Mr. Vasudevan sir,
Thanks for publishing the rare advertisement of 'VALAR PIRAI'. Now I understood it was also released at Shanti. We request you to publish more ads in future.
I also support your idea of starting Part 11 by our Mr. S.Gopal.
Printable View
Mr. Vasudevan sir,
Thanks for publishing the rare advertisement of 'VALAR PIRAI'. Now I understood it was also released at Shanti. We request you to publish more ads in future.
I also support your idea of starting Part 11 by our Mr. S.Gopal.
Tms & nt
நான் நிச்சயம் திரு.கோபால் அவர்கள் எழுதுவதற்கு வழிமொழிய மாட்டேன்.
திரு.கோபால் எழுதுவதற்கு நிச்சயம் என்னால் வழிமொழிய முடியாது
பின்னே...வழிமொழிவது என்ன வழிமொழிவது? அன்பு கட்டளைதான் இட முடியும் !
என் உயிரில் கலந்த காட்சி.
http://t3.gstatic.com/images?q=tbn:A...dHc_0km-bArbre
காவியம்: தெனாலிராமன்.
பாமினி சுல்தானின் கைப்பாவை கிருஷ்ணாவின் (பானுமதி) சூழ்ச்சியான மோக வலையில் சிக்கி நாட்டைக் கவனியாமல் வீழ்ந்து கிடக்கிறார் விஜயநகர சாம்ராஜ்ய சக்கரவர்த்தி கிருஷ்ண தேவராயர் (என்.டி.ராமாராவ்). இதைக் கண்டு வெகுண்டெழுகிறான் ராயரின் அன்புக்கினிய தெனாலிராமன். ராஜாங்க விதூஷகனும் கூட. ராயரின் தவறை சுட்டிக் காட்டுகிறான் அவரிடமே. கிருஷ்ணாவின் மயக்கத்தில் இருக்கும் ராயர் தெனாலி ராமனின் அறிவுரையை அலட்சியப் படுத்துகிறார். அதோடு மட்டுமல்லாமல் ராயர் ராமனுக்கு மரணதண்டனை அளிக்கவும் தயங்கவில்லை.
தேசப்பற்று உடைய ராமன் மந்திரியின் (V.நாகையா) துணை கொண்டு கிருஷ்ணாவை நாட்டை விட்டு துரத்த எண்ணுகிறான். ஆனால் நடுவில் ராயர் இருக்கும் போது? ஒரு அருமையான சந்தர்ப்பம் ராமனுக்குக் கிட்டுகிறது. ராயரின் மனைவி (சந்தியா...சாட்சாத் அம்மாவின் அம்மாதான்) ராயரின் செய்கைகளினால் உடல்நலம் குன்றுகிறாள். இதைக் கேள்விப்பட்ட ராயர் தன் அன்பு மனைவியைக் காண விரைகிறார். இப்போது கிருஷ்ணா ராயரின் அந்தப்புரத்தில் தனியாக. வாட்டமான இந்த சந்தர்ப்பத்தை அழகாகப் பயன்படுத்திக் கொள்கிறான் ராமன்.
நேராக கிருஷ்ணாவிடம் செல்கிறான் ராயர் தன்னைத் தவிர யாரும் அங்கு நுழையக் கூடாது என்ற கண்டிப்பான கட்டளையையும் மீறி. கிருஷ்ணாவை நாட்டை விட்டுப் போய்விடும்படி எச்சரிக்கிறான். கிருஷ்ணா மசிவேனா என்கிறாள். முதலில் பொறுமையைக் கடைப்பிடிக்கும் ராமன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கோபமேறி கிருஷ்ணாவை, அவள் திட்டங்களை தவிடுபொடி ஆக்குகிறான்.
தெனாலிராமன் படத்தில் வரும் ஒரு அற்புதக் காட்சியமைப்பின் கரு இது.
இப்போது நடிகர் திலகத்திடம் வருவோம்.
தெனாலி ராமனாக நடிகர் திலகம். கிருஷ்ணாவான பானுமதியின் அந்தப்புரத்தில் நுழைந்து பானுமதியை படிப்படியாய் எச்சரிக்கும் காட்சி.
என்ன ஒரு அற்புதமான பங்களிப்பு! என்ன ஒரு தெனாவட்டான தொனி! கிருஷ்ணா ராயரில்லாமல் தனியாகத்தான் இருக்கிறாள் என்ற முழு சுதந்திரத்தில் என்ன ஒரு மிரட்டும் தோரணை! அவள் ஆள்மயக்கிதானே என்ற எகத்தாளமான கேலி! நையாண்டியும் கிண்டலும் கொண்ட 'நறுக் நறுக்' வார்த்தைப் பிரயோகம். கிருஷ்ணாவின் கேள்விகளுக்கும், மேனாமினுக்கித்தனத்திற்கும் தரும் பதிலடி. நடுவில் சிறிது கெஞ்சல் (உன் எடைக்கு எடை தங்கம் தருகிறோம்... ராயரை விட்டு விடு) இறுதியில் பலமான எச்சரிக்கை.
