Let us discuss about sathyaraj films. Like his films, anything or about anybody can be discussed. :)
Printable View
Let us discuss about sathyaraj films. Like his films, anything or about anybody can be discussed. :)
amaidhipadai!
"erumba kooda kolla bayapadra avalukke ivlo irundhuchunna.....manusanaye erumba nenachu koldra enaku evlo irukkum"
Balu Thevar of Vedham Puthithu was one terrific performance !!!! :P ... That movie is there in my top 10 fav movies :D ....
He would have potrayed the old man character with such ease !! :notworthy: ... One of my most fav performance as well ....
I will be running out of words to describe that movie and him !
"AnbE sivam enraal avar kaiyil aEn soolayutham?" :wink:
The politician character in Amaidhi Padai was tailor-made for him. Satyaraj's casual demeanour is what makes the character so memorable.Quote:
Originally Posted by nilavupriyan
Satyaraj, the politician gets up from the floor swaying, on seeing his son.
Son: "Enna thalladura? vayasayiduchilla.."
Father: "illae, mabbu.. ithana round adichuum mabbu eralainna indha keragaththa edhukku kudikkanum?"
arasiyal pindriyeda magane...nee mattum namma katchila serndheena...naan thhan thalaivar...nee kopase!Quote:
Originally Posted by kannannn
evanavadhu edhuthana...assu...mannipu kaditham kuduthana..ussu..assu ussu...ivlothanda mavane arasiyale
:clap: I expected a thread for this guy .. who is good in political satires in his movies ! will share infos
The best of all his movies ... I would rate Amaidhi Padai :clap:
Every dialogue in that movie got life by his excellent delivery ! he really did justice to the role of Amavasai or Nagaraja Chozhan ...
My favorites start right from his cameo in Muthal Mariyaathai.
summa keLangu maadhiri iruppA, ippo onnum kelaDu kiLasu thatti pOyiraliyE
My favourites are Vedam Pudhidhu, KKK, Amauthi padai and Nadigan...
Satyaraj and Koundamani combination nakkals are :rotfl:
Whoa! I didn't expect a thread for Sathyaraj.
I am a big fan of his. Always thought of it as a guilty pleasure, because...let's admit it...he made more crappy movie than good ones. But when he is good, he is really good.
What amazes me is the way he had been surviving all these years. With wig and sometimes fake moustache, and being too tall, too muscular, can't dance, stiff fighting, etc. Amazing isn't it.
But if there is one thing that belongs to Sathyaraj, it has to be the Lollu talk. And let me tell you, it takes brain to understand his sarcasm, teases, etc.
Take Maha Nadigan. Those who don't know what is going on the film industry and politics, will never get the jokes.
Of recent, I think he did well in Maran. Nothing great about the film, except for Sathyaraj's performance. He shows that he still has the 'it' factor.
I never wanted to meet stars if I were to come to Chennai. It used to be Sivaji Ganesan. Now, if given chance, I'd definitely like to meet Sathyaraj...as I hear that he is fun to be with. I have seen his interviews and boy, he is really funny.
If this thread is alive, I shall discuss further some of his good movies.
Amaidhipadai:
MLA sathyaraj: telephone'a kandupidichadhu ennamo graham bellungara oru america vinyaaniya irukkalaam, aana adhula eppadi ottu kekkuradhunnu indhiyaavukkae kaththukuduthadhu naandhaan :lol:
chanceless casual acting in this film
hope his periyar movie will be a sure shot box office hit.
Political Biographies hasn't been too hot with tamils..Quote:
Originally Posted by asan
Iruvar, Kamaraj n all didn't do well at all..
Groucho,
I have been expecting you in this thread,since I know you are a big fan of sathyaraj..Pls continue with your interesting posts.
One of my fav Sathyaraj movie is Kadalora Kavithaigal from Bharathiraja... Perhaps the only love story movie that Sathyaraj has acted till date! Up until this movie most of the directors were dwelling on his charisma and causal dialogue delivery. For the first time, his histrionic talent were brought to the fore by this movie. IMO, it was one of the finest performances from Sathyaraj! Makkal En Pakkam - a pucca action movie alongside Raghuvaran ensured "hero" status for this talented actor who is versatile in playing multi-faceted roles - be it a hero or a villian or a "nakkal" comedian or even a character artiste! Of course I can't forget the famous enna ma Kannu dual with Rajini and the classic Tagudu Tagudu dialogue in Kaakhi Sattai :thumbsup:
http://www.dailythanthi.com/magazines/veli_cinema.htm
மீண்டும் சத்யராஜ்-கவுண்டமணியின் `கலக்கல் காமெடி'
சத்யராஜ்-கவுண்டமணி-மணிவண்ணன் கூட்டணியில், பல படங்கள் வெற்றி பெற்றுள் ளன. அந்த வரிசையில், `கலக்கல் காமெடி'யுடன் உருவாகி வருகிறது, `பொள்ளாச்சி மாப்ளே.'
இந்த படத்தில் சூசன் கதாநாயகியாக நடிக்க, பாலு ஆனந்த், டி.பி.கஜேந்திரன், வினுசக்ர வர்த்தி, அனுமோகன், அபிநயஸ்ரீ, கும்தாஜ் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.
பொள்ளாச்சி சந்தையை மையமாக கொண்ட கதை இது. அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, தேவா இசையமைத்து இருக்கிறார்.
`மங்கை' டெலிவிஷன் தொடரை தயாரித்த அரிராஜன், பிரியங்கா ஆர்ட் புரொடக்ஷன் சார்பில் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். டைரக்டர் அகத்தியனிடம் உதவி டைரக் டராக இருந்த லட்சுமணன், கதை-திரைக்கதை-வசனம் எழுதி, டைரக்டு செய்து இருக்கிறார்.
படம், அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.
I liked him as kadalora kavithaigaL
Good enough in POOVIZHI vaasalilE
Annanagar muthal thevu was SO-SO
baluthEvar in vetham puthithu was his crown.
I kinda tolerated him in BRAHMA because I watched with some friends of mine (memories good memories )
i like pakaivan summa nakkalu.
adavdi,has released!
Sathyaraj has done many crappy film. They are usually tolerable because of him.
But Adavadi is the first Sathyaraj film I watched where I felt like I need to put my head in the toilet bowl and flush so that it can clear the dirt in the brain...just watching the first half an hour. The VCD is still on the shelf, collecting dust, mites, and longing for a new owner. Anyone interested?
I hope Sathyaraj himself has watched this film. To think that it came out at the same time as Periyar. Let's say through Periyar he gets 7/10 for performance, with Adavadi he gets -9/10. So, his score is -2. He has to work harder in better films now. Poor guy. I hope the days of crappy film are over for him.
Thanks for the warning. Here's some some reliefQuote:
Originally Posted by groucho070
Sathyaraj rocked in adhiradi. It flopped bcos it was not marketed properly.
Similarly he gave powerhouse performances in madurai veeran enga samy, azhagesan, aalukku oru aasai, vadyar veettu pillai & vandicholai chinrasu.
Dr. SathyaRaj - Vazhga
http://www.dailythanthi.com/article....date=7/12/2007
சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 16-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு இஸ்ரோ தலைவர் மாதவன்நாயர் தலைமை தாங்கி பட்டங்களை வழங்கினார். பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் முன்னிலை வகித்தார். இளநிலை படிப்பை முடிந்த 1,134 மாணவ-மாணவிகளுக்கும், முதுநிலை பட்ட படிப்பை முடித்த 1,185 பேருக்கும் விழாவில் பட்டம் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து கலையுலகில் சேவை செய்ததற்காக நடிகர் சத்யராஜுக்கும், ஒவ்வொரு துறையிலும் சேவை செய்த வகையில் டாக்டர் மயில்வாகண நடராஜன், எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் எம்.பி.நிர்மல், திரைப்பட இசைமைப்பாளர் தேவா ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
devavukku doctor pattama?
Enna kodhumai saar ithu?
he should share with layaraja, MSV, shanker ganesh etc., etc.,, etc.,.
He has lifted so many of their tunes.
வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(811)
சத்யராஜ் சினிமா தயாரிப்பு நிர்வாகி ஆனார்
நாடகத்தில் நடித்துக்கொண்டே சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு தேடினார் சத்யராஜ். ஆனால் கிடைத்ததோ தயாரிப்புத் துறையில் நிர்வாகம் பார்க்கும் வாய்ப்பு!
இதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:-
"கோமல் சுவாமிநாதன் இயக்கிய "ஆட்சி மாற்றம்'', "சுல்தான் ஏகாதசி'', "கோடுகள் இல்லாத கோலங்கள்'' என்ற மூன்று நாடகங்களிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த மூன்று நாடகத்திலும் நடித்ததற்காக எனக்கு நாடகம் ஒன்றுக்கு பத்து ரூபாய் வீதம் 30 ரூபாய் தந்தார்கள்.
இந்த 30 ரூபாயில் 10 ரூபாய்க்கு சுவீட் வாங்கினேன். என்னை நாடகத்தில் சேர்த்துவிட்ட நடிகர் சிவகுமார் அண்ணன் வீட்டுக்கு போனேன். நடிப்புக்கு கிடைத்த என் முதல் சம்பளத்தில் அவர் வீட்டுக்கு சுவீட் வாங்கிப்போக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இப்படிச் செய்தேன்.
நான் எம்.ஜி.ஆர். ரசிகன் அல்லவா! எம்.ஜி.ஆர். கொடுத்து கொடுத்து சிவந்த கரம் கொண்டவர். அதனால் 5 ரூபாயை, தர்மத்துக்கு கொடுத்தேன். மீதி பணத்தில் நண்பர்களுடன் சினிமாவுக்கு போனேன்.
