http://s32.postimg.org/6cwz7y96t/IMG...508_WA0090.jpg
தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்.
Printable View
http://s32.postimg.org/6cwz7y96t/IMG...508_WA0090.jpg
தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்.
தந்தி தொலைகாட்சியில் ஒளி பரப்பான ''மக்கள் மன்றம்'' மேடையில் பேசிய ஒரு கட்சி தலைவர்
மக்கள் திலகம் எம்ஜிஆர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரங்களுக்கு மக்கள் வெள்ளம் அலை அலையாய் நடந்தும் , மாட்டு வண்டிகளிலும் திரளாக வந்து அவருடய பேச்சை கேட்டு மகிழ்ந்தார்கள் . பிரச்சாரங்கள் நள்ளிரவு நேரம் வரை நடக்கும் . பல சமயங்களில் விடியற்காலை வரை நடைபெறும் . பொது மக்களும் அவருடய வரவை காண மணிக்கணக்கான நேரங்கள் காத்திருந்தார்கள் .அதுதான் உண்மையான கூட்டம் . மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே தலைவர் மக்கள் தலைவர் அன்றும் இன்றும் என்றும் எம்ஜிஆர் ஒருவரே .
10.5.1963
மக்கள் திலகத்தின் ''பெரிய இடத்து பெண் '' - இன்று 53 ஆண்டுகள் நிறைவு தினம் .
https://youtu.be/XKMivdgYnV8
http://s32.postimg.org/9idqvdq6d/FB_...ed_Picture.jpg
Film news Anandhan - makkal thilagam.
தினத்தந்தி - 07/05/2016
http://i63.tinypic.com/23k6jj4.jpg
THE HINDU -CINIMA PLUS - 08/05/2016
http://i65.tinypic.com/14j9b9t.jpg
மாலை மலர் - 07/05/2016
http://i67.tinypic.com/xn7xmq.jpg
http://i65.tinypic.com/jic978.jpg
தமிழ் இந்து - 06/05/2016
http://i66.tinypic.com/eapkz6.jpg
அதிமுக கொடியை வடிவமைத்த நடிகர்
http://i68.tinypic.com/2prwynk.jpg
நகைச்சுவை நடிகர் பாண்டு என்றாலே, அவரின் விசித்திரமான உச்சரிப்பும், வாயசைவும்தான் நினைவுக்கு வரும். அ.தி.மு.க. கொடியை வடிவமைத்தவரும், இரட்டை இலைச் சின்னத்தை வரைந்து கொடுத்தவரும் இவர்தான். இது இந்தத் தலைமுறையினருக்குத் தெரியுமா என்பது சந்தேகமே. தனது அனுபவங்களைப் பற்றி அவர் நினைவு கூர்ந்ததாவது:
அதிமுக தொடங்கப்பட்ட 1972-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி இரவு 10 மணிக்கு தன்னைச் சந்திக்க வருமாறு அழைத்தார் எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கி இருக்கிறேன் தெரியுமா... என்றார். தெரியும் பத்திரிகையில் பார்த்தேன் என்றேன் நான். கட்சிக்கு பேர் என்ன எனக் கேட்டார். அதிமுக என்றேன். கட்சிக்கான கொடியை நீங்கள்தான் வரைய வேண்டும். இன்றிரவே இங்கேயே தங்கி வரைய வேண்டும் என்றார். அங்கே இருந்த அறைக்குள் என்னை அனுப்பிவிட்டு, வெளியில் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போய்விட்டனர். அதிமுக ஆரம்பிக்கப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை அப்போது தமிழகத்தில் இருந்தது. எம்.ஜி.ஆரின் வீடு இருந்த இடத்தை திரைப்பட சண்டைக் கலைஞர்கள்தான் காவல் காத்தனர்.
அப்போதுதான் சென்னை ஓவியக் கல்லூரியில் படித்து முடித்திருந்தேன். எனது சகோதரர் இடிச்சபுளி செல்வராஜ், எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர் மூலமாக என்னைப் பற்றி தெரிந்து கொண்டே என்னை அழைத்திருந்தார் எம்ஜிஆர்.
இரவு 10 மணிக்கு அறைக்குள் சென்ற நான் 10.30-க்குள் கருப்பு- சிவப்பு நிறங்களில், நடுவில் அண்ணா சிரிப்பது போல ஒரு கொடியை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த எம்.ஜி.ஆர் தொண்டர்களை உசுப்பிவிடுவது போல இந்தக் கொடி இல்லையே. சிரிப்பில் போர்க்குணம் இருக்காது. கட்சியின் போர்க் குணத்தை வெளிக்காட்டும் விதத்தில் கொடியை வடிவமைத்துத் தர வேண்டும் என்றார்.
அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலையை மனதில் வைத்து, அவர் கை நீட்டிப் பேசுவது போல கொடிக்கான படத்தை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த அவர் இந்தப் படத்தைக் கொடியாக மாற்றும்போதும் கை வெட்டுப்பட்டுவிடும் என்றார். கையைச் சுருக்கி நேராக இருப்பது போல வரைந்து கொடுத்தேன். அது பார்ப்பதற்கு, அண்ணாவின் கையில் துப்பாக்கி இருப்பது போல இருந்தது. அதைப் பார்த்தவர். ஏன் எம்.ஆர்.ராதா என்னை சுட்டது போதாதா என்றார். உடனே கையை சிறிது மேலே இருப்பது போன்ற இப்போதைய கொடியை வரைந்து கொடுத்தேன். கட்டித் தழுவி, மிகவும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டார்.
அதேபோல, இரட்டை இலைச் சின்னத்தையும் நான்தான் வரைந்து கொடுத்தேன். அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியவுடன் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில் என்னை அறிமுகப்படுத்தி, 5 பவுன் தங்கச் சங்கிலியும், ரூ.10,000 ரொக்கப் பரிசும் கொடுத்தார் எம்ஜிஆர்.
தமிழகம் முழுவதும் நான் வடிவமைத்த கொடி பட்டொளி வீசிப் பறப்பதைப் பார்க்கும் வேளைகளில் எல்லாம் மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஒரு கலைஞனுக்கு இதைத் தவிர வேறு என்ன வேண்டும் என்றார் அவர்.
courtesy -அருளினியன்
11.5.1973
தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் பல சாதனைகள் படைத்து மாபெறும் வெற்றி பெற்ற காவியம்
''உலகம் சுற்றும் வாலிபன் '' இன்று 43 ஆண்டுகள் நிறைவு தினம் .
http://i67.tinypic.com/16blo9x.jpg
http://www.tamil.webdunia.com/articl...0900049_1.html
வெற்றி தேவதை புரட்சித் தலைவரின் காலில் மறுபடியும் ஒருவாட்டி விழுவதற்கு இன்னும் 8 நாள்தான் இருக்கிறது. மறைந்து 30 வருசம் ஆனாலும் தெய்வத்தின் செல்வாக்கு குறையவில்லை. என்றென்றுக்கும் குறையாது.
அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும்: புதிய தலைமுறை கருத்துக் கணிப்பு
திங்கள், 9 மே 2016 (21:37 IST)
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 164 இடங்களில் வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் தேர்தல் கருத்துக் கணிப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ADMK Wins" width="540" />
தமிழக சட்டசபை தேர்தலுக்கு 7 நாட்களே உள்ள நிலையில் புதிய தலைமுறை மற்றும் ஏபிடி நிறுவனம் சேர்ந்து தேர்தல் கருத்துக் கணிப்பை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.
தேர்தல் கருத்துக் கணிப்பில் அதிமுக 164 இடங்களில் வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், திமுக 66 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் பெறும் என்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் திமுக எதிர்க் கட்சியாகவும், மக்கள் நலக் கூட்டணி மூன்றாவது அணியாகவும் அமையும் என்பது கருத்துக் கணிப்பின் முடிவாகும்.
இதைத்தொடர்ந்து கருத்துக் கணிப்பில் மக்களிடம் “யாருக்கு ஓட்டுப் போட விருப்பம்” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது
அதிமுக - 38.5%
திமுக - 32.11%
மநகூ - 8055%,
பாமக - 4.7%
நாம் தமிழர் - 2.12%
பாஜக - 1.96%
கருத்துக் கணிப்பு என்பது தேர்தல் முடிவுக்கான முன் மாதிரியாக கருதப்படும் நிலையில் நீயூஸ் 7 வெளியிட்ட தகவலில் திமுக முன்னிலை வகிப்பதாக வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது புதிய தலைமுறை வெளியிட்ட கருத்துக் கணிப்பில் அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழக்த்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றுக் கட்சி அமைய வேண்டும் என்றுக் கூறிப் பிரச்சாரம் செய்யும் கட்சிகள் அனைத்தும் கருத்துக் கணிப்புகள் முறையாக எடுக்கப்படவில்லை என்று விவாதிப்பதுடன் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
வெற்றி தேவதை நம்மளை கட்டி அணச்சு இறுக்கி ஒரு உம்மா குடுக்கும்.
வெற்றி... வெற்றி... வெற்றி...
நம் தெய்வத்துக்கு வெற்றி
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
STILL FROM RAGASIYAPOLICE 115
http://i64.tinypic.com/16h6zx5.jpg