நண்பரே !
முகநூலில் வந்த செய்தியை பதிவு செய்திருந்தேன். தங்கள் விளக்கத்திற்கு நன்றி.
Printable View
ஹீரோ* 1972* * * மக்கள் திலகம்* எம்ஜிஆர் .
பிரபல* இயக்குனர் ஸ்ரீதர்* அவர்கள்* நடிகர்* சிவாஜியை* வைத்து ஹீரோ* 72 என்ற* படத்தை எடுப்பதாக* விளம்பரம்* தந்தார் . பிறகு* படத்தின்* தலைப்பை* வைர நெஞ்சம்* என்று* மாற்றி* 1975ல்* வெளியிட்டார் .
1972ல்* எம்ஜிஆர்* - சிவாஜி* இருவரும் சினிமாவில் உச்ச நிலையில்* இருந்தார்கள் . எம்ஜிஆரின் செல்வாக்கும் புகழும்* சற்று அதிகமாகவே* இருந்தது .1971ல் சிறந்த* நடிகருக்கான* பாரத்* விருது* 1972ல்* எம்ஜிஆருக்கு** கிடைத்தது .* கலை* மற்றும் அரசியல் துறையினர்* அனைவரும்* எம்ஜிஆரை* பாராட்டினார்கள் . எம்ஜிஆர் சினிமாவின்* ஹீரோ 1972 ஆனார் . அதே ஆண்டு* அக்டோபரில்* *வீசிய* அரசியல் புயலில் எம்ஜிஆர்* இமயமென* உயர்ந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆனார் . இப்போது* சொல்லுங்கள்* ஸ்ரீதர்* *ஏன் தன்னுடைய படத்தின் தலைப்பான* ஹீரோ 72 மாற்றினார் ? எவர் கிரீன்* ஹீரோ எம்ஜிஆர்* என்பதை**உணர்ந்து* ஹீரோ 72க்கு* பொருத்தமானவர்* எம்ஜிஆர் தான்* என்று மக்களுக்கு* உணர்த்தினார் .
: அபூர்வ மனிதர் எம்.ஜி.ஆர்
ஒரு மழை காலத்து குடைபோல சினிமா, தமிழக மக்களின் மீது எப்போதும் கவிழ்ந்தே கிடக்கிறது. ஐம்பதுகளில் சினிமாவை ஆக்ரமித்தவர்களின் வழித்தோன்றல்களே இன்றும் அரியணையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள் வலுவாக.
எங்களுக்கான தலைவர்களை நாங்கள் தியேட்டர்களில் தேடுவதில்லை என்றார் கேரள நடிகர் மோகன்லால். அரசியல் கலாச்சார பின்னணியில் அந்த கூற்று சரியே. தமிழகத்தில் சினிமாவின் மீது மக்களுக்கு இருந்த ஈர்ப்பு, கலை என்ற ஒன்றை மீறி தனிமனித ஈர்ப்புக்குள்ளானதில் பின்னாளில் கதாநாயகர்களின் களம் மாறியது; காட்சி மாறியது. இந்த இடத்தில் மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரனின் வரவு முக்கியமானதாகிறது. அவர் வேறு யாருமல்ல எம். ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன். இன்று அவரது 26வது நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.
இன, மொழி உணர்வும், பாரம்பரியமும் கொண்ட ஒரு மாநிலத்தில் அம்மாநிலத்தை சாராத அல்லது அப்படி நம்பவைக்கப்பட்ட ஒருவர், சுமார் 40 ஆண்டுகாலம் கலை, அரசியல் என்ற இருவேறு தளங்களில் வெற்றிகரமாக எப்படி இயங்கினார் என்பது ஒரு இமாலய புதிர். அது ஆழமான ஆராய்ச்சிக்குரியதும் கூட. சினிமா என்ற சக்தி மிக்க ஊடகத்தை, வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் கருதாமல் அதை கைக்கொண்டு உச்சபட்ச வெற்றி கண்டவர்களில் உலகளவில் முதலாமவர் எம்.ஜி.ஆர். ரொனால்டு ரீகனும் இவருக்கு அடு்த்துதான். கலைத்துறையில் அவரது வெற்றிக்கு உழைப்பும், திறமையும் காரணம் என்றால் அரசியலில் அவர் பெற்ற வெற்றிக்கு காரணம் மனிதநேயம்.
