்களால் அபார வரவேற்பை பெற்றது .
தேடி வந்த மாப்பிள்ளை என்ற படம் 1970ல் வெளிவந்தது .அதில் வரும் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற பாடல் மிக பிரபலம் . தேர்தல் பிரச்சாரங்களில் , அ, தி. மு.க. பொது கூட்டங்களில் இந்த பாடல் அதிகம் உபயோகத்தில் இருந்தது .* இப்போதும் எம்.ஜி.ஆர். ரசிகர்கள், சில அமைச்சர்கள்,*எம்.ஜி.ஆர். அபிமானிகள் தங்களது செல்போனில் ரிங்க்டோனாக வைத்துள்ளனர் .தாயின் பெருமைகள், சிறப்புகள் இந்த பாடலில் அழகாக வடிவமைத்து இருப்பார்கள் . பெற்றெடுத்து பேர் தொடுத்த அன்னை அல்லவோ, நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ . தாய் பாலில் வீரம் கண்டேன் . தாலாட்டில் தமிழை கண்டேன் .அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம் பிள்ளையினால் பன்னீர் ஆகும்.* ஆசை தரும் கனவுகள் எல்லாம் அவனால்தான்* நனவுகள் ஆகும் என்ற வரிகள் பாராட்டை பெற்றன .
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்.ஜி.ஆரும், நம்பியாரும் மோதும் சண்டைக்காட்சி ஒன்று எடுப்பதற்காக செங்கல்பட்டு அருகில் ஒரு இடத்தில ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து மூலம் செட்* அமைத்தார்கள் . அந்த செட் அமைப்பை* பார்வையிட அடிக்கடி செங்கல்பட்டு சென்று வந்தார் எம்.ஜி.ஆர்.*ஒருமுறை சாப்பிடுவதற்கு ஒன்றும் கிடைக்காத பட்சத்தில் அருகில் உள்ள கிராமத்தில் சென்று ஏதாவது வாங்கி வருமாறு இருவரை பணித்து ரூ.100/- கொடுத்து அனுப்பினார் .* அவர்கள் வேகவைத்த வேர்க்கடலை, சீனிக்கிழங்கு வாங்கி வந்தனர் . அதை தானும் உண்டு அனைவருக்கும் பகிர்ந்தளித்தார் .மீண்டும் மீண்டும்* தான் செங்கல்பட்டிற்கு செல்லும்போதுதன்னுடன் வருபவர்களுக்காக* தனக்கு பிடிக்கிறதோ இல்லையோ அந்த பெண்மணியிடம் வேர்க்கடலை, சீனிக்கிழங்கு* வாங்கிவிட்டு கையில் உள்ள பணத்தை கொடுத்துவிட்டு வாருங்கள் என்று பணித்துள்ளார் .எம்.ஜி.ஆர். முதல்வரானபின்பு , அந்த வயதான பெண்மணி இறந்து போன தகவல் யார் மூலமோ* எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்படுகிறது ,உடனே எம்.ஜி.ஆர். கார் மூலம் செங்கல்பட்டு சென்று அந்த குடிசைக்கு சென்று அந்த பெண்மணிக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார் என்பது வரலாறு . இந்த மாதிரி யாரும் எதிர்பார்க்காத, கனவிலும் காணாத சம்பவங்கள்,ஏழைகளுக்கு செய்த உதவிகள்* எம்.ஜி.ஆர். விஷயத்தில் ஏராளம் உண்டு. இந்த செயல்களும் மனித இதயங்களில் ஆழமாக பதிந்தனால்தான்* எம்.ஜி.ஆர் வாக்கு வங்கி என்பது கணிசமான அளவில் கிராமப்புற பகுதிகளில் பெருகி உள்ளது என்று சொல்வதுண்டு .**
நிகழ்ச்சியில் கீழ்கண்ட பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன*
1. சங்கே முழங்கு* *- கலங்கரை விளக்கம் .
2.சித்திர சோலைகள்* - நான் ஏன் பிறந்தேன்*
3.அச்சம் என்பது மடமையடா*- மன்னாதி*மன்னன்*
4.காடு வேலன்ச்சு என்ன மச்சான் - நாடோடி மன்னன்*
5.தரை மேல் பிறக்க வைத்தான்* - படகோட்டி*
6.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி*
7.புத்தன்*இயேசு காந்தி பிறந்தது*- சந்திரோதயம்*
8.பட்டத்து ராஜாவும் பட்டாள* சிப்பாயும் - மீனவ நண்பன்*
9.நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று - நேற்று இன்று நாளை*
10.அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் -ரிக்ஷாக்காரன்*
11.நான் பார்த்தா*பைத்தியக்காரன்*- நீதிக்கு தலை வணங்கு*
12.வெற்றி மீது வெற்றி வந்து - தேடி வந்த மாப்பிள்ளை*
* *
மலேசியா நாட்டில் தைப்பிங் என்கிற இடத்தில் மிக பிரமாண்டமான அய்யனார் கோவில் உள்ளது இந்த கோவில் வளாகத்தில் மக்கள்திலகம் அவர்களுக்கும் கோவில் உள்ளது. மலேசியா அரசாங்கம் இந்த கோவில் வளாகத்தை சுற்றுலா மையமாக அறிவித்து உள்ளது. கோவிலுக்கு வருபவர்கள் மக்கள்திலகத்தை வணங்கி வழிபட்டு பின்னர் அய்யனாரை வழிபட செல்லுகின்றனர்...... Thanks...
எம்.ஜி.ஆர் பிறந்ததினம் ஏழைமக்களின் மறுவாழ்வு தினமாக வோ அல்லது ஏழைக்குழந்தைகளின் மறுவாழ்வு தினமாக பள்ளிகளில் கொண்டாடப்படவேண்டும்..... Thanks...
நடிகர் எஸ்.எஸ்.ஆர் MGR பற்றி கூறியது...
1958, ஜனவரியில் பெரியார் மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களை அன்றைய பிரதமர் நேரு 'நான்சென்ஸ்' என்று சொன்னதைக் கண்டித்து, கடும் எதிர்ப்பு நிலவியது. அந்த உணர்வைத் தெரிவிக்க, அப்போது சென்னைக்கு வரவிருந்த நேருவுக்கு, விமான நிலையத்தில் மிகப் பெரும் அளவில் கறுப்புக் கொடி காட்ட வேண்டும் என கழகத்தின் முடிவை அண்ணா தெரிவித்திருந்தார்.
அப்போதெல்லாம் கழகத்திற்கு அதிக நிதி வசதி கிடையாது. இது போன்ற நிலைமைகள் ஏற்படும்பொது எம்.ஜி.ஆரும், நானும் தான் அதற்கான முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வோம். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ், எஸ்.எஸ்.ஆர் பிக்சர்ஸ் ஆகிய சினிமா கம்பெனிகளுக்குச் சொந்தமான தையல் மிஷின்கள், இரவு பகலாக கறுப்புக் கொடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டன.
அண்ணாவும் மற்ற முன்னணி தலைவர்களும் முன்கூட்டியே கைது செய்யப்பட்டனர். போலீஸ் என்னையும் எம்.ஜி.ஆரையும் கண்கானித்தது.
மறுநாள் அதிகாலை நாலு மணிக்கு சென்னை நகர போலீஸ் கமிஷனர் எனக்கு போன் செய்து "இன்னும் சிறிது நேரத்தில் உங்களைக் கைது செய்ய வரப்போகிறோம், தயாராக இருங்கள்" என்றார். அதன்படி நான் கைது செய்யப்பட்டு மைலாப்பூர் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டேன்.
அங்கே போனவுடன், எனக்கு முன்பாக எம்.ஜி.ஆரைக் கைது செய்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்துள்ளனர் என்ற தகவல் தெரிந்தது. நான், அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம், "என்னையும் அவர் கூடவே இருக்கும்படி சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு அனுப்பிவிடுங்கள்" என்று கேட்டுக்கொண்டேன். இரு காவல் நிலையங்களுக்கு வெளியே பெருங்கூட்டம். இருவரும் ஒரே இடத்தில் இருந்தால் நிலைமை சமாளிக்க முடியாது எனக் கூறி எங்கள் இருவரையும் அன்றிரவு முழுக்க வெவ்வேறு காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
மறுநாள் காலை என்னை மத்திய சிறைக்கு அழைத்துப்போனார்கள். அங்கு முதல் மாடியில் முதல் அறையில் கொண்டு போய்விட்டார்கள்.
அங்கே ஆச்சரியம். எனக்கு முன்பாகவே அண்ணன் எம்.ஜி.ஆர் இருந்தார். இருவருக்கும் ஒரே அறை என்றதும் எனக்கு சிறைச்சாலைக் கூடமே சித்திரக்கூடமாகத் தெரிந்தது. மிகச் சிறிய அந்த அறையில் பயன்படுத்துவதற்கு திண்ணை போல ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதன் மேல் அழுக்கடைந்த, மூட்டைப்பூச்சிகளின் ஆக்கிரமிப்பில் உள்ள மெத்தை, அதில் படுப்பதும் தூக்குமேடையில் தொங்குவதும் ஒன்றுதான். அதைக் கீழே தூக்கிப் போட்டோம்.
எங்கள் இருவருக்கும் கைகள்தான் தலையணை. வெறும் தரையில் படுத்துக் கொண்டோம். பேச்சுவாக்கில் மனம் திறந்து அவர் தன்னுடைய இளமை கால பருவத்தை நினைவு கூர்ந்தார்.
"கும்பகோணத்தில், என்னுடைய அம்மா அக்கம்பக்கத்து வீடுகளில் வீட்டுவேலை செய்பவர். அங்கிருந்துதான் சோறும் குழம்பும், பொரியல் எல்லாம் கொண்டு வருவார். எனக்கு அதுவரை பசி தாங்க முடியாது. இடுப்பில் ஈரத்துணியைக் கட்டிக் கொண்டு வயிற்றைப் பிடித்தபடி படுத்திருப்பேன்" என்று அவர் சொன்ன போது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர்த் துளிகள். இளம் வயதில் பல இன்னல்களைச் சந்தித்தவர் அவர் என்ற விபரம் அப்போது தான் எனக்குத் தெரிந்தது.
பகல் பன்னிரண்டு மணிக்கு எங்களுக்கு உணவு தரப்பட்டது. வட்ட அலுமினியத் தட்டில் சிவப்பு அரிசி சோறு. சிரமப்பட்டு சாப்பிட்டபடியே எம் ஜிஆரைப் பார்த்தேன். அவர் எவ்வித சலனமும் இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதுமாதிரி சாப்பாட்டை நான் சாப்பிட்டது இல்லை. என் நிலையை புரிந்து கொண்ட அவர், "சிறு வயதிலேயே சாப்பிட்டுப் பழகி விட்டேன். அதனால் இது எனக்கு புதிது கிடையாது" என்றார்.
அங்கு ஒரு மண்பானை இருந்தது. அருகில் ஒரு தகர டப்பா. அதில் தண்ணீர் எடுத்துக் குடித்துக் கொள்ளவேண்டும். அந்த மண்பானைக்கருகில் இரு மண்சட்டிகள் இருந்தன. 'அவை எதற்கு?' என்று அண்ணனிடம் கேட்டேன்.
" அவை இரவு கழிப்பிட வசதிக்காக.." என்றார்.
" எப்படி இதையெல்லாம் பயன்படுத்துவது.." என தர்மசங்கடத்துடன் அவரைக் கேட்க,
"வேறு வழி? இது மாதிரி ஒரே அறையில் ஐந்தாறு பேர் கைதிகளாக இருக்கிறார்களே அவர்களது நிலைமையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்" என என்னைச் சமாதானப் படுத்தினார்.
நாங்கள் சிறையிலிருப்பது தெரிந்து பல பட அதிபர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலர் எங்களைக் காண வந்தனர். வந்தவர்கள் கூடை கூடையாகப் பழங்கள் வாங்கி வந்தனர். எல்லாவற்றையும் சிறைக் கைதிகளுக்கு பகிர்ந்து கொடுத்தோம்.பெரும்பாலான கைதிகளுக்கு நாங்கள் யாரென்றே தெரியவில்லை. அவர்கள் அனைவரும், தியாகராஜ பாகவதரும, என்.எஸ்.கிருஷணனும் சிறைச் சாலையில் இருந்த காலத்தில் உள்ளே வந்த ஆயுள் கைதிகள்.
பிரதமர் நேருவுக்கெதிரான கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அன்றிரவு பத்து மணியளவில் அண்ணாவையும் மற்ற பிரமுகர்கள் பலரையும் போலீஸ் விடுதலை செய்தது. அடுத்த நான் காலையில் என்னையும் எம்.ஜி்ஆரையைம் விடுதலை செய்தனர். அன்றைய தினம் பகல் உணவை எங்கள் குடும்பத்தோடு சாப்பிட்டு விட்டுத்தான் ராயப்பேட்டையில் உள்ள வீட்டுக்குப் போனார் அண்ணன். சிறையில் அவருடன் இருந்த அந்த வித்தியாசமான அனுபவம் என்னால் மறக்க முடியாத ஒன்று....... Thanks...
ஸடைல் டிரஸிங் எந்த நிறம் போட்டாலும் தனி கலை
ஷூ பல வித மாடலை காட்டியது கூலிங் கிளாஸ் அழகு கூடியது எம் ஜிஆரிடம்
ஸடைலுக்கு ஒர் பல்கலை கழகம்........ Thanks...
