Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16
முரளி சாரின் கனிவான கவனத்திற்கு
தலைமுறைகள் சிந்தை மகிழ்ந்து தலைவணங்கும் நடிப்பிலக்கணத் தந்தையின் அடிமட்டப் புகழார்வலனாக அவர்தம் மாட்சிமை நிறைந்த திரிகளின் வரிசையில் பதினாறாவதாக வரும் திரித் தொகுப்பினைத் தொடக்கி வைக்கும் பெருமைப் பேற்றினையும் நடிப்புத் தெய்வத்தின் காலடி பாத பூஜை மலராக சமர்ப்பிப்பதில் உவகை கொள்கிறேன் !!
மங்களகரமான நாதஸ்வர சக்கரவர்த்தியே திரியை ஆரம்பித்து வைக்கட்டுமே !!
https://www.youtube.com/watch?v=cPfu1r_NUjw
Quote:
உலகில் ஜனித்த அனைத்து மனிதருக்கும் மாதா பிதா குரு நடமாடும் கண்கண்ட தெய்வங்களே !!
பத்துமாதம் சுமந்த அன்னையின் மீது நன்றி மேலிடும் பாசம் , வழிநடத்தும் தந்தையின்பால் தோன்றும் மதிப்புக் கலந்த அன்பு, எழுத்தறிவித்த இறைவராம் ஆசிரியப் பெருமக்கள் மீது உண்டாகும் மரியாதை, அனைத்து ஜீவ ராசிகளுக்கும் வாழ்வளிக்கும் இறைவன் பால் ஏற்படும் பக்தி....இவையனைத்தும் என் வாழ்வில் நான் உணர்ந்தது எனக்கு எல்லாமுமான என் ஆத்ம ஆசான் நடிகர் திலகத்திடமே !! நினைக்காத கணமில்லையே... ஊனோடும் உதிரத்தோடும் உணர்வோடும் உயிரோடும் கலந்துவிட்ட எம் தலைவரே!!
வாய்ப்பினை நல்கிய மதிப்புக்குரிய நடிகர்திலகம் திரிகளின் ஆசான் முரளி சாருக்கும் எனது மனத்திரையில் எழுத்துப் பாதை வழிகாட்டியான ராகவேந்தர் சாருக்கும் எழுத்தின் வலிமையையும் வரையறைகளையும் எனக்குப் போதி மரமாக ஞானம் புகட்டிட்ட நெய்வேலி வாசுதேவன் சாருக்கும், துவண்ட காலங்களில் ஆக்கபூர்வமாக என்னை ஊக்குவித்து பாதையமைத்துக் கொடுத்த ரவிகிரண் சூர்யா சாருக்கும், திரியின் நல்மந்திரியாக நல்லாசிரியராக அவ்வப்போது நன்மைக் குட்டு வைக்கும் கோபால் சாருக்கும், எழுத்துக் கலைவாணத்துவத்தின் ஏகபோக சக்கரவர்த்தியாக மனம் கவர்ந்திட்ட சின்னக்கண்ணன் சாருக்கும், நல்ல நண்பராக மனோதைரியம் வளர்த்து கைகொடுத்த ஹைதராபாத் ரவி சாருக்கும், தூண்டு கோலாக பின்னணியில் இருந்து சுடர் தூண்டிய கோபு சாருக்கும், என் மன ஓட்டங்களை பகிர்ந்து கொண்டு புரிதலுடன் பரிவு காட்டிய திருச்சி ராமச்சந்திரன் சாருக்கும் மனம் திறந்த கருத்துக்களை பகிர்ந்து தெளிவுற உதவிய சித்தூர் வாசுதேவன் சாருக்கும் , பெருந்தன்மையாளராக நட்பு பாராட்டிய ராகுல்ராம் சாருக்கும்,ஆதரவளித்து பெருமைப்படுத்திய ராமஜெயம் சாருக்கும், மனந்திறந்த வாழ்த்துத் தூவல்களை அளித்திட்ட கல்நாயக் சாருக்கும், மன நிறைவினை வெளிப்படுத்தி ஊக்கமளித்த SSS சாருக்கும், தெளிந்த சிந்தனை சிதறல்களை அளித்திட்ட ஜோ சாருக்கும், ஆணித்தரமான பதிவுகளில் மனம் அள்ளும் ஆதிராம் சாருக்கும், பரபரப்பான பதிவுகளில் பட்டையை கிளப்பிய பட்டாக்கத்தியாருக்கும் என்றும் பரிவுடன்எண்ணங்களைப் பகிரும் சிவா சாருக்கும், இனிய நண்பர் கோவை டாக்டர் ரமேஷ்பாபு சாருக்கும் , மதிப்புக்குரிய ராதாக்ருஷ்ணன் சாருக்கும், பெங்களூர் ஹரீஷ் செந்தில் சாருக்கும் .....என்றும் என் நன்றியறிதல்கள்.
