-
02-07-2020,
நடிகர் திலகத்தின் அட்டகாசமான திரைப்படங்கள்,
தொலைக்காட்சி சேனல்களில்,
குலமா குணமா - காலை 10:30 க்கு கேப்டன் டிவியில்,
சொர்க்கம்- காலை 11 மணிக்கு சன் லைப் சேனலில்,
பேசும் தெய்வம் - பகல் 12 மணிக்கு மெகா டிவியில்,
படித்தால் மட்டும் போதுமா- பகல் 12 மணி & இரவு 7 மணிக்கும்,
நல்லதொரு குடும்பம்- இரவு 11 மணிக்கு பாலிமர் டிவியில்,
Thanks Sekar
-
அரிய படம்..
தாயார் ராஜாமணி அம்மாள் தந்தை சின்னையா ஆகியோருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...2b&oe=5F257332
Thanks Luxman Raju
-
Thanks to ntfans
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
திரைக்கலைஞர்களுக்கு ஒரு பல்கலைக்கழகம்.~#வாணிஸ்ரீ~
நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் நான் முதன் முதலில் உயர்ந்த மனிதன் படத்தில் நடித்தேன். அப்போது எனக்கு 14 வயது. சிவாஜி சாரைப்பற்றி நிறைய கேள்விப்பட்டு இருந்தேன். நேரில் பார்த்தது இல்லை. படப்பிடிப்பின்போது ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’ என்ற பாடல் காட்சியில் நடித்துக் கொண்டு இருந்தேன். அப்போது சிவாஜி சாரை பார்த்து விடலாம் என்று நினைத்தேன். கடைசி வரை அவர் வரவில்லை.
பின்னர் கொடைக்கானல் படகு இல்லத்தில் ‘வெள்ளிக்கிண்ணம் தான் தங்க கைகளில்’ என்ற பாடல் படப்பிடிப்பின்போது சந்தித்தேன். அப்போது மேக மூட்டமாக இருந்தது. வெயில் வரவில்லை. திடீரென்று டைரக்டர் பஞ்சு சார் ‘ரெடி’, ‘ரெடி’ என்று கூறினார். நான் ரெடியாக தாமதம் ஆகி விட்டது. உடனே பஞ்சு சார், வாணிஸ்ரீ உனக்கு அறிவு இருக்கா? இப்படி இருந்தால் எப்படி முன்னுக்கு வருவ? என்று கூறி திட்டினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு நடித்தேன். டைரக்டர் திட்டியதால் அழுது கொண்டே இருந்தேன். அப்போது சிவாஜி சார் என்னிடம் வந்து நீ வாணிஸ்ரீதானே! இப்போ அழுதே இல்ல... இன்னும் கொஞ்ச காலத்தில் பெரிய ‘ஸ்டார்’ ஆயிடுவே. இதே டைரக்டர் பஞ்சு உன்னிடம் வந்து கால்ஷீட் கேட்பார் என்று கூறினார். அப்போது நான் 2 படங்களில் மட்டும் நடித்து இருந்தேன். அவர் எப்படி அப்படி சொன்னார் என்று எனக்குத் தெரியாது. அவர் இமயம் மாதிரி. சிலர் சொன்னால் அது நடக்கும் என்பார்கள். இந்த சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் முடிந்த பின்னர் கர்நாடகா மாநிலத்தில் இளைய தலைமுறை படப்பிடிப்பு நடந்தது. அப்போது தெலுங்குபடங்களில் நான் பிரபலமாகி ஐதராபாத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டு இருந்தேன். அங்கிருந்து விமானத்தில் பெங்களூரு சென்று காரில் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குச் சென்று சிவாஜி சாரைப் பார்த்தேன். அப்போது டைரக்டர் பஞ்சு சார் என்னிடம் வந்து என்னம்மா வாணி எப்படி இருக்கே? கஷ்டப்பட்டு வந்து இருக்கே?டேக் எடுக்கலாமா? என்று கேட்டார். படப்பிடிப்பு முடிந்ததும் சிவாஜி சார் என்னிடம் வந்தார்.
வாணி, அன்று கொடைக்கானல் படகு இல்லத்தில் நான் என்ன சொன்னேன் என்று நினைவு இருக்கிறதா? அதே மாதிரி நடந்ததா? இல்லையா? அன்று உன்னைப் பார்த்தும் அப்படி சொல்லனும்ன்னு தோணிச்சு என்றார். நீ வருடத்தில் என்னுடன் 2தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறினார்.
ஒரு மனிதனாக இவ்வளவு சாதித்து விட்டோம் என்னைப் போல ஒரு நடிகர் கிடையாது என்ற கர்வம் சிவாஜி சாரிடம் கிடையாது. குழந்தை மாதிரி பேசுவார். வெளிப்புறப்படப்பிடிப்பில்அவரது மனைவி கமலாவிடம், கமலா வாணிக்கு மீன் குழம்பு கொடு. பலகாரம் கொடு என்று சொல்லுவார்.
