http://i58.tinypic.com/bi6veo.jpg
Printable View
முத்தையன் அம்மு சார்
நீதி நிழற்படங்கள் மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் உள்ளன. உளமார்ந்த நன்றி.
I believe they released Trailer for VPK ,why it is not available in net ,unlike Karnan Trailer?
Are these guys going towards a sothappal release like Thiruvilayadal?
No promotion , No hype.
நன்றி மித்ரன் இணைய தளம்.Quote:
ஆனால், பால் எது நீர் எது என்று பிரித்தரிய முடியாத பாமர மக்கள் சிவாஜியின் நடிப்பை புறந்தள்ளி இவர் அவரது உண்மையான வாழ்க்கையிலும் அப்படித்தான் இருப்பாரோ என சிந்திக்க தொடங்கியதன் விளைவு தான் அவரது அரசியல் தோல்விக்கு ஒரே காரணம் என்பதை ஜீரணிக்க கஷ்டமாக இருக்கலாம்.
ஆனால் அது தான் உண்மை.
மேலும் படிக்க - http://mithiran.lk/article.php?category=cinema&num=487
கோவை
http://i1065.photobucket.com/albums/...psfevqyfqz.jpg
http://i1065.photobucket.com/albums/...psdcubgxym.jpg
http://i1065.photobucket.com/albums/...ps5ucargp8.jpg
http://i1065.photobucket.com/albums/...psst8wjriu.jpg
http://i1065.photobucket.com/albums/...psnobncjjk.jpg
http://i1065.photobucket.com/albums/...pszydndp0n.jpg
http://i1065.photobucket.com/albums/...psjzsrmdwf.jpg
http://i1065.photobucket.com/albums/...pso0g0jovf.jpg
http://i1065.photobucket.com/albums/...psebn01cdc.jpg
திரு ரவிகிரன் சூரியா சார்,
இதை பற்றியெல்லாம் ரசிகர்களாகிய நமக்கு இருக்கும் ஆதங்கத்தில் ஒரு சதவீதம் கூட இல்லாத அவரது குடும்பத்தினரை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது.என்ன செய்வது ? நமது கொடுப்பினை அப்படி.14 ஆண்டுகளாகியும் அவரது மணிமண்டபத்தை பற்றி சிறிதும் கண்டுகொள்ளாத அவரது குடும்பத்தினர் தனி ஒரு ரசிகனாக திரு சந்திரசேகரன் அவர்கள் முயற்சி செய்து பெரும்பாலான கட்சிகளை சேர்ந்தர்வர்களை ஒருங்கிணைத்து நடத்திய உண்ணாவிரதத்தை நேரில் கூட வேண்டாம் ஒரு அறிக்கை மூலமாக வாழ்த்தக்கூட மனமில்லாதவர்களை பற்றி என்ன சொல்வது ? இதை பற்றியெல்லாம் நமது மன வேதனையை பதிவு செய்தால் நமது திரியிலேயே தேவையில்லாத மனக்கசப்புகள் வர வாய்ப்பிருப்பதால் இத்துடன் முடிக்கிறேன் .யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்
டியர் செந்தில்வேல் சார்,
கோவையில் நடிகர்திலகம் நினைவுநாள் அனுசரிக்கப்பட்ட நிழற்படங்களை பதிவிட்டதற்கு நன்றி.
எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் இத்தனை மன்றங்களும் அவரது நடிப்பைப் போற்றுவதற்காக இவ்வளவு உயிர்ப்புடன் இயங்கிவருவது அதிசயிக்க வைக்கிறது.
மன்ற மறவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
ONE INDIA NEWS
http://tamil.oneindia.com/news/tamil...an-231557.html
Dear Sivaji Senthil Sir,
It is time for the next edition to start. Will you step forward and do the honours please? Kindly confirm.
