https://scontent.fykz1-1.fna.fbcdn.n...7a&oe=5F320495
Printable View
நடிகர்திலகத்தின் படங்களில் மட்டும் தான் கதாநாயகிகள் நடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
பாடலுக்கு நடனமாடவும், கதாநாயகனுடன் டூயட் பாடவும் மட்டும் செய்து கொண்டிருந்த கதாநாயகிகளுக்கு....
நடிக்கவும் தெரியும் என நிரூபிப்பதற்கான வாய்ப்பு நடிகர்திலகத்தின் படங்களில் மட்டும் தான் இருக்கும்.
சரோஜாதேவியின் நடிப்பை வெளிக்கொணர்ந்த படங்கள் பல நடிகர்திலகத்துடன் நடித்தது தான். (பாலும் பழமும், பாகப்பிரிவினை, பார்த்தால் பசி தீரும், இருவர் உள்ளம் என பல படங்கள்)
நாட்டிய பேரொளி பத்மினி அவர்களுக்கு நடிப்புக்கு சவால் விட்ட படங்கள் நடிகர்திலத்துடன் நடித்த படங்களே... (தில்லானா மோகனாம்பாள், பேசும் தெய்வம், தெய்வபிறவி)
ஜெயலலிதா அவர்களின் நடிப்புக்கு உதாராணமாக சொல்ல வேண்டுமானால், நடிகர்திலகத்துடன் நடித்த படங்களை தான் சொல்ல முடியும்.( பட்டிக்காடா பட்டணமா, சவாலே சமாளி, எங்கிருந்தோ வந்தாள், சுமதி என் சுந்தரி),
தேவிகா, செளகார் ஜானகி, வாணிஸ்ரீ, இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்...
கதாநாயிகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் நடிகர்திலகம் நடித்து வெளிவந்துள்ளது.
அன்றும் சரி, இன்றும் சரி,
எந்த கதாநாயகர்களும் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
நடிகர்திலகத்தால் மட்டுமே அது முடியும்....
காரணம்,
தன் நடிப்பு மேல் அவர் வைத்திருந்து நம்பிக்கை...
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...b9&oe=5F313E8C
Thanks Sundar Rajan
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...da&oe=5F30B3B0
Thanks Veeyaar
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...19&oe=5F30CF2F
Thanks Gururo Vmurugesan
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...b2&oe=5F330EE5
Thanks V C G Thiruppathi
47 ஆண்டுகள் நிறைவுப் பயணத்தில்...
#எங்கள்_தங்கராஜா
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...96&oe=5F345C3B
Thanks Nilaa
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...14&oe=5F3429D6
Thanks Veeyaar
அனைவருக்கும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...88&oe=5F35116Bhttps://scontent.fykz1-2.fna.fbcdn.n...77&oe=5F32BC29
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...cb&oe=5F35F202
Thanks V C G Thiruppathi
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...c7&oe=5F334BD5
Thanks V C G Thiruppathi
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...e5&oe=5F342831
Thanks V C G Thiruppathi
பெருந்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நடைபெற்ற அன்னதான காட்சிகள்...
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...52&oe=5F35C25Dhttps://scontent.fykz1-2.fna.fbcdn.n...a5&oe=5F33A35Dhttps://scontent.fykz1-1.fna.fbcdn.n...8d&oe=5F3516AE
Thanks Nilaa
தொடர்ந்து 35 வருடங்களுக்கும் மேலாக திருச்சியில் சிவாஜி அவர்களின் புகழ் பரப்புவதே நோக்கமென வாழும் மாரிஸ் குரூப் சிவாஜி பக்தர்கள் சார்பில் திருச்சி நகரில் அலங்கரிக்க போகும் ஐயன் சிவாஜி அவர்களின் நினைவு அஞ்சலி போஸ்டர்https://scontent.fmaa1-3.fna.fbcdn.n...42&oe=5F350CA2
17-07-2020
தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!!