எம்.ஜி.ஆர்-ஐ கீழே விழ வைக்க முயன்ற நம்பியார்! நடிகர் ராஜேஷ் பகிரும் பொக்கிஷம்
முழு வீடியோ: https://youtu.be/660wXsZGhKU
#Rajesh #Pokkisham #MGR #Nambiyar #Jeppiar...... Thanks...
Blossom Terry இதில் திரு.ராஜேஷ் சொன்னதில் எந்த இடத்தில சினிமாவை தூக்கி பிடிக்கிறார்னு நீங்க இவ்வளவு கடுமையா விமர்சிக்கிறீங்க ! புரட்சித்தலைவரின் நல்ல பண்புகளை ,அவர் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருந்த போதும் அவருடைய அந்தபணிவும் ,கனிவும் ,கருணையும் அவரிடம் பரிணமளித்ததுஎன்பதை நீங்கள் புரிந்து கொள்ள மறுப்பதுதான் உங்களை போன்ற அறிவுஜீவிகளின் அதிமாதாவித்தனமா ? உங்களைப்போன்ற போலி அறிவுஜீவி பைத்தியாகாரத்தனம் இன்னுமா உங்களுக்கு தெளியவில்லை!..... Thanks...
Blossom Terry sir,please try to understand me! MrRajesh could not be told for Mr.MGR's cini field imagination ! And then he had toldabout the real life's habits of our hounarable puratchithalaivar Dr.MGR! If let your argument there is the eligible for politics what about that ?I have told surely Your's soul is full fill of the bad thinking only! Please ,change your arquments and thinking about our MGR!........ Thanks...
என்.எஸ்.கிருஷ்ணன் எனும் ஆசான்.
M.G.R. அறிமுகமான ‘சதி லீலாவதி’ படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்துள்ளார். தொழில் முறையிலும் வயதாலும் எம்.ஜி.ஆருக்கு மூத்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆருக்கு பல வகைகளில் உதவியதோடு, படங்களில் வாய்ப்பு கிடைக்க சிபாரிசும் செய்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு வழிகாட்டியாகவும் விளங்கியவர்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் உதவும் குணமும், இளகிய நெஞ்சமும், நகைச்சுவை உணர்வும் அனைவரும் அறிந்ததுதான். ஒருமுறை, என்.எஸ்.கிருஷ்ணனை அவரது வீட்டில் ஒரு நிறைமாத கர்ப்பிணி சந்தித்து தனது வறுமையைச் சொல்லி உதவி கேட்டார். அந்தப் பெண் மீது இரக்கப்பட்டு என்.எஸ்.கிருஷ்ணன் 100 ரூபாய் வழங்கினார். அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. நன்றி தெரிவித்துவிட்டு சிறிது தூரம் சென்ற அந்தப் பெண்ணை என்.எஸ்.கிருஷ்ணன் திரும்ப அழைத்தார். வந்த பெண்ணிடம் மீண்டும் ஒரு 100 ரூபாய் கொடுத்தார். ஏன் மறுபடியும் பணம் கொடுக்கிறார் என்று அந்தப் பெண் புரியாமல் பார்த்தார்.
என்.எஸ்.கிருஷ்ணன் சிரித்தபடியே நிதானமாகச் சொன்னார். ‘‘முதலில் கொடுத்த 100 ரூபாய் உன்னைப் பார்த்து நான் இரக்கப்பட்டதற்கு, இப்போது கொடுத்த பணம் உன்னுடைய நடிப்புத் திறமைக்காக. தயவு செய்து உன் வயிற்றில் கட்டியிருக்கும் துணியை எடுத்து விடம்மா..’’ என்றாராம். தன்னை ஏமாற்றி பணம் வாங்கிய பெண்ணிடம் கூட கோபம் கொள்ளாமல் அந்த பெண்ணின் தவறை தனக்கே உரிய நகைச்சுவையோடு சுட்டிக்காட்டியிருக்கிறார் கலைவாணர்.
என்.எஸ்.கிருஷ்ணனை தனது ஆசான்களுள் ஒருவராக கருதிய எம்.ஜி.ஆருக்கும் ஒருமுறை இதே போன்ற அனுபவம். அவர் முதல்வராக இருந்தபோது ஒரு பெண் கர்ப்பிணியாக இருப்பதாக கூறி உதவி கேட்டு வந்தார். எம்.ஜி.ஆரும் அவர் கேட்ட உதவியை செய்துள்ளார். வாங்கிக் கொண்டு அந்தப் பெண் வெளியேறும்போது எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண் நடிப்பதை கண்டுபிடித்துவிட்டனர். அந்தப் பெண் மன்னித்து அனுப்பப்பட்டார். அவர் சென்ற பிறகு கலைவாணர் வாழ்வில் நடந்த மேலே கூறப்பட்ட சம்பவத்தை உதவியாளர்களிடம் சொல்லி சிரித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
ஆரம்ப காலத்தில் ‘மாயா மச்சீந்திரா’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக என்.எஸ்.கிருஷ்ணனும் எம்.ஜி.ஆரும் கொல்கத்தா சென்றனர். படப்பிடிப்புக்கு இடையே கொல்கத்தாவை சுற்றிப் பார்க்க படக்குழுவினர் புறப்பட்டனர். அப்போது ஓரிடத்தில் ஓடை ஒன்று குறுக்கிட்டது. படப்பிடிப்பு குழுவினர் ஓடையில் இறங்கி கடக்கும்போது, எம்.ஜி.ஆர். தனக்கே உரிய துடிப்போடு அந்த ஆறடி அகலமுள்ள ஓடையை ஒரே தாண்டாக தாண்டி குதித்து விட்டார். அப்படி தாண்டிக் குதித்ததில் அவரது செருப்பு ஒன்று அறுந்துவிட்டது.
உடனே, என்.எஸ்.கிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆர். ‘‘வாங்கண்ணே, புது செருப்பு வாங்கி வரலாம்’’ என்று கூறியிருக்கிறார். அதற்கு ‘‘இன்று நேரமாகிவிட்டது. நாளை செல்லலாம்’’ என்று பதிலளித்தார் கிருஷ்ணன். மறுநாள் காலை எம்.ஜி.ஆர். மீண்டும் வந்து நினைவுபடுத்திய போது, அவரது கையில் ஒரு பார்சலை திணித்தார் கிருஷ்ணன். அதை எம்.ஜி.ஆர். ஆவலோடு பிரித்து பார்த்தார். உள்ளே, அவரது பழைய செருப்பு. ‘‘என்னண்ணே, புது செருப்பு வாங்கலாம்னு கூப்பிட்டா, பழைய செருப்பையே கொடுக்கறீங்க?’’ என்ற எம்.ஜி.ஆரை தீர்க்கமாக பார்த்தபடி பதிலளித்தார் என்.எஸ்.கிருஷ்ணன்.
‘‘உன்னையும் உங்க அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியையும் நாடகத்தில் நடிக்க உங்க அம்மா அனுப்பிவெச்சது பணம் சம்பாதிக்கத்தான். பழைய செருப்பு நல்லாத்தான் இருக்கு. அதை நான் தைச்சு வெச்சுட்டேன்’’ என்று சொன்ன கிருஷ்ணனின் அன்பில் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்துபோய்விட்டார். அன்று முதல் எல்லா பொருட்களையும் முழுமையாக பயன்படுத்தவும் எளிமையாக இருக்கவும் முடிவு செய்தார். அப்படி எளிமையாகவும் ஆடம்பரம் இல்லாமலும் இருக்க அவர் கற்றுக் கொண்டதற்கு ஒரு உதாரணம். பத்து ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் வீட்டில் கடைசி வரை குடிநீர் குழாய் இணைப்பு கிடையாது. தோட்டத்தில் உள்ள கிணற்று நீர்தான் பயன்படுத்தப்பட்டது. வீட்டுக்கு குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத ஒரே முதல்வர் எம்.ஜி.ஆராகத்தான் இருப்பார்.
தனக்கு ஆசான் போல இருந்த என்.எஸ்.கிருஷ்ணன், கடைசி காலத்தில் வறுமையால் வாடி நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவருக்கு நிறைய உதவிகளை எம்.ஜி.ஆர். செய்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணனை எம்.ஜி.ஆர். சென்று பார்த்தார். யாரிடமும் எந்த உதவியும் கேட்க மாட்டார் கிருஷ்ணன். அதற்காக எம்.ஜி.ஆர். சும்மா இருந்து விடுவாரா? அவரால் கொடுக்காமல் இருக்க முடியாதே? என்.எஸ்.கிருஷ்ணன் படுத்துக் கொண்டிருந்த கட்டிலில் தலையணைக்கு அடியில் பணக்கட்டுகளை வைத்துவிட்டு வருவார் எம்.ஜி.ஆர்.
என்.எஸ்.கிருஷ்ணன் மறைந்த பின் நாகர்கோயிலில் அவரது வீடு ஏலத்துக்கு வந்தபோது அதை மீட்டு மீண்டும் அவர்கள் குடும்பத்தினருக்கே எம்.ஜி.ஆர். கொடுத்தார். அவரது குடும்பத்தையே எம்.ஜி.ஆர். தத்தெடுத்துக் கொண்டார் என்று சொல்லலாம். என்.எஸ்.கிருஷ்ணனின் பிள்ளைகள் எல்லாரையும் படிக்க வைத்தார். அவரது மகள் திருமணத்தை தனது சொந்த செலவில் நடத்தி வைத்தார்.
‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்தார். ஆரம்பத்தில் இருவருக்கும் போட்டி பாட்டு ஒன்று இருக்கும். அதிலே பல அரிய கருத்துக்கள் கேள்வி பதில் பாணியில் அமைந்திருக்கும்.
என்.எஸ்.கிருஷ்ணனை பார்த்து எம்.ஜி.ஆர். கேட்கும் ஒரு கேள்வி..
‘‘புகையும் நெருப்பில்லாமல் எரிவது எது?’’
பதில் சொல்லத் தெரியாமல் என்.எஸ்.கிருஷ்ணன் தவிப்பதை தொடர்ந்து எம்.ஜி.ஆரே பதிலளிப்பார்...
‘‘பசித்து வாடும் மக்கள் வயிறு அது...”
உடனே, ‘‘சரிதான் சரிதான்....’’ என்று ஆமோதிப்பார் என்.எஸ்.கிருஷ்ணன்.
புகையும் நெருப்பும் இல்லாமல் பசியால் எரிந்த ஆயிரக்கணக்கான வயிறுகளை உணவு என்னும் தண்ணீர் ஊற்றி குளிர்வித்தவர் எம்.ஜி.ஆர்.
நடிகர்களைக் கூத்தாடிகள் என்று சமூகம் கேலியாக பேசி வந்த காலத்தில், எம்.ஜி.ஆரால் நடிகர்களுக்கு அந்தஸ்தும் கவுரவமும் கிடைத்தது. 1965-ம் ஆண்டு அந்தமானில் அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியால் ‘பணத்தோட்டம்’ எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் திறந்து வைக்கப்பட்டது. ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தை நாட்டின் பிரதமர் திறந்து வைத்த பெருமை உலகிலேயே எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உண்டு....... Thanks........
1977 தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தல் ::::
முதல்ல சஸ்பென்ஸை உடைச்சுட்டு, எம்ஜிஆரோட தேர்தல் பிரச்சாரத்துக்கு கிளம்பலாம்! இல்லேன்னா தம்பி பொன்னுவேல் ரொம்ப கோவிச்சுக்குவாரு!
எம்ஜிஆரின் முகவாட்டத்தை அறிந்த எம்.எஸ்.வி ஒரு தீர்வு சொன்னார்! அது, எம்ஜிஆர், மக்களிடம் ஓட்டுக்கேட்கும் பிரச்சாரத்தையும், அத்தோடு ஐந்து பாடல்களையும் இணைத்து அப்போதுதான் வந்திருந்த L. Pரிக்கார்டுகளா தயார் பண்ணி, எல்லா கிளைக்கழகங்களுக்கும் அனுப்பிச்சிடலாம் என்பதே அவர் ஐடியா!
எம்ஜிஆர் அசந்து போனார்! விஸ்வநாதனுக்கு இசையைத்தவிர வேறெதுவும் தெரியாது என்பதே எம்ஜிஆர் எண்ணமாக இருந்தது!
அப்போதுதான் பெரிய சைஸ் அரக்கு ரிக்கார்டுகள் முடிவுக்கு வந்து, சிறிய சைஸ் சின்தெடிக் ரிக்கார்டுகளும், சாவி கொடுக்க தேவையில்லாத நவீன கிராமபோன் பெட்டிகளும் விற்பனைக்கு வந்திருந்தது! அதனால் குரல், இசையெல்லாம் துல்லியமாக, இனிமையாக மக்களை சென்றடைந்தது! இதுவும் எம்ஜிஆருக்கு மிகப்பெரிய அனுகூலம்!
சத்யா ஸ்டுடியோ ரிக்கார்ட் தியேட்டரில் "என் தாய்மார்களே "எனத்துவங்கும் எம்ஜிஆர் பேசும் பேச்சும், இரட்டை இலை வெற்றி இலை என TMS பாட்டும், அதோடு சுசீலா, வாணிஜெயராம் குரல்களில் நான்கு பாடல்களுமாக இரண்டே நாளில் ரிக்கார்ட் ஆனது!