Regards
Dear Murali Sir
I feel honored and deem it a great pleasure to comply with your invitation and confirm my acceptance. Kindly inform me Sir as what I need to do!
regards, senthil
அந்த அறையில் பெரிய மேஜை ஒன்று உள்ளது.அறை பார்ப்பதற்கு உயர்ந்த வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது போல்பார்ப்பதற்கு இருந்தாலும் எளிமையாகவே இருக்கிறது.மேஜையின் அருகில் இருக்கும் நாற்காலியில் அந்த மனிதர் அமர்ந்திருக்கிறார்.அவர் ஏதோ ஒரு புத்தகத்தை புரட்டிப்பார்த்துக்கொண்டு இருக்கிறார்.தலையை மெல்ல அசைத்து பக்கத்தை புரட்டுவதில் அவரின்அந்த செய்கையை நாம் பாக்கும்போது நம்மையும் அறியாமல் ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தியால்ர்ஈர்க்கப்படுவதை நம்மால் உணர முடிகிறது.அப்போது கதவின் கைப்பிடி திருப்பப்பட்டு,கதவை உள்ளே தள்ளிக்கொண்டுஒரு வர் உள்ளே நுழைகிறார்.மெதுவாக நடந்து வருகிறார்.நெஞ்சை நிமிர்த்தியும் ஒரு விதமாக உடம்பை அசைத்து அசைத்தும்நளினமா க நடந்து வரும் அந்த நடையைபார்க்கும் எவருக்கும் அந்த நடை பிடிக்கும். இப்போது மேஜையில் அமர்ந்திருக்கும் மனிதர் வரும் நபரை பாக்கிறார்.இப்போது இரண்டு பேரின் முகமும் நன்றாக தெரிகிறது.இருவரின்முகத்திலுமஒரு பக்கம் மட்டும் தீயினால் கருகியதைப் போன்ற தோற்றம் உள்ளது.இருவரும் பெருமளவு ஜாடையில் ஒத்துப் போகின்றனர்.முதலில்பார்த்த அந்த மனிதரை நன்றாக கவனிக்கமுடிகிறது கறுத்த கேசத்துடன் நரையும் கலந்த சிகை.சற்றே வித்தியாசமாய் புருவங்கள். அது அவரின் கம்பீரத்தை உயர்த்திக்காட்டும்படி உள்ளது.நன்றாக அமைந்த நாசி.கண்கள வசீகரம்.நேர்த்தியான உடை.அச்ச உணர்வைத் தரும் தோற்றம்.உள்ளே வந்த நபருக்குஅருமையான உடற்கட்டு.அவர் நடந்து வருவதில் ஒரு மென்மை தெரிந்தாலும்
நெஞ்சுரத்தில் பலம் மிக்கவர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.இப்போது இருவரும் நேருக்கு நேர் பார்க்கின்றனர்.முதல் நபர் சற்று வயதுடையவர் என்பதால் அவரை பெரியவர் என்று வைத்துக்கொள்வோம்.அறைக்குள் வந்தவரை சின்னவர் என்று வைத்துக்கொள்வோம்.
இருவரும் ஒரே மாதிரி தோற்றம் கொண்டிருந்தாலும் இருவரின் பார்வைகளிலும்வித்தியாசத்தை நன்றாக உணர முடிகிறது.சின்னவரின் பார்வை ஏக்கத்தையும் ஏளனத்தையும் கலந்த து போல் உள்ளது.பெரியவரின் பார்வைஎப்படி உள்ளது என்றால் நல்ல குடியில் பிறந்த ஒருவர்தவறு செய்த பின்னால் அதை எண்ணி வருத்தப்படுபவதைப் போன்றும் அதனுடன் தர்மசங்கடமான நிலைமையில் வெளிப்படும் உணர்வுகளையும் கலந்த பார்வையை வெளிப்படுத்துகிறார்.இருவரின் பார்வைகளும் சந்தித்துக் கொள்ளும் போது அவர்களின் முக பாவனைகள்உலகில் இதுவரை பார்த்திராத ஒன்றாக இருக்கிறது.இருவருக்குள்ளும் ஏதோ தயக்கம் இருக்கிறதுஎன்பதை அவர்களின்முகங்கள் காட்டுகின்றன.தயக்கத்தை சற்று ஒதுக்கிவிட்டு
சின்னவர் பேசுகிறார்:
"தேவையில்லையென்று நினைத்த தந்தையும்அவரை தேடி அலைந்த தந்தையும் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ளும் அற்புதமான காட்சி"
அப்படியானால் பெரியவர் தந்தை.சின்னவர் மகன்.இருவரும் சந்திக்கும் முதல் கட்டம்.அதனால்தான் இப்படிப்பட்ட உணர்வுகளை காட்டினரோ!
