-
"அத்தனை ஆண்களுக்கும் ஆணின் இதயத்தை வைத்துப் படைத்த இறைவன் ,
எம்.ஜி.ஆருக்கு மட்டும் ஏனோ ,
அன்னையின் இதயத்தை வைத்துப் படைத்து விட்டான்..!"
# இது எப்போதோ ஒருமுறை நான் எழுதியது...!
ஆனால் இப்போதும் , எம்.ஜி.ஆர்.பற்றி என் கண்ணில் படும் ஒவ்வொரு செய்தியும் , நான் எழுதியதை மேலும் மேலும் உறுதி செய்கின்றன..!
# இதோ , ஒரு வெண்பொங்கல் செய்தி..!
# அந்தக் கால தேர்தல் பிரச்சார சமயங்களில் , அண்ணா - காமராஜர் – கருணாநிதி - எம்.ஜி.ஆர். போன்ற அரசியல் தலைவர்கள் , முக்கியமான நகரங்களில் , ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து பிரச்சாரம் செய்து விட்டுப் போவார்களாம்..!
அவர்கள் பேச்சைக் கேட்பதற்காக அன்று மாலை முதலே பக்கத்து கிராமங்களில் இருந்து , மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து , கூட்டம் கூட்டமாக காத்துக் கிடப்பார்களாம் !
ஒரு வழியாக நள்ளிரவில்தான் தலைவர்கள் மேடைக்கு வந்து சேருவார்களாம்..!
அவர்கள் பேசி முடித்து விட்டுப் போன பிறகு , அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் அங்கேயே....அந்த பிரச்சார திடலிலேயே துண்டை விரித்துப் போட்டுத் தூங்கி விடுவார்களாம்..! வேறு என்ன செய்வது..? விடிந்த பிறகுதான் ஊருக்குப் போக முதல் பஸ் வரும்..!
எந்தத் தலைவர் வந்து பேசி விட்டுப் போனாலும் , இதுதான் நிலைமை..!
வருவார்கள்...பேசுவார்கள்...செல்வார்கள்..!
ஆனால் ..ஒரே ஒரு தலைவர் மட்டும் , நள்ளிரவில் வந்து பேசி முடித்து விட்டுப் புறப்பட்டுப் போகும் முன் , தன் கட்சியை சேர்ந்த அந்த ஏரியாவின் பொறுப்பாளரைக் கூப்பிட்டு , திடலில் தங்கி இருக்கும் மக்கள் அனைவருக்கும் , காலை எழுந்தவுடன் சுடச்சுட சாப்பிட வெண்பொங்கல் கொடுத்து அனுப்ப ஏற்பாடு செய்ய சொல்லி விட்டு , அதற்கான செலவையும் கொடுத்து விட்டுத்தான் போவாராம்..!
அவர்.....வேறு யாராக இருக்க முடியும்..?
எம்.ஜி.ஆர்.!
சில வேளைகளில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் கூட , எம்.ஜி.ஆரின் இந்த வெண்பொங்கலை சாப்பிட்டு விட்டு , எம்.ஜி.ஆரின் ஆதரவாளர்களாக மாறிய அனுபவங்களும் உண்டாம்..!
# எண்ணிப் பார்க்கிறேன்...!
என்ன அவசியம் வந்தது எம்.ஜி.ஆருக்கு...?
மற்ற தலைவர்களைப் போலவே ..வந்தோமா..? பேசினோமா..? புறப்பட்டுப் போனோமா? என்று இல்லாமல் , எதற்காக அங்கே இருக்கும் மக்களின் அடுத்த நாள் காலை பசியைப் பற்றி கவலைப்பட வேண்டும்..?
அதனால்தான் மீண்டும் அழுத்தமாக சொல்கிறேன்..!
"அத்தனை ஆண்களுக்கும் ஆணின் இதயத்தை வைத்துப் படைத்த இறைவன் ,
எம்.ஜி.ஆருக்கு மட்டும் ஏனோ ,
அன்னையின் இதயத்தை வைத்துப் படைத்து விட்டான்..!"........ Thanks...
-
சகோ அந்த ஒரே ஒரு நல் இதயத்தை வைத்து கொண்டு பல கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளை அடித்து விட்டார் நம் தலைவர்....... Thanks...
-
பகவானின் பத்து அவதாரங்களில் மச்ச அவதாரம் மற்றும் கூர்ம அவதாரம் மிகவும் முக்கியமானது மச்ச அவதாரம் குறிப்பிடுவது மீன்கள் இந்த மீன்கள் குஞ்சு பொறித்து கண்ணும் கருத்துமாக தன் மீன் குஞ்சுகளை வளர்க்கும் அது போல பகவான் அவனது படைப்பில் மனித ஜீவராசிகளை கண்ணும் கருத்துமாக சதாசர்வகாலமும் பாதுகாப்பார் என்பது உணர்த்தும் மச்ச அவதாரம் அது போல் கூர்ம அவதாரம் ஆமைகள் தன் முட்டைகளை கடற்கரை மணலில் ஆழத்தில் குழி தோண்டி தன் முட்டைகளை இட்டு திரும்பவும் கடலுக்குள் சென்று விடும் ஆனால் அந்த ஆமைகளின் எண்ணம் எல்லாம் அந்த முட்டைகள் மேல் தான் இருக்கும் முட்டைகளை மற்ற விலங்குகள் அழித்து விடுமோ என்ற அச்சத்துடன் காலத்தை ஓட்டும் அது போல் பகவானும் மக்களுக்கு துன்பம் நேராமல் மக்களை பற்றியே சதா சர்வகாலமும் நினைத்து க்கொண்டிருப்பார் இந்த இரண்டு அவதாரங்களின் குணங்கள் தலைவர் திரு எம் .ஜி. இராமச்சந்திரன் அவர்களுக்கு அமைந்தது தெய்வ கடாட்சம் என்று சொன்னால் மிகையாகாது.......... Thanks.........
-
Well said! We are lucky enough for living in his period and He stays with us! We thank the God!...... Thanks...
-
நண்பர் முத்துசாமி சொன்னது போலவே அவரின் கடைசி காலங்களில் ஒரு நல்ல தாயே போன்றே மனிதாபிமான முறையில் வாழ்வாங்கு வாழ்ந்து வந்தார் என்பது தான் உண்மை அவர் நல்லவர் அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் நிலைத்து வாழ் கிரார் அவர் தான்..... Thanks...
..
-
தாய் மனம் உலகில் போற்றுதற்குரியது மக்களுக்கு தாயாகவும் தந்தையாகவும் திகழும் அம்மையப்பன் கலியுகத்தில் தன் பணியைத் தொடர அவரால் படைக்கப்பட்டவர் தான் தாயுள்ளம் கொண்ட பொன்மனச்செம்மல்.... Thanks...
-
தினமும்..திரு.எம்.ஜி.ஆர்..
திரை காவியங்களை சின்னதிரையில் ஒளிபரப்பி
தமிழ் மக்கள் அனைவரையும்
இந்த ஊரடங்கும் காலத்தில் வெளியே வராமல்..தடுத்து மன.
நிம்மதியை கொடுத்த..
அனைத்து சின்னதிரை
சேனல்களுக்கு.நன்றி.நன்றி.. நன்றி...... Thanks...
-
#எதிரிகள்னா #யாரு???
எஸ் எஸ் சிவசங்கர் என்ற திமுக பிரமுகரின் எம்ஜிஆர் பற்றிய நினைவலைகள்...
ஆட்டோவில் போகும் போது பார்த்தேன், சாலை ஓரத்தில் ஒரு நாற்காலி. நாற்காலி மேல் மக்கள் திலகம் எம்ஜிஆர் படம். மாலை போடப்பட்டிருந்தது. நாற்காலி அருகே பிளாட்ஃபார்ம் மீது ஒரு பாட்டி அமர்ந்திருந்தார். கண்களில் லேசான கலக்கம். “விழியே கதை எழுது” கனவுப் பாடலாகக் கூட இருக்கலாம்...
1984 ஆம் ஆண்டு. கிராமங்கள் தோறும், எம்ஜிஆர் படம் வைக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டிருக்கும். சுற்றி தாய்மார்கள் சோகமாக அமர்ந்திருப்பார்கள். ஸ்பீக்கரில் “இறைவா, உன் கோவிலிலே எத்தனையோ மணி விளக்கு” பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்.
எம்ஜிஆர் அப்போது அமெரிக்காவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். சட்டமன்றத் தேர்தலும் வந்தது.
பரவலாக திமுக வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தார்கள்.
1980 தேர்தலில், 600 வாக்கு வித்தியாசத்தில் எனது தந்தையார் தோல்வி அடைந்திருந்ததால், இந்த முறை வெற்றி உறுதி என நினைத்திருந்த நேரத்தில் தோல்வி.
இப்படி எம்ஜிஆரோடு அரசியல் பகை இருந்தாலும், கொள்கை மாறுபாடு இருந்தாலும், எம்ஜிஆர் படங்களை விரும்பி ரசித்தவன் தான். ஆனால் பள்ளியில் நண்பர்களோடு விவாதிக்கும் போது எம்ஜிஆரை தீவிரமாக விமர்சித்தவன்.
1987... அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவன் நான். மூன்றாவது செமஸ்டர் முடிந்து விடுமுறை. நாட்டு நலப்பணித் திட்ட முகாமுக்கு செல்வதற்கு வீட்டிலிருந்து, ஹாஸ்டலுக்கு வந்து விட்டோம் நண்பர்களுடன்... திடீரென ஊரே மயான அமைதி. எம்ஜிஆர் மறைவுச் செய்தி.
நாடே ஸ்தம்பித்த்து. எங்கும் பயணிக்க முடியாத நிலை. உணவுப் பிரச்சினை. ரேடியோவை வைத்தால், டொய்ங், டொய்ங், சோக இசை. ஹாஸ்டலின் டீவி ரூமில் இருக்கும், டீவியை பார்த்து மரண நிகழ்வுகளை தெரிந்து கொண்டோம். கலைஞரின் இரங்கல் செய்தி வந்தது.
நினைவுகளிலிருந்து மீண்டேன்...