அந்தப்புரத்தில் நுழைந்தவுடன் கிருஷ்ணா ராமனிடம் அது முறையற்ற செய்கை என்று கோபப்பட,
அதற்கு இவர் படு நக்கலாக சிரித்துவிட்டு ,"ஏதோ...முறையான செய்கையை உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாமென்றுதான் வந்தேன்... ஒழுங்கான உலகத்திற்கு இலக்கணமே தாங்கள்தானே!"
என்று நையாண்டி தர்பார் நடத்தும் விதம்.
கிருஷ்ணா, "என்ன கேலியாய் செய்கிறாய்?" என்று வினவ,
"சேச்சே! அந்தரி...சுந்தரி...நிரந்தரி என்று அரசர் போற்றிப் புகழும் இந்த அற்புத உருவத்தை நானா கேலி செய்வேன்?" என்று சிரித்தபடியே விடும் நக்கல்.
"உன் புகழ் எனக்குத் தேவையில்லை" என்று பானுமதி கூறும்போது அதை ஏற்றுக் கொள்வது போல "ஆகட்டும்" என்ற தொனியில் ஒரு சிறு தலையாட்டலில் அப்படியே அள்ளிக் கொண்டு போய்விடுவார்.
வாக்குவாதங்கள் தொடரும் போது கிருஷ்ணா தன் அழகில் மன்னர் மயக்கமாய் கிடப்பதற்கு விளக்கமளித்து ராமனிடம்," நீ ஒரு பெண்ணாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பாய்? என்று கேட்க,
அதற்கு நடிகர் திலகம்,"மயங்கிய மன்னரின் முகத்திலே தண்ணீரைத் தெளித்து "எழுந்திரு மன்னவா! என்ன வேண்டியிருக்கிறது காதல்? (இந்த இடத்தில் அவர் காட்டும் முகபாவத்தை எப்படி எழுதுவது?) சூழ்ந்திருக்கிறார்கள் பகைவர்கள்... தூளாக்கப் புறப்படுங்கள்... என்று வாளைக் கொடுத்து வழியனுப்பி வைத்திருப்பேன்" என்று விவேகத்துடன் வீரமுழக்கமிடுவது அட்டகாசம்.
இறுதியில் "கிருஷ்ணா தேவியாரே! நீங்களாகப் போகிறீர்களா?...அல்லது உங்களைப் போக வைக்க வேண்டுமா?" என்று கைகளைக் கொட்டியபடியே விடும் எச்சரிக்கையில், அந்த சிறிய சிறிய தலைவெட்டுதல்களில் சிகரங்களையெல்லாம் தாண்டி பயணிப்பார். இறுதியில் கைகளால் "எச்சரிக்கை" என்று திரும்பியவாறே வேகமாக நடக்கத் துவங்கும் அழகே அழகு!
என் உயிரில் கலந்த காட்சி இது...
எல்லாவற்றையும் சொல்லி விட்டால்....
நீங்களே இப்போது கண்டு உணருங்கள்.... அனுபவியுங்கள்.
இணையத்தில் முதன் முதலாக....
http://www.youtube.com/watch?v=nmUFl...yer_detailpage
எனக்கு சந்தோசம் கரை மீறுவதை உணர்கிறேன். Joe ,பம்மலார்,முரளி,வாசுதேவன் வரிசையில் வந்து ,நான் நேசிக்கும் இந்த திரியை துவக்கி வைப்பதை எனக்கு அளிக்க பட்ட உன்னத பெருமையாய் எண்ணி குதூகலம் அடைகிறேன். நான் இந்த பணியை 31/5 க்கு பிறகு அல்லது திரி 400 ஐ எட்டிய பிறகு நிச்சயம் சிரமேற்கொண்டு ஏற்கிறேன் . என் மேல் அன்பு கொண்டுள்ள உள்ளங்களுக்கு என்றென்றும் கடன் பட்டுள்ளேன்.
காட்டாற்று வெள்ளத்தை கரைபோட்டுதான் தடுத்திடமுடியுமா..சந்தோஷ அலைகள் கரயைதொடுவதைத்தான் நிறுத்தமுடியுமா...? முடியாது...நிச்சயமாக முடியாது...!
இந்த சந்தோஷம் ஒரு அனுபவம் ...அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது வேந்தே விவரிக்க முடியாது...!
