Thank you SudhaQuote:
Originally Posted by sudha india
Printable View
Thank you SudhaQuote:
Originally Posted by sudha india
மனைவி சங்கீதாவிடம் அழகாகப் பேசி கோயிலுக்கு அழைத்துச்செல்லும் வழியில், பாஸ்கர் தன் சுயரூபத்தைக்காட்டுவதுடன், அவள் அப்பாவைக்கொன்றதும் தான்தான் என்ற உண்மையையும் போட்டு உடைக்கிறான். (அப்போது அவளுக்கு அவ்வளவு அதிர்ச்சி தேவையில்லை. அதான் ஏற்கெனவே அந்த குவாரியில் வேலைபார்த்த மேனேஜர் சொல்லியிருக்கிறாரே).
வேகமாகச்செல்லும் காரில் இருந்து அவளைத்தள்ளிவிட்டு, தனக்குப்பாதகமில்லாமல் மெதுவாக காரை கொண்டுபோய் ஒரு புளியமரத்தில் மோதி நிறுத்துகிறான். அவ்வழியே வரும் 'உலகப்பரோபகாரியான' அபி இதைப்பார்த்துவிட (அதென்ன இதுமாதிரி சம்பவங்கள் நடக்குமிடத்தில் அபி அல்லது தொல்காப்பியன் கரெக்டாக வந்து சேர்கின்றனர்?) ஆம்புலன்ஸுக்கு போன் செய்து ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட, அங்கு சங்கீதா இறக்கிறாள். அலமேலுவின் ஒப்பாரி எல்லை மீறுகிறது. தன்னை கடவுள் ரொம்பவே சோதிக்கிறான் என்று புலம்புகிறாள். (இந்த வார்த்தைகளைச்சொல்ல அலமேலுவுக்கு என்ன யோக்கியதை இருக்கிறதென்று தெரியவில்லை. நன்றாக இருக்கும் நேரங்களில் அடுத்தவர் வாழ்வில் மண்ணைப்போடுவதைத்தவிர வேறு எதையும் அவள் செய்யவில்லை. அபி, ஆனந்தி கல்யாணத்தை நிறுத்த மந்திரவாதியிடம் போனவள், இப்படி புலம்பும்போதே அவள் நாக்கு அழுகுவதாக காட்டியிருந்தால், கடவுள் இருப்பதை ஓரளவு நம்பலாம். தெய்வம் நின்று கொல்லுமாம். எப்போ..? தொண்ணூறு வயதுக்குப்பிறகா?)
அபியிடம் அலமேலு ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கும்போதே, ஆர்த்தி வருகிறாள். உஷாவும் தொல்காப்பியனும் வருகின்றனர். தொல்ஸைக்கண்டதும் ஆர்த்தி வேறு பக்கம் திரும்பிக்கொள்கிறாள். (இருந்தாலும் ஆர்த்தியின் சாப்பாட்டில் தொல்ஸ் இவ்வளவு மண்ணை அள்ளிப்போட்டிருக்கக்கூடாது). பாஸ்கருக்கு ரத்தம் தேவையென்றதும் அபி, ஆர்த்தி, தொல்ஸ் மூவரும் ரத்தம் கொடுக்க முன்வருகின்றனர் (மூவருக்கும் 'பி+'...?. சரி, கதைதானே. சிந்துபாத் கதையில் மட்டும்தான் லாஜிக் பார்க்கக்கூடாதென்று சட்டம் எதுவும் இல்லையே).
தேர்தலில் தோற்ற ஆதித்யா, கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் லெவலுக்கு வந்துவிட்டான். ஜெயித்துக்கொண்டேயிருப்பவர்களுக்கு சின்ன தோல்வியைக்கூட தாங்க முடியாது. தன்னை நம்ப வைத்து கழுத்தறுத்த தேவராஜ் பாண்டியன் மேல் பாய்கிறான். வரதராஜன் தப்பித்து வந்து காரியத்தைக்கெடுப்பார் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லையே. அதுவும், தோற்றது அபியிடம் அல்லவா?.
தன் வீட்டாரிடம் அவனது தோல்வியை ஒப்புக்கொள்ள மனம் வரவில்லை. வாய்க்கு வந்தபடி புலம்புகிறான். அபியின் வெற்றியை அறிந்து சந்தோஷப்படும் அப்பாவின் மேல் சீறி விழுகிறான். ஆதியைப் பற்றி என்னமோ பெரிசாக நினைத்த காஞ்சனாவுக்கும், ரேகாவுக்கும், அனுவுக்கும் அபியின் வெற்றி அதிர்ச்சியளிக்கிறது.