சூர்யா, கார்த்தி
நான் சிவகுமார் அண்ணன் வீட்டுக்கு போன காலகட்டத்தில் சூர்யா, கார்த்தி இருவருமே குழந்தைகள். இந்தக் குழந்தைகளும் வளர்ந்து இன்றைக்கு நடிக்க வந்துவிட்டார்கள்! கார்த்தி நடிக்க வரும் முன்பாக ஒரு வேலையில் சேர்ந்திருக்கிறார். முதல் மாத சம்பளத்தில் அவர் எங்கள் வீட்டுக்கு `சுவீட்' வாங்கிக்கொண்டு வந்தார்! அப்போதுதான் என் முதல் சம்பளத்தில் நான் அவர்கள் வீட்டுக்கு `சுவீட்'வாங்கிப்போனதை சிவகுமார் அண்ணன் தனது பிள்ளைகளிடம் சொல்லியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
நாடகத்தில் அவ்வப்போது 10 ரூபாய் சம்பளம் வந்து கொண்டிருந்தது. பணம் குறைவாக இருக்கிறதே என்று நான் கவலைப்படவில்லை. அண்ணன் மாதம்பட்டி சிவகுமார் கொடுத்த பணம்தான் இருக்கிறதே. அதை முழுவதுமாக செலவழிக்க நாளாகும். அந்த அளவுக்கு, சிக்கனமாகவே என் செலவுப் பட்டியலை வைத்துக்கொண்டேன்.
விவேகானந்தா பிக்சர்ஸ் என்ற கம்பெனி சார்பில் "ரோசாப்பூ ரவிக்கைக்காரி'' போன்ற படங்களை தயாரித்த திருப்பூர் மணி, அண்ணன் மாதம்பட்டி சிவகுமாரின் நண்பர். அவரது மைத்துனர் கே.பாலு, அந்த நாட்களில் என் நண்பராகி விட்டார். பின்னாளில் இவர் பிரபு நடிக்க மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த "சின்னத்தம்பி'' படத்தை தயாரித்தார். பாலு என்னிடம் சினிமா வாய்ப்பு வரும்போது நிச்சயம் நடிக்க வைப்பதாக சொன்னார்.
வாடகை அÛ
அப்போது நான் சென்னை தி.நகர் உஸ்மான் ரோட்டில் மாதம் 85 ரூபாய் வாடகையில் ஒரு அறையில் இருந்தேன். என் சைசுக்குதான் அந்த அறை இருக்கும். காலை முழுசாக நீட்டி படுக்க முடியாத அளவுக்கு இருந்தது அந்த அறை.
ஒருநாள் என்னைப் பார்ப்பதற்காக என் தங்கை கல்பனாவும், தங்கை கணவர் அர்ஜ×ன் மன்றாடியாரும் அங்கே வந்துவிட்டார்கள். என் அறையை பார்த்த இருவருமே கண் கலங்கிவிட்டார்கள்.
அவர்கள் அப்படி கலங்கியதற்கு காரணம் இருக்கிறது. கோயமுத்தூரில் உள்ள எங்கள் வீடு 5 கிரவுண்டு கொண்டது. ஊரில் இருந்த செல்வாக்குக்கு தொழில் துறையில் ஈடுபடலாம். உறவு முறையில் யாரைக் கேட்டாலும் தொழில் தொடங்க உதவுவார்கள். இப்படி செல்வமும் செல்வாக்குமாய் இருக்க வேண்டியவன் இப்படி எங்கோ ஆறு அடி ரூமுக்குள் அரைகுறையாக முடங்கிக் கிடக்கவேண்டுமா என்ற கவலை அவர்களுக்கு.
என் சித்தி இந்திராணி (அம்மாவின் தங்கை) சித்தப்பா துரைராஜ். ஊரில் சித்தி குடும்பமும் எங்களுடன்தான் இருந்தது. அம்மா மாதிரியே என் மேல் அன்பு காட்டி வளர்த்தவர் சித்தி. நான் சென்னையில் சரியான இருப்பிடம்கூட இல்லாமல் சிரமப்படுவதாக சித்தப்பாவுக்கு சொல்லப்பட்டதும், அவர் உடனே சென்னைக்கு வந்து விட்டார். "கோவைக்கு வா! உனக்கு தொழில் தொடங்க ஏற்பாடு செய்கிறேன்'' என்று அழைத்தார். நான்தான் சித்தப்பாவிடம் பிடிவாதமாக, "நிச்சயம் சினிமாவில் எனக்கு வாய்ப்பு வரும். அதுவரை முயற்சி செய்கிறேன்'' என்று சொல்லிவிட்டேன்.
ஓவியப்போட்டி
நாடகத்திலும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் எழுத்தாளர் மணியன் நடத்திய பத்திரிகையில் சிறுகதைக்கு முக ஓவியப்போட்டி அறிவித்தார்கள். ஓரளவு நல்ல முகவெட்டு கொண்டவர்களை மாடலாக ஏற்றுக்கொண்டு அந்த முகங்களை தொடர் கதைக்குள் கொண்டு வருவார்கள். இப்படி பத்திரிகை மூலம் பிரபலமாகும் முகம், நாளடைவில் சினிமா வாய்ப்புக்கும் உரியதாகி விடும்.
சரி, இதாவது நடக்கட்டும் என்று என் மாதிரியே நல்ல வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருந்த நண்பர் ராஜ்மதனும் நானும் அந்த `ஓவிய முகத் தேர்வுக்கு போனோம். (இந்த ராஜ்மதன் ரஜினிக்கும் மிகச்சிறந்த நண்பர்) ஏராளமான பேர் திரண்டு வந்திருந்த இந்த போட்டியில் நாங்கள் முதல் ரவுண்டிலேயே ஓரம் கட்டப்பட்டோம்.
வெறுத்துப்போயிற்று எனக்கு. ஒரு பத்திரிகையில் படம் வரையக்கூட உதவாத நம் முகத்தை வைத்து சினிமாவில் எப்படி நடிக்கப்போகிறோம் என்றுகூட தோன்றியது. என்றாலும் சினிமா முயற்சியில் முன்வைத்த காலை பின்வைப்பதில்லை. முயன்று பார்ப்போம். ஆனது ஆகட்டும் என்ற மனநிலையில் சினிமா வாய்ப்புக்கு முயன்று கொண்டிருந்தேன்.
தயாரிப்பு நிர்வாகி
திருப்பூர் மணி விவேகானந்தா பிக்சர்ஸ் பட நிறுவனம் தொடங்கி சிவகுமாரை கதாநாயகனாக்கி "கண்ணன் ஒரு கைக்குழந்தை'' படம் எடுக்க இருந்தார். படத்தில் அவருக்கு ஜோடி சுமித்ரா. சுருளிராஜன் - மனோரமாவும் படத்தில் இருந்தார்கள்.
இந்த படத்துக்கு என்னை புரொடக்ஷன் வேலை பார்க்கச் சொன்னார், திருப்பூர் மணி. சினிமாவுக்கும் எனக்கும் அதுவரை இருந்த இடைவெளியை இந்த வேலை குறைக்கும் என்ற நம்பிக்கையில் வேலையை ஒப்புக்கொண்டேன்.
இந்த சமயத்தில் பிரபல கேமிரா மேனாக இருந்த என்.கே.விஸ்வநாதனிடம் கே.பாலு உதவியாளராகச் சேர்ந்தார். பாலு மூலம் எனக்கு என்.கே.விஸ்வநாதன் சாரின் அறிமுகம் கிடைத்தது. அறிமுகம், பிறகு நட்பாகியது. அவரிடம், "நீங்க ஒர்க் பண்ற படங்களில் ஏதாவது ரோல் இருந்தா சொல்லுங்க'' என்று கேட்டுக்கொண்டேன். `சரி' என்றவர், "எதற்கும் உங்களை பல கோணங்களில் படம் எடுத்து போட்டோ ஆல்பம் ரெடி செய்து கொள்ளுங்கள். டைரக்டர் யாராவது அழைக்கும்போது உங்களை வெளிப்படுத்த இந்த ஆல்பம் உதவும்'' என்றார்.
பிரபல கேமிராமேன் இப்படி சொன்னால் போதாதா? உடனே "ஸ்டில்ஸ்'' ரவியிடம் விஷயத்தை சொல்லி, படங்கள் எடுத்தேன். அவர் போட்டுக்கொடுத்த படங்களை பார்த்ததும் நொந்துபோனேன். புகைப்பட கோணத்தில் என் படம் படுகேவலமாக இருந்தது. இந்த படங்களை சினிமா கம்பெனியில் கொண்டு போய் காட்டினால் கிடைக்கிற வாய்ப்பும் கிடைக்காது என்பது தெளிவாக புரிந்தது. அதனால் அந்தப் படங்களை தூர எறிந்துவிட்டு, பட சான்ஸ் தேடுவதை தொடர்ந்தேன். ஒருவேளை என் உயரம், அதற்கான பர்சனாலிட்டியை பார்த்துகூட ஒரு வாய்ப்பு வரலாம். போட்டோவைக் கொடுத்து, அதை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்!
சட்டம் என் கையில்
டைரக்டர் டி.என்.பாலு அப்போது "சட்டம் என் கையில்'' என்ற படத்தை இயக்கினார். கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த படம். அந்த படத்தில் ஒரு சின்ன ரோல் இருப்பதாக கேமராமேன் என்.கே.விஸ்வநாதன் சார் என்னை அழைத்துப் போனார்.
அப்போது ஏவி.எம். ஐந்தாவது புளோரில் "சட்டம் என் கையில்'' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கமல் - ஸ்ரீபிரியா நடிக்க ஒரு பாடல் காட்சியை எடுத்துக் கொண்டிருந்தார், டைரக்டர்.