எம்ஜிஆரின் ஆஸ்தான கவிஞர்கள் வாலி, புலமைப்பித்தன் பாடல்களை எழுதினர்! இதற்கான தொகையை எம்ஜிஆர் தந்த போது கண்ணீர் சிந்த எம்.எஸ்.வி "என்னையும் உங்களையும் பிரித்துப்பார்த்து விட்டீர்களே அண்ணா" என்று உறுதியாக வாங்க மறுத்து விட்டார்! கவிஞர்கள் தொட்டு, பாடகர்கள், இசை அமைப்பாளர் என்று யாரும் ஊதியம் பெற்றுக்கொள்ளவில்லை!
கிளைக்கு ஒரு ரிக்கார்ட் இலவசமாக தர வந்த போது நான் உள்பட பெரும்பான்மை கிளைச்செயலாளர்கள் வாங்க மறுத்து, நான்கைந்து ரெக்கார்டுகளை கடையில் பணம் தந்து வாங்கிக்கொண்டோம்!
இன்றளவும் அண்ணா திமுக மேடைகளில் அந்தப்பாடல்களும், எம்ஜிஆரின் உரையும் தேர்தல் காலங்களில் ஒலிப்பரப்பப்பட்டே வருகிறது!
மூன்று மாதத்துக்கு முன் எம்.பி தேர்தல் பிரச்சாரத்துக்கு போன இடங்களாக இல்லாமல், புதிய பாதைகளில் புதிய இடங்களில் எம்ஜிஆர் பயணம் அமைவதாக பார்த்துக்கொள்ளப்பட்டது!
அப்படித்தான் அயோத்தியாப்பட்டிணம் --பேளூர் மார்க்கமாக படையாச்சியூர், ஏத்தாப்பூர் வழியாக ஆத்தூர் போவதாக பயணத்திட்டம் வகுக்கப்பட்டது! இன்றைக்கு 23,18 அடி அகலத்தில் நவீன எந்திரங்களை வைத்து சற்று குதிப்பது கூட இல்லாமல், நெகுநெகு என்று இருக்கும் அந்த சாலை அன்றைக்கு மாட்டு வண்டியில் கூடப்பயணிக்க தகுதியற்ற, பத்தடி அகலமுள்ள குண்டும் குழியுமான சாலை!
இன்றைக்கு தலைவர்கள் வந்தால் நான்குவழிச்சாலையில் கூட எங்காவது ஒன்றாக இருக்கும் வேகத்தடைகளை முழுக்க அப்புறப்படுத்தி விடுகிறார்கள்! இத்தனைக்கும் நவீன ஏர்பலூன் வைத்த இம்போர்டெட் வண்டிகள்! பெரிய குழிகளில் விட்டால் கூட ஜெர்க் ஆகாது!
அவர் குளிர் வசதியில்லாத தூக்கி தூக்கி போடும் ஸ்டான்டேர்ட் வேனைத்தான் பயன்படுத்தினார்! ஒரு மர ஸ்டூல் அசையாமல் போல்ட்டுகள் போட்டு இருக்கும்! மூன்று பேர் நிற்கும் அளவு மேல் மூடி திறந்து, அதில் அவர், வேட்பாளர், பாதுகாவலர் இரண்டு பேர் என நெருக்கிப்பிடித்து நிற்பார்கள்! கட்சியினர் வண்டிக்குள் ஏழெட்டு பேர் இருப்பார்கள்!
அவ்வளவுதான் அந்த காலத்தில், அந்த வண்டியில் அதிகப்பட்ச வசதி!
குண்டும் குழியும் சாலையில், தூக்கித்தூக்கிப்போடும் வண்டியில், மூச்சு விடக்கூட காற்றின்றி, நெருக்கிக்கொண்டு, நேரத்துக்கு நேரம் சோறு தூக்கமின்றி எம்ஜிஆர் தமிழகம் முழுக்க கோடிக்கணக்கான மக்களை, சிரித்த முகத்தோடு சந்தித்தார்!
காத்திருப்பதில் மக்கள் பட்ட துன்பத்தை விட, பயணப்பட்டு எம்ஜிஆர் அடையும் வேதனை அதிகமாகத்தான் இருந்தது! இருந்தும் பெரும்பாலும் பயணத்தை ரத்து செய்ய மாட்டார்! ஓய்வுக்கு ஒதுக்கிய நாளையும் பிரச்சாரத்துக்கே பயணப்படுத்துவார்! அவ்வளவு துன்பங்களும் மக்களைப்பார்த்தால் பஞ்சு பஞ்சாக பறந்து போய் முன்னிலும் உற்சாகமாவார்!
மக்களின் அன்பு மழையில் நனைந்து விட்டு, வண்டியில் பயணிக்கும் போது கட்சியினரிடம் "இந்த மக்களின் அன்புக்கு எப்படி கைமாறு செய்யப்போகிறேன்" என கண்கலங்குவார்!
எம்ஜிஆரின் வெற்றி, ஏதோ சுகவாசிக்கு கிடைத்த குருட்டு அதிர்ஷ்டத்தால் கிடைத்த வெற்றி அல்ல! இருபதாண்டுகளுக்கும் மேலாக மக்களோடு மக்களாய் ஒன்றிப்பழகி. அவர்களது சுகதுக்கங்களில் பங்கெடுத்த, ஒரு கடின உழைப்பாளியின் வெற்றி!!
இந்த தொடரை எந்த ஆராய்ச்சி மாணவராவது படித்துக்கொண்டிருந்தால் என் பணிவான வேண்டுகோள்!
1958யில் நாடோடிமன்னன் வெளியானதிலிருந்து, 1987ல் அவர் மரணிக்கும் வரையிலான அவரது தமிழ்நாட்டு சுற்றுப்பயணங்களை நெடிய ஆராய்ச்சி செய்து, டாக்டரேட் பெறுங்கள்! வெறும் நடிகன் என்பதால்தான் வெற்றி எனும் அறிவிலிகளின் வாய் அடைபடட்டும்!!!........ Thanks...
[# “வேட்டைக்காரன் வருவான் ...ஏமாந்து விடாதீர்கள்”
காமராஜர் , கடுமையான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சமயம்...,
தி.மு.க.விற்கு எதிராக ஒரு கூட்டத்தில் பேசி விட்டு முடிவில் கூட்டத்தினரை இப்படி எச்சரித்தாராம்..!
அதன் காரணம்.. அவருக்கு அடுத்து அந்த ஊருக்கு எம்.ஜி.ஆர். பிரசாரத்திற்காக வருகிறார் என்று தகவல் வந்ததாம்..!
ஆனால் காமராஜர் எவ்வளவு எச்சரித்தும் மக்கள் வேட்டைக்காரனைத்தான் வெற்றி பெற வைத்து கொண்டாடினார்கள்..
கடைசியில் கோட்டைக்கும் அனுப்பி வைத்தார்கள் ..!
# சரி..அந்த வேட்டைக்காரன் எம்.ஜி.ஆர்.,
தி.மு.க.வில் இருக்கும்போது , காமராஜரைப் பற்றி சொன்ன ஒரு வார்த்தை , மிகப் பெரும் கலகத்தை , கழகத்தில் உண்டாக்கி விட்டது...!
அப்படி என்னதான் சொன்னார் எம்.ஜி.ஆர்...?
“காமராஜர் என் தலைவர்..அண்ணா என் வழிகாட்டி..”
எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னதும் எரிமலையாய்க் கொந்தளித்துப் போன ஒரு கூட்டம் , நேராக அண்ணாவிடம் போய்.. “எம்.ஜி.ஆர். மீது நடவடிக்கை எடுங்கள்..” என்று சொல்ல , அண்ணா அமைதியாகச் சொன்னாராம்.. “ ராமச்சந்திரனைப் பற்றி எனக்குத் தெரியும்..அமைதியாக இருங்கள்..”
அப்புறம்தான் அமைதியானர்களாம் அந்தத் தொண்டர்கள்..!
# அதன் பின்.....
1969 ல் நடைபெற்ற நாகர்கோவில் எம்.பி. இடைதேர்தலில் , காமராஜர் போட்டியிட்டபோது ..அவரை எதிர்க்கக் கூடாது என்ற காரணத்திற்காக , அந்த தேர்தல் பிரச்சாரத்திற்கே.போகவில்லையாம் எம்.ஜி.ஆர்...!
அது மட்டுமா..?
1972 ல் அ.தி.மு.க.வை ஆரம்பித்த எம்.ஜி.ஆர். , தன் கட்சிக்காரர்களுக்கு கண்டிப்புடன் இட்ட கட்டளை :
“காமராஜரை எந்த மேடையிலும் , எவரும் தாக்கிப் பேசக் கூடாது..!”
# நாமும் அமைதியாக இருந்து , ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால்...
இன்றைய காங்கிரஸ்காரர்களை விட ,
காமராஜரை அதிகமாக மதித்தவர் ,
அன்றைய எம்.ஜி.ஆர்.தான் என்றே தோன்றுகிறது....... Thanks...
1980ல் திமுக கூட்டணியில் இராமநாதபுர மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் (இப்போது சிவகங்கை மாவட்டம்) காங்.வால்மீகி MLA ஆனார்.அவர் 1981ல் இறந்து விட்ட பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் காங்.கட்சிக்கு விட்டுக்கொடுத்து இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கும் வந்து காங்.கட்சி அருணகிரியை வெற்றி பெற செய்தார் மக்கள்திலகம்...... Thanks...
மக்கள் திலகம் எம்ஜிஆரின் சிறப்பு !
ஒரு துறையில் மிகப் பெரிய, பிரம்மிப்பூட்டும் சாதனைகளைச் செய்தவரை அச்சாதனைகளின் நினைவு என்றுமே மக்கள் மனதில் நிலைத்திருக்கச் செய்தவரை சரித்திரம் போற்றுபவர் என்று குறிப்பிடுகிறோம்.
அப்படிப் பார்த்தால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை பல சரித்திரங்களை படைத்தவர் என்றுதான் குறிப்பிட வேண்டும். தவிர தமிழக மக்களின் ஏழை எளிய மக்களின் இதயங்களில் என்றும் நீங்காத இடம் பிடித்து மக்கள் திலகம் என்று போற்றப்பட்டவர் என்றும் குறிப்பிட வேண்டும்.
இன்னும் விளக்கமாகச் சொல்வதாக இருந்தால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எத்துறையில் எல்லாம் அடி எடுத்து வைத்தாரோ அத்துறை அனைத்திலும் சரித்திரத்தை படைத்திருக்கிறார்.
சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் ஒரு முக்கியமான உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். வரலாற்றில் இடம் பெறத்தக்க சாதனைகள் புரிந்தவர்கள் அனைவரும் ஏறத்தாழ ஒரே மாதிரியான குண நலன்களைப் பெற்றிருக்கிறார்கள்.
மன உறுதி எதையும் மிகத் தெளிவாக புரிந்து கொள்ளுதல் மனம் தளராமல் தீவிரமாக எதிர்த்துப் போராடுதல் பதட்டமின்மை போன்ற குணநலன்கள் சரித்திரம் படைத்த சாதனையாளர்கள் அனைவரிடமுமே காணப்படுகின்றன.
புரட்சித்தலைவர் எம்ஜிஆரும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த குணநலன்கள் அனைத்தும் அவரிடம் அபரிதமிகமாகவே குடிக்கொண்டிருந்தனவென்று சொல்லலாம் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் வாழ்க...... Thanks...
[
#கர்மவீரர் #காமராஜருக்கும் #புரட்சித்தலைவர் #எம்ஜிஆருக்கும் ஆரம்பம் தொட்டே நல்ல உறவு இருந்து வந்தது. காமராஜரை உயிரென நேசித்தவர் மக்கள்திலகம்.
காரணம் மக்கள்திலகம் ஆரம்பகாலத்தில் தீவிர காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தே இதற்குக் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே.
ஹீரோவாக உயர்ந்து அண்ணாவின் நட்பு கிடைத்த பின்னர் தான் திமுக வில் சேர்ந்தார்.
ஆனாலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் காமராஜரை தரிசித்து வந்தார்.
காமராஜருக்கு திமுக வைப் பிடிக்காது. ஆனால் அண்ணாவின் அறிவும், எம்ஜிஆரின் கொடைத்தன்மையும், வசீகரமும் மிகவும் பிடிக்கும்.
கர்மவீரருக்கு அரசியல் நிகர்வுகளைப் பற்றிய "தீர்க்கதரிசனம்" எப்போதும் உண்டு. இது குறித்து பேரறிஞர் அண்ணாவே பலமுறை ஆச்சரியப்பட்டுள்ளார்.
ஒரு சந்திப்பில் கர்மவீரர் எம்ஜிஆரிடம் "#ராமச்சந்திரா ! #எல்லோருக்கும் #பசி #ஆற்றும் #நீ...#ஏழை #மாணவ #மாணவிகளுக்கும் #சோறு #போடணும்..."
"#கல்விக்கு #உன்னால #முடிஞ்சஅளவு #உதவணும்...#நாடு #மாறணும்னா #கல்வி #ஒன்று #தான் #ஒரேவழி...#இல்லைன்னா #தமிழ்நாடு #மாறவே #மாறாது..."