அந்தப் பாட்டியை பார்த்தவுடன், இப்படியான எம்.ஜி.ஆர் குறித்த நினைவுகள்...
என்னோடு பயணித்த ஏழு வயது மகன் கேட்டார்,”அப்பா எம்ஜிஆர் படம் தானே ?” தொப்பி, கண்ணாடி இல்லாத ராஜா காலத்து உடையில் எம்ஜிஆர் படம்.
“எப்படி தெரியும்பா?”...இது நான்
“என்னாப்பா எம்ஜிஆர எனக்குத் தெரியாதா?”
என்று அசால்ட்டா கூறிய என் மகனை வியப்புடன் பார்த்தேன்........ Thanks.........
-
தலைவரே பாடி இருக்கிறார்! தாய்வழி வந்த தங்கங்கள் யாவரும் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே! எனவே தாய்வழி உறவை அழிக்கமுடியாது! தாய்வழி உறவு இருக்கும் வரை நாளை இருக்கும் வரை நம் தலைவர் இருப்பார்! புகழ் மிளிரும்!..... Thanks...
-
எங்க வீட்டில் என்தாய் என்னுடைய 7ம் வயதில் தலைவரை போட்டோவில் காட்டி எங்களிடம் சொன்னார்"இவருதான் எம்.ஜி.ஆர்.மக்களுக்கு நிறைய நல்லது செய்கிறார்"என்று.நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னோம்"இவர்தான் நம்ம எம்.ஜி.ஆர் தாத்தா.அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு சொல்கிறார்கள்"எம்.ஜி.ஆர் தாத்தா.அவர் நம் குடும்ப உறவு........ Thanks...
-
ஆம் ! வழி வழியாக நம் பக்தர்கள் குடும்பங்களில் இப்படித்தான் சின்னஞ் சிறு பிள்ளைகள் கூட தலைவரை பற்றி அறிந்து மகிழ்கிறார்கள் ! அடுத்தடுத்த தலைமுறைக்கு தலைவர் புகழ் பயணமாகிறது ! ......... Thanks...
-
என் அப்பாவுக்கு அவர் தந்தை சொன்னார் தலைவரை பற்றி
என்* அப்பா *எனக்கு சொன்னார் தலைவரை பற்றி...
நாளை நான் என் குழந்தைக்கு சொல்லுவேன் தலைவரை பற்றி...
ஆம்*
#அதிமுக என்பது
#இயக்கம் அல்ல
எங்கள்
#இதயம்....
பல தலைமுறைகளுக்கும் அணையாமல் துடிக்கும்... எப்பொழுதும் அவர் படம் பார்க்கும் முழு ரசிகன்...
இவன்
அஇஅதிமுக
அடிமட்ட
தொண்டன்
அருண்.......... Thanks.........
-
மறக்க முடியாத மாணிக்கம் தான் அருமையான பதிவு செய்து இருக்கிறார் வாழ்க வளமுடன் கண்களில் கண்ணே சேர்ந்து கொண்டு அழுகிறது அருமையான பதிவு பாராட்டுகள்....... Thanks...
-
நம் புரட்சி தலைவரின் அருமைகளை, பெருமைகளை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். என்றும் ஒரே தலைவர் என்றால் அது நம் தலைவரே. சத்தியம் தவறாத, ஒப்பற்ற தலைவர் ஆவார். மக்களே மனம் திரும்பி வாருங்கள் தலைவர் பக்கம். உங்களுக்காக நல்ல, பல அரிய வாய்ப்புகள் காத்து கிடக்கின்றன.......... Thanks...
-
கண்ணுக்குள் பட்ட அத்தனை மக்களும்
கன்னத்தை தொட்டு முத்தம் இடுபவர்களே
மிச்சம் மீதி வைக்காத சுத்தமான தங்கமகனே
எப்படியும் எந்தவிதத்திலேயும் ஒவ்வொருக்கும்
புரிய வைத்த மஹான் என்பது .... காலம் செல்ல செல்ல தெய்வமாகியது எந்த விதமான ஆச்சர்யமில்லையே.....
யாரொருவன் தனக்கென வைத்துக் கொள ளாமல் பிறருக்காக வாழ்ததே.....இன்றும் தெய்வமாக இருக கிறார் என்பதில் ......உண்மையே அதிகம்
உறவுகள் சொல்வதில் உறுதியானதே......
வாழ்த்துகள் பதிவிற்கு....... Thanks to Keshavkumar
-
இன்றும் தொலைக்காட்சி மூலம் அனைவரையும் கவரும் மன்னாதி மன்னன், இதயம் கவரும் மனிதநேய சக்கரவர்த்தி, மஹான், சித்தர் மக்கள் திலகம் புகழ் என்றென்றும் நீடூழி வளர்க, வாழ்க......... Thanks...
-
படத்தில் இருப்பவர்களுடன் புரட்சி தலைவர் சந்திப்பு ஏன் என்று யூகிக்க முடிகிறதா? அவர்கள் அனைவரும் நேஷனல் சர்க்கஸ் கலைஞர்கள். மக்கள் திலகம் பார் விளையாடும் கலைஞராக "பறக்கும் பாவை"யில் நடித்திருப்பார். அந்த படத்தில் நடித்த பார் விளையாடும் கலைஞர்கள் தலைவரை காண பேராவல் கொணடதை தெரிந்து கொண்டு தலைவரே அவர்களை நேரில் சர்க்கஸ் கூடாரத்திலேயே சந்தித்து அளவளாவினார். சுமார் 15 நாட்கள் அவர்கள் சர்க்கஸ் கூடாரத்தில் படப்பிடிப்பு நடந்ததை நினைவு கூர்ந்தார்கள்.
ஒரு தடவை தலைவரை சந்தித்து விட்டால் போதும் வாழ்நாளில் அது ஒரு மறக்கமுடியாத நினைவுகளாக மாறி விடுகிறது. ம்.ம் கொடுத்து வைத்தவர்கள் நேஷனல் சர்க்கஸ் கலைஞர்கள்.......... Thanks...
-
MGR Filmography Film 52 (1962) Poster
1961ஆம் ஆண்டின் முதல் எம்ஜியார் படம் ஒரு ராஜா ராணி காஸ்ட்யூம் படமாக (அரசிளங்குமரி) வெளியாகி சராசரி ஆனது. பின்னர் ஒரு சமூகப்படம் (திருடாதே) அவரை மீண்டும் வசூல் சக்ரவர்த்தியாக்கியது.
1962ஆம் ஆண்டு . அந்த ஆண்டின் முதல் படமாக வெளியானது இந்திய வரலாற்றில் ஒரு பாகமாக அமைந்து விட்ட ப்ரிதிவிராஜ் சம்யுக்தாவின் காதல் கதை.
கண்ணதாசன் திரைக்கதை வசனம் பாடல்கள் அனைத்தையும் மேற்கொள்ள, எம்ஜியாரின் ஃபேவரிட்டான மாமா (கேவி மகாதேவன்) இசையமைக்க டி.யோகானந்த் இயக்கிய இப்படம் 1962ஆம் ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியானது. மொத்தம் எட்டு பாடல்கள்; எட்டும் ஹிட் ஆகின. ஆனால் படம் ஹிட் ஆகவில்லை. வணிக ரீதியாக ஆவரேஜ் எம்ஜியார் படங்கள் என்ற லிஸ்ட்டில் இது சேர்ந்துவிட்டது.
ஓரளவு கச்சிதமான திரைக்கதை, எம்ஜியாருக்கான ஆக்ஷன் சீக்வன்ஸ்கள், பத்மினிக்குத் தேவையான அளவு செண்டிமெண்ட் சீன்கள் எல்லாம் இருந்தும் இந்தப் படம் வெற்றி பெறாததற்கு, காஸ்ட்யூம் டிராமாக்களுக்கு மக்கள் மத்தியில் மவுசு குறைந்து விட்டது பிரதான காரணமாக இருக்கலாம் இல்லையேல் எம்.ஜி.ஆர் மரணிக்கும் முடிவு கொண்ட படம் திரும்ப திரும்ப ரசிகர்களால் ரசிக்கபடாது என்ற காரணமாகவும் இருக்கலாம்
எம்ஜிஆர் இறப்பதாக நடித்த எந்த படமாவது வெற்றி பெற்றிருக்கிறதா?
சின்ன அண்ணாமலை எழுதிய நம்ப மாட்டீர்கள் என்ற புத்தகத்தில் அவர் ஒரு அனுபவத்தை சொல்கிறார். ஒரு பயணத்தின் போது இரவு வேளையில் ஒரு டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தாராம். நைட் ஷோ முடிந்து மக்கள் திரும்பிக் கொண்டிருந்தார்களாம். என்ன படம் என்று இவர் கேட்டிருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றும் சிவாஜியின் நடிப்பை புகழ்ந்தும் பலர் பேசினார்களாம், ஆனால் ஒருவர் இதெல்லாம் ஒரு படமா என்ற தோரணையில் பேசி இருக்கிறார். இவர் ஏன் உங்களுக்கு சிவாஜியின் நடிப்பு பிடிக்கவில்லையா என்று கேட்டிருக்கிறார். அவர் சொன்னாராம், “நடிப்பெல்லாம் கிடக்குதுங்க, இதுவே எம்ஜிஆரா இருந்தா வெள்ளைக்காரங்களை எல்லாம் ஒரு போடு போட்டுட்டு குதிரை மேல ஏறி வந்து முடி சூட்டிக்கிட்டிருப்பாரு!” என்றாராம். தமிழனான கட்டபொம்மனே எம்ஜிஆர் நடித்தால் தோற்கமாட்டார் என்றால் அவ்வளவாக தெரியாத ப்ரித்விராஜின் கதி என்ன? இது உண்மைக் கதை என்றே நிறைய பேருக்கு தெரிந்திருக்காது.
ஓ வெண்ணிலா, நிலவென்ன பேசும் போன்ற டூயட் கானங்களுக்காகவும், ஜமுனா ரராணியின் சித்திரத்தில் பெண்ணெழுதி எனும் சோக கீதத்திற்காகவுமே நினைவில் கொள்ளத் தக்கதாகி விட்டது இப்படம்.......... Thanks...