பாடல் காட்சியை முடித்து விட்டு என்னை அழைத்தார், டி.என்.பாலு. அப்போதுதான் கமலஹாசனை முதன் முதலாக நேரில் பார்த்தேன். "இவ்வளவு அழகாய் இருக்கிறாரே. இவரெல்லாம் நடிக்கும்போது நாமும் ஊரில் இருந்து நடிக்க வந்திருக்கிறோமே!'' என்று எனக்குத் தோன்றியது.
என்னைப் பார்த்த டைரக்டர், போட்டோ எடுத்துப் பார்க்கவில்லை (பார்த்திருந்தால் அவ்வளவுதான்) என்னிடம், "கார் ஓட்டத்தெரியுமா?'' என்று கேட்டார். ஊரில் கார் ஓட்டக் கற்றுக் கொண்டிருந்ததால் "தெரியும் சார்'' என்றேன்.
அப்போதே மனசுக்குள் ஒரு பயம். "நடிக்கத் தெரியுமா?'' என்று கேட்காமல், "கார் ஓட்டத் தெரியுமா?'' என்று கேட்கிறாரே, என்ன அர்த்தம்? ஒருவேளை படக்கம்பெனிகளுக்கு கார் ஓட்டும் டிரைவராக தேர்வு செய்யப் போகிறாரோ என்னவோ என்று உள் மனதில் உதறல் ஆரம்பித்தது.
ஆனால் டைரக்டர் அடுத்த கேள்வியாக "பைட் (சண்டை) தெரியுமா?'' என்று கேட்டு உடனடியாக என் டென்ஷனை குறைத்தார். உடனே நான் "நான் `கராத்தே'யில் பிளாக் பெல்ட் சார்'' என்றேன்.
உண்மையில் புரூஸ்லி நடித்து அப்போது வெளிவந்திருந்த "எண்டர் தி டிராகன்'' படத்தை பார்த்த பிறகு, எல்லாருக்கும் வருகிற `கராத்தே' ஆசை எனக்கும் வந்தது. அதனால் ஒரு ஆறு மாத காலம் கராத்தே கற்றுக்கொண்டேன். ஆனால் `பெல்ட்' எல்லாம் வாங்கவில்லை. அந்த வகையில் டைரக்டரிடம் சொன்னது மட்டும் பொய்.
"டயலாக் பேசுவியா?'' டைரக்டரின் அடுத்த கேள்வி.
"பேசுவேன் சார்!''
"சின்னதாய் ஒரு வில்லன் வேஷம் இருக்கு. நாளைக்கு காலையில் வந்துரு'' என்றார், டைரக்டர்.
நாளை முதல் சினிமாவில் நடிகனாகப் போகும் சந்தோஷத்தில் அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை.''
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
(கமலஹாசனுக்கு வில்லன் - நாளை)
http://www.dailythanthi.com/article....ate=12/11/2007
he always gives his 100% regardless the quality of the movies, he was outstanding in some dud movies like milittary..
கமல் நடித்த "சட்டம் என் கையில்'':
வில்லனாக சத்யராஜ் அறிமுகம்
டி.என்.பாலு டைரக்ட் செய்த "சட்டம் என் கையில்'' படத்தில் கமலஹாசனுக்கு வில்லன் ஆனார், சத்யராஜ். இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைத்தார்.
முதல் படத்தில் அறிமுகமானது குறித்து சத்யராஜ் கூறியதாவது:-
"டைரக்டர் டி.என்.பாலு என்னைப் பார்த்த பார்வையில் நான் வில்லனாக தெரிந்திருக்கிறேன். மறுநாள் நான் அவரை சந்தித்தபோது, ''விக்கி என்றொரு வில்லன் கேரக்டர் இருக்கிறது. சின்ன கேரக்டர்தான். பண்ணுங்கள்'' என்றார்.
நானும் நடிக்கும் நேரத்துக்காக காத்திருந்தேன். முதல் நாள் எனக்கு டயலாக் எதுவும் இல்லை. மலையில் இருந்து ஓடிவருகிற மாதிரி எடுத்தார்கள்.
முதல் வசனம்
இந்தப்படத்தில் டைரக்டர் எனக்கு கொடுத்த முதல் வசனம் "எனக்கு இப்ப நேரம் நல்லா இருக்கு.''
வில்லனுக்குப் போய் இப்படியொரு டயலாக்கா என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். கதைப்படி, நான் செய்கிற கொலைக்கு கதாநாயகன் மாட்டிக் கொள்வார். அதனால், "இப்ப எனக்கு நேரம் நல்லா இருக்கு. அதனால்தான் நான் செய்த கொலைக்கு அவன் மாட்டிக்கிட்டான்'' என்ற வசனத்தை தந்து பேசச் சொன்னார்கள்.
ஏற்கனவே டைரக்டர் டி.என்.பாலு என்னிடம், "பைட் தெரியுமா?'' என்று கேட்டபோது, "தெரியும்'' என்று சொல்லிவிட்டேன். நடிக்க வந்த மூன்றாவது நாளே சென்னை வளசரவாக்கத்தில் இருந்த `ஜெய்' தோட்டத்தில் சண்டைக்காட்சி எடுப்பதாகச் சொன்னார்கள். அப்போதே எனக்கு உள்ளுக்குள் உதறல் ஆரம்பித்து விட்டது. நமக்குத்தான் `சினிமா பைட்' தெரியாதே!
அதனால், ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா சங்கரை சந்தித்து உண்மையை சொல்லி விட்டேன். அவரும் பெருந்தன்மையுடன் தனது அசிஸ்டெண்டை என்னுடன் மெரினா பீச்சுக்கு அனுப்பி வைத்தார். அந்த உதவியாளர் எனக்கு பீச் மணலில் `சினிமா பைட்' கற்றுக் கொடுத்தார். அதாவது கதாநாயகனிடம் அடிவாங்குவது போல் நடிக்கும்போது அடிவாங்காமல் எப்படி தப்பிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார்! அப்போதுதான், ஸ்டண்ட் காட்சியில் `டைமிங்' எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன்.
கமலுடன் சண்டைக்காட்சி
மறுநாள் படப்பிடிப்பில் கமல் சாருடன் சண்டைக்காட்சி. முந்தின நாள் பெற்ற பயிற்சி உதவியாக இருந்தது.
பொதுவாக, சண்டைக் காட்சியின்போது `வாட்ச்' போட்டு நடிக்க மாட்டார்களாம். அது எனக்குத் தெரியாது. சண்டைக்காட்சி முடிந்த நேரத்தில், நான் போட்டிருந்த 600 ரூபாய் வாட்ச் உடைந்து போய்விட்டது! கமல் சார் இதைப் பார்த்ததும் `அடடா! உங்களிடம் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். கம்பெனி வாட்சை போட்டுக்கொண்டு சண்டைக்காட்சியில் நடித்திருக்கலாமே'' என்றார்.
இப்படி 600 ரூபாய் வாட்சை உடைத்துவிட்டு, நடிப்புக்கு 500 ரூபாய் `செக்' வாங்கினேன். 1975 வாக்கில் 500 ரூபாய் என்பது பெரிய தொகை. அந்த செக்குக்காக பாங்கியில் கணக்கு ஆரம்பித்தேன். முதல் சம்பளத்தில் அம்மா, சின்னம்மாவுடன் என் 5 தங்கைகளான கல்பனா, ரூபா, நந்தினி, அகிலா, அபராஜிதா ஆகியோருக்கும் புடவைகள் எடுத்துக் கொடுத்தேன்.
100-வது நாள்
முதல் படமே நூறாவது நாள் கண்டதில் எனக்கும் மகிழ்ச்சி. இந்த விழாவை சென்னை நிïஉட்லண்ட்ஸ் ஓட்டலில் கொண்டாடினார்கள். கலைஞர் தலைமை தாங்கி விருதுகள் வழங்கினார். எனக்கும் கேடயம் கிடைத்தது.
இதற்கிடையே, தயாரிப்புத் துறையில் நான் பணியாற்றிய "கண்ணன் ஒரு கைக்குழந்தை'' படம் ரிலீஸ் ஆயிற்று. இந்தப் படத்தில் சிறு வேடத்தில் நடித்தும் இருந்தேன். அதனால் டைட்டில் கார்டில் நடிகர்கள் பட்டியலில் `நடிகர் சத்யராஜ்' என்று வரும். டெக்னிஷியன் பட்டியலில் அலுவலக நிர்வாகம் என்ற இடத்தில் ரெங்கராஜ் பி.எஸ்.சி. என்று வரும்.
பெயர் மாற்றம்
பெற்றோர் எனக்கு வைத்த பெயர் ரெங்கராஜ்தான். சினிமாவில் அறிமுகமாகும் போது, எனக்கு நானாக வைத்துக்கொண்ட பெயர்தான் சத்யராஜ். அண்ணன் மாதம்பட்டி சிவகுமாரின் மகன் பெயர் சத்யன். (இப்போது சத்யனும் நடிகராகி விட்டார்) அந்த `சத்ய'னில் இருந்து `சத்ய'வையும் ரெங்கராஜில் இருந்து `ராஜை'யும் எடுத்துக்கொண்டு சத்யராஜ் ஆகிவிட்டேன்!
நடிகனாக சத்யராஜ் என்றிருந்தாலும், அலுவலக நிர்வாகம் என்ற இடத்தில் ஒரிஜினல் பெயரை கல்வித் தகுதியுடன் போட விரும்பினேன்.
இப்படி ஒரு படத்தில் 2 பெயரில் தனித்தனி பிரிவில் பெயர் வந்தது அனேகமாக எனக்கு மட்டும்தான் இருக்கும்.