அவருக்கு தான் ஒரு பெரிய நடிகர் என்ற அகந்தை கிடையாது. அவருக்கு தெரிந்த உலகம் சினிமா. தெரிந்தது நடிப்பு. பராசக்தியில் இருந்து பல்வேறு படங்கள் பற்றி தான் அதிகமாக பேசுவார். வசந்தமாளிகை படத்தை முதலில் தெலுங்கில் பிரேம நகர் என்ற பெயரில் எடுத்தார்கள். தெலுங்கு, தமிழ் மொழியில் நான் நடித்தேன்.படம் வெளியானபிறகு நான் நகைக்கடை, டெக்ஸ்டைல்ஸ், ஷாப்பிங் காம்பளக்ஸ் என்று எங்கு சென்றாலும் வசந்தமாளிகை பற்றி தான் பேசுவார்கள்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற மகான்களுடன் நடித்ததால்தான் மக்கள் இவ்வளவு நாள் என்னை நினைவு வைத்துள்ளனர். அப்போதே அவர்கள் பெரிய தூண்கள். வசந்தமாளிகையில் நடித்த போது எனக்கு 19 வயதுதான். பெரியவர்களை பார்த்துதான் நடிக்க கற்றுக் கொண்டேன். அவர்கள் கூட இருப்பதே நமக்கு பெரிய பலமாக இருக்கும். வசந்தமாளிகை படப்பிடிப்பின் போது ஊட்டியில் அதிகாலை 3 மணிக்கு எழுந்து மேக்-அப் போட்டு 5 மணிக்கு ஷூட்டிங் சென்று விடுவோம். இலங்கையில் வசந்த மாளிகை 52 வாரங்கள் ஓடியது. இலங்கை மக்கள் நானும், சிவாஜியும் இலங்கை வரவேண்டும் என்று விருப்பப்பட்டனர். இலங்கை பிரதமர் பண்டார நாயகா நாங்கள் இலங்கை வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது, சிவாஜி சார் ஒரு கையால் என் கையை பற்றிக் கொண்டும் ஒரு கையில் சூட்கேஸ் வைத்துக் கொண்டு நடப்பதைப் போலவும் பண்டார நாயகா இரு கைகளையும் விரித்து காட்டி இலங்கைக்கு வரக்கூடாது என்றுஎங்களை தடுப்பது போலவும் தினத்தந்தியில் முதல் பக்கம் கார்ட்டூன் வெளியானது. இலங்கை சென்ற போது மக்கள் எங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று, ‘என்ன படங்க அது, காதலை இவ்வளவு புனிதமாக சொல்லி இருக்கீங்க... என்று கூறி பரவசப்பட்டனர். புதுமையான கதை அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பு அதை படமாக்கிய விதம் தான் வசந்தமாளிகை வெற்றிக்கு காரணம்.
எல்லாவற்றுக்கும் ஒரு அகராதி உள்ளது. என்ஜினீயரிங் படிக்க விரும்பினால் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. டாக்டர் படிப்பு படிக்க மருத்துவ கல்லூரி உள்ளது. சினிமான்னு வரும்போது எந்த கல்லூரியோ, புத்தகமோ இல்லை. நமக்கு முன் நடித்தவர்களைதான் நாம் பின்பற்றி நடிக்கிறோம். எனக்கு தெரிந்த வரை சிவாஜி படத்தை பார்த்தால் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி எந்த கதையில் எப்படி நடிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்வார்கள். அதற்குதான் கடவுள் சிவாஜியை படைத்தார் என்று நினைக்கிறேன். அவர் படங்களை 10 நாள் பார்த்தால் பெரிய நடிகர் ஆகி விடுவார். திரைக்கலைஞர்களின் பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன்.
வசந்தமாளிகை படம் வெளி வந்து பல இடங்களில் 25 வாரம் வெள்ளி விழா கொண்டாடியது. சிவாஜி சாருடன் நானும் நிறைய ஊர்களுக்கு சென்றேன். பொள்ளாச்சியில் உள்ள அவரது நண்பர்கள் வருவார்கள். அவர்கள் வந்தால் அவர்கள் என்னை பார்க்க வருவார்கள். அப்போது சிவாஜி, ஏய் வாணி உனக்கு ஒரு கூட்டமே வருது பார் என்பார். பரவாயில்லை அனுப்புங்க என்பேன். வசந்தமாளிகைக்கு பின்னர் வாணிஸ்ரீயை பார்க்கனும் என்கிறார்கள். என்னைப் பற்றிய யாரும் கேட்க மாட்டேங்கறாங்க.. அந்தப் பெண்ணைத்தான் பாக்கனும் என்கிறார்கள். என்ன இது? என்று கிண்டலாக கூறி சிரிப்பார்.
சில கதாபாத்திரங்களில் சிவாஜி சார் மாதிரி யாரும் நடிக்க முயாது. தத்ரூபமாக நடித்து கதாபாத்திரமாகவே மாறி விடுவார். வசந்தமாளிகை படத்தை பார்க்கும்போதே இதயத்தை வருடுவதை போல் இருக்கும். அந்த படத்தை பார்த்தால் அழுது விடுவேன். யாருக்காக பாடல்காட்சியில் ‘எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கம் இல்லாதவள் என்று,’ பாடுங்கள் என் கல்லறையில் அவன் பைத்தியக்காரன் என்று’ வரிகள் வரும்போதே அழுகையும் சேர்ந்து வந்து விடும். எப்போது டி.வி.யில் அந்த படத்தை பார்த்தாலும் முதலில் கண் கலங்கும். அவர் நடிப்பு பற்றி அவரிடம் பாராட்ட முடியாது. இமயமலை கிட்டபோய் நீ இமயமலை, நீ உயரமா இருக்கே, நீ ரொம்ப குளிரா இருக்கே என்று கூற முடியுமா? அவர் நடிப்பு திறமை பற்றி அவரிடம் பாராட்ட முடியாது நல்லாயிருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்றுதான் கூற முடியும்.