-
ஒரு திரைப்படத்தின் தாக்கம் சமுதாயத்திலும் எதிரொலிக்குமா என்றால், ஆம் எதிரொலிக்கும். சமூக அவலங்களைப் பேசும் சினிமா அரசியலையும் பேசித்தானே ஆக வேண்டும். ஆளும் ஆட்சியாளர்களை இந்த சினிமா தான் அடையாளம் காட்டியது.
அது அறுபதுகளின் பிற்பகுதி. பரபரப்பான தேர்தல் நேரம். வீதிக்கு வீதி மேடை போட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டிருந்தனர். பெருந்தலைவர் மத்தியப் பணிக்காக டெல்லியில் இருந்தார். இங்கே ஆண்டுகொண்டிருந்தது பக்தவத்சலம். அவரால் நிர்வாகத்தை சரியாக கவனிக்க முடியவில்லை. அரிசிப் பஞ்சம் தலைவிரித்தாட அதையே பிரச்சாரமாக்கி படியரிசித் திட்டத்தை முன் மொழிந்தார் அண்ணா. காங்கிரஸை கழகம் வறுத்தெடுத்துக்கொண்டிருந்த நேரம்.
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே இருந்த ரயில்வே கேட் அன்று ஃபேமஸ். மூடினால் அவ்வளவு சீக்கிரம் திறக்காது. மக்கள் திலகத்தின் கார் அதில் சிக்கிக்கொண்டது. மக்கள் கூட எதிரே ஒரு கருப்பு அம்பாஸிடர். சபாபதி அது பெரியவர் காரா பாரு என உதவியாளரிடம் கேட்க ஆமங்க அவரு கார் தான். உள்ளே இருக்காரு என்றார். சட்டென கதவைத் திறந்து காரை நோக்கி நடந்தார் மக்கள் திலகம்.
காரின் உள்ளே அமர்ந்திருந்தது பெருந்தலைவர். மேடைக்கு மேடை அவரை திட்டித் தீர்த்த கழகத்தவர்களில் அவரை விமர்சிக்காத ஒரே பிரபலம் மக்கள் திலகம்தான். எம்.ஜி.ஆரைக் கண்ட பெரியவர் கதவைத் திறந்து வெளியே வரமுயல வேண்டாம் வேண்டாம் உள்ளேயே உட்காருங்க என சொல்லிக்கொண்டே குனிந்து அவரிடம் உரையாடத் தொடங்கினார். டெல்லி வாசம் பற்றி விபரம் கேட்டுவிட்டு ஏன் தனியா வந்திருக்கீங்க செக்யூரிட்டி கூட இல்லாம எனக் கேட்டதும் எனக்கெதுக்கு செக்யூரிட்டி. என் மக்களாள எனக்கெப்படி ஆபத்து வரும்.?. ஈசியாகச் சொன்னார் தலைவர். அதற்குள் கேட் திறக்க அவரிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டு காருக்குத் திரும்பினார் மக்கள் திலகம்.
காரில் அமர்ந்திருந்த ரவீந்தரைப் பார்த்து உரையாடலைச் சொல்லி விட்டு நம்ம அடுத்த படத்துக்கு கதைக்கரு கெடச்சிருச்சு ரவீந்தர். ஒரு நாட்டுக்கு உண்மையான அரசன் யாரு தெரியுமா?. கத்தியில்லாம பாதுகாப்பு இல்லாம சவால் இல்லாம யாரு மக்கள் மத்திய எளிதா வர்ராங்களோ அவங்க தான் உண்மையான அரசன். நம்ம பிரச்சாரத்துக்கு ஏத்த மாதிரி இதை வெச்சு ஒரு கதை பண்ணு. நம்ம ஏ.கே.வேலன் கதை ஒண்ணு படமாகாம நின்னு போச்சில்ல.?. எது பவானியா?. அந்தக் கதையும் கொஞ்சம் மிக்ஸ் பண்ணிக்கலாம். அண்ணன் ஃபேமிலிக்காக இந்தப் படத்தை எடுக்கலாம் அவரே டைரக்ட் பண்ணட்டும் என்றார். அப்படிப் பிறந்த படம் தான் அரச கட்டளை. பொம்மை இதழுக்காக ரவீந்தர் அளித்த தொடரில் இந்தச் செய்தி இருந்தது.
சக்கரபாணியின் மகனான ராமமூர்த்தி மகளான சத்தியபாமா பெயரில் உருவான பட நிறுவனம் தான் சத்திய ராஜா பிக்சர்ஸ். பெரியவரே படத்தை இயக்க முழுக்க முழுக்க கதை திரைக்கதை வசனங்களை மேற்கொண்டது ரவீந்தர். வழக்கம்போல் எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா என டைட்டில் கார்டு வந்தது கூடப் பரவாயில்லை. சம்பந்தமே இல்லாமல் இலாகாவிற்குக் கீழே மூன்று பெயர்கள் இருந்தது. ஆர்.எம்.வீரப்பன் , வித்வான் லட்சுமணன்,மற்றும் எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் பங்குதாரர் ஏ.டி.கே.சாமி. மூவருமே நிர்வாகத்தில் இருந்தவர்கள். வரவு செலவு கணக்குகளை கவனித்துக்கொண்டவர்கள் கதை திரைக்கதையில் உள்ளே நுழைந்தது எங்குமே நடக்காத அதிசயம்.
படத்தை விரைவாக முடிக்க இரவு பகல் பாராது விழித்திருந்து வசனம் எழுதிய ரவீந்தர் வசனங்கள் தான் படத்தில் வந்தவை. எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் இந்தப் பாவிகளின் நாக்கை துண்டு துண்டாக வெட்டுவேன். கலைச் செல்வி பொங்க அதற்கு மக்கள் திலகம் மறு மொழியாக அதனால் தான் அதிகாரம் உன் கையில் இல்லை என்பார். மதனா!. கல்லடியும் சொல்லடியும் கடமைவாதிகள் சந்திக்க வேண்டிய முதல் படி. அரசியல் அகராதிப்படி. அப்படியா!.. இன்னும் எத்தனை படிகளோ!.. அதற்குள் உருப்படியாக ஓடிவிடுவோம் வாருங்கள்.
ஓடு ஓடு என்று யார் சொன்னாலும் நாடு நாடு என்று தான் முழங்கிக்கொண்டிருப்பேன் என் லட்சியம் நிறைவேறும் வரை. ஆட்சியில் ஆபத்து நிறைந்திருந்தாலும் எவ்வளவு சுகமாக இருக்கிறது பார்த்தீர்களா!.. அந்த சுகத்திலே தான் பதவி வெறியே பிறக்கிறது மதனா. இதில் மயங்கித் தான் ஆட்சியிலே இருப்பவர்கள் மக்களை மறந்தார்கள். துன்பத்தை விதைத்தார்கள் துயரத்தை வளர்த்தார்கள். அட்டகாசமான வசனங்கள் அத்தனையும் ரவீந்தர் கை வண்ணம். உன் உயிரைப் பறித்துவிடுவேன் என நம்பியார் எச்சரிக்க செடியில் பூத்த மலரல்ல பெரியவரே என் உயிர் நீங்கள் நினைத்த உடன் கை நீட்டிப் பறிப்பதற்கு என்பார் மக்கள் திலகம்.
கழகத்தவர் பலர் திரைத் துறையில் கோலோச்சக் காரணம் அவர்களது எழுத்து வலிமை. அறிஞர் அண்ணாவும் கலைஞரும் மாறனும் பல படங்களில் தங்களை நிரூபித்தவர்கள். அவர்கள் பெயரும் பிரபலமானது. அதைப் பின்பற்றித்தான் சொர்ணமும் உள்ளே நுழைந்தார். ஆனால் அவர் எழுதிய அநேக எம்.ஜி.ஆர்.பட வசனங்களை கூடவே இருந்து எழுதியது ரவீந்தர். நாடோடி மன்னனில் டைட்டில் கார்டில் கவியரசோடு இணைந்து வந்ததோடு சரி.அதற்குப் பிறகு எங்குமே அவரது பெயரைக் காண முடியவில்லை. அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி. சொன்னது ரவீந்தர்.அதை அவரே ஒரு கட்டுரையில் சொன்னார்.யாருமே மறுக்கவில்லை.
மக்கள் திலகத்தைப் பொறுத்தவரை பாடல் வரிகளை உற்றுப் பார்ப்பார். காரணம் ரெக்கார்டிங் போனால் மாற்றுவது கடினம்.வசனங்கள் ஆன் த ஸ்பாட்டில் மாற்றிப் பேசலாம். அதனால் அதிகம் அலட்டிக்கொள்ளமாட்டார். அவருக்கு ஆழமான தமிழறிவு உண்டு. கொஞ்சம் கோடிட்டுக் காட்டுவதோடு சரி. அவரது டேஸ்டிற்கு வசனம் எழுத அவர் கூட இருப்பவர்களுக்குத் தெரியும். பாய்ஸ் கம்பெனி காலம் தொட்டே அவர் தமிழோடு விளையாடியவர். தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல்கள் அப்போதே அவருக்கு மனப்பாடம். ஆன் த ஸ்பாட்டில் குறைகளைக் கண்டுபிடித்துவிடுவார்.
இதே அரச கட்டளைக்காக வாலியிடம் அவர் பாடல் கேட்க பல்லவியைப் பார்த்த மாத்திரத்திலேயே கோபமானார். வாலி எழுதியிருந்த பல்லவி தொடங்கும்போதே அந்த ஆண்டவன் கட்டளை முன்பு உன் அரசகட்டளை என்னாகும். நடிகர் திலகத்தின் ஆண்டவன் கட்டளை ஓடிக்கொண்டிருக்கிறது . அரச கட்டளை ரிலீஸாகப் போகிறது. பல்லவியே படத்தை டேமேஜாக்கிவிடும் என்பதை சட்டென புரிந்து வாலியிடம் சொல்ல ஏகப்பட்ட பாடல்கள் எழுதிய வாலிக்கே அப்போது தான் அந்த விபரீதம் புரிந்தது. நீங்க வேற சிச்சுவேஷனுக்கு எழுதுங்க என இன்னொரு பாடல் கொடுக்க பயந்து போன வாலி பாட்டாலே அவரைக் குளிர்வித்தார். அந்தப் பாடல் தான் என்னைப் பாட வைத்தவன் ஒருவன் என் பாட்டுக்கு அவன் தான் தலைவன். அவர் மிஸ் பண்ணிய சிச்சுவேஷனுக்கு வந்த பாடல் தான் ஆடிவா ஆடிவா ஆடிவா.
