http://i63.tinypic.com/9bd6c1.jpg
Printable View
"அத்தனை ஆண்களுக்கும் ஆணின் இதயத்தை வைத்துப் படைத்த இறைவன் ,
எம்.ஜி.ஆருக்கு மட்டும் ஏனோ ,
அன்னையின் இதயத்தை வைத்துப் படைத்து விட்டான்..!"
# இது எப்போதோ ஒருமுறை நான் எழுதியது...!
ஆனால் இப்போதும் , எம்.ஜி.ஆர்.பற்றி என் கண்ணில் படும் ஒவ்வொரு செய்தியும் , நான் எழுதியதை மேலும் மேலும் உறுதி செய்கின்றன..!
# இதோ , ஒரு வெண்பொங்கல் செய்தி..!
# அந்தக் கால தேர்தல் பிரச்சார சமயங்களில் , அண்ணா - காமராஜர் – கருணாநிதி - எம்.ஜி.ஆர். போன்ற அரசியல் தலைவர்கள் , முக்கியமான நகரங்களில் , ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து பிரச்சாரம் செய்து விட்டுப் போவார்களாம்..!
அவர்கள் பேச்சைக் கேட்பதற்காக அன்று மாலை முதலே பக்கத்து கிராமங்களில் இருந்து , மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து , கூட்டம் கூட்டமாக காத்துக் கிடப்பார்களாம் !
ஒரு வழியாக நள்ளிரவில்தான் தலைவர்கள் மேடைக்கு வந்து சேருவார்களாம்..!
அவர்கள் பேசி முடித்து விட்டுப் போன பிறகு , அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் அங்கேயே....அந்த பிரச்சார திடலிலேயே துண்டை விரித்துப் போட்டுத் தூங்கி விடுவார்களாம்..! வேறு என்ன செய்வது..? விடிந்த பிறகுதான் ஊருக்குப் போக முதல் பஸ் வரும்..!
எந்தத் தலைவர் வந்து பேசி விட்டுப் போனாலும் , இதுதான் நிலைமை..!
வருவார்கள்...பேசுவார்கள்...செல்வார்கள்..!
ஆனால் ..ஒரே ஒரு தலைவர் மட்டும் , நள்ளிரவில் வந்து பேசி முடித்து விட்டுப் புறப்பட்டுப் போகும் முன் , தன் கட்சியை சேர்ந்த அந்த ஏரியாவின் பொறுப்பாளரைக் கூப்பிட்டு , திடலில் தங்கி இருக்கும் மக்கள் அனைவருக்கும் , காலை எழுந்தவுடன் சாப்பிட ,சுடச்சுட வெண்பொங்கல் ஏற்பாடு செய்ய சொல்லி விட்டு , அதற்கான செலவையும் கொடுத்து விட்டுத்தான் போவாராம்..!
அவர்.....வேறு யாராக இருக்க முடியும்..?
எம்.ஜி.ஆர்.!
சில வேளைகளில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் கூட , எம்.ஜி.ஆரின் இந்த வெண்பொங்கலை சாப்பிட்டு விட்டு , எம்.ஜி.ஆரின் ஆதரவாளர்களாக மாறிய அனுபவங்களும் உண்டாம்..!
# எண்ணிப் பார்க்கிறேன்...!
என்ன அவசியம் வந்தது எம்.ஜி.ஆருக்கு...?
மற்ற தலைவர்களைப் போலவே ..வந்தோமா..? பேசினோமா..? புறப்பட்டுப் போனோமா? என்று இல்லாமல் , எதற்காக அங்கே இருக்கும் மக்களின் அடுத்த நாள் காலை பசியைப் பற்றி கவலைப்பட வேண்டும்..?
அதனால்தான் மீண்டும் அழுத்தமாக சொல்கிறேன்..!
"அத்தனை ஆண்களுக்கும் ஆணின் இதயத்தை வைத்துப் படைத்த இறைவன் ,
எம்.ஜி.ஆருக்கு மட்டும் ஏனோ ,
அன்னையின் இதயத்தை வைத்துப் படைத்து விட்டான்..!"