அதன் பிறகு நாங்கள் சந்தித்த போது வசந்தமாளிகையை ராஜேஷ் கண்ணாவும், ஹேமமாலினியும் நம்ம மாதிரி பண்ணவில்லை. நம் படம் தமிழ் படம் தான் சூப்பர்! ‘என்னமா பண்ணினோம், நாம் இரண்டு பேரும்’ என்பார். பண்ணியதே அவர்தான். அவர் எளிமையானவர். தன்னை பற்றி பெரிதாக பேச மாட்டார். அவர் இறந்து விட்டார் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அவர் இறக்கவில்லை எல்லோருடைய இதயங்களிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் நடிகர் அவர் மீது இருக்கும் மரியாதை நினைவுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
தமிழ்நாட்டில் நான் எங்கே ஷாப்பிங் போனாலும் வசந்தமாளிகை கூந்தல் அலங்காரம் பற்றிதான் பேசுகிறார்கள். ஊட்டியில் என் மகளுடன் ஷாப்பிங் சென்ற போது ஊர் மக்களே திரண்டு வந்தனர். கல்யாணமாகி 30 வயதில் குழந்தை இருக்கும்போது மக்கள் வசந்தமாளிகையில் என் நடிப்பை பாராட்டிய போது அவர்கள் மனதில் எப்படி பதிவு ஆகி இருக்கிறதுஎன்று நினைத்துவியந்து போவேன்.. பெரிய மகான்கள்கூட நடித்ததால்தான் என் பெயரும் புகழும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. சிவாஜி சாருடன் உயர்ந்த மனிதன், குலமா குணமா, இளையதலைமுறை, ரோஜாவின் ராஜா, நல்லதோர் குடும்பம் உள்பட பல படங்களில் நடித்துள்ளேன். சிவாஜி சார் எத்தனையோ பேருக்கு நடிக்க வழி காட்டி இருக்கிறார். அவர் குடும்பம் நீடூழி வாழ வேண்டும். சிவாஜியின் புகழை யாராலும் குறைக்க முடியாது. அது கூடுமே தவிர குறையாது.
அவர் உயிருடன் இருக்கும்போதே ஒவ்வொரு வருடமும், எல்லா நடிகர்களும் சேர்ந்து அவரது பிறந்தநாளில் மாலைபோட்டு சால்வை அணிவித்து அவரை பற்றி பேசி இருந்தால் அவர் சந்தோஷப்பட்டு இருப்பார். கடலில் விழுந்த கல் போல எங்கெங்கோ போய்விட்டோம். எந்த ஆழத்துக்கு போனாலும் சூரியன் தெரிந்து கொண்டே இருக்கும். அந்த மாதிரி சினிமா கடலாக இருந்தாலும் மேலே பார்த்தால் சூரியன் தெரியும். அந்த மாதிரி சிவாஜியை மறைக்கிற மேகம் இன்னும் பிறக்கவில்லை கடவுள் தனக்கு கொடுத்த கடமையை சிறப்பாக செய்து இருக்கிறார். சிவாஜி சார் ஒரு சகாப்தம், இன்றைய பெரிய ஹீரோக்கள் யாரும் அவர் பாதிப்பு இல்லாமல் இருக்க முடியாது. அவர் கூட நான் நடித்தேன் என்பதே பெருமையாக இருக்கிறது.
- நடிகை #வாணிஸ்ரீ
Thanks Vasudevan Srirangarajan
-
பிலிம்பேர் என்ற வட இந்திய சினிமா பத்திரிகையில் 1965 ல் நடிகர்திலகத்தை பற்றிய கருத்தை அப்போதைய இந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய திலீப்குமார் அவர்கள் குறிப்பிடும் போது, " கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போல அதற்கு இணையாக உலகில் யாராவது நடிக்க முடியுமா? யாராவது இருந்தால் எனக்கு காட்டுங்கள் நான் அவரை வணங்குகிறேன், என வெளிப்படையாக கூறியிருந்தார்.ஒருவேளை அப்படியே நடித்திருந்தால் அவர் சிவாஜியை பின்பற்றித்தான் நடித்திருக்க முடியும், எப்படியாவது அவரின் சாயல் வந்துவிடும் எனவும் கூறினார்,
1952 வரை வட இந்திய நடிகர்களுக்கு தமிழ் நடிகர்கள் பற்றி மிக இகிழ்ச்சியான எண்ணம் இருந்து வந்தது, நடிகர்திலகத்தின் பட உலக பிரவேசத்திற்குப் பிறகு நடிப்பு என்றால் இவ்வளவு இருக்கிறதா? என்ற திகைப்பும் வாயடைப்பும் அவர்களுக்கு ஏற்ப்பட்டது.
நடிப்புக் கலையைப் பொறுத்தவரை நடிகர்திலகத்தை மிஞ்ச உலகிலேயே ஆள் கிடையாது. ஆனால் தமிழர்களுக்கு எப்போதுமே தங்கள் சகோதரர்களையே தாழ்த்தும் சுபாவம் இருப்பதால் நம்மில் சிலர் நடிகர்திலகத்தின் பெருமையை ஒப்புக் கொள்வது கிடையாது.
:- கட்டுரை வெளியீடு 19/02/1986
தினகரன் நாளிதழ்
நன்றி:- வரலாற்றுச் சுவடுகள் நூலிலிருந்து
Thanks Sekar Parasuram
-
-
-
-
-
-
-
-
-
-
-
விவசாயத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட, படிப்பறிவு என்பது சராசரிக்கும் சற்றுக் குறைவான, ஒரு சிறிய முனிசிபாலிட்டி நகரம்.
தூய தமிழில் பேசினாலே புரிந்து கொள்ளச் சிரமப்படும், கொங்குத் தமிழ் பேசும் வெள்ளந்தியான மனிதர்கள் நிறைந்த, நகரம் என்ற பெயரில், ஒரு மிகப்பெரிய பேரூராட்சி அளவிலான ஒரு இரண்டுங் கெட்டான் நகரம்.