எல்லாப் பாடல்களுமே ஹிட்டாகக் காரணம் திரையிசைத் திலகம். அவசர அவசரமாக தேர்தலுக்காக எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் உணர்ச்சிப்பூர்வமான வரிகளுக்கு அதே உணர்வோடு அவர் மெட்டமைத்திருந்தார். ஆடிவா பாடலின் ஊடே ஒரு சண்டைக் காட்சியும் இருக்கும். அதற்கேற்ப இடையிசை தந்திருப்பார். தடை மீறிப் போராட சதிராடி வா செந் தமிழே நீ பகை வென்று முடி சூட வா என ஐயா அழைத்தது அறிஞர் அண்ணாவை. மயிலாட வான் கோழி தடையா?. குயில் பாட கோட்டான்கள் தடையா?. முயற் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ என ஏகப்பட்ட கேள்விக் கணைக்கள் அரசை நோக்கி இந்தப் பாடலில் அவர் வைத்தார்.
வேட்டையாடு விளையாடு விருப்பம் போல உறவாடு ஒரு அருமையான பாடல். குறும்பையாடு முந்தாதே குள்ள நரியை நம்மாதே என ஒரு பாடலில் அட்வைஸ்.பண் பாடும் பறவையே என்ன தூக்கம் என கண்மணிகளை எழுப்பி விட்டது இன்னொரு பாடல்.நீ தாயற்ற கன்று போல ஆகலாமா?. ஆண்டாண்டு காலம் நாமாண்ட நாடு.தூங்கித் தூங்கி சோர்ந்துவிட்டதிந்த நாடு. பகுத்தறிந்து வாழ்பவரை சரித்திரம் பேசும் அவர் பரம்பரையின் கால்கள் மீது மலர்களை வீசும் பயந்து வாழும் அடிமைகளை பூனையும் ஏசும் அவர் பால் குடித்த தாயைக் கூட பேயெனப் பேசும். ஆஹா ஆஹா என புகழ்ந்தார் அதே வாலியை மக்கள் திலகம்.
புத்தம் புதிய புத்தகமே உனை புரட்டிப் பார்க்கும் புலவன் நான். அந்தப் புலவனே வியந்த பாடல் இதே வாலியின் கற்பனைச் சிறகு விரிந்த பாடல். அஞ்சு விரல் பட்டால் என்ன அஞ்சுகத்தை தொட்டால் என்ன?. தொட்ட சுகம் ஒன்றா என்ன துள்ளும் உள்ளம் பந்தா என்ன?. செவ்விதழை கண்டால் என்ன தேனெடுத்து உண்டால் என்ன?. கொத்து மலர்ச் செண்டா என்ன கொஞ்சும் மன்னன் வண்டா என்ன?. மக்கள் திலகத்தை அசரடிப்பதில் வாலி என்றுமே சளைத்ததில்லை. குறுகிய நாட்களில் எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட பேர்கள் உழைத்தார்கள். அதன் பலனை அனுபவிக்கும் முன்பே அங்கொரு குண்டு வெடிக்க இந்தப் படம் தப்பிக்க ரவீந்தர் உழைத்த காவல்காரன் மாட்டிக்கொண்டது ஒரு ஆன்ட்டி க்ளைமாக்ஸ்.......... Thanks.........
-
சார் அட்டாகசமான அலசல். எம்.ஜி.ஆர் சுடப் பட்டதால் இந்தப் படம் பாதியில் நின்று விட்டது. பிறகு அவர் உயிர் பிழைத்து, குண்டடி தாக்கத்தில் இருந்து மீண்டு வந்தபின் வெளி வந்த முதல் படம். அதனால்தான் இந்தப் படத்தில், "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை,ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை" எங்கிற விருத்தமே வந்தது என்று சொல்லுவார்கள். இதில் பல பேர் கவனிக்காத ஒரு விசேஷம் இருக்கிறது. காலத்தை வென்றவன் நீ, காவியமானவன் நீ எங்கிற பாடலில் கடைசி வரிக்குப் பின் இசை மட்டும் வரும். அந்த சமயத்தில் ஜோதிலக்ஷ்மி ஆடிக் கொண்டே தன் இரு கால்களையும் கைகளை விரிப்பது போல விரித்து அமர்வார். இது சாதாரணமாக யாராலும் முடியாது. இந்தப் பாடலைப்போட்டு இப்பொழுது பாருங்கள். நான் சொல்வது புரிய வரும்....... Thanks...
-
தலைவரைப் பற்றி திரு. நாகேஷ் அவர்கள் !
எம்.ஜி.ஆரின் தாராளமான உதவும் மனப்பான்மையால், நானும் கூட பயனடைந்திருக்கிறேன். சிவாஜி நடிக்க அவரது ஆடிட்டர்கள் (என்ற நினைவு) 'சித்ரா பௌர்ணமி' என்று ஒரு படம் எடுத்தார்கள். படத்தின் ஷூட்டிங்கை காஷ்மீரில் வைத்துக் கொண்டார்கள். படத்தில் ஒரு ஸ்பெஷல் குதிரை வரும். அதைகூட காஷ்மீருக்கு அழைத்துக்கொண்டு வந்தார்கள்.
காஷ்மீருக்கு ஷூட்டிங்குக்குப் போய் விட்டார்களே ஒழிய, பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. சாதாரண ஹோட்டலில்தான் எங்களையெல்லாம் தங்க வைத்தார்கள். கிடைத்ததைச் சாப்பிட்டுக்கொண்டு, அட்ஜஸ்ட் செய்துகொண்டு, ஒத்துழைப்புத் தரும்படி கேட்டுக்கொண்டார்கள் படப் பிடிப்பு வேகமாக நடைபெற முடியாதபடிக்கு இயற்கைகூட சதி செய்தது.
எந்த இடம் என்று முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டு, படப்பிடிப்புக் குழுவினர் போய் இறங்குவார்கள். ஆனால், அங்கே பனி பொழிந்து, போதிய வெளிச்சம் இல்லாமல் படப்பிடிப்புக்குத் தடங்கல் ஏற்படும். இப்படியே நாள்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
அந்தச் சமயத்தில், வேறு ஒரு தமிழ்ப் படத்தின் ஷூட்டிங்கும் காஷ்மீரில் நடந்தது. படத்தின் ஹீரோ எம்.ஜி.ஆர். எங்கள் படத்தின் நிலைமைக்கு நேர் எதிரான சூழ்நிலை அங்கே நிலவியது. எம்.ஜி.ஆர் படத்தின் ஷூட்டிங் லொகேஷன்களில் எந்த பிரச்சனையும் கிடையாது. மடமடவென்று ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. யூனிட்டில் அனைவருக்கும் வாய்க்கு ருசியாக சாப்பாடு, குளிருக்குப் போட்டுக்கொள்ள, எம்.ஜி.ஆர் தமது சொந்தச் செலவில் எல்லோருக்கும் வாங்கிக் கொடுத்த ஸ்வெட்டர், ஷூ என்று ஒரே அமர்க்களம்தான்!
இந்தத் தகவல்களை எல்லாம் கேள்விப்பட்ட எங்கள் யூனிட் ஆட்கள் விட்ட ஏக்கப் பெருமூச்சில், காஷ்மீர் பனியே கரைந்திருக்கும்.
ஒருநாள் காலை, நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஒரு பெரிய கார் வந்தது. அதிலிருந்து இறங்கியவர் யார் தெரியுமா? சாட்சாத் எம்.ஜி.ஆரே தான். ரிசப்ஷனில் விசாரித்துக்கொண்டு, நேரே என் ரூமுக்கே வந்து விட்டார். எனக்கு இனிய அதிர்ச்சி!
எம்.ஜி.ஆரே 'இங்க நிலைமை கொஞ்சம் சரியில்லைன்னு கேள்விப்பட்டேன். உங்க வேலை முடிந்தவுடன், உடனடியாக ஊருக்குப் புறப்பட்டு விடுங்க! செலவுக்கு இதை வைத்துக் கொள்ளுங்க!' என்று பையிலிருந்து சில ருபாய் நோட்டுக்கட்டுகளை எடுத்து என் கையில் திணித்தார்.
எம்.ஜி.ஆரின் திடீர் வருகையால் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியிலிருந்தே மீள முடியாமல் இருந்த எனக்கு அவரது இந்தச் செயல், பேரதிர்ச்சியையும், அதே நேரம் பெரும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
எம்.ஜி.ஆர் விடைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டுப் போன பிறகு, அவர் என்னுடைய கைகளில் திணித்த ருபாய் நோட்டுக்களைப் பார்த்தேன். நூறு ரூபாய்க் கட்டுக்கள் மூன்று இருந்தன. அடேயப்பா! முப்பதாயிரம் ருபாய்!
நான், எம்.ஜி.ஆர் சம்பந்தப்படாத ஒரு படத்துக்காக, காஷ்மீருக்குப் போயிருக்கிறேன். என்னைத் தேடி வந்து எனக்குப் பணம் கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்கிற அவசியம் என்ன அவருக்கு! ஆனாலும், எனக்கு உதவி செய்தார் என்றால், அதற்க்கு அவரது தங்க மனதும் என் மீது அவர்கொண்டிருந்த அன்பும் தானே காரணம்?........ Thanks.........
-
தமிழ்த் திரைப்பட உலகில் வசூலில் சாதனை படைத்த எங்க வீட்டுப் பிள்ளை 1965-ம் ஆண்டு ஜனவரி 14-ல் வெளியானது.
எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். சரோஜா தேவி, ரத்னா, நம்பியார், எஸ்.வி. ரங்காராவ், பண்டரிபாய், தங்கவேலு, நாகேஷ் நடித்தது.
