-
மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும்
சென்னையில் மட்டும் 18-10-1971 அன்று வெளியானது .
மற்ற இடங்களில் 24-10-1971 அன்று வெளியானது .
சென்னை
தேவிபாரடைஸ் -67 -நாட்கள்
கிருஷ்ணா - 67 நாட்கள்
மேகலா - 53 நாட்கள் .
பெங்களூர்
ஸ்வஸ்திக் - 42 நாட்கள்
நியுசிடி - 42 நாட்கள்
லக்ஷ்மி - 42 - நாட்கள்
கபாலி - 7 நாட்கள் .
பெங்களூர் நகரிலே மிகவும் அதிக இருக்கைகள் கொண்ட -[1600] குளிர்சாதன அரங்கில் 7 நாட்கள் காலைக்காட்சி ஓடி 7 நாட்களும் அரங்கு நிறைந்த சாதனை புரிந்த ஒரே தமிழ் படம் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்து படைத்த பிரமானடமான படம் .
மக்கள் திலகத்தின் அருமையான இரட்டைவேடங்கள் .
அமர்க்களமான சண்டைகாட்சிகள்
சிறப்பான ஒளிப்பதிவு - மெல்லிசை மன்னரின் இசை .
எதிர்பார்த்த அளவிற்கு பாடல்கள் - நகைச்வைகாட்சிகள்
இல்லாதது ஒரு குறை .
ரிக்ஷாக்காரனின் வெள்ளிவிழா கனவை உடைத்தபடம் என்பதால் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான படம் .
மொத்தத்தில் முதல் வெளியீட்டில் சுமாராக ஓடினாலும்
மறு வெளியீட்டில் நல்ல வசூலான படம் .
மக்கள் திலகத்தின் மாறுபட்ட நடிப்பு - ரசிகர்களுக்கு விருந்து .
மக்கள் திலகம் - மக்கள் திலகம் மோதும் சண்டை காட்சியில்
வேகமும் -ஒளிப்பதிவும் - இசையும் ....பிரமாதம் .
மனநிறைவு தந்த படம் - நீரும் நெருப்பும்
-
Comments from mr.raviprakash - from net
நீரும் நெருப்பும் படம் பற்றி ரவிபிரகாஷ் கூறுகிறார்….
’நீரும் நெருப்பும்’ படத்துக்கு வருவோம். தலைப்பே என்னைக் கவர்ந்தது. கதை, கதாநாயக நடிகர் என எதைப் பற்றியும் யோசிக்காமல், காளிதாஸ் முதல் நேற்றைக்கு வெளியான மாசிலாமணி வரைக்கும் வெறுமே சினிமா தலைப்புகளை மட்டுமே கொடுத்து எனக்குப் பிடித்த முதல் பத்து தலைப்புகளைப் பட்டியலிடச் சொன்னால், அந்த முதல் பத்தில் முதலாவதாக ’நீரும் நெருப்பும்’ இருக்கும். அது ஏன் என்றே தெரியவில்லை, எனக்கு அந்தத் தலைப்பு அத்தனைப் பிடிக்கும். அந்தத் தலைப்புக்காகவே அந்தப் படத்துக்கு நான் போனேன்.