அந்த நகரத்தில், 43 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாகக் கட்டப்பட்டுத் துவக்க விழா கண்ட ஒரு சினிமாக் கொட்டகை, அந்தத் தியேட்டரின் முதல் படமாக ஒரு ஆங்கிலப் படத்தைத் திரையிட்டது என்றும், அந்த ஆங்கிலப் படம் அந்த சிறிய நகரில் ஐம்பது நாட்கள் ஓடியது என்று உங்களால் நம்ப முடிகிறதா ?
ஆம்.
எங்கள் ஊர் பொள்ளாச்சிதான் அது.
43 ஆண்டுகளுக்கு முன், 1977 ஆம் ஆண்டு, இதே ஜூலை 3 ஆம் தேதி, பொள்ளாச்சி, துரைஸ் தியேட்டர் திறப்பு விழாக் கண்டு, முதல் படமாக, புரூஸ் லீ நடித்த 'என்டர் தி டிராகன்' ஆங்கிலப் படம் திரையிடப்பட்டது.
மேலும், ஐம்பது நாட்களையும் அது கடந்தது..
அது மட்டுமா... இந்தி தெரியாத மக்கள் வாழ்ந்த, இந்தி பேசுபவர்கள் யாருமே அப்போது குடியிருக்காத, இந்த ஊரில், 'குர்பானி' இந்திப் படமும் ஜீனத் அம்மனுக்காகவே ஐம்பது நாட்கள் ஓடியது.
இங்கு 100 நாட்களுக்கு மேல் ஓடிய முதல் படம் என்ற பெருமைக்குரியது நடிகர் திலகத்தின் 'திரிசூலம்'. 127 நாட்கள்...
தியேட்டரின் துவக்க நாள் அன்று, தியேட்டரில் டிக்கட் வாங்க நிரம்பி வழிந்த கூட்டத்தின் ஒரு அரிய புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.
அதை நன்கு கவனித்துப் பார்த்தால், இன்னொரு ஆச்சரியமும் இருக்கும்..
கூட்டத்தைக் கட்டுப்படுத்த நின்றிருந்த ஒரு போலிஸ் கான்ஸ்டபிள் காக்கி நிறத்தில் அரை டிரவுசர்தான் அணிந்திருப்பார்...
அப்போதைய போலிஸ் யூனிபார்ம்...
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...d5&oe=5F2387AF
Thanks Nagarajan Velliangiri
-
-
-
-
-
-
-
-
-
1968-ம் ஆண்டு அண்ணாதுரை ஆட்சியில் சென்னையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டு நிதிக்காக நடிகர் திலகம் பல்வேறு நகரங்களில் தனது"வியட்நாம் வீடு" நாடகம் நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார் (எதிர்க்கட்சியிலிருந்த போதிலும்). அவ்வாறு கோவையில் நடந்த நாடக விழாவில் நடிகர் திலகத்தைப் பாராட்டி விழா அமைப்பாளர் திருமதி சந்திரகாந்தி ஐ.ஏ.எஸ். , நடிகர் திலகத்துக்கு நினைவுப் பரிசு அளித்தபோது....
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...e2&oe=5F275CAC
Thanks Mohamad Thameem
-
-
07-07-2020,
தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!!
* தியாகம்- காலை 4 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில்,
*ஜல்லிக்கட்டு - காலை 6 மணிக்கு ஜெயா மூவியில்,
*திருவருட்செல்வர் - காலை 11 மணிக்கு சன் லைப் சேனலில்,
*தாவனிக் கனவுகள்- மாலை 4 மணிக்கு ஜெயா மூவியில்,
*சித்ரா பௌர்ணமி- இரவு 7:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்,
* ஆனந்த் கண்ணீர்- இரவு 11 மணிக்கு பாலிமர் சேனலில்,
Additional special,
சின்ன தம்பி - இரவு 9 மணிக்கு ஜெயா டிவியில்,
கும்கி - பிற்பகல் 2 மணிக்கு விஜய் சூப்பர் டிவியில்,
Thanks Sekar
-
-
-
-
08-07-2020
தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!
*தவப்புதல்வன்- பகல் 12 மணிக்கு மெகா தொலைக்காட்சியில்,
*பார்த்தால் பசி தீரும்- மாலை 4 மணிக்கு சன் லைப் சேனலில்,
* இமயம்- இரவு 7:30 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில்,
Thanks Sekar
-
கடந்த 1960 ல் சென்னை எழும்பூரில் உள்ள, டான்பாஸ்கோ பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன், அப்போது நாங்கள் பாந்தியன் ரோடில் வசித்து வந்தோம், வீட்டிற்கு அருகே ஸ்கூல்,
என் தாயார் ஒய்.ஜி.பி.,பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியை ஆரம்பித்த நேரம். நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில், கட்டடம் இல்லாமல், கூரை போடப்பட்ட வகுப்பு அறைகள், பள்ளி ஆண்டு விழாவிற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வந்திருந்தார், அவர் தான் தலைமை, மாணவர்கள், பெற்றோர் எல்லோரும் பென்சுகளிலும் தரையிலும் உட்கார்ந்திருந்தனர், நான் சிவாஜி சாரை முதன் முறையாக அன்று தான் பார்த்தேன்.
என் தாயார் நடிகர் திலகம் சிவாஜியை வரவேற்று பேசும்போது "கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுகிட்டு கொடுக்கும் என்பர், எங்களுக்கு கூரை கூட இல்லை, தெய்வம் எவ்வளவு கொடுத்தாலும், மகிழ்ச்சியாக, நன்றியோடு பெற்றுக் கொள்வோம்" என்றார்.