குதிரை சவுக்கால் அடி வாங்கி நொந்துபோகும் சாது எம்.ஜி.யார் வீட்டைவிட்டு ஓட, இன்னொரு எம்.ஜி.ஆர். தற்செயலாக அதே வீட்டுக்கு வந்தவுடன் கதை சூடு பிடிக்கிறது.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் திரைப்படத்தின் முழுக்கதையையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ராமாயணம், மகாபாரதம், பராசக்தி ஆகியவற்றுக்குப் பிறகு அதிகம் பாராயணம் செய்யப்பட்ட கதை இதுவாகத்தான் இருக்கும். ....
அப்பாவி எம்.ஜி.ஆரை அடிக்கும்போது நமக்கு ஏற்படும் வருத்தம் எல்லாம், துணிச்சல்கார எம்.ஜி.ஆர். வந்து நம்பியாரை அடிக்கும்போது மகிழ்ச்சியாக மாறிவிடுகிறது.
இந்த ஒரு காட்சியே இந்தத் திரைப்படத்தின் மிகப் பெரிய ஈர்ப்பு.
தீமையை நன்மை வெல்லும் இந்த சவுக்கடியோபதேசம் பிற்காலத் திரைப்படங்களில் பல வழிகளில் காட்டப்பட்டாலும் ‘அசல் ஒரிஜினல் நாகப்பட்டினம் மிட்டாய்க் கடை’ இனிப்பாக நாவில் புரளுவது இந்தக் காட்சிதான்.
இன்னொரு 50 ஆண்டுகளுக்கும் இந்தத் திரைப்படம்தான் வழிகாட்டிப் படமாக இருக்கும்.
தம்பி எம்.ஜி.ஆர். (இளங்கோ) ஏகப்பட்ட பலகாரங்களை ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு நைசாக நழுவிவிட,
அப்பாவி எம்.ஜி.ஆர். (ராமு) அதே மேஜையில் வந்து உட்கார்ந்து, ‘ரெண்டு இட்டிலி’ என்று கேட்டதும் அந்த சர்வர், ‘மறுபடியும் முதல்லேருந்தா?’ என்று வாயைப் பிளக்கிறார்.
நாகேஷ் இப் படத்தில் கோவிந்தன் என்ற பெயருள்ள கதாபாத்திரத்தில் வந்தாலும் குளறுவாயன் என்றே எம்.ஜி.ஆரால் அழைக்கப்படுகிறார். அவர் குளறுவதும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. ‘நான் ஆணையிட்டால்’ பாடல் காட்சியில் சுருளிராஜனும் ஒரு ஓரத்தில் தெரிகிறார் பாருங்கள்.
ஒரு படத்தில் ஆயிரம் இருந்தாலும் சரியான திரைக்கதை இல்லாவிட்டால் வேலைக்காகாது. எம்.ஜி.ஆரின் அனாயாசமான நடிப்பு, அவரது நட்சத்திர வசீகரம், கதாநாயகிகள், பாடல்கள் என எல்லாம் சரியாக அமைந்திருந்த இந்தப் படத்திற்குத் தெளிவான, திருப்பங்கள் நிறைந்த திரைக்கதைதான் மகுடம். ......!
நாடோடி மன்னன், மாட்டுக்கார வேலன், நீரும் நெருப்பும், குடியிருந்த கோயில், நாளை நமதே ஆகிய அனைத்தும் வெற்றிப் படங்களாக இருந்தாலும் இரட்டை வேடக் கதாநாயகன் படங்களுக்கான டெம்பிளேட் படம் இதுதான்.
இந்தப் படம் தந்த வெற்றியை மறக்காமல் ‘புதிய பூமி’ திரைப்படத்தின் ஒரு பாடலே, ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’ என்று ஆரம்பமாகிறது.
இதெல்லாம் இருக்கட்டும். காவியத் தன்மை பெற்றுவிட்ட அந்தப் பாடலைப் பற்றிச் சொல்லாமல் இந்தக் கட்டுரை எப்படி முடியும்?
ஒரு வீட்டில் நடக்கும் அராஜகத்தை எதிர்க்கும் இளங்கோ என்னும் பாத்திரம் கொடுமைக்கார மாமாவின் கையிலிருக்கும் சாட்டையைப் பிடுங்கி அவரையே அடிக்கும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்வதில் வியப்பில்லை. ஆனால், அந்த வீட்டில் இருப்பவர்களைக் காப்பாற்றும் காட்சியில் வரும் பாடலில் ஏழை எளியவர்கள் எங்கே வந்தார்கள் என்று யாரும் கேட்கவில்லை.
காரணம், சவுக்கு கையில் வந்ததும் இளங்கோ எம்.ஜி.ஆராகிவிடுகிறார்.
பாத்திரங்கள் தமிழக மக்களாகிவிடுகிறார்கள். “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இந்த ஏழைகள் வேதனைப்பட மாட்டார்” என்று எம்.ஜி.ஆர். சொல்லும்போது திரையரங்கம் புல்லரிக்கிறது.
எம்.ஜி.ஆரை அரியணையில் ஏற்றியதில் இந்தப் பாடலுக்கும் ஒரு பங்கிருக்கிறது என்பது மறுக்க முடியாதது. இந்தப் படத்தை மறக்க முடியாத படமாக ஆக்கும் காரணிகளில் ஒன்றாகவும் இது அமைந்துவிட்டது.
- இந்து டாக்கீஸ்....... Thanks...
-
"மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்", 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. ஆர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்..
1977 தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர், தமிழக முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் கடைசியாக நடித்த படம் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்." எம்.ஜி.ஆர், முதல் அமைச்சராகி 6 மாதங்களுக்குப் பின், 1978 பொங்கல் நாளன்று இத்திரைப்படம் வெளிவந்தது.
Audio time: 2:18:21
இப்படத்தின் தொடர்ச்சியாக மாய பின்பம் குழுமம் ''புரட்சித்தலைவன்''' என்ற முப்பரிமாணப் படம் ஒன்றை அமைப்பதாக இருந்தது........... Thanks...
-
இது அரசியல் பதிவல்ல... ஆன்மிக பதிவு...
1977ல்
ஈரோட்டில் ராமர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தார் கலைஞர்.
இந்த சம்பவம் நடந்து ஓரிரு வாரங்களில் கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டது.
அதன் பின்பு நடந்த தேர்தலில் ஒருவர் அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஆனார்.
அவர் பெயர் M.G.இராமச்சந்திரன் என்கின்ற M.G.R.நம் பொன்மனச்செம்மல்.
எந்த ராமரை இழிவு படுத்தினாரோ அதே ராமன் பெயர் கொண்ட நம் மக்கள் திலகத்திடம் தோற்றார் கலைஞர்.
எம்.ஜி.ஆர்.தொடர்ந்து 14 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
அதாவது கலைஞரை 14 ஆண்டுகள் அரசியலில் வனவாசத்திற்கு அனுப்பினார் ஸ்ரீ ராமச்சந்திர ப்ரபு.
யாராக இருந்தாலும் கர்மா தப்பாது......... Thanks...
.
.
-
மகா சக்தியுடன் இன்றும் வாழும் தெய்வம்...10.4.2020 அன்று கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் சார்பாக எங்களை காப்பாற்ற யாரும் இல்லையா என்றதலைப்பில் இலங்கையில் பிறந்து தமிழகத்தை ஆட்(சி) கொண்டு கேரளாவில் திருமணம் புரிந்த மும்மூர்த்திகளின் அவதாரமாகிய மூன்றெழுத்து தெய்வத்திடம் ஒரு சில சிறிய கோரிக்கை வைத்தோம். மறுநாளே திரு.பெரியாண்டவர் அவர்கள் 15 பைகளில் மளிகை பொருட்களும் அதற்கு அடுத்தடுத்த நாளில் கலைவேந்தன் பக்தர்கள் பாஸ்கர் ரூ 1500.. லோகநாதன் ரூ 1000... மற்றும் 2 மூட்டை அரிசி ஆட்டோ கார் லைசென்ஸ் வினியோக செலவு. ஷிவபெருமாள் ரூ 1000 மற்றும் வினியோக செலவு சாந்தகுமார் ரூ 1000 ஆயிரம்விளக்கு ரகுகுணா ரூ 1000 யும் சைதை கோபாலகிருஷ்ணன் 20 பை மளிகை பொருட்களும் அனைத்துலக எம்ஜிஆர் பொது நல சங்கம் சார்பாக *ஹயாத் அண்ணன் மூலமாக. ரூ 3000. அண்ணன் முருகு பத்மநாபன் பிரான்ஸிலிருந்து MTCN வழியாக ரூ 5005ம் சத்தியமங்கலம் வாத்தியார் சாமுவேல் ரூ 1500 இதயகனி திரு விஜயன் 1 மூட்டை அரிசி பூக்கடை சக்தி 1 மூட்டை அரிசியும் வழங்கி உதவி இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டு இதுவரை 45 பக்தர்களுக்கு மளிகை பொருட்களும் 6 நபர்களுக்கு சேர்த்து 5000 ரூபாய் வங்கி கணக்கிலும் நேரிலும் வழங்கி மொத்தம் 51 நபர்கள் சிறிய பலன் பெற்றார்கள் என்றால் தலைவரின் சக்தி இன்றும் உள்ளது நிஜம் தானே......என்பதை நிருபிக்கவே இந்த பதிவு.... அடுத்த வாரம் மீதி உள்ள பணத்தில் ஒருசிலருக்கு அரிசி காய்கறி வழங்கி விடலாம் என்று மயிலை திரு லோகநாதன் ஆலோசனை வழங்கி உள்ளார். இனி பெரிய மனது படைத்து யாரேனும் உதவினால் அதையும் பெற்று அமைப்பின் பொறுபாளர்கள் ஆலோசனை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை தொடரும் என்பதை இதன் மூலம் தெரிய படுத்தப்படுகிறது.இவன் ஷிவபெருமாள்....... Thanks...
-
-
என் பார்முலாவே இல்லையேனு எம்ஜிஆர் சொன்னார்’’ - ஏவிஎம்.சரவணன் ’அன்பே வா’ ஃப்ளாஷ்பேக்...