நட்புறவுக்குப் பாலமமைத்திடும் மக்கள் திலகத்தின் திரி நண்பர்கள் இதமான இனிமையான பதிவுகளின் உருவகமான எஸ்வீ சாருக்கும் , தனிப்பட்ட பாணியில் முத்திரை பதித்து நட்பு பாராட்டும் பண்பாளர் கலைவேந்தன் சாருக்கும் , இனிய நண்பராக இனியவை கூறலின் கனி கவர்ந்திட்ட யுகேஷ் பாபு சாருக்கும், அன்பு நெஞ்சம் கொண்டு அரவணைக்கும் முத்தையன் அம்மு சாருக்கும் , திரி மாண்பு வழுவிடாத சைலேஷ் சாருக்கும்இதயம் கனிந்த நன்றியறிதல்கள்
காதல் மன்னரின் திரி சார்ந்த ஊக்குவிப்பாளர் ராஜேஷ் அவர்களுக்கு என் தனிப்பட்ட நன்றியறிதல்கள்
புதுமைப் புயல்களாய் திரியில் மையம் கொண்டு நடிகர்திலகத்தின் புகழ் கிரணங்களை சிதறவிட்டு நமது மனக்கரைகளை கடக்கும் கோவை அரிமா செந்தில்வேல் அவர்களுக்கும் மதுரை சுந்தராஜன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!
என் மானசீக வழிகாட்டிகள் ......அனைவரின் அன்பான ஆசி வேண்டுதல்களோடு வீரபாண்டிய கட்ட பொம்மனாரின் மெய் சிலிர்க்கும் வசன சங்கநாதங்கள் மீள் வெளியீடாக கொடி நாட்டப் போகும் இப்பொன்னான தருணத்தில் திரி 16 துவக்குவதில் பெருமையை நடிகர் திலகத்தின் காலடிகளில் சமர்ப்பிக்கிறேன் !!
https://www.youtube.com/watch?v=Fm7QOXpd3jU
Quote:
காலமும் கடமையும் தவறாத நடிப்பு ராஜ்ஜியத்தின் கர்மவீரர் நடிகர்திலகத்தின் சிங்கநாத உருவகத்தின் உறுமலோடு வரும் காலங்களில் திரி நண்பர்களின் பதிவுகள் துடிக்கும் துப்பாக்கிகளின் சீறி கிளம்பி வெடிக்கும் தோட்டாக்களாக தூள் பரத்த ஒரு சிலிர்ப்பான ஆரம்பமாக இருக்கட்டுமே!!
ஆனாலும் அவை திரியை அடையும் போது.....அர்ஜுனனின் சரமாரி அம்புமாரி கர்ணனின் நெஞ்சில் மலர்மாரியாய் விழுந்தது போல மலர்மாலைகளாகவே... பூங்கொத்துக்களாகவே..... மலர்ப் படுக்கைகளாகவே மாறி பூங்காற்றில் இனிமை மணம் கோர்க்கட்டும் என்பதே நான் என்றும் விழையும் புரிதலுடன் கூடிய பரிவான சமாதான அன்புப் பாதை !!
https://www.youtube.com/watch?v=nrLyllumxts
https://www.youtube.com/watch?v=NFxyzd09Kaw
விறுவிறுப்பாக வீறுநடை போட்ட பதினைந்தாவது திரியைத் துவக்கி வைத்துப் பெருமைப் படுத்திய நடிகர் திலகத்தின் போர்வாள் K.C. சேகர் சாருக்கு மனமுவந்த நன்றிகள் !!
Quote:
நமது மன மண்டபத்தில் சிம்மாசனமிட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நடிப்புச் சக்கரவர்த்தி தனது மணி மண்டபத்தில் கோலோச்சுவதைக் காண தவமிருக்கிறோம் !