அனுபவித்துனர்வதை அனுபாவிதுனர்ந்தால் தான் அனுபவம், அனுபவமாக இருக்கும்..இது அனுபவமாக இருந்தாலும் சரி..அனுமானமாக இருந்தாலும் சரி..!
அனுமானத்தை அனுபவத்தின் மூலம் சொல்லிவிடலாம்...
ஆனால் அனுபவத்தை அனுமானமாக சொல்லமுடியாது..
காரணம்..அனுபவத்தை அனுமானமாக சொல்ல கூட அனுபவம் தேவை...!
அப்பாட...செந்தமிழ்ல எப்படியோ எழுதியாச்சு...நம்மக்கு எப்படியும் அடுத்த சான்ஸ் குடுப்பாங்க..! ஐயா ஜாலி !!
வாசு சார்
தெனாலி ராமன் - உன்னத திரைக்காவியம் மட்டுமல்ல, நடிகர் திலகம் என்கிற உலக மகா கலைஞன் பரிணமிக்கக் காரணமாயிருக்கும் இன்னொரு காவியமும் கூட. பல்வேறு வித பரிணாமங்களிலும் நடிப்பின் பரிமாணத்தை உணர்த்தியவர். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இக்காட்சி. இது போன்ற அபூர்வமான திரைக்காவியங்களைப் பற்றி நமது நண்பர்களுக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் உணர்த்தும் தங்கள் பணி மிகச் சிறந்தது. நடிகர் திலகத்தின் பரிபூரண ஆசி தங்களுக்குள்ளதையே இது காட்டுகிறது.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்.
From today......
Nadigar thilagaththaal ninaivootapatta periyavargal thodar.....thodarum.......!
http://www.youtube.com/watch?v=q09dYjrH2LU
இங்க எழுதியிருக்கிற மாதிரியே ஒருத்தர் பல திரைப்படங்களில் பேசி பேசி, படங்களை இயக்கி அரங்கங்களை நடத்திக்கொண்டு இருக்கிறார். ஏற்கனவே நீங்க உங்க அரட்டையை ஆரம்பிச்சுட்டீங்களே. இதுக்கு மேல என்ன சான்ஸ் வேண்டி கிடக்குது? சந்தேகம் இருந்தால் 'ஆனந்த கண்ணீர்' திரைப்படம் பார்த்து தெளிந்து கொள்ளவும்.
அது சரி, இதுக்கு பேர்தான் செந்தமிழா? சொல்லவேயில்லை!!!
பெரிய இடைவெளி விட்டு வருகிறேன்.
எல்லோரது பதிவுகளும் அட்டகாசம். திரு. கோபால் அவர்களின் பதிவுகள்; திரு ராகவேந்திரன்; திரு. முரளி அவர்களின் சிறிய ஆனால் சுவையான பதிவு. திரு. ராகுல்ராம் அவர்களின் "பா" வரிசைப் படங்களின் பதிவுகள்; இன்னும் நிறைய ஹப்பர்களின் பதிவுகள் (பெயர் விடுபட்டவர்கள் மன்னிக்கவும்!.
ஆனால், என்னை நிறையவே நெகிழ வைத்தது திரு. நெய்வேலி கோபால் அவர்களின் "என் கிராமம் என் மக்கள்" மற்றும் என் மனதுக்கு மிக நெருக்கமான "ராமன் எத்தனை ராமனடி" பதிவுகள். வார்த்தைகளே வரவில்லை ஐயா! அற்புதம்.
திரு. கோபால் அவர்களே! வாருங்கள் பாகம் 11-ஐ துவக்க அற்புதத் தேர்வு! வருக!! எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துக!!!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Rest In Peace TMS, we dearly miss you. You will be remembered for ever.
My top NT-TMS combinations, I request other friends to share their top 10
http://www.youtube.com/watch?v=BAVFuEqqV-k
http://www.youtube.com/watch?v=G3oWKwrbVlg
http://www.youtube.com/watch?v=FSdL74sUCNE
http://www.youtube.com/watch?v=vdU9LdY4wGY
http://www.youtube.com/watch?v=imwsn-J8NuM
http://www.youtube.com/watch?v=GqAtpVEu5q4
http://www.youtube.com/watch?v=qKTaS7oDn3w
http://www.youtube.com/watch?v=80efNO8cIkQ
http://www.youtube.com/watch?v=2VyResf6y0o
http://www.youtube.com/watch?v=SXyrrFIdQbs
Paar Magale Paar
http://i1087.photobucket.com/albums/...magalepaar.jpg
மிக்க நன்றி கண்பத் சார். கோபாலின் இந்த அரிய சேவைக்கு நாம் அவருக்கு அளிக்கும் இந்த பொறுப்பு நிச்சயம் அவரை பெருமகிழ்ச்சி அடையச் செய்வதோடு நமக்கும் மிகுந்த சந்தோஷமாய் இருக்கிறது. மீண்டும் எல்லோரது சார்பிலும் அவருக்கு நம் நல்வாழ்த்துக்கள்.