மே 2012 ....... மே 2016
http://i65.tinypic.com/11h4abr.png
மய்யத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சாதனை..
மே 2012 ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி பாகம் 2 ல் இருந்தது . மய்யம் திரியின் நண்பர்கள் பலருடைய பங்களிப்பில் சிறப்பான பதிவுகள் இடம் பெற்று வந்தது .மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்கள் பலர் திரியில் இணைந்து பல அருமையான பதிவுகளை வழங்கி கடந்த 4 ஆண்டு காலத்தில் 17 பாகங்களை வெற்றிகரமாக முடித்து விரைவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 20தொடங்க உள்ளோம் .
2015ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நெறியாளராக இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களை மய்யம் நிர்வாகம் அறிவித்தது மிக்க மகிழ்ச்சி .
சமீப காலமாக நம்முடைய நண்பர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் பதிவிடாமல் இருப்பது ஏமாற்றம் தருகிறது .மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பாக செயல் பட வேண்டிய தருணத்தில் மீண்டும் நண்பர்கள் திரியில் பதிவுகளை வழங்கிடுமாறு கேட்டு கொள்கிறேன் .
எம்ஜிஆர் 100 | 60- நாடகக்கலை மீதான பிரியம்!
M.g.r. திரைப்படத்துறையிலும் அரசியல்துறையிலும் உயர்ந்த நிலைக்குச் சென்றபோதும், அதற்கெல்லாம் காரணமாக விளங்கி மக்களிடம் தன்னை அறிமுகப்படுத்திய நாடகக் கலையின் மீது தீவிர பற்று கொண்டிருந்தவர். நாடகங்களை ஊக்குவித்தவர். நாடக உலகில் இருந்து திரைப்படங்களில் நடிக்க வந்தவர்கள் மீது எம்.ஜி.ஆருக்கு தனி அன்பு உண்டு.
நாமக்கல்லில் 1925-ம் ஆண்டு பிறந்தவர் அவர். சிறுவயது முதலே நாடகங்களில் நடிப்பதில் ஈடுபாடு கொண்டவர். படிக் கும் காலத்திலேயே பம்மல் சம்பந்த முதலியாரின் மனோகரா நாடகத்தில் மனோகரனாக சிறப்பாக நடித்து வந்தார். அதனால், அவரது இயற் பெயரே மறைந்துபோய் நாடகத்தில் நடித்த பாத்திரப் பெயரே நிலைத்துவிட் டது. அவர்தான் பின்னர் 1951-ல் ராஜாம் பாள் படத்தின் மூலம் அறிமுகமாகி, பல படங்களில் நடித்து புகழ்பெற்ற ராமசாமி சுப்பிரமணியம் மனோகர் என்ற ஆர்.எஸ்.மனோகர்.
எம்.ஜி.ஆருடன் பணம் படைத்தவன், ஒளி விளக்கு, அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் உட்பட பல படங்களில் மனோகர் நடித்துள்ளார். தோள்களை ஆட்டி உடலைக் குலுக்கி வசனம் பேசி நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர். காவல்காரன் படத்தில் குத்துச்சண்டை வீரராக மனோகர் நடித்திருப்பார். ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கும் மனோகருக்கும் குத்துச்சண்டை நடக்கும்.
படப்பிடிப்பின்போது மனோகரைப் பார்த்து, உங்களுக்கு குத்துச்சண்டை தெரியுமா? என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ஏதோ கொஞ்சம் தெரியும் என்றார் மனோகர். இரண்டு மூன்று ஷாட்கள் முடிந்ததும் மனோகரின் பஞ்ச், தான் குத்துவதை தடுப்பது ஆகியவற்றை கவனித்த எம்.ஜி.ஆர். மனோகரிடம், ஏன்யா பொய் சொல்றே? பெரிய சாம்பியன் மாதிரி ஃபைட் பண்றே என்று கூறியபடியே அவரை செல்லமாகக் குத்தினார்.