விழாவில் நடிகர் திலகம் சிவாஜி பேசும்போது, "மொத்த ஸ்கூலுக்கும் கூரை போட முடியுமா என்று தெரியவில்லை, என்னால் முடிந்த 10 ஆயிரம் ரூபாயை இந்தப் பள்ளிக் கட்டிட நிதிக்கு நன்கொடையாக அளிக்கிறேன், இந்தப் பள்ளி கண்டிப்பாக, பெரியதாக வளரும்..." என்று வாழ்த்தினார்,
அவருடைய வாழ்த்து பலித்தது, இன்று என் தாயார் நடத்தும் பத்ம சேஷாத்ரி பள்ளி, பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது.
தகுதியான காரியங்களுக்கு, நிறைய தர்மம் செய்வார் நடிகர் திலகம் சிவாஜி, அவர் செய்யும் தர்ம காரியங்களை, கொடுக்கும் நன்கொடைகளை விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை,
அது தான் அவருடைய உண்மையான குணம்,
:- திரு ஒய்.ஜி.எம்.அவர்கள் எழுதிய "நான் சுவாசிக்கும் சிவாஜி" என்ற நூலிலிருந்து,
Thanks Sekar
-
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...7e&oe=5F290D46
மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே 4 கோடிகளை கடந்த பார்வையாளர்கள்
இன்றைய நிலவரப்படி 7 கோடியை கடந்திருக்க வேண்டும்
ஆனால் YouTube ல் ஏதோ நடந்திருக்கிறது,
பழைய அதிகம் பார்வையாளர்கள் எண்ணிக்கை கொண்ட நடிகர் திலகத்தின் பாடல் பதிவுகள் அழிக்கப்பட்டிருக்கிறது
யார் நியாயம் கேட்க போகிறார்கள்??
Thanks Sekar
-
-
இளையதளபதி விஜய் அவர்களின் தந்தையும், பிரபல இயக்குனரும், நடிகர் திலகத்துடன் வசந்தமாளிகை, எங்கள் தங்க ராஜா, உத்தமன் ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும், பட்டாக்கத்தி பைரவன் படத்தில் இணை இயக்குனராகவும் பணி புரிந்த திரு.S.A.சந்திரசேகரன் அவர்கள் நடிகர் திலகம் அவர்களைப் பற்றி சமீபத்தில் அளித்த ஒரு காணொளிப் பேட்டியில் இருந்து சில பகுதிகளை இங்கு எழுத்து வடிவில் தருகின்றேன்.)
I.
வசந்த மாளிகை படத்தில் நான் துணை இயக்குநர். அதற்கு முன்பு சில நாடகங்களைத் தயாரித்து நடித்துக் கொண்டிருந்தேன்.
வசந்தமாளிகை படத்தின் வசனகர்த்தா திரு.பாலமுருகன் அவர்கள். அவர் தினமும் படப்பிடிப்பு அரங்குக்கு வந்து, அன்றைய காட்சிகளின் வசனங்களை நடிகர் திலகத்திடம் படித்துக் காண்பித்து விட்டுப் போவார்.. சுமார் பத்து நாட்கள் இப்படி நடந்தது.
அதன் பின்னர், ஏதோ அலுவல் காரணமாக பாலமுருகன் அவர்கள் தினசரி வர முடியாத ஒரு சூழல் அவருக்கு ஏற்பட்டது.
எனது நாடகங்களை ஏற்கெனவே பார்த்திருந்த அவர், சிவாஜியிடம் என்னை அழைத்துச் சென்று, "இவன் நல்ல திறமையான பையன். நல்லா நாடகம் எல்லாம் போடறான். உங்கள் வசனங்களை இனிமேல் இவன் தினமும் உங்களுக்குச் சொல்லுவான்" என்று சொல்லி என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி விட்டுச் சென்று விட்டார்.
"அப்படியா.." என்று சொன்ன சிவாஜி, "டேய் இங்க வாடா .." என்று அழைத்தவர், "எங்கே சீனைப் படி " என்று சொன்னார்.
அப்போது அவர் கண்ணாடி முன்னால் அமர்ந்து மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். போட்டு விட்டவர் ரங்கசாமி . நான் சிவாஜிக்குப் பின்னால் நின்றபடி, சீனைப் படித்தேன். அவர் கண்ணாடி வழியாக என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரியாது.
நான் அன்றைய சீனைப் பாடம் படிப்பது போலப் படித்தேன்.. திரும்பினார். என்னை அழைத்தார்.
"டேய். இங்கே வா...உன்னைப் பத்தி அவன் என்னென்னவோ சொல்லிட்டுப் போனான்...நீ இப்படிப் பண்ணினா நான் எப்படிடா நடிக்கிறது? கொஞ்சம் உணர்வு பூர்வமாப் படிடா" ன்னு சொன்னார்.
அதற்கு நான், "அண்ணே..நீங்கதான் எதையும் சூப்பரா நடிச்சிருவீங்களே!" என்றேன்..
அதற்கு அவர்,"டேய்..நீ எனக்கு எப்படி நடிக்கறதுன்னு சொன்னாத்தான்டா நான் நடிப்பேன்" என்றார்.
அடுத்த நாள்ல இருந்து, காலைல நாலு மணிக்கு எந்திருச்சு, டயலாக் எல்லாம் மனப்பாடம் பண்ணி, நடிச்சும் பார்த்துக்குவேன். அப்புறம் போய் அவர்கிட்ட சீன் சொல்லுவன் பாருங்க... மெல்லத் தலையாட்டுனபடி...'எஸ்..இப்படி இருக்கனும்'பார்.