"சட்டம் என் கையில்'' படம் நன்றாக ஓடியும், தொடர்ந்து எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. நடிகர் சிவகுமார் சிபாரிசில் "முதல் இரவு'', "ஏணிப்படிகள்'' போன்ற படங்கள் கிடைத்தன. டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் தனது "காதலித்துப்பார்'' என்ற படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.
"முதல் இரவு'' படத்தை தயாரித்த கோவை செழியன் எனக்கு தூரத்து உறவினர். ஆனாலும் நடிகர் சிவகுமார் அண்ணன்தான் என்னை படக்கம்பெனிக்கு அழைத்துச் சென்று வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். இதெல்லாம், திருப்பூர் மணி ஆபீசில் தங்கிக்கொண்டு, தயாரிப்பு வேலையையும் பார்த்துக் கொண்டிருந்தபோது நடந்தது.
டைரக்டர் பி.மாதவன் அப்போது "தங்கப்பதக்கம்'', "வியட்நாம் வீடு'' என்று சிவாஜி படங்களை இயக்கி, பெரிய பெயரோடு இருந்தார். அவர் சிவகுமார் - ஷோபா நடித்த "ஏணிப்படிகள்'' படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் நடிகர் சிவகுமார் அண்ணன் உபயத்தில் ஷோபாவின் அண்ணன் வேடம் எனக்கு கிடைத்தது. அதுவரை நான் நடித்த படங்களில், என்னை `பளிச்'சென்று வெளிப்படுத்திய படம் இதுதான்.
என்றாலும், இந்தப்படத்தில் நடித்த போது இன்னொரு காரியமும் செய்தேன். படத்தின் வில்லன் ஜெய்கணேஷின் "பைக்'' சேஸிங் காட்சியில், அவருக்கு நான் `டூப்' ஆக நடித்தேன். ஏற்கனவே கார் ஓட்டிய அனுபவம் எனக்கு இருந்ததால், இந்த `பைக்' சேஸிங் சிறப்பாக அமைந்தது.
போராட்டம்
நான் பல போராட்டங்களைக் கடந்துதான் நடிகனானேன். வந்த பிறகும் கிடைத்ததோ வில்லத்தனமான வேடங்களே. அதிலும் `கொஞ்ச நேர' வில்லன்தான் அதிகம்.
`இப்படியான கேரக்டர்களில் நடிக்கத்தான் சினிமா சினிமா என்று அலைந்தாயா!' என்று என்னிடம் உறவினர்கள் வருத்தத்துடன் கூறினார்கள். அவர்களின் `அப்செட்'டுக்கு மத்தியிலும், தொடர்ந்து சினிமாவில் நான் நீடிக்கக் காரணம், அண்ணன் மாதம்பட்டி சிவகுமார்தான். என் வளர்ச்சியில் என் அளவுக்கு அவருக்கும் நம்பிக்கை இருந்தது.
திருமண ஏற்பாடு
சினிமாவில் சின்னதாய் ஒரு வளர்ச்சி நிலையில் நான் இருந்த சமயத்தில், வீட்டில் எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள். பெண் பார்க்க அவசியமில்லை. மாதம்பட்டி சிவகுமார் அண்ணனின் அக்கா மகள்தான் எனக்கு மணப்பெண் என்று, ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தார்கள்.
பெண்ணும் பிறந்தது முதலே எனக்குத் தெரிந்தவர். குழந்தை பிறந்து தொட்டிலில் போட்டிருந்தபோது, நான் போய் எட்டிப் பார்த்தேன். அப்போது பெண்ணின் அப்பா (என் மாமா சண்முகசுந்தரம்) என்னிடம், "மாப்பிள்ளை இப்போதே பெண்ணைப் பார்க்க வந்துவிட்டார்'' என்று கிண்டல் செய்திருக்கிறார்.
இப்படி உறவு முறையில் பெண் இருந்தாலும், சினிமாவில் சொந்தக் காலில் நின்ற பிறகுதான் திருமணம் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
(சத்யராஜ் திருமணம் - நாளை)
http://www.dailythanthi.com/article....ate=12/12/2007
டைரக்டர் மணிவண்ணன் இயக்கிய "நூறாவது நாள்'' படத்தில் மொட்டைத் தலை வில்லனாக நடித்து பிரபலமானார் சத்யராஜ். இதைத் தொடர்ந்து, அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன. ஒரே ஆண்டில் 27 படங்களில் நடித்தார்.
தனது கலைப்பயணத்தின் வளர்ச்சி குறித்து சத்யராஜ் கூறியதாவது:-
"வாய்ப்புகள் கிடைப்பது அரிதாக இருந்த நேரம். அப்படிக் கிடைத்தாலும், திறமையை வெளிப்படுத்த முடியாத சின்ன ரோல்கள்தான் வந்து கொண்டிருந்தன.
சுந்தர்ராஜன் அறிமுகம்
இப்படி உள்ளும் புறமுமாய் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜனின் அறிமுகம் கிடைத்தது.
ஆர்.சுந்தர்ராஜன் அப்போது "பயணங்கள் முடிவதில்லை'' என்ற பெரிய வெற்றிப்படம் கொடுத்திருந்தார். என்னை ஒரு நடிகனாக மட்டுமின்றி ஒரே ஊர்க்காரன் (கோவை) என்ற அளவிலும் என்னை அவர் தெரிந்து வைத்திருந்தார். ஒருமுறை கோவைக்கு ரெயிலில் போனபோது, மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் என்னிடம், அடுத்து எடுக்கப்போகும் படத்தின் கதையைக் கூறினார். நான் அந்தக் கதை தொடர்பாக எனது கருத்துக்களைக் கூறினேன். அப்போது அவர், `உங்களுக்கும் நல்ல கதை ஞானம் இருக்கிறதே' என்று சொல்லி வியந்தார். அதோடு, `நீங்கள் ஏன் கதை விவாதத்தில் கலந்து கொள்ளக்கூடாது' என்றும் கேட்டார்.
கதை விவாதத்தில் கலந்து கொண்டால், அதற்கென்று தனி சன்மானம் எதுவும் கிடையாது. என்றாலும் டைரக்டர் சொன்னது என்னை உற்சாகப்படுத்தி விட்டது. என்னாலும் கதையை உருவாக்க முடியும் என்று அவர் கருதியதால், மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
சினிமா கதை
இந்த சந்தோஷ வேகத்தில், சினிமாவுக்கான ஒரு கதையை நானே தயார் செய்தேன். கிரைம் - ஆக்ஷன் கதை. இதே காலகட்டத்தில் எனக்கு நண்பராகி இருந்த டைரக்டர் மணிவண்ணனிடம் இந்தக் கதையை சொன்னேன்.
அவர் என்னிடம் `நன்றாகத்தான் இருக்கிறது. இதை பிறகு திரைக்கதையாக தயார் செய்யலாம். என்னிடம் ஒரு கதை இருக்கிறது. அதை கேளுங்கள்' என்று கூறி, ஒரு கதையை சொன்னார்.
ஆர்.சுந்தர்ராஜன் என்னிடம் ரெயிலில் சொன்ன கதை மோகன், நளினி, விஜயகாந்த் நடிக்க "சரணாலயம்'' என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருந்தது. மணிவண்ணன் சொன்ன கதையை படமாக்க எஸ்.என்.திருமால் முன்வந்தார்.
இப்போது, எனக்குள் நடிப்பைவிட டைரக்ஷன் ஆர்வம் அதிகமாகி விட்டது. ஒரு கதை தயார் செய்யும் அளவுக்கு வந்துவிட்டேனே! இந்தக் கதையை டைரக்ட் செய்து, டைரக்ஷன் பக்கம் போய்விடலாம் என்று நினைத்தேன்.
நூறாவது நாள்
நண்பர் மணிவண்ணன் சொன்ன கிரைம் சப்ஜெக்ட்தான் "நூறாவது நாள்'' என்ற பெயரில் படமானது. இந்தப்படத்தின் கதை விவாதத்துக்கு மணிவண்ணன் என்னையும் அழைத்திருந்தார். படத்தின் கிளைமாக்சில் ஒரு மொட்டை வில்லன் வருவதாக காட்சி வைத்திருந்தார். இந்த கேரக்டருக்கு யாரைப் போடலாம் என்ற பேச்சு வந்தபோது, அந்த வேடத்தில் நான் நடிப்பது என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.
நான்தான் டைரக்ஷன் கனவில் இருக்கிறேனே! அதனால் கொஞ்சம் தயங்கவே செய்தேன். விஜயகாந்த் "சரணாலயம்'' படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில், அவரிடமும் நான் உருவாக்கிய கதையை சொன்னேன். அவருக்கும் கதை பிடித்துப்போய், அதைப் படமாக்கலாம் என்று சொல்லி விட்டார்.
இந்த நேரத்தில்தான் நூறாவது நாள் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தது.
நான் தயங்கினாலும் மணிவண்ணன் விடவில்லை. எனக்கு மேக்கப் போட்டுப் பார்த்தார். "ஆலிவுட் நடிகர் மாதிரி இருக்கீங்க, தலைவா!'' என்றார்.
இதனால் நம்பிக்கை வந்தது, சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஒரு சலூனில் மொட்டை அடித்துக் கொண்டேன். மொட்டை கெட்டப்பில் என் கேரக்டர் படமாக்கப்பட்டபோதே, அந்த கேரக்டர் பேசப்படும் என்பது தெரிந்தது.
படம் வெளியானது. பெரிய வெற்றி. என் மொட்டை கேரக்டரும் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்தப்படம் வெளிவந்த சமயத்தில், ஜெயப்பிரகாஷ் என்பவர் 7 கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவர், "நூறாவது நாள் படத்தைப் பார்த்த பிறகே இப்படி கொலை செய்யும் எண்ணம் வந்தது'' என்று சொல்லப்போக, படத்துக்கு இன்னும் `பப்ளிசிட்டி' ஆகிவிட்டது! இந்தப்படம் வெளியான சமயத்தில் குழந்தைகள் என்னை நெருங்கவே பயப்பட்டார்கள்!
