அரு. ராமநாதன் அவர்கள்
http://www.viruba.com/Img_Authors/AruRamanathan.jpg
அரு. ராமநாதன் அவர்கள்
http://www.viruba.com/Img_Authors/AruRamanathan.jpg
எங்களுக்காக இவ்வளவு மெனக்கெடும் உங்களுக்கு நாங்கள் மிக மிக கடன் பட்டவர்கள் ராகவேந்தர் சார், வாசு.
தங்கப் பதுமை (ஒரு அசை போடல்)
பத்மினியும் தலைவரும் ஓடும் அருவி நீரில் குளிக்கும் போது பத்மினியைக் கண்டவுடன் செல்வி என்று கெண்டை மீன் போலத் துள்ளி தண்ணீரில் விழுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதே போல பத்மினியுடன் திருமணம் முடித்ததும் முதலிரவுக் காட் சிகளில் கொஞ்சலும், சிணுங்கலுமாக வாயில் தின்பண்டங்களைச் சுவைத்தபடி பேசும் அழகே அழகு. கொஞ்சம் கொஞ்சமாக தன் வசம் இழந்து ராஜகுமாரியின் வலையில் வீழ்ந்து அவதிகளுக்கு விதை போடுவது பரிதாபத்தை சம்பாதித்துக் கொடுக்கும்.
ஒரு மெய் சிலிர்க்க வைக்கும் சண்டைக் காட்சி இதிலும் உண்டு. நம்பியாருடன் மோதும் ஒருவரையொருவர் கைகளால் தாக்கிக் கொள்ளும் சண்டை. இருவரும் டூப்பே போட்டிருக்க மாட்டார்கள். நம்பியார் இவரை அடிக்கும் போதெல்லாம் பந்து போல துள்ளி தரையில் உருளுவார். இருவரும் ஆக்ரோஷமாக தாக்கிக் கொள்வார்கள். படத்தின் ஹீரோ என்பதற்காக வில்லனை பெண்டு நிமிர்த்த மாட்டார். மாறாக அடிவாங்கி இறுதியில் வீழ்ந்துவிடுவார். அப்பாவியான அந்த கேரக்டர் வில்லனுடன் ஓரளவிற்குதான் மோத முடியும் என்பதை நமக்கு உணர்த்துவார். இதெல்லாம் பலருக்குப் புரிவதே இல்லை. சிவாஜி சண்டையில் தோற்று வீட்டார் என்ற பத்தாம்பசலித்தனமான புத்தி பேதலித்த பேச்சுக்கள் கொண்ட அறிவாளிகள் இருக்கும் வரை... ம்...என்ன செய்வது?
கண்கள் போனபின் இன்னும் கண்ணான நடிப்பு. மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்திருப்பார். கண்ணில்லாத கஷ்டங்களை, இல்லாததனால் இனிவரப் போகும் கஷ்டங்களை நன்கு உணர்த்துவார். பத்மினி நல்ல ஈடு. வேறு யாரையும் கற்பனை செய்ய முடியாது. இவரிடம் உள்ள குறை. தலைவரை முந்த வேண்டும் என்று எண்ணியபடியே நடித்து நடித்து இவரிடம் தோற்றுப் போவதுதான். ('ராமன் எத்தனை ராமனடி'யில் கூட தலைவர் ஸ்டுடியோவில் பத்மினியை பார்த்து விட்டு "! 'பத்துமினி பத்துமினி' என்று கத்தும் போது ரொம்ப அலட்டிக் கொண்டு வெட்டியபடி நடப்பார்)..யாரை யார் முந்த நினைப்பது?... நடக்குமா?! எப்பேர்ப்பட்டவர்களெல்லாம் 'ததிகினத்தோம்' போட்டு விட்டு ஓடிப் போய் விட்டார்கள். மற்றபடி நல்ல நடிகை.
இறுதிகட்ட கிளைமாக்ஸ் காட்சிகளில் பெண் குலத்தின் சாபங்கள். பாவம் நம்பியார். ராஜகுமாரியும் கூட. பத்மினியின் அந்த புகழ் பெற்ற 'ஆ ...ஐய்யய்யோ... அத்தான்' என்ற வீறிட்ட அலறலுக்கு கண்ணீர் விடாத பெண்கள் இருந்தார்களா என்ன!
கடைசிக் காட்சியில் (வாய் திறந்து சொல்லம்மா)... பத்மினிக்கு நிறைய ஸ்கோர் செய்ய சான்ஸ். நம் ஆள் அப்படியே விட்டுக் கொடுத்திருப்பார். கோபால் சொன்னது போல நல்லவராகவே பிறந்த மாணிக்கம் ஆயிற்றே! ஆனால் கண்கள் தெரியாமல் கீழே விரைவாகத் தவழ்ந்து வந்து மனைவியுடன் சேர்ந்து அந்த மணியை இழுத்து அடிக்கும் வேகம் வியப்பின் உச்சம். (சும்மா நின்றாலே நம்ம ஆள் ஜமாய்ச்சுடுவார்... இதற்கெல்லாம்... கேக்கணுமா!)