* முதல் மரியாதை- காலை 10 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில்,
* என் தம்பி - இரவு 10 மணிக்கு ஜெயா மூவி தொலைக்காட்சியில்,
* நவராத்திரி- இரவு 11 மணிக்கு பாலிமர் டிவிச் சேனலில்,
ஆத்தா பால் குடிச்சு
வளந்த காலத்துல
அத்தோட
சிவாஜி நடிப்பையும்
ருசிச்சு வளந்த
உடம்பய்யா
பத்து வயசு அப்போ..
மாறி மாறி மழை பேஞ்சு
ஊரெல்லாம் ஊறிக் கெடந்ததய்யா
அதெல்லாம் பெரிசில்லே
தரைக் கொட்டாயிலே
ஆறு மணிக்கு போட்டுருவானே
"பதிபக்தி "
அது எப்போ ஆவும்னு
அலைஞ்சய்யாதா அப்போ மனசு
அத அன்னைக்கு பாத்தாத்தா
மறுநா வயித்துல சோறிறங்கும்
கோலிகுண்டு விளையாண்ட காலம்
பெட்டெல்லாம் வெச்சு அடிப்போம்
சிவாஜி பிச்சருக்காகவே நான் கோலியெடுப்பேன்
குறி கோலி அடிச்சா பத்து பிச்சரு
ஒருத்தன் வெச்சிருந்தான் பைக்ல வர்ற சிவாஜி பிச்சரு
மூணு மாசமா கேட்டேன்
அவந் தரலே
ஒருநா கேட்டான் இந்த கோலில நீ
ஜெயிச்சா உனக்குத்தா இது
தோத்துபுட்டே ஐநூறு பிச்சரு
நீ தரனும்ட்டான்
கை உதறுனாலும் வெறி அடங்கலேய்யா
அன்னைக்கு
அடிச்சேனய்யா குறிகோலிய
தெறிச்சுதய்யா கண்ணாடி கோலி
அன்னைக்கே
ஐநூறு பிச்சர சும்மா கேட்டாலும்
குடுத்திருப்பேனய்யா
பதினோரு வயசு
கொட்டாயிலே அன்னைக்கு
'புதையல் 'படம்
நம்மூருக்கு அது புதுசு
அஞ்சு மணிக்கே போயும் அத்தினி கூட்டம்
டிக்கட் கிடச்ச பாடில்லே
ஓலைக் கொட்டாயிதானே அது
கொஞ்சம் கிழிஞ்ச தட்டியிலே
பாதி படம் தெரிஞ்சுது
அதயே ரோட்டுல நின்னு
முக்கா படம் பாத்தமய்யா
மிச்சப்படம் நாளக்கி பாத்துக்கலாம்னுதான்..
இன்னொரு நா ..
'வசந்தமாளிக ' போட்டிருந்தாங்க
கொட்டாய தாண்டி கும்பல் கும்பலா
ஜனங்கமாருக -அது
ஒரு ஊரு கூட்டம் மாதிரி இருந்திச்சு
படத்த கால்மணிக்கு முன்னாடியே போட்டுட்டான் அன்னைக்கு
எழுத்து முடிஞ்சு ப்ளைட்டுல தலைவரு பாட்டு ஆரம்பிக்குது
மூஞ்சிய பாத்ததுமே ஆசையா கை தட்ட அத்தினி ஜனம் கிடக்க
பட்டுன்னு கட்டாச்சு பிக்சர்
ஆளாளுக்கு கத்த ஆரம்பிச்சாட்டாங்க
ஒரே குய்யோ முய்யோதா
பிக்சர ஒட்டி ஓட்ட அஞ்சு நிமிஷமாகும்
மறுபடியும் படம் ஓட ஆரம்பிக்குது
விசில் சத்தம் கை தட்டற சத்தத்தை கேட்டா
கூரையெல்லாம் பிச்சுட்டு போயிருக்கும் போலிருக்கு
நம்முளுக்கு வேற பயமாவும் இருக்கு
ஓ மானிட ஜாதியே ..
ஒரு ரெண்டு வரிதா பாடியிருப்பாரு தலைவர்
மறுபடியும் அந்து போச்சு
மறுபடி ஒரு ஒட்டு
ஓடுது ..