அலமேலுவின் வீட்டில் சங்கீதாவின் படத்துக்கு மாலையிட்டு வைக்கப்பட்டிருக்க அபி, கற்பகம், ஆர்த்தி இவர்கள் மத்தியில் 'சங்கீதாவையே நினைத்து உருகுவதாக' அழுது அழுது போலி நாடகம் ஆடுகிறான் பாஸ்கர். உலகப்பரோபகாரியான அபிக்கு பாஸ்கர் மேல் கொஞ்சம் கொஞ்சமாக அனுதாபம் வருகிறது. ஒருகட்டத்தில், 'பாஸ்கர், கவலைப்படாதீங்க. உங்களுக்கு நான் இருக்கேன்' என்று சொல்லும் அபியைப்பார்த்து அதிர்ச்சியடையும் கற்பகம், இனிமேல் அவளை அங்கே விட்டுவைத்தால் முதலுக்கே மோசம் என்று நினைத்து அபியை வீட்டுக்குப்போவோம் என்று அழைக்க, அபி அம்மாவை முதலில் போகும்படியும் தான் பின்னர் வருவதாகவும் சொல்ல, அலமேலுவும் அபி இருக்கட்டும் என்று சொல்ல (இந்த மாதிரி ஜென்மங்களுக்கு எத்தனை நாக்குகள்..?), கற்பகம் வலுக்கட்டாயமாக அபியை அழைத்துச்செல்கிறாள். (டாக்டர் மகேஷோடு கல்யாணம் நிச்சயித்திருக்கும்போது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிடக்கூடாதென்று கற்பகம் பயப்படுவது நியாயம்தானே).
பாஸ்கரின் வீட்டுக்கு அபி, கற்பகம், ஆர்த்தி போய்வந்தது ஆனந்திக்கு பிடிக்கவில்லை. இது அந்த பாஸ்கருக்கு கிடைத்த சரியான தண்டனைதான் என்கிறாள். அபியோ, இன்னமும் பாஸ்கரின் மீதும் குழந்தை மீதும் ரொம்பவே கரிசனமாகவும் அனுதாபமாகவும் பேசுகிறாள். இது ஆனந்திக்கு மட்டுமல்ல கற்பகம், சாரதா இவர்களையும் முகம் சுளிக்க வைக்கிறது. துக்கம் கேட்க போனோமா வந்தோமா என்றில்லாமல், இன்னும் ஏன் அவர்கள் மேல் கரிசனம் காட்டுகிறாள் என்று அவர்களுக்கு சங்கடம் (நமக்கும்தான்).
பாஸ்கர் ஒன்றும் அனாதை அல்ல. அம்மா இருக்கிறாள், தங்கையும் தங்கையின் கணவரும் இருக்கின்றனர். சங்கீதா கொடுத்த சொத்தும் பணமும் ஏராளமாக இருக்கின்றன. அப்புறம் என்ன?. இருக்கும் வேலைகளை விட்டு விட்டு அபிக்கு ஏன் இந்த புது தலைவலி?. ஓ... ஸாரி... மேடம் அவர்கள் உலகப்பரோபகாரியாச்சே. ஆனால் அவங்க தெருவின் கடைக்கோடி வீட்டில் இருப்பவரின் மனைவி இறந்தபோது அவருக்கு அனுதாபப்பட்டு உதவிக்குப்போகவில்லையே?. இத்தனைக்கும் அவர் அபிக்கும் தொல்காப்பியனுக்கும் தகாத உறவு இருப்பதாக கோர்ட் ஏறி சாட்சி சொல்லாதவர். அபியை ஒழித்துக்கட்டுவதாக சபதம் செய்யாதவர். அவர் மேல் இல்லாத அனுதாபம் இந்த அயோக்கியன் மேல் ஏன்?. ஸாரி, சில அனுதாபங்கள் நமக்கு இரக்கத்தை ஏற்படுத்தும். சில அனுதாபங்கள் நமக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அபி இரண்டாவது வகை.