அன்பே வா’ படத்து கதையைக் கேட்டுட்டு, ‘என் பார்முலாவே இல்லையேன்னு எம்ஜிஆர் சொன்னார். ஏவிஎம் எந்த ஹீரோவுக்காகவும் கதை பண்ணினதே இல்லை. எம்ஜிஆர் நடிச்ச ‘அன்பே வா’ படம்தான், ஹீரோவுக்காக ஏவிஎம் கதை பண்ணின முதல் படம்’’ என்று ஏவிஎம்.சரவணன் தெரிவித்தார்.
ஏவிஎம்.சரவணன் தனியார் இணையதள சேனலுக்கு பேட்டியளித்தார்.
அதில் அவர் கூறியதாவது:
அப்பா (ஏவி.மெய்யப்பச் செட்டியார்) எப்போதுமே முதல்ல கதையைத்தான் ரெடி பண்ணுவார். கதைக்கான டிஸ்கஷன் போயிக்கிட்டே இருக்கும். கதைல எந்தக் குழப்பமும் இல்ல, எல்லாருக்கும் திருப்தியா வந்திருக்குன்னு முடிவான பிறகுதான் ‘சரி, யார்யாரையெல்லாம் நடிக்கவைக்கலாம்’னு பேச்சு வரும். அப்படித்தான் ரொம்ப வருஷமாவே படம் பண்ணிட்டிருந்தோம்.
ஒருநாள் அப்பா கூப்பிட்டார். ‘என்னப்பா, டிஸ்டிரிபியூட்டர்கள் எல்லாரும் ஏவிஎம் இன்னும் எம்ஜிஆரை வைச்சுப் படமே பண்ணலியேனு கேக்கறாங்க’ன்னு சொன்னார். ‘எங்களுக்கும் அந்த எண்ணம்தான். ஆனா உங்ககிட்ட சொல்றதுக்கு தயக்கமா இருந்துச்சு. டைரக்டர் திருலோகசந்தர் (ஏ.சி.திருலோகசந்தர்) ஒரு கதைப் பண்ணிவைச்சிருக்கார். கேட்டுட்டுச் சொல்லுங்கப்பா’ன்னு சொன்னேன்.
இதுக்கு நடுவுல, நடிகர் அசோகன், எப்பப் பாத்தாலும் ‘எம்ஜிஆரை வைச்சு ஒரு படம் பண்ணுங்கன்னு சொல்லிக்கிட்டே இருந்தார். அதேபோல எம்ஜிஆர்கிட்ட, ‘ஏவிஎம்க்கு ஒரு படம் பண்ணுங்களேன்’ன்னும் சொல்லிக்கிட்டே இருந்தார் அசோகன்.
அப்பா கதையைக் கேட்டாரு. ‘சரி, சின்னவர்கிட்ட (எம்ஜிஆர்) கதையைச் சொல்லுங்க’ன்னாரு அப்பா. நான், திருலோகசந்தர், ஆரூர்தாஸ் எல்லாரும் போய், கதையைச் சொன்னோம். முழுக்கதையையும் கேட்ட எம்ஜிஆர், ’இது என் படம் இல்ல. என் பார்முலா எதுவுமே இந்தப் படத்துல இல்ல. அம்மா கேரக்டர் இல்ல. தங்கச்சி இல்ல. சண்டைக்காட்சிகள் கிடையாது. இது ஏ.சி.திருலோகசந்தர் படம்’னு சொன்னார். ஆனா நடிக்கிறேன்னு ஒத்துக்கிட்டார்.
ஆனா, இதுவரைக்கும் எந்தவொரு நடிகருக்காகவும் ஏவிஎம் கதை பண்ணினது இல்ல. கதை பண்ணுவோம்; அதுக்கு யாரு பொருத்தமோ, அவரை ஹீரோவாப் போடுவோம். இத்தனைக்கும் ‘அன்பே வா’ படத்து கதையை எம்ஜிஆருக்காகத்தான் யோசிச்சோம். ‘ஒருவேளை எம்ஜிஆருக்கு கதை பிடிக்கலேன்னா, ஜெய்சங்கரையும் ஜெயலலிதாவையும் வைச்சு எடுக்கறதா முடிவு பண்ணிருந்தோம். ஆனா, எம்ஜிஆர் நடிக்க சம்மதிச்சாரு.
ஏவிஎம் தயாரிப்புலயும் சரி, எம்ஜிஆரோட கேரியர்லயும் சரி... ‘அன்பே வா’ திரைப்படம், வித்தியாசமான வெற்றிப்படம்.
இவ்வாறு ஏவிஎம்.சரவணன் தெரிவித்தார்.... Thanks...
-
100-ஐக் கடந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த எம்.ஜி.ஆர்..!
மக்கள் திலகம், புரட்சித்தலைவர் ஆகிய சிறப்புப் பெயர்களால் சினிமா உலகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களாலும் அழைக்கப்பட்டவர்.
எம்.ஜி.ஆரின் மக்கள் தொண்டு அரசியல் உணர்வால் துவங்கப்பட்ட அதிமுக., தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. காமராசரால் கொண்டு வரப்பட்டு, எம்ஜிஆரால் நிறைவேற்றப்பட்ட சத்துணவுத் திட்டத்தால் மாணவ மாணவியர் பலர் பசி இன்றி, இன்று கல்வி பயின்று வருகின்றனர்.
எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை வருடம்தோறும்... பலர் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு தெருவிலும் இன்று அவரது புகைப்படம் வைத்து, மைக் செட் கட்டி, அவர் நடித்த சினிமாப் பாடல்களைப் போட்டு, அவருடைய பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றனர்.
வறுமையில் பிறந்து, வள்ளலாக உயர்ந்து, நடிகர், அரசியல்வாதி, மூன்று முறை முதல்வர் என பல்வேறு பரிமாணங்களை எடுத்த இவரின் புகழ் என்றும் அழியாதது.
மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இந்தியாவின் தலைசிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். அவருடைய வாழ்க்கையில் நடிப்பும், அரசியலும் ஒரு முக்கியப் பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக்காலத்திலேயே, நாடகக் குழுக்கள் பலவற்றில் பிரபலமாகத் திகழ்ந்தார். அவர் காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகுந்த பற்றுடையவராக இருந்ததால், இளம்வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
எம்.ஜி.ராமச்சந்திரன், தனது சொந்தக் கட்சியாக, அ.தி.மு.கவை உருவாக்கினார். வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையை அனுபவித்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் எம்.ஜி.ஆரை மிகவும் நேசிக்க முக்கியக் காரணம், அவர் ஏழைகளின் மீது வைத்த அன்பும் பரிவும்தான். அதனால்தான் அவர் ஏழைகளின் இதய தெய்வமாக விளங்கினார். நாட்டின் மாநில முதலமைச்சர் நாற்காலியைப் பிடித்த முதல் இந்தியத் திரையுலகப் பிரமுகர் என்ற பெருமையைப் பெற்றவர் எம்.ஜி.ராமச்சந்திரன்.
இளமைப்பருவத்திலேயே, நடிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் எம்.ஜி.ஆர். அவர் சிறுவனாக இருந்த போது, தந்தை காலமானார். அதனால், அவரது தந்தையின் மறைவுக்குப் பின், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பைத்தொடர முடியாமல், பணம் சம்பாதிக்கும் நிர்பந்தம் காரணமாக நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.
100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ஆர்., தமிழ்த் திரையுலகில் முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செலுத்தினார்.
1960ல், எம்.ஜி.ஆருக்கு மத்திய அரசு ‘பத்மஸ்ரீ விருது’ அறிவித்தது. ஆனால், அரசின் மீதான பற்றற்ற நடத்தையின் காரணமாக அந்த விருதை ஏற்க மறுத்துவிட்டார். அந்த விருதில் பாரம்பரிய ஹிந்தி சொற்களுக்குப் பதிலாக தமிழில் அவை இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்........ Thanks.........
-
ஒரு முதலாளிக்கு உண்மையாக வேலைசெய்யும் தொழிலாளியை, வேலை சரியாக செய்யாத தொழிலாளி "முதலாளியிடம் காக்கா பிடிக்கிறார்" என்று கிண்டல*டிக்கிறார். அதற்கு தலைவரின் பதில்: காக்காய் என்றால் ஈனப்பிறவி அல்ல! விடியற்காலையில் எழுந்திருக்கிறது. தன் இனத்தோடு சேர்ந்து வாழுது. கிடைக்கும் இரையை பகிர்ந்து உண்ணுது. தன் இனத்தில் ஏதோ ஒரு காகம் இறந்துவிட்டால் ஒன்று சேர்ந்து ஈமக்கடன் செய்யுது! இவற்றில் ஏதாவது ஒரு நல்லகுணம் உன்னிடம் இருக்கா? என்று சோம்பேரி வேலையாளுக்கு அறிவுரை கூறும் "இதயக்கனி" ப*ட*க்காட்சியுட*ன் மதிய ஊர*ட*ங்கு வணக்கம்......( இந்த சிறிய அளவிலான காட்சியில் கூட போதனை, விளக்கங்கள். அதனால் தானே "வாத்தியார்".....)..... Thanks...
-
இலங்கைத் தமிழர் துயர் துடைக்க முதலமைச்சரின் வேண்டுகோள் :
இலங்கைத் தமிழர் நலத்திலும் நல் வாழ்விலும் தமிழ்நாட்டு மக்களின் பரிவும் பாசமும் அனைவரும் அறிந்துள்ளனர். அவர்கள் துயருற்று வாடி நிற்கும் இந்த வேளையில் நம் நெஞ்சங்கள் புண்ணாகி இருப்பதும் யாவரும் அறிந்ததே. நாடுகள், நாடுகளின் எல்லைகள், கடல்கள் போன்ற பூகோளப் பிரிவுகள் நம்மிடையே இருக்கும் அன்பையும், பாசத்தையும் பிரித்துவிட முடியாது. சர்வதேச சட்ட மரபுகள் காரணமாக அவர்கள் நாட்டுப் பிரச்சினையில் நம்மால் தலையிட இயலாது என்றாலும் அவர்கள் மானத்தோடும், கௌரவத்துடன் வாழ நாம் அனைவரும் அகமும் புறமும் வேண்டிக் கொண்டேயிருக்கின்றோம். அமைதியாக அவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முயன்று கொண்டேயிருக்கின்றோம்.
