thava pudhalvan -1972 - malaisudar review
தவப்புதல்வன்-1972 .
TO DAY 40 TH ANNIVERSARY.
DEAR K.C.S SIR
WISH YOU A HAPPY BIRTHDAY .WISHES FROM MAKKAL THILAGAM MGR FANS AND SPECIAL
THAVAPUDHALVAN
.http://i49.tinypic.com/10n9pvd.jpg
.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து ‘நிறைகுடம்’, ‘அருணோதயம்’ ஆகிய சிறந்த படங்களை அளித்த முக்தா பிலிம்ஸ் சீனிவாசன், அதே சிவாஜி நடிப்பில் உருவாக்கிய படம் ‘தவப்புதல்வன்’. இசைக் கலைஞராகிய சிவாஜி, பணக்கார வீட்டுப்பிள்ளை. அவருடைய மூதாதையருக்கு கொடிய மாலைக்கண் நோய் இருந்து வந்தது. அதன் காரணமாகவே அவர்கள் இறந்ததால் சிவாஜியின் தாயார் பண்டரிபாய் ஒரே மகனான சிவாஜிக்கும் அந்த நோய் வந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக அவர் தன் உடலை வருத்தி பூஜை, புனஸ்காரத்தில் ஈடுபடுகிறார்.
.
சிவாஜிக்கு அந்த நோய் தாக்கினால் தான் உயிரை விட்டு விடுவேன் என்றும் பண்டரிபாய் கூறி வருகிறார். தாயார் மீது மிகுந்த பக்தி வைத்திருக்கும் சிவாஜிக்கு ஒரு கட்டத்தில் மாலைக்கண் நோய் வந்து விடுகிறது. இது வெளியே தெரிந்தால் தாயாரின் உடலுக்கு ஆபத்து என்பதால் அதை மறைப்பதற்காக ஓட்டலில் அறை எடுத்து இரவு நேரத்தில் அங்கேயே தங்கி விடுகிறார்.
இதனை பயன்படுத்திக் கொண்டு எம்.ஆர்.ஆர்.வாசுவும், அவருடைய தங்கையான ஏ.சகுந்தலாவும் சிவாஜியிடம் பணம் கறக்க ஆரம்பித்து அவரை பல வழிகளிலும் பிளாக்மெயில் செய்கிறார்கள்.
இந்த பிளாக்மெயில் கும்பலுக்கும், தாயாருக்கும் இடையே இருதலைக்கொள்ளி எறும்பாக சிவாஜி துடிக்கிறார். இந்த சூழ்நிலையில் அவர் மணக்க இருக்கும் டாக்டரான கே.ஆர்.விஜயாவின் வெறுப்பையும் அவர் சம்பாதிக்க நேர்கிறது.
இறுதியில் அந்த நோய் போனதா, சிவாஜி எப்படி அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்கிறார் என்பதே கதை.
இந்த கதையை எழுதிய தூயவன் வசனத்தையும் எழுதினார். சோ, மனோரமா, வி.கோபாலகிருஷ்ணன், செந்தாமரை, காந்திமதி ஆகியோரும் படத்தில் நடித்திருந்தனர். சிவாஜியின் மாலைக்கண் நோயை காரணம் காட்டி வீட்டுக்குள் நுழைந்து பண்டரிபாயை வளைத்துப் போட ஏ.சகுந்தலா செய்யும் சாகசமும், அதை முறியடிக்க சோவும், மனோரமாவும் போடும் திட்டங்களும் அவை அத்தனையும் புஸ்வாணம் ஆவதும் கலகலப்பான நகைச்சுவை காட்சிகளாகும்.
சிவாஜி ஒரு இசைக்கலைஞர் என்பதால் அருமையான பாடல்களை கவிஞர் கண்ணதாசனும், வாலியும் எழுதியிருந்தனர். லவ் இஸ் பைன் டார்லிங் என்ற ஆங்கில பாடலை ராண்டார்கை எழுதியிருந்தார். இந்தப் பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அருமையாக இசையமைத்தார்.
‘உலகின் முதல் இசை தமிழிசையே’
‘கிங்கினி கிங்கினி கிணிகிணி என வரும் மாதா கோயில் மணியோசை, கண்மணி, பொன்மணி என துள்ளிடும் பிள்ளைகளுக்கு தாத்தா கூறும் அருளோசை’
‘இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்’
ஆகிய இனிமையான பாடல்கள் அன்றைய காலகட்டத்தில் பெரும் ஹிட்டானவை.
இசை கேட்டால் பாடலில் சிவாஜி இசை கலைஞர் தான்சேனாகவும், மாதா கோயில் மணியோசை பாடலில் கிறிஸ்துமஸ் தாத்தாவாகவும் நடித்தார்.
முக்தா பிலிம்ஸ் வி.ராமசாமி தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் வி.சீனிவாசன் அருமையாக இயக்கி இருந்தார். 26.08.1972 அன்று வெளியான இந்தப் படம் பாடல்களுக்காகவும், சிவாஜியின் நடிப்புக்காகவும் நூறு நாட்களுக்கு ஓடியது.