வள்லலார், மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, விவேகானந்தர், அன்னை தெரஸா இவர்களின் மொத்த உருவமாக அபி மேடம் உருவாக விரும்புகிறார் போலும். ஸாரி மேடம், உங்க நடவடிக்கைகள் எரிச்சலையே தருகின்றன. பாஸ்கரை மன்னிக்கும்போது, உங்க தம்பி ஆதியையும் நீங்க மன்னிக்கலாமே மேடம். அவன் விஷயத்துல மட்டும் ஏன் பிடிவாதம் பண்றீங்க?.
அபி ஆஃபீஸுக்கு கிளம்பும் நேரம் டாக்டர் மகேஷ் வந்துவிட, அவன் கண்ணெதிரிலேயே, 'தான் போகும் வழியில் பாஸ்கரையும் குழந்தையையும் பார்த்துவிட்டு' ஆஃபீஸ் போவதாகச்சொல்லிப்போகிறாள். இது யாருக்கும், குறிப்பாக ஆனந்திக்குப் பிடிக்கவேயில்லை. ஆனால், அபி செய்வது தவறில்லை என்று மகேஷ் சொல்கிறான்.
மேனகா 'பாசமலர்' படத்தின் கிளைமாக்ஸை டிவியில் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அண்ணன் தங்கை பாசம் பற்றி அவளுக்கும் அவளது 'வளர்த்த அப்பா'வுக்கும் விவாதம் வர, 'உனக்கு ஒரு அண்ணன் இருந்தால் அந்த பாசம் பற்றி தெரியும்' என்று 'அப்பா' சொல்ல, உடனே அவள் அண்ணன் தொல்காப்பியனின் நினைவுகளில் ஆழ்ந்துபோகிறாள். கண்கள் லேசாக கலங்குகின்றன.
ஆர்த்திக்கு கடன் கொடுத்த ஃபைனான்ஸியரையும், சிவசுவையும் ஆதி சத்தம் போட்டுக்கொண்டிருக்கிறான். ஆர்த்தி கையெழுத்திட்ட வெற்றுப்பத்திரத்தை வைத்து அவளை டார்ச்சர் பண்ணுமாறு சொல்வதோடு, ஆர்த்தி ட்ராவலாஸ் வண்டி எதுவும் ஓடக்கூடாதென சிவசுவிடம் சொல்ல, அவ்ற்றை ஏற்கெனவே ராஜேஷ் மார்வாடியிடம் அடமானம் வைத்து தன் 'செட்டப்' கவிதாவிடம் கும்மாளம் போட்டு வருவதாகவும், பேங்கில் லோன் போட்டு வாங்கிய வண்டியை அடமானம் வைப்பது தவறு என்றும் சொல்ல, அதையும் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி ஆர்த்தி மற்றும் ராஜேஷுக்கு நெருக்கடி கொடுக்குமாறு சொல்லி இருவரையும் விரட்டுகிறான். தன்னை விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரியிடம் தகாத முறையில் நடந்ததோடு, அவருடைய பெயர்பிளெட்டையும் பிடுங்கி வீசி அவரை அடித்து விட, அவனை ஒருகை பார்ப்பதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டிப்போகிறார். ஆதி தப்பு செய்துவிட்டதாக சொல்லும் கிரியையும் ஆதி அடித்து விரட்டுகிறான்.
முன்பு தொல்காப்பியனை மாட்ட வைப்பதற்காக ஆர்த்தியை தொல்ஸின் செல்போனில் போட்டோ எடுத்தவன், நள்ளிரவில் ஆளரவமில்லாத வழியே தன் மனைவியோடு போகும்போது வழியில் பைக் ரிப்பேராகி நிற்க, அப்போது அந்தப்பெண்ணிடம் நான்கு நவுடிகள் வம்பு பண்ண, தடுத்த கணவனையும் அவர்கள் புரட்டியெடுக்க, அவ்வழியே சுமோவில் வரும் தொல்காப்பியன் (?!?!?!?!) அவர்களை உருட்டுக்கட்டையால் அடித்து விரட்டி, காலில் அடிபட்டிருந்தவனை தன் காரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில், அவனுக்கு தான் தொல்காப்பியனுக்கு செய்த துரோகம் மனதில் ஓடுகிறது. அனேகமாக மனம் மாறி தொல்ஸுக்கு ஆதரவான சாட்சியாக மாறக்கூடும்.
