-
dear RKS. really a rare ensemble of the stage by stage pain and turmoil experienced by a born actor for his true to the type transformation into the character! Note how his expressions through eyes also get changed!really a sumptuous feast to the eyes!
-
Well done RKS superb information and photos.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பரங்கியரை முழு மூச்சுடன் எதிர்த்து போரிட்ட பாஞ்சலங்குறிச்சி மாவீரன்
ஜாக்சன் துரையையும் பானர்மானையும் வெலவெலக்க செய்த அடலேறு
வீரத்தின் விளைநிலம் வெற்றியின் இருப்பிடம்
வீரபாண்டிய கட்டபொம்மன் விரைவில் தமிழகமெங்கும்
வெற்றி விஜயம்!
கூடுதல் விவரங்கள் விரைவில்.
1972 - நம் அனைவரின் மனம் கவர்ந்த பொன்னான ஆண்டு! நடிகர் திலகம் நடித்து வெளிவந்த 7 படங்களில் 6 படங்கள் 100-வது நாளை கடந்து வெற்றி.நடை போட்டது. ஆனாலும் நமது ரசிகர்களின் பெரும்பாலோனோரின் உள்ளம் கவர்ந்த கள்வன் யாரோ அந்த சுதந்திர போராளி சேகர் விரைவில் சென்னை மதுரை, கோவை மற்றும் திருச்சி நகரங்களுக்கு விஜயம். தர்மம் எங்கே என்ற கேள்விக்கு அது இங்கே என்று ரசிகர்களால் சுண்டி காண்பிக்கப்பட்ட நடிகர் திலகத்தின் வண்ண திரை ஓவியம்.
விரைவில் விவரங்கள்
அன்புடன்
நமது அடுத்த திரியை துவங்குவதற்கு நண்பர் rks அவர்களை முன்மொழிந்துள்ளேன் ஒரு சில விளக்கங்கள் கிடைத்தவுடன் அவர் அடுத்த திரியை துவக்கி வைப்பார்.
-
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி.
1969-ஐ தொடர்ந்து 1970-லும் நடிகர் திலகத்தின் படங்கள் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளை கண்டது.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
1971-ல் எம்ஜிஆரின் முதல் படம் ஜனவரி 26 சிந்தாமணியில் வெளியான குமரிகோட்டம். இதுவும் அந்த இலக்கை எட்டவில்லை. இங்கே இரு துருவம் படம் ஜனவரி 14 அன்று நியூ சினிமாவில் வெளியானது. படத்தின் ரிப்போர்ட் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் தொடர் ஹவுஸ் புல் பற்றி யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை. பிப்ரவரி 6 அன்று தங்கைக்காக ஸ்ரீதேவியில் ரிலீஸ். பெண்கள் ஆதரவு இந்தப் படத்திற்கு பிரமாதமாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் இந்திய பாராளுமன்றத்திற்கும் தமிழக சட்டசபைக்கும் முன்கூட்டியே பொது தேர்தல் அறிவிக்கப்பட்டு விட, நமது ரசிக மன்ற கண்மணிகள் பெருந்தலைவரும் மூதறிஞர் அவர்களும் உருவாக்கிய கூட்டணிக்காக உழைக்க களம் புகுந்து விட்டனர். அதனால் தங்கைக்காக படமும் சரி மிக சரியாக தேர்தல் நாளான 1971 மார்ச் 5 அன்று நியூ சினிமாவில் வெளியான அருணோதயம் படமும் சரி [இந்த முக்தாவை என்ன சொல்லி திட்டுவது?] படத்தின் தரத்திற்கேற்ப வெற்றியை பெற முடியாமல் போனது. அருணோதயம் வெளியாகி 3 வாரத்தில் மார்ச் 26 அன்று குலமா குணமா ஸ்ரீதேவியில் ரிலீஸ். இந்த பக்கம் அருணோதயம் ஓடிகொண்டிருக்கிறது. அந்த பக்கம் 18 நாட்களில் ஏப்ரல் 14 அன்று சுமதி என் சுந்தரி அலங்காரிலும், பிராப்தம் சென்ட்ரலிலும் வெளியாகி விட்டது. 90 நாள் இடைவெளியில் 6 படங்கள் வெளியானால் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளுக்கு ஏது வாய்ப்பு?
1971 மே 29 சனிக்கிழமை மதுரை நியூசினிமாவில் ரிக்ஷாகாரன் வெளியானது. வணிக ரீதியில் வெற்றி பெற்ற இந்த படம் 100 தொடர் ஹவுஸ்புல் காட்சிகளை கண்டது. ஐந்து வாரத்தில் 115 காட்சிகளும் அரங்கு நிறைந்த இந்த படம் 36வது நாள் சனிக்கிழமை காலைக்காட்சியில் ஹவுஸ்புல் விட்டுப் போனது.
இப்போது ball was in our court. அதற்கு நமக்கு வந்து அமைந்தது சவாலே சமாளி. ஜூலை 3 அன்று ஸ்ரீதேவியில் வெளியாகி மிக பிரமாதமான ரிப்போர்ட். படம் சர்வ சாதாரணமாக ஹவுஸ் புல் ஆகிக் கொண்டிருந்தது. எந்தளவிற்கு என்றால் படம் வெளியான 8வது மற்றும் 9வது நாளில் அதாவது ஜூலை 10,11 தேதிகளில் திருச்சி மாநகரில் நடிகர் திலகத்தின் 150-வது படவிழா நடைபெற்றது. பெரும்பாலான ரசிகர்கள் மாநாட்டிற்கு போய் விட்ட அந்த சூழலிலும் அந்த இரண்டு நாட்களிலும் சரி அதன் பிறகு 20-வது நாளன்று வெளியான, அதாவது ஜூலை 22-ந் தேதி சிந்தாமணி டாக்கீஸில் நடிகர் திலகத்தின் அடுத்த படமான தேனும் பாலும் வெளியான் போதும் just like that என்று சொல்வார்களே அது போல் அரங்கு நிறைந்தது. அதற்கு இரண்டு நாள் கழித்து வந்த 4-வது சனிக்கிழமை காலைக்காட்சியும் புல். ஞாயிறு திங்கள் எல்லா காட்சிகளும் ஹவுஸ் புல். 24 நாட்களில் நடைபெற்ற் 80 காட்சிகளும் ஹவுஸ் புல்.
சாதாரணமாக படம் ஓடும் தியேட்டர் முன்பு ரசிகர்கள் கூட்டம் ஒன்று நிற்கும். சவாலே சமாளி போன வேகத்தை பார்த்து விட்டு சர்வ சாதாரணமாக இது இலக்கை அடைந்து விடும் என்று நினைத்தோ என்னமோ ரசிகர் கூட்டம் குறைந்தது. 25-வது நாள் செவ்வாய்க்கிழமை பகல் காட்சி மடமடவென்று அனைத்து வகுப்பு டிக்கெட்களும் விற்று தீர்ந்து கொண்டிருந்தது. கீழே பெண்கள் 40 பைசா, பெண்கள் மற்றும் ஆண்கள் 70 பைசா, ஆண்கள் 80 பைசா, பால்கனியில் 1.15, 1.70 என்று அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட, 2.50 டிக்கெட் மட்டும் கடைசி நிமிடத்தில் 4 டிக்கெட்கள் நின்று போயின. யாருமே எதிர்பார்க்காத வகையில் 80 காட்சிகளோடு தொடர் ஹவுஸ் புல் விட்டுப் போனது.
இந்த எதிர்பாராத நிகழ்வினாலும் அப்போது ஓடிக் கொண்டிருந்த தேனும் பாலும் படமும் சரி ஆகஸ்ட் 14 அன்று ஸ்ரீமீனாட்சியில் வெளியான மூன்று தெய்வங்கள் படமும் சரி இந்த கான்செப்டில் வரவில்லை. படத்தின் ரிப்போர்ட் சுமார் என்பதாலும் சவாலே சமாளி இருக்கிறது என்ற காரணத்தினாலும் தேனும் பாலும் கண்டுகொள்ளப்படவில்லை என்றால் மூன்று தெய்வங்கள் படம் பற்றி அது வெளிவருவதற்கு முன் பரவியிருந்த தவறான கருத்து [சிவாஜி கௌரவ தோற்றமாம்] படத்தின் முதல் வாரத்தில் சற்று பாதிப்பை ஏற்படுத்தினாலும் அதை சமாளித்து படம் முன்னேறியபோதுதான் ஆகஸ்ட் 31 வந்தது.
மதுவிலக்கைப் பொறுத்தவரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ரோல் மாடல் மாநிலமாக தமிழகத்தை விளங்க வைத்த அன்றைய காங்கிரஸ் அரசாங்கமும் மூன்று தலைமுறை மனிதர்களை குடி என்றால் என்னவென்றே தெரியாமல் வைத்திருந்து ஆட்சி புரிந்த பெருந்தலைவரும் மூதறிஞரும் பெரியவர் பக்தவத்சலமும் கட்டிக் காத்த மதுவிலக்கு கொள்கை திராவிட தலைவர்களால் காற்றிலே பறக்க விடபப்ட்டு தமிழகமெங்கும் மதுக் கடைகள் திறக்கப்பட்ட நாள் 1971 ஆகஸ்ட் 31. தமிழக மக்களை நிரந்தரமாக "குடிமகன்களாக" ஆக்கிய அவலம் அன்றுதான் ஆரம்பித்தது. கொட்டும் மழையில் கோபாலபுரத்திற்கு ஓடோடி சென்று மதுவிலக்கை ரத்து செய்யாதீர்கள் என்று மன்றாடிய மூதறிஞரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. "என் எதிரி கூட குடிக்க கூடாது என்று நினைக்கிறவன் நான்" என்று சினிமாவில் வசனம் பேசியவர்கள், சினிமாவில் மட்டும் வசனம் பேசி விட்டு நிஜ வாழ்க்கையில் அதிகாரம் கையில் வந்த போது 7 வருடங்களாக [1974 செப்டம்பர் 1 முதல் 1981 ஜூன் 30 வரை] மூடிக் கிடந்த மது கடைகளை எல்லாம் திறந்து விட்ட காட்சியையும் தமிழகம் வேதனையோடு வேடிக்கை பார்த்தது. ஆயிற்று, 1981 ஜூலை 1-ந் தேதி அன்று திறக்கப்பட்ட கடைகள் இந்த 2014 ஜூலை 1-ந் தேதியுடன் 33 வருடங்களை கடந்து, இன்னும் செயல்பட்டுகொண்டுதான் இருக்கின்றன. சமூக அக்கறை உள்ள எவரும் நாளைய சமுதாயத்தை நம்பிக்கையோடு எதிர் நோக்கும் எவரும் இன்றைய இளைஞர் நிலை கண்டு வேதனையும் வருத்தத்தையும் அடைவதுதான் மிச்சம். தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடவில்லை. மதுபானம்தான் ஆறாக ஓடுகிறது.
மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் முன்னிரவு மற்றும் பின்னிரவு நேரங்களில் பெண்கள் வெளியே வர அச்சப்படும் சூழல் உருவானது. பெண்கள் திரையரங்கிற்கு இரவு காட்சிகளுக்கு வராத சூழல் ஏற்பட்டது. இது தொடர் ஹவுஸ் புல் நிகழ்வையும் படங்களின் ஓட்டத்தையும் பாதித்தது. மூன்று தெய்வங்கள் படமும் இந்த அசாதாரண சூழலால் பாதிக்கப்பட்டது.
தீபாவளிக்கு பாபு ஸ்ரீதேவியிலும், நீரும் நெருப்பும் சென்ட்ரலிலும் ரிலீஸ். நீரும் நெருப்பும் ரிப்போர்ட் சுமார். ஆகவே அந்த படம் தொடர் ஹவுஸ் புல் காட்சிகளுக்கு முயற்சிக்கப்படவில்லை. மேலும் ரிக்ஷாகாரன் படம் 100 தொடர் ஹவுஸ் புல் காட்சிகள் என்ற இலக்கை எட்டி விட்டதாலும் இந்த படம் கண்டு கொள்ளாமல் விடப்பட்டது. பாபு படத்தை பொறுத்தவரை நல்ல ரிப்போர்ட். படம் நன்றாகவே போனது. ஆனாலும் தொடர் ஹவுஸ் புல் என்ற இலக்கை அடைய முடியவில்லை. எனக்கு அன்றும் இன்றும் தோன்றுகின்ற காரணம் என்னவென்றால் இது போன்ற உணர்ச்சிப்பூர்வமான படங்களுக்கு repeat audience சற்று குறைவாக் இருக்கும். தொடர் ஹவுஸ் புல் காட்சிகளுக்கு repeat audience factor-ம் தேவை.
1971 டிசம்பரில் ஒரு தாய் மக்கள் நியூசினிமாவில் வெளியானது. 1966 முதல் தயாரிப்பில் இருந்த படம் என்பதனாலும் படத்தைப் பற்றிய அபிப்பிராயம் சரியான முறையில் அமையாததாலும் படம் முதல் வார சனிக்கிழமை காலைக்காட்சியே அரங்கு நிறையாமல் போனது. இப்படி 1971 முடிவிற்கு வரும்போது அதற்கு முந்தைய வருடமான 1970 இறுதியில் தொடர் ஹவுஸ் புல் காட்சிகளைப் பொறுத்தவரை நாம் சந்தோஷமாக இருந்தோம். அவர்களுக்கு அந்த மகிழ்ச்சி இல்லை. 1971 இறுதியில் நிலைமை அப்படியே மாறியது. 1971-ல் ஹாட்ரிக் அடித்திருக்கலாமே, விட்டு விட்டோமே என்ற வருத்தம் இருந்தாலும் 1972- ஐ ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம்.
(தொடரும்)
அன்புடன்
-
கோவையில் நடிகர் திலகத்தின் மூன்றாவது
வெள்ளிவிழா சித்திரம்
முதல் மரியாதை
.........
அனைவருக்கும் இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
முதல் மரியாதை
[15.8.1985 - 15.8.2011] : 27வது உதயதினம்
சாதனை வசந்தங்கள் தொடர்கின்றன.....
100வது நாள் : தினத்தந்தி : 22.11.1985
http://i1094.photobucket.com/albums/.../GEDC4332a.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4332b-1.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4333.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4343a.jpg
தொடரும்.....
அன்புடன்,
பம்மலார். pammalar
நன்றி பம்மலர்
-
கோவையில் நடிகர் திலகத்தின் மூன்றாவது
வெள்ளிவிழா சித்திரம்
முதல் மரியாதை
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
முதல் மரியாதை
[15.8.1985 - 15.8.2011] : 27வது உதயதினம்
சாதனை வசந்தங்கள் தொடர்ந்து நிறைகின்றன
வெள்ளிவிழா : தினத்தந்தி : 7.2.1986
http://i1094.photobucket.com/albums/...C4342a-2-1.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4342b.jpg
அன்புடன்,
பம்மலார். pammalar
நன்றி பம்மலர்
-
வசூல் சக்கரவர்த்தி - 2
[மதுரையம்பதி புள்ளி விவரம்]
[திரைக்காவியம் - வெளியான தேதி - திரையரங்கம் - ஓடிய நாட்கள் - மொத்த வசூல்(ரூ.-அணா- ந.பை.)]
1. பராசக்தி - 17.10.1952 - தங்கம் - 112 நாள் - 1,63,423-9-9
2. மனோகரா - 3.3.1954 - ஸ்ரீதேவி - 156 நாள் - 1,51,690-5-0
3. தங்கமலை ரகசியம் - 29.6.1957 - தங்கம் - 55 நாள் - 1,00,502-10-5
குறிப்பு:
1. 2593 இருக்கைகள் கொண்ட ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான தங்கம் திரையரங்கில் வெளியான முதல் திரைக்காவியமே "பராசக்தி" தான்.
2. தங்கம் திரையரங்கில் மூன்று 100 நாள் காவியங்களை கொடுத்த ஒரே உலக நடிகர், நடிகர் திலகம் தான்.
[பராசக்தி(1952) - 112 நாள், படிக்காத மேதை(1960) - 116 நாள், கர்ணன்(1964) - 108 நாள்]
அன்புடன்,
பம்மலார். pammalar
நன்றி பம்மலர்
-
வசூல் சக்கரவர்த்தி - 4
சிங்காரச் சென்னையில், முதல் வெளியீட்டில் (31.7.1965), சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி ஆகிய மூன்று திரையரங்குகளில் ,ஸ்ரீ சிவாஜி பெருமானின் "திருவிளையாடல்" அள்ளி அளித்த மொத்த வசூல்:
அ) 100 நாள் வசூல்
3 அரங்குகளில் மொத்தம் 300 நாட்களில் 9,86,995 ரூபாய் 83 பைசா.
[இது அன்றைய புதிய சாதனை. 14.1.1965 பொங்கலன்று காஸினோ, பிராட்வே, மேகலா ஆகிய மூன்று திரையரங்குகளில் வெளியாகி மூன்றிலும் வெள்ளிவிழா கண்ட மக்கள் திலகத்தின் "எங்க வீட்டுப் பிள்ளை" திரைப்படத்தின் 100 நாள் வசூல் - 3 அரங்குகளில் மொத்தம் 300 நாட்களில் 9,23,519 ரூபாய் 40 பைசா. சென்னை மாநகரின் முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்து "எங்க வீட்டுப் பிள்ளை" ஏற்படுத்திய புதிய சாதனையை "திருவிளையாடல்" முறியடித்து புதிய சாதனையை உருவாக்கியது.]
ஆ) 179 நாள் வசூல்
3 அரங்குகளில் மொத்தம் 537 நாட்களில் 13,82,002 ரூபாய் 91 பைசா.
[மக்கள் திலகத்தின் "எங்க வீட்டுப் பிள்ளை", காஸினோ(211 நாள்), பிராட்வே(176 நாள்), மேகலா(176 நாள்), ஆக மொத்தம், 3 அரங்குகளில் 563 நாட்களில் மொத்த வசூல் 13,23,689 ரூபாய் 22 பைசா.]
நடிகர் திலகமும், மக்கள் திலகமும் திரையுலகின் இரு கண்கள் என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்!
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 108
கே: நடிகர் திலகம் எந்த மாதிரி வேஷத்தில் நடிப்பதைத் தாங்கள் விரும்புகிறீர்கள்? (கே.எல்.மல்லிகா கன்னியப்பன், சிலியாவ், மலேசியா)
ப: எந்த வேடத்தில் அவர் நடித்தாலும், 'இப்படித்தான் நாம் விரும்பினோம்' என்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தி விடுகிறார்.
(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1971)
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 112
கே: நடிகர் திலகத்தின் நடிப்புத்துறையை எடை போட்டால், இந்தியாவுக்கு சிவாஜியாகவும், தமிழகத்துக்கு கட்டபொம்மனாகவும், ஆசியாவுக்கு செங்கிஸ்கானாகவும் விளங்குகிறார் என்கிறேன். சரி தானா? (மிஸ்.வர்னிஸ்ரீலோப்ஸ், சிங்கப்பூர்)
ப: சிவாஜியின் நடிப்பை மிகவும் ரசித்திருக்கிறீர்கள்.
(ஆதாரம் : பேசும் படம், மார்ச் 1970)
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 117
கே: சென்ற நூற்றாண்டின் திரைப்படங்களில் இன்றும் உங்கள் மனத்திரையில் ஓடிக் கொண்டிருக்கும் படம் எது? [எந்த மொழியாகவும் இருக்கலாம்!] (வை.வைகுண்டம், சென்னை-61)
ப: சேரனுடைய 'ஆட்டோகிராஃப்' ஸ்டைலில், பள்ளிப் பருவத்தில் பார்த்த திரைப்படங்கள் தான் மனதில் பசுமையாகத் தங்கும்! சிவாஜி நடித்த 'உத்தமபுத்திரன்' (ஆறு முறை!) பார்த்து விட்டு சிவாஜி ரசிகனானேன். கூர்ந்து கவனித்தால், இப்போது ரஜினி பண்ணும் ஸ்டைலை அப்போதே சிவாஜி விக்ரமன் ரோலில் செய்திருப்பார்!
(ஆதாரம் : ஆனந்த விகடன், 11.4.2004, "ஹாய் மதன்" கேள்வி-பதில் பகுதி)
[திரு.மதன் அவர்கள், இதே பதிலில், 'மதுமதி'(ஹிந்தி) படம் பற்றியும், 'வெண்ணிற ஆடை' படம் பற்றியும் குறிப்பிட்டிருப்பார்.]
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 119
கே: சிவாஜியின் நடிப்பை அவருக்குப் பிறகு வந்த எந்தத் தலைமுறையாலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாமல் இருக்கே... என்ன காரணம்? (பி.சிவக்குமார் பிரபு, திருப்பூர் - 6)
ப: எந்தப் பாத்திரத்தை ஏற்றாலும் பொருந்தக் கூடிய உடல்வாகு, கம்பீரம்...சட்டென்று நவரசத்தின் எந்தப் பிரிவுக்கும் ஊஞ்சல் ஆடக்கூடிய கண்கள், குரல்... இந்த இறை 'கொடை'களுடன் நாடக மேடை அனுபவம், தொழில் பக்தி, பங்க்சுவாலிட்டி ஆகியவை!
(ஆதாரம் : பொம்மை, மே 1993)
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 122
கே: நடிகர் திலகம் நடிக்கும் படங்களைப் பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி, மற்ற நடிகர்கள் நடிக்கும் போது ஏற்படுவதில்லையே, ஏன்? (கே.எல்.கன்னியப்பன், சிலியாவ், மலேசியா)
ப: அவர் நடிகர்களுக்கெல்லாம் திலகம் போன்றவர் என்பதால் தான். அவர் நடிக்கப் பிறந்தவர். மற்ற பலர் நடிக்க வந்தவர்கள்.
(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1971)
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்
-
வசூல் சக்கரவர்த்தி - 5
'பாலும் பழமும்' முதல் வெளியீட்டில் (9.9.1961) சென்னை சாந்தி மற்றும் மதுரை சென்ட்ரல் ஆகிய திரையரங்குகளில் பெற்ற வசூல் விவரம்:
[ஊர் - அரங்கம் - ஓடிய நாட்கள் - மொத்த வசூல்(ரூ.- பை.)]
1. சென்னை - சாந்தி - 127 நாள் - 3,06,167-68
2. மதுரை - சென்ட்ரல் - 127 நாள் - 2,50,528-76
இந்த இரண்டு பிரிண்டுகள் மட்டுமன்றி, 'பாலும் பழமும்' திரைக்காவியத்தின் ஒவ்வொரு பிரிண்டுமே வசூல் பிரளையம் தான்!
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 128
கே: 'இன்ன நடிகையுடன் தான் நடிப்பேன்' என்று சிவாஜி சொல்வதில்லையே, ஏன்? (கே.எல்.சாந்தி கன்னியப்பன், சிலியாவ், மலேசியா)
ப: அவர் தன் திறமையில் நம்பிக்கை கொண்டவர்.
(ஆதாரம் : பேசும் படம், ஜூலை 1971)
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 129
கே: தங்கள் படங்களில் அதிகமான பஞ்ச் டயலாக்குகளை வைக்கத் தூண்டும் ஹீரோக்களின் குறிக்கோள், படத்தின் வெற்றியா? இல்லை தற்புகழ்ச்சியா? (வ.லெட்சுமணன், இராஜவல்லிபுரம்)
ப: 'பட்டிக்காடா பட்டணமா' படத்தில் ஒரு காட்சியில், "எங்கிட்டயே சாந்தி தியேட்டர் எங்க இருக்குன்னு காட்றியா?" என்பார் நடிகர் திலகம். இத்தனை வருஷங்கள் போன பிறகும் அந்த பஞ்ச், நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. சூட்சமம் இது தான். எப்போதாவது ஒரு முறை 'நச்'சென்று வைக்கப்பட்டால் அது பஞ்ச். படம் முழுக்க 'பஞ்ச்' தோரணமே தொங்கினால் அது 'நச்சு பிச்சு'.
(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 1-15 நவம்பர் 2006)
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 136
கே: பத்மினி பிக்சர்ஸ் இதுவரை தயாரித்துள்ள படங்களில் அதிக வசூலைத் தந்த படம் எது? (சே.நரசிம்மன், புதுடெல்லி)
ப: வீரபாண்டிய கட்டபொம்மன்.
(ஆதாரம் : பேசும் படம், ஜனவரி 1968)
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 138
கே: நடிகர் திலகத்துக்கு அடுக்கடுக்காகப் படங்கள் 'புக்' ஆகியிருப்பது எதைக் காட்டுகிறது? (ஏ.தர்மபூபதி, பொள்ளாச்சி)
ப: நடிப்பாற்றல் மிக்கவருக்குத் தான் நிரந்தரப் புகழ் உண்டு என்பதை.
(ஆதாரம் : பேசும் படம், ஜூன் 1972)
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 140
கே: "ராஜ ராஜ சோழன்" படம் இரண்டு வாரங்களில் இருபத்தைந்து லட்ச ரூபாய் வசூல் தந்தது குறித்து தங்கள் கருத்து என்ன? (எஸ்.பாலகிருஷ்ணன், திருச்சி - 20)
ப: இப்படிப்பட்ட படங்கள் தயாரிக்க மற்றவர்களுக்கு ஆர்வம் ஏற்பட வேண்டுமானால் இந்தப் படம் வசூலில் வெற்றி பெறத்தானே வேண்டும்!
(ஆதாரம் : பேசும் படம், மே - ஜூன் 1973)
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 147
கே: சிவாஜியிடம் உங்களுக்குப் பிடித்த குணம்? (பி.சிவாஜி பிரியா, போரூர்)
ப: சமீபத்தில் சிவாஜியைச் சந்திக்க அவரது கட்சியைச் சேர்ந்த சிலர் வந்திருந்தார்கள். படப்பிடிப்பில் இருந்த சிவாஜி, "மாலை வீட்டுக்கு வந்து விடுங்கள். இது என் தொழில் நேரம்" என்று சொல்லி அனுப்பி விட்டார். இப்படித் தொழிலை அவர் தெய்வமாக மதிக்கும் குணம் எனக்குப் பிடித்தது.
(ஆதாரம் : பொம்மை, ஏப்ரல் 1980)
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 148
கே: வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களை இப்போது எடுத்தால் ஓடுமா? (பகதூர், சென்னை)
ப: எடுக்க ஆள் இல்லை...நடிக்கவும் ஆள் இல்லையே!
(ஆதாரம் : ராணி, 10.10.2010) [லேட்டஸ்ட் 'ராணி' இதழ்]
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 152
கே: மார்லன் பிராண்டோ, ரெக்ஸ் ஹாரிசன், அல்பசினோ, ராபர்ட் டிநீரோ - இவர்களில் நம் சிவாஜி கணேசனுடன் போட்டி போடத் தகுதி பெற்ற நடிகர் யார்? (ஜி.கே.எஸ்.மூர்த்தி, கோபிசெட்டிபாளையம்)
ப: பிராண்டோ, ரெக்ஸ் - இந்த இருவர் தான் சிவாஜியின் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவருமே சிவாஜி செய்த விதவிதமான ரோல்களைச் செய்ததில்லை என்பதே உண்மை. அந்த இருவரும் உலகின் மிகச் சிறந்த டைரக்டர்களிடம் பணியாற்றியவர்கள். சிவாஜி சுயம்பு!
(ஆதாரம் : ஆனந்த விகடன், 3.11.2002, "ஹாய் மதன்" கேள்வி-பதில் பகுதி )
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 153
கே: இரு மலர்கள், ஊட்டி வரை உறவு இரு படங்களும் ஒரே தினத்தில் வெளியாகி நூறு நாள் ஓடியிருக்கின்றன. ஒரே கதாநாயகனின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியாகி நூறு நாள் ஓடியதாக திரைப்படவுலக வரலாற்றில் வேறு ஒரு சான்று உங்களால் காண்பிக்க முடியுமா? (தா.அய்யப்பன், திருவனந்தபுரம்)
ப: பூக்காட்டில் மேலும் ஒரு புது மலர்!
(ஆதாரம் : பேசும் படம், மார்ச் 1970)
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்