: 40களின் மத்தியில் நடந்த சம்பவம் இது. வால்டாக்ஸ் சாலையில் நாடக ஒத்திகை முடிந்து திரும்பிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரிடம், எப்போதும் அவரே உடன் வருபவர்களுக்கு தேனீர் வாங்கித்தருபவதை குறிப்பிட்டு சகநடிகர் ஒருவர், "ஏன்ணே எப்போதும் நீங்களே ஏன் செலவழிக்கிறீங்க. மத்தவங்களையும் செலவு பண்ண விடுங்களேன்" என்கிறார். சொன்னவரை உற்றுப்பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர் பதில் சொன்னார். "எனக்கென்ன புள்ளையா குட்டியா, அதுமட்டுமில்லாம நான், என் அண்ணன்னு எங்க வீட்டுக்கு 2 சம்பாத்தியம். ஆனா இவங்க ஒருத்தர் வருமானம்தான அவங்கவீட்டுக்கு ஆதாரம். அதுதான் நானே செலவு பண்றேன்" என்றாராம். நெகிழ்ந்துபோனார் கசநடிகர். அதுதான் எம்.ஜி ஆர். அவரது வெற்றியின் ரகசியமும் இதுதான்.
தன்னம்பிக்கைக்கு உதாரணமான வாழ்க்கை அவருடையது. வறுமை நாடக உலகிற்கு துரத்துகிறது. அங்கிருந்து சினிமாவை அடையும்போது பிரபல நடிகர்களின் புறக்கணிப்பு. அவற்றை மீறி சினிமா உலகின் தனக்கான இடத்தை தக்கவைத்தபோது காலொடிந்து கட்டாய ஓய்வு எடுக்கவேண்டிய நிலை. அதிலிருந்து மீண்டு அரசியலிலும், சினிமாவிலும் பிரபலமடைந்த நேரத்தில்* துப்பாக்கிச்சூடு சம்பவம். அரசியலிலும், சினிமாவிலும் வெற்றிகரமாக இயங்கும் ஒருவருக்கு அது எத்தனை மோசமான பாதிப்பு என கற்பனை செய்து பாருங்கள். அதிலிருந்தும் தன் தன்னம்பிக்கை குலையாமல் மீண்டு முன்பைவிட வேகம் பெற்று இயங்கினார்.
அரசியலில் அவர் பெற்ற வெற்றி யாரும் அணுகிப்பார்க்க முடியாதது. ஏழை மக்களின் மீது அவர் நிஜமான பாசம் கொண்டவராக இருந்தார். வறுமை வாணலியில் வறுத்தெடுக்கப்பட்ட அவர், தன் கடைசிக்காலம் வரை அதை மறக்காமலிருந்தார். சத்துணவு இன்றும் அவர் பெயர் சொல்ல அதுவே காரணம். பல்பொடியும் செருப்பும் அவர் மனிதநேயத்தின் உச்சம் என்றே சொல்லலாம். இந்த விஷயத்தில் எத
இந்த விஷயத்தில் எதிரிகளாலும் நேசிக்கப்பட்ட அபூர்வ மனிதர் அவர்.