24 மணி நேரம்
இந்த வெற்றியைத் தொடர்ந்து டைரக்டர் மணிவண்ணன் சூட்டோடு சூடாக அதே நிறுவனத்துக்கு, "24 மணி நேரம்'' என்று ஒரு படம் பண்ணினார். இதிலும் மோகன் - நளினிதான் ஜோடி. ஆனால் இதன் கதையமைப்பு வில்லனுக்காகவே உருவான கதை மாதிரி அமைந்திருந்தது.
இந்தக் கதையில் வரும் வில்லன் கேரக்டரில் முதலில் நான் நடிப்பதாகவே இல்லை. நான் மணிவண்ணன் சாரிடம், "படத்தின் ஜீவனே இந்த வில்லன் கேரக்டர்தான். `வீணை' பாலச்சந்தர் நடித்தால் நல்லா இருக்கும்'' என்றேன்.
மணி சார் என்னைப் பார்த்தார். அவர் என்ன நினைக்கிறார் என்பது புரியாமல், "வீணை பாலச்சந்தர் இல்லாவிட்டால் நம்ம நம்பியார்சாமி நடிக்கட்டும்'' என்றேன்.
அந்த கேரக்டரின் முக்கியத்துவம் தெரிந்து நான் இப்படி சொல்லிக் கொண்டிருக்க, அவரோ, `நீங்களே நடிச்சிருங்க தலைவா' என்றார்.
அந்த கேரக்டரில் நான் நடித்தால் சரியாக இருக்கும் என்று அவர் எண்ணினாலும், அவர் என் மீதான அக்கறையில்தான் அப்படிச் சொல்கிறார் என்று நான் நினைத்தேன். அதனால் அவரது விருப்பத்தை மறுக்கும்விதமாக, `தயாரிப்பாளர் திருமால் சார் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார். அந்த அளவுக்கு இது ஹீரோவுக்கு இணையான கேரக்டர்'என்றேன்.
அப்போதும் டைரக்டர் மணிவண்ணன் என்னை விடவில்லை. நேராக தயாரிப்பாளரை போய்ப் பார்த்தவர், `படத்தில் வரும் வில்லன் கேரக்டரில் சத்யராஜை நடிக்க வைக்கலாம் என்றிருக்கிறேன்' என்று சொன்னார். தயாரிப்பாளரும், `தாராளமாக நடிக்கட்டும்' என்று பச்சைக்கொடி காட்டினார்.
வில்லனுக்கு புது இலக்கணம் வகுத்த அந்த கேரக்டர்தான் என்னை ரசிகர்களிடம் முழுமையாக கொண்டு சேர்த்தது. இந்தப் படத்தில் நான் அடிக்கடி பேசும், "என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே'' என்ற வசனம், பட்டித்தொட்டிவரை கூட பிரபலம் ஆனது.
ஒரே ஆண்டில் 27 படங்கள்
இந்த படத்துக்குப் பிறகு நான் பிஸி நடிகனாகி விட்டேன். காலை 7 மணி தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை தினமும் 3 படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கும் அளவுக்கு பிஸியாகி விட்டேன். 1985-ம் ஆண்டில் மட்டும், நான் நடித்து 27 படங்கள் ரிலீஸ் ஆயின.
இப்படி பிஸியாக இருந்தாலும் நான் உருவாக்கி வைத்திருந்த கதையை `அம்போ' என்று விட்டுவிட முடியவில்லை. டைரக்டர் மணிவண்ணன் தெலுங்கில் படம் இயக்கப்போன நேரத்தில் என் கதையை இயக்கினார். `தர்ஜா தொங்கா' என்ற பெயரில் (தமிழில் `கவுரவத் திருடன்') உருவான அந்தப் படத்தில் சுமன் - விஜயசாந்தி நடித்தார்கள். இந்தப் படத்தில் நான் கதாசிரியர் மட்டுமே. படம் வெளியாகி 6 சென்டர்களில் நூறு நாட்களை தாண்டி ஓடியது.
இந்த வகையில், ஒரு சினிமா கதாசிரியராகவும் ஜெயித்த சந்தோஷம் எனக்கு.
இந்தப்படத்தின் கதைக்காக டைரக்டர் மணிவண்ணன் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்தார். தமிழில் `மர்ம மனிதன்' என்ற பெயரில் `டப்' செய்யப்பட்டு வெளியானது.''
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
http://www.dailythanthi.com/article....ate=12/14/2007
நடிகர் சத்யராஜ் கமலஹாசனுடன் இணைந்து நடித்த `காக்கிச்சட்டை'
"தகடு தகடு'' வசனம் பேசி புகழ் பெற்றார்
கமலஹாசன் நடித்த "காக்கிச்சட்டை'' படத்தில் வில்லனாக நடித்த சத்யராஜ், மேலும் புகழ் பெற்றார். படத்தில் அவர் பேசிய `தகடு தகடு' வசனம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
"24 மணி நேரம்'' படத்தின் வெற்றிக்குப் பிறகு, சத்யராஜின் வில்லன் நடிப்பை ரசிகர்கள் ரசிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதன் பிறகு அவருக்கு `ஜாக்பாட்'டாக அமைந்த படம்தான் "காக்கிச்சட்டை.''
தனது கலையுலக வாழ்க்கை பற்றி சத்யராஜ் கூறியதாவது:-
சொந்த வசனம்
"சினிமாவில் நான் அதுவரை போராடிய போராட்டம், "24 மணி நேரம்'' படத்திற்குப் பிறகுதான் ஒரு முடிவுக்கு வந்தது.
இந்தப் படத்துக்குப் பிறகு, என் கேரக்டர்களில் நான் பேசவேண்டிய வசனத்தை சொல்லும் இயக்குனர்கள், "இதுதான் வசனம். இதை உங்க ஸ்டைலில் பேசிக்கொள்ளுங்கள்'' என்று சுதந்திரம் கொடுத்து விட்டார்கள். எனக்குத் தெரிந்து கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.ராதா இருவரும்தான் காட்சிக்கேற்ப தங்கள் சொந்த டயலாக்கையும் சேர்த்துக் கொள்வார்கள். இந்த சினிமா ஜாம்பவான்களுக்கு கிடைத்த வாய்ப்பு எனக்கும் கிடைத்தது நிஜமாகவே சந்தோஷமாயிருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில், கமல் சார் நடித்த "காக்கிச்சட்டை'' படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் `வில்ல' பாஸாக வரும் நான் என் சகாவிடம், `தகடு எங்கே?' என்று கேட்க வேண்டும். நான் வசனம் பேசிய வேகத்தில் `தகடு தகடு' என்று இரண்டு முறை சொல்லிவிட்டேன்.
இந்தக் காட்சியில் என் நடிப்பை பார்த்த டைரக்டர் ராஜசேகர், "ஆஹா! அற்புதம். இப்படியே பண்ணுங்க'' என்றார். கமல் சாரும் என் நடிப்பை ரசித்துவிட்டு, "இதே மாதிரி படம் முழுக்க பேசினால், நன்றாக இருக்குமë'' என்று கூறினார்.
சொன்னால் நம்பமாட்டீர்கள். ஏற்கனவே அதற்கு முன் எடுத்த சில காட்சிகளை, மீண்டும் "தகடு தகடு'' என்று பேச வைத்து திரும்ப எடுத்தார்கள்.
டைரக்டர் நினைத்திருந்தால் "ஒரு தடவைதானே தகடு என்று சொல்ல வேண்டும். ஏன் இரண்டு முறை சொன்னீர்கள்?'' என்று கூறிவிட்டு `ரீடேக்' எடுக்கலாம். ஆனால், நான் இருமுறை கூறியதை அவர் ரசித்தார்; அதுமாதிரியே பேசவேண்டும் என்றார். படத்தின் கதாநாயகன் கமல் சாரும் என் வசன உச்சரிப்பை ரசித்தார். இதனால் படம் முழுக்க, நான் "தகடு தகடு'' என்று பேசினேன்.
மகத்தான வெற்றி
"காக்கி சட்டை'' பெரிய அளவில் வெற்றி பெற்றது. எனக்கும் நல்ல பெயர்.
இந்த சமயத்தில் என்னை சந்தோஷப்படுத்திய இன்னொரு விஷயமும் இருக்கிறது. அப்போது சென்னை தேவி காம்ப்ளக்ஸ், உதயம் காம்ப்ளக்ஸ் எல்லா தியேட்டர்களிலுமே நான் நடித்த "காக்கிச்சட்டை'', "நான் சிகப்பு மனிதன்'', "பிள்ளை நிலா'', "நீதியின் நிழல்'' முதலிய படங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
நானும் என்னைத் தேடிவந்த படங்கள் எதையும் விட்டுவிடவில்லை. 6 வருஷ சினிமா பசியாயிற்றே! `காய்ஞ்ச மாடு கம்பங்கொல்லையில் விழுந்த கதையாக', தேடிவந்த வாய்ப்புகளை எல்லாம் ஏற்று இரவு - பகலாக நடித்துக்கொண்டிருந்தேன்.