திரு கோபால் அவர்களுக்கு ஒரு சிறந்த முறையில் டேக் ஆப் செய்ய நாம் நம்மால் ஆனா ஒரு சிறிய முயற்சி மேற்கொள்ளலாமே...
என் சார்பாக...கோபால் அவர்களுக்கு....இந்த பாடல் ....கோபால் சார் ...இந்த பாட்டை பார்த்து ஒரு சூப்பர் டேக் ஆப் குடுங்க...பகுதி 11 உக்கு
கோபால் சார் உக்கு ஒரு உந்து சக்தி தர இந்த பாடல் ...!
http://www.youtube.com/watch?v=lORp7dvVNsg
நடிகர் திலகத்தால் நினைவூட்டப்பட்ட தமிழ் பெரியர்வர்கள் வரிசையில்...நாம் முன்பு ராஜ ராஜ சோழன் வரலாறை கண்டோம்...இப்போது ...நம் நடிகர் திலகம் அவர்களின் பங்கை குறித்து காணலாம் !
எல்லோரும் சொல்லுகின்ற பாடல்கள் எனக்கும் மிக பிடித்தவைகளாகும். அதை தவிர்த்து எனக்கு பிடித்த நடிகர் திலகத்தின் tms பாடல்கள்:
1. பெண்களை நம்பாதே (தூக்கு தூக்கி)
2. வசந்த முல்லை போலே (சாரங்கதாரா)
3. பசுமை நிறைந்த நினைவுகளே (இரத்தத் திலகம்)
4. வந்த நாள் முதல் (பாவ மன்னிப்பு)
5. பாவாடை தாவணியில் (நிச்சய தாம்பூலம்)
6. கல்லெல்லாம் மாணிக்க (ஆலயமணி)
7. சட்டி சுட்டதடா (ஆலயமணி)
8. பூமாலையில் ஓர் மல்லிகை (ஊட்டி வரை உறவு)
9. ஆட்டுவித்தால் யாரோருவர் (அவன்தான் மனிதன்)
10. நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு (தியாகம்)
நடிகர் திலகத்தின் திரி பாகம்-11 ஐ துவக்க சரியான தேர்வு கோபால் அவர்களே!!!
முன்மொழிந்த நெய்வேலி வாசுதேவனாருக்கும் வழிமொழிந்த அத்தனை பேருக்கும் நன்றி!!! கோபால் சாருக்கு வாழ்த்துகள்!!!
Vasu sir,
Gopal sir is the right person to inaugurate the next thread , his write ups is, are too good , its indeed a honour and recognition for his work
ஆலயமணி
இந்த படத்தின் கதாநாயகன் தியாகு (சிவாஜி) ஒரு எஸ்டேட் அதிபர் பெரும் பணக்காரர் . டென்னிஸ் match விளையாடும் பொழுது அவர் சேகர்யை (SSR ) சந்திக்க நேருது . சேகரின் பண்பால் கவரப்படும் தியாகு அவரை உயிர் நண்பராக எத்து கொள்கிறார் . சேகர் சரோஜா தேவியை காதலிக்கிறார் . அவரை வானம்பாடி என்று செல்லமாக அழைக்கிறார். தன் காதலை தியாகு விடம் சொல்கிறார் . ஒரு தடவை தன் எஸ்டேட்க்கு செலும் தியாகு அங்கே சரோஜா தேவியின் துடுக்குத்தனம் நிறைந்த குணத்தால் காதலிக்க தொடங்கிறார் .(சரோஜா தான் தன் நண்பனின் காதலி என்பத்தை தெரியாமலே ) . எஸ்டேட் குமஸ்தா வின் மகள் தான் மீனா (சரோஜா தேவி) மீனா வின் அக்கா விக்கு தன் சொந்த செலவிலே அவர் விரும்பும் பையன் கூட திருமணம் செய்து வைக்கிறார் .