அடிமைப்பெண் படத்தில் நடிப்ப தற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப் பூருக்கு மனோகரை எம்.ஜி.ஆர். அழைத்துச் சென்றார். நாட கத்துக்குத் தேவையான அலங்காரப் பொருட் களுக்கு ஜெய்ப்பூர் மிகவும் பிரபலம். மனோ கரை அழைத்த எம்.ஜி.ஆர்., நீங்கள் நடத்தும் நாட கங்களுக்கு தேவையான பொருட்களை எவ் வளவு வேண்டு மானாலும் வாங் கிக் கொள்ளுங்கள். எல்லாம் என்னு டைய செலவு என்றார். மகிழ்ச் சியில் திக்கு முக்காடிப் போய்விட்டார் மனோகர். தனது நாடகங் களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டார்.
அடிமைப்பெண் படத்தில் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது, படிகளில் உருண்டு விழ இருந்த மனோகரை எம்.ஜி.ஆர். சரியான நேரத் தில் பிடித்து அவரைக் காப்பாற்றினார்.
நாடகத்தில் எம்.ஜி.ஆருக்கு இருந்த ஆர்வத்துக்கு ஒரு உதார ணம். ஒருமுறை சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. கலா மண்டபத்தில் மனோகரின் நாடகங்கள் பதின்மூன்று நாட் களுக்கு தொடர்ந்து நடந்தன. எல்லா நாட்களும் எம்.ஜி.ஆர். வந்து நாடகங்களைப் பார்த்தார்.
அடாது மழை பெய்தாலும் விடாமல் நாடகத்தை எம்.ஜி.ஆர். பார்த்ததும் உண்டு. அதே என்.கே.டி. கலா மண்டபத்தில் பழம்பெரும் நடிகர் எஸ்.வி.சகஸ்ர நாமத்தின் சேவா ஸ்டேஜ் சார்பில் சத்திய தரிசனம் என்ற நாடகம் நடந்தது. அது திறந்தவெளி அரங்கம். தனது மனைவி ஜானகி அம்மையாருடன் வந்து நாடகத்தை எம்.ஜி.ஆர். பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் மழை வந்துவிட்டது. கூடியிருந்தவர்கள் அருகே இருந்த கட்டிடங்களில் போய் ஒண்டிக் கொண்டனர். எம்.ஜி.ஆரும் ஜானகி அம்மையாரும் மழையில் நனைந்தபடியே அமர்ந்திருந்தனர்.
இதைப் பார்த்துவிட்டு சகஸ்ரநாமம், மழை காரணமாக நாடகத்தை நிறுத்திக் கொள்கிறோம். இன்னொரு நாள் இதை நடத்துவோம் என்று அறிவித்தார். நனைந்த உடையுடன் மேடையேறிய எம்.ஜி.ஆர்., அடாது மழை பெய்தாலும் நாடகம் பார்க்கத் தயாராக இருந்தேன். நீங்கள்தான் நிறுத்திவிட்டீர்கள். பார்த்தவரை நாடகம் சிறப்பாக இருந்தது. மீண்டும் நடத்தும்போது சொல்லுங்கள் வருகிறேன் என்று பேசினார்.
அதன்படியே, பெரம்பூர் ஐ.சி.எஃப். திடலில் மறுபடியும் சத்திய தரிசனம் நாடகம் நடந்தபோது எம்.ஜி.ஆர். சென்று பார்த்து கலைஞர்களை கவுரவித்தார்.
எம்.ஜி.ஆருடன் மனோகர் பல படங் களில் சண்டைக் காட்சிகளில் நடித் துள்ளார். என்றா லும், உலகம் சுற்றும் வாலி பன் படத்தில் எம்.ஜி.ஆரின் சாதுர்யத்தைக் காட்டும் இடை வேளைக்கு முந்தைய ரசமான காட்சி ரசிகர்களைத் துள்ள வைக் கும்.