ஆதியை அழைக்கும் மேனகா, ஆனந்தியின் பத்திரிகையில் தான் வாங்கியிருக்கும் ப்ளாட் பற்றியும் ,அதைக்காலி செய்ய அடாவடித்தனங்கள் செய்வதாகவும் எழுதியிருப்பதையும், அதில் ஆதியையும் குறிப்பிட்டு எழுதியிருப்பதையும் காட்டுவதுடன், தன்னிடம் விற்க மறுத்தவர்களுக்கு ஆதரவாக தோழர் போராட்டம் நடத்தப்போவதாகவும் சொல்ல, ஆதி மீண்டும் வெறி கொள்கிறான். மேனகா தடுத்தும் கேளாமல் அவர்கள் இருவரையும் கொல்லப்போவதாகச் சொல்லி வெளியேறுகிறான். மேனகாவுக்கு அவனது இந்த நடவடிக்கை பிடிக்கவில்லை என்பதை அவளது கவலை தோய்ந்த முகம் காட்டுகிறது.
welcome back Saradha
:ty:
அபி காரை விட்டு இறங்கி போன் செய்துகொண்டிருக்கும் இடமாகப்பார்த்து, பாஸ்கர் தன் குழந்தையை ரோட்டில் இறக்கி விட்டு விட்டு, தான் குடிபோதையில் காரில் சாய்ந்துகிடப்பதுபோல பாவலா பண்ண், அதையறியாத அபி பாஸ்கரையும் குழந்தையையும் அலமேலு வீட்டுக்கு அழைத்து வர வீட்டில் யாருமில்லை. பாஸ்கரை படுக்கையில் படுக்க வைத்து விட்டு, அபி கூடத்துக்கு வர, அந்நேரம் பார்த்து வித்யாவின் கணவன் வந்து, பாஸ்கரை தான் பார்த்துக்கொள்வதாகச்சொல்ல, அபி வெளியேற, தன் திட்டத்தை பாழடித்த மாப்பிள்ளையை பாஸ்கர் போதையில் உதைப்பதுபோல உதைத்துத்தள்ளுகிறான்.
ஆதியின் ஏவலின்படி ஃபைனான்ஸியர், ஆர்த்தி வீட்டில் வந்து கடன பணத்தை உடனே திருப்பித்தர வேண்டும் இல்லையேல் வீட்டை தன் பெயருக்கு மாற்றித்தரவேண்டும் என்று நெருக்குகிறார். ஆர்த்தியும் ராஜேஷும் இன்னும் கொஞ்சம் அவகாசம் கேட்டு எவ்வளவு கெஞ்சியும் பலனில்லை. வாய்ச்சவடால் பேசும் கலாவையும் அடக்குகிறார். வேறு வழியில்லாமல் வீட்டை தன் பெயருக்கு மாற்றி எழுதிய பத்திரத்தை ஃபைனான்ஸியர் நீட்ட ஆர்த்தி கண்ணீருடன் கையெழுத்திடுகிறாள். இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டை காலி பண்ணித்தர வேண்டும் என்ற கண்டிஷனுடன், தன் அடியாட்களையும் அங்கே விட்டு விட்டு, பக்கத்து வீட்டில் இருக்கும் மனோவிடம் போகிறார். ஆர்த்தியின் வீட்டில் நடந்தவற்றை வாசலில் நின்று ரசித்துக்கொண்டிருந்த மனோவை, தன்னிடம் கடனாக வாங்கிய பணத்தை உடனே திருப்பித்தர வேண்டுமென்றும் இல்லாவிட்டால ஆர்த்தி செய்தது போல வீட்டை எழுதித்தர வேண்டும் என்று கெடுபிடி செய்ய அவனும் திக்குமுக்காடிப்போகிறான். திருப்பித்தர அவகாசம் கேட்டும் பலனில்லாமல் வீட்டுப்பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத்தர, மனோவையும் இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டை காலி செய்யுமாறு எச்சரித்துப்போகிறார்.
அம்மா வீட்டில் இருக்கும் அனுவிடம் இந்த விஷயத்தை மனோ சொல்ல அவள் ஆடிப்போகிறாள். மனோ காஞ்சனாவிடம் போய், ஆதியிடம் சொல்லி பத்திரத்தை திரும்பப்பெற உதவி செய்யுமாறு கூற, அவளோ ஆதி இப்போதுள்ள மனமுடைந்த நிலையில் அவனிடம் இதுபற்றியெல்லாம் பேச முடியாதென்றும், நேரம் பார்த்து பக்குவமாக சொல்லுவதாகவும் சொல்கிறாள். மேலும், ஏற்கெனவே ஒருமுறை ஆதி உதவி செய்ததை சரியானபடி மனோ பயன்படுத்திக்கொள்ளவில்லையென்று சாடுகிறாள். ரேகாவின் முகத்தில் ஏளனப்புன்னகை.
