இதயக்கனி ஆசிரியர் திரு.விஜயனுக்கு, நடிகர் சிவகுமார் பொன்னாடை போர்த்துகிறார்
http://i57.tinypic.com/1pvtk9.jpg
Printable View
இதயக்கனி ஆசிரியர் திரு.விஜயனுக்கு, நடிகர் சிவகுமார் பொன்னாடை போர்த்துகிறார்
http://i57.tinypic.com/1pvtk9.jpg
படங்களில் இசையமைக்க ரூ.3,000, ரூ.4,000 என்று வாங்கிக் கொண்டிருந்த சங்கர்-கணேஷ் அவர்களுக்கு இதயவீணை படத்தில் ரூ.40,000 சம்பளம் வாங்கித் தந்தார் தலைவர். இதை விஜய் டி.வி.யின் மன்னாதி மன்னன் சிறப்பு நிகழ்ச்சியில் திரு.கணேஷ் அவர்களே தெரிவித்தார். தன்னை வைத்து படம் எடுப்பவர்கள், கிடைக்கும் லாபத்தை அவர்களே அடையக்கூடாது எல்லாருக்கும் அதில் பங்கு கிடைக்க வேண்டும். உழைப்புக்கேற்ற ஊதியம் எல்லாருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று நினைத்தவர் தலைவர்.
நன்றி திரு.யுகேஷ் பாபு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பழம்பெரும் திரைப்பட இயக்குநர் கே.சுப்பிரமணியம் அவர்களின் புதல்வர் திரு.எஸ்.வி.ரமணன் அவர்கள், தலைவரிடம் இருந்து விருது பெறும் அரிய புகைப்படத்தை பதிவிட்டதற்கு நன்றி திரு.குமார் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
அற்புதமான ஆவணத்தை பதிவிட்டதற்கு பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. அந்நிய செலாவணி மோசடி காரணமாக மத்திய அரசின் கெடுபிடிக்கு பயந்துதான் தலைவர் திமுகவை விட்டு வெளியேறினார் என்றால், அவர்களுக்கு பயந்து இ.காங்கிரசிலேயே அவர் சேர்ந்திருக்கலாமே? ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்? திண்டுக்கல் இடைத்தேர்தலில் தலைவரின் ஆதரவை பெற இ. காங்கிரஸ் எவ்வளவோ முயற்சித்தும் கூட, இ.காங்கிரசையும் எதிர்த்து நின்று தலைவரின் அதிமுக அமோக வெற்றி பெற்றது வரலாறு.
தலைவரின் புகழை பொறுக்க முடியாமல் கிளப்பிவிடப்பட்ட எத்தனையோ வதந்திகளில் இதுவும் ஒன்று. நன்றி திரு.செல்வகுமார் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நன்றி திரு.வினோத் சார். இலங்கையில் நாளை நமதே திரைப்படம் 100 நாட்கள் ஓடியுள்ளது. தமிழகத்தில் வசூலை அள்ளிக் குவித்தாலும் 100 நாட்கள் எட்டவில்லை என்பதால் இந்தப் படத்தை 100 நாள் கணக்கில் நாம் சேர்ப்பதில்லை. உழைக்கும் கரங்கள் திரைப்படம் சேலம் அலங்கார் திரையரங்கில் அதிகபட்சமாக 98 நாட்கள் ஓடினாலும் கூட இரண்டு நாள் தானே குறைவு என்று 100 நாள் கணக்கில் நாம் சேர்ப்பதில்லை.
பெங்களூரில் நாளை நமதே திரைப்படம் 2 வாரங்களில் 3 லட்சம் ரூபாய் வசூல் சாதனை செய்துள்ள ஆவணத்தையும் பதிவிட்டதற்கு நன்றி வினோத் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பண்ருட்டியாரின் பதில் அற்புதம். இவரும் கூட திமுகவில் இருந்தபோது அதிமுகவை விமர்சித்தவர்தான் என்றாலும் கூட, திரு.மதுரை முத்து பற்றி தலைவர் கூறியதை மறக்க முடியாது. திரு. மதுரை முத்து அதிமுகவில் சேர்ந்த பிறகு, திமுக பத்திரிகையான முரசொலியில் தினமும் அவர் திமுகவில் இருந்தபோது தலைவரைப் பற்றி அவதூறாக பேசியதை வெளியிட்டு வந்தனர்.
அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், ‘‘அண்ணன் மதுரை முத்து கலைஞர் கருணாநிதியோடு இருக்கும்போது என்னைப் பற்றி புகழ்ந்து பேசுவார்’ என்று எதிர்பார்க்கும் அளவுக்கு நான் அரசியல் தெரியாதவன் அல்ல’’ என்று தலைவர் ஒரே போடாக போட்டார். மறுநாள் முதல் மதுரை முத்துவின் பழைய பேச்சுகள் முரசொலியில் நிறுத்தப்பட்டன.
பதிவுக்கு நன்றி திரு.லோகநாதன் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு.தெனாலி ராஜன் சார்.
தாங்கள் பணி ஓய்வு பெற்றதற்கு வாழ்த்துக்கள். தங்களின் ஓய்வு காலம் தலைவர் புகழை மேலும் தாங்கள் தீவிரமாக பாட வழிவகுத்து உங்களுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் மன நிறைவும் கிடைக்க வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
‘நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி....’
சமீபத்தில் படித்த செய்தி ஒன்று மனதை உலுக்கியது. சேலம் அருகே ஒரு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம், ஒரு கொள்ளை வழக்கில் அவரது கணவருக்கு தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதை அறிந்தோ என்னவோ, அந்த பெண்ணின் கணவரும் தலைமறைவாக இருந்தார். அக்கம்பக்கத்தாரின் இழிசொல் பொறுக்க முடியாமல், கணவரால் ஏற்பட்ட அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அந்தப் பெண்.
இதில், கொடுமை அந்தப் பெண்ணுக்கு 2 பெண் குழந்தைகள். ஒரு குழந்தைக்கு 2 வயது, இன்னொரு குழந்தைக்கு 4 வயது. விஷயம் அறிந்து 5 நாட்களுக்கு முன் தனது வீட்டுக்கு நள்ளிரவில் வந்திருக்கிறான் தலைமறைவாக இருந்த ஆசாமி. வந்தவன், தனது இருகுழந்தைகளுடன் விளையாடிவிட்டு குளிர்பானத்தில் குழந்தைகளுக்கு விஷத்தை கலந்து கொடுத்து அவர்களை கொன்று விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான்.
உண்மையில் தனது பெண் குழந்தைகள் மீது அவனுக்கு அளவற்ற பாசம் இருந்திருக்கிறது. அதனால்தான், தாயும் தந்தையும் இல்லாமல் ஆதரவின்றி இரு குழந்தைகளும் கஷ்டப்படக் கூடாது என்று நினைத்தவன் அவர்களையும் தன்னோடு அழைத்துக் கொண்டு போய்விட்டான். குடும்பத் தலைவன் தவறான வழியில் சென்றதால் ஒரு குடும்பமே அழிந்திருக்கிறது.
மானத்துக்கும் நல்லோர் பழிக்கும் செயல்களுக்கும் அஞ்சியிருந்தால் அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் இந்த நிலையே வந்திருக்காது.
தலைவர் நடித்த அரசிளங்குமரி நமக்கு எல்லாருக்குமே பிடித்த படம். அவரது வாள் வீச்சுக்காகவே பலமுறை பார்த்திருக்கிறேன். (எத்தனை முறை என்று நினைவில்லை. தலைவர் படத்தை கணக்கு வைத்துக் கொண்டெல்லாம் பார்ப்பது தப்பு)
பாட்டுக்கோட்டையாக விளங்கிய பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளில், இசைமேதை திரு.ஜி.ராமநாதன் அவர்களின் இசையில் பாடகர் திலகத்தின் குரலில் ‘சின்னப் பயலே, சின்னப் பயலே சேதி கேளடா...’ காலத்தை வென்று நிற்கும் பாடல். கையில் குழந்தையை வைத்துக் கொண்டு அதற்கு புத்தி சொல்வது போல அமைந்திருக்கும் பாடலுக்கு தலைவர் அனாயாசமாக பாடி நடித்திருப்பார்.
