தமிழ் இந்து -27/11/2015
http://i67.tinypic.com/20a6h4o.jpg
Printable View
தமிழ் இந்து -27/11/2015
http://i67.tinypic.com/20a6h4o.jpg
தினமலர் -வாரமலர் -வேலூர் -29/11/2015
http://i66.tinypic.com/24g0zf8.jpg
http://i67.tinypic.com/351bcew.jpg
http://i63.tinypic.com/2cp2btf.jpg
தினமலர் -08/12/2015
http://i67.tinypic.com/9pz3g8.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். தன் கடின உழைப்பால் சேர்த்து , சேமித்து வைத்த
சொத்தை அனுபவிக்கும் அவரது உறவினர்கள் , கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல்
அவர் பயன்படுத்திய பொருட்கள், முக்கிய ஆவணங்கள், வரலாற்று சிறப்பு வாய்ந்த
புகைப்படங்கள், ஆகியனவற்றை மழை வெள்ளத்தில் அடித்து செல்லும் வகையிலோ, சேதமாகும் வகையிலோ செயல்பட்டனர் என்பது, செய்திதாள்கள்,
ஊடகங்கள் , மீடியாக்கள் மூலமாக அறிந்த எம்.ஜி.ஆர். பக்தர்கள் அதிர்ச்சியில்
உறைந்து போய் உள்ளார்கள்.
மறைந்த திரு. விஜயன் அவர்கள் இருந்திருந்தால் இந்த நிலை நேர்ந்து இருக்காது.
இப்போது இருக்கும் உறவினர்கள் உங்கள் தலைவரே போய்விட்டார், அவருடைய
பொருட்கள், ஆவணங்கள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன என்கிற
பொருள்படி செயல் படுகிறார்கள் என்றால் , நொந்து கொள்வதை தவிர
வேறு வழியில்லை.
தினத்தந்தி - 05/12/2015
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிக்கும், முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.
அவர்களுக்கும் உள்ள ஒற்றுமைகள்.
http://i68.tinypic.com/2w50cgh.jpg
நடிக மன்னன் எம்.ஜி.ஆர். அற்புதமாக குணசித்திர வேடத்தில் ஜொலித்த "பெற்றால்தான் பிள்ளையா " வெளியான நாள் : 09/12/1966.
49 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று.
அருமையான பாடல்கள் நிறைந்தது.
கிடைத்த கதாபாத்திரத்தை மிகையின்றி, கச்சிதமாகவும் , இயல்பாகவும்,
உணர்ச்சிகளை கொட்டியும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வெகு சிறப்பாக
தன நடிப்பு திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த படங்களில் ஒன்று.
வித்தியாசமான நடை. எளிய உடை .
கருத்தான வசனங்கள் .
நடிகர் தங்கவேலுவின் நகைச்சுவை நல்ல கலகலப்பு.
படத்தினை தொய்வில்லாமல் மிகவும் சிறப்பாக கையாண்ட இயக்குனர்கள்
கிருஷ்ணன் பஞ்சு பாராட்டுக்குரியவர்கள்.
நீதிமன்றத்தில் பெறாத பிள்ளைக்காக வாதாடும்போதும் பிள்ளையை பிரியும் தருணத்திலும் , பிரிந்து ஏங்கி தவிக்கும் காட்சிகளிலும் இயக்குனர்கள் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் முழு திறமைகளை வெளிக்காட்ட வைத்ததற்கு
எத்தனை சபாஷ் வேண்டுமானாலும் போடலாம்.
http://i68.tinypic.com/w6r0p5.jpg
http://i68.tinypic.com/2cff8li.jpg
1975 முதல் 1990 வரை பல அரங்குகளில் பார்த்து ரசித்துள்ளேன்.
சென்னையில் ஸ்டார் , மகாராணியில் (புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சுடப்பட்டு
அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோதும் ) வெற்றிகரமாக
100 நாட்களை கடந்த திரைக்காவியம்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த " ஒரு தாய் மக்கள் " வெளியான தினம் 09/12/1971
44 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இனிமையான பாடல்கள் நிறைந்த படம்.
http://i63.tinypic.com/w1pkqq.jpg
மரியாதைக்குரிய நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகம் திரியின் moderator திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு மற்றும் நான் பெரிதும் மதிக்கின்ற பேராசிரியர் திரு செல்வகுமார் மற்றும் திரு எஸ்வி அவர்களுக்கும் சேர்த்து
நடப்பவற்றை நீங்கள் பார்த்துகொண்டு இருக்கிறீர்கள் . படிக்கிறீர்கள் என்று நம்புகிறேன் !