உலகத்தின் வயதுகள் பலகோ...
மறுபடி ஒட்டு..
ஆபரேட்டருக்கே அந்து போயிருக்குமய்யா
அன்னைக்கு
படத்த ஓட்டி முடிக்க மூணே முக்கா மணி நேரமாயிடிச்சு
அடுத்த ஷோவெல்லாம் இல்ல
உலகத்துலேயே ஒரே ஷோவோட வசந்தமாளிகைய நிப்பாட்டுன கொட்டாயின்னா எங்கூரு கொட்டாயாதா இருக்கும்
ஆனா கடசி வரைக்கும் ஒரு பய எந்திரிச்சு போகலியே
இன்னிக்கும் அதையெல்லாம் நெனச்சா...
ஒரு நா நம்மாளு ஒருத்தன் திரைக்குப் பக்கத்துல சூடம் காமிச்சான்.கொட்டாயிலே அதெல்லாம் ஏத்துக்க மாட்டாங்க.நல்லா சாத்திட்டாங்க.அவங் கூட்டாளிக பத்து பேருக்கு மேல இருந்திருக்காங்க.அடிச்சத பாத்த அவனுக பதிலுக்கு கொட்டாயிகாரன்கள அடிச்சிட்டாங்க.பிரிச்சினை பெரிசாகி ஆளாளுக்கு அடிதடி.மணல் தரைதானே அப்ப.மணலெல்லாம் பொம்பளக ,குட்டிக கண்ணுல விழுந்து ஏக களேபரம்.கண்ண தேய்ச்சு தேய்ச்சு செவந்து போச்சு.படத்த உடனே நிப்பாட்டிட்டான்.போலீசுக்கு வேற போன் போட்டாச்சு .அதுக்குள்ளே அந்த கூட்டம் எட்டிக் குதிச்சு ஓடிப்போயிருச்சு.
முக்கா மணி கழிச்சு படம் போட்டான்.கண்ணெரிச்சல் வேற.சிவாஜி படத்த பாக்காம போகலயே!
ரங்கதுரை போட்டப்போ ...
படம் ஒரு பத்து நிமிஷம் ஓடும்
அப்ப அப்பளம் உப்பறமாதிரி
பிச்சசர் உருகும்
அது நல்லாவே திரையிலேயே தெரியும்
அத ரெடி பண்ணி
மறுபடி ஓட்டுனாக்க மறுபடி
அதே மாதிரி பிச்சர்
அப்பளம் மாதிரி உப்பும்
இதே பிரச்சினைதா படம் பூராவும்
அன்னைக்கு
கூட்டம் வேற எக்கச்சக்கம்..
அடுத்த நா பாத்தவக சொன்னாங்க
பாதி படமே இல்லைன்னு
எனக்கொரு சந்தேகம் இன்ன வரைக்கும்
எங்கூரு கொட்டாயிலேதா மட்டுந்தா
இந்த விவகாரங்களா?
இல்லே எல்லா ஊருலயும் இது போலவெல்லாம் நடந்திருக்கான்னு?
சிவாஜி படம் போட்டா ஒரு வீதி பாக்கியில்லாம சுத்தியடிச்சு அத்தன போஸ்டரையும் பாத்திட்டு அதுக்கு பிறகுதா குளிச்சு யூனிபார்ம் மாட்டி ஸ்கூலுக்கு போன காலமெல்லாம் உண்டு.
இதெல்லாம் கிராமத்துல சகஜமா நடந்ததுதான்.
சிவாஜி படம் எப்பிடியிருந்தாலும் பாத்திரனும்.அப்பிடியெல்லாம் பாத்து ரசிச்சது இன்னைக்கும் அப்பிடியே ஞாபகத்துல இருக்கு!
இன்னும் வரும்....
செந்தில்வேல் சிவராஜ்
Thanks
செந்தில்வேல் சிவராஜ்
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...02&oe=5F37D26A
Thanks V C G Thiruppathi
மீள் பதிவு
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...bf&oe=5F389347
2 March 2018
உங்களுக்குத் தெரியுமா?
