உண்மை தான் கலியபெருமாள் ஸார். 'காலத்தை வென்றவன்' தானே மக்கள் திலகம்.
Printable View
எம்ஜியார் மதுரை வரும் முதல் பயணம்
ஆண்டு 1973,
எம்ஜியார் திமுகவில் இருந்து இருந்து நீக்கப்பட்ட பின்னர் , அதிமுகவை ஆரம்பித்த வுடன் மதுரை வரும் முதல் பயணம் .
அதற்க்கு முன்னர் பல முறை வந்து இருந்தாலும் , அது நடிகராகவோ அல்லது திமுக பொருளாளர் என்ற நிலையிலோ அல்லது நண்பர்களின் விழா சம்பந்தமாகவோ இருக்கும் .
இந்த முறை அவர் பாண்டியன் எக்ஸ்ப்ரஸில் வருவது , மதுரையில் சுற்று பயணம் மேற்கொண்டு வரும் இந்திரா காந்தியை சந்தித்து , திமுக பற்றி புகார் அளிக்க
காலை ஏழு மணிக்கு மதுரை வந்து சேர வேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை ஐந்து மணிக்குத்தான் மதுரை வந்து சேர்ந்தது , காரணம் எம்ஜியார், ரயிலில் வருவதை அறிந்து கொண்ட மக்கள் , திருச்சியில் இருந்தே , அதிகாலை யில் இருந்தே , ஒவ்வொரு இடமாக சங்கிலியை நிறுத்தி(யாரும் அவதாரம் கட்டவில்லை ?) அந்த ரயிலோடு நடந்து வந்தார்கள் .
ரயிலை நிர்வாகம் வேகமாக அல்லது இயல்பாக ஓட்ட இயலவில்லை , எம்ஜியார் இருந்த ரயில் பெட்டியின் கூரை மீது இருநூறு பேர் ஏறி கொண்டார்கள்.
கூட்டத்தை கட்டுபடுத்த இயலாத , ரயில் நிர்வாகம் , மக்களோடு மக்களாக நடை வேகத்தில் ஊர்ந்தே வந்து கொடை ரோடு வந்தது..
இடையில் , கோடை- ரோட்டில் , இருந்து எம்ஜியார் , இறங்கி காரில் வர எத்தனித்தார் . ஆனால் ரயில் நிர்வாகம் , அவரை ரயிலிலேயே வர வேண்டியது.அதுதான் ரயிலுக்கும் பாதுகாப்பு மக்களிற்கும் பாதுகாப்பு என்று அறிவுறித்தியது .
கொடைரோட்டில் இருந்து ரயில் பத்து கிலோ மீட்டர் வேகம் கூட செல்லாமல் ஊர்ந்து ஊர்ந்து வந்தது .
மதுரை வந்து பாண்டியன் எக்ஸ்ப்ரெஸ் சேருகையில் மணி மாலை ஐந்து மணி .
அதுவரை மதுரை ரயில் நிலையத்திலும் அவருக்காக பல்லாயிரகணக்கானோர் , காலை ஐந்து மணி முதல் காத்து இருந்தனர் , ஒரு வழியாக அனைவரையும் கூட்டிக்கொண்டு எம்ஜியார் அன்று இரவு பொதுகூட்டத்தை முடித்தார் .
இந்த தாமதத்தில் , அவர் சந்திக்க திட்டமிட்ட இந்திரா காந்தியை சந்திக்க இயலவில்லை .
ஏன் எம்ஜியாரை மக்கள் திலகம் என்று சொல்கிறார்கள் எனபது இப்போது புரிந்து இருக்கும்.
மக்கள் திலகம் அவர்களுடன் திரு சோ அவர்கள் கண்ணன் என்காதலன் படம் முதல் சங்கே முழங்கு வரை 12 படங்களில்
நடித்துள்ளார் .
துக்ளக் இதழ் ஆரம்பித்த நாள் முதல் 1970-1980வரை சுமார் 10 வருடங்கள் தொடர்ந்து திரு சோ அவர்கள் மக்கள் திலகத்தின் படங்கள் பற்றி கிண்டலான விமர்சனங்கள் மற்றும் மக்கள் திலகத்தின் அரசியல் கிண்டல் பதிவுகள் தொடர்ந்து செய்து வந்தது குறித்து மக்கள் திலகம் ஒருபோதும் கவலை படவில்லை . எந்த நிலையிலும் மக்கள் திலகம் சோவை விமர்சனம் செய்யவில்லை .
1980 பாராளுமன்ற தேர்தல் முடிவு வந்த பின்னர் முதல் முறையாக துக்ளக் இதழில் மக்கள் திலகத்தின் அட்டைபடம் போட்டு அருமையான தலையங்கம் எழுதினார் .
1987 மக்கள் திலகம் மறைந்தவுடன் துக்ளக் இதழில் மக்கள் திலகத்தின் அட்டைபடம் போட்டு அருமையான தலையங்கம் எழுதினார் .
திரைப்பட துறையிலும் , அரசியல் மன்றத்திலும் மக்கள் திலகத்தை கிண்டல் - கேலி - செய்தவர்கள் பலரும் மக்கள் திலகம் வாழ்ந்த காலத்திலேயே தங்களது தவறுகளை உணர்ந்து மக்கள் திலகத்தை நேரில் சந்தித்து அவரது அபிமானத்தை பெற்றனர் .
மீதமிருந்த பலர் மக்கள் திலகத்தை பற்றி அவரது மறைவுக்கு பிறகு உணர்ந்து இன்று அவரது புகழ் பாடுகிறார்கள் . வரவேற்க தக்க ஒன்றாகும் .
''ஒருவர் நம் மக்கள் திலகத்தை புகழும் போது கடந்த காலத்தில் அந்த ஒருவர் நம் மக்கள் திலகத்தை இகழ்ந்து பேசியதை மறக்க வேண்டும் ''
PLEASE WATCH CHO DIALOGUE IN 7TH MINUTE OF THIS VIDEO ABOUT THALAIVAR
http://youtu.be/NiPr8QOHLkQ
.
COURTESY - THIRU PALAN - YOUTUBE.
MAKKAL THILAGAM IN SUPER SCENES FROM VIVASAYEE- PETRAALTHAAN PILLAYA
http://youtu.be/H-6KpJVccyo
BY MR.YONUS FROM BURMA -
VERY NICE SPEECH ABOUT OUR MAKKAL THILAGM
http://youtu.be/Q0pmo4zPBfA
மதுரை நகரில் மக்கள் திலகத்தின்
''இதயக்கனி ''
இன்று முதல் மதுரை - ராம்
திரை அரங்கில் திரையிடப்பட்டுள்ளது .
தகவல் -நன்றி மதுரை திரு கதிரேசன்
மக்கள் திலகம் அவர்களின் ''தலைவன் '' படம்
சென்னை
குளோப் - 42 நாட்கள்
மகாராஜா - 35 நாட்கள்
சரவணா - 35 நாட்கள்
நூர்ஜெஹான் -35 நாட்கள்
பெங்களூர்
சென்ட்ரல் - 21 நாட்கள்
சாரதா - 21 நாட்கள்
அபேரா - 21 நாட்கள் .
சுமாரான வெற்றி படங்கள் பதிவு தொடர்ச்சி
மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் .1971