https://youtu.be/uxZkYagWfCA... Thanks...
Printable View
https://youtu.be/uxZkYagWfCA... Thanks...
https://youtu.be/SscBxm4PdBs.... Thanks......
https://youtu.be/sCTaN4mKCus....... Thanks...
தலைவர் வராமல் தாலி கட்ட மாட்டேன் என்ற தொண்டர்கள் மத்தியில் அன்று தலைவர் வராமல் முதலிரவு கிடையாது என்றவர்.....படியுங்கள்.
கோவை உடுமலை பேட்டை பகுதி சார்ந்த அடுக்கு மொழி பேச்சாளர் திரு. லியாகத் அலிகான் தலைவருக்கு பிடித்தவர்....தலைவரே 1 மணி நேரம் அமர்ந்து மேடையில் இவரை பேச விட்டு ரசித்தவர்.
இவர் திருமண தேதி கேட்டு முதல்வர் தலைவர் வீட்டுக்கு போக அங்கே கூட்டம்...வந்த விஷயம் கேட்க சொன்னார் முதல்வர் என்ற உடன் ஒரு சாதாரண துண்டு சீட்டில் தனக்கு திருமண தேதி நீங்கள் நடத்தி வைக்க தரவேண்டும் என்று எழுதி அவர் கொடுக்க.
வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள். அவரை வீட்டுக்குள் போய் பாயாசம் சாப்பிட்டு போக சொல்லுங்கள் என்கிறார் மன்னவர்.
அதன் படி அதே வருடம் செப்டம்பர் 13 மதுரையில் திருமணம் அடுத்த நாள் உடுமலையில் வரவேற்பு ஏற்பாடுகள் முடிந்தன....மதுரையில மணம் முடித்து மாலை உடுமலை வந்த அவருக்கு மாவட்ட ஆட்சியர் மொயினுதீன் அவர்கள் இடம் இருந்து இரவு 7 மணிக்கு தகவல்...நாளை முதல்வர் வர முடியாதாம்...வேறு தேதியில் வரவேற்பு வைத்து கொள்ள சொன்னார் உங்களிடம் என்று சொல்ல.
அதற்கு அவர் எப்ப வேண்டுமானாலும் வரட்டும் அதுவரை எனக்கு முதலிரவு இல்லை...இதை தலைவரிடம் சொல்லிவிடுங்கள் என்று லியாகத் அவர்கள் சொல்ல.
இது என்ன வம்பு என்று ஆட்சியர் முதல்வர் அலுவலகத்தில் சொல்ல மீண்டும் தொலை பேசி அழைப்பு இரவு 11 மணி அளவில் வர...இவர் போஸ்ட் ஆபீஸ் ஓட அதற்குள் அது கட் ஆகி விட.
இவர் அங்கேயே காத்து இருக்க அதிகாலை 5 மணி அளவில் தலைவரின் உதவியாளர் வீரையா IAS மறுபடி பேசி நீங்கள் உங்கள் முதலிரவை முடியுங்கள் தலைவர் வரும் 19 அன்று காலை உடுமலை வருகிறார் என்று சொல்ல...இனி எங்கே முதல் இரவு மணி காலை 5.30 மணி சரி என்று தலைவரிடம் சொல்லுங்கள் என்று இவர் சொல்ல.
செப்டம்பர் 19 அன்று காலை ஒரு பதவியும் இல்லாத அந்த தொண்டன் வீட்டுக்கு 600 கிலோமீட்டர் பயணம் செய்து நிகழ்ச்சி நடைபெற்ற உடுமலை தாஜ் திரை அரங்குக்கு வருகிறார் முதல்வர் எம்ஜியார்.
வந்து மேடை எறியவுடன் லியாகத் அவர்கள் போட்ட மாலையை வாங்கி கொண்ட முதல்வர் அவர் காதில் என்ன எல்லாம் முடிந்ததா என்று கேட்க இல்லை என்று இவர் சொல்ல.
அவரை கையை பிடித்து கொண்டு நாற்காலியில் அமர வைக்கிறார் பொன்மனம்...அன்று கோவை மாவட்டம் சார்ந்த குழந்தைவேலு, கோவை தம்பி, திருப்பூர் மணிமாறன், மருதாசலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிய பின் தலைவர் இவரை பற்றி புகழ்ந்து பேசி என் வாழ்வில் இது ஒரு புது அனுபவம் என்று சொல்லி.
எங்கே மணப்பெண் என்று கேட்க அதற்கு லியாகத் அவர்கள் அண்ணா எங்கள் மார்க்க ஜமாத் படி மணப்பெண்ணை மேடையில் அமர வைக்க கூடாது என்று முடிவெடுத்து இருந்தாலும் நான் அவரை அழைத்து வந்து அரங்க மேலாளர் அறையில் அமர வைத்து இருக்கிறேன் கூப்பிடவா என்று கேட்க.
அதற்கு தலைவர் வேண்டாம் நீ ஆண்மகன் பரவாயில்லை ஆனால் பெண் வந்துவிட்டால் அவர்களை பற்றி தவறாக பேச கூடாது உங்கள் ஜமாத் விருப்பத்தை மீற வேண்டாம்...
பின்னால் தோட்டத்துக்கு அழைத்து வா என்று சொல்லி மீண்டும் காதில் ஏதோ சொல்லி கை கூப்பி விடை பெறுகிறார் முதல்வர் வாத்தியார்.
என்ன ஒரு நாகரீகமாக நடத்தை தலைவரிடம் என்று அவையோர் முணுமுணுத்த படி வெளியேற அதுதான் மக்கள் முதல்வர் அவர்.
படத்தில் தலைவர் பற்றி ஒரு தொலைக்காட்சி பேட்டியில் இருப்பவர் லியாகத் அலிகான் அவர்கள்.
அவர் மாணவர் பிரிவு மாநில செயலர் ஆக இருந்த போது நாங்கள் நெல்லையில் நடத்திய மாணவர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்ட படம் அடுத்தது.
வாழ்க எம்ஜியார் புகழ்.
நன்றி...தொடரும்..உங்களில் ஒருவன் நெல்லை மணி....தொடரும்........ Thanks...
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய "காலை வணக்கம்"
தலைவரை பற்றிய ஒரு தகவல்:
இன்று 17-ம் தியதி
தலைவர் நடிப்பில் வெளிவந்த 136 படங்களில் ஜெனோவா ( மலையாளம் ) மட்டுமே 17-ம் தியதி வெளிவந்த ஒரே ஒரு திரைப்படம்.
ஜெனோவா ( மலையாளம்)
17-04-1953
ஜெனோவா மலையாளம்
மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது, மலையாள படம் வெளியாகி 6 வாரங்களுக்கு பிறகு தான் தமிழில் 01--06-1953-ம் தியதி வெளியிடப்பட்டது.
மலையாளத்தில் தயாரான ஒரே எம்.ஜி.ஆர் படம்
இதன் மலையாள பதிப்பில் பி.எஸ்.வீரப்பா நடித்த வில்லன் கேரக்டரில் மலையாள வில்லன் நடிகர் ஆலப்பி வின்செண்ட் நடித்தார்.
இதன் மலையாள பதிப்பில் எம்.ஜி.ஆருக்கு பதில் வேறொருவர் டப்பிங் பேசினார். எம்.ஜி.ஆருக்கு சரியாக மலையாளம் பேச வரவில்லை என்று அதன் தயாரிப்பாளர் அப்படிச் செய்தார். இதை எதிர்த்து எம்.ஜி.ஆர் வழக்கு தொடர்ந்தார். பின்னர் வழக்கை வாபஸ் பெற்றார்.
MGR நடித்த ஒரே ஒரு மலையாள படம் இது தான். 1953 -ம் ஆண்டு ஈஸ்டர் அன்று இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது. எனினும், இது ஈஸ்டருக்கு 13 நாட்களுக்கு பின்னர் 17-04-1953-ம் தியதி தான் திரையரங்குக்கு வந்தது. ஈஸ்டருக்கு பின்னர் வெளியான போதிலும், ஜெனோவா பெரிய வெற்றி பெற்றது.
ஜெனாவா -
"ஜானோவா நாடகம்" மற்றும் "ஜானோவா பர்வம்" ஆகியவற்றின் கீழ் கேரளாவில் பிரபல நாடக குழுவால் நடத்தப்பட்ட ஒரு இசை நாடகம் (சங்கீகா நாடகம்) தழுவலாக இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் - 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மலையாள இசை நாடகங்களில் ஒன்றான டி.சி.அச்சுத மேனனின் வேடங்களில் ஒன்றான இந்த இசை நாடகம் மிகவும் பிரபலமானது.
இயக்கம் :- ஈச்சப்பன்
தயாரிப்பு :- ஈச்சப்பன்
கதை :- சுவாமி பிரம்ம வரதன்
இளங்கோவன் (உரையாடல்)இசை :- விஸ்வநாதன்
ஞானமணி கல்யாணம்
ஒளிப்பதிவு :- G.விட்டல்ராவ்
நடிப்பு :- எம். ஜி. இராமச்சந்திரன்
பி. எஸ். வீரப்பா
எம். ஜி. சக்ரபாணி
டி. எஸ். துரைராஜ்
பி. எஸ். சரோஜா , கண்ணம்பா,
ராஜமணி
@ வெளியிடூ : 17th April, 1953
( மலையாளம்)
@ வெளியீடு : 1st June, 1953
( தமிழில் )
நன்றி ...
என்.வேலாயுதன் , திருவனந்தபுரம்........ Thanks...
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய " வணக்கம்"
தட்சயக்ஞம். - 31-03-1938 (Dakshayagnam) இது ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் 31-03-1938-ல் வெளிவந்த 3-வது எம் ஜி ஆர் படம்
நடிப்பு
வி.ஏ.செல்லப்பா, சி.ஜி.வெங்கடேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஜி.நடராஜ பிள்ளை, என்.எஸ்.கிருஷ்ணன், கே.கே.பெருமாள், எம்.எம்.ராதாபாய், கே.ஆர்.ஜெயலட்சுமி, டி.ஏ.மதுரம், டி.என்.சந்திராம்மாள்
கதை
ராஜா சந்திரசேகர்
இசை
என்.எஸ்.பாலகிருஷ்ணன்
இயக்கம்
ராஜா சந்திரசேகர்
தயாரிப்பு நிறுவனம்
மெட்ரோபலிடன் பிக்சர்ஸ்
வெளியீடு
31 மார்ச் 1938
தட்சயக்ஞம், ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் வி.ஏ.செல்லப்பா, சி.ஜி.வெங்கடேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஜி.நடராஜ பிள்ளை, என்.எஸ்.கிருஷ்ணன், கே.கே.பெருமாள், எம்.எம்.ராதாபாய், கே.ஆர்.ஜெயலட்சுமி, டி.ஏ.மதுரம், டி.என்.சந்திராம்மாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர். தட்சயக்ஞம் என்ற பெயரில் பல படங்கள் வெளிவந்திருந்தாலும், அவற்றில் இப்படம் தான் முதல் பேசும் படமாகும்.
பிரம்மன் வழி வந்த தட்சணின் மகளான சதி, தன் தந்தையின் விருப்பத்திற்கு எதிராக, சிவபெருமானை (வி.ஏ.செல்லப்பா) திருமணம் செய்கிறார். இதனால் சிவனை அவமானப்படுத்த யாகம் செய்யும் தட்சன், அனைத்து கடவுள்களையும் அழைக்கிறார். ஆனால் சிவபெருமானை மட்டும் அழைப்பதில்லை. அந்த யாகத்தில் கலந்து கொள்ள கணவன் சிவனின் விருப்பத்திற்கு மாறாக வருகிறார் சதி. ஆனால் சதியை அவள் தந்தை அவமானப்படுத்துகிறார். அவமானம் தாங்காத சதி தீயில் விழுந்து தன்னை மாய்த்துக் கொள்கிறாள். வீரபத்ரர் மூலமாக சிவபெருமான், தட்சனின் யாகத்தை தடுத்து, அவன் தலையை வெட்டி, ஆட்டுத் தலையை அவ்விடத்தில் பொருத்தச் செய்கிறார். பின்னர் சிவபெருமான் சதியின் உடல் முன் ருத்ர தாண்டவம் ஆடுகிறார். இதனால் உலகம் அழியும் நிலை ஏற்படுகிறது. அப்போது பிற கடவுள்கள் அங்கு தோன்றுகின்றனர். விஷ்ணுவின் சக்கரம், சதியின் உடலை பல பாகங்களாக வெட்டுகிறது. அவை இந்தியாவின் பல பகுதிகளில் விழுந்து சக்தி பீடங்களாக மாறுகின்றன. இது தான் இப்படத்தின் கதை.