படத்தின் கதை அந்த நேரத்தில் எனக்கு மிகப் புதுமையாகத் தெரிந்தது. அண்ணனை அடித்தால் தம்பிக்கு வலிக்கும் என்கிற சமாசாரமே வித்தியாசமாக இருந்தது. பிரமாதமான கலரில் படமாக்கப்பட்டு இருந்தது அந்தப் படம். எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேஷம். நன்றாகவே வித்தியாசம் காட்டி நடித்திருந்ததாக ஞாபகம். இதெல்லாவற்றையும்விட படத்தில் எனக்கு ரொம்பப் பிடித்திருந்த அம்சம், இரண்டு எம்.ஜி.ஆர்களும் ஒருவரோடொருவர் சண்டை போடும் காட்சி. படு த்ரில்லிங்காக இருந்தது. அதற்கு முன் இப்படியான டபுள் ஆக்ட் படம் எதையும் நான் பார்த்திருக்கவில்லை. எனவே, இரண்டு எம்.ஜி.ஆர். ஒரே காட்சியில் தோன்றியதே எனக்குப் புதுசாக இருந்ததென்றால், அவர்கள் ஒருவரோடொருவர் வாள் சண்டை வேறு ஆக்ரோஷமாகப் போட, ரொம்பவே ரசித்துப் பார்த்தேன். அந்தக் காட்சியில் எடிட்டிங் படு பிரமாதம்! இவர் வாளை வீச, சட்டென்று அவர் தலையைப் பின் வாங்க, அவர் கத்தி சுழற்ற, இவர் ஒதுங்கித் தப்பிக்க என இருவரையும் மாறி மாறி எடிட் செய்து காட்டுவது அத்தனை லேசான சமாசாரமில்லை. ஆனால், அந்த நேரத்தில் எனக்கு இந்த டெக்னிக் எதுவும் தெரியாது. என்றாலும், ‘அட, எப்படி ரெண்டு எம்.ஜி.ஆர். சண்டை போடுற மாதிரி எடுத்தாங்க?!’ என்று வியந்துகொண்டே படம் பார்த்தேன்.
நான் ரசித்துப் பார்த்து என்ன..? அது பெரும்பாலானோருக்கு ஏன் பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் வேறு எதையோ எதிர்பார்க்கிறார்கள். எனக்கு ஒரு படத்தில் ஏதாவது ஒரு அம்சம் நன்றாக இருந்துவிட்டாலும் போதும், என்னால் அதை ரசிக்க முடியும். ரசிப்பேனே தவிர, அது சிறந்த படமா, இல்லையா என்பது வேறு விஷயம்! நன்றாக ஓடிய எத்தனையோ படங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. அதற்கென்ன செய்வது?
அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய ஆங்கிலக் கதையை, 1949-லேயே எஸ்.எஸ்.வாசன் அவர்கள், ‘அபூர்வ சகோதரர்கள்’ என்ற தலைப்பில் எம்.கே.ராதா (இரு வேடங்கள்), பானுமதி ஆகியோரைப் போட்டு, இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் திரைப்படமாக எடுத்து வெளியிட்டார். அதிலும் எம்.கே.ராதாவும் எம்.கே.ராதாவும் போடும் கத்திச் சண்டை படு பிரமாதம் என்பார்கள். நன்றாக ஓடிய படம் அது. அதைத்தான் 1971-ல் எம்.ஜி.ஆரை வைத்து ப.நீலகண்டன் டைரக்ட் செய்து வெளியிட்டார்.
-
Courtesy - anandhavikadan - review
பல ஆண்டுகளுக்கு முன், வெளியான ஜெமினியின் ‘அபூர்வ சகோதரர்கள்’ கதை, இன்று ‘நீரும் நெருப்பும்’ என்ற வண்ணப்படமாக வெளிவந்திருக்கிறது.
முந்தைய படத்தில் நடித்த நடிகன் என்ற முறையிலோ அல்லது ஒரு விமர்சகன் என்ற நோக்கிலோ நான் இப்படத்தைப் பற்றிக் கருத்து கூறவில்லை. ஒரு ரசிகன் என்ற முறையிலேயே இதை எழுதுகிறேன்.
‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நீரும் நெருப்பும்’ ஆகிய இரு படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. இரண்டுமே அந்தந்தக் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றிருப்பவை.
இந்த வெற்றிக்கு முதல் காரணம் கதைதான். எந்தக் காலத்திலும் எல்லோராலும் ரசிக்கத்தக்க அருமையான கதை இது. விறுவிறுப்பான சம்பவங்களோடு, ஒருவர் உணர்ச்சியை மற்றவரும் சேர்ந்து அனுபவிக்கும் விசித்திரமான இரட்டைச் சகோதரர்களின் மனத்தில் பொங்கும் புயல்தான் கதைக்கு ஜீவநாடி.
‘அபூர்வ சகோதரர்கள்’ படம் கறுப்பு வெள்ளையில், அக்கால கட்டுப்பாட்டுக்கேற்ப 11,000 அடி அளவுக்குத் தயாரிக்கப்பட்டது.