எனினும், திம்புவில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னும் இலங்கைத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுருக்கின்ற கொடுமையான சம்பவங்கள் நம் மனதை வருத்துகின்றன. இந்த சம்பவங்களை கண்டிக்கும் வகையிலும் இலங்கை தமிழ்ச் சகோதரர்கள் பால் நமது உள்ளக் கிடக்கையை காட்டும் வழியிலும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் 24.09.1985 அன்று ஒரு நாள் உண்ணா நோன்பு இருப்பது என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூடி செய்த முடிவை தமிழ்நாட்டு மக்களின் முன் வைக்க நான் விழைகிறேன்.
வீடிழந்து, நாடிழந்து அகதிகளாக வந்த வண்ணம் உள்ள இலங்கை தமிழ் குடும்பங்களின் மறுவாழ்வுக்கென இந்த உண்ணா நோன்பு நாளில் நம்மால் இயன்ற நிதி உதவியை கொடையாக செலுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியில் ஈடுபடும் நண்பர்கள் தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்ற உண்டியல்களை எடுத்துக் கொண்டு 24. 09. 1985 லிருந்து தங்களை அணுகும்போது தாராளமாக தங்கள் உதவியை நல்குமாறு வேண்டுகிறேன். மாவட்ட ஆட்சித் தலைவரின் பெயரிலான காசோலை மூலமாகவும் தங்கள் உதவியைத் தரலாம். இந்த நற்பணிக்கு தாராளமாக உதவ வேண்டி தங்களை விரும்பி அழைக்கின்றேன்.
தங்கள் அன்புள்ள,
எம்.ஜி.இராமச்சந்திரன்,
முதலமைச்சர்,
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க........ Thanks...
-
இலங்கைத் தமிழருக்காக கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தவர் நம் இதயதெய்வம் புரட்சித் தலைவர்.....இதில் நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் சிவாஜி கணேசன் வள்ளுவர் கோட்டம் அப்படி ஒவ்வொரு இடத்திலும் ஒரு தடவை நடிகர் திலகம் வள்ளுவர் கோட்டம் அப்படி ஒவ்வொரு இடத்திலும் உண்ணாவிரதம் இருந்தார்கள்..... Thanks...
-
தங்கம்.....
மனசு தங்கம்.
உடல் தங்கம்
எண்ணம் தங்கமா
உண்மையில் தலைவர் சம்பாதித்த பணத்தில், எம்.ஜி.ஆர் நினைத்திருந்தால் சென்னையை விலைக்கு வாங்கி இருக்க முடியும். தலைவருக்கு அம்மாதிரியான எண்ணம் இல்லை.
காரணம்...அவர் வள்ளல்...... Thanks...
-
அவர் கட்சி தொடங்கி அடுத்த நாளே தேர்தல் வந்திருந்தாலும் அவர் புரட்சி தலைவர் தான் ஜெயித்திருப்பார். 4. ஆண்டுகள் காத்திருக்க தேவையில்லை......Well said. Absolutely true...... Thanks...
-
கருணாநிதி பதவில் இருந்தஅதிகாரத்தை கையில் வைத்து சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டி கையெழுத்து வாங்கி.பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் அன்றே சொன்னார்கள் புரட்சி தலைவர் வென்று விடுவார் என்று.அது தானே நடந்தது.வெட்டிவீரன் துரை முத்துவும் மண்டியிட்டது தலைவரிடம் தான்.மன்னிக்கும் குணம் இருந்ததால் அவர் மக்களின் தலைவரானார்.மெடக்குறிச்சி சுப்பம்மா போன்ற முகவரி இல்லாதவரை அமைச்சராக்கினார்.மந்திரக்கோல் அங்கே மந்திரம் செய்தது...... Thanks...
-
நான் தலைவரை நேரில் பார்த்தது இல்லை ஆனால் நினைவு தெரிந்த காலம் முதல் எம்ஜிஆர் என்றால் இனம் புரியாத பாசம் இன்று வரை!.....கண்கள் பனிக்கின் றது கண் கொள்ளா தலைவரைநினைக்கும் பொழுது ....இதுபோல் ஒரு மாசற்ற மானிக்கம் இனி கிடைக்குமா .நான் இரண் மூன்று முறை ஐந்து அடி தூரத்தில் பார்த்து இருக்கிறேன் .அதுபோதும் எனக்கு...... Thanks...
-
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 15. செவ்வாய்
எம்ஜிஆர் பக்தர்களே
1984 ஆண்டு இந்தப்படம் எடுக்கப்பட்டது
துரோகி எஸ்டி சோமசுந்தரம் அண்ணா திமுக வில் இருந்து கொண்டேதனக்கென ஒரு கோஷ்டியை உருவாக்கினார்
ஜெயலலிதா கட்சியில் உள்ள மூத்த தலைவர்களை மதிப்பது கிடையாது
என்று கூறி தமிழ்நாடு முழுவதும் உள்ள பல நகரச் செயலாளர்கள் பல ஒன்றியச் செயலாளர்கள் சில மாவட்டச் செயலாளர்கள் 15 எம்எல்ஏக்களை ஆதரவு திரட்டி விட்டார்
அதில் 15 எம்எல்ஏக்களுக்கு மேல் இருந்தார்கள்
இந்த 15 எம்எல்ஏக்களுடன் தான் வெளியே சென்று கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தார்
எம்ஜிஆர் அவர்கள் பொதுக்குழுவைக் கூட்டி சோமசுந்தரத்தைகட்சியில் இருந்து நீக்கி விட்டார்
அப்பொழுது 5 எம்எல்ஏக்கள் தான் எஸ்டி சோமசுந்தர த்துடன் வெளியே சென்றார்கள்
அப்பொழுது 15 எம்எல்ஏக்கள் எஸ்டி சோமசுந்தரத்துடன் வெளியே சென்றிருந்தாள்
அண்ணா திமுக ஆட்சி கவிழ கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கும்
எஸ் டி சோமசுந்தரம் போட்ட கணக்கு தவறியது
எஸ்டி சோமசுந்தரம் எந்தந்த எம்எல்ஏக்களை தன்னுடன் வருவார்கள் என்று நினைத்தாரோ அவர்கள் யாரும் அவர் பின்னால் செல்லவில்லை
ஒரு மாதத்திற்குப் பிறகு எம் ஆர் .கோவேந்தனை எம்ஜிஆர் அமைச்சராக நியமித்தார்
++++++++++++++++++++++++++++++++++
கல்கி பத்திரிகையில் வந்த பேட்டியை
பதிவிடுகிறேன்
எம் ஆர் கோவேந்தன் எம்எல்ஏ அவர்களிடம்
கல்கி பத்திரிகை நிருபர் கேள்வி கேட்கிறார்
நீங்கள் அமைச்சர் ஆவீர்கள் என்று எதிர் பார்த்தீர்களா
எம் ஆர் கோவேந்தன் பதில்
நான் எனது ஊரில் இருந்து பஸ் ஏறி வெளியூருக்கு சென்று கொண்டிருந்தேன்
என்னுடைய பஸ்ஸை முந்திக்கொண்டு ஒரு அரசாங்க ஜீப் ஒன்று வந்து
நான் சென்று கொண்டிருந்த பஸ்சை நிறுத்தினார்கள்
பஸ்ஸிற்குள் சில அதிகாரிகள் உள்ளே வந்தார்கள்
என்னை கண்டுபிடித்து என் அருகில் வந்தார்கள்
எம்ஜிஆர் உங்களை அமைச்சராக அறிவித்துள்ளார்
உங்களைப் புறப்பட்டு சென்னைக்கு வரச் சொல்லி இருக்கிறார் என்று தகவல் கூறினார்கள்
என்னால் நம்ப முடியவில்லை
நான் அமைச்சராவேன் என்று எந்தக் காலத்திலும் நான் நினைக்கவில்லை
சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்த என்னை எம்ஜிஆர் அமைச்சர் ஆக்கினார்
இவ்வாறு கல்கி பத்திரிக்கைக்கு எம்எல்ஏ எம்ஆர் கோவேந்தன் பதிலளித்தார்
++++++++++-++++++++++++++++++++++++
இந்தப் படத்தில் அருமை தலைவன்எம்ஜிஆர் அவர்கள்
எம்ஆர் கோவேந்தன் அமைச்சர்
பதவிஏற்றவுடன்
அவருக்கு மாலை அணிவிக்கிறார்
+++++++++++++++++++++++++++++++++
அமைச்சர் எம் ஆர் கோவேந்தன்
பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்
எம்ஜிஆர் மறைந்தவுடன் ஜானகி அம்மையாரை முதலமைச்சராக கொண்டுவந்த அமைச்சர்களில் எம்எல்ஏக்களில்இவரும் ஒருவர்
உப்பிட்ட எம்ஜிஆரை உயிருள்ளவரை நினைத்தவர்
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதவர்...... Thanks PM...
-
பல்லாண்டு வாழ்க!!
----------------------------------
கார்த்திகேயன்!!
இந்தப் பெயரில் ஒரு எம்.ஜி.ஆர் இளைஞன்!!
சிவனின் நெற்றியில் இருந்து வந்த பொறி!-முருகன்!
அவனின் அழகை உள்ளத்திலும் உடலிலும் கொண்ட
இவனின் சீருக்கு இது ஒன்று போதாதா?-வேறு
எவனின் தயவு இவனுக்குத் தேவை? என்றாலும்-
விமனின் ஒட்டு மொத்த ஆதரவு பெற்று
எமனின் ஆட்டத்தையே அசைத்துப் பார்த்த
எம்.ஜி.ஆரின் அருள் அதிர்வும் இந்த இளைஞன் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கி வருகிறது!!
நாம் பலமுறை ஒரு விஷயம் குறித்துப் பெருமைப் பட்டு வருகிறோம்!!