@@@@@
பாடல்கள் :-
ஸ்ரீகணேச பாஹிமாம் சந்ததம்
தனியாய் எனை விடுத்தாய் சதியே நீ
வருவாயே தின்பம் தருவாயே
ஸ்ரீமந்நாராயண கோவிந்தா
மழையில்லா சீமையில் மாடுகள் பூட்டி
ஆதியில் பாற்கடல் விஷத்தினை உண்டு
பரமானந்த சுபதினம்
மனமோகனாங்க சுகுமாரா
மனதிற்கிசைந்திடாத மணத்தினாலே
ஹர ஹர ஹர ஹர அகிலாதிபனே
சிவானந்த ரசம் இதுவே
பெறும் புவிதனிலே மாந்தர் பெருநெறி
ஹா மாதர் மனோகர வாழ்க்கை
அஞ்சி உன் கட்டளைக்கே
அதிரூப லாவண்ய சுந்தரா
மாதருக்கெல்லாம் குணம்
பவாநீ பவாநீ பவாநீ
வாருங்கள் எல்லோரும் தட்சன்
இருவரும் ஒன்றாய் கூடி வாழலாம்
பார்வதியாக ஜனிப்பாய்
இந்தத் திரைப்படம் வணிக ரீதியாக தோவியை தழுவியது
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்......... Thanks...
சதிலீலாவதி : 28-03-1936
@ நமது தங்க தலைவரின் முதல் திரைப்படம் "சதிலீலாவதி " இப்படத்தில் நடிக்க முதலாளி எம்.கந்தசாமி முதலியார் அவர்கள் தான் எம்.ஜி.ஆரை சிபாரிசு செய்து இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்க வைத்தார். இவரது மகன் தான் நடிகர் எம்.கே.ராதா- சதிலீலவதியின் கதாநாயகன்.
@ இந்த படம் எம்.கே.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன்,டி.எஸ். பாலையா, கே.ஏ.தங்கவேலு, சகஸ்ரநாமம் ஆகியோருக்கும் கூட முதல் படம்
சதிலீலாவதி : 28-03-1936
தயாரிப்பு : - மனோரமா ஃபிலிம்ஸ்
கதாபாத்திரம் : - ஆய்வாளர் ரெங்கையா நாயுடு ( சிறு வேடம்)
இயக்குனர் : - எல்லீஸ் R. டங்கன்
கதை : - எஸ்.எஸ் வாசன்
இசை : - சுந்தர் வாத்தியார்
கதாநாயகன் : - M.K.ராதா
கதாநாயகி. : - M.R.ஞானம்மாள்
வெளியான தியதி :- 28 -03-1936
ஆனந்த விகடன் இதழில் சுப்பிரமணியம் சீனிவாசன் புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். 1935ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்திருந்தாலும், வழக்கின் காரணமாக இந்தத் திரைப்படத்தின் வெளியீடு தாமதமானது. பின்னர், 28 மார்ச் 1936 ஆம் தேதி படம் வெளியானது.
கதைச்சுருக்கம்:-
சென்னையில் செல்வந்தர் கிருஷ்ணமூர்த்தி தன் மனைவி லீலாவதி மற்றும் மகள் லட்சுமியுடன் வாழ்ந்து வருகிறார். தன் நண்பன் ராமநாதன் மூலமாக மது மற்றும் சூதாட்டத்திற்கு அறிமுகம் கிடைக்கிறது. பின்னர் மோகனாங்கி என்ற பெண் வாசம் ஆசை கொள்வதால் அவளுக்கு ரூபாய் 50000 தருவதாக வாக்கு கொடுக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
கிருஷ்ணமூர்த்தியின் நண்பன் பரசுராமன் அவரை நல்வழிப்படுத்த முயற்சி செய்கிறார். அந்த ஆடம்பரமான வாழ்க்கைக்காக கிருஷ்ணமூர்த்தி வாங்கிய கடனை கட்ட இயலாததால் மேலும் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகிறார். அதன் பின்விளைவாக தன் மனைவி லீலாவதியை சந்தேகிக்கிறார்.
பின்னர் ஒரு சமயம் குடிபோதையில் கிருஷ்ணமூர்த்தி இருக்கும்பொழுது, தன் நண்பன் பரசுராமனை தான்தான் கொன்று விட்டதாக தவறாக நினைத்து, மனைவி மற்றும் மகளை கோவிந்தனிடம் விட்டுவிட்டு ஸ்ரீலங்காவிற்கு தப்பிச் சென்று, ஒரு தேயிலை தோட்டத்தில் வேலை செய்கிறார் கிருஷ்ணமூர்த்தி. லீலாவதி மற்றும் லட்சுமி இருவரும் வறுமையில் வாடுகிறார்கள்.
தலைவரின் முதல் படமான " சதிலீலாவதி" வெளியான அந்த பொன்னான நாளை குறிக்கும் ( 28-03-36 ) குறிக்கும் ஒரு ரூபாய் நோட்டு மிக்க மகிழ்ச்சியுடன் உங்கள் பார்வைக்கு..........
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்..... Thanks...
" Special cover " released on Centenary celebration of Dr.M.G.Ramachandran by Chief Postmaster General, Tamil Nadu Circle
*Marudur Gopalan Ramachandran, popularly known as MGR was an Indian actor and politician who served as Chief Minister of Tamil Nadu for eleven years between 1977 and 1987.
M.G.Ramachandran (1917-1987) popularly known as MGR dominated like no other, the film's and politics of Tamilnadu. A Charis matic actor and philanthropist, he commanded the idolatrous adulation of millions of Tamilians. His achievements in 3 fields, viz, films, phianthrophy and politics were remarkable considering his humble origins.*
( * These are the words written on the back of the cover )
Design approved by :
Chief Postmaster General,
Tamilnadu Circle Chennai -600 002
Special cover :
Concept And Design By
South India Philatelists' Association
Price 75 Rupees
By. N.Velayudhan
Trivandrum
தமிழில்:-
சிறப்பு அட்டை "டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் தமிழக வட்டத்தின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் வெளியிட்டார்
எம்.ஜி.ஆர் என்று பிரபலமாக அழைக்கப்படும் மருதுர் கோபாலன் ராமச்சந்திரன் ஒரு இந்திய நடிகரும் அரசியல்வாதியும் ஆவார், இவர் 1977 முதல் 1987 வரை பதினொரு ஆண்டுகள் தமிழக முதல்வராக பணியாற்றினார்.
எம்.ஜி.ஆர். ஒரு கவர்ச்சியான நடிகரும், பரோபகாரியுமான அவர் பல லட்ச கணக்கான தமிழர்களின் இதய தெய்வம் ஆனார். திரைப்படங்கள், பரோபகாரம் மற்றும் அரசியல் ஆகிய 3 துறைகளில் அவர் செய்த சாதனைகள் பல அவரது தாழ்மையான தோற்றத்தை கருத்தில் கொண்டு குறிப்பிடத்தக்கவை. *
சிறப்பு கவர் விலை 75 ரூபாய்.......... Thanks...
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய "காலை வணக்கம்"
தலைவரை பற்றிய ஒரு தகவல் :-
12 -ஆம் தியதி;
நமது தங்க தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் நடிப்பில் 12- ஆம் தியதி வெளிவந்த திரைப்படங்கள் 3 எண்ணம் ஆகும். அவை நமது நண்பர்கள் பார்வைக்கு.....
1). பிரகலாதா - 12-12-1939
2). நேற்று இன்று நாளை - 12-07-1974
3). ஊருக்கு உழைப்பவன் - 12-11-1976
நன்றி
என்.வேலாயுதன் - திருவனந்தபுரம்....... Thanks...
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய "காலை வணக்கம்"
தலைவரை பற்றிய ஒரு தகவல் :-
இன்று 8 -ஆம் தியதி;
நமது தங்க தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் 136 -ல் ஒரு படம் கூட 8-ஆம் தியதியில் வெளிவந்த தில்லை என்பது தான் உண்மை.
மற்ற எல்லா தியதிகளிலும் படம் வெளியானது உண்டு.
நன்றி
என்.வேலாயுதன் - திருவனந்தபுரம்.
* நண்பர்களே திண்டுக்கல்லில் நடைபெறும் நமது தலைவரின் 103-வது பிறந்தநாள் விழாவில் சந்திப்போம் *........ Thanks...
நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / தொண்டர்கள்/பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய மாலை வணக்கம்...
திண்டுக்க*ல்லில் மனித*நேய* மாணிக்க*ம் எம்.ஜி.ஆர் ப*க்த*ர்க*ள் குழு சார்பாக* 103-வ*து பிற*ந்த*நாள் விழா சிறப்பாக கொண்டாட*ப்ப*ட்ட*து. கேரள, கர்நாடக, பாண்டிச்சேரி, மற்றும் த*மிழ*க*ம் முழுவ*தும் ப*ல்வேறு மாவ*ட்ட*ங்க*ளில் இருந்தும் திர*ளான* ரசிகர்கள்/ ப*க்த*ர்க*ள்/தொண்டர்கள் பலரும் க*லந்துகொண்டனர்.
ந*ன்றி..... நன்றி..... நன்றி....
விழாவினை சிறப்பாக தொகுத்து வழங்கிய நண்பர் திரு. சென்றாய பெருமாள் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்....
விழா முடிவில் விழாவில் கலந்து கொண்ட 103 நண்பர்களுக்கு
நானும் நண்பர் பொள்ளாச்சி சிவநடராஜனும் இணைந்து தலைவர் தபால் தலை உள்ளடங்கிய ஒரு நினைவு பரிசு வழங்கப்பட்டது....
நன்றி..
என்.வேலாயுதன் (February 2020 post)...... Thanks...
திருவனந்தபுரம்.
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய "காலை வணக்கம்"
தலைவரை பற்றிய ஒரு தகவல் :-
5 -ஆம் தியதி;
நமது தங்க தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் நடிப்பில் 5 - ஆம் தியதி வெளிவந்த திரைப்படங்கள் 4 எண்ணம் ஆகும். அவை நமது நண்பர்கள் பார்வைக்கு.....
1). சர்வாதிகாரி (தெலுங்கு) - 05-10-1051
2). நாம் - 05-03-1953
3). நவரத்தினம் - 05-03-1977
4). இன்று போல் என்றும் வாழ்க - 05-05-1977
நன்றி
என்.வேலாயுதன் - திருவனந்தபுரம்..... Thanks...
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய "காலை வணக்கம்"
தலைவரை பற்றிய ஒரு தகவல் :-
4 -ஆம் தியதி;
நமது தங்க தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் நடிப்பில் 4 - ஆம் தியதி வெளிவந்த திரைப்படங்கள் 4 எண்ணம் ஆகும். அவை நமது நண்பர்கள் பார்வைக்கு.....
1).ஸ்ரீமுருகன் - 04-06-1946
2). நான் ஆணையிட்டால் - 04-02-1966
3). சங்கேமுழங்கு - 04-02-1972
4). நாளை நமதே - 04-07-1975
நன்றி
என்.வேலாயுதன் - திருவனந்தபுரம்..... Thanks...
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய "காலை வணக்கம்"
தலைவரை பற்றிய ஒரு தகவல் :-
3 -ஆம் தியதி;
நமது தங்க தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் நடிப்பில் 3 - ஆம் தியதி வெளிவந்த திரைப்படங்கள் 3 எண்ணம் ஆகும். அவை நமது நண்பர்கள் பார்வைக்கு.....
1). ஜோதிமலர் ( அல்லது) தாசிப்பெண் - 03-03-1943
2). மீரா - 03-11-1945
3). படகோட்டி - 03-11-1964
நன்றி
என்.வேலாயுதன் - திருவனந்தபுரம்..... Thanks...
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய "காலை வணக்கம்"
தலைவரை பற்றிய ஒரு தகவல் :-
2 -ஆம் தியதி;
நமது தங்க தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் நடிப்பில் 2- ஆம் தியதி வெளிவந்த திரைப்படங்கள் 4 எண்ணம் ஆகும். அவை நமது நண்பர்கள் பார்வைக்கு.....