என்ன ஒரு செம்மையான வெளிப்பாடு.ஊடகமாக இருந்தாலும் நிஜத்தையும் மிஞ்சுகிறதே!.
இப்படி சின்னவர் கேட்டதும் பெரியவரின் மு க மாறுதல பிரமாதம்.பேச்சு வராமல் என்ன சொல்வது என்று தயங்கும்போது,
நாக்கு மேலண்ணத்தில் ஒட்டுவதும்,எச்சில் தொண்டையில் இறங்குவதும் போன்ற நடிப்பா? இல்லை நிஜமா?
அடுத்தது...
சின்னவர்:
ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்?எதைப் பேசுவது என்று உங்களுக்கு தயக்கம்?என்ன பேசுவதுஎன்று எனக்கு கலக்கம்?
மென்மையாக உச்சரிக்கப்பட்டாலும்
என்னே ஒரு கணீரெண்ற குரல்.
சின்னவர்:என்னை யாரென்று உங்களுக்கு தெரியுமா?
பெரியவர்;(தெரியும் என்பது போல் ஆமோதிப்பு )
சின்னவர்:என் பேர் கண்ணன்.நீங்க கூப்பிட்டு நான் தெரிஞ்சுக்க வேண்டிய பெயரை நான் சொல்லி நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய நிலைமை.
பெரியவர்:(தவற்றை உணர்ந்தது போலவும்
பிராயச்சித்தம் கேட்பது போலவும் பாவனையை வெளிப்படுத்துகிறார்)
சின்னவர்; ((சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு)நான் உங்களை அப்பா என்று கூப்பிடட்டுமா?ஒரே ஒரு தடவை...
அதைக்கேட்கும்போது அந்தக் குரலில் உள்ள ஏக்கமும்,கெஞ்சலும் கல்மனதைக்கூட கரைத்து விடுமே.அடிவயிற்றில்ஏதோ ஒரு உணர்வு தாக்குவதை உணர்கிறேன்.பெரியவரின் விழிகள் விழிகள் விரிகின்றன.பின் சுருங்குகின்றன.என்ன ஒரு ஆச்சரியம்!விரியும்போது வராத கண்ணீர் கண் சுருக்கலில் அணை கட்டித் தேங்கி நிற்கின்றதே.உடலே சிலிர்த்து விட்டதே.
பெரியவர்::கண்ணா...(கட்டியணைக்க ஓடி வருகிறார்.பாசத்தை காட்டும் வேகம்
நெஞ்சுக்குழி அடைப்பது போல் இருக்கும்.)
அணை உடைந்து விட்டது.
கட்டிப்பிடித்தலில் பாசம் காட்டுகின்றது.இரண்டின் தழுவல்களும்
போட்டி போடுகின்றன.
சின்னவர் என்ன நினைத்தாரோ தீடீரென்று விலகுகிறார்.விலகியபின் காரணத்தை முகம் பிதிபலிக்கின்றது.இத்தனை நாள் இல்லாத உறவு இப்போது எங்கே வந்தது?தான்அதற்கு உரிமை காட்டுவது சரியா?காட்சிகள் உணர்வுகளால் தான் இங்கே விளக்கப்படுகின்றன.எழுது கோலால் வர்ணிக்க இயாலாது.