‘நீரும் நெருப்பும்’ படம் தேவையான பொழுதுபோக்கு அம்சங்களோடு, வண்ணத்தில், பிரமாண்டமான காட்சி அமைப்புகளோடு கம்பீரமாகவும் விறுவிறுப்பு குன்றாமலும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
பழைய படத்தில் நான் சிரமப்பட்டு நடித்திருப்பதைப் போல், இப்படத்திலும் திரு. எம்.ஜி.ஆர். கடுமையாக உழைத்து சிறப்பாக நடித்திருக்கிறார். தம்பியின் (கரிகாலன்) பாத்திரத்தில் அவர் நடிப்பு அற்புதமாக அமைந்திருக்கிறது. தனது உள்ளத்துப் புயலைக் குமுறலோடு வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களில் அவருடைய நடிப்பின் சிறப்பு சுடர் விடுகி றது. அண்ணன் அடிபடும்போது சிரித்துக்கொண்டே துடிக்கும் இடமும், முடிவில் அடிபட்டு விழுந்திருக்கும்போது அண்ணன் சண்டை போடுவதை ரசிக்கும் காட்சியும் அருமை. சீன வியாபாரி பிரமாதம்.
திருமதி பானுமதி ஏற்ற பாத்திரத்தை இன்னொரு நடிகை ஏற்று நடிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் ஜெயலலிதாவும் பாராட்டும்படி நடித்திருக்கிறார். அவருடைய விளையாட்டும் துள்ளலும் நல்ல கலகலப்பைத் தருகின்றன. ‘லட்டு லட்டு’ எனப் பாடி ஆடும் திருமதி பானுமதியின் பிரசித்தி பெற்ற காட்சியில் ஜெயலலிதாவும் சிரமப்பட்டு செய்திருக்கிறார். என்றாலும், எனக்கென்னவோ ‘லட்டு லட்டு’ பாடலின் இனிமை இந்தப் பாட்டில் இல்லை என்றே தோன்றுகிறது. அது பானுமதியின் குரல் மகிமையாகவும் இருக்கலாம்!
மார்த்தாண்டம் பாத்திரத்தை அசோகன் நகைச்சுவை கலந்து செய்திருக்கிறார். டி.கே.பகவதியும், மருதுவாக வரும் மனோகரும், மேக்கப்காரராக வரும் தேங்காய் சீனிவாசனும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ப.நீலகண்டன் அவர்களின் டைரக்ஷன் சிறப்பு பல இடங்களில் மின்னுகிறது.
மனோரமாவின் கொங்கு நாட்டுத் தமிழ் ஒரு சுவாரசியம்.
பாடல்களை என்னால் பிரமாதமாகச் சொல்ல முடியவில்லை என்றாலும், எம்.எஸ்.விசுவநாதனின் ரீரிகார்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது.
பொதுவாக, தரமான கதையும், பொழுதுபோக்கு அம்சங்களும் இணைந்திருப்பதில்லை. இந்தப் படத்தில் அவை இணைந்திருக்கின்றன. அதுவே படத்தின் சிறப்பு!
-
நீரும் நெருப்பும்
நடிக+நடிகைகள்:-புரட்சித்தலைவர்.பொன்மனச்செம்மல்.பாரத்.கொடைவள்ளல்.ந ிருத்தியச்சக்கரவர்த்தி.
கலியுகக்கர்ணன்.மக்கள்திலகம்.
அண்ணாவின் இதயக்கனி.புரட்சிநடிகர்.
எங்கவீட்டுப்பிள்ளை.இதயதெய்வம் எம்.ஜி.ஆர் (மாறுபட்ட இரு வேடங்களில்), " செல்வி"ஜெயலலிதா, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், ரி.கே.பகவதி, சோ, "தேங்காய்"சீனிவாசன், "ஆச்சி"மனோரமா, ஜஸ்டின், சி.எல்.ஆனந்தன், ஜோதிலக்ஷ்மி, ஜி.சகுந்தலா, சண்முகசுந்தரி, விஜயசந்திரிகா, விஜயமாலா, சகுந்தலா, குமாரி, எஸ்.வி.ராமதாஸ், வி.எஸ்.ராகவன், என்.சங்கர், ஜி.மகாலிங்கம், கே.பி.ராமகிருஷ்ணன், பிரபாகர், கிட்டான், சி.எஸ்.பாண்டியன், "கரிக்கோல்"ராஜ், சண்முகம், உசிலைமணி, சாமி, தண்டபாணி, "சமையல்"மணி, சதன், பாலகிருஷ்ணா, ராமு மற்றும் பலர் நடிப்பது.
இசையமைப்பு:-"மெல்லிசைமன்னர்"எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.
பாடல்கள்:-வாலி+வயலார்[மலையாளம்]+கொசராஜூ[தெலுங்கு]+விஜயநரசிம்ஹா[கன்னடம்] ஆகியோர்.
உரையாடல்:-ஆர்.கே.சண்முகம் அவர்கள்.
தயாரிப்பு:-திருமதி.டெமினா.டி.டெரானி & பெர்விஸ்.டி.டெரானி ஆகியோர்.
இயக்கம்:-ப.நீலகண்டன் அவர்கள்.
-
எந்திரன் - எம்.ஜி.ஆர் கதை
வணக்கம் மக்களே....
எந்திரன் படத்தை வைத்து சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டதன் விளைவே இந்தப் பதிவு.
சில வாரங்களுக்கு முன்பு ஒரு மாலைப்பொழுதில் நடந்த சம்பவம். தொலைகாட்சியின் ஆட்சி, அதாங்க ரிமோட் கண்ட்ரோல் அந்த கருமாந்திரம் என் தந்தையின் கையில் இருந்தது. மனிதர் மக்கள் தொலைக்காட்சிக்கும் மாக்கள் (டிஸ்கவரி) தொலைக்காட்சிக்கும் தாவிக்கொண்டிருந்தார். இன்ட்லியில் எழுபது வாக்குகள் வாங்கச் சொன்னால் கூட வாங்கிவிடலாம், ஆனால் இவரிடம் இருந்து ரிமோட்டை வாங்குவது கடினம். திருதிருவென்று முழித்துக் கொண்டிருக்கும்போது டபக்கேன்று கே டி.வி வைத்துவிட்டார். அதில் ஏதோ ஒரு எம்.ஜி.ஆர் படம் ஓடிக்கொண்டிருந்தது. போச்சுடா இனி படம் முடியும் வரை சேனல் மாறாதென்று பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.
“ஹீரோவும் ஹீரோயினும் ஒருவரை ஒருவர் லவ்வுகிறார்கள். ஆனால் வில்லனுக்கு ஹீரோயின் மீது ஒருதலைக் காதல். தன் காதலுக்கு இணங்க மறுக்கும் ஹீரோயினை வில்லன் கடத்திக் கொண்டுபோய் வீட்டுக்காவலில் வைத்திருக்கிறார். ஹீரோ அங்கே வில்லனுக்கு தெரியாதபடி மாறுவேஷம் (!!!) போட்டுக்கொண்டு உள்ளே நுழைகிறார். ஆனால் ஹீரோயினுக்கே ஹீரோவை அடையாளம் தெரியவில்லை. வில்லன் கண் அசரும் நேரத்தில் ஹீரோ தனது அடையாளத்தை ஹீரோயினிடம் நிரூபிக்கிறார். இருவரும் அங்கிருந்து தப்பிக்க முயல்கின்றனர். அதற்குள் வில்லன் இருவரையும் பிடித்துவிடுகிறான்....”
என்ன மேலே படித்த கதையை எங்கேயோ கேட்டதுபோல இருக்கிறதா...? இது தான் நம்ம எந்திரன் படத்தோட இரண்டாம் பாதியில் வரும் கதை. இதே கதைதான் அந்த எம்.ஜி.ஆர் படத்திலும் ஓடிக்கொண்டிருந்தது. ஹீரோயினாக .ஜெ. வில்லனாக நடிகர் அசோகன். அப்பாவிடம் என்ன படமென்று கேட்டதற்கு “நீரும் நெருப்பும்” என்று சொன்னார். யூடியூபில் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. பின்னர் கூகிள் கூடையில் தேடித் பார்த்ததில் ஒரு இணைப்பில் முழு படத்தையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
இரட்டை வேடத்தில் எம்.ஜி.ஆர். வெள்ளையாக இருப்பவர் நல்லவர், கறுப்பாக இருப்பவர் கெட்டவர் (அவ்வ்வ்வ்வ்....). மேலே சொன்ன எந்திரன் கதைக்கும் கறுப்பு எம்.ஜி.ஆருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வெள்ளை எம்.ஜி.ஆர் தான் ஜெ.வை காதலிக்கிறார். வில்லன் கடத்திக்கொண்டு போன தகவல் அறிந்ததும் மாறுவேடம் பூணுகிறார். வழக்கமாக பழைய படங்களில் மாறுவேடமென்றால் கன்னத்தில் மரு ஒன்றை ஒட்டிக்கொண்டு வில்லனை ஏமாற்றுவதாக காட்டி மக்களை ஏமாற்றுவார்கள். ஆனால் இந்தப் படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக ஹீரோ ஜப்பான் நாட்டை சேர்ந்த வைர வியாபாரியாக உள்ளே நுழைகிறார்.
வைர வியாபாரியாக தலைவர் பண்ணும் அட்டகாசங்கள் எல்லாம் செம காமெடி. அசோகனிடம் வந்து “யங் பிங் மங் சங்...” என்று . ஜப்பானிய மொழியில் பேசுறாராம். அதைவிட தலைவர் நடக்கும் நடை இருக்கிறதே. அப்பப்பா....! அதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை.
-
எம்.ஜி.ஆரின் ஸ்பெஷாலிட்டின்னா அது வாள் சண்டைதான். வாள் சுழற்றுவதில் இணையற்ற திறமை படைத்திருந்த அவருக்கு ஜாடிக்கேத்த மூடியா அமைஞ்சவரு வில்லன் நம்பியார். ‘கலை அரசி’ன்னு ஒரு படம். அந்தக் காலத்துலயே பறக்கும் தட்டுல பறந்து வேற கிரகத்துக்குப் போறாங்கன்னுல்லாம் கதை அமைச்ச சயன்ஸ் ஃபிக்ஷன். அதுல எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதுவாங்க பாருங்க... அந்த வாள் சண்டையில ரெண்டுபேரும் ஆக்ரோஷமா மோதி, கடைசியில நம்பியாரோட வாளைத் கீழ தட்டி நிராயுதபாணியாக்கிட்டு, ஸ்டைலா நிப்பாரு பாருங்க எம்.ஜி.ஆர். சான்ஸே இல்ல... இப்பப் பாத்தாலும் அந்த சீன் நகம் கடிக்க வைக்கும்.
‘நீரும் நெருப்பும்’ படம் டி.வி.யில அடிக்கடி போடறாங்க. அந்தப் படத்துல சிவப்பா இருக்கற அண்ணன் எம்.ஜி.ஆர். இடதுகைக் காரர். கறுப்பா இருக்கற தம்பி எம்.ஜி.ஆர். வலதுகைக் காரர். ஆக, படத்துல இடது கையால வாளைச் சுழற்றி அவர் சண்டை போடற லாகவத்தைப் பாக்க எக்ஸ்*ட்ரா ரெண்டு கண்ணுதாங்க வேணும். க்ளைமாக்ஸ்ல ரெண்டு கைலயும் வாளை வெச்சுக்கிட்டு சுழற்றி அவர் அசோகனை வீழ்த்தற காட்சி இருக்கே... அபாரம்பா! ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அரசிளங்குமரி’, ‘நாடோடி மன்னன்’ -இப்பிடி நிறையப் படங்கள்ல அவர் வாள் சுழற்றுகிற லாகவத்தை இப்பவும் பாக்கறப்பல்லாம் ரசிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.
-
-
-
[
மக்கள் திலகத்தின் அடுத்த ஆய்வு
ஒருதாய் மக்கள் -1971
-
Quote:
Originally Posted by
esvee
Thanks for updating info about Neerum Nerupum Vinod Sir.
The speciality of the movie is that MGR does the sword fight in left hand. Which many of world action heros did not perform or even tried.