1). மருதநாட்டு இளவரசி - 02-04-1950
2). மர்மயோகி - 02-02-1951
3). புதுமைப்பித்தன் - 02-08-1957
4). ராஜா தேசிங்கு - 02-09-1960
நன்றி
என்.வேலாயுதன் - திருவனந்தபுரம்...... Thanks...
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய "காலை வணக்கம்"
தலைவரை பற்றிய ஒரு தகவல் :-
1 -ஆம் தியதி;
நமது தங்க தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் நடிப்பில் 1- ஆம் தியதி வெளிவந்த திரைப்படங்கள் 4 எண்ணம் ஆகும். அவை நமது நண்பர்கள் பார்வைக்கு.....
1). ஜெனோவா ( தமிழ்) 01-06-1953
2). அரசிளம்குமரி - 01-01-1961
3). விவசாயி - 01-11-1967
4). அடிமைப் பெண் - 01-05-1969
நன்றி
என்.வேலாயுதன் - திருவனந்தபுரம்...... Thanks...
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய மதிய வணக்கம் நண்பர்களே....
* எம்.ஜி.ஆர் - காலவரிசை*
* 1917 முதல் 2019 *
1917. * இலங்கையில் கண்டியில் உள்ள நாவலப்பிட்டி. என்ற இடத்தில் 1917 -ம் ஆண்டு
ஜனவரி 17 -ம் தேதி நமது எம்.ஜி.ஆர். அவர்கள் பிறந்தார்.
1920 * எம்.ஜி.ஆரின் தந்தை
மருதூர் கோபாலமேனன் திடீரென்று மாரடைப்பால் காலமானார்.
1922 * எம்.ஜி.ஆர் கும்பகோணத்தில் உள்ள ஆனையடி பள்ளியில் சேர்ந்த தேதி 7-12-1922. முதல் வகுப்பு 'அ' பிரிவில் என்று பள்ளி ஏட்டில் உள்ளது.
1923. * எம் ஜி ஆர் அவர்கள் முதன்முதலாக "லவகுசா"
நாடகத்தில் "குசன்" வேஷம் தான் போட்டார்* இது அவரது 6-வது வயதில்.
1925 * ஆனையடி பள்ளியை விட்டு வெளியேறியது நான்காம் வகுப்பு தொடங்கிய சில நாட்களில் 27-7-1925 என்று பள்ளி ஏட்டில் உள்ளது.
1930. * ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில்* இருந்து விலகி
மொய்தீன் கம்பெனி குழுவுடன் நாடகங்களில் நடிக்க பர்மாவின் தலைநகர் ரங்கூனுக்குப் புறப்பட்டார்.
1932 * சென்னை வருகை : சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் யானைகவுனி சென்னையில் முதலில் வசித்த இடம் பங்காரம்மாள் வீதி.
1936. * " சதிலீலாவதி "என்ற திரைப்படத்தின் மூலம் எம் ஜி ஆர் வெள்ளித்திரையில் 28-03-1936-ல் அறிமுகமானார்.
1938. * சிறு வேடங்களில் நடித்த "தட்சயக்ஞம்" 31-03-1938 - லும் "வீரஜெகதீஷ்" 28-08-1938- லும் ஆக இரு படங்கள் வெளிவந்தது.
1939. * "மாயாமச்சீந்திரா" படம் 22-04-1939 - லும் மற்றும் "பிரகலாதா" 12-12-1939 - லும் வெளிவந்தது.
1940. * தனது 23 வயதில் தன்னைக் காட்டிலும் 5 வயது குறைவான 18 வயது தங்கமணியை அவர் பிறந்த பூர்வீக ‘தெக்கின்கூட்டில்’ இல்லத்திலேயே வைத்து திருமணம் புரிந்து கொண்டார்.
1941 ** "ஏழிசை மன்னர்" எம்.கே.தியாகராஜ பாகவதருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு 10-07-1941-ல் வெளிவந்த "அசோக்குமார்" படத்தின் மூலமாக எம் ஜி யாருக்கு கிடைத்தது.
1942. * எம் ஜி ஆரின் முதல் மனைவி தங்கமணி இறப்பு -
@ * எம்.ஜி.ஆர். சதானந்தவதி திருமணம் 1942ம் ஆண்டு ஆனி மாதம் 16-ம் தேதி நடந்தது.
1943. * தலைவரின் " ஜோதிமலர்" அல்லது "தாசிப்பெண்" என்ற படம் 03-03-1943 -ல் வெளிவந்தது.
1944 * பி.யு.சின்னப்பாவுடன்
எம் ஜி ஆர் நடித்த முதல் படம்
" ஹரிச்சந்திர" - 14-01-1944-ல் பொங்கல் அன்று வெளிவந்தது.
1945. * எம் ஜி ஆர் வில்லனாக நடித்த முதல் படமான
" சாலிவாகனன்" 16-02-1945 அன்று வெளிவந்தது.
1946. *. திரையுலகில் பின்னணி பாடும் முறை கண்டு பிடிக்கப்பட்டதுடன் எம்.ஜி.ஆர். வாழ்க்கையிலும் புதிய திருப்பம் ஏற்பட்டது.
1947 * கதாநாயனாக நடிக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் கனவை, இலட்சியத்தை ஜூபிடர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த
‘" ராஜகுமாரி "' படம் தான் நிறைவேற்றிக் கொடுத்தது.
இப்படம் 11-04-1947 அன்று
வெளியானது.
1948 * வி.என்.ஜானகியுடன்
எம் ஜி ஆர் ஜோடியாக நடித்த முதல் படம் - " மோகினி " 31-10-1948-ல் வெளிவந்தது.
1949 * "ரத்னகுமார்" படம் 15-12-1949 -,ல் வெளிவந்தது.
1950 *. மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் எம் ஜி ஆர் நடித்த முதல் திரைப்படம் " மந்திரிகுமாரி"
24-06-1950 -ல் வெளிவந்தது.
1951 * எம்.ஜி.ஆர். நடிப்பில்
02-02-1951 -ல் வெளிவந்த 'மர்மயோகி' " A". சர்டிபிகேட்
வாங்கிய முதல் எம் ஜி ஆர் திரைப்படம்.
1952. * "புரட்சி நடிகர்" என்ற பட்டம் உறந்தை உலகப்பன் என்பவர் ஏற்பாடு செய்த விழாவில் கலைஞர் கருணாநிதியால், 05-06-1952 அன்று வழங்கப்பட்டது.
1953. * தலைவர் நடித்த " முதல் மலையாள படம் " ஜெனோவா" 17-04-1953 -ல் வெளிவந்தது., பின்னர் அதன் தமிழ் பதிப்பு 01-06-1953 -ல் வெளிவந்தது.
1954 * முதல் தேசிய விருது தமிழில் எம் ஜி ஆரின் "மலைகள்ளனுக்கு* மத்திய அரசு வழங்கி சிறப்பித்தது.
@ * எம் ஜி ஆர், சிவாஜி கணேசனுடன் நடித்த ஒரேயொரு படமான" கூண்டுகிளி" 26-08-1954 அன்று வெளிவந்தது.
1955. * எம்.ஜி.ஆர். நடித்து புலியுடன் மோதும் சண்டைக் காட்சியை முதன்முதலாக திரைப்படமாக்கப்பட்டு வெளிவந்த படம் 'குலேபகாவலி' 22-07-1955-ல் வெளிவந்தது.
@ *. M.S.விஸ்வநாதன் - ராமமூர்த்தி * சேர்த்து இசையமைத்த முதல் எம் ஜி ஆர் திரைப்படமும் " குலோபகவாலி" தான்.
1956. * ஆம் ஆண்டு 13-04-1956 அன்று வெளிவந்த ‘மதுரை வீரன்’ திரைக்காவியம், தமிழகத்தில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலான வெற்றி படம்.
@ * தமிழில் முதல் முழு நீள வண்ண படமான (கோவா கலர்)
" அலிபாபாவும் 40 திருடர்களும் " 14-01-1956 -ல் வெளிவந்தது.
1957 * *ப.நீலகண்டன் இயக்கத்தில் எம் ஜி ஆர் நடித்த முதல் திரைப்படமான
" சக்ரவர்த்தி திருமகள் " படம் 18-01-1957 அன்று வெளிவந்தது.
1958. **. நேருவுக்கு கறுப்புக் கொடி காட்ட தி.மு.க. முனைந்த போது எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் 05-01-1958-ல் அடைக்கப்பட்டனர்.
@ * (1) எம் ஜி ஆரின் முதல் தயாரிப்பும், முதல் இரட்டை வேடமும், சரோஜாதேவியுடன்
இணைந்து நடித்த முதல் படமும்,
தலைவரின் 136 படங்களில் மிகவும் நீளம் கூடிய படமும், மதுரையில் தங்கவாள் வழங்கப்பட்டதும்மான "நாடோடி மன்னன்" திரைப்படம் 22-08-1958 அன்று வெளியானது.
1959. * "நடிகப்பேரரசர்" என்ற பட்டம் "நாடோடி மன்னன்" பட வெற்றி விழாவில் அளிக்கப்பட்டது.
@ *. எம் ஜி யாருடன் ஜமுனா நடித்த ஒரேயொரு படமான " தாய் மகளுக்கு கட்டிய தாலி " 31-12-1959 அன்று வெளிவந்தது.
@ * சீர்காழியில் நடைபெற்ற
" இன்பக்கனவு" நாடகம் நடைபெறும் சமயம் எம்.ஜி.ஆர். அவர்கள் முழங்கால் எலும்பு முறிந்துவிட்ட நாள் 16-06-1959.
1960 * * எம் ஜி யாருடன் வைஜயந்திமாலா இணைந்து நடித்த ஒரேயொரு படமான " பாக்தாத் திருடன் " 06-05-1960 -ல் வெளியானது.
@ *. அசோகன் முதல் முதலாக அறிமுகம் ஆன படம் எம் ஜி ஆரின் " பாக்தாத் திருடன் ". தான் வெளிவந்த நாள் 06-05-1960
@ * எம் ஜி யாரும் எஸ் எஸ் ஆரும் இணைந்து நடித்த முதல் திரைப்படமான " ராஜா தேசிங்கு" 02-09-1960-ல் வெளிவந்தது.
1961. * "மக்கள் திலகம்" என்ற பட்டம் தமிழ் வாணன் அவர்களால் எம் ஜி ஆருக்கு வழங்கப்பட்டது.
@. * எம்.ஜி.ஆர். படத்தில்தான் முதல்முதலாக நடிகர் முத்துராமன் அறிமுகமானார். படம் '"அரசிளங்குமரி'." 01-01-1961-ல்
@ ** எம் ஜி ஆர் நடிப்பில் 23-03-1961 -ல் வெளிவந்த முதல் சமூக திரைப்படம் " திருடாதே "
@ * அறிஞ*ர் அண்ணாவின் க*தையில் உருவான ப*ட*மும்,
@ *க*விஞ*ர் வாலி த*லைவ*ர் ப*ட*த்திற்கு முத*ன்முத*லில் பாட*ல் எழுதினபடமும்,
@ * தமிழில் எம் ஜி ஆரின் 50-வது படமான " நல்லவன் வாழ்வான்" 31-08-1961- அன்று வெளியானது.
1962. *. 25-02-1962 எம் ஜி ஆரின் இரண்டாவது மனைவி சதாந்தவதி மரணம்.
@ *. 14-06-1962 -ல்
திரு. எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் திருமதி ஜானகி அவர்களுக்கும் பதிவு திருமணம் நடந்தது.
@ * சட்டமன்ற மேலவை உறுப்பினராக (M.L..C.) ஆனார்.
@ *. யுத்த நிதி அளித்தற்க்கு பிரதமரே கைபட எம் ஜி ஆருக்கு நன்றி கடிதம் எழுதினார்
@ * செருப்பு அணியாமல் மக்கள் திலகம் நடித்த ஒரே பாடல்
" உலகம் பிறந்தது எனக்காக "
1963 * K.சங்கர் இயக்கத்தில் எம் ஜி ஆர் அவர்கள் நடித்த முதல் திரைப்படமான " பணத்தோட்டம்" 11-01-1963 அன்று வெளிவந்தது.
@ * மாட்டு வண்டிபோட்டியை முதன் முதலில் திரைப்படத்தில் காட்டிய படம் 'பெரிய இடத்துப் பெண்'. 10-05-1963-ல் வந்தது.