அதற்கு #மாணவமாணவிகள் பசியில்லாம இருக்கணும்...அதுக்கு உனக்கு ஒரு காலம் கண்டிப்பா வரும்...அப்படி வரும்போது செய்வியா??? எனக் கர்மவீரர் வாக்கு கேட்க ஆடிப்போய்விட்டார் எம்ஜிஆர்...
"எனக்கு எப்படி, அப்படி ஒரு காலம் வரும்??? " என குழம்பினாலும் கர்மவீரரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாத எம்ஜிஆர், வாக்குக் கொடுத்தார்.
தன் இளமைப்பருவத்தில் ஒருவேளை உணவிற்கே தவித்ததாலும், தான் பட்ட கஷடங்களை அடுத்தவர் படக்கூடாது என்ற உயர்ந்த சிந்தனையாலும் கர்மவீரர் சொன்னதை செய்வதாக சத்தியம் செய்தார் எம்ஜிஆர்...
பின்னர் எம்ஜிஆர் முதல்வரானதும், மந்திரிசபையைக்கூட்டினார்..."பள்ளிக்குழந்தைங்க சாப்பிடணும்...சத்துணவுத்திட்டம் கொண்டுவரப்போறேன்" என்று கட்டளையே இட்டுவிட்டார்...
"நிதிநிலைமை மோசமாக உள்ளது " என அதிகாரிகள் தடுத்தும், 'அதெல்லாம் எனக்கு தெரியாது...செயல்படுத்தணும்னு" ஒரே வரிகளில் கூறி முடித்துவிட்டார்...
சத்துணவுத்திட்டம் பிறந்தது. கர்மவீரரின் லட்சியமும், தீர்க்கதரிசனமும் பலித்தது.
எம்ஜிஆர் ஒருவரால் தான் செயல்படுத்தமுடியும் என கர்மவீரர் நினைத்தாரோ என்னவோ!!!
சத்துணவால் பள்ளிக்குழந்தைகள் படித்து உயர்ந்தார்கள். அவர்களுக்கு நோட்டு புத்தகம், பள்ளிச்சீருடை, காலணிகள் என இலவசத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தினார் மக்கள்திலகம்.]........ Thanks...
இவர்களா? அப்படியா??
-----------------------------------
அசோகன்!!
கலிங்கத்து பரணியின் கருத்துச் செறிவாய்
போரில்லா வாழ்வில் பொருதிக் கொண்ட
அசோக சக்கரவர்த்தியின் இன்னொரு அம்சம்!
பத்திரிகை விருட்சத்தின் வேர்ப் பகுதியை
கரையான் அரித்து,, சீரை கெடுக்க முயலும்போது-கரையான் எந்தத் தோல்வியிலும்? என ஆர்த்தெழுந்த இலக்கிய உலகின் இனிய மகவு!!
|பட்டப் படிப்பின் பந்தாவால் ஒரு பெருமையுமில்லை!
பல முதலாளிகளால் பந்தாடப்பட்டு பாதி உயிரை தொலைப்பது தான் மிச்சம் என்ற உண்மையை உண்மையாக்கப் புறப்பட்டு,,அதற்கு உண்மையாக உழைத்தவர்,,உழைத்துக் கொண்டிருப்பவர் இவர் என்பதே உண்மை!!
சாதாரண பழைய பேப்பர் கடையை,,மூலதனமாக இவர் தந்தை இவருக்குக் கொடுக்க--
இவரது முன்னேற்றமும் ஒரு பரமபத விளையாட்டானது!!
பாக்கட் நாவல் அசோகன் என்றால் எள்லோருக்கும் தெரியும் என்றாலும்,,இவருக்கு சுவாரஸ்யம் சேர்த்தது க்ரைம் நாவல் அசோகன் என்ற அடை மொழி தான்!!
கவனிக்கவும்!
இலக்கணத்தை மீறிய மெய் எழுத்தில் ஆரம்பம்-க்ரைம்!!
இலக்கணத்தை மீறாத அசுர உழைப்பு!!
இன்று இவர் பல வார--மாத இதழ்களின் அதிபதி!!
இங்கே தான் அசோகன் நம்மிடம் வருகிறார்!
அசோகன் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர்!!
அவரது ஆரம்பக்கால இதழ்களில் பார்த்தீர்கள் என்றால் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு விதமாக எம்.ஜி.ஆர் போற்றப் பட்டிருக்கிறார்!
சண்டைக் காட்சிகளில் எம்.ஜி.ஆரின் வீரம் என்ற தொடரே இவரது பாக்கட் நாவலில் பல வாரங்கள் பவனி வந்தது!!
ஏற்றம் இல்லாத பேச்சு! அதில் எவரையும் எப்போதும்
இறக்கம் தராத கண்ணியம் கொட்டிக் கிடக்கும்!
ஒருவரது குறையை அவருக்கு சுட்டிக் காட்ட வேண்டுமா?
நான் அடித்துச் சொல்வேன்!!
இவரது பதில்களைப் படியுங்கள்!!
கலைஞரை இவர் விமர்சிப்பது தெரியாமல் விமர்சிப்பார்!
கத்தி இறக்கினார் என்பது --
எதிரியின் உடலில் உதிர முத்து பூக்கும் போது தான் தெரியும்!
எப்போது,,எந்த இடத்தில் கத்தியை இறக்கினார் என்பது எதிரிக்கேத் தெரியாது??
அவ்வளவு லாவகமாக,,எதிரியின் நிறைகளைப் பட்டியல் இட்டுக் கொண்டே வந்து,,ஒரு இடத்தில் காயப்படுத்தி இருப்பார்??
தேவருக்கு ஒரு எம்.ஜி.ஆரைப் போல-
அசோகனுக்கு ஒரு ராஜேஷ்குமார்!!
35 வருடங்களாக நாவல் உலகில் ஒரு பதிப்பாசிரியரும் ஒரு எழுத்தாளரும் கைக் கோர்த்தது அசோகன்--ராஜேஷ்குமார் கூட்டணி தான்!!
ராஜேஷ்குமாரும் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரே!
எம்.ஜி.ஆர் பற்றி,,பத்திரிகைகளில் அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்களைத் தனியாகப் பதிவிடுவேன்!!
பாக்கெட் நாவல் அசோகன்,,ராஜேஷ்குமாருடன் இணைந்து ஐம்பதாம் ஆண்டு பொன் விழாக் கொண்டாடுகிறார்கள்!!
அசோகன்!
|------------------
மூலதனம் என்பது வெறும் கரன்ஸி இல்லை!
மூல--தனமாக முயற்சிப்பது இருக்குமானால்???
ராஜேஷ்குமார்!
--------------------------
இறங்கினார் எழுத்துலகில்!! ஆனால் இன்றும்--
ஏறிக் கொண்டே இருக்கிறார்??
இவர்கள் காணும் பொன் விழா உத்ஸவத்தில்-
ஊருக்கு உழைப்பவரின் உள்ளம் தொட்ட இவர்களின்-உழைக்கும் கரங்களுக்கு வாழ்த்து முத்தம் வழங்கி மகிழ்வோமா தோழமைகளே???.... Thanks...
சில திருத்தங்கள்....By mr.Loganathan Sir...
--_--------------------------
தேவி பாரடைஸ் - ரிக் ஷாக்காரன் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் 163.ஓடிய நாட்கள் தேவி பாரடைஸ் ஸ்ரீ கிருஷ்ணா-142 நாட்கள்
உ.சு.வாலிபன் - தேவி பாரடைஸ் தொடர் அரங்கு நிறை காட்சிகள்-227(76 நாட்கள்)ஓடிய நாட்கள் -182. அகஸ்தியா-175.
உமா-112 வில்லிவாக்கம் ராயல்-100. பல்லாவரம் லட்சுமி -64 ......... Thanks...
7. இன்று போல் என்றும்
வாழ்க திரைப்படம்- 101 நாட்கள்.
8.மீனவ நண்பன்-104 நாட்கள்.
புரட்சித்தலைவரின் சரித்திர வெற்றிகள் :.........
1977 ஜூன் 12, 14, தேதிகளில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்றது இதில் புரட்சித்தலைவரின் அதிமுக 130 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட புரட்சித் தலைவர் பெரும் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். புரட்சித்தலைவர் பெற்ற வாக்குகள் 43,065. ஓட்டு வித்தியாசம் 29,378
30.06.1977 அன்று மேதகு தமிழக ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி அவர்கள் புரட்சித் தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
1980 ஜூன் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 128 தொகுதிகளில் அதிமுக வெற்றி வாகை சூடியது. மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட புரட்சித் தலைவர் 57,019 வாக்குகள் பெற்று 21000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
9.06.1980 இல் அன்று சென்னை கலைவாணர் அரங்கில் மேதகு ஆளுனர் பிரபுதாஸ் பட்வாரி இரண்டாம் முறையாக புரட்சித் தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
24.12.1984 இல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 132 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட புரட்சித் தலைவர் 60,510 வாக்குகள் பெற்று 31,484 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
உடல் நலமின்றி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த புரட்சித்தலைவர் மக்களின் அன்பு பிரார்த்தனையால் உடல்நலம் தேறி மீண்டும் முதல்வராக தமிழகம் திரும்பினார்.
10.02.1985 மேதகு ஆளுநர் எஸ்.எல்.குரானா அவர்கள் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக தொடர்ந்து 3வது முறையாக புரட்சித் தலைவர் பதவியேற்றுக் கொண்டார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க......... Thanks.........
https://youtu.be/TQZoHpLyues......... Thanks.........
ஆயிரம் விமர்சனம் கூறுபவர் கூட எம்ஜிஆரின் கருணை மனதை விமர்சிக்க மாட்டார்கள்
எதிரி துரோகி நல்லவன் கெட்டவன் என பாராமல் பொழியும் மழை போல் எம்ஜிஆர் மனிதநேய கருணை மனம் காத்து நின்றது இக்கட்டான நேரங்களில் எல்லோர்க்கும் அதனால் தான் இன்று பொன்மனசெம்மல் எம்ஜிஆரை எவ்வளவு புகழ்ந்தாலும் தெய்வமாக கொண்டாடியபோதும் எவருக்கும் விமர்சிக்க முடியவில்லை
கலியுக கடவுளாய் கொணடாடுகிறார்கள் மக்கள் எம்ஜிஆரை
வாழ்க எம்ஜிஆர் புகழ்....... Thanks AM.,.........
#குரு #பார்க்க #கோடி #நன்மை.........
நாகேஷ்….
தமிழகம் எத்தனையோ நகைச்சுவை கலைஞர்களை கண்டிருந்தாலும் என்றும் உச்சத்தில் தெரியும் கலைஞன். அந்த சிம்மாசனத்தில் நிரந்தரமாக அமர்ந்துவிட்ட நடிகர் அவர்.
நாடகங்களில்தான் நடித்துக் கொண்டிருந்தார், அப்பொழுது ஒரு நாடகத்திற்கு தலைமைதாங்க நம்ம வாத்தியார் வந்திருந்தார். நாடகத்தில் நாகேஸ்வரன் எனும் பாத்திரத்தில் சில காட்சிகளில் தோன்றியிருப்பார் அந்த குண்டுராவ் @ நாகேஷ். அதில் தனது கதாபாத்திரமான வயிற்றுவலி நோயாளி வேடத்தில் பின்னி எடுத்துவிட்டார்.
நம்ம வாத்தியாரு நாகேஷ் தோன்றும் காட்சிகளிலெல்லாம் சிரிச்சு சிரிச்சு ஓய்ந்தே போயிட்டாருன்னா பாருங்களேன்.
அப்புறம் நாகேஷை மேடைக்கு அழைத்து
ஒரு கோப்பை வழங்கினார் வாத்தியார்.
அப்ப நாகேஷ் நம்ம வாத்தியரப் பாத்து கேட்டாரே ஒரு கேள்வி...
“அண்ணே எல்லார் முன்னாடியும் கோப்பை குடுக்குறீங்க, அப்புறமா புடுங்கிற மாட்டீங்களே, ஏன்னா நான் அவ்வளவா ஒண்ணும் நடிக்கல!” ன்னாரு.
அதைக் கேட்ட வாத்தியாருக்கு சிரிப்பு தாங்கல..."நீ தாம்பா உண்மையான காமெடியன்" னு மனசார வாழ்த்தினாரு.
தமிழகத்திற்கு நாகேஷ் எனும் சிறந்த கலைஞனை அடையாளம் காட்டினார் நம்ம வாத்தியாரு....... Thanks...