கடலூர் வேல்முருகனில் போடு போடுவென்று போட்டது. மங்கையர் குலத்திற்கு மட்டுமே மாலைக் காட்சி. எல்லாக் காட்சிகளும் நிரம்பி வழிந்தன.
ஒரு கொசுறு செய்தி.
இதில் வரும் 'முகத்தில் முகம் பார்க்கலாம்' சூப்பர் ஹிட் பாடலை திரு எம்ஜியார் அவர்கள் தன் 'ராமன் தேடிய சீதை' படத்தில் ஒரு பல்சுவை நகைச்சுவைப் பாடலில் (ஜெயா மேடத்துடன்) பயன்படுத்தியிருப்பார். அவரே இந்தப் பாடலுக்கு வாயசைத்திருப்பார். என்ன!வரிகள் நகைச்சுவைக்காக சிறிது மாற்றப் பட்டிருக்கும். அந்தப் போட்டிக் கால கட்டத்தில் இது ஒரு ஆச்சர்யம்தானே! அந்த வரிகள் இதோ!
முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் க்யூடெக்ஸின் நிறம் பார்க்கலாம்
வகுத்த கருங்குழலை ஹேர் டிரெஸ்ஸிங் எனச் சொன்னால்....
எப்படி?
காத்தவராயன்
இந்த படம் பற்றி நேத்து தான் தெரிய வந்தது . உடனே சாயங்காலம் கடைக்கு போய் இந்த படத்தின் CD கேட்டேன் , சில புது படங்கள்(ஒரிஜினல் தான் ) பற்றி கேட்டு விட்டு தான் , அந்த கடைக்காரர்க்கு ஏற்கனவே என்னை பற்றி தெரியும், நான் பெரும்பாலும் MGR , சிவாஜி படங்களை தான் கேட்பேன் என்று ஒரு வித சந்தேகத்தோட தான் இந்த படத்தை கேட்டேன் but சிவாஜி சார் என்னை கை விடவில்லை , ஒரு பழைய போட்டியில் இருந்து ஏகபட்ட பழைய படங்களக்கு நடுவில் நான் கேட்ட படம் 3 பிரதிகள் இருந்தது சந்தோசமாக வங்கி கொண்டு வந்தேன் கடையில் ஒரு நிமிடம் அதிருந்து போனார்கள் இந்த வயசில் இந்த படம் வாங்குகிறான் இந்த பையன் என்று ஆனால் நம்பளுக்கு அதை பற்றி என்ன கவலை வங்கி கொண்டு வெற்றி வீரனாக வெளியே வந்தேன் .
வங்கி கொண்டு வந்து என்னோட கம்ப்யூட்டர்ல் காபி செய்து இன்று காலை தான் பாத்தேன் .
படம் ஆரம்பம் முதலே அற்புதம் முதல் frame ல் இருந்து அதாவுது பெயர் போடும் போதே பிரமாண்டம் ஆரம்பம் ஆரம்பித்து விடுகிறது .
ஈசனிடம் நடனித்தில் தோல்வியுற்ற உமையாள் சினம் கொண்டதால், பூமிக்கு சென்று உணர்வடிக்கி வாழப் பணிக்கப்படுகிறாள். வீரபாகுவும் உமையின் குழந்தையாக பூமிக்குச் செல்கிறான். அங்கு வேடர் குலப்பெண்கள் உமையாளிடம் (கண்ணாம்பா) குழந்தையைத் தாங்கள் வளர்ப்பதாக பெற்றுச் செல்கிறார்கள்.
அந்த சிறுவன் தான் நம்ம சிவாஜி சார் . அவர் அறிமுகம் ஆகும் காட்சியே டாப் . யானை மேல் சும்மா கண் கவரும் அழகன் ஆக தொன்றிகிறார் .
அந்த மல்யுத்த சண்டை பத்தி தனியாக ஆய்வு செய்த வாசு சார் எழுதிய உடன் அதை தனி கவனம் எடுத்து பாத்தேன். நிஜ சண்டை போலே இருந்தது . கிட்ட தட்ட 7 நிமிடம் இந்த சண்டை ஓடுயது . வெறும் உடம்பில் சண்டை போட ஒரு confidence வேண்டும் இதில் சிவாஜி கலக்கி இருப்பர் அதுவும் இப்போ வரும் WWF போலே தலைகிழ எதிரியை தூக்கி போடும் பொழுது நம்ம மனசில் ஒரு action ஹீரோவாக நிலைத்து நின்று விடுகிறார் . அந்த சண்டையில் வேர்த்து விறுவிறுத்து அடிக்கும் பொழுது நமளுகும் வேர்த்து விடுகிறது .
இந்த படத்தின் மற்றும் ஒரு சிறப்பு அம்சம் தந்திர காட்சிகள்
காதன் தஞ்சைப் பெரியகோவிலை , மசூதிகளும் காட்டும் பொழுது நடிகர் திலகத்தின் நடிப்பு மற்றும் அதை ஒரே ஷட்டில் கட்டும்
ராஜபாதர்யின் ஒளிபதிவு அற்புதம் . கதை கேரளா எல்லைக்கு நகர்கிறது அங்கே பாலையா ஒரு மந்திரவாதி அவர் உடன் சண்டைய்டும் காட்சிகள் மாந்தரிகம் மற்றும் கடவுள் பக்திக்கு இடையில் நடக்கும் யுத்தம் போலவே தெரிகிறது .