@ * எம் ஜி ஆர் தேவிகாவுடன் இணைந்து நடித்த ஒரேயொரு படம் " ஆனந்த ஜோதி " 28-06-1963 அன்று வெளிவந்தது.
1964. * " கலைமன்னர் " என்ற பட்டம், அப்போதைய பிரதம நீதிபதி பி.வி. ராஜ மன்னார் அவர்களால், வழங்கப்பட்டது.
@ * எம் ஜி ஆர் நடித்த முதல் ஈஸ்ட்மன் கலர் திரைப்படமான
" படகோட்டி " 03-11-1964-ல் வெளிவந்தது.
@ * தலைவருடன் பாலாஜி நடித்த ஒரேயொரு படமான "என் கடமை" 13-03-1964- ஆன்று
வந்தது.
1965 * M.S.V. தனித்து இசை அமைத்த முதல் எம் ஜி ஆர் படம்
" கலங்கரை விளக்கம் " 28-08-1965 வெளிவந்தது.
@ * எம் ஜி யாரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் திரைப்படமான " "ஆயிரத்தில் ஒருவன் " 09-07-1965- அன்று வெளிவந்தது.
@ * அக்டோபர் 22-ம் தேதி கொழும்பு விளையாட்டரங்கில் எம்.ஜி.ஆருக்கு "‘நிருத்திய சக்கரவர்த்தி"’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.
@ * மாணவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் பத்மஸ்ரீ பட்டம் கிடைத்ததால் அதை தலைவர் ஏற்க மறுத்து விட்டார்.
1966. *. இந்திய பிரதமர் திரு. லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் அந்தமானில் எம் ஜி ஆர் ரசிகர் மன்றத்தை திறந்து வைத்தார்.
@ * A.V.M.-ன் முதல் வண்ண படமும் , எம் ஜி ஆர் AVM-க்காக நடித்த ஒரேயொரு படமும் அன்பே வா 14-01-1966-ல் வெளியானது.
@ * "சமநீதி" பத்திரிகையின் பொறுப்பாசிரியரானார் நமது தங்க தலைவர்.
@. * எம்.ஜி.ஆர். நடித்து, தரக்குறைவான பத்திகைகளின் போக்குக்கை எதிர்த்து எடுக்கப்பட்ட படம் தான் 'சந்திரோதயம்' 27-05-1966-ல் வந்தது.
@ * எம் ஜி ஆர், எம் ஆர் ராதா வுடன் நடித்த கடைசி படமான
" பெற்றால் தான் பிள்ளையா " 09-12-1966 அன்று வெளியானது.
1967 தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக எம் ஜி ஆர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
@ * தமிழ் நாட்டின் சிறுசேமிப்பு துணைத்தலைவராக எம் ஜி ஆர் நியமிக்கப்பட்டார்.
@ * எம் ஜி ஆர் 12-01-1967-ல் எம் ஆர் ராதா அவர்களால் சுடப்பட்டார்.
1968. * "பொன்மனச்செம்மல்" என்கின்ற பட்டம், திரு. முருக கிருபானந்த வாரியார் அவர்களால், கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வழங்கப்பட்டது.
@ * எம் ஜி ஆரின் 100-வது தமிழ் படமான "ஒளி விளக்கு". 20-09-1968 அன்று வெளிவந்தது
@ * எம் ஜி ஆர் அவர்கள் நடித்து வெளிவந்த 136 படங்களில் மிகவும் நீளம் குறைந்த படம்
" புதிய பூமி "
மொத்த நீளம். : 3961 meter
27-06-1968-ல் வெளியானது.
1969 * எம் ஜி ஆரின் சொந்த தயாரிப்பில் இரண்டாவதாக வெளிவந்த படம் "அடிமைப் பெண்" 01-05-1969-அன்று வெளிவந்தது. இதன் பெரும்பாலான காட்சிகள் ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டது. இதில் ஒத்த கால் சண்டை பரபரப்பாக பேசப்பட்டது. தெழிலாளர் தினத்தில் வெளிவந்த ஒரே ஒரு எம் ஜி ஆர் திரைப்படம் *அடிமைப் பெண்*
1970 * எம்.ஜி.ஆர். நடித்து முதன்முறையாக யோகா பயிற்சியை படத்தின் மூலம் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சி இடம் பெற்ற படம், 'தலைவன்'.
@ * உலகிலேயே ஒரு புது திரைப்படத்திற்கு 108 அடியில் மிகப் பிரமாண்டமாக கட்அவுட் வைக்கப்பட்டது எம்ஜிஆரின் "என் அண்ணன்" படத்திற்கு அரங்கு : சேலம் அலங்கார்.
1971 * மீண்டும் சட்டமன்ற உறுப்பினரானார். ஜூலையில் திராவிட முன்னேற்ற கழக பொருளாளரானார்
@ * "பாரத்" என்ற இந்தியாவின் சிறந்த நடிகருக்கான பட்டத்தை இந்திய அரசாங்கம் வழங்கியது.
@ * எம்.ஜி.ஆர். நடித்த 'நீரும் நெருப்பும்' படத்திற்காக நடந்த ரிசர்வேஷன் கூட்டத்தை கட்டுப்படுத்த குதிரைப்படை வரவழைக்கப்பட்டது.
1972. * "கலை வேந்தன்" என்கின்ற பட்டம் மலேசிய அரசாங்கம் அளித்து கவுரவித்தது.
@ * 10-10-1972 அன்று திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து எம் ஜி ஆர் நீக்கப்பட்டார்*. -
@ * 17-10-1972 அன்று அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஓர் புதிய அரசியல் கட்சியை எம் ஜி ஆர் துவங்கினார்.
@ * 29-10- 1972-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தான் முதன்முறையாக, ''எம்.ஜி.ஆர் இனி "புரட்சி நடிகர்' அல்ல, *புரட்சித்தலைவர் * என்றார் கே.ஏ.கிருஷ்ணசாமி.
1973.* எம் ஜி ஆரின் மூன்றாவது சொந்த தயாரிப்பில் வெளிவந்த படம் "உலகம் சுற்றும் வாலிபன்" 11-05-1973 அன்று வெளியானது.
1974. * கெளரவ டாக்டர் பட்டம் -
அரிசோனா பல்கலைக்கழகம், அமெரிக்கா.
1975 * TMX 4777 இந்த நம்பர் காரை தலைவர் 1975 - லேயே பதிவு செய்யப்பட்டது. இந்த எண் அவருக்கு இயற்கையாவே தான்
தமிழ்நாடு முதலமைச்சர் சிம்மாசனத்தில் அமர்ந்து முதல் கையெழுத்து இட்ட நாளை ஞபகபடுத்த கூடியது ஆகியது...
@ * சத்யா மூவிஸ் வெற்றி படமான "இதயகனி" 22-08-1975 அன்று வெளிவந்தது.
1976 * 23-05-1976 அன்று வெளியான "உழைக்கும்கரங்கள் "
படத்தில் வரும் மான்கொம்பு
சண்டை எந்த ஒரு திரைபடத்திலும் , திரையுலக வரலாற்றிலேயே இடம்
பெற்றதில்லை !!
1977 * " நவரத்தினம்’ படத்தில், ‘லடுக்கே ஸே மிலீ லடுக்கி’ என்ற இந்திப் பாடல் இடம் பெற்றது. இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆருடன் நடிகை ஜரீனா வஹாப் நடித்திருந்தார். தமிழ் படம் ஒன்றில் முழுமையாக இந்திப் பாடல் இடம் பெற்றது அப்போது புதுமை!
A.P நாகராஜன் எம் ஜி ஆரை வைத்து எடுத்த முதல் படமும்
A.P.நாகராஜனின் கடைசி படமும் நவரத்தினம் தான் - 05-03-1977
@ * 30-06-1977 -அன்று தமிழக முதல்வராக முதல் முறையாக எம் ஜி ஆர் அவர்கள் பதவியேற்றார்
1978. * எம் ஜி ஆர் நடித்த கடைசி படமான " மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" 14-01-1978 பொங்கல் அன்று வெளிவந்தது
@ * தேவ*ர் தன*து 64-ஆம் வ*யதில் செப்டம்பர் மாதம் 8-ஆம் தியதி மார*டைப்பு கார*ண*மாக இறந்தார். தேவ*ரின் இறுதி ஊர்வ*ல*த்தில் எம் ஜி ஆர் க*ல*ந்துகொண்டார்.
1979. * " டாக்டர்" பட்டம், முதலில் அமெரிக்க அரிசோனா பல்கலை கழகம், வழங்கி கவுரவித்தது.
@ * இந்தியாவில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை முதன்முதலில் கொண்டுவந்த மாநிலம் தமிழ்நாடு. அதை கொண்டுவந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். 05-11-1979 அன்று
இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார் எம்.ஜி.ஆர்.
1980-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி எம்.ஜி.ஆர். அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது ( பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் காரணமாக) தமிழகத்தில் நடந்த
மறு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சியை பிடித்து 03-06-1980
ஆம் தேதி மக்கள் திலகம் இர*ண்டாம்முறையாக தமிழக முத*ல்வ*ராக ப*த*வியேற்றார்.
1981. * மதுரையில் 5ம் உலகத் தமிழ் மாநாடு இந்திய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் சிறப்புடன் நடத்தினார்.
1982 * தமிழகத்தில் சத்துணவுத் திட்டம் மாண்புமிகு முதலமைச்சா் புரட்சித் தலைவா் அவா்களால் ஊரக பகுதிகளில் 01.07.1982 அன்றும் நகா்புறங்களில் 15.09.1982 அன்று உருவாக்கப்பட்டது.
1983. * மீண்டும், "டாக்டர்" பட்டம் சென்னை பல்கலைக் கழகம் மூலம் பெற்றார்.
1984 * நாகேஷ் அவர்கள் தான் கட்டிய "தியேட்டர் நாகேஷ்" திரையரங்கை 27-06-1984 -ல், முதல்வர் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் திறந்து வைத்தார்.
@ * தலைவர் உடல் நிலை பாதிப்பு அக்டோபர் மாதம்** 5-ம் தியதி வெள்ளிக் கிழமை இரவு 11-30 மணிக்கு எம் ஜி ஆர் அவர்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரில் சேர்க்கப்பட்டார்.
@ * தலைவர் உடல் நிலையில்
முன்னேற்றம் இல்லாததினால்
அமெரிக்க தலைநகரான
நியூயார்க் ப்ரூக்ளின் மருத்துவ மனையில். 05-11-1984-ல் அனுமதிக்கப்பட்டார்.
1985. * 10-02-1985-ல் எம் ஜி ஆர் அவர்கள் தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்றார் -
@ * எம்ஜிஆர் தனக்களிக்கப்பட்ட சிசிக்சைக்க அரசு செலவு செய்த தொகையான ரூ.96 இலட்சத்து 90 ஆயிரத்து 376ஐ 30-06-85 ஆம் தேதியன்று அரசுக்கு திருப்பிச் செலுத்தினார்
@ * ஏவிஎம் சரவணனை* சென்னை நகர ஷெரீப் ஆக புரட்சித்தலைவரால் நியமனம் செய்த விழா ராஜ்பவனில் நடந்தது.
1986.* புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தனது ரசிகர் மன்றங்களை ஒன்றிணைத்து ஒரு மாநாடு நடத்த திட்டமிட்டார்.
அதன்படி மதுரையில் 1986-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி நடைபெற்றது இவ்விழாவில்தான்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு ஆறடி உயரமுள்ள செங்கோலை பரிசாக வழங்கினார் அம்மா.
புரட்சித்தலைவருக்கு வழங்கப்பட்ட இந்த வெள்ளி
செங்கோலை தயார் செய்தவர்
முசிறிப்புத்தன்.
1987. * இலங்கைத் தமிழர்கள் அமைதி காக்க இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி - இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஏற்பட பாடுபட்டார். -
@ *. பெருந்த*லைவ*ரின் சிலைக்கு 1987 ஜூலை 15 அன்று புர*ட்சித்த*லைவ*ர் மாலை அணிவித்து ம*ரியாதை செய்தார் .
@ கடைசியாக எம் ஜி ஆர் அவர்கள் கலந்து கொண்ட விழா ஜவஹர்லால் நேரு சிலை திறப்பு விழா. 1987 டிசம்பர் 21
@ * எம் ஜி ஆர் தமிழக முதல்வராக இருந்த போது 24-12-1987 அன்று காலை 3-30 மணி அளவில் முதல்வராகவே மரணம் அடைந்தார்.
