Gap filler from Kalathoor Kannamma!
https://www.youtube.com/watch?v=3vFw2qwKYCU
Printable View
Gap filler from Kalathoor Kannamma!
https://www.youtube.com/watch?v=3vFw2qwKYCU
Monotony breaker!
ஜெமினியின் சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் வைஜயந்தியாமே !!
https://www.youtube.com/watch?v=c6w7JmD59Es
நவம்பர்17 ஜெமினியின் 95 வது பிறந்த நாள் நினைவலைகள்!!
காதல் மன்னரின் குரல் மன்னர் ஏ எம் ராஜா ! Songs/karaoke/instrumental 1
சிறுவயதில் நான் முதல் முதலில் செவி மடுத்த திரைப்பாடல் தேன்மதுரக் குரல் ஏ எம் ராஜா ஜெமினிக்கு வழங்கிய பணிக் குழைவான மிஸ்ஸியம்மா கானம் வாராயோ வெண்ணிலாவே !
அந்த சிறுவயதிலேயே காதல் மன்னரின் டிப்டாப்பான உடையலங்காரம் நெற்றி நிறைய சுருண்டு தவழும் அடர்த்தியான கேசம் அவர் கண்களில் கொப்பளிக்கும்
குறும்பு மனதை வசீகரிக்கும் மேனர்ஸ் நிறைந்த பேச்சு எல்லாமே அவர்பால் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது! இந்தப் படத்தில் இனிமையான இப்பாடல்
காட்சியமைப்பு மனதை இதமாக வருடி ரசனையில் மூழ்கடிக்கும் இந்தக் காலம் வரை ஜெமினி என்றதும் மனதில் தோன்றும் ராஜாவின் குரலும் இப்பாடலும் சாகாவரம் பெற்றவையே ! சாவித்திரிய்ன் கோபதாபங்களும் முறுவலிக்க வைக்கும்!
https://www.youtube.com/watch?v=oRrnQg4SboQ
https://www.youtube.com/watch?v=mxRs8Uasa3Q
https://www.youtube.com/watch?v=Ad5ny2WQr8s
காதல்மன்னரின் பிறந்தநாள் நினைவோட்டம் !
மிஸ்ஸியம்மா மதுர கான நினைவலைகள் !
Quote:
ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படமே இக்கணம் வரை மிகச்சிறந்த தமிழ் நகைச்சுவைப் படமாகக் கொண்டாடப் படுகிறது !
அருமையான வண்ணக் குழைவில் அற்புதமான விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை இணைவில் தேனினும் இனிய பாடல்களோடு இளமை பொங்கும் நாயக நாயகியர் நகைச்சுவை ஜாம்பவான்கள் பாலையா நாகேஷ்! ...சிவாஜி எம்ஜியார் ஜெமினி மூவேந்தர் திரையாண்ட காலகட்டத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து வெள்ளிவிழா கண்டது சாதைனையே!
இருந்தாலும் அதற்க்கு முன்னரே கருப்புவெள்ளை காலகட்டத்தில் வழவழ கொழகொழ வசன இழுவைகளும் தடுக்கி விழுந்தால் பாடல்களும் இல்லாமல் யதார்த்தமான மெல்லிய நகைச்சுவை இழையோடும் கதையமைப்பில் சிரிப்பு விருந்தாக வெளிவந்து இன்றும் தியேட்டர்களுக்கு குடும்பங்களை ஈர்க்கும் தரமான நகைச்சுவை காவியம் மிஸ்ஸியம்மா !
பணி நிமித்தம் வெவ்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் ஜெமினி கிறித்துவப் பெண்ணான சாவித்திரி தங்க இடமின்றி கணவன் மனைவியாக நடித்து ரங்காராவ் வீட்டில் வாடகைக்கு ஒன்றாகத் தங்க நேர்ந்த சூழலில் நடக்கும் சிரிப்புக் கூத்துகளும் கூத்திலே கோமாளியாக இரண்டுங்கெட்டான் ஜமுனா இடைசெறுகலாக அடிக்கும் லூட்டிகளும் துப்பறியும் தங்கவேலு வேடிக்கை வில்லனாக.. நம்பியார்..... டைமிங் காமெடியில் அந்தக் கால தம்பி ராமையா மைண்ட் வாய்ஸ் சாரங்கபாணி ....தமிழின் மிகச் சிறந்த ஆபாசஅருவருப்பில்லாத மனதை லேசாக்கும் நகைச்சுவைக் காவியத்தில் இசையும் பாடல்களும் அபாரமான வரவேற்பு கண்டன !
https://www.youtube.com/watch?v=KvR9I7Jvzos
என்னவொரு பொசசிவ் காதலி சாவித்திரி !
இரண்டுங்கெட்டான் ஜமுனாவை ஜெமினி வலையில் விழாமல் ஒதுக்கி தனது மன்னரைத் தக்கவைக்க எப்படியெல்லாம் ஜமுனாவுக்கு எச்சரிக்கை மணியடிக்கிறார் !!
https://www.youtube.com/watch?v=h7nBY1PLC14
ஜெமினி ஏ எம் ராஜாவின் தேன்குரலில் பாடலைத் தொடங்கும்போது அவர்மேல் கொண்ட கோபம் கதிரவனைக் கண்ட பனிபோல மறைந்து என்னவொரு பெருமிதமான ஆழ்மனக் காதல் லுக் விடுகிறார் நடிகையர்திலகம் !
https://www.youtube.com/watch?v=Em1dcjlhnt4
My favourite songs from Gemini Ganesan starrer films:
Ezhai Pangalan - Manadil enna mayakkam
https://www.youtube.com/watch?v=pjsqk0R8YDc
ராகினியை அந்தக் கால ஜோதிகா எனச் சொல்லலாமா..
மறக்க முடியாத பாடல்..
அதே ஏழை பங்காளன் படத்திலிருந்து...
https://www.youtube.com/watch?v=RVxB_C1b12U
கே.வி.எம். ஜெமினி இணை சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்ததாக்கும்...
ஏழை பங்காளன் பாடல்களுக்காகவே அமைந்த படம்.
இதோ இதுவும் லேசுப்பட்டதா என்ன
https://www.youtube.com/watch?v=plbSfT87Ppk
https://www.youtube.com/watch?v=yfx1kel88PE
இந்த பாட்டு மட்டும் வேறு யாருக்காவது கிடைத்திருந்தால் தினமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் ஒலிபரப்பப் பட்டு வந்திருக்கும்.
https://www.youtube.com/watch?v=IIzIetyExbU
அருமையான பாடல்.
காதல் மன்னரின் பெருமை போற்றும் நினவோட்டத்தில் பங்களித்துக் கொண்டிருக்கும் நடிகர்திலக ரசிகமணி ராகவேந்தர் சாருக்கு அமரர் ஜெமினியின் திரைச் சாதனைகளின் திரி சார்ந்த நல்வரவும் நன்றிகளும்!!
செந்தில்