சேகர் க்கு ஒரு விபத்தில் ரத்தம் குடுத்து அவர் உயிரை காப்பாற்றி மேலும் தியாகு சேகர்ன் மனதில் ஒரு உயர்ந்த இடத்தை பெறுகிறார்
மீனாவை தன் கல்யாணம் செய்ய விரும்புவதை மீனாவின் அப்பா (Nagaiah ) விடம் தெரிவிக்கிறார் . அவரும் இதுக்கு சம்மதிக்கிறார் . SSR குமஸ்தா வின் வீட்டுக்கு வரும் பொழுது மீனா தான் தன் நண்பருக்கு மனைவி ஆக போகுவதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார் . அவர் தியாகு விடம் தன் காதலி ஒரு பணக்காரன்யை திருமணம் செய்து கொள்ள போவதை தெரிவித்து விட்டு விரகத்தியில் வாழ்கிறார்
ஒரு நாள் கார் விபத்தில் இருந்து மீனாவை காப்பதும் பொழுது தியாகுவின் கால்கள் செயல் எழந்து விடுகிறது . தியாகுவை சேகரும் , மீனாவும் கவனித்து கொள்கிறார்கள் . ஆனால் தியாகுவின் மனதில் விஷத்தை விதிக்கிறார் ஆட்கொண்டான் (MR ராதா). அவர் தன் மகளை தியாகுவுக்கு தன் மகளை(விஜயகுமாரி ) கல்யாணம் பண்ணி வைக்க எண்ணி அது முடியாமல் போகவே எப்படி செய்கிறார் . இதனால் ஆத்திரம் அடையும் தியாகு வெறுப்பை காட்டுகிறார் . ஒரு னால் மீனாவிடம் தன் சிறு வயதில் செய்த ஒரு குற்றதை விவரிக்கிறார் . தன் உணர்ச்சியை கட்டு படுத்த முடியாமல் சேகரை கொலை செய்ய எண்ணி மலை உச்சியில் இருந்து தள்ளி விடுகிறார் . அந்த சமயத்தில் சேகர் மீது தவறு இல்லை என்பதை தெரிந்து கொண்டு தன் செய்த தவறுக்கு தண்டனையாக தன் உயிரை மாய்த்து கொள்கிறார் . ஆனால் அதிஷ்டவசமாக உயிர் பிழைக்கிறார் .இந்த விபத்தில் அவர் கால்கள் சாதாரண நிலைக்கு வருகிறது . தன் நண்பன் தன் காதலி (மீனா)யை திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் மறைந்து வாழ்கிறார் . தன் நண்பனுக்கு கல்யாணம் என்பதை தெரிந்து கொண்டு தன் வீட்டுக்கே ஒரு பிச்சைக்காரன் யை போல் செல்கிறார் . அங்கே சேகர் விஜயகுமாரியை கல்யாணம் செய்வதை பக்கும் அவர் மீனா தற்கொலை செய்து கொள்ள போவதை தடுக்க முற்படுகிறார் . அனால் MR ராதா சொத்துக்கு அசை பட்டு தியாகுவை மறைத்து வைக்கிறார் . இதை மீறி இருவரும் எப்படி இணைந்தார் என்பதை விளக்கும் படமே இந்த ஆலயமணி
இந்த படம் தன் PS வீரப்பா நடிகர் திலகத்தை வைத்து தயாரித்த முதல் படம் , இந்த படத்தின் வெற்றி அவரை ஒரு பெரிய தயாரிப்பாளராக மாற்றியது . இந்த நிறுவனம் தொடர்ந்து நிறைய படங்களை தயாரித்தது.
இந்த படம் ரிலீஸ் அன்று மக்கள் திலகம் திரு சங்கவிடம் ஒரு வெற்றி படத்தை இயக்கி இருக்கிர்கள் என்று வாழ்த்தினர் . இந்த படம் தெலுங்கு , ஹிந்தி பேசியது .
இந்த படத்தில் சிவாஜி யின் நடிப்பு ஒரு வித குற்ற உணர்ச்சியல் அவதி பாடுபவரை போல் சித்தரிக்கப்பட்டு உள்ளது . சிறு வயதில் தன் ஈகோ வினால் ஒரு உயிர் போக காரணம் , அவர் மனதை போட்டு அரித்து கொண்டே இருக்கிறது . இதே பாதிப்பில் நடிகர் திலகம் நடித்து புதிய பறவை என்ற படமும் வந்தது . அது தெரியாமல் செய்த ஒரு கொலை என்ற ஒற்றுமை என்பது உடன் முடிந்து விடுகிறது .
ஆனால் இதே கதை 2001 ல் விஜய் நடிக்க ப்ரிண்ட்ஸ் (FRIENDS ) என்ற பெயரில் வந்தது . வேடிக்கை என்ன வென்றால் FRIENDS மலையாளம் படத்தின் ரீமேக் . of course base கதை மட்டும் தான் .
அதே மாதிரி இதே போல் ஒரு கதையை தன் அற்புத treatment மூலம் இளமை உஞ்சல் ஆடுகிறது ஆக கொண்டு வந்தார் திரு ஸ்ரீதர் அவர்கள் .