எப்படியோ, ஆதியண்ணாவை நம்பிய இரண்டு குடும்பமும் நடுத்தெருவில்...
இனி 'ஆதியண்ணா' என்ன கதியானார் என்று பார்ப்போம்....
கட்டிடத்தைக்காலி செய்ய மறுப்பவர்களுக்காக களத்தில் குதித்துப்போராடுவது குறித்து தோழர்களுடன் விவாதித்துக்கொண்டிருக்கும் 'தோழர்' கிரி வருவதைப்பார்த்து விவரம் கேட்க, அவன் தன் பாஸ் ஆதி, தோழரை சந்திக்க தெருவில் காத்திருப்பதாக சொல்ல, ஆதியைச்சந்திக்கச்செல்கிறார். ஆதி அவரிடம், இந்தப்பிரச்சினையில் இருந்து ஒதுங்கிக்கொள்ள எவ்வளவு பணமும் தர தயாராக இருப்பதாகச்சொல்ல, தோழர் மறுத்து சிரிக்கிறார். வழக்கம்போல ஆதி கோபம் கொண்டு கத்துகிறான். தோழரோ அமைதியாக பேசுகிறார். ஒரு கட்டத்தில் ஆதி துப்பாக்கியை எடுத்து தோழரை சுட்டுவிடுவதாக மிரட்ட, அப்போது ஆட்டோவில் அங்கு வரும் ஆனந்தி, அதைத்தடுக்க அவர்கள் இருவரையுமே சுட்டுக்கொன்றுவிடுவதாக கத்த, பாவம் கிரியோ அவனை அடக்க முடியாமல் தடுமாறுகிறான். (ஆதிக்கு பிரஷர் ஏறிய எபிசோட்டில் இருந்து கிரியின் ரோலும் நடிப்பும் நன்றக இருக்கிறது).
தோழரையும், ஆனந்தியையும் ஆதி துப்பாக்கியுடன் மிரட்டிக்கொண்டிருக்கும் நேரம், ஏற்கெனவே ஆதியால் அடித்து அவமானப்படுத்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர், தன் படையுடன் அங்கு வந்து துப்பாக்கியும் கையுமாக நிற்கும் ஆதியை கைது செய்கிறார். தோழரையும் ஆனந்தியையும் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு புகார் கொடுக்குமாறு சொல்ல அவர்கள் சம்மதிக்கின்றனர்.
தொடர் கிட்டத்தட்ட முடிவை நெருங்குவது போல தெரிகிறது...
மேனகாவின் அண்ணன் பாசம், ஆர்த்தி விஷயத்தில் தான் நிரபராதி என்று நிரூபிக்க தொல்ஸுக்கு கிடைத்த சாட்சி, ஆதித்யாவின் கைது, ஆர்த்தி, மனோ இருவரும் தெருவுக்கு வந்த நிலை (ட்ராவல்ஸ் வண்டிகள் கைமாறிய விவரம் இன்னும் ஆர்த்திக்கு தெரியாது)..... இவற்றை பார்க்கும்போது கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டதோ எனத்தோன்றுகிறது.
நன்றி ஆனா...
போலீஸ் ஸ்டெஷனுக்கு கொன்டு செல்லப்பட்ட ஆதி, அங்கு இன்ஸ்பெக்டருடன் தகராறு செய்கிறான். இன்ஸ்பெக்டர் ஆள் தெரியாமல் விளையாடுவதாகவும், அதன் பலனை அவர் அனுபவிக்க நேரிடும் என்றும் கத்தி கூச்சலிடுகிறான். இன்ஸ்பெக்டரோ அசறுவதாக இல்லை. அந்நேரம் அங்கு கமிஷனர் வர, அவர் தன்னை எப்படியும் விடுவிப்பார் என்று கணக்குப்போடும் ஆதியின் தலையில் மண் விழுகிறது. ஆதியைக் கைது செய்யச்சொன்னதே தான்தான் என்று கமிஷனர் சொல்ல ஆதிக்கு மேலும் அதிர்ச்சி. கமிஷனர் தன்னுடைய செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்வதோடு, இன்ஸ்பெக்டரிடமும் செல்போனை லாக் பண்ணச்சொல்கிறார். அத்துடன் ஸ்டேஷனிலுள்ள லாண்ட் லைன் போன்களையும் முடக்கி வைக்கச்சொல்கிறார்.