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் - 25/04/20 அன்று வின் டிவியில் வெளியான தகவல்கள்
--------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இந்த மூன்றெழுத்து மந்திரத்திற்கு சொந்தக்காரர் .குற்றால , குறவஞ்சி பாடல் ஆகியவற்றிற்கு ஆதரவு காட்டிய எட்டாவது வள்ளல். கவிஞர்களுடன் எம்.ஜி.ஆருக்கு இருந்த உறவு என்பது மிக பெரிய இலக்கியத்தோடு அமைந்த நாடக தன்மை வாய்ந்தது .குறிப்பாக கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் கவித்துவம் கொண்டதாகவும், தமிழின் பெருமையை உணர்த்துவதாகவும் இருந்தன. ஆகவே எம்.ஜி.ஆர். அவர்கள் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் பற்றிய விவரம் அறிந்து அவற்றை தன்னுடைய திரைப்படங்களில் புகுத்தி , அவருக்கு புகழ் சேர்ப்பதோடு, மக்களுக்கு நன்மை பயக்கும் கருத்தான பாடல்களை அறிமுகப்படுத்தினார் . சந்திரோதயம் படத்தில் எம்.ஜி.ஆர். பத்திரிகை ஆசிரியராக நடித்தார் . ஒரு பத்திரிகையானது மக்களுக்கு எந்த மாதிரி செய்திகளை பிரசுரம் செய்து வெளியிட வேண்டும். எந்த மாதிரி செய்திகளை வெளியிடக்கூடாது என்ற கருத்தை மேம்படுத்தி சொல்லியிருப்பார் . பத்திரிகை என்பது என்ன ? அதன் குணாதிசயங்கள் என்ன என்பதை விளக்கும் டைட்டில் பாடலாக புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்று பாடல் அமைந்திருக்கும் .
கவிஞர் பாரதிதாசன் , கவிஞர் பாரதியாருக்கு தாசனாக , எங்கெங்கு காணினும் சக்தியடா என்ற திரைப்பட பாடலில் அறிமுகம் ஆனார் .கவிஞர் பாரதிதாசன் இயற்றிய சித்திர சோலைகளே, உமை இங்கு திருத்த இப்பாரினிலே என்ற பாடல் நான் ஏன் பிறந்தேன் என்ற படத்தில் இடம் பெற்றது . இந்த பாடலில் தொழிலாளர் வர்க்கத்திற்கும் கவிஞருக்கும் உள்ள ஈடுபாட்டை உணர்த்துவதாகவும் தொழிலாளர்களின் சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமாக முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே என்கிற அற்புதமான வரிகள் அமைந்திருக்கும் .. இந்த பாடலை விரும்பி ஏற்று, பட தயாரிப்பாளரான காமாட்சி ஏஜென்சிஸ் (நடிகை கே.ஆர். விஜயாவின் நிறுவனம் ) நிறுவனத்திடம் வலியுறுத்தி , வெள்ளை உடையில் , இயல்பான தன் நடிப்பில் அசத்தியிருப்பார் .
1965ல் வெளியான கலங்கரை விளக்கம் என்ற படத்தில் முதன் முதலாக கவிஞர் பாரதிதாசன் பாடலான சங்கே முழங்கு பாடலை இடம் பெற செய்தார் . படத்தில் ஒரு காட்சியில் தன் காதலியை இழந்து சோகமாக இருக்கும்போது ,தன் நண்பரின் வேண்டுகோளுக்கு ஏற்ப அந்த பாடல் காட்சியை நாடக அரங்கில் காண்பதாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த பாடலில் வரும் எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்ற வரிகள் இன்றைக்கும் மேடைகளில் தமிழின் பெருமையை உணர்த்தும் வகையில் இந்த வரிகளை பேச்சாளர்கள் பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம் .அவ்வளவு சிறப்பு வாய்ந்த பாடல். தமிழுக்கு எதிராக இந்தி எதிர்ப்பு என்கிற மொழி போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்த நேரம். எம்.ஜி.ஆர். தி.மு.க. வில் இருந்த சமயம் தமிழனின் உணர்ச்சிகளை விவரிக்கும் இந்த பாடலை தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணியின் அனுமதியோடு இடம் பெற செய்தார் எம்.ஜி.ஆர். . இந்த பாடலில் கவிஞர் பாரதிதாசன் , உருவம் இரு பக்கமும் அடங்கிய புத்தகம் ஒன்றுசுழன்று கொண்டே இரண்டாக பிளந்து அதில் இருந்து நடிகை சரோஜாதேவி சங்கு முழங்கியபடி தோன்றும் காட்சி இடம் பெற்றிருக்கும் .
மன்னாதி மன்னன் படத்தில் கவிஞர் கண்ணதாசனின் அச்சம் என்பது மடமையடா , அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற , தமிழன் உணர்ச்சியும், திராவிடர் எழுச்சியும் நிறைந்த பாடலை அறிமுகப்படுத்தினார் எம்.ஜி.ஆர். 1960ல் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அந்த காலத்தில் ஒலிக்காத தி.மு.க. மேடைகளே இல்லை . அ தி.மு.க. வை எம்.ஜி.ஆர். தொடங்கிய பின்னரும் ,அ. தி.மு.க. மேடைகளில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டன .எம்.ஜி.ஆர் தன் காரில் பயணிக்கும்போது ஒலிக்காத நாளே இல்லை எனலாம் .
பொதுவுடமை கருத்துக்களை தனது திரைப்பட பாடல்களில் புகுத்துவதற்கு பிரத்யேக கவனம் செலுத்தினார் எம்.ஜி.ஆர். அதன்படி கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் பலவற்றை தன் படங்களில் பயன்படுத்திக் கொண்டார் . இந்த படத்தில் எம்.ஜி.ஆரும், பானுமதியும் மாட்டு வண்டியில் பயணித்தபடி வயக்காட்டில் பாடும் காடு வெலெஞ்சு என்ன மச்சான் நமக்கு கையும் காலும்தான் மிச்சம் என்ற பாடலில் பட்ட துயர் இன்னும் மாறும், ரொம்ப கிட்ட நெருங்குது நேரம், நானே போட போறேன் சட்டம், பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம். நாடு நலம் பெறும் திட்டம் , என்ற வரிகளின்படி , தனிக்கட்சி ஆரம்பித்து, முதல்வராக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து பல நல்ல திட்டங்களை தீட்டினார் . தான் முதல்வராவதற்கு 20 ஆண்டுகள் முன்பு எழுதப்பட்ட பாடல். இதில் இருந்து எம்.ஜி.ஆர். எப்படிப்பட்ட ஒரு தீர்க்கதரிசி என்பதை அறிந்து கொள்ளலாம் . பாடலில் பானுமதி மாடாய் உழைப்பவன் வாழ்க்கையில் பசி வந்திட காரணம் என்ன மச்சான் என கேள்வி கேட்க , அங்கு சேரக்கூடாத இடத்தில செல்வம் சேருவதால் அவனுக்கு வரும் தொல்லையடி என்று எம்.ஜி.ஆர். பதிலளிப்பார் .
1975ல் பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் , கவிஞர் பாரதிதாசன் பாடலான புதியதோர் உலகம் செய்வோம் , கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் . இதே வரிகள் சந்திரோதயம் டைட்டில் பாடலிலும் இடம் பெற்றிருக்கும். ஆனால் அதே வரிகள் இந்த படத்தில் வேறு ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பொதுவுடமை கொள்கை திசை எட்டும் சேர்ப்போம் .புனிதமாக அதை எங்கள் உயிர் என்று காப்போம் என்று வரிகள் வரும்படி புதிய விளக்கத்தை பொதுவுடைமை பற்றி கவிஞர் பாரதிதாசன் எளிதாக எழுதினார். எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்து, வளர்ந்து வந்த சமயத்தில் மிக சரியான வகையில் , மக்களை கவரும் வண்ணம் பயன்படுத்திக் கொண்டார் .
எம்.ஜி.ஆர். தன் திரைப்படங்களில் தன்னை பாட்டாளிகளின் தோழனாக, மீனவ சமுதாயத்தின் காவலனாக, ஏழை எளியோரின் துயர் துடைப்பவனாக நடித்த படங்களின் எண்ணிக்கை அதிகம் . குறிப்பாக படகோட்டி படத்தில் வரும் தரைமேல் பிறக்க வைத்தான் , எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான் , கரைமேல் இருக்க வைத்தான், பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான் .என்ற பாடலில் ஒருநாள் போவார், ஒருநாள் வருவார் , ஒவ்வொரு நாளும் துயரம். ஒரு ஜான் வயிறை , வளர்ப்பவர் துயரை ஊரார் நினைப்பது சுலபம் என்ற கவிஞர் வாலியின் பாடலில் மீனவ சமுதாயத்தின் ஒட்டு மொத்த வாழ்க்கை துயரத்தை அடக்கி , தனக்கே உரிய பாணியில், சோகத்தோடு நடித்து அசத்தினார் .தொடர்ந்து கொடுத்ததெல்லாம் கொடுத்தான், பாடலில் உனக்காக ஒன்று, எனக்காக ஒன்று, ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை . படைத்தவன் மேல் பழியுமில்லை. பசித்தவன்மேல் பாவமில்லை, கிடைத்தவர்கள் பிழைத்துக் கொண்டார் . உழைத்தவர்கள் தெருவில் நின்றார். இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார். மடி நிறைய பொருளிருக்கும் . மனம் நிறைய இருள் இருக்கும் . என்றகவிஞர் வாலியின் வைர வரிகள் எம்.ஜி.ஆரின் இமேஜுக்கு பெரும் பலம் சேர்த்தன . இந்த பாடல்கள் மூலம் கவிஞர் வாலி உச்சத்தை தொட்டார். எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞர் ஆனார் வாலி . ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆர். நாடக துறையில் இருந்த சமயத்தில் ஆர்வத்தின் காரணமாக இசை ஞானத்தை வளர்த்துக் கொண்டதால், பிற்காலத்தில் அந்த திறமையை தன் பாடல்களில் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக அமைந்தது . அதன் காரணமாக அவரது பாடல்கள் காலத்தால் அழியாமல் , இன்றும் மக்களால் ரசிக்கப்படுகின்றன .
எம்.ஜி.ஆர். முதல்வரானபின் 1977ல் வெளியான படம் மீனவ நண்பன் தேர்தலில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதல்வரானதும், ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக சில நாட்கள் மீனவ நண்பன் படத்திற்கான தன்னுடைய காட்சிகளில் நடித்து முடித்துதான் பதவி ஏற்றார். இந்த படத்தில் மீனவ சமுதாயத்தின் குறை தீர்க்கும் தலைவனாக நடித்திருப்பார் . இந்த படத்தில் அப்போதைய எதிர் கட்சியான தி.மு.க.வை சாடும் வகையில் பட்டத்து ராஜாவும், பட்டாள சிப்பாயும் ஒன்றான காலமிது என்ற பாடல் அமைந்திருக்கும் . இந்த பாடலில் கோட்டை கட்டி கும்மாளம் போட்ட கூட்டங்கள் என்னானது . பல ஓட்டை விழுந்து தண்ணீரில் மூழ்கும் ஓடங்கள் போலானது என்ற வரிகள் வரும்இந்த பாடல்கள் வரிகள் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மத்தியில் அப்போது பலத்த வரவேற்பை பெற்றது . .
1974ல் வெளியான,நடிகர் அசோகன் சொந்தமாக தயாரித்த நேற்று இன்று நாளைதிரைப்படத்தில் அரசியல் நெடி மிகுந்த வசனங்கள் இருந்தன தனது கட்சியின் கொள்கைகள், எதிர்க்கட்சியின் ஊழல்கள் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துரைக்க நல்ல வாய்ப்பாக எம்.ஜி.ஆர். பயன் படுத்தி வெற்றியும் பெற்றார் . நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று என்ற பாடலில், மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார் , தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் .வீதிக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே, தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்துவிட்டார் நகரசபையிலே. ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார். தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார். இந்த வரிகள் தி.மு.க. கட்சியை நேரடியாக தாக்குவது போலிருக்கும்.
1971ல் வெளியான ரிக்ஷாக்காரன் திரைப்படத்தில் கவிஞர் வாலியின் அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் . அது ஆணவ சிரிப்பு என்கிற பாடல் வரும் எம்.ஜி.ஆர். தி.மு.க. வில் இருந்தபோது வெளியான படமாக இருப்பினும் , பாடலிலுள்ள வரிகள் , கருத்துக்கள் , அவர் அ தி.மு.க.வை தொடங்கியபின் பார்க்கும்போது தி.மு.க.விற்கு எதிரான கருத்துக்கள், எம்.ஜி.ஆர். கணக்கு கே ட்டது குறித்த எழுப்பிய கேள்விகள் போன்று பாவித்து ரசிகர்கள் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பை அளித்தனர் . .
தேர்தல் பிரச்சாரங்கள், பொது கூட்டங்களில் கலந்து கொள்ள செல்லும்போது எதிர்க்கட்சியினர் எம்.ஜி.ஆரைதிரைமறைவாக இருந்து தாக்க முற்படுவதாக அவ்வப்போது தகவல்கள் அவருக்கு கிடைக்கும் . எப்போதும் தன்னுடன் சில ஸ்டண்ட் நடிகர்கள் பாதுகாப்பிற்கு உடன் வைத்துக் கொள்வார் . காவல்துறையினரை விட அவர்களையே அதிகம் நம்புவார் . ஒருமுறை திண்டுக்கல் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும்போது மணப்பாறை அருகிலே உள்ள கிராமத்தில் ஒரு ஓலை குடிசையில் வயதான பெண்மணி தயார் செய்த சாப்பாட்டை சாப்பிட்டு அங்கேயே தங்கியுள்ளார் . பின்னர் திண்டுக்கல் வெற்றிக்கு பிறகு மறுமுறை மணப்பாறை சென்றபோது அதே ஓலை குடிசைக்கு சென்று தனக்கு உணவளித்த அந்த தாயை சந்தித்து ஒரு தூக்கு வாளியில் பணக்கட்டுகளை அடுக்கி பரிசளித்தார் வள்ளல் எம்.ஜி.ஆர். .இந்த சம்பவம் பின்னர் அந்த ஊர் முழுவதும் பரவி,அந்த பெண்மணி பிரபலம் ஆனார் . இதே போன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த வரலாறு உண்டு. சொல்லிக் கொண்டே போகலாம் . தான் ஆட்சிக்கு வந்ததும் ஏழை எளியோர் தங்கும் ஓலை குடிசைகளுக்கு இலவசமாக ஒரு விளக்கு என்ற திட்டத்தை உருவாக்கி ஏழை மக்களின் ஒளி விளக்காக திகழ்ந்தார் .