@ * இந்தியாவிலே பிரதமர் ஜெனாதிபதி துணை ஜெனாதிபதி இவர்வர்கள் மூவரும் ஒரே நேரம் தலைநகரை விட்டு வெளி செல்லகூடாது இது மரபு எம் ஜி ஆருக்கு இறுதி மரியாதை செய்ய இந்த மரபுகளை மீறி மூவரும் வந்து மரியாதை செய்தது எம்ஜிஆர் ஒருவருக்கே
1988. * " பாரத ரத்னா" என்ற நமது இந்திய நாட்டின் உயரிய விருது அவரது மறைவுக்குப் பின் 26-01-1988
அன்று மனைவி வி.என்.ஜானகி அம்மையார்யிடம் அளிக்கப்பட்டது.
1990. * இந்திய தபால் துறை எம் ஜி ஆர் அவர்களின் 60 ps தபால் தலை 17-01-1990-ல் வெளியிட்டு கெளரவித்தது.
2017 * இந்திய தபால் துறை எம் ஜி ஆர் அவர்களின் 15 ரூபாய் தபால் தலை 17-01-2017 அன்று வெளியிட்டு கெளரவித்தது.
2019 * இந்திய அரசாங்கம் 100 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயத்தை 17-01-2019-ல் வெளியிட்டு கெளரவித்தது.
@ * சென்னை மத்திய ரயில் நிலையத்தை * புரட்சி தலைவர் டாக்டர் எம் ஜி இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்" என்று மத்திய அரசு மாற்றி நம் தலைவரை மேலும் கெளரவித்தது......
2020*. 100 ரூபாய் மற்றும் 5ரூபாய் நாணயத்தின் முன் பதிவு 21-01-2020 அன்று துவங்கி 29-02-2020 அன்று முடிவடைகிறது...
* வாழ்க புரட்சித் தலைவர் நாமம்
வளர்க அவர் புகழ் *
இது ஆயிரத்தில் ஒரு பங்கு மட்டுமே.......
தவறான தகவல் இருந்தால் தயங்காமல் தெரியப்படுத்தவும் அது இதில் உடனே திருத்தபடும்....
ரசிகர்களுக்கு / பக்தர்களுக்கு எப்போதும் சரியான தகவலை தான் கொண்டு செல்ல வேண்டும்
என்பதே என் தாழ்மையான கருத்து........
நன்றி.....
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்.......... Thanks...
இந்த சரித்திர நிகழ்வை தேதி வாரியாக வெளியிட்டு எங்களை மகிழ்ச்சி கடலில் மிதக்க வைத்த நண்பருக்கு இனிய வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு சகல சௌக்கியங்களுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்...... Thanks...
14-01-66. பொங்கல் திருநாள்:
அன்பே வா 1966 ஆம் ஆண்டு ஜனவரி 14 -ம் தியதி பொங்கல் திருநாள் அன்று நமது தங்க தலைவர் எம் ஜி யாரின் நடிப்பில் வெளியான திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளிவந்த இப்படத்தில் சரோஜாதேவி, நாகோஷ, அசோகன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
வெளிப்புறப்படப்பிடிப்பு அரிதாக இருந்த அந்நாட்களில் பெரும்பகுதி சிம்லாவில் படமாக்கப்பட்டது இதன் சிறப்பம்சம்.
தனது படங்களிலேயே மிகவும் வித்தியாசமான படம் இதுவென்றும், எப்போது பார்த்தாலும் அந்த வித்தியாசத்தை உணர முடியும் என்றும் எம். ஜி. ஆர் கூறியதாகச் சொல்வர்.
மெல்லிய நகைச்சுவை இழையோடும் காதல் கதையாக உருவாகிய இத்திரப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஏவி. எம். நிறுவனம் எம்.ஜி.ஆரை வைத்துத் தயாரித்த ஒரே திரைப்படமும் இதுவே.
வில்லனாக அன்றி குணசித்திர வேடத்தில் அசோகன் நடித்திருந்தார்.
அன்பே வா வெளியான 14-01-66 என்ற தியதியை குறிக்கும் பத்து ரூபாய் நோட்டு உங்கள் பார்வைக்கு மிக்க மகிழ்ச்சியுடன்....... Thanks VL
நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம்...
அக்டோபர் 17-,ம் தியதி தினத்தில் 1972-ம் ஆண்டு தான் நமது தங்க தலைவர் அண்ணா திமுகவை துவங்கினார்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக அல்லது அண்ணா திமுக) என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் அரசியல் கட்சி ஆகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. திமுகவிலிருந்து விலகிய பின்னர் எம். ஜி. இராமச்சந்திரன் இக்கட்சியைத் தோற்றுவித்தார். அவர் மறைவிற்குப் பிறகு அதிமுக ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்தது. பிறகு இரு அணிகளும் இணைந்து ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாக பதவி வகித்திருக்கிறார்கள்.
வரலாறு
சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கணக்கு கேட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். புதியக் கட்சி தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர் அப்போது அனகாபுத்தூர் இராமலிங்கம் என்பவர், ‘அதிமுக’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்’ என அறிவித்ததுடன் இராமலிங்கத்துக்கு மேல்சபை உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவியும் அளித்தார். இக்கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கொடியின் வரலாறு
அதிமுகவின் துவக்க கால கொடியாக தாமரையும் அதன் பின்னால் கருப்பு சிவப்பு இருந்தது. மதுரையில் ஜான்சி ராணி பூங்காவில் மகோரா அவர்களால் 1972 ஆம் ஆண்டு ஏற்றப்பட்டது.
எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கப் போவதாக செய்தியை அறிந்த எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தாமரை படமிட்ட கொடியை கட்சி கொடியாக தங்கள் வீடுகளிலும், குடிசைகளிலும் ஏற்றினார்கள். அதன் பிறகு எம்.ஜி.ஆர், அண்ணாவின் புகைப்படங்களை ஆய்வு செய்து அதில் சிறப்பாக இருந்த அண்ணாவின் படமொன்றினை தேர்வு செய்தார். அதில் அண்ணா ஆணையிடுவதைப் போல தோற்றமளிப்பார். இந்தப் படத்தினை அண்ணா தோற்றுவித்த தி.மு.கவின் சிகப்பு கருப்பு கொடியோடு இணைத்து அண்ணா தி.மு.கவின் தற்போதைய கொடியமைப்பினை எம்.ஜி.ஆர் உருவாக்கினார்.
எம்ஜிஆரின் வழிகாட்டுதலோடு நடிகர் பாண்டு அதிமுக கொடியை உருவாக்கினார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று எம்.ஜி.ஆர் மாற்றினார்.
நன்றி..
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்....... Thanks...
நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம்...
அக்டோபர் 9-ம் தியதி
உலக அஞ்சல் தினம் (World Post Day) கொண்டாடப்படுகிறது
அக்டோபர் 9, 1874 -ல் சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன்
நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுத்து கடைபிடிக்கப்படுகிறது.
உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்திய அஞ்சல் துறை 1764இல் துவக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. இந்தியா முழுவதும் 23 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர்.
இந்திய தபால் துறை நமது தலைவரை கெளரவ படுத்தும் வகையில் இரண்டு முறை தபால் தலை வெளியிடப்பட்டது.
நன்றி
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்...... Thanks...
நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம்...
அக்டோபர் 10
1972ஆம் ஆண்டு அக்டோப*ர் 10 ஆம் தேதியான தான் மக்கள் திலகத்தை திமுக*விலிருந்து நீக்கினார் க*ருணாநிதி. திமுக அமைச்ச*ர்க*ளும், செய*ற்குழு, பொதுக்குழு உறுப்பின*ர்க*ளும் த*ங்க*ள*து சொத்து க*ணக்கை மக்களிட*ம் ப*கிர*ங்க*மாக* வெளியிட* வேண்டும் என்று கேட்ட*த*ற்காக* இந்த* ந*ட*வ*டிக்கை.
ஆனால், உண்மையான கார*ணம் க*ட்சியை த*ன் முழுக்க*ட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும், த*ன*து வாரிசுக*ளின் அர*சிய*ல் எதிர்கால*த்திற்கு எம்ஜிஆர் முட்டுக்க*ட்டையாக இருந்துவிட*க் கூடாது என்ற* க*ருணாநிதியின் சுய*ந*லமே ஆகும்......
திமுகவிற்கு தலைவரின் கடைசி கும்பிடு....
நன்றி Santhanam ADMK அவர்களே....
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்...... Thanks...
நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம்...
அக்டோபர் 9-ம் தியதி
இதே தினத்தில் தான் 1948-ம் ஆண்டு ராஜமுக்தியும் , 1970-ம்
ஆண்டு *எங்கள் தங்கமும்* வெளிவந்தது...
"எங்கள் தங்கம்" திரைபடத்தின் 100வது நாள் விழா 16.1.1971 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.. அந்த விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா கருணாநிதி மற்றும் முரசொலி மாறன் கலந்து கொண்டனர்..
அந்த விழாவில் பேசிய முரசொலி மாறன்:
முரசொலி பத்திரிக்கை நஷ்டத்தில் நடைபெற்ற காரணத்தினாலும் மேலும் தொடர்ந்து எங்கள் படங்கள் தோல்வி அடைந்த காரணங்களாலும் எங்களது குடும்பம் கடன்கார குடும்பமாக மாறிவிட்டது வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியவில்லை. வீட்டில் இருந்த நகைகள் அனைத்தையும் விற்று வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.. குடும்பமே தற்கொலை
செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் கூட ஏற்பட்டது..இந்த நிலைமையை புரட்சிதலைவர் எம் ஜி ஆர் அவர்களிடம் சொன்னேன் உடனே புரட்சித்தலைவரும் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களும் இந்த "எங்கள் தங்கம்" படத்திற்கு பணம் வாங்காமல் நடித்து கொடுத்தது மட்டுமில்லாமல் படத்தை மிகப் பெரிய வெற்றி அடைய செய்து அணைத்து சொத்துக்களையும் மீட்டு கொடுத்துள்ளனர். எங்கள்
சொத்துக்களை மட்டுமல்லாது எங்கள் மானத்தையும் மீட்டு தந்தவர்கள் புரட்சிதலைவர் மற்றும் கலைச்செல்வி ஜெயலலிதாவுக்கும் நாங்கள் என்றென்றும் நன்றி கடன் பட்டுள்ளோம்,...
அதே விழாவில் திரு கருணாநிதி..
மாறன் பேசும் போது புரட்சி நடிகர் மற்றும் கலைச்செல்வி ஆகியோர் செய்த உதவியை குறிப்பிட்டு பேசினார்..குடுத்து குடுத்து சிவந்த கரம் கர்ணன். அனால் எங்கள் திராவிட கர்ணன் புரட்சி நடிகர் குடுத்து குடுத்து மேனியே சிவந்து விட்டது. கொடுத்து கொடுத்து சிவந்த கரம் வாழ்கின்ற காரணத்தினால் அவர் வாழும் மாவட்டத்திற்கு செங்கை மாவட்டம் என பெயர் வந்தது நன்றி மறப்பது நன்றன்று என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப மாறனின் நன்றி உணர்ச்சியை நானும் வழி மொழிகிறேன்..
நன்றி
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்..... Thanks...
நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம்...
செப்டம்பர் 26-ம் தியதி
இதே தினத்தில் தான் 1947-ம் ஆண்டு
என்.எஸ்.கே.பிலிம்ஸ் தயாரிப்பில் எம் ஜி ஆர் இரண்டாவது கதாநாயகனாக நடித்த திரைப்படமான
"பைத்தியக்காரன் "
கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்தது.
இயக்குனர்கள் - கிருஷ்ணன் பஞ்சு
தயாரிப்பாளர் - டி.ராமசுவாமி என்.எஸ்.கே பிலிம்ஸ்
கதை - எஸ்.வி.சஹஸ்ரணாமம்
இசை - சி.ஆர்.சுப்புராமன் , எம்.எஸ்.ஞானமணி
நடிப்பு - எஸ்.வி.சஹஸ்ரணாமம்
என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர், டி.பாலசுப்ரமணியம்
டி.ஏ.மதுரம், எஸ் *.டி.காந்தா,எஸ்.ஆர.ஜானகி
வெளியீடு - செப்டம்பர் 26,1947
நன்றி..
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்....... Thanks...
நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம்...