தேவருடன் சந்திப்பு
ஏற்கனவே நான் எடுத்திருந்த ஒரு முடிவுகூட, என் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது. சின்னச்சின்ன வேடங்களில் நான் போராடிக்கொண்டிருந்தபோது, ஒரு முறை பட அதிபர் சின்னப்பதேவரை சந்தித்தேன். அவர் எங்கள் ஊர்க்காரர். திறமையால் படிப்படியாக வளர்ந்து, சினிமாவில் உயரத்துக்கு வந்தவர். அவரை வீட்டில் சந்தித்து நடிக்க வாய்ப்பு கேட்டேன். அவர் எடுத்த எடுப்பில், "பல்டி அடிக்கத் தெரியுமா?'' என்று கேட்டார். நமக்குத்தான் நாலைந்து படங்களில் பல்டி அடித்த அனுபவம் இருக்கிறதே! அவர் வீட்டு போர்டிகோ முன்பிருந்த சிமெண்ட் தரையிலேயே பல்டி அடித்துக் காட்டினேன்.
நான் அடித்த `பல்டி'யில் திருப்திப்பட்டவர், பிறகுதான் "எந்த ஊரு?'' என்று கேட்டார். "கோயமுத்தூர்'' என்று சொன்னதுதான் தாமதம். "முருகா முருகா'' என்று தலையில் அடித்துக் கொண்டார். "ஏன் முருகா உனக்கு இந்த வேலை?'' என்று கேட்டார்.
நான் அவரிடம், "இல்லீங்க! நாலைஞ்சு படம் நடிச்சாச்சு. இனிமே இதை விட்டுட்டுப் போக முடியாது'' என்றேன்.
சிறிது நேரம் யோசித்தவர், "இப்போது நான் ரஜினியை வைத்து `அன்புக்கு நான் அடிமை' என்று ஒரு படம் எடுத்துக்கிட்டிருக்கிறேன். அதில் மோகன்பாபு வில்லன். அவர்கூட நாலு பேர் வருவாங்க. அதுல ஒருத்தனா உன்னை போடச் சொல்லவா?'' என்று கேட்டார்.
`நம்ம ஊர்க்காரனாக இருக்கிறான். நடிக்க வந்து சிரமப்பட்ட மாதிரி தெரியுது. அதனால் நம்ம படத்திலும் ஒரு வேஷம் கொடுப்போமே' என்று அவர் மனதில் எழுந்த பரிதாப உணர்வின் அடிப்படையில்தான் தனது படத்தில் எனக்கு அப்படியொரு கேரக்டரை சொன்னார்.
அந்த அன்பைப் புரிந்து கொண்ட நானும், "இல்லீங்க! இதுக்கு மேல, கூட்டத்தில் நிற்கிற மாதிரி நடிச்சா சரியா இருக்காது'' என்று சொல்லி பெரிய கும்பிடு போட்டு வந்துவிட்டேன்.
இதை இப்போது எதற்காகச் சொல்கிறேன் என்றால், கூட்டத்தில் ஒரு ஆளாக நடிக்க நான் ஒப்புக் கொண்டிருந்தால் தொடர்ந்து அதுமாதிரி வாய்ப்புகள்தான் வந்திருக்கும். நானும் சினிமாவில் இருந்தபடியே காணாமல் போயிருப்பேன்.
சிவாஜியுடன் ஏற்பட்ட அனுபவம்
தேவர் சாரிடம் எனக்கு இப்படியான அனுபவம் என்றால், சிவாஜி சாரிடம் வேறு மாதிரி! என் சித்தப்பா துரைராஜ் சிவாஜி சாரின் நெருங்கிய நண்பர். நான் சினிமாவுக்கு வர விரும்பிய நேரத்தில் சிவாஜி சாரை மட்டும் பார்க்கப் போயிருந்தால், என் சித்தப்பாவிடம் அவருக்கு இருக்கும் உரிமையில் என்னை ஊருக்கு அனுப்பி வைத்திருப்பார். ஆக, நான் யாரென்று சொல்லாமலே படங்களில் ரசிகர்கள் பேசுகிற அளவுக்கு வந்த நேரத்தில், என் 10-வது படமாக அவருடன் `ஹிட்லர் உமாநாத்' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்தப் படத்தின் முதல் இரண்டு நாட்கள் அவரைப் பார்த்ததும் மரியாதை செய்வேன். நடிப்பேன். மூன்றாவது நாள், கொஞ்சம் அவருடன் பேசுவதற்கு கிடைத்த இடைவெளியில் எங்கள் குடும்ப பின்னணி பற்றி அவரிடம் சொல்லிவிட்டேன். "ஊரில் தொழில் பண்ணி ஓஹோன்னு இருக்கலாம். அதை விட்டுட்டு படவா இங்கே என்ன சுத்திக்கிட்டிருக்கே?'' என்று சிவாஜி சார் திட்டினார்.
நான் சிவாஜி சாருடன் நடிக்கும் இந்தப்படம்தான் என் முதல் படம் என்று நினைத்ததால் இந்த திட்டு.
நான் அவரிடம், "10 படம் வரை நடிச்சாச்சு. இனிமேல் வேறு தொழில் பண்ண முடியாது. நான் ஆரம்பத்தில் உங்களை பார்க்க வந்திருந்தா அப்பவே சித்தப்பாவுக்கு தகவல் சொல்லி என்னை ஊருக்கு அனுப்பியிருப்பீங்க. அதனால்தான் உங்களை பார்க்க வராமல் இருந்தேன்'' என்றேன்.
என் கலை ஆர்வத்தை சிவாஜி சாரும் புரிந்து கொண்டார். அதன் பிறகு அவரது படங்களில் எனக்கும் சிபாரிசு செய்யத் தொடங்கிவிட்டார். தொடர்ந்து அவரது `நீதியின் நிழல்', `சிரஞ்சீவி' போன்ற படங்களில் வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தன. அதன்பிறகு சிவாஜி சாரின் `அன்னை இல்லம்' வீட்டுக்கு உரிமையுடன் போக ஆரம்பித்தேன். சிவாஜி சாரின் பிள்ளைகள் ராம்குமாரும், பிரபுவும் எனக்கு நல்ல நண்பர்களாகி விட்டார்கள். இந்த வகையில் நானும் `அன்னை இல்ல'த்தின் புதல்வன் ஆகிவிட்டேன்.
மணிரத்னம்
நடிப்பில் எனக்கென்று ஒரு பாணி அமைந்து, அதையே ரசிகர்களும் ரசிக்கத் தொடங்கியிருந்தபோது, டைரக்டர் மணிரத்னத்தின் `பகல் நிலவு' படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. நான் என் பாணியில் நடிக்கப்போக, அவரோ "எனக்கு இது வேணாம்! வேற மாதிரி வேணும்'' என்கிறார்.
"என்ன இது? இவர் என் கேரியரையே மாற்றி விடுவார் போலிருக்கிறதே! இனி புதுசாக ஒரு படத்தில் வித்தியாசமாக நடிக்கத்தான் வேண்டுமா!'' என்கிற அளவுக்கு மணிரத்னத்தின் அந்த கேரக்டர் என்னை யோசிக்க வைத்தது.
தயாரிப்பாளர் சத்யா மூவீஸ் தியாகராஜனிடம் கூட இது விஷயமாய் என் மனக்குறையை வெளியிட்டேன். அவர் என்னிடம், "இவர் ரொம்பத் திறமையான டைரக்டர்! அவர் கேட்கிற மாதிரி நடிச்சுக் கொடுங்க! அப்புறம் பாருங்க!'' என்றார்.
கதர் சட்டை, கதர் வேஷ்டியில் அரசியல் தலைவராக நான் அந்தப் படத்தில் நடித்தேன். அதாவது மணிரத்னம் சார் விரும்பிய பாணியில் என் நடிப்பு அமைந்தது. படம் வெளியானபோது, மிரட்டலான அந்த கேரக்டரையும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
"ஒரு டைரக்டரின் நடிகன்'' என்ற முறையிலும் நான் வெற்றி பெற்றேன்.''
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
http://www.dailythanthi.com/article....ate=12/17/2007
பாரதிராஜா படங்களில் சத்யராஜ்
"கடலோரக் கவிதைகள்'' மூலம் கதாநாயகன் ஆனார்
வில்லன் வேடங்களில் நடித்து புகழ் பெற்று விட்ட சத்யராஜ×க்கு பாரதிராஜாவின் "முதல் மரியாதை'' படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அந்தப் படத்தில் சிறுவேடத்தில் சத்யராஜின் நடிப்பை பார்த்த பாரதிராஜா, அடுத்து தான் இயக்கிய "கடலோரக் கவிதைகள்'' படத்தில், அவரை கதாநாயகன் ஆக்கினார்.
பாரதிராஜா படங்களில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் சத்யராஜ் கூறியதாவது:-
"நான் வில்லன் நடிப்பில் வளர்ந்த நேரத்திலும், டைரக்டர் பாரதிராஜாவின் படத்தில் நடித்துவிட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவரை போய்ப் பார்த்து சான்ஸ் கேட்டு வருவேன்.
அவரது முதல் படம் "16 வயதினிலே'' பிரமாண்டமான வெற்றி பெற்றது. இரண்டாவது படமாக "கிழக்கே போகும் ரெயில்'' படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் புதுமுகங்களுக்கு அவர் வாய்ப்பு கொடுக்கிறார் என்று தெரிந்ததும் நானும் நண்பர் ராஜ்மதனும் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு ஆபீசுக்கு ஓடினோம்.
அங்கே போனால், திருவிழா கூட்டம் போல புதுமுகங்கள் கூட்டம்! அந்தக் கூட்டத்தில் நாங்களும் கலந்தபோது முதல் ரவுண்டிலேயே எங்களை துரத்தி விட்டார்கள்.
அதன் பிறகு நானும் பட வாய்ப்பு கிடைத்து நடிக்கத் தொடங்கினேன். "கண்ணன் ஒரு கைக்குழந்தை'' படத்துக்கு அலுவலக நிர்வாக பொறுப்பிலும் இருந்தேன் அல்லவா? அப்போதெல்லாம் செட்டில் என் பார்வையில் டைரக்டர் பாரதிராஜா படுவார். இவர் படத்தில் நமக்கு எங்கே சான்ஸ் தரப்போகிறார் என்று எனக்குள் ஒரு எண்ணம் வந்து விட்டதால், கிடைக்கிற படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன்.