1931 அக்டோபர் 31 அன்று வெளியான
தமிழ் சினிமாவின் முதல் பேசும் படமான 'காளிதாஸ்' முதல் கறுப்பு-வெள்ளைப் படங்களின் காலக்கட்டம் முடிந்த 1979 ஆம் ஆண்டுவரை, தமிழில் (இந்தியாவிலேயே)
கறுப்பு-வெள்ளையில் முதன்முதலாக 100 படங்களில் நாயகனாக நடித்து, அதில் 50க்கும் மேற்பட்ட வெற்றிக் காவியங்களைத் தந்த ஒரே நடிகர் நம் நடிகர்திலகம் மட்டுமே.
இந்த யுகம் முடியுமட்டும் எவராலும் இனி வெல்ல முடியாத வரலாற்றுச் சாதனையை உங்கள் பார்வைக்காக பதிவிடுகிறேன்.
அடுத்தத் தலைமுறை அறிய வேண்டிய செய்தி இது. அதிகம் பகிருங்கள் தோழர்களே ...
வெற்றிப் படங்களின் பட்டியல் மட்டும்....
1. பராசக்தி 294 நாட்கள்
2. மனோகரா 156 நாட்கள்
3. சம்பூர்ண ராமாயணம் 165 நாட்கள்
4.பாகப்பிரிவினை 216 நாட்கள்
5. படிக்காத மேதை 153 நாட்கள்
6. பாவமன்னிப்பு 177 நாட்கள்
7. பாசமலர் 176 நாட்கள்
8. பட்டிக்காடா பட்டணமா 182 நாட்கள்
8அ. SCHOOL MASTER (Kannada) 188 Days
9. திரும்பிப்பார் 116 நாட்கள்
10. கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி 105
11. தூக்குதூக்கி 103 நாட்கள்
12. எதிர்பாராதது 100 நாட்கள்
13.காவேரி 100 நாட்கள்
14. மங்கையர்திலகம் 100 நாட்கள்
15. தெனாலி ராமன் 101 நாட்கள்
16. பெண்ணின் பெருமை 105 நாட்கள்
17. அமரதீபம் 125 நாட்கள்
18. மக்களைப் பெற்ற மகராசி 122 நாட்கள்
19.வணங்காமுடி 100 நாட்கள்
20. தங்கமலை ரகசியம் 105 நாட்கள்
21. பாக்கியவதி 106 நாட்கள்
22. உத்தமபுத்திரன் 140 நாட்கள்
23. பதிபக்தி 100 நாட்கள்
24. அன்னையின் ஆணை 101 நாட்கள்
25. சபாஷ் மீனா119 நாட்கள்
26. காத்தவராயன் 105 நாட்கள்
27. தங்கப்பதுமை 102 நாட்கள் ( சேலம் மற்றும் மதுரையில் ஷிப்டிங்கில் வெள்ளிவிழா ஓடியது)
28. மரகதம் 100 நாட்கள்
29. இரும்புத்திரை 156 நாட்கள் (ஷிப்டிங்கில்
230 நாட்கள்)
30. தெய்வப்பிறவி 121 நாட்கள்
31. விடிவெள்ளி 104 நாட்கள்
32. பாலும் பழமும் 139 நாட்கள்
33. கப்பலோட்டியதமிழன் 102 நாட்கள்
34. பார்த்தால் பசிதீரும் 105 நாட்கள்
35. படித்தால் மட்டும் போதுமா 112 நாட்கள்
36. பந்தபாசம் 100 நாட்கள்
37. ஆலயமணி 105 நாட்கள்
38. இருவர் உள்ளம் 126 நாட்கள்
39. அன்னை இல்லம் 104 நாட்கள்
40. பச்சை விளக்கு 105 நாட்கள்
41. கை கொடுத்த தெய்வம் 108 நாட்கள்
42. நவராத்திரி 108 நாட்கள்
43. சாந்தி 100 நாட்கள்
44. மோட்டார் சுந்தரம்பிள்ளை 100 நாட்கள்
45. இருமலர்கள் 100 நாட்கள்
46. கலாட்டா கல்யாணம் 106 நாட்கள்
47. என்தம்பி 103 நாட்கள்
48. எங்க ஊர் ராஜா 105 நாட்கள்
49. உயர்ந்த மனிதன் 105 நாட்கள்
50. தெய்வமகன் 105 நாட்கள்
51. திருடன் 98 நாட்கள்
52. வியட்நாம் வீடு 111 நாட்கள்
53. ராமன் எத்தனை ராமனடி 103 நாட்கள்
54. குலமா குணமா 118 நாட்கள்
55. பாபு 114 நாட்கள்
56. ஞானஒளி104 நாட்கள்
57. தவப்புதல்வன் 100 நாட்கள்
இவை தவிர்த்து பணம், அன்பு, புதையல், தங்கை, தங்கைக்காக,குறவஞ்சி உள்ளிட்ட பல கறுப்பு வெள்ளைப் படங்கள் 83 முதல் 91 நாட்கள் வரை ஓடியிருக்கின்றன.