செப்டம்பர் 25-ம் தியதி
இதே தினத்தில் தான் 1964-ம் ஆண்டு
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம் ஜி ஆர் நடித்த திரைப்படமான " தொழிலாளி " வந்து மிக பெரிய வெற்றியை பெற்றது.
எம்.ஜி.ஆர். நடித்து பேருந்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின்
பிரச்சனைகளை மையமாக வைத்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம் தேவர் பிலிம்ஸ் 'தொழிலாளி'.
திரைப்பட சூட்டிங்கின் போது எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில், எம்.ஜி.ஆர்,
‘இந்த பஸ் இனி தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்' எனப் பேச வேண்டும்.
‘இந்த பஸ்தான் இனி தொழிலாளர்களின் உதயசூரியன்' என மாற்றிச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
இதனால் கடுப்பான எம்.ஆர்.ராதா,
‘சினிமாவுக்குள்ள உன் கட்சி சின்னத்தைக் கொண்டு வராதே... வெளிய போய் மேடை போட்டு பேசு' என சண்டை போட்டிருக்கிறார்.
இதனால் கோபமான எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை நிறுத்த, தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வந்து சமாதானப்படுத்தினார்.
இறுதியில் குறிப்பிட்ட அந்தக் காட்சியில் ‘நம்பிக்கை நட்சத்திரம்’ என்று பேசவைத்தார் சின்னப்பா தேவர்.
நன்றி..
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்....... Thanks...
பாலாஜி வாங்கிய பட்டம்: சிவாஜி,கமல், ரஜினியை வைத்து நிறைய படங்களை
தயாரித்த பாலாஜிக்கு நிறைவேறாத ஆசை ஒன்று உண்டாம் அதாவது நமது மக்கள் திலகத்தை வைத்து ஒரு படத்தையாவது எடுத்திட வேண்டும் என்பதே அது. அப்போது இந்தியில் ஷோலே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்ததால் அதை தமிழில் தலைவரையும், சிவாஜி யையும் வைத்து எடுக்க ஏற்பாடு செய்த நேரத்தில் நமது தலைவர் முதல்வர் ஆகிவிட்டதால் அந்த முயற்சி பலிக்காமல் போய் விட்டதாம். தனது சினிமாவுலக வாழ்க்கையில் நிறைவேறாமல் போனது இது ஓன்று தான் எனக் கூறுவாராம். பாலாஜி நாடகக் குழு திண்டுக்கல் சென்று கொண்டிருந்த நேரத்தில் மலைப்பாதயில் தீடீரென்று ரேடியேட்டரில் தண்ணீர் இல்லாது நின்று போக சுற்றிமுற்றி பார்த்து விட்டு ஒரு குடிசை வீட்டில் சென்று தண்ணீர் கேட்டிருக்கிறார் ஒரு குடம் தண்ணீர் கொடுத்து யாரென்று விசாரிக்கும் பொழுது நாங்கள் எல்லாம் சினிமாக் காரங்க மெட்ராஸிலிருந்து வந்திருக்கிறோம் என்று கூறி காலி குடத்தையும் ஒரு நூறு ரூபாய் நோட்டையும் கொடுத்துள்ளார் அதைப் பார்த்ததும் நீ நல்லாருப்பே எம்.ஜி.ஆரு .என்று பாட்டி சொல்ல என்னை எம்.ஜி.ஆர் ன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க என பாலாஜி கேட்க எல்லோருக்குமே அள்ளிக்கொடுக்கிறவர் அவர் ஒருவர் தானேப்பா எனக்கூற சிரித்துக்கொண்டே காரில் ஏறிய பாலாஜியை நாகேஷ் இது உனக்குத் தேவையா எனக் கிண்டல் செய்துள்ளார். சினிமாவையும் சினிமா நடிகர்களைப் பற்றியும் தெரியவில்லை என்றாலும் M.G.R.ன்னு ஒரு வள்ளல் இருக்கிறார். அவர் நடிகராகத் தான் இருக்கிறார் அவர் தான் எல்லோருக்கும் கொடுப்பார் என்று மட்டும் தெரிந்து வைத்துள்ளார். அவரது நினைப்பை கெடுக்கக் கூடாது அது மட்டுமல்ல இது ஒரு ரசிகராக இருந்து நான் எம்.ஜி.ஆருக்குச் செய்யும் மரியாதை என்று பாலாஜி நாகேஷிடம் சொல்லி இருக்கிறார்.
"தரணி கண்ட தனிப்பிறவி", என்ற புத்தகத்திலிருந்து தொகுத்தது.
இன்றும் வாழ்கிறார் மக்கள் இதயத்தில் நம் இதயக்கனி.......... Thanks CKS.,
உலகத்தில், மொத்தம் (7) கடை ஏழு வள்ளல்கள் இரூந்தார்கள். தற்போது எட்டாவது வள்ளல். டாக்டர்:எம்.ஜி*.இராமச்சந்திரன் அவர்கள் ஆவர்.
(1) பாரி
(2) ஆய்
(3) எழினி
(4) நள்ளி
(5) மலையன்
(6) பேகன்
(7) ஓரி
(8) எம்.ஜி.இராமச்சந்திரன்.
வாழ்க கடை எட்டு வள்ளல்கள்......... Thanks.........
எம்.ஜி.ஆர் என்னைப் பொருத்தவரை இன்னொரு யுக்தியை ஷூட்டிங்கின்போது கடைப்பிடிப்பார். நேரத்துக்குப் போனாலும் சரி,
தாமதமாகப் போனாலும் சரி, செட்டுக்குள் போனவுடன், 'வாங்க! என் பேர் எம்.ஜி.ராமச்சந்திரன்' என்று சிரித்தபடியே அறிமுகப்படுத்திக்கொள்வார். நான் சும்மா இருப்பேனா? பதிலுக்கு 'நான் செய்யூர் கிருஷ்ணாராவ் நாகேஸ்வரன்' என்று அறிமுகம் செய்துகொள்வேன். எம்.ஜி.ஆரே முதலில் கையை நீட்ட நானும் கை குலுக்குவேன்.
அடுத்து, 'ஒரு பதினைந்து நிமிஷம் எடுத்துக்கலாம். மேக்கப் ரூமுக்குப் போய் டச் அப் பண்ணிட்டு, ஏதாவது டெலிபோன் பண்ணனும்னா, அதையும் முடிச்சிட்டு வந்துடு. ஷூட்டிங் ஆரம்பிச்சதும் வேற எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது' என்பார்.
இதை மேலோட்டமாகப் பார்க்கிறபோது எம்.ஜி.ஆருக்கு ஷூட்டிங்கில் வேறு எந்தத் தடங்கலும் தாமதமும் இருக்கக்கூடாது என்பதுதான் வெளிப்படும்.ஆனால், அதற்க்கு ஓர் உள்அர்த்தம் உண்டு. மேக்கப் ரூமுக்குப் போய், டெலிபோன் என்பதெல்லாம் சும்மா ஒரு சம்பிரதாயம். எம்.ஜி.ஆருக்குத் தம் எதிரில் யாரும் சிகரெட் பிடித்தால் பிடிக்காது. சில சமயம் கோபப்படுவார். நானோ நிறைய சிகரெட் பிடிக்கிறவன். எனவே என்னால் அனாவசியமாக எந்தப் பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த டெக்னிக்கைக் கையாள்வது அவரது ஸ்டைல்.
- மக்கள்திலகம் பற்றி நாகேஷ்...... Thanks...
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 15 செவ்வாய்
எம்ஜிஆர் பக்தர்களே
இசையமைப்பாளர் கங்கை அமரனின் பங்களாவை மிரட்டி எழுதி வாங்காத
அருமைதலைவன்
எம்ஜிஆருக்கு பக்கத்தில்
அமர்ந்திருப்பவர்
P.H. பாண்டியன்
1977. / 1980. / 1984. /
ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில்
சேரன்மாதேவி
தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தவர்
இவருடைய அறிவாற்றலை தெரிந்துகொண்ட எம்ஜிஆர் அவர்கள் இவரை சட்டசபை சபாநாயகராக நியமித்தார்
எம்ஜிஆர் மறைந்த பிறகு
எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மையாரை முதலமைச்சராக கொண்டு வந்தவர்களில்
இவரும் ஒருவர்
உப்பிட்ட எம்ஜிஆரை உயிருள்ளவரை நினைத்தவர்
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதவர்...... Thanks...
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 15 செவ்வாய்
எம்ஜிஆர் பக்தர்களே
படத்தில் இருக்கும் துரோகியின் பெயர்
நவநீதகிருஷ்ணன்
மதுரை மாநகராட்சியின் துணை மேயர்
உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்துக்கு துரோகம் செய்தவர்
1++++++++++++++++++++++++++++++
எம்ஜிஆர் திமுகவில் இருந்த காலகட்டத்திலேயே
மதுரை நகரிலே எம்ஜிஆர் மன்ற தலைவராக இருந்தவர் பெயர்
தங்கம்
இளவரசன்
மதுரை நகர் முழுவதும் இவர்கள் இரண்டு பேருடைய பெயரைத்தான் எம்ஜிஆர் மன்ற தோழர்களுக்கு நன்றாக தெரியும்
MGR அவர்கள் அதிமுகவை
ஆரம்பித்தபின் தங்கம் இளவரசன் இருவரும் கட்சி வளர்ச்சிக்கு பயங்கரமாக பாடுபட்டார்கள்
எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பிறகு
எம்ஜிஆர் மன்ற பொறுப்புக்கு வந்தவர் தான் நவநீதகிருஷ்ணன்
தங்கம் இளவரசன்
இவர்களைப்போல் ஆதிகாலத்திலிருந்து
எம்ஜிஆர் மன்றத்தை வைத்து அதன் வளர்ச்சிக்கு
பாடுபடாதவர்
நவநீதகிருஷ்ணன்
காலக்கொடுமை பெருக்கான் காவடி எடுத்து ஆடியது என்று பழமொழி
நவநீத கிருஷ்ணனுக்கு பதவி கிடைத்தது
தங்கம் இளவரசன் போன்றவர்கள்
மதுரை மாநகராட்சி மேயராகவே வரக்கூடிய
தகுதிபெற்றவர்கள்
ஆனால் துரோகி நவநீதகிருஷ்ணன் துணை மேயராக வந்தார்
ஜெஅணியில் இருந்து கொண்டு ஜானகி அம்மையாருக்கு எதிராக செயல்பட்டார்
இவர்களெல்லாம் எம்ஜிஆரிடம் பதவி பெறாமல் இருந்துவிட்டு
ஜானகி அம்மாவிற்கு துரோகம் செய்திருந்தால் தவறு இல்லை
MGR எம்ஜிஆரிடம் பதவிகள் அனுபவித்துவிட்டு
MGR எம்ஜிஆர் மனைவிக்கு துரோகம் செய்தார்கள்
/////////////////////////////////////?////////?///?.... Thanks...
++++++++++++++++++++++++++++?++++(?
தனியார் தொலைக்காட்சிகளில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பு விவரம் .
-------------------------------------------------------------------------------------------------------------------------------
25/04/2020* - ஜெயா மூவிஸ் - காலை 7 மணி* *-* பாசம்*
* * * * * * * * * *சன் லைப்* *- காலை* 11 மணி - உழைக்கும் கரங்கள்*
* * * * * * * * * * முரசு டிவி - காலை 11 மணி /இரவு 7 மணி -தாயை காத்த தனயன்*
* * * * * * * * * * புதுயுகம் டிவி* *- இரவு 7 மணி* * -கன்னித்தாய்*
26/04/20* * * * * சன் லைப்* *- காலை 11 மணி* -* கணவன்*
27/04/20* * * ஜெயா மூவிஸ் - காலை 7 மணி* - இதய வீணை*
* * * * * * * * * *-* * சன்* லைப்* - காலை 11 மணி* - உரிமைக்குரல்*
* * * * * * * * * * * * மீனாட்சி டிவி - இரவு 11 மணி* - விவசாயி*
28/04/20* * * - பெப்பர்ஸ் டிவி -காலை 4 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * * * - ஜெயா மூவிஸ் -காலை 7 மணி* -பணக்கார குடும்பம்*
* *முரசு டிவி _காலை 11 மணி /இரவு 7 மணி -*அலிபாபாவும் 40திருடர்களும்*
* * * * * * * * * * * வானவில் டிவி* -பிற்பகல் 2 மணி* - நீரும் நெருப்பும்***
மூன்* டிவி* *-இரவு 7.30 மணி* -தாய்க்கு*தலை மகன்*
29/04/20* * * சன் லைப்* * - காலை 11 மணி* - அரச கட்டளை*
* * * * * * * * * *
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 15. செவ்வாய்
எம்ஜிஆர் பக்தர்களே
முதலமைச்சர் பதவியை பயன்படுத்தி
அடுத்தவர் சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்காத. அருமை தலைவன் எம்ஜிஆர் அவர்களுக்கு
நினைவுப்பரிசு வழங்குபவர்
விஜயபாலன் எம் எல் ஏ
1980. + 1984 ஆண்டுகளில் நடைபெற்றசட்டசபை பொதுத் தேர்தலில்
பூம்புகார்
சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்
எம்ஜிஆர் மறைந்த பிறகு ஜானகி அம்மையாரை முதலமைச்சராக கொண்டுவந்த எம்எல்ஏக்களில் இவரும் ஒருவர்
உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தவர்
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதவர்....... Thanks...