கதைப்படி, அணுசக்தி ஆராய்ச்சி குறிப்பின் ஒருபகுதி ஹாங்காங் கில் உள்ள ஒருவரின் வீட்டில் இருக்கும். டைம் பீஸில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் குறிப்பை வாங்கிக் கொள்ள எம்.ஜி.ஆர். அங்கு செல்வார். வில்லன் அசோகனின் கையாளாக வரும் மனோகரும் அந்தக் குறிப்பை அடைவதற் காக நாய் வியாபாரி போல, பெரிய கன்றுக் குட்டி சைஸில் இருக்கும் இரண்டு முரட்டு நாய்களுடன் அங்கு வருவார்.
மனோகர் வந்திருப்பதன் நோக்கத்தை நொடியில் எம்.ஜி.ஆர். புரிந்து கொண்டு விடுவார். புருவங்களை உயர்த்தி, உதடுகளை லேசாக விரித்து, மூச்சை உள் ளிழுத்து புன்முறுவல் பூக்கும்போதே, தாக்குதலை சமாளிக்க அவர் தயாராகிவிட்டார் என்பதை உணர்ந்து தியேட்டர் அமர்க்களப்படும். தொடர்ந்து மனோகருக்கும் எம்.ஜி.ஆருக்கும் வாக்குவாதம் நடக்கும். எம்.ஜி.ஆர். நடந்து கொண்டே அறையின் மூலைக்கு சென்று கண்ணாடி ஜன்னலின் வழியே கீழே நோட்டம் விட்டுத் திரும்புவார்.
ஒரு கட்டத்தில் கோபமடையும் மனோகர், வீட்டின் சொந்தக்காரரை பார்த்து விரலை சொடுக்கியபடி, சார், அப்படீங்கறதுக்குள்ளே, அவர் கையில் உள்ள டைம் பீஸை நாய் கொண்டுவந்துடும். பாக்கறீங்களா? என்று சவால் விடுவார்.
இதை எதிர்பார்த்தவராய், மின்ன லாய் பாய்ந்து சென்று ஏற்கெனவே நோட்டமிட்டு வைத்திருந்த கண்ணாடி ஜன்னலின் வழியே குதித்து எம்.ஜி.ஆர். அங்கிருந்து தப்புவார். அதற்கு முன் அவர் சொல்லும் வசனம் குத்துமதிப் பாகத்தான் காதில் விழும். அந்த அளவுக்கு அணை உடைத்த பெரு வெள்ளமாய் ரசிகர்களின் உற்சாகக் கூச்சலும் ஆரவாரமும் தியேட்டரை நிரப்பும். மனோகரைப் பார்த்து எம்.ஜி.ஆர். சொல்லும் அந்த வசனம்...
நாய்களோட திறமையை அவர் பார்க்கட்டும், என்னோட திறமையை நீ பாரு!
மனோகர் நாடகங்களில் தந்திரக் காட்சிகள் ரசிகர்களைக் கவரும். அவற்றை பார்த்து ரசிக் கவே ஏராளமான மக்கள் வரு வார்கள். சென்னையில் என்.கே.டி. கலா மண்டபத்தில் தொடர்ந்து அவரது நாடகங்களை பார்த்த எம்.ஜி.ஆர்., கடைசி நாள் நிகழ்ச்சி யில் மனோகருக்கு நாடகக் காவலர் என்ற பட்டத்தை வழங்கினார்.
கடவுளிடம் கருணைதனை பார்க்கலாம்..அந்த கருணையிலும் கடவுளையும் பார்க்கலாம்..என் கடவுள்..இவர்க்கு நிகர் எந்த கடவுளும் இல்லை..தெய்வம்..
http://i68.tinypic.com/1o4siu.jpg
Thiru Muthaiyan Avl
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்.