இதையெல்லாம் முறியடிக்க இனி எந்த நடிகரின் படங்களாலும் முடியாது என்பது உறுதியான ஒன்று.
ஒருவேளை நம் அய்யனே மறுபடியும் அவதாரமெடுத்து வந்தால் முடியுமோ!?
Thanks Nilaa
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...81&oe=5F38476E
Thanks V C G Thiruppathi
16-7-20ன் தொடர்ச்சி.... 2010... எண்ணங்கள் எழுத்துக்கள் வலை...
இந்திரா அம்மையார் மறைந்தபிறகு நடந்த 1984 தேர்தலில், சிவாஜி மன்றத்தினர் தேர்தலில் சீட் கொடுக்கப்படாமல் ஒதுக்கப்பட்டதற்கு காரணமே, நடிகர் திலகத்துக்கும் காங்கிரஸுக்கும் இருந்த நீண்டகால உறவை பற்றி ராஜீவுக்கு தெரியாததே.
தமிழ்நாட்டில் காங்கிரஸின் மிகப்பெரிய தொண்டர் படையாக விளங்கிய சிவாஜி மன்றத்தினர், 1984 தேர்தலில் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டனர். சிவாஜிமன்றத்தினர் பற்றி தெரிந்திருந்த பெருந்தலைவரும், இந்திரா அம்மையாரும் இயற்கை எய்தியதால் அவர்களின் அருமை ராஜீவுக்கு தெரியவில்லை. வெகுண்டெழுந்த சிவாஜி மன்றத்தினர், தலைவர் தளபதி சண்முகம் தலைமையில் கூடி முடிவெடுத்து தமிழ்நாடு முழுக்க 99 போட்டி வேட்பாளர்களை அறிவித்தனர். சிலர் வேட்பு மனுவும் தாக்கல் செய்து விட்டனர். புரசை குமரன், அப்பன்ராஜ், செங்காளியப்பன், ராஜசேகரன், அடைக்கலராஜ், மாரிசாமி, பொன்.தங்கராஜ், சந்திரசேகரன், புவனேஸ்வரி ஆனந்த் போன்றோர் அதில் அடக்கம்.
பதறிப்போன மூப்பனார், டெல்லியுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி சொல்ல, சிவாஜி மன்றத்தினருக்கு சீட் ஒதுக்கப்பட்டது. சென்னை வண்ணாரப்பேட்டையில் ராஜசேகரன், திருச்சி எம்.பி.தொகுதிக்கு அடைக்கலராஜ் உள்பட சிவாஜி மன்றத்தினர் பலர் காங்கிரஸ் கட்சியால் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு வெற்றிபெற்றனர். சத்தியமங்கலம் சட்டமன்ற தொகுதியில் சிவாஜிமன்ற வேட்பாளராகப் போட்டியிட்ட (இன்றைய காங்கிரஸ் பிரமுகர்) ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெருவாரியான வாக்குகளில் வெற்றியடைந்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு இரா. அன்பரசு சொல்கிறார்....