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தைப் பார்த்து விட்டு வந்த எம்ஜிஆர் ரசிகர்கள் இருவர் இப்படிப் பேசிக் கொண்டார்களாம்.
“ என்னய்யா சிவாஜியை கடைசியில் தூக்கில தொங்கவிட்டுட்டாங்க.
இதே படத்துல வாத்தியாரு நடிச்சிருந்தா அந்தத் தொரையைப் புடிச்சு தூக்கில தொங்கவிட்டிருப்பாரு”......
இப்படி அடிக்கடி மேடையில் நகைச்சுவையாகச் சொன்னவர்
சிவாஜி ரசிகர் மன்றத் தலைவராக இருந்த திரு.சின்ன அண்ணாமலை.
அதே சின்ன அண்ணாமலை
எம்ஜிஆர் முதல்வரான பிறகு
இதே நகைச்சுவைத் துணுக்கை மேடையில் சொல்லிவிட்டு
“இப்படி வரலாற்றையே புரட்டிப் போடக்கூடிய வல்லமை படைத்தவர்தான் நமது முதல்வர் எம்ஜிஆர்” என்று பேசியதும் உண்டு.
......”திரைத்தமிழ்”......... Thanks...
https://youtu.be/lLHO7W5XCoo...... Thanks...
ஸ்ரீ MGR. வாழ்க.
எம்ஜிஆர் பக்தர்களே
படத்தில் இருப்பவர் பெயர்
வேலாயுதம் நல்ல சிவா
திருவாங்கூர் ஸ்டேட் பாங்க் அதிகாரி
அவரைப் பற்றி
நான்கு மணி நேரத்திற்கு முன்பாக நான் ஒரு பதிவு வெளியிட்டிருந்தேன்
அவர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி எந்த அளவுக்கு வெறி பிடித்து
எம்ஜிஆர் அவர்களுடைய வரலாறுகளை சேகரித்து வைத்துள்ளார் என்பதற்கு இந்தப்பதிவு சாட்சி
//////////////////////////////////////////
வேலாயுதம் நல்ல சிவா / ஆகிய
என்னிடம் நமது தலைவரின் பிறந்தநாளை குறிக்கும் எண்கள் உள்ள ரூபாய் 1 முதல் 500 வரையிலும் மற்றும் கால் முறிவு அடைந்தநாள், ஜானகி அம்மாளை மணம்புரிந்தநாள், குண்டடி பட்ட நாள், திமுகவில் இருந்து நீக்க பட்ட நாள், அதிமுக தொடக்க நாள், முதல் அமைச்சரான நாள், சட்டசபை பதிவேட்டில் கையொப்பம் இட்டநாள், கார்நம்பர், அரசு டிஸ்மிஸ் ஆன நாள், சத்துணவு துவக்க நாள், அப்போலோவில் அட்மிட் ஆனநாள், பூருகிளினில்இருந்த நாள்கள், மறைந்த நாள், பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டநாள், பாலக்காட்டில் உள்ள நினைவு இல்லம் திறந்த நாள் ஆகியவையும் குறிக்கும் 10 ரூபாய் நோட்டுகள் உள்ளது..
நன்றி அய்யா......... Thanks...
இதயதெய்வம் புரட்சித் தலைவரின் தொண்டர்களில் மிக வித்தியாசமானவர் திரு.வேலாயுதம் ஆவார்கள்.தலைவரின் மீது அவர் கொண்டிருக்கும் பக்தி அபாரமானது.தொண்டர்தம் இதயங்களில் தலைவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.தலைவரின் இதயத்தில் தொண்டர்கள் வாழ்ந்தனர்.இதுவே நம் வரலாறு! இப்படிப்பட்ட உலகிலேயே யாருக்கும் இல்லை.. மூன்று வகையான சிறப்பு நம் தலைவருக்கே உண்டு.(1) அன்றும்-இன்றும்-என்றும் மாறாத பாசமும்,அன்பும் கொண்டு இதயதெய்வம் புரட்சித் தலைவரின் புகழைப் பாடும் தொண்டர்கள்.(2)எந்தவித உழைப்பும் இல்லாமல் புரட்சித் தலைவரின் கட்சியில் -ஆட்சியில் இருந்து கொண்டு-அவர் படத்தை மறைத்து பிழைப்பு(துரோகிகள்) நடத்துபவர்கள்.(3)தீய எண்ணம் கொண்ட எதிரிகள்-அரிதாரம் பூசினால் போதும்-அரியணை ஏறிவிடலாம் என ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்களை முட்டாளாக நினைக்கும் எத்தர்கள்..எவராக இருந்தாலும் புரட்சித்தலைவரை சொல்லாமல் வெளியே நடமாட முடியாது. இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என்பது மாபெரும் சக்தி.திரு.வேலாயுதம் அவர்களுக்கு தலைவரின் ஆசி நிச்சயம் உண்டு.வாழ்த்துக்கள்! நன்றி!!!... Thanks...
கொடுத்ததெல்லாம் கொடுத்தார் அது
யாருக்காக கொடுத்தார்.
ஒருத்தருக்கா கொடுத்தார் இல்லை
ஊருக்காக கொடுத்தார்.
புரட்சித்தலைவர் நல்ல காரியங்களுக்கு நன்கொடை வழங்குவதிலும் சரி; நாட்டுக்கும், மொழிக்கும் உழைத்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதிலும் சரி, முதல் ஆளாக நிற்பார். அப்படி உதவுவதில் அரசு நடைமுறைகளால் தாமதமோ, விதிமுறைகள் மீறலோ இல்லாமல் பார்த்துக் கொள்வார்!
வெள்ளையருக்கு சிம்ம சொப்பன மாகத் திகழ்ந்த லோகமான்ய பாலகங்காதர திலகருக்கு புனேயில் வெண்கல சிலை வைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்தது. தேசியத் தலைவரான திலகரின் சிலை நிறுவ மற்ற மாநிலங்களின் பங்களிப் பும் இருக்க விரும்பி, எல்லா மாநிலங்களிடமும் மகாராஷ்டிர அரசு நிதி கோரியது.
திலகரின் பேரன் அந்த மாநிலத்தின் சட்ட மேலவைத் தலைவராக இருந்தார். சிலை அமைக்க நிதி கோருவதற்காக அவர் தமிழகம் வந்தார். அப்போது, தமிழக சட்ட மேலவைத் தலைவராக இருந்த ம.பொ.சி.க்கு முன்கூட்டியே கடிதம் எழுதிவிட்டு, குறிப்பிட்ட நாளில் வந்து அவரை சந்தித்தார். அன்று தமிழக சட்டப்பேரவை மற்றும் மேலவைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
மேலவைத் தலைவரான ம.பொ.சி- யின் அறையில் அவரை சந்தித்த திலக ரின் பேரன், முதல்வர் எம்.ஜி.ஆரை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். அதை அறிந்து, பேரவை நடவடிக்கைகளில் பங்கு கொண்டிருந்த முதல்வர் எம்.ஜி.ஆரும் ம.பொ.சி.யின் அறைக்கு வந்துவிட்டார். திலகருக்கு சிலை அமைக் கப்பட இருப்பதையும் தமது வருகைக் கான நோக்கத்தையும் அவரிடம் திலகரின் பேரன் தெரிவித்தார். உடனே, தனது செயலாளரை அழைத்த எம்.ஜி.ஆர்., அவரது காதில் ஏதோ சொன்னார்.
செயலாளர் வெளியே சென்று முதல்வரின் அறையிலிருந்து காசோலை புத்தகத்தைக் கொண்டு வந்தார். காசோ லையில் ரூ.50 ஆயிரம் தொகையை எழுதி கையெழுத்திட்டு ‘‘திலகர் சிலை அமைக்க இது என் நன்கொடை’’ என்று கூறி திலகரின் பேரனிடம் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.! இவ்வளவு பெரிய தொகையை, அதுவும் முதல்வர் தனிப் பட்ட முறையில் தருவார் என்று எதிர் பார்க்காத திலகரின் பேரன், அவருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறினார். காசோலையைப் பெற்றுக் கொண்ட அவருக்கு மனதில் ஒரு சந்தேகம்.
‘‘அரசிடம் இருந்துதான் பணத்தை எதிர்பார்த்தேன். நீங்கள் சொந்தப் பணத் தில் இருந்தே கொடுத்து விட்டீர்களே?’’ என்று எம்.ஜி.ஆரிடம் கேட்டார். ‘அரசு மூலம் கொடுக்காமல் நீங்களே கொடுத் தது ஏன்?’ என்ற அவரது சந்தேகம் அந்தக் கேள்வியில் தொக்கி நின்றது. அது எம்.ஜி.ஆருக்குப் புரியாமல் போய் விடுமா? ‘‘அரசாங்க நிதியில் இருந்து கொடுப்பதென்றால் நான் எழுதும் கடிதம் முறைப்படி ஒவ்வொரு துறையாகச் சென்று ஒப்புதல் பெற்று பணம் கிடைக்க மாதக்கணக்கில் ஆகும். அதைத் தவிர்க் கவே என் சொந்தப் பணத்தைக் கொடுத் தேன். மேலும், திலகரின் சிலை அமைய நானே நன்கொடை வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சி!’’ என்று புன்முறுவலுடன் எம்.ஜி.ஆர். சொல்ல, நடைமுறைக்கேற்ப முடிவெடுக்கும் அவரது திறனையும் தேசப்பற்றையும் கண்டு சிலிர்த்தார் திலகரின் பேரன்!
நன்றி:ஶ்ரீதர் சுவாமி நாதன்.......... Thanks...
இன்று கவிஞர் வாலி...
ஏழாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி சாதனைப் புரிந்தவர் கவிஞர் வாலி. அவர் எழுதிய பெரும்பாலான பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவை.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என அனைத்து தலைமுறை கதாநாயகர்களுக்கும் பாடல்கள் எழுதி இறக்கும்போது கூட பிஸியான பாடலாசிரியராகவே இருந்தவர் கவிஞர் வாலி.
எம்.ஜி.ஆரின் படங்களுக்கு அதிகமாக பாடல்களை எழுதி புகழிலும், பொருளாதாரத்திலும் உயர்ந்த அவர், எம்.ஜி.ஆரின் கொள்கை பாடல்கள், தத்துவப் பாடல்களை என்று எழுதி அவரது அரசியல் வாழ்க்கைக்கே உறுதுணையாக இருந்தார். தான் நடிக்கும் படங்களுக்கெல்லாம் வாலி பாடல்களை எழுத வேண்டும் என்று எம்.ஜி.ஆரால் சிபாரிசு செய்யப்பட்டவர்.
இதே வாலிதான் எம்.ஜி.ஆருக்காக முதன்முதலாக பாடல் எழுதப் போய், அந்தப்பாடலை ஒகே சொல்ல வைப்பதற்கும், படமாக்கப்படுவதற்கும் படாதபாடுபட்டுவிட்டார். எம்.ஜி.ஆருக்காக வாலியால் எழுதப்பட்ட அந்த முதல் பாடல் பெரும் சோதனைக்குள்ளானது. இந்த அனுபவங்களை அவர் ஏற்கெனவே பகிர்ந்துள்ளார்.