http://s32.postimg.org/qwg4w34cl/FB_...ed_Picture.jpg
Courtesy - facebook
M.G.R. Gave Chance for Youth at those days itself to act with him - Dinamalar Video
https://www.youtube.com/watch?v=dt8yM6WA-6M
"Pondati Mukkiyam" - MGR Advice to Pandiarajan | Cine Flick
https://www.youtube.com/watch?v=-CVwQyTBpSw
Actor MGR Waited with Food for People who Returned after Escaping from an Accident
https://www.youtube.com/watch?v=fYISurLBiRk
Producer Devar Booked Actor M.G.R. for Three Films at a Time - Dinamalar Video
https://www.youtube.com/watch?v=J3IuMxj_QUc
அள்ளி கொடுத்து வாழ்ந்தவர் வள்ளல் எம் ஜி ஆர்
Chandran Veerasamy
May 5 at 6:48pm ·
விகடன் : -உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்கணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி
வாரி வாரி வழங்கிக்கிட்டே இருக்கீங்களே,
அதற்கு என்ன காரணம்?
எம்.ஜி.ஆர் :- சொத்துக்கள் கடைசிவரை நம்மிடையே இருக்கும்னு நினைக்கிறது தப்புங்கிறது என் கருத்து! என்னை முதன் முதலா கதாநாயகனா போட்டவர் ஜூபிடர் சோமு அவர்கள். ஒரு காலத்தில் இந்த ஸ்டுடியோ அவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் எதிரிலே வந்து நிக்கவே பயப்படுவோம். இப்போ அதே ஸ்டூடியோவுக்கு நான் பங்குதாரரா இருக்கேன். என்னைவிட அனுபவத்திலும் ஆற்றலிலும் பன்மடங்கு உயர்ந்தவரான அவருக்கே அப்படி ஒரு நிலைமை வந்ததுன்னா நான் மட்டும் எத்தனை நாள் இந்த ஸ்டூடியோவுக்கு முதலாளியா இருந்திட முடியும்? எனக்கு இது புரியுது. ஆனா, சில பேரு சட்டத்தின் பாதுகாப்பு நமக்கு இருக்குன்னு சொத்தையும் பணத்தையும் சேர்த்து வெச்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பிலே இல்லாதது, சட்டத்தின் பாதுகாப்பில் எத்தனை நாள் வாழ்ந்திட முடியும்?
அது மாத்திரமல்ல. இந்த செல்வமெல்லாம் யார் தந்தது? அதாவது மக்கள் தந்ததுதானே? அவர்கள் தந்ததிலிருந்துதான் நான் தருகிறேன். தேவைக்கு மேல் பணத்தை சேர்த்து வைப்பதில் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியைவிட பயனுள்ள வகையில் மற்றவர்களுக்கு உதவும் போது அடையும் மகிழ்ச்சியையே நான் பெரிதாக நினைக்கிறேன்.
- விகடன் பொக்கிஷம் .
( படம்; அண்ணா திமுக தொடங்கிய பிறகு
அய்யா பெரியாரை நேரில் சந்தித்து வாழ்த்து
பெற்ற போது . உடன்கே.ஏ.மதியழகன் , நாஞ்சில்
மனோகரன் )
Actor M.G.R Came as Hero after eleven years since he came to acting - Dinamalar Video
https://www.youtube.com/watch?v=eW04WGRisqI
Secrect Hidden Behind M.G.R. Film - Dinamalar Video Dated March 2016
https://www.youtube.com/watch?v=v8yvgOXOerI
ஆதி அந்தமும் அவள்தான்.. நம்மை ஆளும் நீதியும் அவள்தான்..
http://i68.tinypic.com/33ti1pc.jpg
Petraalthan Pillaiya (1966)TAMIL
[B]Petraalthan Pillaiya was produced by K.K. Vasu under the banner of Sri Muthukumaran Pictures. It was one of the hit films of MGR, and had a theatrical run of over 100 days. It was an adaptation of Charlie Chaplins The Kid . The film was directed by the duo Krishnan-Panju. The film was also edited by Panju under his pseudonym S. Panjabi. The Kid was suitably altered, with changes made to suit the Tamil film audiences.
The story deals with Jeeva (Sowkar Janaki), a poor woman with a son who is abandoned by her rich husband (Asokan), as he has plans to marry another rich woman, who is under the control of Mani (Nambiar).