ஒரு தொண்டனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் பயணித்து பின்னர் சாலைகளில் கார் செல்லமுடியாத தருணத்தில் , குறுகலான பாதைகளில் நடந்தே சென்று பங்கேற்று , மணமக்களுக்கு பரிசளித்து அவர்களை ஆசிர்வதித்து வந்தார் . இந்த மாதிரி சம்பவங்கள் கூட நிறைய உண்டு .நீதிக்கு தலைவணங்கு படத்தில் நான் பார்த்தா பைத்தியக்காரன் பாடலில் ஜாதி, மதம் ,இனம்,மொழி பார்ப்பவன் நானில்லை. நான் நெருப்பினால் நடப்பவன்டா ஆனால் நீதிக்கு பயந்தவன்டா , தர்மத்தை அழிக்க வந்தால் உயிரை தந்தேனும் காப்பவன்டா , ஊருக்குள் நீ செய்யும் அநியாயம் நான் உள்ளவரை நிச்சயம் நடக்காது .இந்த உண்மைகளை ஊரறிய எடுத்துரைப்பேன் நாளை உன்னுடைய ஆட்டத்தை நான் முடித்து வைப்பேன் என்ற பாடல் வரிகள் தி.,.மு.க.வின் அராஜக ஆட்சிக்கு எதிராக எழுதப்பட்டு அரங்குகளில் எம்.ஜி.ஆர். ரசிகர்களால் அபார வரவேற்பை பெற்றது .
தேடி வந்த மாப்பிள்ளை என்ற படம் 1970ல் வெளிவந்தது .அதில் வரும் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற பாடல் மிக பிரபலம் . தேர்தல் பிரச்சாரங்களில் , அ, தி. மு.க. பொது கூட்டங்களில் இந்த பாடல் அதிகம் உபயோகத்தில் இருந்தது . இப்போதும் எம்.ஜி.ஆர். ரசிகர்கள், சில அமைச்சர்கள், எம்.ஜி.ஆர். அபிமானிகள் தங்களது செல்போனில் ரிங்க்டோனாக வைத்துள்ளனர் .தாயின் பெருமைகள், சிறப்புகள் இந்த பாடலில் அழகாக வடிவமைத்து இருப்பார்கள் . பெற்றெடுத்து பேர் தொடுத்த அன்னை அல்லவோ, நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ . தாய் பாலில் வீரம் கண்டேன் . தாலாட்டில் தமிழை கண்டேன் .அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம் பிள்ளையினால் பன்னீர் ஆகும். ஆசை தரும் கனவுகள் எல்லாம் அவனால்தான் நனவுகள் ஆகும் என்ற வரிகள் பாராட்டை பெற்றன .
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்.ஜி.ஆரும், நம்பியாரும் மோதும் சண்டைக்காட்சி ஒன்று எடுப்பதற்காக செங்கல்பட்டு அருகில் ஒரு இடத்தில ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து மூலம் செட் அமைத்தார்கள் . அந்த செட் அமைப்பை பார்வையிட அடிக்கடி செங்கல்பட்டு சென்று வந்தார் எம்.ஜி.ஆர். ஒருமுறை சாப்பிடுவதற்கு ஒன்றும் கிடைக்காத பட்சத்தில் அருகில் உள்ள கிராமத்தில் சென்று ஏதாவது வாங்கி வருமாறு இருவரை பணித்து ரூ.100/- கொடுத்து அனுப்பினார் . அவர்கள் வேகவைத்த வேர்க்கடலை, சீனிக்கிழங்கு வாங்கி வந்தனர் . அதை தானும் உண்டு அனைவருக்கும் பகிர்ந்தளித்தார் .மீண்டும் மீண்டும் தான் செங்கல்பட்டிற்கு செல்லும்போதுதன்னுடன் வருபவர்களுக்காக தனக்கு பிடிக்கிறதோ இல்லையோ அந்த பெண்மணியிடம் வேர்க்கடலை, சீனிக்கிழங்கு வாங்கிவிட்டு கையில் உள்ள பணத்தை கொடுத்துவிட்டு வாருங்கள் என்று பணித்துள்ளார் .எம்.ஜி.ஆர். முதல்வரானபின்பு , அந்த வயதான பெண்மணி இறந்து போன தகவல் யார் மூலமோ எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்படுகிறது ,உடனே எம்.ஜி.ஆர். கார் மூலம் செங்கல்பட்டு சென்று அந்த குடிசைக்கு சென்று அந்த பெண்மணிக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார் என்பது வரலாறு . இந்த மாதிரி யாரும் எதிர்பார்க்காத, கனவிலும் காணாத சம்பவங்கள்,ஏழைகளுக்கு செய்த உதவிகள் எம்.ஜி.ஆர். விஷயத்தில் ஏராளம் உண்டு. இந்த செயல்களும் மனித இதயங்களில் ஆழமாக பதிந்தனால்தான் எம்.ஜி.ஆர் வாக்கு வங்கி என்பது கணிசமான அளவில் கிராமப்புற பகுதிகளில் பெருகி உள்ளது என்று சொல்வதுண்டு .
நிகழ்ச்சியில் கீழ்கண்ட பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன
1. சங்கே முழங்கு - கலங்கரை விளக்கம் .
2.சித்திர சோலைகள் - நான் ஏன் பிறந்தேன்
3.அச்சம் என்பது மடமையடா - மன்னாதி மன்னன்
4.காடு வேலன்ச்சு என்ன மச்சான் - நாடோடி மன்னன்
5.தரை மேல் பிறக்க வைத்தான் - படகோட்டி
6.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி
7.புத்தன் இயேசு காந்தி பிறந்தது - சந்திரோதயம்
8.பட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும் - மீனவ நண்பன்
9.நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று - நேற்று இன்று நாளை
10.அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் -ரிக்ஷாக்காரன்
11.நான் பார்த்தா பைத்தியக்காரன் - நீதிக்கு தலை வணங்கு
12.வெற்றி மீது வெற்றி வந்து - தேடி வந்த மாப்பிள்ளை........ Thanks...
வள்ளுவரும் வள்ளல் எம்ஜிஆரும் :::
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
எழுத்துக்களுக்கெல்லாம் அகரமே முதலானது. அதைப்போல ஆதிபகவன் என்னும் தெய்வமே உயிர்களின் முதலானது என்று இதற்குப் பொருள் கொள்ளலாம்.
ஆனால் அறிஞர்களின் சிலரின் கருத்துப்படி. திருவள்ளுவரின் தாய் ஆதி என்றும் , பகவான் என்பவர் அவருடைய தந்தை என்றும் சொல்லப்படுகிறது. இதன்படி பார்த்தால் தாயும் தந்தையுமே உலகத்தில் உயிர்களுக்கும் முதல் என்றும் பொருள் ஆகிறது. வாழும் மனிதர் ஒவ்வொருவரும் இதை ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும் ?
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தன் தாய் திருமதி சத்தியபாமாவை தெய்வத்துக்கு நிகராகவே வைத்திருந்தார் என்பது உலகறிந்த உண்மை. தான் வாழ்ந்து வந்த ராமாவரம் தோட்டத்தில் தன் தாய்க்கு ஒரு கோயிலே கட்டியிருந்தார் அந்த உத்தம மகன். ஒவ்வொரு நாளும் அவர் வெளியில் செல்லும்போதும் கார் ஒரு நிமிடம் அந்தக் கோயிலின் முன் நிற்கும். வலதுபக்கம் திரும்பி தன் தாயின் திருவுருவத்தை அவர் வணங்கிய பிறகே கார் முன்னோக்கி நகரும்.
எந்த ஒரு செயலையும் செய்ய ஆரம்பிக்கும் போதும் தாயே துணை என்று சொல்வார் . அதைப்போலவே எதையாவது எழுதும்போதும் தாயே துணை என்று காகிதத்தின் மேலே எழுதுவார். உலகம் போற்றும் சத்துணவுத் திட்டத்தை ஆரம்பிக்கும்போது அதன் தொடர்பான முன் குறிப்புகளை எழுதும்போது ஒவ்வொரு பக்கத்தின் மீதும் தாயே துணை என்று தமிழ்நாட்டு முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எழுதிய முப்பத்தாறு குறிப்புகள் உலகப் பிரசித்தி பெற்றவை.
நினைவழியா இரண்டரை வயதில் இறந்து விட்ட தந்தையாரின் திருவுருவப் படத்தையும் பூஜை அறையில் தாயின் படத்தோடு வைத்து வணங்கினார்.
தாயையும் தந்தையையும் சேர்த்து வணங்கியதால் தான் அவர் மக்களின் தலைவராக உயர்ந்தார். மற்றவர்களுக்கும் அவருடைய முக்கியமான அறிவுரை, தாயைப் பெருமைபடுத்துங்கள். தாயின் வயிறு எரியாமலும் தனது செய்கையால் தாயின் மனம் புண்படாமல் இருக்கும்படி நடந்து கொள்வது தான் ஒரு மகனுடைய மிகப்பெரிய கடமையாகும் என்பது தான்.
அதனால்தான் தன் தாயை பற்றி ஒரே வரியில் சொன்னார். நான் காணாத கடவுளை விட காணும் கடவுளைத்தான் கண்ணால் கண்ட என் தாயை தான் பெரிதும் மதிக்கிறேன்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் வாழ்க......... Thanks...
நமது...
**மக்கள் திலகம் **குழு நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
**முன்னேற என்ன வேண்டும் நல்எண்ணம் வேண்டும், தன் உழைப்பாளே உண்ணவேண்டும் **
**மக்கள் திலகம் **
ஓங்குக #பொன்மனச்செம்மல் #புகழ்...... Thanks...
புரட்சித் தலைவருக்கு தற்பெருமை பிடிக்காது. ஆனால் பெருமைக்கு புரட்சித் தலைவரை பிடிக்கிறது . ஏனென்றால் மக்களுக்கு அவரை பிடிக்கிறது. அதனால் உலகத்தில் இருக்கும் எல்லா நல்லனவற்றுக்கும் அந்த மனிதப் புனிதரை பிடிக்கிறது ...
நன்மை செய்வதையே தன் கடமையாக வாழ்ந்து காட்டியவர் மக்கள் திலகம் எம்ஜிஆர்... நம் அனைவருக்குமே முன்னோடி என்றால் புரட்சித்தலைவர் இதய தெய்வம் எம்ஜிஆர் அவர்களே ... !
கொடை வள்ளல் எம்ஜிஆர் புகழ் வாழ்க.... Thanks...
நன்றி மறவாத
நல்ல மனம் வேண்டும்
அதுவே என் மூலதனம்
ஆகும் தலைவர் பாடல் வரிகள்
புரட்சி தலைவர் எம்ஜிஆர் அம்மா வின் ஆசியுடன் காலை வெற்றி வணக்கம் நம்வாழ்வு நம் கையில் வீட்டில் உள்ளே இருப்போம் நல்லது நடக்கும்..... Thanks...
#எம்ஜிஆர் #ஆட்சி #சாதனைகள் #நூறு...
1.சத்துணவு திட்டம் 01-07-1982 முதல் அமுல்படுத்தப்பட்டது.
2.பெரியார் சீர்திருத்த எழுத்துக்கள அமுலாக்கம்
3.கிராம நிர்வாக அலுவலர்கள் பதவிகள் உருவாக்கம்
4கிராம தன்னிறைவு திட்டம் தொடக்கம்
5.பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தலைவர்கள் பெயர்கள் சூட்டப்பட்டன.
6.புதிய போக்குவரத்து கழகங்கள் உருவாக்கப்பட்டு 4316 புதிய பேருந்து வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டன.
7.குடிசைகளுக்கு இலவச மின் வசதி அளிக்கப்பட்டது.
8.காவல்துறைகள் பிரிக்கப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
9.பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் அமுல்படுத்தப்பட்டது.
10.பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் காலணிகள் வழங்கபட்டன.
நாளை தொடரும்-
எம்.ஜி.ஆரின் ஆட்சி சாதனைகள் 100 தொடர்ச்சி-
11.கரூர் அருகே புகளூரில் நாட்டிலேயே முதல் முதலாக கரும்பு சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்பட்டது.
12.சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்தார்.
13.அரிசியின் விலையை தன் ஆட்சி முழுவதும் கட்டுபாட்டில் வைத்திருந்தார்.
14.அனைத்து பொருள்களின் விலைவாசியும் கட்டுபாட்டில் இருந்தன.
15.பண்டிகை காலங்களில் கூடுதல் அரிசி நியாயவிலைக்கடைகளில வழங்கபட்டன.
16.பாரதி பாரதிதாசன் அண்ணா பெரியார் காமராஜர் பெயர்களில் பல்ககலைகழகங்கள் உருவாக்கப்பட்டன.