கவிஞர் வாலிக்கு பாடல் எழுதுகின்ற முதல்வாய்ப்பு கெம்புராஜ் அர்ஸ் தயாரித்து இயக்கி நடித்த 'அழகர் மலைக்கள்ளன்' (1958) படம் மூலம் கிடைத்தது. நடிகர் வி.கோபாலகிருஷ்ணன் இந்த வாயப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்தப்படத்தில் நடிகர் கே.பாலாஜி 'சபாஷ் மீனா', மாலினி, வி.கோபாலகிருஷ்ணன், விஜயகுமாரி, ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப்படத்திற்கு கோபாலம் என்பவர்தான் இசையமைப்பாளர். வாலி முதல் பாடலை இப்படி எழுதிக் கொடுத்தார்... 'நிலவும் தாரையும் நீயம்மா உலகம் ஒருநாள் உனதம்மா...'
இந்தப் படத்திற்கு பிறகு சில படங்களில் பாடல் எழுத வாய்ப்புகளை தேடிப் பெற்றார் வாலி. ஆனாலும் வாலியும் ஒரு பாடலாசிரியர் என்ற அங்கீகாரம் சரியாக அமையவில்லை. போராட்டம் தொடர்ந்தது.
ஒருநாள் அரசு பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து பாடல் எழுதும் வாய்ப்பு தேடி வந்தது... ஓடிப் போய்ப் பார்த்தார் வாலி. அங்கே டைரக்டர் ப நீலகண்டன், இசையமைப்பாளர் டிஆர் பாப்பா ஆகியோர் இருந்தார்கள்.
"நீங்க நல்லா பாட்டு எழுதுவீங்கனு மா.லட்சுமணன் சிபாரிசு பண்ணார். அதனால்தான் உங்களை அழைத்திருக்கிறோம்," என்று சொன்னபடி வாலியை வரவேற்றார் டைரக்டர் ப.நீலகண்டன். மா.லட்சுமணனுக்கு மனதிற்குள் நன்றி சொன்னார் வாலி. ஏற்கனவே இசையமைப்பாளர் டிஆர் பாப்பா மீது கவிஞர் வாலிக்கு ஒரு மரியாதை உண்டு. இவருடைய இசையில் பல பாடல்கள் பிரபலமாகியிருக்கின்றன.
"இந்தப் படத்தின் கதாசிரியர் யார் தெரியுமா? கதாநாயனாக நடிக்க போகிறவர் யார் தெரியுமா?," என்று கேள்விமேல் கேள்விகேட்டுக் கொண்டிருந்தார் டைரக்டர் ப.நீலகண்டன்.
"தெரியாது சார்..." என்று மெல்ல தலையாட்டினார் கவிஞர் வாலி. ப.நீலகண்டன் தொடர்ந்தார்.
இந்தப் படத்தின் கதாசிரியர் பேரறிஞர் அண்ணா, கதாநாயகன் எம்.ஜி.ஆர், இயக்குநர் நான்தான் ப.நீலகண்டன்," என்று சொல்லி முடித்ததும் கவிஞர் வாலிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இப்படி ஒரு பெரிய வாய்ப்பு வரும் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை. 'பேரறிஞர் அண்ணாவின் கதைக்கு, எம்.ஜி.ஆர். நாயகராக நடிக்கும் படத்திற்கு பிரபல இயக்குvர் ப.நீலகண்டன் இயக்கத்தில் நான் பாடல் எழுதுவேன் என்று நினைத்துகூட பார்க்கவில்லை'. மனதிற்குள் துள்ளி குதித்தார்.
ப.நீலகண்டன் தொடர்ந்து, "இந்தப் படத்தின் பெயர் 'நல்லவன் வாழ்வான்', இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிகை ராஜ சுலோச்சனா நடிக்கிறாங்க. அவர்கள் இரண்டுபேரும் இணைந்து பாடும் டூயட் பாடலை எழுதத்தான் உங்களை கூப்பிட்டிக்கிறோம்," என்று பாடல் காட்சிக்கான சூழ்நிலையை விளக்கினார் ப.நீலகண்டன். வாலி எழுதிக் கொடுத்தார்.
'சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்
சிந்திய கண்ணீர் மாறியதாலே...'
ப.நீலகண்டனுக்கு வாலி எழுதிய பாடல் பிடித்துவிட்டது. அடுத்து படத்தின் கதாசிரியர் பேரறிஞர் அண்ணாவிடம் வாலியின் பாடல்போனது. அதைப் படித்துப் பார்த்த அண்ணா சிலவரிகளைக் குறிப்பிட்டு சொல்லி அவற்றை மாற்றாமல் அப்படியே பாடலாக்குங்கள் சிறப்பாக இருக்கிறது என்று சொல்லி அனுப்பினார். அண்ணாவின் பாராட்டு பெற்றதில் கவிஞர் வாலிக்கு மகிழ்ச்சி. 'நல்லவன் வாழ்வான்' (1961) படத்தின் படப்பிடிப்பு சாரதாஸ் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிந்தது. எம்.ஜி.ஆர் - ராஜசுலோக்சானா நடித்துக் கொண்டிந்தார்கள். படப்பிடிப்பிலிருந்த எம்.ஜி.ஆர். பாடலை கேட்க சாரதாஸ் ஸ்டுடியோவின் ஏ.ஸி.அறைக்கு வந்தார். வாலியும், டி.ஆர்.பாப்பாவும் காத்திருந்தார்கள்.
எம்.ஜி.ஆரை ப.நீலகண்டன் அழைத்து வந்தார்.
"இவர்தான் பாடலாசிரியர் வாலி" என்று எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
உடனே எம்.ஜி.ஆரும் "நான்தான் எம்.ஜி.ராமச்சந்திரன் நடிகர்" என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
"பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லையே... என்னண்ணே?" என்றார் வாலி.
"உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய டைரக்டர் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தவில்லையே... அதனால்தான் என்ன அறிமுகப்படுத்திக் கொண்டேன்," என்றார் எம்.ஜி.ஆர்.
டி.ஆர். பாப்பா பாடி காட்டினார். எம்.ஜி.ஆருக்கு பாடல் பிடித்துவிட்டது. வாலிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை, கடவுளை வேண்டிக் கொண்டார். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இந்தப் பாடல் ஒ.கே. ஆகிவிட வேண்டும் என்று. பாடலுக்கான ரிக்கார்டிங் வேலைகள் நடந்தன. பகல் 12 மணிக்கு எம்.ஜி.ஆர். வந்தார். பாடலைக் கேட்டார். பாட்டின் பின்னணி இசை திருப்தியாக இல்லை. சிலமாற்றங்கள் செய்ய வேண்டும் என்றார். மாற்றங்கள் செய்ய வேண்டியதற்கான நேரம் போதுமானதாக இல்லாததால் ரிக்கார்டிங் ரத்து செய்யப்பட்டது. 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் சாரதா ஸ்டுடியோவில் பாடல் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று பகல் 12 மணியளவில் இந்தப் பாடலை பாடவேண்டிய பின்னணி பாடகி பி.சுசிலாவிற்கு உடல நலம் சரியில்லாமல் போனது. ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது. வந்த இந்த பெரிய வாய்ப்புக்கு இப்படி சோதனைகள் வருகின்றதே என்று வாலிக்கு வேதனை அதிகமாகிவிட்டது.
பிறகு ஒரு மாதம் கழித்து இன்னொரு நாள் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று சீர்காழி கோவிந்தராஜனின் சாரீரம் உதவும்படியாக இல்லை என்று கூறி ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது.
இறுதியில் இந்தப்பாட்டு ராசியில்லாத பாட்டு அதனால் மருதகாசியை வரவழைத்து வேறு பாட்டு எழுத வைத்து ஒலிப்பதிவு செய்வோம் என்று டைரக்டர் ப.நீலகண்டன் முடிவெடுத்தார். மருதகாசி வரவழைக்கப்பட்டார்.
மருதகாசியும் வாலியின் பாடலை வாங்கி படித்தார். "இந்தப் பையன் நல்லாதான் பாடலை எழுதியிருக்கிறான். இவனுடைய வாழ்க்கை என்னால் கெட்டுப் போவதை நான் விரும்பவில்லை. இந்தப் பாட்டையே வைத்துக் கொள்ளுங்கள்... பாப்புலராகும்," என்று சொல்லிவிட்டு போய்விட்டார். வேறு வழியில்லாமல் வாலியின் பாடலையே பதிவு செய்து படப்பிடிப்புக்கு போனார்கள்.
நியூட்டன் ஸ்டுடியோடிவில் பாடலை முழுவதுமாக படம் பிடிக்க பிரம்மாண்டமான செட் போட்டார்கள். ஒருமலை, வழியும் அருவி, அருவி வந்து விழும் தடாகம் என அழகான செட். எம்.ஜி.ஆர், ராஜசுலோச்சனா ஆடிப் பாடுவதுபோல நடன இயக்குநர் ஒத்திகைப் பார்த்தார்.
முதல் ஷாட். எம்.ஜி.ஆர், 'சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்' என்னும் பாடல் வரிக்கு ஏற்ப வாயசைத்துக் கொண்டே கரையிலிருந்து தடாகத்திற்குள் இறங்கினார். கரை உடைந்து ஃப்ளோர் முழுவதும் வெள்ளக்காடாயிற்று. படப்பிடிப்பும் ஒத்தி வைக்கப்பட்டது. வாலி துவண்டு போனார்.
'இந்த பாடலுக்கே இத்தனை தடங்கள் என்றால் நம் எதிர்காலம் என்னாவது?'
நல்லவேளை செட்டு சீர் செய்யப்பட்டு பாடல்காட்சியும் நல்லவிதமாக படமாக்க்கப்பட்டது. படத்திலும் இடம் பெற்றது. இந்தப்படம் சென்சாருக்குப் போனபோது இறுதியில் வரும் பாடல் வரிகளில் ஆட்சேபணைக்குரியதாக இருப்பதாக சரணத்தில் உள்ள சிலவரிகளை சென்சார் வெட்டியது.
இத்தனை வேதனை, சோதனைகளுக்குப் பிறகுதான் வாலி, எம்.ஜி.ஆருக்காக எழுதிய பாடல் இடம் பெற்று படமும் வெளிவந்தது.
'நல்லவன் வாழ்வான்' என்ற படத்தின் தலைப்பின் படி எத்தனை சோதனை, வேதனை வந்தாலும் 'நல்லவன் வாழ்வான்' என்பது வாலியின் வாழ்க்கையில் உண்மையானது.
'நல்லவன் வாழ்வான்' முதல் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வரை எம்.ஜி.ஆருக்காக அதிகமான பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் வாலிதான் என எம்ஜிஆர் சரித்திரத்தில் இடம் பிடித்தார்.
நன்றி
பெரு துளசிபழனிவேல்........ Thanks...
கவியரசு அவர்கள் எம் ஜி ஆரின் 48 படங்களில் 218 பாடல்களும் ,வாலி 51 படங்களில் 182 பாடல்களும் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் படங்களுக்கு பாடல் எழுதி உள்ளனர்
அருமையான பதிவு.
அதற்கு உகந்த பாடல்..... நன்றி நண்பரே...
கவிஞர் வாலி இவரது இயற்பெயர்
டி. எஸ். ரங்கராஜன், இவர் 29-10-1931-ல்
பிறந்தார்.
2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது....... Thanks VN
வாலியைப் பற்றி கவிதைப் பதிவிடுவதாக இருந்தேன். கண்ணதாசனுக்கு இணையாகக் கடை விரிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை!! எம்.ஜி.ஆரால் தான் ஊருக்கு இவர் முகவரி தெரிந்தது என்றாலும்--அதைத் தன் திறமையால் தக்க வைத்துக் கொள்வது பெரிய விஷயம்!!
முத்துலிங்கம்--புலமைப் பித்தன்-- நா.காமராசன் போன்றோர் கூட எம்.ஜி.ஆரால் திரைக்கு வந்தவர்கள் தான். ஆனால் அவர்களால் காலத்துக்கு ஏற்றார் போல் எழுத முடியவில்லை!!
மாதவிப் பொன் மயிலாள் எழுதிய கை தான்
முக்காபுலாவும் இயற்றியது!!
ஒப்பனைக்கும் விற்பனைக்கும் எழுதினாலும்
கற்பனைக்குப் பஞ்சம் இருந்திருந்தால்-
சொற்-புனைக்கும் சொக்கட்டான் ஆட்டம் எப்படி ஆடியிருக்க முடியும்??
கண்ணதாசனுக்கு இணையாகவே வலம் வந்த இந்தத் தமிழுக்கு என் அஞ்சலி!..... Thanks...