அருமை. நன்றி அய்யா
Printable View
தமிழ் இந்து -18/10/17
http://i65.tinypic.com/xmtwti.jpg
தினச்செய்தி -18/10/17
http://i65.tinypic.com/4sy15x.jpg
தினமணி -18/10/17
http://i63.tinypic.com/zwalba.jpg
http://i65.tinypic.com/2i7ldok.jpghttp://i66.tinypic.com/2n0q72s.jpg
Bala Subramanian
தென்னிந்திய வர்த்தக சபை யின் 25 வது ஆண்டு விழாவுக்காக பிரபல இந்திப்பட தயாரிப்பாளர் - டைரக்டர் மஹபூப்கான் வந்திருந்தார். அவருக்கு திரு.பி.நாகிரெட்டியார் தலைமையில் வாஹினி 4 வது படப்பிடிப்பு அரங்கில் ஒரு வரவேற்பு நடந்தது...அதற்கு திரையுலகப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலர் வந்திருந்தனர்...
விழாவின் சிறப்பு விருந்தினர் பொன்மனச்செம்மல் மக்கள்திலகம் எம்ஜிஆர். அவர் அந்த இந்திப்படத் தயாரிப்பாளரைப் பாராட்டுகையில்..."மஹபூப்" என்றால் "விருப்பமானவர்" என்று அர்த்தம்...தன் பெயருக்கேற்றார் போல் மகா விருப்பமான படங்களை எடுக்கிறார்...
'ரோட்டி', 'படோசி' மற்றும் இந்தியாவின் முதல் வண்ணப்படமான "ஆன் - தாயின் பெருமை, தூய்மையின் கடமையை எடுத்துக்காட்டும் வகையில் இருந்த திரைப்படம்...
திரு மஹபூப் 'ஒரே இரவில் உச்சத்துக்கு வந்தவரல்ல...தன் இளமைப்பருவத்தில் சினிமா ஸ்டூடியோவில் துப்புரவு தொழிலாளியாக இருந்து...தன் அயராத உழைப்பினால்...படிப்படியாக முன்னேறி...இந்த அளவுக்கு உயர்ந்திருக்கும் அவரை வணங்குகிறேன் ..." என்று பேசினார்.
விழா முடிந்தது... தினத்தந்தியின் நிருபர் ஜோசப் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையின் நிருபர் சுந்தர்ராஜன் இருவரும் எம்ஜிஆர் அவர்களிடம் "மஹபூப் சாரின் ஆதிநிலையை எப்படிச் சொல்லலாம். அவர் ஸ்டூடியோவில் பெருக்கியதை சொல்வது இப்போது உள்ள அவங்களோட உயர்ந்த நிலைக்குக் கேவலமில்லையா ? அவர்கள் புகழ் இப்போது சினிமா உலகில் இமயம் அளவுக்கு வளர்ந்து இருக்கிறதே !!! " என்று கேட்டார்கள்...
அதற்கு எம்ஜிஆர் அவர்களின் பதில் மகா தத்துவஞானி போல் இருந்தது... அவர் சிரித்துக்கொண்டே சொன்னார் :
"ஒருவரது ஆதிநிலை மரத்துக்கு வேர் போன்றது. வேர் அழுக்காக சேறாகத் தான் இருக்கும். அதைக் கழுவிப் பார்க்க முடியாது. ஆனால் வேரில் இருக்கும் சேறு தான் பழத்துக்கு இனிப்பையும், சுவையையும், மணத்தையும் தருகின்றது... அதுபோல ஒருவரது கஷ்டம் தான் அவரது நிலையை மேம்படுத்துகிறது...இந்த உண்மையை நானும் உணர்ந்தவன். மஹபூப் சாரும் உணர்ந்தவங்க. அதனால தப்பா எடுத்துக்கமாட்டாங்க..."
என்றார்.
அந்த இருவரும் மன்னிப்புக் கேட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்...
நன்றி -பாலா சுப்பிரமணியன் முகநூல்
http://i66.tinypic.com/16gic5t.jpg
அடிமைப் பெண் படத்துக்கு மக்கள் திலகத்துக்கு 1970-ம் ஆண்டிலே பிலிம்பேர் பத்தரிக்கை விருது வழங்கபடிருக்கின்றது. ராஜ்காபூர் புரட்சித் தலைவருடன் பேசுகின்றார்.
பம்பாயில் எம்ஜிஆர் என்று ஆனந்தவிகடன் பத்தரிக்கையிலே 1970 வருசம் செய்தி வந்திருக்கிறது. பம்பாயிலே புரட்சித் தலைவரை காண பெருத்த கூட்டம் வந்துள்ளது. படத்தில் பார்க்காலாம்.
பிறுகு வந்த ஆனந்த விகாடன் பத்தரிக்கையிலே மராத்தியாத்திலே இவ்வாளவு எம்ஜிாஆர் ரசிகார்களா என்று ஓருத்தர் கடிதம் எழுதிருக்கார். கீழ உள்ளது. இதிலே கடைசியாக ஆசிர்வாதம் என்பவர் எழுதிருக்கார். இதில் உள்ள பல கடிதங்கள் நான் ஏன் பிறந்தேன் தலைப்பிலே புரட்சித் தலைவர் எழுதிய வாழ்க்கை வரலாற்று தொடருக்கு பாராட்டி இருப்பதை பா்ர்க்கலாம்.
http://i64.tinypic.com/2likcvc.jpg