17.நாட்டிலேயே முதல் முறையாக அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் சென்னையில் ஏற்படுத்தப்பட்டது.
18.முக்கியமாக தன் பெயரில் எவ்வித திட்டத்தையும் ஆரம்பிக்கவில்லை.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைகழகம் தொடங்கப்படுவதற்கு முன்னரே மறைந்து விட்டார்.
19.தமிழ் மொழிக்கு தனியாக தஞ்சை மாநகரில் தனி பலகலைகழகம் கண்டார்.
20.மகளிருக்கென அன்னை தெரசா பெயரில் கொடைக்கானலில் தனி பல்ககைழகம் கண்டார்.
நாளை தொடர எம்ஜி.ஆர்.ஆட்சி சாதனைகள் 100
பகுதி 3 தொடர்ச்சி
31.பொறியியல் கல்வியில் பெரும் புரட்சியாக தமிழ்நாட்டில் சுயநிதி கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கி அதன் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பொறியியல் பட்டப் படிப்பினை மேற்கொள்ள செய்தார்.இதன் மூலம்ஆசிரியர்கள் பலரும் வேலை வாய்ப்பினை பெற்றனர்.
32.ஏழை மாணவ மாணவியர் பயன் பெறும் வகையில்பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் நுழைவுத் தேர்வினை அறிமுகப்படுத்தினார்.
33.திரையரங்குகளில் compound Tax முறையை அமல்படுத்தி திரை உலகினருக்கு உதவினார்.
34.அரசு அலுவலகங்களில் கோப்புகளில் குறிப்புகளை தமிழில் எழுதப்பணித்தார்.
35.அரசு நிர்வாகத்தில் அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.
36.தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக மாநிலக்கட்சியினைச் சார்ந்த பாராளுமன்ற உறுபபினர்கள்(சத்தியவாணி முத்து,பாலாபழனூர்) மத்திய அமைச்சரவையில் இடம் பெறச்செய்தார்.
37.தமிழகத்தின் பல தொகுதிகளில் புதியவர்களையும் சாதரணமானவர்களையும்,அடிமட்ட தொண்டர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றிபெறச்செய்து M.L.A. M.P.ஆக்கி அழகு பார்த்தார்.
38.தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை கண்டித்து தீர்வுகள் காண முயற்சிகள் எடுத்தார்.
39.தமிழகத்துக்கு கூடுதல் அரிசி மத்திய தொகுப்பிலிருந்து வழங்க வேண்டி உண்ணாவிரதம் இருந்தார்.
40.தெலுங்கு கங்கை திட்டம் கொண்டுவந்து சென்னை நகரின் தண்ணீர் பஞ்சம் போக்கினார்.
நாளை தொடரும்...
எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள் 100
பகுதி5
41.நலிந்த பிரிவு மக்களுக்காக 30 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டத்தை அமுல்படுத்தினார்.
42.பத்தாம் வகுப்பு மற்றும் புதுமுக வகுப்பு (பி.யூ.சி) படித்தவர்களுக்காக மாதாந்திர நிவாரணம் அளிக்கும் திட்டத்தை அமுல்படுத்தினார்.
43.வணிகர்களுக்கு"ஒரு முறை வரி விதிப்பு " திட்டத்தை அமுல்படுத்தினார்.
44.கிராம கைவினைக் கலைஞர்களுக்கு இலவச தொழில் கருவிகள் வழங்கும் திட்டத்தை துவக்கினார்.
45.விபத்து மற்றும் இடர் உதவித்திட்டத்தையும் அமுல்படுத்தினார்.(இப்போதைய 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் முன்னோடியே இதுதான்.இந்த தகவல் பல மாதங்களுக்குமுன் ஜூனியர் விகடன் இதழில் வெளியிடப்பட்ட செய்தியாகும்.)
46.நெசவாளர்,தீப்பெட்டி தொழிலாளர்,பனை ஏறும் தொழிலாளர் இவர்களுக்கான விபத்து நிவாரணத்திட்டத்தை அமுல்படுத்தி பின்னர அதனை விரிவு படுத்தினார்.
47.மீனவர்களுக்கும் நெசவாளர்களுக்கும் சிறப்பு வீட்டு வசதி திட்டம் ஏற்படுத்தினார்.
48.கட்டிட தொழிலாளர் கிராமக் கைவினைஞர் கை வண்டி இழுப்போர் சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர் போன்றவர்களுக்கு ஆயுள் காப்புறுதியும் பணி ஓய்வு பலன்கள் கிட்டவும் திட்டம் துவக்கினார்.
49.காவலர்களுக்கு தனி வீட்டு கழகம் அமைத்து அவர்களுக்கு மலிவு விலையில் பொருள்கள் வழங்கும் திட்டத்தையும் துவக்கினார்.
50.உலக வங்கி உதவியுடன்விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி வழங்கும் திட்டத்தை துவக்கினார்.
தொடரும் எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள்100
பகுதி6
51.ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவித்திட்டத்தின்கீழ் ரூபாய் 10000வழங்க உத்தரவிட்டார்
52.விதவை மறுமணத்திட்டத்தின் கீழ் தம்பதியர்களுக்கு ரூ.5300 வழங்க உத்தரவிட்டார்.
53.கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு தாழ்த்தப்பட்டோரை மற்ற இனத்தவர்கள் மணம் புரிந்து கொண்டால் தலா ரூ.4300 வழங்க உத்தரவிடப்பட்டது.
54.10000 ஏழை தாய்மார்களுக்கு தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டது.
55.மதுரை மாநகரில்ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தி தமிழறிஞர்களை கவுரவப்படுத்தினார்.
56.நக்சலைட்டுகளை அறவே ஒழித்து தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழச்செய்தார்.
57.Encounters இல்லாமல்தமிழகத்தில் ரவுடியிசம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டினார்.
58.புதிய தொழிற்கொள்கையை ஏற்படுத்தி அன்னிய முதலீடுகளுக்கு அடிகோலினார்.
59.தமிழறிஞர்கள் திரைப்பட கலைஞர்கள் மற்றும் நாடக கலைஞர்களுக்கு கலைமாமணி விருது தொடர்ந்து வழங்கிடச்செய்தார்.
60.ஆஸ்தான அரசவைக் கவிஞர் பதவி நாமக்கல் கவிஞருக்குப்பிறகு நீண்ட காலம் கொடுக்கப்படாமல் இருந்து வந்தது.கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் தகுதியான ஒருவருக்கு அப்பதவி வழங்கப்படவேண்டும் என கருதி கவிஞர் கண்ணதாசனுக்கு அரசவைக் கவிஞர் பதவி வழங்கி ஒரு அமைச்சருக்குரிய சலுகைகளையும் அளித்து அழகு பார்த்தார்.
நாளை தொடருமஎம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள் 100
பகுதி7
61.சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் wholesale steel market ஐ மிகப்பெரிய அளவில்திருவொற்றியூரை அடுத்துள்ள சாத்தங்காடு என்ற இடத்தில் நிறுவினார்.
62.ஆசியாவிலேயே பெரிய அங்காடி கோயம்பேட்டில நிறுவிட திட்டம் தீட்டி செயல்படுத்த முனைந்தார்.
63.சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை நவீன கருவிகளுடன் புதிய கட்டிடம் கட்டிட ஏற்பாடு செய்தார்.
64.தமிழகமெங்கும் கிராம மக்களின் வசதிக்காக அதிக எண்ணிக்கையில் சுகாதார மையங்கள் அமைத்தார்.
65.சென்னை கோட்டுர்புரத்தில் வெள்ளம் சூழ்ந்தபோது முழங்கால் அளவு நீரில் அதிகாரிகளுடன் பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை சரி செய்ய உத்தரவிட்டார்.பொதுமக்களை நேரடியாக சந்தித்த முதல்வர் என இபபோதும் போற்றப்படுகிறார்.
66.சென்னை திருவல்லிக்கேணியில் அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலின் குளத்தை பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சுத்தம் செய்து நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந் தேரோட்டத்தை நடைபெறச்செய்தார்.
67.முறையான நிர்வாகமில்லாமல் நன்கு பராமரிக்கப்படாமல் பாழடைந்த புராதன கோயில்களை இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டுவந்து அவைகளை சீரமைத்தார்.
68.நாட்டின் முன்னேற்றத்திற்காக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நடைமுறைபடுத்திய இருபது அம்ச திட்டத்தின் கீழ் ஒரு அம்சமான கொத்தடிமை ஒழிப்புத் திட்டத்தை முழுயைாக செயல்படுத்தினார்.
69.அறிஞர் அண்ணாவன் பவள விழா மூதறிஞர் இராஜாஜி எழுச்சி கவிஞர் பாரதியார் மற்றும் புரட்சி கவிஞர் பாரதிதாசன் பகுத்தறிவுப்பகவலன் பெரியார் ஆகியோரின் நூற்றாண்டுவிழாவினை தமிழக அரசு சார்பில் கொண்டாடி சிறப்பு செய்தார்.
70.அரசு விழாக்களில் ஆடம்பரத்தை தவீர்த்து சிக்கனத்தைக் கடைபிடித்தார்.
நாளை தொடரும்-
எம்.ஜி.ஆர் சாதனைகள்100
பகுதி8
71.தமிழக அரசின் சார்பில் அளித்த முதல்வருக்குரிய வாகன வசதியை தவிர்த்து சொந்த காரிலேயே பயணித்து அனைவருக்கும் முன்னோடியாய் விளங்கினார்.
72.1977 முதல் 1983 வரைபெரிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் 449 தமிழகத்தில் அமைக்கப்பட்டன.இவற்றின் மொத்த மூலதனம் ரூ850 கோடி ஆகும்.
73.தொழிலாளர நலவாரியம் மூலம் தொழிறசாலைகளில் தொழில் அமைதி நிலவ தனி அக்கறை எடுத்து கிளர்ச்சி வேலைநிறுத்தங்கள் இன்றி உற்பத்தி திறன் பாதிக்கப்படாவண்ணம் செயலாற்றினார்.
74.சென்னை புறநகரில் TAMIN என்றழைக்கப்படும் தமிழ்நாடு மினரல்ஸ் தொழிற்சாலையை நிறுவினார்.1979ல் தமிழகத்தின தொழில் வளர்ச்சி 5.2சதவீதத்திலிருந்து 1982ல் 12.1சதவீதமாய் உயர்ந்தது.
75.இது தவிர மத்திய அரசின் நிதி உதவி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறுவதில் தமிழகம் இந்தியாவிலேயே 3ஆவது இடத்தைப பிடித்தது.
76.1977-78ல் தமிழகத்தில் 2124 மெகாவாட்டாக இருந்த மின்உற்பத்தி 1983-84 ஆம் வருடத்தில்3344 மெகாவாட்டாக உயர்ந்தது.
77.20000 இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க நிதி உதவி அளிக்க உத்தரவிட்டார்.
78.கடுமையான வெள்ளத்தின்போது ரேஷன் கடைகளில் அரிசி விலையை ரூ1.75ஆக குறைக்க உத்தரவிட்டார்.
79.அரசு அலுவலகங்களில் வருகைப்பதிவேட்டில் தமிழில் கையொப்பமிட ஆணை பிறப்பித்தார்.
80.பெயர் பலகை விளம்பர பலகைகளில் முதலில் தமிழில் எழுதப்படவேண்டும் என உத்தரவிட்டார்.
நாளை தொடரும்-: எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள் 100
பகுதி 9
81.தமிழ் சான்றோரகளின் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு விழாக்கள் சிறப்பாக கொண்டாட வழிவகுத்தார்.
82.வறுமையில் வாடும் தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கிட ஏற்பாடு செய்தார்.
83.திருக்குறள் நெறி பரப்பிடும் வகையில் குறள் நெறி பரப்பு மையத்தை உருவாக்கினார்.அதற்கு திருக்குறள் முனுசாமி என்ற அறிஞரை தலைவராக நியமித்தார்.திருவள்ளுவர்
திருநாளன்று சிறந்த அறிஞர்களுக்கு திருக்குறள் விருது வழங்க ஏற்பாடு செய்தார்.
84.தமிழகத்தின் பழங்கலைகளைப் பாதுகாக்க பழங்கலை இயக்ககம் ஒன்றை உருவாக்கினார்.
85.சிறந்த எழுத்தாளருக்கு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் திரு.வி.க..விருது வழங்க ஏற்பாடு செய்தார்.
86.மதுரையில் சங்கப் புலவர்களை கௌரவிக்க நினைவுத்தூண் ஒன்று நிறுவினார்.
87.மேலும் அதே மதுரை மா நகரில் தமிழன்னை சிலையையும் நிறுவினார்.
88.காவலர்கள் சீருடையில மாற்றங்கள் கொண்டு வந்தார்.
89.சென்னை வெப்பேரியில் கால்நடை மருத்துவ பல்கலை கழகம் நிறுவ அடித்தளமிட்டார்.
90.பல்வேறு புதிய அரசுக் கட்டிடங்களை தானே திறக்காமல் தன் தலைமையில் நடைபெற்ற விழாக்களில் எளிய மேஸ்திரிகளைக் கொண்டு திறக்கச் செய்து எளியவர்களையும் கௌரவித்தார்.