அதுதான் எனக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய எலிவேசனைக் கொடுத்தது.
II.
இதற்கிடையில் சிவாஜியுடனான எனது நெருக்கம் அதிகமாகி இருந்துச்சு. தினமும் சீன், டயலாக் எல்லாம் சொல்றதுல..
"அண்ணே.. அண்ணே" என்று நான் சொல்லுவேன். அவர் எப்பவும் என்னை நல்லாத் திட்டுவார்.
அப்போ ஒரு நிகழ்ச்சி நடந்துச்சு.
வசந்த மாளிகை படத்துல ஒரு பாட்டு சூட்டிங்.. ஏகப்பட்ட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கூட இருந்தாங்க.
பாடல் காட்சியிலே, அடுத்த வரி வர்றதுக்கு சில செகன்ட் முன்னாடி அவருக்குப் பிராம்டிங் செய்யனும்.. நான்தான் செய்வேன்..
ஒரு சாட்ல அது சிங்க் ஆகலை...உடனே நான் "அண்ணே.. ஒன் மோர்" என்றேன்.
சிவாஜி என்னை ஒரு முறை முறைச்சார்.
"எதுக்குடா ?" ( கூடவே அவர் ஒரு வார்த்தை சொல்லுவார்.. அது இங்கே வேண்டாமே).. நான் "அண்ணே, நான்-சிங்க்" என்றேன்.
"எங்கிட்டேயேவா ? " என்று எப்பவும் என்னை மிரட்டும் அதே தொனியில் சொன்னவர், நேரே வந்தார்.
அப்போதெல்லாம், உடனடியாகக் காட்சியைப் பார்க்கும் ஒரு கருவி இருக்கும்..அதில் படமான காட்சியைப் பார்த்து விடலாம். அதில் சென்று பார்த்தவர், அவரே வந்து "ஒன் மோர்" என்று சொல்லி விட்டு, மறுபடியும் அந்தக் காட்சியை நடித்துக் கொடுத்தார்.
'டைரக்டர் சும்மா உட்கார்ந்திருக்கார், இந்தச் சின்னப் பையன் சின்னச் சின்ன விசயங்களை எல்லாம் நல்லா கவனிக்கறானே' ன்னு என் மேலே சிவாஜிக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் வந்திருச்சு.
( டைரக்டர் K.S.பிரகாஷ்ராவ் டைரக்ட் பண்ணும்போது நாற்காலியை விட்டு எழுந்திருக்கவே மாட்டார். ஆனால் காட்சி படமாக்குவதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் பக்காவாகச் செய்து விட்டு , பின் அசோசியட் டைரக்டரிடம் காட்சியைப் படமாக்கும் வேலையைக் கொடுத்து விட்டு அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார். ஆறடிக்கு மேல் ஆஜானுபாவமாக ஒரு கம்பீர உருவம் )
( இதே போன்ற, இன்னொரு 'ஒன் மோர்' பற்றிப் பின்னர் இன்னும் ஒரு சுவாரசியமான செய்தி வரும்...தவற விட்டு விடாதீர்கள்)
III.
சுமார் 50 வருசத்துக்கு முன்னால், க்ஷோபாவை நான் காதலிச்சு, அவரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னப்போ, மிகவும் பலத்த எதிர்ப்புக்குப் பின்னர் அம்மா, ரெண்டு அண்ணனுக, தங்கை, எல்லாரும் ஒரு வழியா சரி சொல்லிட்டாங்க...ஆனா அப்பா மட்டும் ஒப்புக்கவே இல்லை. கல்யாணத்துக்கும் வர மாட்டேன்னு சொல்லிட்டார்...
அந்தச்சமயத்தில் பட்டாக்கத்தி பைரவன் பட சூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு. அதில் நான் இணை இயக்குநர். VB ராஜேந்திர பிரசாத் இயக்குநர்.
அப்போது சிவாஜிக்குப் படப்பிடிப்பு சம்பந்தமான செய்திகள், நேர மாறுதல்கள் போன்ற எதாவது சொல்ல வேண்டும் என்றால் என்னைத்தான் அனுப்புவார்கள். போனில் சொல்லக் கூடாது.நேராக வீட்டில் போய்த்தான் சொல்ல வேண்டும்.
காலை நேரத்தில், சிவாஜி, வீட்டுக்குப் பின்புறம் ஒரு சேரைப் போட்டு உட்கார்ந்திருப்பார். யார் போனாலும், வீட்டுக்குள்ள போகாமலே, சுத்திப் போய் அவரைப் பார்த்துப் பேசலாம். அடிக்கடி அப்படிப் போய்ப் போய் அவர் கூட நல்லாப் பழக ஆரம்பிச்சுட்டேன்.
காலைலை அம்மாவே சர்வீஸ் பண்ணுவாங்க பாருங்க. கமலா அம்மா.
டிபன் டைம்ல போன டிபன்.. சாப்பாடு டைம்ல போன சாப்பாடு.
அவங்க வீட்ல பெரிய டைனிங் டேபிள் இருக்கு. 25 பேர்ல இருந்து 30 பேர் வரை ஒன்னா உட்கார்ந்து சாப்பிடற அளவு பெரிய, மர டைனிங் டேபிள். இப்பவும் இருக்கு.
யார் அந்த வீட்டுக்குப் போனாலும் கமலா அம்மா நல்லா உபசரிப்பாங்க..
சர்வன்ட்ஸ் நிறையப் பேர் இருக்காங்க..