Jeeva, unable to afford raising her kid, abandons him at a temple. A tramp, Anandhan (M. G. Ramachandran), who is in the temple, finds the kid. Anandhan tries to get rid of the young boy, but he soon bonds with him and names him the boy Kannan (Baby Shakila). He also educates him with his meagre income. Anandhans lover is a street-fortune teller (Saroja Devi) and her brother is Thangavelu. After five years, Kannans biological mother, Jeeva, meets him and also her husband, and after many twists and turns, the truth emerges.
But Kannan loves the tramp and chooses to stay with him, and not with his parents. Anandhan marries his sweetheart and Kannan lives with them; his parents educate him.
The fight sequences between MGR and Nambiar were one of the highlights of the film. The film had notable cinematography by P.N. Sundaram, especially in capturing the Madras city of the 1960s. M.S. Viswanathan composed the music and there are only five songs in the movie.
One song featuring MGR, Nalla Nalla Pillaigalai (Voice: T.M. Soundararajan; Lyrics: Vaali) became a hit and has a message for kids. Interestingly, it ran into censorship problems. One line says Arignar Annapol . referring to C.N. Annadurai. The line was changed to Thiru Vi Ka pol .
Remembered for: The melodious music of M.S. Viswanathan, fine acting of MGR, Sowcar Janaki and Baby Shakila; good camerawork by P.N. Sundaram and deft direction by Krishnan-Panju.
randor guy
மக்கள் திலகம் எம்ஜிஆர் ''நினைத்ததை முடிப்பவன் '' இன்று 41 வது ஆண்டு நிறைவு ஆண்டு .
நம்நாடு படத்தில் மக்கள் திலகம் அவர்கள் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் .. நான் என்று பாடினார் . அந்த பாடலின் தலைப்பிலே ''நினைத்ததை முடிப்பவன் '' என்ற படம் 9.5.1975 அன்று தென்னகமெங்கும் வெளியாகியது .
மக்கள் திலகத்தின் இரட்டை வேடம் - மாறு பட்ட வித்தியாசமான நடிப்பு - இனிய பாடல்கள் என்று பொழுது போக்கு
அம்சங்களுடன் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த படம் .
மதுரை - மீனாக்ஷி அரங்கில் மட்டும் 100 நாட்கள் ஓடியது .பல இடங்களில் 12 வாரங்கள் மேல் ஓடியது . சென்னை நகரில் தேவி பாரடைஸ் அரங்கில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது .
அண்ணாவின் ''இதயக்கனி '' அரசியலில் மக்கள் திலகம் ''நினைத்ததை முடிப்பவன் '' . அவரின் எதிர்காலம் ''நாளை நமதே '' என்ற முழக்கம் வெற்றி பெறவும் மக்களால '' பல்லாண்டு வாழ்க '' என்ற வாழ்த்துக்கள் பெறவும் அமைந்த
பொன்னான ஆண்டு 1975ல் வந்த மக்கள் திலகத்தின் 4 படங்களும் என்றால் அது மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியான ஆண்டாகும் .
'' நினைத்ததை முடிப்பவன் '' - எம்ஜியார்
மக்கள் திலகம் நடித்த படங்களின் பாடல்கள் - பெயர்கள் உண்மையிலே அவரது நிஜ வாழ்வில் சாதித்த அவரது திரை உலக சாதனைகள் - அரசியல் வெற்றிகள் பிரதிபலிக்கிறது .
நாடோடி மன்னன் ;-1958
காடு விளைஞ்சென்ன மச்சான் .... பாடலில் மக்கள் திலகம் பாடிய வரிகள் ...நானே போட போகிறேன் சட்டம் .
.[ 1977 உண்மையானது]
எங்க வீட்டு பிள்ளை ;- 1965 - நான் ஆணையிட்டால் ...........
1977 - பாடல் வரிகள் நிஜமானது .
தெய்வத்தாய் -1964
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ......
பாடல் வரிகள் .. சத்தியமான வைர வரிகள்
அன்றும் - இன்றும் என்றும் பொருத்தமான பாடல் .