நாளை தொடரும்-
எம்.ஜி.ஆரின ஆட்சி சாதனைகள்100
நிறைவுப்பகுதி 10
91.திருச்சிக்கும் தஞ்சைக்கும் இடையே புதிய தலைநகரை உருவாக்க தீர்மானித்து அதற்கான வேலைகளை தொடங்குமுன்னர் எப்போதும் முட்டுகட்டை போடும் சில தலைவர்களின் போராட்டம் காரணமாக அவருடைய மனதுக்குகந்த முடிவை தள்ளி போடவேண்டியதாயிற்று.பின்னர் அவரின் உடல்நலக்குறைவால் திட்டம் நடைபெறவில்லை.இன்றும் பல கருத்தாய்வளர்களால் அத்திட்டம் மட்டு்ம் நிறைவேவறியிருந்தால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டிருக்கும் என கருதப்படுகிறது.
92.மற்றொரு அவரது முடிவாக பொருளாதார ரீதியாக இட ஒதுக்கிடு அமுல்படுத்தப்பட்டது.இதுவும் அவரது எதிர்ப்பாளர்களால் முடக்கப்பட்டது.அதன் காரணமாக இட ஒதுக்கீடு பெறும் சமூகங்களில் பொருளாதாரத்தில் மிக பின்தங்கிய மக்களுக்கு கடைக்க வேண்டிய சலுகைகள் பெற முடியாமற போயிற்று.
93.சத்துணவுத்திட்டம் இந்தியாவுக்கும் முன்னோடீத்திட்டமாக இன்று உள்ளது.ஐ.நா.வின் நிறுவனங்கள் சத்துணவால் குழந்தைகளுக்கு பல பிணிகள் நீங்கியுள்ளதை ஆவணப்படுத்தி உள்ளன.
94.பூரண மது விலக்கு 1977 முதல் 1980 வரைஅமுல்படுத்தினார்.அதன் பிறகு அமுல் படுத்த முடியாமைக்கு பல அரசியல் காரணங்கள் உள்ளன.
95.பெண்களுக்கென பேரூந்துகள் அவரது ஆட்சியில்தான் முதன்முதலாக இயக்கப்பட்டன.
96.சுற்றுலாத்துறை மேம்பட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
97.குடிசைகளுக்கு வீட்டுக்கொரு மின்விளக்கு திட்டத்தினை அமுல்படுத்தினார்.
98.மின்சாரத்தேவையை மனதில் கொண்டு குந்தா போன்ற நீர் மின்நிலையங்களை அமைத்தார்.காற்றாலைகள் அமைத்திட அரசு உதவி அளித்தார்.
99.தமிழக மக்களின் நலனை மனதிற்கொண்டு மத்தியில் அமையும் மாற்று கட்சிஅரசுடனும் சுமுக உறவு கொண்டு தமிழகத்திற்கு தேவையான நலத்திட்டங்களை கொண்டுவர ஏற்பாடு செய்தார்.
100.பள்ளி குழந்தைகளுக்கு இலவச சீருடை வழங்கிட அன்றைய பிரதமர் ராஜிவிடம் உதவி வேண்டினார்.முதலில் மறுத்த ராஜிவ் பின்னர் எம்.ஜி.ஆரின் மீதுள்ள அன்பின் காரணமாக சம்மதித்தார்.இத்திட்டங்களையெல்லாம் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லவில்லை.எம்.ஜி.ஆர் சொன்னதை செய்தார்.சொல்லாததையும் செய்தார்.முக்கியமாக செய்ததை சொல்ல மாட்டார்
வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்.
அவரது மனித நேயத்தைப் போற்றுவோம்.
அடுத்து எம்.ஜி.ஆரின் திரைப்பட சாதனைகள் 100 -தொடரும்.
நன்றி:அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நலச்சங்கம் ,தமிழ்நாடு மற்றும் தி இந்து(தமிழ்)............ Thanks VN.,....
திரையுலகிலிருந்து விலகி, எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பிறகும்கூட, அவர் என்மீது கொண்டிருந்த அன்பு குறையவில்லை. தி.நகர் பாண்டி பஜாரில் நான் ஒரு சினிமா தியேட்டர் கட்டினேன். அதில் சில பிரச்சனைகள். நாகேஷின் தியேட்டர் பாதியில் நிற்கிறது என்று 'குமுதம்' பத்திரிக்கையில் எழுதியிருந்தார்கள்.
அன்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து 'எம்.ஜி.ஆர் என்னைச் சந்திக்க விரும்புகிறார்' என்று தகவல் வந்தது. திடீரென்று எம்.ஜி.ஆர் எதற்கு என்னைச் சந்திக்க விரும்புகிறார் என்று எனக்குப் புரியவில்லை. நேரம் குறிப்பிட்டு, தோட்டத்துக்கு வரச் சொன்னார்கள். தோட்டத்துக்குப் போய் எம்.ஜி.ஆரைப் பார்த்தவுடன், பொதுவான நலன் விசாரித்து விட்டு, 'என்ன நீ! பள்ளிக்கூடத்துக்கு எதிரில் சினிமா தியேட்டர் கட்டிக்கொண்டிருக்கிறாய்? அதற்க்கு ஆட்சேபனை எழுப்பி, புகார்கள் வருகின்றன!' என்றார்.
'நான் தியேட்டர் கட்டிக்கொண்டிருப்பது வாஸ்தவம்தான். அதனால் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபம் என்றால் சொல்லுங்கள். தியேட்டரை இடித்து விடுகிறேன்!' என்றேன்.
இப்படிப்பட்ட ஒரு பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை போலும்!
'அப்படியெல்லாம் அவசரப்பட்டுப் பண்ணாதே! ஸ்கூலுக்கு எதிரில் சினிமா தியேட்டர் என்பதால் தான் ஆட்சேபனை...' என்று அவர் சொல்லவும், 'சார்! உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை நான் ஒன்னும் புதுசா சொல்லிடப் போறதில்லை! ஆனாலும், என் மனசில் பட்டதைச் சொல்கிறேன்' என்று சொல்லி விட்டு, 'பள்ளிக்கூடத்துப் பசங்க, ஸ்கூலைக் கட் பண்ணிட்டு, சினிமாவுக்குப் போகணும்னு நினைச்சா, ஸ்கூலுக்கு நேர் எதிரில் இருக்கிற தியேட்டருக்குப் போவாங்களா?' என்றேன் சற்று மெலிதான குரலில்.
'அப்படீன்னு சொல்லுறியா நீ?' என்று கேட்டு விட்டு, சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்.
பிறகு, 'சரி! நீ போகலாம்! நான் இந்த
விஷயத்தைப் பார்த்துக்குறேன்!' என்றார்.
நான் விடைபெற்றுக்கொண்டேன்.
அடுத்த 2 தினங்களில் திரையரங்கு கட்ட
அனுமதி வந்தது அரசிடமிருந்து !
- நான் நாகேஷ் நூலிலிருந்து .
( படம் ; எம்ஜிஆர் - ஜானகி அம்மையாருடன்
உணவருந்தும் நாகேஷ் , மனைவியுடன் )....... Thanks...
எம்.ஜி.ஆர். படங்களில் 'திருடாதே' முதல் 50 க்கும் மேற்பட்ட படங்களில் சண்டைப் பயிற்சியாளராக பணி புரிந்தவர் ஷியாம் சுந்தர். நல்ல தோற்றமுடைய இவர் நடிப்பதற்காக சினிமாவிற்கு வந்தவர். ஆனால் சண்டைப் பயிற்சியாளராகிவிட்டார்.
எம்.ஜி.ஆர். தமிழக முதல்வரான பின்
ஷியாம் சுந்தர் படிப்படியாக சினிமாவைவிட்டு விலகி பெங்களூரு போய்விட்டார்.
ஒரு நாள் புகைப்படக் கலைஞர்
திரு ஆர். என். நாகராஜராவ் அவர்களிடமிருந்து எனக்கு போன்
வந்தது, "உங்களுக்கு ஒரு அதிசயம்
காத்திருக்கிறது. உடனே வாருங்கள்" என்று.
அதன்படி நேரில் சென்றால், அங்கு
திரு ஷியாம் சுந்தர் எனக்காக காத்திருந்தார். ராவ் அவரது நீண்ட கால
நண்பர்களில் ஒருவர். ஏற்கனவே அவரிடம் ஷியாம் சென்னை வந்தால், தெரிவிக்கும்படி சொல்லியிருந்தேன்.
திரு ஷியாம் சுந்தர், எம்.ஜி.ஆரது
ஆஸ்தான சண்டை பயிற்சியாளரல்லவா, பழகும் தன்மையில் மனதை நெகிழ வைத்தார்.
ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது உறவினர் இல்லத்தில் சந்தித்து பேசி
படங்கள் எடுத்து 'தினமலர்' தீபாவளி மலரில் எழுதினேன்.
ஷியாம் சுந்தர், சிவாஜி நடித்த
'சிவந்த மண், தியாகம் படங்களிலும்
பணி புரிந்திருக்கிறார் எம்.ஜி.ஆரின்
அனுமதி பெற்றே.
Ithayakkani S Vijayan with Plato Rajagopalan...... Thanks...
ஒரு முறை எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரைக்கு சென்று கொண்டிருந்தார் வேனில் ரோட்டின் இரு மறுங்கிளும் மக்கள் திரளாக நின்று கோஷமிட மாலை போடவும் ஆராவாரமாக வந்து கொண்டிருந்தார் ஏழுமலை என்ற கிராமத்தை அடைந்தவுடன் திடீரென வேன் நின்றது ஏன்? என்று பார்க்கையில் ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் வழியை மறைத்து படுத்துக்கொண்டார் உடனே வேனை விட்டு எம்ஜிஆர் இறங்கி விட்டார் குழந்தைகள் மற்றும் வயதான மூதாட்டிகளுக்கு முதலிடம் கொடுப்பார் எல்லோரும் அறிந்ததே!
என்ன வேண்டும் எழுந்திரியுங்கள் என்றதும் எம்ஜிஆரை முதன் முதலில் அருகில் பார்த்த பாட்டிக்கு கண்ணீர் பொங்குகிறது வாய் வார்த்தை வரவில்லை பின் தளத்த குரலில் நீ நல்லா இருக்கனும் ராசா சரிம்மா என்னனு சொல்லுங்க ஒன்னும் இல்லப்பா என் வயலு ரெண்டு வருசமா விளச்சலே இல்ல ஓ பாதம் பட்டா விளையும் னு சொன்னாங்க... அதா நல்ல மழை பெய்தால் தானா விளையும் அம்மா சரி வாங்க எங்கே? இருக்கு என்றார் தலைவர் அந்தா தெரியுது பாருப்பா என்றதும் கூட்டத்தில் விசில் பறக்குது கூட்டம் பின் தொடர எம்ஜிஆர் யாரும் என் பின்னே வரக்கூடாது வயல் கெட்டு விடும் என்று கட்டளையிட்டவாரே வேஷ்டியை தூக்கி பிடித்து கொண்டு ஐந்து நிமிடத்தில் சென்று தன் செருப்பை கழட்டி விட்டு வயலை தொட்டு வணங்கி விட்டு திரும்பினார் தலைவர்
பச்சை பசேலான வயலில் வெள்ளை ஜிப்பா வேஷ்டியில் வெள்ளை கலர் தொப்பி கருப்பு கண்ணாடி தங்கமான நிறத்தில் அவர் முகம் நேரடியாக அன்று அவரை பார்த்த கண்கள் தூங்கி இருக்கவே முடியாது
பின்பு அந்த பாட்டி தயாராக வைத்திருந்த குண்டு சோடாவை கொடுக்க தன் பெருவிரலால் ஒரே அமுக்கு அமுக்கி இரண்டு மடக்கு குடித்து விட்டு பாட்டியை கட்டி பிடித்து விட்டு கை ஆட்டிக் கொண்டே வேனில் ஏறி பறந்தார் எம்ஜிஆர் இது தான் கூட்டத்தில் எல்லோரும் பார்த்தது
ஆனால் பாட்டியின் முந்தானை கொசவத்தில் பேப்பரில் சுற்றிய பணக்கட்டு யார் கண்ணுக்கும் தெரிய வில்லை அதை கட்டிப்பிடிக்கும் போதே தனது ஜிப்பாவில் இருந்து மாற்றி விட்டார் தலைவர் சென்ற பின் அந்த பாட்டியை கட்டிப்பிடித்த பெண்கள் எத்தனை பேர்? அவ்வளவு சந்தோஷம்
பின் தன் உதவியாரிடமும் ஓட்டுனரிடமும் என்னை எவ்வளவு தூரம் நம்பி இருக்கும் இந்த மக்கள் எல்லோருக்கும் எப்படி நான் உதவ போகிறேன் என்று தனது கருப்பு கண்ணாடியை கழட்டி கர்சிப்பால் கண்ணை தொடைத்து கொண்டே பயணமானார் #பொன்மனச்செம்மல்
நீங்க நல்லா இருக்கனும்
நாடு முன்னேற....
என்ற பாடல் தூரத்தில் ஒலித்த வண்ணமே இருந்தது
மீண்டும் வருவேன் நண்பர்களே!
#எல்லாபுகழும்எம்ஜிஆர்கே... Thanks...
வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியக்கூடாது என நினைப்பவர் எங்கள் தங்கம் ஏழைகளின் இதய தெய்வம்...... Thanks...