அரசி சாவித்திரி (அறியாமலா) வை பார்த்த முதல் நொடியிலே கதளில்க்க துவங்கி விடுகிறார் . முதலில் மீன் ஆக உறுமர்கிறார் , பின்னே ஒரு கிழவன் ஆக உருவம் மாற்றி அரண்மனையில் நுழைந்து பிடி பட்ட வுடன் குடுகுடுபகரன் ஆக மாறுகிறார் . சிறையில் அடைக்கப்பட்ட உடன் யானை உதவி உடன் தப்பி விடுகிறார் . மீண்டும் கிளி யாக மாறுகிறார் . தங்கவேலு அற்புதம், மற்றும் கிளைமாக்ஸ் காட்சி உச்ச கட்ட பிரமாண்டம் . கோபி கிருஷ்ணாவின் நடனம் அற்புதம் இவர் தான் பாட்டும் பாரதம் படத்தில் நடன அமைப்பு .
பாலையா நடிப்பு as usual பிரமாதம் .
மொத்தத்தில் fantasy படங்களை ரசிக்கும் அன்பர்களுக்கு இந்த படம் ஒரு விருந்து
வாசு சார்
அரு. ராமநாதன் அவர்களுடைய புகைப்படம் மிகவும் சிறப்பு. ராஜ ராஜ சோழநெல்லாம் எடுப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் அவரைப் பார்த்தேன். அப்போது நான் பள்ளி மாணவன். எனக்கு அவருடன் பேசத் தெரியவில்லை. கூட இருந்த சில இளைஞர்கள் - அவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் - சொல்லி அவர் தான் அரு. ராமநாதன் எனத் தெரிந்து கொண்டேன். தங்கப் பதுமை படத்தைப் பற்றி அவரிடம் அந்த இளைஞர்கள் கேட்டனர். மிகவும் ஆர்வத்தோடு பதிலளித்தார். அதில் நடிகர் திலகத்தைப் பற்றி சொன்னது மட்டும் இன்னும் நினைவில் உள்ளது. அந்தக் கதையை அவர் எழுதும் போதே நம்மாளை நினைத்து தான் எழுதினார் எனச் சொன்னார். மற்ற படி அப்போது அதிகம் விவரம் தெரியாத சிறுவனாக இருந்ததால் அவ்வளவாக மற்றதெல்லாம் நினைவில் இல்லை. ஆனால் சிவாஜி என்றவுடன் அவர் சொன்னதை மட்டுமே மனதில் நின்று விட்டது. தன் எழுத்திற்கு உயிர் தந்து சிரஞ்சீவித்துவம் வாய்ந்த படமாக ஆக்கி விட்டார் எனச் சொன்னார்.
இதற்குப் பிறகு சில காலம் கழித்து நூலகங்களில் காதல் புத்தகத்தைப் படித்து வரும் போது அதில் ஒரு இதழில் தங்கப் பதுமை படத்தைப் பற்றி மிகவும் பாராட்டி எழுதியிருந்ததும் ஞாபகம் உள்ளது.
தங்களுடைய விவரிப்பில் ஒவ்வொருவரையும் கரம் பிடித்து அழைத்துச் சென்று அந்த அனுபவத்தை நமக்கும் தந்து விடுகிறீர்கள் வாசு சார். பாராட்டுக்கள்.
ராகுல்
தங்களை எப்படிப் பாராட்டுவது என்றே எனக்குத் தெரியவில்லை. தங்களைப் பாராட்டினால் அது நடிகர் திலகத்தைப் பாராட்டுவதாக நான் நினைத்துக் கொள்கிறேன். தங்களைப் போன்ற புதிய தலைமுறையினரையும் ஈர்க்க வல்ல நடிப்பைத் தந்த அந்த மகானை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஒன்று மட்டும் உறுதி. நடிகர் திலகத்தைப் பொறுத்த மட்டில் தாங்கள் அவருடைய அனைத்துப் படங்களையும் பார்க்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள். அவருடைய எண்ணற்ற பரிணாமங்களைக் கொண்ட நடிப்பு ஒர் அட்சய பாத்திரம். அள்ள அள்ளக் குறையாத கலைச் சுவையினை அவர் படங்கள் தந்து கொண்டே இருக்கும்.
Just saw 'Paava Manippu' on Kalaignar TV. Have seen it umpteen number of times but this time it was different. It appears that MR Radha is the leading artiste as he is appearing throughout the entire film. The films starts with his appearance and finishes with his disappearance! I can safely say that he out beat everyone with his stellar acting and signature dialogues with his usual wit and sarcasm. All the others, including Shivaji, are delegated to secondary status in this film. Rightly his name should have been the main in the credits.
Dear friend,
I guess you are well educated. But sorry to remind you to post your views in the place concerned. This is exclusively for filmography and exchange of views is for the film concerned that is posted previously. Post your views in the main thread.
This is the second time you are doing this.