இந்த படத்தின் கதை திரு G பாலசுப்ரமணியம் . மிக பெரிய கதை ஆசாரியர் . அவர் ரகசிய போலீஸ் 115 , துணைவன் , தங்க சுரங்கம்,எங்க ஒரு ராஜா போன்ற வெற்றி படங்களை கொடுத்து உள்ளார் .
இந்த படத்தில் நடிகர் திலகத்தின் பாதிரம் தான் சிறு வையத்தில் செய்த ஒரு தவறினால் psychologically depressed ஆக தனியாக இருக்கும் பொழுது காண படுகிறார் . அவர் அந்த சம்பவதை விவரிக்கும் பொழுது அவர் குரலில் தென்படுகிறது ஒரு வித பயம் , கலக்கம் , அதே தியாகு அறிமுகம் ஆகும் காட்சி டென்னிஸ் மாட்சில் அவர் தோல்வியை நெருங்க முர்போடும் பொழுது அவர் முகத்தில் காட்டும் ஒரு reaction அவர் வாழ்வில் ஒரு கருப்பு பக்கம் இருக்கும் என்பதை நமக்கு சொல்லி விடுகிறது . பிறகு அவர் SSR யை தான் வீடுக்கு அழைத்து வந்து தான் பணியாளர்கள்யிடம் அறிமுகம் செய்யும் பொழுது ஒரு மிடுக்கான ஆள் போல காட்சி அழைக்கிறார் .
முதல் முதலில் ஒரு பெண்யை சந்திக்கும் பொழுது , அதுவும் சரோஜாவின் துடுக்குதனம் கலந்த குரும்பை ரசிக்கும் அதே சிவாஜி பேச முடியாமல் முழிக்கிறார் சரோஜா சிவாஜியை மக்கு என்று சொல்லும் பொழுது அவர் காட்டும் reaction க்கு இடு இணை இல்லை , பிறகு அதே சரோஜா சிவாஜி யிடம் மனிப்பு கேட்கும் விடம் அதை அவர் சரோஜா முன்பு அவர் பேசியது போலவே handle செய்து நடக்கும் காட்சி , அதில் அவர் அணிந்து இருக்கும் half pant , அவர் தன் கையில் வைத்த இருந்த ஸ்டைல் வாக்கிங் stick கூட நடித்து இருக்குது.
அதே சிவாஜி தன் நண்பனிடம் தன் காதல் யை சொல்லும் பொழுது பியானோ வில் ஸ்டைல் ஆக தானே வசிப்பது போல தூள் செய்து விடுகிறார் , அதுக்கு அப்புறம் ஸ்டைல் ஆக சிகரெட்டே யை flip செய்வர் அது கேமரா முன்பு விழும் , அதூடன் அந்த சாட் முடியம் .
அவர் கால் ஊனம் ஆகும் பொழுது , அவர் என் சிம்மாசனத்தில் என்னை உக்கார வையுங்கள் என்று ஒரு ராஜா வை போல் சொல்லி மறு நொடி நொருங்கி போவர் . பாடல்களில் குறிப்பாக பொன்னை விரும்பும் ,கல்லெல்லாம் மாணிக்க,சட்டி சுட்டதடா பாடல்கல், அதில் அவர் நடிப்பு அபாரம்.
அதுவும் அவர் மனசாட்சி அவர்யை விட உயரமா தெரியும் பொழுதே symbolic representation ஆக தெரிகிறது அவர் மனசாட்சியை கட்டு படுத்த முடியாம தவிக்கிறார் என்று . அதே சிவாஜி தன் மனகண்ணில்ஓடும் காட்சியை( தன் நண்பனை சந்தேகிக்கும் காட்சியை) ஒரு பெரிய கண்ணாடி மூலம் விவரிப்பது அற்புதமான இயக்கம் , ஒளிபதிவு .(தம்பு )
SSR perfect செகண்ட் ஹீரோ . கொஞ்சம் கூட மிகை இல்லாத நடிப்பு .
சரோஜா தேவி அவர்கள் மீண்டும் ஒரு முறை அருமையாய் நடித்து இருக்கிறார் .
MR ராதா வின் கரடி காமெடி சூப்பர் .
1962 ல் வந்த இந்த படம் இன்றும் வசிகரிகிறது .
Hope my Tamil is better now compared to previous postings
ராஜராஜ சோழனை பற்றி வரலாற்றில் குறிப்பிட்டிருப்பதை போல நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, தந்தையின் கனிவு கொண்ட கண்கள், அதே நேரம் அரசவையில் கம்பீர தோற்றம், தவறு செய்பவர்களை பார்வையால் தண்டிக்கும் பாங்கு...இப்படி போகிறது ராஜராஜனை பற்றிய வர்ணனை.