அப்போது தொண்டர்களின் 'வாழ்க' கோஷங்களோடு அங்கு நுழையும் திருவேங்கடம் M.L.A., கமிஷனர் முன் அலட்சியமாக நடக்க முற்பட, கமிஷனரால் எச்சரிக்கப்படுகிறார். தொண்டர்களையும் கிரியையும் போலீஸ் வெளியேற்றுகிறது. கிரியை விடுவிக்கச்சொல்லும் திருவேங்கடத்திடம் கமிஷனர் மறுப்பதுடன், போலீஸ் நிலையத்தில் புகுந்து கலாட்டா செய்ததாக திருவேங்கடத்தையும் உள்ளே வைக்க நேரும் என்று எச்சரிக்க, திரு அடங்குகிறார். புறப்படும் கமிஷனரை அனுப்ப இன்ஸ்பெக்டர் வாசலுக்கு செல்ல, அந்நேரத்தைப் பயன்படுத்தி ஆதி, திருவேங்கடம் காதில் ஏதோ ஓதுகிறான். இன்ஸ்பெக்டர் திரும்பி வந்து திரு. வையும் வெளியேற்றுகிறார்.
ஆர்த்தி குடும்பம் தெருவில் நிற்கிறது. எங்கே போவதென்று தெரியாமல் விழிக்கின்றனர். எங்காவது வாடகை வீடு பார்க்கும்படி ராஜேஷின் அண்ணன் சொல்ல, அதற்கும் அட்வான்ஸ் கொடுக்க பணமில்லாமல் கையைப்பிசைந்து நிற்க, அப்போது காரில் இரண்டு அதிகாரிகள் வருகின்றனர். ட்ராவல்ஸுக்கு வண்டி வாங்க ஆர்த்திக்கு கடன் கொடுத்த பேங்கிலிருந்து வந்துள்ளனர். கடனைக்கட்டாததால் வண்டியை எடுத்துப்போவதாகச்சொல்ல, ராஜேஷ் அதற்கு மறுக்கிறான். ஆனால் ஆர்த்தியோ இப்போது கடனை அடைக்க வழியில்லாததால் வண்டியைக்கொடுத்துவிடுவோம் என்று சொல்ல, வங்கி அதிகாரி அந்த வண்டிகள் வேறொருவரிடம் ராஜேஷால் அடம்ணம் வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி அந்த ஆளையும் அறிமுகப்படுத்த, ஆர்த்திக்கு தலை சுற்றுகிறது. என்ன நடக்கிறது இங்கே?.
வங்கி அதிகாரிகள் ஆர்த்தியிடம் கடனுக்காக வண்டிகளைக்கேட்க, அடமானம் பெற்றவனோ ஒன்றரை லட்சம் இல்லாமல் வண்டிகளைத்தர முடியாதென்று மறுக்க, வங்கி அதிகாரிகள் ஆர்த்தி மேல் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்போவதாக சொல்ல, ஆர்த்தி 'இதோ வந்து விடுகிறேன்' என்று போகிறாள். வேறெங்கு போகப்போகிறாள்?. அபியக்காவிடமாகத்தான் இருக்கும். (அது இன்னும் காட்டப்படவில்லை). அல்லது ஒருவேளை ஆதியண்ணாவிடமா?. அவர்தான் கம்பிகளை எண்ணிக்கொண்டிருகிறாரே. எப்படியோ, ஆர்த்தி தெருவுக்கு வந்தது நமக்கு மகிழ்ச்சி. பின்னே என்னங்க?. நாம என்ன அபியைப்போல மகாத்மாவின் பேத்தியா?. சாதாரண மனிதர்கள்தானே. ஆர்த்தியைப்பார்க்கும்போதெல்லாம், அவள் பாண்டிச்சேரி ஓட்டல் அறையில் சிரித்த வஞ்சகச்சிரிப்புத்தான் நினைவு வருகிறது. நீங்களும் அதை மறந்துடாதீங்க. மறந்தால் ஆர்த்தியின் மீது அனுதாபம் வந்து விடும்.