முதல் மரியாதை
இந்த சமயத்தில்தான் நடிகர் திலகம் சிவாஜி சாரை முதன் முதலாக பாரதிராஜா "முதல் மரியாதை'' என்ற படத்தில் இயக்கினார். படம் பற்றி திரையுலகமே பேசிக்கொண்டிருந்தது. திடீரென்று படத்தின் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்னை அழைத்து, "படத்தில் ஒரு வில்லன் வேடம் இருக்கிறது. செய்ய முடியுமா?'' என்று கேட்டார்.
கரும்பு கசக்குமா? உடனே ஒப்புக்கொண்டேன்.
படத்தின் திருப்புமுனைக்கு காரணமான காட்சியில் நான் நடித்தேன். ஊர்ப் பெரியவரை உளமாற நேசிக்கும் குயிலு (நடிகை ராதா) நான் அந்த ஊர்ப் பெரியவரின் மனைவியின் முன்னாள் காதலன் என்பதை தெரிந்து கொள்கிறார். அதனால் ஒரு கொலை வழக்கில் ஜெயில் தண்டனை அனுபவித்து விட்டு தனது பழைய காதலியை பார்க்க அந்த கிராமத்துக்கு வரும் என்னை அவர் கொன்று விடுவார்.
படத்தில் ராதா, பரிசல் ஓட்டும் பெண். நான் அந்த பரிசலில் ஊருக்கு வரும்போது இந்த சம்பவம் நடக்க வேண்டும்.
காட்சியை என்னிடம் விவரித்த டைரக்டர் பாரதிராஜா, தனது உதவியாளரிடம் எனக்கான வசனங்களை ஒரு முறை படித்துக் காட்டச் சொன்னார். வசனத்தை அப்படியே உள்வாங்கிக் கொண்டு நேராக பரிசலில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். காட்சி தொடங்குவதற்கு முன்பு பாரதிராஜா தனது உதவியாளர்களிடம், "என்னய்யா இது! வசனத்தை படிச்சுக் காட்டினதுமே நடிக்கப் போயிட்டான்!'' என்று கூறியிருக்கிறார்.
மனப்பாடம்
எவ்வளவு நீள வசனமானாலும் அதை ஒரு தடவை கேட்டு விட்டால் எனக்கு மறக்காது. அப்போதே அந்த காட்சிக்குத் தேவையான ஏற்ற இறக்கங்களுடன் பேசி நடித்து விடுவேன்.
இந்தப் படத்திலும் அதுதான் நடந்தது. என் கேரக்டரின் அடாவடித் தன்மைக்கேற்ப, சொந்தமாய் கொஞ்சம் வசனங்களையும் சேர்த்துக்கொண்டு பேசினேன்.
முதல் `ஷாட்'டிலேயே காட்சி ஓ.கே. ஆயிற்று. டைரக்டர் பாரதிராஜாவுக்கு அப்படியொரு சந்தோஷம்! `என் மனசில் இருந்த அந்த வில்லனை அப்படியே பிலிமுக்குள் கொண்டு வந்துட்டீங்க' என்று பாராட்டினார். அதோடு 5 ஆயிரம் ரூபாய் சம்பளமும் கொடுத்தார்.
3 மணி நேரம்
இத்தனைக்கும், அந்தப்படத்தில் என் சம்பந்தப்பட்ட காட்சிகள் மூன்றே மணி நேரத்தில் எடுத்து முடிக்கப்பட்டன! என்னைப் பாராட்டியவரிடம், அவரது படத்தில் நடிக்க எடுத்த முந்தைய முயற்சிகள் பற்றி சொன்னேன். ஆச்சரியப்பட்டவர், "நான்கூட உங்களை செட்டில் பார்த்திருக்கிறேன். வாட்டசாட்டமா, உயரமா இருந்ததால், ஸ்டண்ட் ஆளுன்னு நினைத்துக் கொள்வேன். அப்புறமாய் கையில் ஒரு பெட்டியோடு அடிக்கடி பார்த்திருக்கிறேன். படக்கம்பெனியில் வேலை பார்க்கிறவர் போலிருக்குது'' என்று நினைத்து விட்டேன்'' என்றார்.
நான் படக்கம்பெனியில் அலுவலக நிர்வாக பொறுப்பை கவனித்து வந்தபோது, என் கையிலிருந்த பெட்டி, என்னை அவருக்கு ஒரு `நடிகனாக' காட்ட தடையாக இருந்திருக்கிறது! இதை அவரிடம் சொன்னபோது மனம்விட்டுச் சிரித்தார்.
அப்போது நான் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். ஒருநாளைக்கு 3 படத்துக்கு கால்ஷீட் கொடுத்தேன். படங்களில் கதாநாயகியை நான் `ரேப்' பண்ணுகிற மாதிரி காட்சிகளில் நடித்தால்கூட அதில் என் நடிப்புக்கு ரசிகர்கள் கைதட்டினார்கள்.
இப்படித்தான் ஒரு படத்தில், கதாநாயகியை `எசகுபிசகாக' மடக்கும் காட்சியில் நடித்ததற்கு ரசிகர்களிடம் வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. ஒருநாள், என் நண்பர் `நிழல்கள்' ரவி எனக்கு போன் பண்ணி, நான் வில்லனாக நடித்த படம் நடக்கும் குறிப்பிட்ட தியேட்டருக்கு வரச்சொன்னார். அப்போது, படம் ஓடிக்கொண்டிருந்தது. படத்தில் கதாநாயகியை நான் `ரேப்' செய்ய முயற்சிக்கிற காட்சி! கதாநாயகிக்கு ஆபத்து என்றால் கதாநாயகன் வந்து காப்பாற்றுவார் அல்லவா! அதன்படி படத்தின் ஹீரோ கண்ணாடி ஜன்னலை உடைத்தபடி அறைக்குள் பாய்கிறார். கீழே விழுந்து எழுந்த அதே வேகத்தில் ஹீரோ என் தோள் மீது கை வைக்கிறார்.
மாறுபட்ட ரசிகர்கள்
இந்த நேரத்தில் ரசிகர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்? ஹீரோ வந்து விட்டதால் இனி ஹீரோயினுக்கு ஆபத்து இல்லை என்பதாக ரசிகர்கள் கரகோஷம் செய்வார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. என் தோளில் கைவைத்த ஹீரோவை "எடுடா கையை'' என்று கத்தினார்கள். நான் வெலவெலத்துப் போய்விட்டேன். வில்லனின் மேனரிசங்களை ரசிக்கிற அளவுக்கு ரசிகர்கள் பக்குவப்பட்டு விட்டார்கள், அல்லது மாறிப்போய்இருக்கிறார்கள் என்பது எனக்கே அந்த நேரத்தில் அதிசயமாகத் தெரிந்தது!
என்னை தியேட்டருக்கு வெளியில் அழைத்துச்சென்ற நிழல்கள்ரவி, "ரசிகர்களோட இந்த வித்தியாசமான `டேஸ்ட்' பற்றி எனக்கு முந்தின `ஷோ'விலேயே `ரிசல்ட்' கிடைச்சுது. அதை நீயும் தெரிந்து கொள்ளணும் என்றுதான் உன்னை அழைத்தேன்'' என்றார்.
கதாநாயகன்
"முதல் மரியாதை'' படத்தில் நடித்த பிறகு, தனது அடுத்த படமான "கடலோரக் கவிதைகள்'' படத்தில் என்னை கதாநாயகனாக்கி விட்டார் பாரதிராஜா.
ஆனால் அதற்கும் இடைப்பட்ட நேரத்தில் "சாவி'' என்ற படம் மூலம் நான் ஹீரோவாகி விட்டேன். இது `ஆன்டிஹீரோ' கதை. அதாவது, கதாநாயகனே வில்லத்தனம் செய்வான்!
பிரபல டைரக்டர் டி.ஆர்.ரகுநாத்தின் மகன் கார்த்திக் ரகுநாத் இந்தப் படத்தை இயக்கினார். இது லண்டனில் வருஷக் கணக்கில் மேடை நாடகமாக நடந்த "டயல் `எம்' பார் மர்டர்'' என்ற கதை. ஆனால் இதை முதலில் இந்தியில்தான் எடுத்தார்கள். ராஜ்கபூர் - டிம்பிள் கபாடியா நடித்திருந்தார்கள்.
இதுகூட முதலில் எனக்குத் தெரியாது. கமல் சாரின் சொந்தப்படமான `விக்ரம்' படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்தபோது, கடைசி ஷெட்ïலில் படத்தில் நடித்த டிம்பிள் கபாடியாவிடம் "வில்லனாக நடிக்கும் கடைசி படம் இது. இனி ஹீரோவாக நடிக்கிறேன்'' என்று "சாவி'' படம் பற்றி கூறினேன். உடனே அவர் என்னை வாழ்த்துவதற்குப்பதில், "அய்யய்யோ! அது நான் இந்தியில் நடிச்சு சரியா ஓடாத படமாச்சே'' என்றார். எனக்கு அப்போதே `திக்' என்றாகிவிட்டது. அவர் சொன்ன ரிசல்ட்தான் `சாவி' படத்துக்கு கிடைத்தது. படம் சரியாகப் போகவில்லை.
இதையடுத்து நான் ஹீரோவாக நடித்து வந்த "ரசிகன் ஒரு ரசிகை'', "தர்மம்'' ஆகிய படங்களும் ஓடவில்லை.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், நான் ஹீரோவாக நடித்த படம் சரியாகப் போகவில்லையே தவிர, வில்லனாக நடித்த படங்கள் நன்றாக ஓடின. குங்குமப்பொட்டு கவுண்டராக நடித்த "முதல் வசந்தம்'' படம் 25 வாரம் ஓடியது.