நடிகர்திலகத்தின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் ஆயிரக்கணக்கில் தொண்டர்களும் ரசிகர்களும் அன்னை இல்லத்தில் காலைமுதல் இரவு வரை அவருக்கு வாழ்த்துச்சொல்லிச் சென்ற வண்னம் இருப்பார்கள். அனைவரும் சென்ற பின்னர் அவர்கள் விட்டுச்சென்ற செருப்புக்கள் இரவில் ஒரு லாரியில் ஏற்றி வெளியேற்றப்படும். ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் அவர் இல்லத்தில் விருந்துக்கழைக்கப் படுவோரில் நானும் கண்டிப்பாக இருப்பேன். பிறந்தநாளின் போது அவருக்கு அளிக்கப்படும் பல்வேறு பரிசுப்பொருட்களை அவர் தனக்கென்று வைத்துக்கொள்ளமாட்டார். அங்கு வந்திருக்கும் ரசிகர்களுக்கு அளித்துவிடுவார்.
எப்போதுமே மிகவும் வெளிப்படையாக மனதில் இருப்பதை அப்படியே பேசும் வழக்கமுள்ளவராக இருந்தார். மனதில் ஒன்றை மறைத்துக்கொண்டு வெளியில் வேறொன்றைப்பேசி நிஜவாழ்க்கையில் நடிக்கத்தெரியாதவராக இருந்தார். அதனாலேயே அரசியலில் பலரால் ஏமாற்றத்துக்குள்ளானார்.
Thanks Palaniappan Sbbu
அவ்வளவு அறியாதவர்களா என்ன ஆட்சியில் இருப்பவர்கள், இருந்துவிட்டு போனவர்கள்,
மணி மண்டபத்தில் நடிகர் திலகம் தொடர்பான பெருமைகளை காட்சிப் படுத்தினால் எதிரே படிக்கும் ஜானகி- எம்ஜிஆர் மகளிர் கல்லூரி மாணவிகள் அதைப் பார்த்து படித்து தெரிந்து கொண்டு மறுநாள் வகுப்பில் சிவாஜியின் பெருமைகளை விவாதிப்பார்களே,
முதலில் சர்வதேச உலக விருது பெற்ற தமிழர்,
இந்திய நடிகர்களில் சுதந்திர போராட்டத் தியாகிகளாக நடித்த ஒரே ஒப்பற்ற நடிகர்,
வரலாற்று புராண இதிகாசங்களில் நடித்து மக்களிடம் வரலாற்று நாயகர்களை கொண்டு சென்றவர்,
285 திரைப்படங்களுக்கும் அதிகமாக நாயகனாக ஜொலித்த ஒரே தமிழ் நடிகர்,
150க்கும் மேலான நூறு நாட்கள் ஓடிய வெற்றிப் படங்களையும், 30 க்கும் மேலான வெள்ளி விழா காவியங்களையும் கொடுத்த ஒரே இந்திய நடிகர்,
90 படங்களில் சண்டைக் காட்சிகளை இடம் பெறாமல் செய்து வெற்றி கண்டவர், 45 படங்களுக்கும் மேல் கதாநாயகி இல்லாமலும் டூயட் பாடாமலும் ஹிட் கொடுத்த ஒரே உலக நடிகர்,
ஒரே நாளில் இரண்டு இரண்டு படங்கள் என 17 முறை ரிலீஸ் செய்து அதிசயம் ஏற்படுத்திய வசூல் சக்கரவர்த்தி,
அமெரிக்க நகரான சுற்றுலாத் தளமான நயாகரா நகரின் மேயராக கௌரவிக்கப் பட்டவர்,
அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியின் வரவேற்பை பெற்றவர்,
எகிப்து அதிபர் நாசர் அவர்கள் சிவாஜியின் வீட்டிற்கே வந்து பாராட்டி இருக்கிறார்,
சிவாஜியின் நடிப்பில் லயித்துப் போன தலாய்லாமா படப்பிடிப்பு தளத்திற்கே வந்து பாராட்டி இருக்கிறாரே,
இந்தியாவின் ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகள் என அவர் காலத்தில் அனைவரும் நட்புறவு கொண்டாடியவர்கள்,
முதல் உலகத்தமிழ் மொழி மாநாட்டிற்கு முதல்வர் அறிஞர் அண்ணாவிடம் முதல் ஆளாய் ஐந்து லட்சம் கொடுத்ததோடு திருவள்ளுவருக்கு மெரினாவில் சிலை வைத்து பெருமைப் படுத்தியவராயிற்றே,