ஆனந்தியைத்தேடி தோழர் அபியின் வீட்டுக்கு வருகிறார். அபி, ராஜேந்திரன், ஆனந்தி எல்லோரும் சந்தோஷமாக வரவேற்று காஃபி அளித்து உபசரிக்கின்றனர். ஆதி போலீஸில் மாட்டியிருப்பதால், இனிமேல்தான் ஆனந்தியும் தோழரும் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று அபி எச்சரிக்கிறாள். ஆதி ஒரு அடிபட்ட பாம்பு, எந்த நேரமும் கொத்துவான் என்று உஷார் படுத்துகிறாள். ஆனந்தி தோழருடன் புறப்படுகிறார்.
ஆதியின் காட்டுக் கூச்சலேதான்..
ஆக
பாஸ்கரின் தந்திரம் வெல்கின்றதா??
--:ty: saradha
ஆதியை விடுவிக்க மேனகாவே நேரடியாக காவல் நிலையம் வருகிறாள். ஸ்டேஷன் வாசலில் நிற்கும் திருவேங்கடத்தைப் பார்த்ததும் அவள் எரிச்சல் அதிகமாகிறது. எம்.எல்.ஏ.யாக இருந்தும் ஆதியை வெளியில் கொண்டு வரமுடியாத அவரது கையாலாகத்தனத்தைச் சாடுகிறாள். அவரோ சற்றும் சலைக்காமல் தனது வெத்து வேட்டு அரசியல் டயலாக்குகளை அள்ளி வீச, மேலும் எரிச்சலாகி உள்ளே போகிறாள். இன்ஸ்பெக்டரின் அனுமதியில்லாமல் நேரடியாக ஆதியிடம் போய் அவள் பேச, இன்ஸ்பெக்டர் ஆட்சேபிக்கிறார். உடனே ஆதி கத்தத் துவங்குகிறான். (தன் கத்தலுக்கு மசியாத இன்ஸ்பெக்டர் என்று தெரிந்தும் ஆதி இப்படி காட்டுக்கூச்சல் போடுவது எரிச்சலைத் தருகிறது). நிலைமையின் தன்மையை அறிந்த மேனகா, ஆதியை அமைதிப்படுத்தி, இன்ஸ்பெக்டரிடம் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறாள். இருப்பினும் இன்ஸ்பெக்டர் அவளை ஆதியுடன் பேச அனுமதிக்கவில்லை. தி.நகரில் ஒரு பங்களா தருவதாக ஆசை காட்டும் மேனகாவை, லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றத்துக்காக கைது செய்ய நேரிடும் என்று இன்ஸ்பெக்டர் எச்சரிக்க, சோர்ந்த முகத்துடன் வெளியே வருகிறாள்.
ஆதியில்லாமல் வெறும் கையுடன் வரும் மேனகாவைப் பார்த்து, திருவேங்கடத்துக்கு இன்னும் எக்காளமாகிறது. தன் அரசியல் அறிவை பயன்படுத்தி மட்டுமே ஆதியை வெளியே கொண்டு வரமுடியும் என்று திருவேங்கடம் சொல்ல, அதற்கான வழியை மேனகா கேட்க, இன்ஸ்பெக்டரை ஒரு ஜாதிக்காரராகவும், ஆதியை இன்னொரு ஜாதிக்காரனாகவும் சித்தரித்து நாட்டில் ஜாதிக்கலவரத்தைத் தூண்டுவதே இதற்கு தீர்வு என்று சொல்கிறார். (விரைவில், ஜாதிக்கலவரத்தை தூண்டியதற்காக எம்.எல்.ஏ.சார் கைதாகக்கூடும்). கலவரத்தைத்தூண்ட பணம் தேவைப்படும் என்று கூறி அதற்கும் ஒரு பணப்பெட்டியை மேனகாவிடம் பெற்றுக்கொள்கிறார்.