இளைஞர்களின் புதிய ரத்தங்கள் பொய்கையாகிப் பொழிகின்றன! எம்..ஜி.ஆர் பெயரைச் சொல்லி!!
இளைஞர்கள்,,குறிப்பாக முக நூல்-வாட்ஸ்-அப் ஊடகங்களில் வரிசையாக வரத் துவங்கி,,
தரிசையாக அரசியல் களத்தில் இருந்த வெற்றிடத்தை
நிரப்பத் தொடங்கியுள்ளனர்!
சென்னை,பள்ளிக் கரணை அருகில் ஜல்லடன்பேட்டைப் பகுதியில் வசிக்கும் கார்த்திகேயனும் அந்த வரிசையில் ஒருவர்!
இவரது சித்தப்பா மாணிக்கம்!
அப்பகுதி முன்னாள் கவுன்சிலர்!
திரு மாணிக்கமும்,,கார்த்திகேயனை உரமேற்றி,,தரமேற்றி அதிலே எம்.ஜி.ஆரை உருவேற்றிக் கருவேற்றி உலா வரச் செய்வதில் உள்ளம் பூரிக்கிறார்!!
வேக ரத்தம் கொண்ட இளையவர் கார்த்திக்கின் செயல்களில்,,எண்ணங்களில் உள்ளத்தில் இப்படி எல்லாப் புறத்திலும் அடக்கம் கொப்பளிக்கிறது!
பெரியோர்களை மதிப்பதில் ஆகட்டும்,,
அவர்களது அனுபவங்களை உள் வாங்குவதில் ஆகட்டும் அசாத்திய அமைதி காக்கிறார்!
அமைதி ஒருவனது எண்ணங்களை நிதானப் படுத்தும். பின்னர் அவற்றை நேர்ப்படுத்தும். அதற்கு அடுத்ததாக தரமான செயல்களாக வெளிப்படுத்தும்!!
தன் வீட்டில் ஆளுயர எம்.ஜி.ஆர் படத்தை வைத்துத் தொழுது வரும் கார்த்திக்,, இந்த வகை சூட்சுமத்தை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்!
பொறியியல் படித்துள்ள கார்த்திக்கின் விருப்பப்
பொரியல்--ஜெ வின் திரு நாமம்!!
வளமானஃ எதிர் காலத்தை நோக்கிப் பயணிக்கும்--
கார்த்திகேயனை,,அவரது இந்த இனிய பிறந்த நாளில் வாழ்த்தி மகிழ்வோமா???!......... Thanks...
-
[என்.எஸ்.கிருஷ்ணன் எனும் ஆசான்.
M.G.R. அறிமுகமான ‘சதி லீலாவதி’ படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்துள்ளார். தொழில் முறையிலும் வயதாலும் எம்.ஜி.ஆருக்கு மூத்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆருக்கு பல வகைகளில் உதவியதோடு, படங்களில் வாய்ப்பு கிடைக்க சிபாரிசும் செய்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு வழிகாட்டியாகவும் விளங்கியவர்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் உதவும் குணமும், இளகிய நெஞ்சமும், நகைச்சுவை உணர்வும் அனைவரும் அறிந்ததுதான். ஒருமுறை, என்.எஸ்.கிருஷ்ணனை அவரது வீட்டில் ஒரு நிறைமாத கர்ப்பிணி சந்தித்து தனது வறுமையைச் சொல்லி உதவி கேட்டார். அந்தப் பெண் மீது இரக்கப்பட்டு என்.எஸ்.கிருஷ்ணன் 100 ரூபாய் வழங்கினார். அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. நன்றி தெரிவித்துவிட்டு சிறிது தூரம் சென்ற அந்தப் பெண்ணை என்.எஸ்.கிருஷ்ணன் திரும்ப அழைத்தார். வந்த பெண்ணிடம் மீண்டும் ஒரு 100 ரூபாய் கொடுத்தார். ஏன் மறுபடியும் பணம் கொடுக்கிறார் என்று அந்தப் பெண் புரியாமல் பார்த்தார்.
என்.எஸ்.கிருஷ்ணன் சிரித்தபடியே நிதானமாகச் சொன்னார். ‘‘முதலில் கொடுத்த 100 ரூபாய் உன்னைப் பார்த்து நான் இரக்கப்பட்டதற்கு, இப்போது கொடுத்த பணம் உன்னுடைய நடிப்புத் திறமைக்காக. தயவு செய்து உன் வயிற்றில் கட்டியிருக்கும் துணியை எடுத்து விடம்மா..’’ என்றாராம். தன்னை ஏமாற்றி பணம் வாங்கிய பெண்ணிடம் கூட கோபம் கொள்ளாமல் அந்த பெண்ணின் தவறை தனக்கே உரிய நகைச்சுவையோடு சுட்டிக்காட்டியிருக்கிறார் கலைவாணர்.
என்.எஸ்.கிருஷ்ணனை தனது ஆசான்களுள் ஒருவராக கருதிய எம்.ஜி.ஆருக்கும் ஒருமுறை இதே போன்ற அனுபவம். அவர் முதல்வராக இருந்தபோது ஒரு பெண் கர்ப்பிணியாக இருப்பதாக கூறி உதவி கேட்டு வந்தார். எம்.ஜி.ஆரும் அவர் கேட்ட உதவியை செய்துள்ளார். வாங்கிக் கொண்டு அந்தப் பெண் வெளியேறும்போது எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண் நடிப்பதை கண்டுபிடித்துவிட்டனர். அந்தப் பெண் மன்னித்து அனுப்பப்பட்டார். அவர் சென்ற பிறகு கலைவாணர் வாழ்வில் நடந்த மேலே கூறப்பட்ட சம்பவத்தை உதவியாளர்களிடம் சொல்லி சிரித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
ஆரம்ப காலத்தில் ‘மாயா மச்சீந்திரா’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக என்.எஸ்.கிருஷ்ணனும் எம்.ஜி.ஆரும் கொல்கத்தா சென்றனர். படப்பிடிப்புக்கு இடையே கொல்கத்தாவை சுற்றிப் பார்க்க படக்குழுவினர் புறப்பட்டனர். அப்போது ஓரிடத்தில் ஓடை ஒன்று குறுக்கிட்டது. படப்பிடிப்பு குழுவினர் ஓடையில் இறங்கி கடக்கும்போது, எம்.ஜி.ஆர். தனக்கே உரிய துடிப்போடு அந்த ஆறடி அகலமுள்ள ஓடையை ஒரே தாண்டாக தாண்டி குதித்து விட்டார். அப்படி தாண்டிக் குதித்ததில் அவரது செருப்பு ஒன்று அறுந்துவிட்டது.
உடனே, என்.எஸ்.கிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆர். ‘‘வாங்கண்ணே, புது செருப்பு வாங்கி வரலாம்’’ என்று கூறியிருக்கிறார். அதற்கு ‘‘இன்று நேரமாகிவிட்டது. நாளை செல்லலாம்’’ என்று பதிலளித்தார் கிருஷ்ணன். மறுநாள் காலை எம்.ஜி.ஆர். மீண்டும் வந்து நினைவுபடுத்திய போது, அவரது கையில் ஒரு பார்சலை திணித்தார் கிருஷ்ணன். அதை எம்.ஜி.ஆர். ஆவலோடு பிரித்து பார்த்தார். உள்ளே, அவரது பழைய செருப்பு. ‘‘என்னண்ணே, புது செருப்பு வாங்கலாம்னு கூப்பிட்டா, பழைய செருப்பையே கொடுக்கறீங்க?’’ என்ற எம்.ஜி.ஆரை தீர்க்கமாக பார்த்தபடி பதிலளித்தார் என்.எஸ்.கிருஷ்ணன்.
‘‘உன்னையும் உங்க அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியையும் நாடகத்தில் நடிக்க உங்க அம்மா அனுப்பிவெச்சது பணம் சம்பாதிக்கத்தான்........ Thanks...
-
Cont-2
என்.எஸ்.கிருஷ்ணனை பார்த்து எம்.ஜி.ஆர். கேட்கும் ஒரு கேள்வி..
‘‘புகையும் நெருப்பில்லாமல் எரிவது எது?’’
பதில் சொல்லத் தெரியாமல் என்.எஸ்.கிருஷ்ணன் தவிப்பதை தொடர்ந்து எம்.ஜி.ஆரே பதிலளிப்பார்...
‘‘பசித்து வாடும் மக்கள் வயிறு அது...”
உடனே, ‘‘சரிதான் சரிதான்....’’ என்று ஆமோதிப்பார் என்.எஸ்.கிருஷ்ணன்.
புகையும் நெருப்பும் இல்லாமல் பசியால் எரிந்த ஆயிரக்கணக்கான வயிறுகளை உணவு என்னும் தண்ணீர் ஊற்றி குளிர்வித்தவர் எம்.ஜி.ஆர்.
நடிகர்களைக் கூத்தாடிகள் என்று சமூகம் கேலியாக பேசி வந்த காலத்தில், எம்.ஜி.ஆரால் நடிகர்களுக்கு அந்தஸ்தும் கவுரவமும் கிடைத்தது. 1965-ம் ஆண்டு அந்தமானில் அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியால் ‘பணத்தோட்டம்’ எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் திறந்து வைக்கப்பட்டது. ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தை நாட்டின் பிரதமர் திறந்து வைத்த பெருமை சர்வதேச அளவில் எம்.ஜி.ஆரு.க்கு மட்டுமே உண்டு....... Thanks...
-
புரட்சித் தலைவர் முதல்வர் ஆவதற்கு முன்பு ஆனந்தவிகடனில் நான் ஏன் பிறந்தேன் என்ற தொடர் எழுதினார்கள் அந்த தொடரை தற்போது முழுவதுமாக வெளியிட வேண்டும் என தாங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் என் போன்று பலபேர் அந்த தொடரை படிக்க விரும்புகின்றோம் ஏனென்றால் ஆனந்த விகடன் வார இதழ் அந்த தொடரை மறுபதிப்பு செய்யவில்லை ஆகையால் அந்த பணியை தாங்கள் செய்து புரட்சித் தலைவர் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்த வேண்டும் செய்வீர்களா?...... Thanks Sakthi Ananthan...