தான் வந்த காரணத்தை கூறுகிறார்சின்னவர்.பெரியவர் காசோலை கொடுத்ததை திருப்பிக் கொடுக்கவந்தாய் சொல்லப்படுகிறது.காசோலையை இரு விரல்களால்சுண்டும் அந்த ஸ்டைலில்
பணத்தை மதிக்காத குணம்வார்த்தைகளின்றி வெளிப்படுத்தப்படுகின்றது.எந்த நடிப்பும்
பக்கம் வர அச்சமே கொல்லும் அதிரடி ஸ்டைல் அது.
பெரியவர்:கண்ணா! அது உனக்காக.உன் எதிர்காலத்திற்காக.
சின்னவர்:கடந்தகாலம் எதிர்காலம் என்று எனக்கு எதுவும்கிடையாது.
இதை வாங்குவதற்குத்தான் எனக்கு என்ன உரிமை இருக்கு?கொடுப்பதற்குத்தான் உங்களுக்கு என்ன அருகதை இருக்கு?
துப்பாக்கியிலிருந்து வெளிப்படும் தோட்டாவின் வேகம் தோற்கும் என்பது போல் வெளிப்படும் வசன வீச்சு.
வீரியமான வார்த்தைகள்.
உச்சரிப்பு அதிர வைக்கிறது.
பெரியவர்:கொடுப்பதற்கு எனக்கு உரிமை இல்லாவிட்டாலும்,வாங்கிக் கொள்வதற்கு உனக்கு உரிமை இருக்கிறது.நீ என் பிள்ளை. நான் உன் அப்பா.
சின்னவர்:நீங்க என் அப்பாவா?
நான் உங்க பிள்ளையா?இதுவரைக்கும் நாம் அப்படியா உறவு கொண்டாடினோம்.
தொடையில் அடிக்கிறார்.அப்படி அடிப்பதிலேயே கோபம் தெரிந்து விடுகிறது.பீரோவில் இருக்கும் கண்ணாடியில் தன் முகம் பார்க்கிறார். இந்த விகாரம் தானா இவ்வளவுக்கும் காரணம்?என்று யோசிப்பது புரிகிறது.திரும்பி வருகிறார்.
.சின்னவர்:உங்கிட்ட சில கேள்விகள் கேட்கலாமா?
பெரியவர் சரி என்று தலையசைக்கிறார்.
சின்னவர்:வீட்டுக்கு முதல் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தை மீது அளாவு கடந்த பாசம் பெத்தவங்க வெச்சுருப்பாங்கன்னு சொல்வாங்களே. அது உண்மையா?
பெரியவர்:ஆமா.
சுரத்தில்லாமல் வரும் பதில்.
சின்னவர்:இல்லை. பொய்.நான் பிறக்கும்போதும் நீங்கள் பணக்காரராகத்தானே இருந்தீர்கள்?
பெரியவர்:ம்ம்ம்.
சின்னவர்:நான் விகாரமாக பிறந்தேன் என்ற ஒரு காரணத்திற்காக தானே வேண்டாத பொருளை குப்பைத்தொட்டியில் தூக்கி எறியற மாதிரி என்னைஎரிஞ்சீங்க.நீங்க பொறந்த போது உங்க அப்பாவும் இதைப்போலத்தானே செய்தாரா?
பெரியவர்:இல்லை
சின்னவர்:ஏன்?
பெரியவர்:அவர் அனாதை.இந்த வேதனையை புரிஞ்சுக்க முடியாதவர்.
சின்னவர்:இல்லை. உங்கப்பா ஏழை.அதனாலதான் அவருக்கு இதயம் இரக்கம் பாசம் எல்லாம் இருந்துச்சு.எங்கப்பா பணக்காரர்.அவர்கிட்ட இரும்பு பீரோமட்டும் தான் இருக்கு.அதுக்குள்ள்பணத்தையும்,
கௌரவத்தையும் மட்டும்தான் பூட்டி வைச்சாரு.அதனாலதான் சொந்தப்பிள்ளையையே வேண்டாம்னு சொல்லிட்டாரு.