கட்டபொம்மனுக்கு நினைவு மண்டபம் அமைத்தது, பாரதி, வ.உ.சி க்கு விழா
எடுத்தது,
தான தர்மங்கள் எனச் சொல்லும் போது 1950 களிலேயே எந்த நடிகர்களும் லட்சங்களை கொடுக்காத போது லட்சங்களை. அள்ளிக் கொடுத்து இருக்கிறாரே- இதை பாவேந்தர் பாரதிதாசன் கவிதை வடித்தும் இருக்கிறாரே,
பெரியார், காமராஜர், அண்ணா, ராஜாஜி என அனைத்து தலைவர்களின் கொள்கைகளுக்கும் பாலமாய் தேய்ந்து இருக்கிறாரே,
ஊழலற்ற ஆட்சி வேண்டும் தமிழகத்தில் என பெருந்தலைவர் காமராஜர் பின்னால் கடைசி வரை வெற்றி தோல்விகளைப் பற்றி எண்ணாமல் உறுதுணை இருந்து இருக்கிறாரே,
செவாலியே, பத்மஸ்ரீ, பதம பூசன், தாதா சாகேப் பால்கே, என ஏராளமான விருதுகளை குவித்து இருக்கிறாரே,
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மியான்மர், பர்மா, அரசுகள் எல்லாம் அழைத்து கௌரவம் செய்து இருக்கிறார்களே,
கேரளம், ஆந்திரா, மராட்டியம், பெங்காள் என பிற மாநில அரசுகள் விருது கொடுத்து பாராட்டி இருக்கிறார்களே,
நான்கு தலைமுறை ரசிகர்களை கொண்டிருக்கும் ஒப்பற்ற கலைத் தாயின் மூத்த மகன்,
இத்தனை பெருமைக்குரிய மாமேதையை இந்தத் தமிழகம் தவர விட்ட பிழைதானே
தற்போது நாம் காணும் ஊழல் நேர்மையற்ற ஆட்சிகள்,
இவர்களிடம். சிவாஜியின் பெருமைகளை முழுமையாக காட்சிப் படுத்துங்கள். என எப்படி கேட்க முடியும்??
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...fc&oe=5F37B698
நன்றி சேகர் பரசுராம்
இறந்து 19 ஆண்டுகள் ஆகியும் ரசிகர்களின் பக்தி குறையாமல் ஒவ்வொரு வருடமும் 10க்கும் மேற்பட்ட டிசைன்களில் திருச்சி நகரில் சிவாஜி ரசிகர்களால் போஸ்டர் வெளியிடப்படுகிறது https://scontent.fmaa1-4.fna.fbcdn.n...bf&oe=5F39D9FBhttps://scontent.fmaa1-1.fna.fbcdn.n...f7&oe=5F3862CB
21-07-2020
நடிகர் திலகத்தின் 19 வது ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு தொலைக்காட்சி சேனல்களில் திரைக்காவியங்கள்!!
* கீழ்வானம் சிவக்கும்- காலை 10 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில்,
* கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி- காலை 10:30 க்கு கேப்டன் டிவியில்,
* தவப்புதல்வன்- காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்,
* நவராத்திரி - பிற்பகல் 1:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்,
* வா கண்ணா வா- மாலை 3:30 க்கு முரசு தொலைக்காட்சியில்,
* திருவருட்ச்செல்வர் - இரவு 7 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில்,
* சரஸ்வதி சபதம்- இரவு 9:30 க்கு சன் டிவியில்,
* கிருஷ்ணன் வந்தான்- இரவு 10 மணிக்கு ராஜ் டிஜிட்டல் தொலைக்காட்சியில்,
* அம்பிகாபதி- இரவு 11 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில்,
Thanks Sekar