Thanks for sharing the information Yukesh Babu.
Printable View
Screen capture from behind woods website
http://i125.photobucket.com/albums/p...ps97c17606.jpg
நண்பர் திரு.வினோத் அவர்களே,
பெங்களூரில் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்."ஆயிரத்தில் ஒருவன் "
விழா நிகழ்ச்சி /கொண்டாட்டங்கள்,புகைப்படங்கள் பதிவு அனைத்தும்
அற்புதம்.மகிழ்ச்சி. பெங்களூர் பக்தர்கள் அனைவருக்கும், அனைத்துலக
எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாக பாராட்டுக்கள்/வாழ்த்துக்கள்.
தொடரட்டும் தங்களின் மேலான பதிவுகள். என் கடமை , நல்ல நேரம்
குடியிருந்த கோயில் பட விமரசனங்கள் அருமை. தொடரட்டும் நாளைய
நீதிக்கு தலை வணங்கு பதிவுகள் -38 ஆண்டுகள் நிறைவு தினம்.
ஆர். லோகநாதன்.
நண்பர் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு,
காமராஜர் அரங்கில் நேற்று நடந்த புரட்சி தலைவரின் பிறந்த நாள் குறித்த
தங்களின் பாராட்டுக்கு நன்றி.
ஆயிரத்தில் ஒருவன் வசூல் விவரம் ,மற்றும் சென்னையில் அரங்கு நிறைந்த காட்சிகள்-தியேட்டர்கள் விவரம்
மற்றும் இதர பதிவுகளுக்கும் மனமார்ந்த நன்றி.
தொலைபேசியில் தாங்கள் கூறிய செய்திகளுக்கு கருத்து தெரிவிக்க
முடிவு எடுக்கு முன்பு நண்பர் திரு. வினோத் அவர்களின் வேண்டுகோள்கள் கண்டபின் முடிவில் மாற்றம் செய்யவேண்டியதாகி
விட்டது.
தொடர்ந்து புரட்சி தலைவரின் புகழ் பாடுவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவோமாக.
ஆர். லோகநாதன்.
காமராஜர் அரங்கில் திரு கமல்ராஜ் தலைமையில் பல மலேசியா கலைஞர்கள் கலந்து கொண்ட தர்மத்தின் தலைவன் எம்.ஜி.ஆர் மன்றம் இலவச அனுமதியுடன் நடத்திய விழா புகைபபடங்கள் தொடரும்.... இந்த விழாவில் ஏழை மக்களுக்கு பல நலத்திட்டங்கள்/உதவிகள் வழங்கப்பட்டது. எந்தவிதமான ஆர்பாட்டமும் இல்லாமல் நடந்த விழாவில் மக்கள் சேவை ஒன்றே பிரதானமாக கருதப்பட்டது. வாழ்க திரு கமல்ராஜ் அவருடன் வந்த மலேசியா நண்பர்கள் மற்றும் விழ சிறப்பாக நடக்க வருகை புரிந்து நடித்தி தந்த உரிமைகுரல் ஆசிரியர் திரு பீ.எஸ்.ராஜு [BSR] , பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்க உறுப்பினர்கள் மற்ற்றும் அணைத்து பக்தர்கள்.
http://i60.tinypic.com/2a0ylz.jpg