போட்டியில் தன் தந்தை தோற்றதால் பறிக்கப்பட்ட அவரது வாளை மகனாக வரும் தலைவர் மீட்டு இழந்த பெருமையை மீட்பதாக கதை. தந்தையால் இழந்த குடும்ப மானத்தை மீட்க வேண்டும் என்று தீவிரமாக இருப்பதால், படம் முழுவதும் தலைவரின் தன்மான உணர்ச்சி சற்று மேலோங்கியே இருக்கும். அந்தக் காட்சிகளையும் பாத்திரத்தின் தன்மையையும் உணர்ந்து சிறப்பாக நடித்திருப்பார் தலைவர். இந்தப் பாடலின் வரியிலும் அது எதிரொலிக்கும்.
‘நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி
உன் நரம்போடுதான் பின்னி வளரணும்
தன்மான உணர்ச்சி...’
சின்னக் குழந்தைக்கு தலைவர் அறிவுரை கூறுவது போல பாடல் அமைந்திருந்தாலும் பெரியவர்களுக்கும் அந்த அறிவுரைகள் பொருத்தமானதாகத்தான் இருக்கும்.
திருடாதே படத்தில் ‘திருடாதே பாப்பா... திருடாதே’ பாடலில், ‘வறுமை நிலைக்கு பயந்து விடாதே, திறமை இருக்கு மறந்து விடாதே..’ என்று அறிவுரை கூறுவாரே, (அதுவும் பட்டுக்கோட்டையார் பாடல்தான்) அதன்படி, வறுமையைக் கண்டு பயப்படாமல் திறமையைக் கொண்டு உழைத்திருந்தால் குடும்பத்தையே அழித்து தானும் அழிந்த ஆசாமிக்கு இந்த நிலை வந்திருக்குமா?
அரசிளங்குமரியில் தலைவர் பாடும் ‘நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி..’ என்ற வரிகளைப் போல, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்தை வழங்கி காலம் என்னவோ பயிற்சியாக அளித்துக் கொண்டுதான் இருக்கிறது. பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டியது மனிதர்களின் பொறுப்பு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
THALAIVAR ATTENDED KANNADA SUPERSTAR RAJKUMAR SON MARRIAGE
http://i1170.photobucket.com/albums/...psvkf3rmqh.jpg
WHO WILL BE START THALAIVAR THREAD NO 16
http://i1170.photobucket.com/albums/...psslqff4vu.jpg
Indru 04.07.15
மக்கள் திலகம் MGR முதல்முதலாக, முதலமைச்சராக கோப்பில் கையெழுத்து போட்ட தினம் 4.7.1977.
இத்திருநாளை இன்று கொண்டாடுவோம்
4-7-77கையெழுத்திட்டார் புரட்சிதலைவர் 13வருஷம் வனவாசம் போனாய்
மு.கருணாநிதி.
watch the clippings from 2.30
in olden days kamal
https://www.youtube.com/watch?v=1fIHjjMjVKs
watch the clippings from 00.01 to 00.20
in olden days kamal
https://www.youtube.com/watch?v=cCmRd236YBs
watch the clippings from 00.01 to 00.40
in olden days kamal
https://www.youtube.com/watch?v=MONCy3X2Tvk
watch the clippings from 12.10 to 12.30
in olden days kamal
kamal paste the thalaivar poster
https://www.youtube.com/watch?v=cyiHBijAvlk
நாளை (06/07/2015) காலை 11 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "நீதிக்கு பின் பாசம் " சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .
http://i59.tinypic.com/sxyt7n.jpg
TamilNadu Chief Ministers List – CM's of Tamilnadu
1
Thiru A Subbarayalu
17-12-1920 to 11-07-1921
2
Thiru Panagal Raja
11-07-1921 to 03-12-1926
3
Dr. P Subbarayan
04-12-1926 to 27-10-1930
4
Thiru P Munuswamy Naidu
27-10-1930 to 04-11-1932
5
Thiru Ramakrishna Ranga Rao,Raja of Bobbili
05-11-1932 to 04-04-1936
6
Thiru P T Rajan
04-04-1936 to 24-08-1936
7
Thiru Ramakrishna Ranga Rao,
Raja of Bobbili
24-08-1936 to 01-04-1937
8
Thiru Kurma Venkata Reddy Naidu
01-04-1937 to 14-07-1937
9
Thiru C Rajagopalachari
14-07-1937 to 29-10-1939
10
Thiru Tanguturi Prakasam
30-04-1946 to 23-03-1947
11
Thiru O P Ramaswamy Reddiyar
23-03-1947 to 06-04-1949
12
Thiru P S Kumaraswamy Raja
06-04-1949 to 09-04-1952
13
Thiru C Rajagopalachari
10-04-1952 to 13-04-1954
14
Thiru K Kamaraj
13-04-1954 to 02-10-1963
15
Thiru M Bakthavatsalam
02-10-1963 to 06-03-1967
16
Dr. C.N. Annadurai
06-03-1967 to 03-02-1969
17
Dr. Kalaignar M Karunanidhi
10-02-1969 to 04-01-1971
15-03-1971 to 31-01-1976
18
Dr. M G Ramachandran
30-06-1977 to 17-02-1980
09-06-1980 to 15-11-1984
10-02-1985 to 24-12-1987
19
Thirumathi Janaki Ramachandran
07-01-1988 to 30-01-1988
20
Dr. Kalaignar M Karunanidhi
27-01-1989 to 30-01-1991
21
Dr. Selvi J Jayalalithaa
24-06-1991 to 12-05-1996
22
Dr. Kalaignar M Karunanidhi
13-05-1996 to 13-05-2001
23
Dr. Selvi J Jayalalithaa
14-05-2001 to 21-09-2001
24
Thiru O. Panneerselvam
21-09-2001 to 01-03-2002
25
Dr. Selvi J Jayalalithaa
02-03-2002 to 12-05-2006
26
Dr. Kalaignar M. Karunanidhi
13-05-2006 to 15-05-2011
26
Dr. Selvi J Jayalalithaa
16-05-2011 ...
கடந்த 27/06/2015 முதல் மதுரை வண்டியூர் பழனிமுருகன் அரங்கில் புரட்சி நடிகர் /
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அசத்தலாக நடித்த " எங்க வீட்டு பிள்ளை " தினசரி 3 காட்சிகள் திரைக்கு வந்து வெற்றி நடை போட்டது. அதன் சுவரொட்டிகளை புகைப்படம் எடுத்து அனுப்பி , திரியில் பதிவிட உதவிய மதுரை நண்பர் திரு. எஸ். குமார். அவர்களுக்கு நன்றி .
http://i58.tinypic.com/2qn2n4j.jpg
thanks loganathan sir for updating thalaivar news, rereleased movie details etc.,
NOS ON JAYA MOVIE- RAJARAJAN
https://www.youtube.com/watch?v=pKaOkt19hrs
இன்று காலை 6 மணி முதல் ஜெயா மூவிஸில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த
"ராஜராஜன் " ஒளிபரப்பாகி வருகிறது.
http://i59.tinypic.com/6p6pev.jpg
சமீபத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் கமல் நடித்த பாபநாசம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் இதயக்கனி மாத இதழை கமல் படிப்பது போல் எடுத்துள்ளார்கள். மக்கள் திலகத்தின் புகழ் பரப்பி வரும் இதயக்கனி இதழுக்கு வாழ்த்துக்கள்.
http://s16.postimg.org/sf5294wzp/Ado...b462f54b02.jpg
https://www.youtube.com/watch?v=DmhN74ky5Vs
Intentionally posted this Song because one person [not in mayyam] who has commented about MGR's AIADMK and the party functionaries etc. If he has that much courage why not print posters and paste it throughout Tamil Nadu, Open Challenge. தலைவரை வச்சு பிழைப்பு நடத்தவும் சம்பாதிக்கவும் மட்டும் தான் தெரியும்
நமது சாம்ராஜ்ய சக்கரவர்த்தி மக்கள்திலகம் திரி பாகம் 16 துவங்க உள்ள நாளில் அனைத்து பொன்மனசெம்மலின் ரசிக இதயங்களுக்கு நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக... திரு சைலேஷ்பாசு அவர்கள் இப்பொழுது பதிவிட்ட நினைத்ததை முடிப்பவன் - கண்ணை நம்பாதே ...காவிய பாடல் காட்சிக்கு ஏதும் சிறப்பு செய்திகள் உள்ளதா? என அறிய விரும்புகிறேன்...
படம் : பாசம்
பாடல் காட்சி : உலகம் பிறந்தது எனக்காக
http://i62.tinypic.com/t02nue.jpg