தமிழ் ஆர்வம் பெருகிவரும் காட்டாற்று வெள்ளம் போல, வார்த்தை ஜாலங்கள் அர்ஜுனன் வில்லிலிருந்து விடுபட்ட அம்புகள் போல் ...திறமையில் முதன் முதல் திறமை..பலகுரலில் பேச பழகி தேர்ச்சிபெற்ற வேந்தன்...இப்படி சொல்லிகொண்டே போகலாம்...!
ராஜராஜனின் இவ்வளவு மிடுக்கும், ஆண்மையும், கம்பீரமும், தோற்றப்பொலிவும், பேசும் திறமும், ஒருங்கே பெற்ற ஒரு நடிகன் தமிழ் திரை உலகில் யார் என்ற கேள்வி எழும்போதெல்லாம் எந்த சந்தேகங்களுக்கும் இடம் கொடுக்காமல் அனைவரும் ஒருமித்த குரலில் தஞ்சை பெரியகோவிலிலுள்ள மணியின் " நங் " என்ற ரீங்காரமிடும் நாதம் போல உரைப்பது திரை உலக சித்தர் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தான் என்பதை வீடறியும், நாடறியும், தமிழர்கள் உள்ள புவி அறியும்...அதனுடன் நாமும் அறிவோம்..!
ஒரு மன்னனுக்குரிய அனைத்து லக்ஷணங்களும் ஒருங்கே பெற்ற நடிகர் திலகம்...தஞ்சை பெரியகோயில் நந்திக்கு, கோவில் கும்பாபிஷேக பூஜை செய்யவரும் காட்சியை பாருங்கள்....!
http://www.youtube.com/watch?v=5DhrsSQ-2aY
அபூர்வ நிழற்படங்கள். நன்றி முகநூல் நண்பர்.
http://sphotos-e.ak.fbcdn.net/hphoto...40367771_n.jpg
http://sphotos-d.ak.fbcdn.net/hphoto...99750220_n.jpg
அபூர்வ நிழற்படங்கள் தொடர்ச்சி
http://sphotos-a.ak.fbcdn.net/hphoto...42682470_n.jpg
டி.எம்.எஸ், நடிகர் திலகம், சி.சுப்ரமணியம், விஸ்வநாதன், ராமமூர்த்தி
Dear Gold star Sathish Sir,
Your Top 10 Selection are good.
My top 10 (NT - TMS combination): (It is very tough to select only 10)
1) Paattum Naane Baavamum Naane
2) Olimayamaana Ethirkaalam
3) Kallellaam Maanikka Kallaagumaa
4) Enge Nimmathi
5) Attuviththaal Yaaroruvar
6) Malarnthum Malaraatha
7) Ponnai Virumbum Boomiyile
8) Aaru Maname Aaru Antha Andavan Kattalai Aaru
9) Yarukkaaga Ithu Yarukkaaga
10) Naan Kavignanumillai Nalla Rasiganumillai
ஜூலியஸ் சீஸர் - சொர்க்கம் திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சி என்றைக்கும் பசுமையாக நினைவிருக்கும். சென்ற ஆண்டு சொர்க்கம் சென்னை அண்ணா திரையரங்கில் திரையிடப் பட்டபோது ரசிகர்கள் கொண்டாட்டம் மறக்க முடியாது. குறிப்பாக இந்தக் காட்சியில் உணர்ச்சி வசத்துடன் அவர்கள் வரவேற்றது காணொளியாக நம் பார்வைக்கு
http://youtu.be/8QGcROdOqDc
நன்றி நமது அருமை நண்பர் விஜயகுமார் அவர்களுக்கு
அவருடைய மற்ற காணொளிகளுக்கு - http://www.youtube.com/channel/UCo0H...?feature=watch
ராகவேந்திரன் சார்,
அருமையான தலைவரின் அபூர்வ நிழற்படங்கள். தலைவர் மேல் பாசம் வைத்துள்ள இன்றைய இளைஞர்கள் பலர் தங்கள் fb யில் தலைவரின் அபூர்வ நிழற்படங்களை வெளியிடுவது மிக்க சந்தோஷம் தருகிறது.
பிறந்த குழந்தையையும் தன்னை ரசிக்க வைக்கும் பேராற்றல் கொண்டவரல்லவா நம் திலகம்!
இது போன்ற அபூர்வ புகைப்படங்களை தேடிக் கொணர்ந்து இங்கே அளித்து சந்தோஷப்படுத்துவதற்கு நன்றி!