நாம் நினைத்தபடி 'ஆதியண்ணா'வின் ஆஃபீசுக்குத்தான் ஆர்த்தி போகிறாள். (முன்பு, தனக்காக முக்கியமான மீட்டிங்கையே தள்ளி வச்சிட்டு வந்து 'உதவிய'(??) அண்ணாவாச்சே). ஆனால் ஆதி அன்று காலையிலிருந்தே ஆஃபீஸ் வரவில்லையென்று ரிசப்ஷனிஸ்ட் சொல்ல, அவர் வந்தால் ஆர்த்தி தேடி வந்ததாக சொல்லும்படி கூறி விட்டு வெளியே வர, அங்கே இரண்டு பேர் ஆதி போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக பேசிக்கொள்ள..... ஆர்த்தி மேடத்துக்கு அதிர்ச்சி. இனி என்ன செய்வது?. வேறு வழியில்லை. ஏமாளி 'அபியக்காதான்' கதி. ஆனால் அங்கும் ஆப்பு காத்திருக்கிறது.
ஆம்.... காலில் அடிபட்டு நடக்க முடியாமல் நொண்டி நொண்டி நடந்து அபி வீட்டுக்கு வரும் சுரேஷ் (அபி அலுவலகத்தில் வேலை செய்த ஆர்த்தியின் எடுபிடி, முந்தாநாள் தொல்காப்பியனால் ரவுடிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டவர்) அபியை சந்தித்து விவரங்களைக் கூறத்தொடங்குகிறான்.
அபியை விட்டு தொல்காப்பியன் விலகியதற்கு ஆர்த்திதான் காரணமென்றும், அவள சொல்படியே தான் தொல்ஸுக்கு எதிரான செயல்களில் இறங்கி அவரை மாட்ட வைத்ததாகவும், அபி அமெரிக்கா சென்றிருந்த நேரம் ஆர்த்தியின் அடாவடி செயல்களைச் சொல்லத்துவங்க அவை ஃப்ளாஷ் பேக்காக விரிகிறது. புதிய சப்ளைய்ரகளை நியமிக்க தொல்ஸ் எதிர்ப்பு தெரிவித்தது, ஆர்த்தியின் தான்தோன்றித்தனமான முடிவுகளுக்கு கட்டுப்பாடு விதித்தது, அதனால் ஆர்த்தி தொல்ஸை ஒழித்துக்கட்ட முடிவு செய்தது, தன்னை விட்டே அவளை தொல்ஸின் செல்போனில் ஃபோட்டோ எடுக்க வைத்தது, பாண்டிச்சேரி ஓட்டலில் நடந்தவற்றை தன்னிடம் விவரமாக சொன்னது எல்லாவற்றையும் விவரமாக கூறி, தான் ஆர்த்திக்கு உடந்தையாக செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதாகவும், ஆஃபீஸில் தான் திருடியதாக பழி சுமத்தப்பட்ட பணத்தையும் ஆர்த்திதான் கையாடினாள் என்பதையும் சொல்லி, அபியிடம் மன்னிப்பு கேட்கிறான்.
இப்போது அபியின் மனதில் மீண்டும் ஃப்ளாஷ்பேக். தான் அமெரிக்காவில் இருந்து திரும்பியபோது விமான நிலையத்தில் தொல்காப்பியனை புறக்கணித்தது, கம்பெனியைவிட்டே அவரை வெளியே அனுப்பியது, போகும்போது தனக்காக ஒரு சல்லிக்காசுகூட பெற்றுக்கொள்ளாமல் தொல்ஸ் வெளியேறியது எல்லாம் நினைவில் தோன்ற அபி மனதில் ஒரு தீர்க்கமான முடிவு தோன்றுகிறது. (தேவயானியின் முகபாவம்.... வாவ், சூப்பர்). மீண்டும் மன்னிப்பு கேட்கும் சுரேஷை போகும்படி சைகை காட்டி அனுப்புகிறாள்.
இனிதான் ஆர்த்திமேடம் வந்து அபியிடம் வாங்கி கட்டிக்கப் போறாங்க. பேங்க் அதிகாரிகள் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுத்தால், அனேகமாக ஆதியண்ணாவுக்கு அடுத்த 'செல்'லில் ஆர்த்தி மேடம் அடைக்கப்படக்கூடும். ஜாதிக்கலவரத்தைதூண்டிய குற்றத்துக்காக கைதாகப்போகும் எம்.எல்.ஏ. சார் மூன்றாவது 'செல்'லுக்கு வரக்கூடும்.
நான் சொல்லலை... முடிவு நெருங்குகிறதென்று....?
sarada mam,
Thanks for ur updates..... :D
யாருக்கு ????Quote:
Originally Posted by saradhaa_sn
:ty: