http://i60.tinypic.com/votl4p.jpg
Printable View
என் வாழ்க்கையின்
முதல் வெளிச்சத்தை...
1969 இல்...
'ராஜா' தியேட்டர் இருட்டில் கண்டு பிடித்தேன்!'
'ஒளி விளக்கு'...
நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படம் !
ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தடுமாற்றம்
என்று இருந்த என்னை...
நம்பிக்கை என்னும் தடம் மாற்றி...
வாழ்க்கையின் முதல் பிடிப்பைத் தந்தவர்...
நீங்கள் தான்!
நாத்திகராக உங்களை நீங்கள்
அடையாளங் காட்டினாலும்...
உண்மையான ஆன்மீகம் எது ?என்பதை
எனக்குக் கற்றுத் தந்தது...
உங்கள் வாழ்க்கை தான்!
ஒரு தெய்வத்தால் மட்டுமே
தரக் கூடிய ஆறுதலை...
உங்கள்...
'என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே'
எனக்குத் தந்திருக்கிறது.
ஒரு குருவினால் மட்டுமே
வரக் கூடிய ஞானத்தைஉங்கள்...
'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்'
பாடல்எனக்கு அருளியிருக்கின்றது.
ஒரு தாயிடமிருந்து வரக் கூடிய
கனிவையும் அரவணைப்பையும்
'செல்லக் கிளியே மெல்லப் பேசு'
எனக்கு அள்ளித் தந்தது.
ஒரு தந்தையிடமிருந்து பெறக்...
கூடிய தைரியத்தை
'வெள்ளி நிலா முற்றத்திலே'
பாடல்எனக்குச் சொல்லித் தந்தது.
'உன்னை அறிந்தால்..' பாடலைக் கேட்டதால் தான்
எனக்குள் உயர்ந்து நின்ற
சோதி மரத்தையான் உணர ஆரம்பித்தேன்.
'நாளை நமதே' பாடலைக் கேட்டதால் தான்
எனது பாலைகளையும் சோலைகளாக..
மாற்றும்'அற்புதம்' அறிந்து கொண்டேன்.
'உலகம் பிறந்தது எனக்காக'
என்று ஒலிக்க ஒலிக்க...
உரிமை கொண்டாடி ரசிக்கும்
உற்சாக குணம் என்னுள்
துள்ளி வளர்வதை
உணர்ந்து சிலிர்த்தேன்.
உங்கள் பாடல் காட்சிகளில்
இரு கையுயர்த்தி நீங்கள்
'இமய' தைரியம்தந்திராவிட்டால்...
நேற்றைய என் கனவுகள்
காவியுடை பூண்டிருக்கும்.
'எங்கே போய் விடும் காலம்?!
' என்றுநீங்கள் கரம் உயர்த்திப் பாடிய போது...
பொறுமை காத்து...ஆனால்
தலை உயர்த்திக் காத்திருந்தன
எனது திறமைகள்.
உங்கள்...கம்பு வீசும் சாகசங்களில்
பித்தனானேன்.
கத்திச் சண்டைகளில்
முத்தியடைந்தேன்!
'நல்ல நேரம்' படத்தில்சுருண்ட
முடி நெற்றியில் சுந்தரம் கூட்ட..
மஞ்சள் உடையுடன் மலையருவி
போல் துள்ளிக் குதித்துமாடிப் படியிறங்கிய
உங்கள் அழகில்.....
நான் வானம் ஏறினேன்!
கிட்டத்தட்ட் 12 ஆண்டுகளுக்குப் பிறகு
'ஒளி விளக்கு'மீண்டும் 'ராஜா'வில்..
ஏற்றி வைக்கப்பட்ட போது
எனக்கும் என் நண்பனுக்கும் [ நெல்லியடி முரளிதரன் ]
இடையே..ஒரு நூதனமான போட்டி!
'தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?'
பாடல் காட்சியில் வரும்
நான்கு எம்.ஜி.ஆரில்
எந்த எம்.ஜி.ஆர் அதிக அழகு?'
இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்காகவே....
ஒளி விளக்கை மீண்டும் மீண்டும் பார்த்தோம்.
சந்தோஷமாகத் தோற்றோம்!
உங்கள் கணக்கில் வரவு வைத்திருக்க..
வேண்டிய வசந்தங்களை எல்லாம்
வறுமை...விரட்டியடித்திருக்கிறது.
உங்கள் இளமைக் காலத்தின்
எண்பது சத வீதத்தை...விதி...வீணாக்கி இருக்கிறது.
உங்கள் கனவுகளுக்குக் கூடமறுக்கப்பட்டது களம்.
கடவுள் மீதான நம்பிக்கையை நீங்கள்
கவிழ்த்துப் போடும் அளவுக்கு
உங்களைப் பந்தாடியிருக்கிறது
கடந்த காலம்.
பெரிய பெரிய திறமைகளை..
வைத்துக் கொண்டே..
சின்னச் சின்ன வாய்ப்புகளுக்கும் கூடநீங்கள்..
'பகீரதப் பிரயத்தனம்' செய்ய வேண்டியிருந்தது.
உங்கள் துவக்கப் பாதைகளில் எல்லாம்
தூவப்பட்டன அவமான முட்கள்.
உங்கள் கலைப் பயணத்தின் பாதித் தூரம்..
வரைக்கும்'சூழ்ச்சி'யெனும் தடைக் கற்கள்.
பாவம்....உங்கள் 'மன வலிமை'யை
அவை உணரத் தவறின.
தடைக் கற்கள்-
உங்கள் கால்களுக்கும்அவமானங்கள்-
உங்கள் மனதுக்கும் உலுக்க முடியாத உறுதியைத் தந்தன!
ஏளனங்கள் எல்லாம் உங்களை..
ஒரு வேழமாய் மாற்றின!
எதிர்ப்புகள் எல்லாம் உங்கள் ஏணியாய் உயர்ந்தன!
ராமச்சந்திரன் முகவரி தேடி வந்துவட்டியும்
முதலுமாகஅதிசயங்கள் நிகழ்த்த..
ஆரம்பிக்கிறாள்அதிர்ஷ்ட தேவதை!
'ஒரு போதும் தோற்காது உண்மை உழைப்பு'
என்று...உங்கள் வெற்றி வாழ்க்கை
விளக்கு ஏந்தி வந்துவிளக்கம் சொல்கிறது.
'யாம் பெற்ற துன்பம்
இரு மடங்காகயாம் காண்பவர்
எல்லாம் பெறுக...
'என்று அலையும்சேடிஸ்ட்டுகள் செறிந்த உலகில்...
'யாம் பெற்ற துன்பம் இனி யாருக்கும் வேண்டாம்'
என்றுசத்துணவு தந்தீர்கள்.
இல்லாதவரை எல்லாம் தேடிப் பிடித்து
அவர்கள் தேவைள் படித்தறிந்து
அதனிலும் மேலாகஅள்ளித் தந்தீர்கள்.
போனால் போகட்டும் என்று கொடுத்தால் கூட..
அளந்து கொடுக்கின்ற சிறிய உலகில்
கணக்குப் பார்க்காமல் வாரிக் கொடுத்தது
கண்டிக் கர்ணனின் 'பெரிய' மனம்.
உங்களைப் பழித்தவர்களாக இருந்தாலும்
அவர்கள் ஒடிந்து நின்ற காலங்களில்
ஓடிப் போய் உதவியிருக்கிறீர்கள்.
ஆரம்ப காலங்களில் உங்கள்கைக்கு
எட்டிய வாய்ப்புகளை...
வாய்க்கு எட்டாமல்தட்டி விட்டவர்கள்...
பின்பு..வாழ்ந்து கெட்டு....
உங்கள்
வீட்டுக் கதவை வந்து தட்டிய போது...
உங்கள் மனக் கதவையும் அகலமாகவே
அவர்களுக்காகதிறந்து வைத்தீர்கள்.
இறப்பு என்பது...இயற்கையின் நிஜம்.
ஆனால்...என்னைப் பொறுத்தவரையில்...
இந்த இருவர் மரணமும்
உண்மைக் கலப்பற்ற பொய்கள்!
ஒருவர்...என் தந்தை!
மற்றவர்...நீங்கள்!....
courtesy - thiru யாழ் சுதாகர்
1984
BANGALORE - NAGA THEATER- OLIVILKKU
http://i42.tinypic.com/159gz4.jpg
K.B.SUNDRAMBAL NINAIVU NAAL - INDRU
http://i61.tinypic.com/1629qj7.jpg
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
கீர்த்திக்கு கிரீடங்கள்
https://www.youtube.com/watch?v=A2zd...ature=youtu.be
ஒளி விளக்கு என்றும் மங்கா விளக்கு
குடியின் தீமையை உணர்த்துவதற்காக செம்மல் குடிப்பதுபோல நடித்த ஒரே படம்.
இந்தி படத்தில் விதவைக்கு (சவுகார் ஜானகி வேடம்) கதாநாயகன் வாழ்வு கொடுத்து அவரை திருமணம் செய்து கொள்வதுபோல கதை இருந்தாலும் அப்போதைய வாழ்க்கை சூழலுக்கும் ரசிகர்களின் விருப்பத்துக்கும் ஏற்ப கதை மாற்றியமைக்கப்பட்டது.
டைட்டில் சீனில் காட்சிகள் உறைந்து நிற்பது போல காட்டப்பட்ட முதல் படம். அதிலும் ஒரு சுவற்றில் இருந்து தலைவர் குதிக்கும்போது பறப்பது போல உறைந்து நிற்கும் காட்சி அற்புதம்.
டைட்டில் காட்சியில் போலீஸ் துரத்தி வருகையில் சாலையில் எந்தப் பக்கம் செல்வது என்று பதட்டத்துடன் அதே நேரம் ஸ்டைலாக ஆள்காட்டி விரலை வாயில் வைத்து யோசித்து பிறகு ஒரு முடிவு செய்து ஓடும் காட்சி கண்ணிலேயே நிற்கிறது.
மனோகருடன் முதல் சண்டையில் அவர் பணக்கட்டை மேஜை மீது போட்டு எடுத்துக் கொள்ளச் சொல்ல, எடுக்கும் நேரத்தில் மனோகர் கத்தியால் குத்த முயற்சிக்க, அதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் பணக்கட்டை எடுக்கும் தலைவரின் வேகமும் ஸ்டைலான லாவகமும் சூப்பர்.
கிராமத்துக்கு திருட வந்திருக்கும் தலைவரைப் பார்த்து ‘காரணமில்லாமல் வரமாட்டியே’ என்று சோ சொல்ல, நாக்கை வெளியே நீட்டி லேசாக கடித்து குட்டு வெளிப்பட்டு விட்டதே என்பதை வெளிக்காட்டும் வள்ளலின் இயற்கையான நடிப்பு.
சவுகார் வீட்டில் திருடும்போது பீரோவில் ஏதேனும் விலையுயர்ந்த பொருட்கள் இருக்கிறதா என்பதை தேடும் இடத்தில் துணிகளை பரபரவென எடுத்தெறியும் அந்த speed.
சவுகாரை வீட்டுக்கு கூட்டி வரும் காட்சியில் இப்போது இளைஞர்கள் மத்தியில் பேஷனாக இருக்கும் checked shirt -ஐ தலைவர் அப்போதே அணிந்திருப்பார். கழுத்தில் ஸ்டைலாக முடிச்சிடப்பட்டிருக்கும் கர்சீப் கூடுதல் அழகு. இந்தப் படத்தைப் பார்த்து அதேபோல checked shirt அணிந்த ரசிகர்கள் ஏராளம். நண்பர்கள் அந்த still ஐ பதிவிட்டால் நன்று. எதிலும் தலைவர்தான் முன்னோடி.
சவுகாருக்கு வைத்தியம் செய்ய என்னத்தே கண்ணையாவை கூட்டி வந்து, பின்னர் அவருக்கு பணம் கொடுக்கும் போது, மறுக்கும் கண்ணையாவை உங்களுக்கு இவ்வளவு பெருந்தன்மையா? என்பதை வார்த்தைகளே இல்லாமல், கையில் பணத்தை நீட்டியபடியே புன்னகையை குழைத்து நன்றியும் அன்பும் வியப்பும் கலந்த தலைவரின் அந்த பார்வை... ஒன்றே போதுமே.. பல்லாயிரம் சொல் வேண்டுமா?
தீயில் சிக்கிக் கொண்ட குழந்தையை காப்பாற்றிவிட்டு தனக்கு தீக்காயம் ஏற்பட்டதால் எரிச்சல் தாங்காமல், பாராட்ட வரும் கூட்டத்தை தவிர்த்து சாந்தி.. என்று அலறிக் கொண்டே வீட்டுக்கு ஓடும் காட்சியில் கல் மனமும் கரையும்.
சவுகார் ஜானகியை வீட்டுக்கு கூட்டி வந்தவுடன் அவர் வழிபாட்டுக்காக முருகன் சிலையை எடுத்து தலைவர் என்ன சொல்வாரோ என்ற சந்தேகத்துடன் இருக்க, ‘‘எனக்கு நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ? உங்கள் நம்பிக்கையில் குறுக்கிட மாட்டேன்’’ என்று தலைவர் கூறும் கருத்து, யார் எந்த நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும் அவர்கள் மனதை புண்படுத்தாத, தலைவருக்காகவே செதுக்கப்பட்ட வார்த்தைகளை வடித்தெடுத்த வசனகர்த்தாவின் சாதுர்யம் அபாரம். ‘பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன், பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்’ என்ற பேரறிஞரின் கருத்தையொட்டி இந்த வசனம் இருக்கும். அதை பேசும் காட்சியில் பேரறிஞர் அண்ணா கண்ட திமுக கொடியின் வண்ணத்தில் இருக்கும் இரு வண்ண கர்சீபை தலைவர் கழுத்தில் கட்டிக் கொள்வதன் மூலம் கட்சியின் கொள்கை அதுதான் என்பதை மறைமுகமாக விளக்குவார். (அப்போது அண்ணா முதல்வராக இருந்த நேரம்)
சவுகார் ஜானகியின் சோகக் கதையை பட்டன் கத்தியை தனக்கே உரிய ஸ்டைலில் வெளியே நீட்டியும் மடக்கியும் நிதானமாக கேட்கும் அழகு யாருக்கு வரும்? பின்னர், தான் திருடன் என்பதால் தன்னைப் பற்றி சவுகார் தவறாக நினைத்து விடக் கூடாது என்பதற்காக ‘‘நான் கெட்டவன்தான். ஆனால், கேவலமானவன் இல்லை’’ என்று கூறும் காட்சியே போதும் அந்த கேரக்டரை உயர்த்திப் பிடிக்க.
அதை உறுதிப்படுத்துவது போல, குடித்து விட்டு வீட்டுக்கு வரும் தலைவர், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்வாரோ என்று சவுகார் ஜானகி பயத்தில் இருக்க, தலைவரும் தடுமாறியபடியே அவர் அருகே வர.. எந்தப் படத்திலும் குடிக்காத தலைவர் இப்படத்தில் குடித்திருக்கிறாரே, காட்சி அமைப்பு எப்படி இருக்குமோ? என்று நமக்கும் நாடித்துடிப்பு அதிகரிக்க பயத்தால் உடல் நடுங்க திரும்பி படுத்திருக்கும் சவுகார் அருகே வந்து..... போர்வையை எடுத்து அவர் மீது போர்த்திவிட்டு திரும்பிச் செல்லும்போது.............. ‘அவன்தான்டா தலைவன்’
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
kalaivendhan sir
very nice write up about our makkal thilagam m.g.r. In olivilakku .