அளப்பறை ஆர்ப்பாட்டங்கள் நம் ஆண்டவர் காவியங்களுக்கு
திரையரங்குகளில் அளப்பரை என்றால் நம் தலைவரை மிஞ்ச ஆளில்லை. கைத்தட்டல்களும், ஆரவாரமும், பூமாரி பொழிதலும், காட்சிக்குக் காட்சி கரகோஷங்களும், நூற்றுக்கணக்கானவர் இருக்கைகளில் அமராமல் ஸ்கிரீன் அருகிலேயே நின்று மகிழ்ச்சித் தாண்டவங்கள் ஆடுவதும், தலைவரை தொட்டுக் கும்பிடுவதுமாக கொஞ்ச நஞ்ச அட்டகாசமா என்ன! அத்தனை ஆதாரப் பதிவுகளும் நம்மிடம் உள்ளன. திரையரங்கின் உள்ளேயும் வெளியேயும் நம் நடிகர் திலகத்தின் படங்களுக்குக் கிடைக்கும் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் அன்றுமுதல் இன்றுவரை ஒரு சாதனையாகவே தொடர்கிறது. இனியும் அப்படித்தான். பாருங்கள் 'புதிய பறவை' சாந்தியில் வெளியானபோது நம் ஆட்கள் செய்யும் ரகளைகளை.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sNGCaYhob8I
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ajgfdLFtKrE
'கௌரவம்' சாந்தியில்
http://www.youtube.com/watch?v=viTgCCOsBTo&feature=player_detailpage&list =UUzu2kbRXnmwh4-gNJWeCCdg
'வசந்த மாளிகை' ஆல்பர்ட்டில்.
http://www.youtube.com/watch?list=UUzu2kbRXnmwh4-gNJWeCCdg&v=HDht5LxmRsM&feature=player_detailpage
'வசந்த மாளிகை' பெங்களூரூ நடராஜில்
http://www.youtube.com/watch?v=eBFhIrsUQfQ&feature=player_detailpage&list =UUzu2kbRXnmwh4-gNJWeCCdg
'கர்ணன்' சாந்தியில்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=qIeCwcLFCB4&list =UUzu2kbRXnmwh4-gNJWeCCdg
இன்னும் ராஜபார்ட் ரங்கதுரை, திருவருட்செல்வர், எங்கள் தங்க ராஜா, மன்னவன் வந்தானடி, சொர்க்கம், என்னைப் போல் ஒருவன் என்று அப்லோட் செய்யப்படாத ஆர்ப்பாட்டங்கள் ஏராளமாய் உள்ளன. மேற்கூறியவை சில சாம்பிள்ஸ்தான்.
'தர்த்தி'
காணக் கிடைக்காத தலைவர் நடித்த அபூர்வ இந்திப்படமான 'தர்த்தி' திரைப்படத்தின் காட்சிகள் இதுவரை காணாதவர்களுக்கு. பார்த்தவர்களுக்கு மீண்டும் ஒருமுறை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு
http://www.youtube.com/watch?v=lZBZt40ZhZ4&feature=player_detailpage&list =UUzu2kbRXnmwh4-gNJWeCCdg
http://www.youtube.com/watch?v=A0plsvQDcbA&list=UUzu2kbRXnmwh4-gNJWeCCdg&feature=player_detailpage
http://www.youtube.com/watch?v=crCsNMnQ4s8&feature=player_detailpage
http://www.youtube.com/watch?v=SzIdXkNHOdY&list=UUzu2kbRXnmwh4-gNJWeCCdg&feature=player_detailpage
டியர் நடிகர் திலகம் 360 டிகிரி சௌரி சார்
தங்களுடைய புதிய தொடர் புதிய கோணத்தில் நடிகர் திலகத்தின் சிறப்பை அணுகுவது வித்தியாசமாகவும் சிறப்பாகவும் உள்ளது. இதனைத் தாங்கள் விரிவாக எழுதுங்கள். ஏற்கெனவே இங்கு தொடங்கியதை அப்படியே இங்கேயே தொடருங்கள். காலப் போக்கில் புதிய திரியைத் தேட வேண்டியதாகி விட்டால் தங்களுடைய கடினமான உழைப்பு தெரியாமல் போய் விடும் வாய்ப்புள்ளது. எனவே புதிய திரிக்குப் பதில் இங்கேயே தொடர்ந்து, ஒவ்வொரு 10 பதிவுக்கும் இங்கே ஒரு முறை இணைப்புகளை அளித்து விட்டால் போதுமானது. இதனைப் பற்றிய குறிப்பினை தங்களுடைய signature பகுதியில் பதிவிட்டால் நினைவூட்டலாக இருக்கும். எனவே புதிய திரியினை இதனுடன் இணைத்து விடுமாறு வேண்டுகிறேன். இது மேலும் மேலும் பலர் படிக்க வேண்டிய தொடர் என்பதால் இந்த வேண்டுகோள்.
இது பற்றி நமது மற்ற நண்பர்களின் கருத்தையும் அறிய ஆவலாயுள்ளேன்.