ஆனாலும் கமலா அம்மாவே எல்லோருக்கும் பரிமாறுவாங்க..
நான் ஒரு சாதாரண அசிஸ்டன்ட் டைரக்டர்.. எனக்கும் அவங்களேதான் கைப்படப் பரிமாறுவாங்க..
அப்ப ஒரு நாள் சிவாஜி கிட்ட நான், "அண்ணே, நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.. நீங்கதான் வந்து தாலி எடுத்துக் கொடுக்கனும் " என்றேன்..
அப்போது அவர் அழகா சொன்னாரு பாருங்க.." டேய்.. நான் சரி இல்லைடா.. கெட்டவன். நீ கமலாவை அழைச்சுட்டுப் போய், அவளை வெச்சு உன் கல்யாணத்தைப் பண்ணிக்கோ" என்றார்..
நான்," நான் அம்மாவை அழைச்சுட்டுப் போய் அவங்க முன்னாடி கல்யாணம் பண்ணிக்கறேன்..ஆனால் நீங்க வரணும்" என்றேன்.
"சரி" என்றார்.
தர்மபிரகாஷ்ல ரொம்ப கிரேண்டா கல்யாணம் நடந்துச்சு. VB ராஜேந்திர பிரசாத் எனக்கு கல்யாண கோட் சூட் எடுத்துக் கொடுத்தார். மனைவி ஷோபாவுக்கு ஆனந்த் சினி ஆர்ட்ஸ் பெரியவர் கல்யாணப் பட்டுப் புடவை தந்தார். VBRP பெரிய ராயல் பேமிலி... ரொம்ப நல்ல மனுசன்...ஒரு அசோசியேட் டைரக்டரான எனது கல்யாணச்செலவு முழுக்கவும் ஏத்துக்கிட்டு மிக பிரமாண்டமா நடத்தினார்..
சிவாஜியும் கமலா அம்மாவும் வந்திருந்தாங்க. கமலா அம்மா கையால தாலி எடுத்துக் கொடுத்தாங்க...
இன்னைக்கும் அதைச் சொல்வேன்.. "உங்க கையால நான் வளர்ந்தேன். உங்க கையால தாலி எடுத்துக் கொடுத்தீங்க... நானும் க்ஷோபாவும் வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலைக்கு வந்துட்டோம்...நாங்க மட்டும் அல்ல.. எங்க புள்ளையும் "
அந்த ராசி அப்படி. நெத்தி நெறைய அவ்வளவு பெருசா, வட்டமா பொட்டு வச்சிருப்பாங்க.. ரொம்ப மங்களகரமா இருக்கும்..
IV.
கல்யாணம் முடிஞ்சு இரண்டு நாள் கழிஞ்சு, ஊட்டியில் சூட்டிங். நான் வேலைக்குப் போனாத்தான காசு ? வீட்ல சொல்லிட்டு நான் ஊட்டி போனேன்.
பொட்டானிக்கல் கார்டன்ல சூட்டிங். காலை 8 மணிக்கு. சிவாஜி வந்து இறங்கினார். என்னைப் பார்த்துட்டார்.
நேரா என்னைக் கூப்பிட்டார்.
"டே இங்கே வாடா. என்னடா, கல்யாணம் முடிஞ்ச ரெண்டாம் நாள் சூட்டிங் வந்துட்டே?" ன்னு கேட்டார்.
நான் நெளிந்தபடி... "இல்லைண்ணே... வேலை முக்கியம்ணே" என்றேன்..
" பெரிய கடமை உணர்ச்சி.." அப்படின்னெல்லாம் என்னைக் கிண்டல் எல்லாம் அடிச்சிட்டு,மானேஜர் மொய்தீனைக் கூப்பிட்டார்.
"இவன் பொண்டாட்டி, ராத்திரிக்குள்ள இங்க இருக்கனும்" அப்படின்னு அவர் கிட்ட சொன்னார்.
அப்ப எல்லாம் கோயம்புத்தூருக்கு ஃப்ளைட் கிடையாது. கார்லயே என் மனைவியை ஊட்டிக்குக் கூட்டிட்டு வந்துட்டாங்க.. சாயங்காலம் நாலரை மணிக்கு சூட்டிங் ஸ்பாட்டுக்குக் கார்ல வந்து இறங்கினா அவ.
அப்போ என்னைக் கூப்பிட்டார் சிவாஜி. அந்தக் காலத்தில அசிஸ்டென்ட் டைரக்டர்கள் எல்லாம் கழுத்துல ஒரு விசில் மாட்டிருப்போம்..சூட்டிங் சமயத்தில் அதில் விசில் அடிப்போம்..
என் கழுத்தில் இருந்த விசிலை அவரே கழற்றினார். இன்னொரு உதவி இயக்குனரைக் கூப்பிட்டு, அந்த விசிலை சிவாஜியே அவர் கழுத்தில் மாட்டினார்.
பின்னர் என்னைப் பார்த்து..."ஓடறா..ஓடு. போ போ..போய் ஜாலியா இரு. நாளைக்கு இந்தப் பக்கமே நீ எட்டிப் பார்க்கக் கூடாது..ஓடு ஓடு " என்று துரத்தி விட்டார்.
அவரோட தயவால, ஒரு சாதாரண அசிஸ்டெண்ட் டைரக்டரான என் ஹனிமூன் ஊட்டியில நடந்துச்சு..அப்போ அது கனவுல கூட நினைச்சுப் பார்க்க முடியாத பெரிய விசயம். இப்போ ஸ்விட்சர்லாந்து போறதைப் போல அப்போது ஊட்டி போறது
அதெல்லாம் லைப்ல எனக்கு சிவாஜியால கிடைச்ச மிகப்பெரிய விசயம்.