நெத்திஅடி.இதுக்கு மேலும் தாங்க முடியுமா?செய்த பாவம் வினையாகி கேள்வி கேட்கின்றது.என்ன பேசினாலும்" தவறாகவே படும்.பூட்டி வைச்சாரு எனும்போது அவர் செய்யும் சைகை என்ன ஆக்ரோஷமான வெளிப்பாடு.
பெரியவர்:கண்ணா...
(நெஞ்சே வெடித்து விடும் போல் இருக்கும்)
சின்னவர்:அப்பா.
என் விகாரத்துக்கு காரணமே நீங்கள்தான் என்பதை மறந்துட்டு என்னை வெறுத்து ஒதுக்கிட்டு அனாதை மாதிரி தவிக்க விட்டுட்டீங்களே!இதைவிட நான் பொறந்த அன்னிக்கே என்னை கொன்னுருக்கலாம் இல்ல.
பெரியவர்:அய்யோ!அதத்தாண்டாஅன்னிக்கு செய்யச்சொன்னேன்.அதத்தான் செய்யச் சொன்னேன்.அந்த முட்டாள் அதைச் செய்யல.நீ உயிரோட இருந்து இப்படி வந்து கேள்வி கேட்பேன்னு நினைச்சு நீ பிறந்தப்பவே உன்னை கொன்னுடச் சொன்னேன்.
பெரியரின் வாயிலிருந்துசடாரென்று: வெளிப்படுகின்றதுஇந்தப் பதில்.அவரின் இந்த வேகம் எப்படா இப்படி ஒரு கேள்வி வரும் என்று எதிர்பார்த்திருந்தது போல்
இருக்கிறது.
இடி போன்ற வார்த்தைகள்.ஆனாலும் அதைக்கெட்டு கலங்காத மனம்.இதைவிட அவமானங்களைசந்தித்திருந்தால் மட்டுமேஅதை தாங்குவதுசாத்தியம்.சின்னவரின் மனம் அது போல் இருந்திருக்க வேண்டும்.இல்லையென்றால் அந்த
பதிலை கேட்டபின்னும் அப்படியொரு அலட்சிய முகபாவத்தைகாட்ட முடியுமா?
பெ.ரியவர்:
நீ உயிரோட இருக்கிற விஷயம் சமீபத்தில் தான் எனக்கு தெரிஞ்சுது.இல்லேன்னா...
சின்னவர் :இல்லேன்னா,நீங்களேஒரு வழியா என்னைக் கொல்லுறதுக்கு முயற்சி செஞ்சிருப்பீங்க .இல்ல.
பெரியவர்:கண்ணா! நான் இப்போ குற்றவாளிக்கூண்டுல.கடந்தகாலம் சாட்சிக்கூண்டுல.நீ நீதிபதி ஸ்தானத்தில.என் குற்றங்களுக்கெல்லாம் நான் விளக்கம் சொல்கிறேன்.நீ என்ன தண்டனை வேணும்னாலும் கொடு.
சின்னவர்:மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம எவ்வளவு ஈஸியா சொல்லிடீங்க.ஏம்ப்பா இந்த விஷயமெல்லாம் அம்மாவுக்கு தெரியாதில்ல.
பெரியவர்:(இல்லை யென்பது போல் தலையசைப்பு)தெரியனும்னு நீ விரும்பறியா?
சின்னவர்:வேண்டாம்.அழகான எங்க அம்மாவுக்கு இப்படி ஒரு அவலட்சணமான மகன் இருப்பதே தெரிய வேண்டாம்.
பெரும் யுத்தத்தை பார்த்தால் கூட இந்தளவு சிலிர்ப்பை தர முடியாது.இந்த நடிப்பின்ஆழம் யாராலும் சொல்ல முடியாது.
படைத்தலுக்கு பிரம்மன்
காத்தலுக்கு விஷ்ணு
அழித்தலுக்கு சிவன்
என்றால்
நடிப்புக்கு இவரே.
