சமீபத்தில் 'உன்னைப்போல ஒருவன்' வெற்றிப்படத்தைக் கொடுத்துள்ள டாக்டர் கமல், முந்தாநாள் கலைஞர் தொலைக்காட்சியில், தொலைபேசிமூலம் நேரடியாக ரசிகர்களுடன் உரையாடினார். ரசிகர்களுக்கு குறைவான வாய்ப்பே கிடைத்தது. பெரும்பாலும் திரையுலக பிரமுகர்களே ஆக்ரமித்துக்கொண்டனர். சில வி.ஐ.பிக்கள் வேறு பெயரில் பேசி கலாய்த்தனர்.Quote:
Originally Posted by Murali Srinivas
அப்போது ஃபோனில் "ஐ ஆம் ராம்குமார், ஃப்ரம் மதுரை" என்ற குரல் கேட்டது. நடிகர்திலகத்தின் மூத்த புதல்வர், சகோதரர் ராம்குமார்தான் பேசினார். (சமீபத்தில் வசந்த் டி.வி.யின் 'சிங்கத்தமிழன் சிவாஜி' நிகழ்ச்சி மூலம் அவர் குரல் நமக்கு நன்கு பரிச்சயமாகியிருந்தது). கமலிடமிருந்து உடனடியாக ஒரு ஆக்ஷன் படத்தைப்பார்க்க விரும்புவதாகக் கூறினார். அன்னை இல்லத்தில் இருந்துகொண்டு, மதுரையில் இருந்து பேசுவதாக சும்மா கமலைக் கலாய்க்கிறார் என்று நினைத்தோம்.
இப்போ உண்மை புரிந்தது... , நிஜமாகவே அப்போது மதுரையில்தான் இருந்திருக்கிறார்.