இதோட முடிஞ்சுச்சா ? இல்லை.
நாங்க அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் எல்லாம், ஊட்டியில் ஒரு சின்ன, சாதாரண லாட்ஜ்ல தங்கி இருந்தோம்.
சிவாஜி உட்லண்ட்ஸ்ல தங்கி இருந்தார்.. அதுதான் ஊட்டியில் அப்போது பெரிய ஹோட்டல்..
அந்த உட்லண்ட்ஸ் ஹோட்டல்லயே ஒரு காட்டேஜ் எங்களுக்குப் போட்டுக் கொடுத்து...பாருங்க....எங்களை அங்கே தங்க வெச்சார்..
சிவாஜியோட இந்தச் செயல் பலபேர் அறியாத விசயம். அவரோட நெருக்கமா பழகறவங்களுக்குத்தான் தெரியும், சிவாஜி எப்படி அன்பு செலுத்துவார்னு.
அவருக்கு ரெண்டு பேரை ரொம்பப் பிடிக்கும். ஒன்னு நான்..மற்றவர் வியட்நாம் வீடு சுந்தரம். என்னன்னு தெரியலை..என்னை ரொம்பத் திட்டுவாரு. ஆனால் ஒரு நாள் நான் வரலைன்னாலும், "அந்த எழவெடுத்தவனை எங்கே காணோம்.. அவனைக் கூட்டிட்டு வா" ன்னு சொல்லுவார். எப்பவும் நான் எதாச்சும் நொட்டை, நொள்ளை சொல்லிட்டேதான் இருப்பேன். அதுக்குத்தான் என்னை அவர் எழவெடுத்தவனேன்னு திட்டுவார்..
V.
ஆரம்பத்துல சொன்ன 'ஒன் மோர்' பத்தி இப்போ இன்னொரு சம்பவம் சொல்றேன்.
எம்ஜியார் கூட 'எங்க வீட்டுப்பிள்ளை'ல எடிட்டிங் அசிஸ்டென்டா வேலை செய்யற வாய்ப்பு வந்துச்சு. அப்போ எல்லாம் எடிட்டிங் அசிஸ்டென்ட்ஸ் செட்டுக்கும் வரணும். அதனால் அவர் கூடப் பழகற சந்தர்ப்பமும் கிடைச்சது. அவர் கூட 3 படத்துல பணி செய்யற வாய்ப்பு அமைஞ்சது.
சிவாஜி, எம்ஜியார் இவங்க ரெண்டு பேருக்கும் இருந்த பெரிய வித்தியாசம் என்னன்னா, சிவாஜி செட்ல இருக்கும்போது, கலகலன்னு இருக்கும். நாம பாட்ல பேசிட்டோ, சிரிச்சிட்டோ நம்ம வேலையைப் பார்த்துட்டு இருக்கலாம். சிவாஜி கூட எல்லோரும் ஃபிரண்ட்லியா மூவ் பண்ணுவோம்.. திட்டுவாரு, கலாட்டா பண்ணுவாரு..ஜாலியா இருப்பாரு.
ஆனால் எம்ஜியார் செட்ல இருக்கும்போது நாம சிரிக்கலாம்.. ஆனால் சின்ன சப்தம் கூட வெளியே கேட்கக் கூடாது. சிரிப்புச் சத்தம் கேட்டு, அவர் நம்மைத் திரும்பிப் பார்த்துட்டார்னா போதும்.. அவ்வளவுதான் நாம அவுட்.
அவர் கூட நான் பண்ணுன மூனாவது படம் 'நாளை நமதே'..சேது மாதவன்தான் டைரக்டர்.
லதா அம்மா கூட இவர் ஒரு டூயட் பாட்டு பாடற காட்சி, அன்னைக்கு நடந்தது.. ஒரு பாடல் வரியில எம்ஜியார் நடிப்பு சரியா சிங்க் ஆகலை..அதைக் கவனிச்ச நான், சிவாஜி கிட்ட சொல்ற மாதிரியே எதார்த்தமா 'ஒன் மோர்'னு சொல்லிட்டேன்.
என்னைத் திரும்பிப் பார்த்த எம்ஜியார், ஒன்றும் சொல்லாம, மறுபடியும் அதை நடிச்சுக் கொடுத்தாரு.
அன்னைக்கு சூட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு வந்துட்டேன். வழக்கமா என்னைக் கூட்டிட்டுப் போக சூட்டிங் கார் வரும். மறுநாள் காலையில் கார் வரலை.
ரொம்ப நேரம் காத்திருந்து பார்த்துட்டு, நானே ஒரு ஆட்டோ பிடிச்சுட்டு ஸ்டுடியோ போனேன்.
ஆனால், நான் ஸ்டுடியோ உள்ளேயே அனுமதிக்கப்படலை... கொஞ்ச நேரத்தில் டைரக்டர் சேது மாதவனே வெளியே வந்தார்..
என்னிடம், " சேகர்.. உனக்கு இந்தப்படம் வேண்டாம். நீ அடுத்த படத்தில வேலை பார்க்கலாம்" என்றார்.
அதாவது, 'ஒன் மோர்' கேட்டதுக்காக என் வேலை போச்சு.
***************
நன்றி :
டைரக்டர் திரு S.A.சந்திரசேகர் அவர்கள்.
திரு.சித்ரா லட்சுமணன் அவர்கள்
****************
காணொளியை எழுத்து வடிவமாக்கியது..
அன்புடன்,
நாகராஜன் வெள்ளியங்கிரி.
Thanks Vijaya Raj Kumar
-
-
-
-
-
-