மோகன்,
அன்றைக்கு ராம்குமார் பேட்டியைப் பார்த்தீர்களா?. இந்த சிலை திறப்பு விழா ஆகஸ்ட் 15 அல்லாமல் வேறு நாளாக இருந்தால், நிச்சயம் முதல்வர் கலைஞர்தான் திறந்து வைப்பார். ஆனால் அன்று சுதந்திர தினமாதலால், கோட்டையில் கொடியேற்றல், அணிவகுப்பு மரியாதை என்று அன்றைக்கு முழுதும் முதல்வர் சென்னையில் இருக்க வேண்டியுள்ளது. அன்றைய தினம் அவரால் தஞ்சைக்கு வரமுடியாது என்பதுதான் முக்கிய காரணம். அதற்கு பதிலாக அக்டோப்ர் 1 அன்று சென்னையில் நடைபெற இருக்கும் நடிகர்திலகத்தின் 80-வது பிறந்தநாளின் சிறப்பு விருந்தினர் முதல்வர்தான் என்று சொல்லியிருந்தார்.