திரு முத்தையன் அவர்களுக்கு என் மீது தனிப்பட்ட முறையில் என்ன கோபம் என்று தெரியவில்லை.
அவரிடம் நான் விண்ணப்பம் வைத்தது தவறு என்கிறாரா அல்லது என்ன சொல்லவருகிறார் என்று புரியவில்லை.
தொடர்ந்து 20 முதல் 30 படங்கள் வருவதால் அதற்க்கு முன்னர் பதிவிட்ட ராஜ ராஜ சோழன் மற்றும் இதர விளம்பர படங்கள் ( முதன் முறையாக பதிவிடப்படுபவை) சரியாக பார்த்து ரசிக்க முடியவில்லை, அறிந்துகொள்ள முடியவில்லை.
அதற்க்கு காரணம் ஒரு பக்கத்தில் 10 படங்கள் இருந்தால் பக்கம் load ஆவதற்கு சிறிது நேரம் வேறு பிடிக்கிறது. ஆகையால்தான், அவரிடம் வின்னபித்தேன்....ஆனால் திரு முத்தையன் அவர்கள் மரியாதை குறைவாக ( மரியாதை கூட இரெண்டாம் பட்சம்..காரணம் அவர் என்னை விட வயதில் மூத்தவர் ) தர குறைவாக இப்படி தனி மனித தாக்குதலில் ஈடுபடுவது எந்த விதத்தில் ஞாயம் என்று நீங்கள் தான் சொல்லவேண்டும் !
என் மீது தவறு இருந்த பொழுதெல்லாம் அதனை பேராசிரியர் அவர்களும் திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களும் திரு எஸ்வி அவர்களும் சுட்டிக்காட்டி அதனை நான் மன்னிப்பு கேட்பதோடல்லாமல் திருத்திகொள்ளவும் செய்து இருக்கிறேன், கடந்த காலங்களில். இது உங்கள் மூவருக்குமே தெரியும். அப்படி இருக்கும் பட்சத்தில், நான் இவரிடம் விண்ணப்பித்தது குற்றமா ? எதற்க்காக இதுபோல எழுதுகிறார் என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை.
இவர் எழுதியது போல நானும் எழுத ஒரு சில நிமிடம் கூட ஆகாது. ஆனால் இவருக்கு நான் பதில் பதிவு போட்டால் மற்ற நண்பர்கள் யாராவது அதனை வேறு விதமாக நினைத்து விட கூடும் என்ற காரணத்தால் உங்களது கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
ரிக்க்ஷகாரன் திரைப்படத்தில் மக்கள் திலகம் அவர்கள் நீதிபதியிடம் உரைப்பதை போல...நடந்ததை நான் சொல்லிட்டேன் ...நடக்காததை திரு முதய்யன் சொல்லிட்டார் ....இனி நடக்கபோவதை நீங்கள் தான் சொல்லணும் !
வருத்தத்துடன்
RKS
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "ஆசைமுகம் " வெளியான தேதி :10/12/1965
50 ஆண்டுகள் நிறைவு பெற்று பொன்விழா காண்கிறது.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மிக பொருத்தமான பட தலைப்பு.
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த இரட்டை வேட படங்களில் வித்தியாசமானது.
வயோதிகர் வேடத்தில் பட்டை தீட்டிய வைரம் போல சிறப்பான நடிப்பு.
சண்டை காட்சிகளில் எதிரிகளை பந்தாடும் பாணியே தனி.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். -சரோஜாதேவி கெமிஸ்ட்ரி கலந்த காதல் காட்சிகள்
அருமையாக படமாக்கப்பட்டுள்ளது.
நாகேஷின் நகைச்சுவை கலந்த வசனங்கள் படத்திற்கு வலுவான காட்சிகள்.
இசைஅமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு சுவையான பாடல்களுக்கு
இசை அமைத்திருந்தார்.
பல திருப்பங்கள் நிறைந்த காட்சிகளுடன் இயக்குனர் புல்லையா அருமையாக
இயக்கினார்.
ஒரு மாத இடைவெளியில் ஏ.வி.எம்.மின் " அன்பே வா " வெளியாகி பெரும் வெற்றி பெற்று ஓடிய வேகம் இப்படத்திற்கு பெரும் தடைக்கல்லாக அமைந்தது
குறிப்பிடத்தக்கது.
இருப்பினும்மறுவெளியீடுகளிலும் சரி, இப்போது திரையிட்டாலும் ரசிகர்கள்
ஆதரவுடன் பெரும் வெற்றி பெற்று வருகிறது .
http://i68.tinypic.com/1y2slf.jpg