பணக்கார குடும்பம் -1964.
பாடல் - என்றும் ஆளும் எங்கள் ஆட்சி இந்த மண்ணிலே
2016 - இப்போதும நம் மன்னவரின் ஆட்சிதானே .
அடிமைப்பெண் -1969.
காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ ... வெற்றித்திருமகன் நீ ....
நிதர்சனமான உண்மை .
உலகம் சுற்றும்வாலிபன் -1973
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் .....
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .
மக்கள் திலகம் உண்மையிலே ஒரு தீர்க்கதர்சி .
மக்கள் திலகம் ஒரு அதிசயமல்ல
மக்கள் திலகம் ஒரு உலகம் போற்றும் உன்னத நாயகன் .
உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தினமும் உச்சரிக்கும் பெயர்களில்
ஒன்று எம்ஜியார் என்ற மூன்றெழுத்து .
இது ஒன்று போதுமே .-எம்
மன்னவனின் புகழ்
அகிலமெங்குமே
முரசு கொட்டுமே
விகடனில் படம் வெளியானபோது வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
உருவத்தில் தன்னைப் போல் இருக்கும் நாட்டுப்புற பாண்ட் மாஸ்டரை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அதற்கேற்றபடி ஆட்டி வைக்கும் வைரக் கொள்ளைக்காரன், அவன் சுய உருவத்தைப் புரிந்து கொள்ளாமல் சொன்னதை அநாயாசமாகச் செய்து முடிக்கும் அசட்டு பாண்ட் மாஸ்டர் என முரணான இரண்டு பாத்திரங்கள்.
இரண்டு பேருக்கும் இரண்டு கதாநாயகிகள், ஒரு தங்கை, போலீஸ் அதிகாரிகள். இத்தனை பேர் போதாதா, நினைத்ததை முடிப்பதற்கு?
வித்தியாசமான இரண்டு கதாபாத்திரங்களையும் ஏற்று, இயற்கையாக நடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அசட்டுத்தனம், ஆவேசம், காதல், பாசம் அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டி நடிப்பதற்கு வைரக் கொள்ளைக்காரன் ரஞ்சித்தை விட பாண்ட் மாஸ்டர் சுந்தரத்துக்கு வாய்ப்புகள் அதிகம். இரண்டு பேரும் கடைசியில் மோதிக் கொள்ளும்போது பொறி பறக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அலட்சியமாக அவர்கள் மோதிக் கொள்வது கூட கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. கொள்ளைக்காரன் யார் என்பதை நிரூபிக்கும் நீதிமன்ற கிளைமாக்ஸ் காட்சி, வேடிக்கையும் விறுவிறுப்பும் நிறைந்த நல்ல திருப்பம்.
லதாவுக்கும் மஞ்சுளாவுக்கும் மிதமான பாத்திரங்கள். நெருக்கமான காட்சிகளில் இருவருமே பின்வாங்கவில்லை. சி.ஐ.டி. அதிகாரியான மஞ்சுளாவின் மாத்திரை சமாசாரம் மணியான நகைச்சுவைக் கட்டம். சாரதாவிடம் பாசத்தைப் பிழிந்தெடுத்துத் தரும் துடிப்பான நடிப்பு! ‘ஊர்வசி’ நடிகையை இன்னும் கொஞ்சம் உபயோகித்துக் கொண்டிருக்கக் கூடாதா? நம்பியாருக்கும் அசோகனுக்கும் போலீஸ் அதிகாரிகளாகப் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது புதுமையாகத்தான் இருக்கிறது.
பாடல்களில் இனிமை ‘பூ மழை தூவு’கிறது. வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்குவதில் கேமரா வெகு கவர்ச்சியாக இயங்கியிருக்கிறது. டைரக்டர் நீலகண்டன் அவர்களின் சாமர்த்தியம் பல இடங்களில் பளிச்சிடுகிறது. சபாஷ்!
நிறைவான பொழுதுபோக்கு.