*********************திரை**********************
எந்த நாட்டுக்கும் எந்த மொழிகளுக்கும்
எந்த மக்களுக்கும் இந்தப்படம் பெரும்
பிரமிப்பையே தரும்.உலக சினிமா உலக சினிமா என்கிறார்களே அந்த உலக சினிமாக்கள் எல்லாம் இந்த படத்திற்கு முன் எந்த மூலை?
https://youtu.be/yb2gzvrNhXs
டியர் செந்தில்வேல் சார்,
எனக்கு மிகவும் பிடித்த தெய்வமகன் காவியத்தில் இருந்து ஒரு அற்புதமான காட்சியை மிக அருமையாக படைத்தது உள்ளீர்கள்.
மிக்க நன்றி!
கதை கேளு கதை கேளு எங்கள் சிவாஜி புகழை கெடுக்கும் கூட்டத்தின் கதை கேளு
பத்து நாளைக்கு முன்னாடி விளம்பரம் செய்த வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தியேட்டர் தர மறுப்பர்ரகளாம்
இன்று விளம்பரம் செய்த படத்திற்கு தியேட்டர் கொடுப்பர்ரகளாம்
ஊரெங்கும் தெருவெங்கும் சொந்த காசை போட்டு ரசிகன் போஸ்டர் அடித்து ஒட்டுவாநாம்
இவர்கள் தலைவராக இருந்தாலும் ஒரு பிட் நோட்டிஸ கூட அடிக்க மாட்டர்களாம்
பிறந்தநாள் நினைவு நாளில் ஆங்காங்கே ரசிகர்கள் அன்னதானம் வழங்குவார்களாம்
இவர்கள் நமக்கு தேவையில்லாத வேலை என இருந்து விடுவார்களம்
அரசு இடம் கொடுத்தாலும் மணி மண்டபம் கட்ட முயற்சி செய்ய மாட்டார்களாம்
முயற்சி செய்பவர்களுக்கும் முட்டுக்கட்டை போடுவார்களாம்
ஆயிரம் ஊர்களில் ஆபரண மாளிகை திறந்து வைப்பார்களாம் ஆனால்
துணி போட்டு மூடிய சிலை திறக்க முயற்சி செய்ய மாட்டர்களாம்
யார் யாரோ இந்த கலை தெய்வத்திற்கு சிலை வைத்து பெருமை தேடுவார்களாம்
ஆனால் இவர்களோ சொந்த திரைஅரங்கில் கூட ஒரு மார்பளவு சிலை வைக்க மாட்டர்களாம்
அரசியல் பலமின்றி பணபலமின்றி சிவாஜி புகழ் ஒன்றே நோக்கமென்று உறுதியான உணர்வுடன்
பல ஊர்களில் இருந்து வந்து உண்ணாநோன்பு மேற்கொண்ட ரசிகர்கள் எங்கே இவர்கள் எங்கே
ஆண்டவா இத்தனை நாள் எங்கள் தலைவன் இந்த தமிழகத்தில் பிறந்ததுதான் பாவம் என்று நினைத்தோம் அனால் இப்போதுதான் தெரிகிறது இந்த குடும்பத்தில் பிறந்ததும் பாவம் என்று
திரு செந்தில்வேல் , உங்கள் 1000 பதிவுகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் - ஒவ்வொரு பதிவுக்கு பின்பும் உங்கள் பற்றுதல் , உழைப்பு கண் கூடாக தெரிகின்றது . தெய்வ மகன் - மூன்று nt யும் சந்திக்கும் அழகை மிகவும் ஆத்மார்த்தமாக உங்கள் எளிய நடையில் எழுதியுள்ளீர்கள் . எல்லோருக்கும் பிடித்த , என்றுமே நெஞ்சை விட்டு நீங்காத காட்சி இது .
வசந்தமாளிகை தொடர்ச்சி..
http://i60.tinypic.com/2lidcli.jpg