Puratchi Thalaivar MGR's 100th movie Olivilaku was re-released 2 years back in two theatres in Chennai one is Anna as 4 shows and in Mahalakshmi as 3 shows. Both the theatre showed worst print.
In Mahalakshmi theatre I went and watched the first day first show the movie is screen had lot of pink.
http://www.mgrroop.blogspot.in/2012/...ease-news.html
The movie was re-released on 28.9.2012. Sunday matinee and evening show was houseful since the movie was re-released after a very long time.
http://www.mgrroop.blogspot.in/2012/...lease-iii.html
Polimer TV telecasted MGR devotees celebration for Olivilaku.
http://www.mgrroop.blogspot.in/2012/...elease-iv.html
Video Link
http://www.youtube.com/watch?v=PHNgx...layer_embedded
With a bad print and blaring audio this movie reached second week in Mahalakshmi theater having 900+ capacity.
His fans provided overwhelming support for this movie re-release.
Below is an image I had captured during the show.
http://i125.photobucket.com/albums/p...ps614e9ed0.jpg
Now you will know how he print was.
The intro scene of Olivilaku captured in Mahalakshmi theatre.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=HttDBIOLuag
The movie had lot of one liners one such is when MGR asks Sowcar Janaki to come with him, she hesitates and MGR says
"நான் கெட்டவன் தான் ஆனா கேவலமானவன் இல்லை" with his unique style.
Another video clip from Olivilaku. Other characters intro scenes.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=hJlrve8ZwmM
மக்கள் திலகத்தின் 100வது வெற்றிக்காவியம் ஒளிவிளக்கு கோவை (ராயல்), திருப்பூர் (கலைவாணி மற்றும் RAM LAXMAN), மதுரை (சென்ட்ரல்) ஆகிய திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடியபோது திரைஅரங்குகள் மற்றும் வெளி இடங்களில் ஒட்டப்பட்ட வண்ண சுவரொட்டி விளம்பரங்கள். நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-------------------------------------------------
http://s30.postimg.org/5b6yyv0j5/image.jpg
MAALAIMALAR ADVT.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=hJlrve8ZwmM
In the above video while I was editing and reducing the size for our blog upload I found something strange and caught my attention. The conversation scene between MGR and Cho appeared to me as a single take when I watched again there was 3 shots but on closer observation they had used two separate cameras and the was one take with 3 shots combined.
The scene starts from 1.16 there was two cameras one on MGR side mounted on trolley and another on Cho side. When the scene starts, the camera on MGR side say first camera (position A) zooms in on two characters (MGR and Cho) the second camera cuts in with close up of Cho and MGR, and now the first camera (moved little from the earlier position A to B) cuts in with zooming out, trolleys from MGR and Cho.
Very much technical, since both MGR and Cho are from drama world it is a simple task for them to execute this scene.
Below is the video captured by MGR Devotee Sathya in Anna theatre on 7.10.2012.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=lb-WmVTP7BQ
Puratchi Thalaivar MGR and Sowcar Janaki scene.
http://www.youtube.com/watch?v=l1oLd9JPnRI
Third week poster of Olivilaku re-released in 2012.
http://i125.photobucket.com/albums/p...ps3400084c.jpg
Olivilaku second week run article published in Maalai Malar.
http://i125.photobucket.com/albums/p...ps2e1788af.jpg
3rd week ad from Tamil Newspaper.
http://i125.photobucket.com/albums/p...ps73263c7d.jpg