அவரின் இறுதிக்காலம் வரையிலும் மக்கள் அவர் மீது கொண்ட பாசம் குறையாமல் இருந்தது. தமிழகத்தில் வேறு எந்த தலைவருக்கும் வாய்த்திருக்குமா என்பது சந்தேகமே. ஏழைகளுக்கென தனி நபராக மருத்துவமனை நடத்திய சாதனையாளர் அவர். திரைப்படங்களில் நல்ல நல்ல கருத்துக்களை சொல்வதில் உறுதியாக இருந்தவர். நாடு முழுவதும் ஒட்டப்படுகிற போஸ்டர்களில் நல்ல கருத்துக்கள் இருக்கட்டுமே என தன் திரைப்படங்களின் தலைப்புகளில்* திருடாதே, தர்மம் தலைகாக்கும் என்ற ரீதியிலான நேர்மறையான கருத்துக்கள் இடம்பெற வைத்தார்.* எதிர்மறையான விஷயங்களை திரைப்படத்தின் மூலம் பரவுவது நாம் கலைக்கு செய்யும் துரோகம் என்பதை லட்சியமாக கொண்டிருந்தார். பெரிய திட்டமிடல் இல்லாத அவரது சினிமா வாழ்க்கை, அவரது சக அரசியல் கூட்டாளியால் திசைமாற்றிவிடப்பட்டு ஒரு போராட்ட களத்திற்குள் இழுத்துவிடப்பட்டபோது, வெகு சாமர்த்தியமாக அதை கையாண்டார்; வெற்றியும் கண்டார்.* அசாத்தியமான அந்த வெற்றி, மக்கள் சக்தி அவருக்கு தந்த மகத்தான பரிசு.
அரசியலில் அவரது அணுகுமுறை சில சமயங்களில் கேலிக்குள்ளானதும் உண்டு. மத்தியில் எந்த அரசு வந்தாலும் ஆதரிக்கிறீர்களே? என்ற கேள்விக்கு, "நான் தனி மனிதனல்ல. ஒரு மாநிலத்தின் முதல்வர். அந்த வகையில் நாட்டின் நலன் கருதி ஆதரிப்பதில் தவறில்லையே!" என்றார் இயல்பாக. பின்பு அவரே ஒரு சமயம் மத்திய அரசை எதிர்த்து ராணுவத்தை சந்திக்க தயார் என வாளை சுழற்றியிருக்கிறார். இப்படி அரசியலில் வளைவும், நிமிர்வுக்கும் உரியவராக இருந்தார்.* அரசியலில் அதை குறை என்றார்கள் சிலர். ஆனால் குறை சொன்னவர்களின் அரசியல் பங்களிப்பைத்தான் குறைத்தார்களே தவிர, எம்.ஜி.ஆரின் மீதான பாசத்தை குறைத்துக்கொள்ளவில்லை மக்கள்.
தன் மீதான எல்லா விமர்சனங்களுக்கும் அவர் மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற ஒற்றை வார்த்தையை மந்திரமாக பயன்படுத்தினார். மக்கள் மீது அவர் செலுத்திய அன்பின் மீதான நம்பிக்கை அது. அதுதான் தான் பல்லாண்டு காலம் சேவை செய்த ஒரு கட்சியிலிருந்து தூக்கியெறிப்பட்டபோது அவருக்கு பலமாக இருந்தது. தன் அரசியல் எதிரியான கருணாநிதியுடன் முரண்பட்டு கட்சி துவங்கி ஆட்சிப்பொறுப்பேற்றதிலிருந்து தன் வாழ்வின் இறுதிப்பயணம் வரை அசைக்க முடியாத முதல்வராக அவர் விளங்கியது அரசியலில் ஆச்சர்யமான நிகழ்வு. மறைந்து 30 ஆண்டுகளானபின்னும் இன்றும் அவரது புகழ் குன்றாமல் இருப்பது மக்களின் மீதான அவரது நேசத்தின் அடையாளம்... Thanks to WhatsApp Puratchi Nadigar Fans...
மதுரை ராமில் கடந்த 18/5/18 முதல் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 3, சனி ஞாயிறு 4 காட்சிகள் திரையிடப்பட்டது .
http://i64.tinypic.com/2nsxrtd.jpg
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார்.
தினத்தந்தி -22/5/18
http://i66.tinypic.com/2nrcz7p.jpg
தினத்தந்தி -20/5/18
http://i67.tinypic.com/i1z620.jpg
தினமலர் -நெல்லை -16/5/18
http://i66.tinypic.com/14lngq1.jpg
தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி.ராஜா .