இந்த நேரத்தில், "முதல் மரியாதை'' படம் பெற்ற பெரிய வெற்றியினால், பாரதிராஜா என்னை ஹீரோவாக போட்டு "கடலோரக் கவிதைகள்'' என்ற படத்தை எடுக்க இருந்தார்.
முதல் டூயட்
இந்தப் படத்துக்கு ஒப்பந்தமான நேரத்தில், டைரக்டர் ஸ்ரீதர்ராஜன், "இரவுப்பூக்கள்'' என்ற படத்தில் என்னை ஹீரோவாக்கினார். இந்தப்படம்தான், நான் ஹீரோ ஆகியபின் "டூயட்'' பாடிய முதல் படம். அதுவரை 3 படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், அந்தப் படங்களில் எனக்கு "டூயட்'' கிடையாது. அதனால் ஒருபக்கம் உற்சாகம் என்றாலும், மறுபக்கம் எனக்கு `டான்ஸ் தெரியாதே' என்று கவலை வந்து ஒட்டிக்கொண்டது.
படத்துக்கு ரகுராம்தான் டான்ஸ் மாஸ்டர். படத்தில் என் ஜோடியாக நடித்த நளினியும், நானும் டூயட் பாடலுக்கு நடனம்ஆடியாக வேண்டும். நான் டான்ஸ் மாஸ்டரிடம், "பாட்டு சீனை மைசூரில் எடுத்து விடலாமா?'' என்று கேட்டேன். அவர் `நடனம்' தெரியாத என் நிலையை புரிந்துகொண்டு, "மைசூர் போனால் `டான்ஸ் காட்சி' எடுக்காமல் விட்டு விடலாமா?'' என்று சிரித்தபடி கேட்டார்.
இந்தப்படத்தில் நண்பர் `நிழல்கள்' ரவியும் நடித்தார். மைசூரில் படப்பிடிப்பு இடைவேளையில் நான் எம்.ஜி.ஆர். மாதிரியும், ரவி நம்பியார் மாதிரியும் பேசி நடித்துக் காட்டுவோம். இதைப் பார்த்த டைரக்டரும், டான்ஸ் மாஸ்டரும், "எம்.ஜி.ஆரோட மேனரிசம் அப்படியே உங்களுக்கு வருது. இந்த பாடல் காட்சியை நீங்கள் எம்.ஜி.ஆர். ஸ்டைலில் நடனமாடி நடித்தால் என்ன?'' என்று கேட்டார்கள்.
அப்போது எம்.ஜி.ஆர். சார் முதல்வராக இருந்தார். அதனால் தைரியமாக அந்த பாடல் காட்சியில் `எம்.ஜி.ஆர். ஸ்டைலில்' நடித்து முடித்தேன். படம் வெளியானபோது இந்தப் பாடல்காட்சிக்கு ரசிகர்கள் `ஒன்ஸ்மோர்' கேட்டார்கள். படமும் வெற்றி பெற்றது. இந்த வகையில் நான் ஹீரோவாக ஜெயித்த முதல் படமும் இதுதான்.''
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
http://www.dailythanthi.com/article....ate=12/18/2007
`பாலைவன ரோஜாக்கள்' படத்தில் சத்யராஜ்
கலைஞர் வசனத்தை பேசி நடித்தார்
கடலோரக் கவிதைகள் படம் மாபெரும் வெற்றியடைந்ததால், நிலையான கதாநாயகன் அந்தஸ்து பெற்றார், சத்யராஜ். தொடர்ந்து அவர் கதாநாயகனாக நடித்து வந்த படங்களும் வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டன. "பாலைவன ரோஜாக்கள்'' படத்தில் கருணாநிதி வசனத்தைப் பேசி நடித்தார்.
"கடலோரக் கவிதைகள்'' படம் கொடுத்த நட்சத்திர அந்தஸ்து மூலம் கலைவாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-
"கடலோரக் கவிதைகள் படம் மூலம் டைரக்டர் பாரதிராஜா என்னை ஜனரஞ்சக ஹீரோவாக்கி விட்டார். படத்தில் அவர் எனக்காக உருவாக்கியிருந்த `சின்னப்பதாஸ்' கேரக்டர் ரசிகர்களின் இதயத்துக்குள் பதிவாகிவிட்டதே இதற்கு காரணம்.
பாலைவன ரோஜாக்கள்
இதன் பிறகு கலைஞர் கதை வசனத்தில் நானும் பிரபுவும் நடிக்க "பாலைவன ரோஜாக்கள்'', சத்யா மூவிசின் "மந்திரப் புன்னகை'' என படங்கள் வந்தன. இந்த இரண்டும் ஒரே நேரத்தில் வந்த வாய்ப்புகள்.
"பாலைவன ரோஜாக்கள்'' படத்திற்கு கலைஞர் வசனம் எழுதுகிறார் என்றதும், எனக்குள் ஒரு பரவசம். நடிக்க வரும் முன்பாக சிவாஜி சாருக்காக அவர் எழுதிய "பராசக்தி'', "மனோகரா'' பட வசனங்கள் எனக்கு மனப்பாடம். அதற்குக் காரணம் நடிகர் சிவகுமார்தான். அவர் கலைஞர் கதை வசனத்தில் சிவாஜி சார் நடித்த படங்களின் வசனத் தொகுப்புகள் அடங்கிய புத்தகத்தை பத்திரமாக வைத்திருந்தார். அதன் அன்றைய விலை நாலணா. அந்த வசன புத்தகத்தை எனக்குத் தந்து, "நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்த பிறகு கலைஞர் வசனங்களை சிவாஜி சார் எப்படி பேசியிருக்கிறார் என்று படித்துப் பார்த்து பயிற்சி எடுத்துக் கொள்'' என்று கூறினார். அதனால் அப்போதே "பராசக்தி'', "மனோகரா'', "ராஜாராணி'' படத்தின் "சேரன் செங்குட்டுவன்'' ஓரங்க நாடக வசனம் அத்தனையும் எனக்கு மனப்பாடம். அப்போது அவர் எழுதிய படங்களில் செந்தமிழில் வார்த்தைகளை அழகுபடுத்தியிருந்தார். இப்போதும் அப்படியே எழுதுவாரா? அல்லது வேறு பாணியில் எழுதுவாரா என்றெல்லாம் ஆர்வம் ஏற்பட்டது.
கலைஞரின் வசனங்கள் இயல்புத் தமிழில் இருந்தது. கால மாற்றத்தைப் புரிந்து அதற்கேற்ப மாற்றங்களுடன் வசனங்களை கோர்த்திருந்தார். டைரக்டர் மணிவண்ணன்தான் படத்தை இயக்கினார்.
மணிவண்ணன் இந்தப் படத்தை இயக்கிய அதே நேரத்தில் நான் கதாநாயகனாக நடித்த "விடிஞ்சா கல்யாணம்'' படத்தையும் இயக்கினார். இரண்டும் வேறு வேறு கதை. "வாள் முனையைக் காட்டிலும் பேனா முனை கூர்மையானது'' என்ற பின்னணியில் உணர்ச்சிக் குவியல் "பாலைவன ரோஜாக்கள்'' என்றால், நான் எனக்கே உரித்தான பாணியில் `வில்ல' நாயகனாக நடித்த "விடிஞ்சா கல்யாணம்'' படம் அப்படியே மாறுபட்ட ரகம்.
ஒரே நாளில் 2 படங்கள்
1986-ம் ஆண்டு தீபாவளிக்கு "பாலைவன ரோஜாக்கள்'', "விடிஞ்சா கல்யாணம்'' இரண்டு படங்களும் ரிலீசாயின. ஒரு ஹீரோவின் படம், ஒரே நேரத்தில் இப்படி பண்டிகை நாளில் ரிசீலானது இதற்கு முன்பு சிவாஜி சாருக்குத்தான் நடந்தது.
1970-ம் ஆண்டு தீபாவளிக்கு சிவாஜி சார் நடித்த "சொர்க்கம்'', "எங்கிருந்தோ வந்தாள்'' ஆகிய இரண்டு படங்களும் ரிலீசாயின. இரண்டுமே வெற்றி பெற்றன. 16 வருடம் கழித்து, இப்படி தீபாவளி தினத்தில் வெளியான என் படங்களும் வெற்றி பெற்று எனக்கு மகிழ்ச்சி தந்தன.
மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெற்றி பெற்ற படம்தான் தமிழில் "பாலைவன ரோஜாக்கள்'' என்ற பெயரில் ரீமேக் ஆனது. அது மாதிரி தமிழில் நான் நடித்த "பூவிழி வாசலிலே'', "கடமை கண்ணியம் கட்டுப்பாடு'' படங்களும் மலையாளத்தின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த படங்களின் ரீமேக்தான்.
"மக்கள் என் பக்கம்'', "அண்ணா நகர் முதல் தெரு'', "பொம்முகுட்டி அம்மாவுக்கு'' என்று எனக்கு தொடர் வெற்றி தந்த படங்களும், மலையாள படங்களின் ரீமேக்தான். இந்த மூன்று படங்களிலும் மலையாளத்தின் இன்னொரு சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்திருந்தார்.
இதை நான் நன்றிப் பெருக்கோடு சொல்லக் காரணம் உண்டு. இந் தப் படங்களில் மாறுபட்ட சவாலான கேரக்டர்கள் எனக்குக் கிடைத்தன. இந்தப் படங்கள் என் ஹீரோ அந்தஸ்தை தக்க வைக்கவும் உதவின.
சின்னதம்பி பெரியதம்பி
"பாலைவன ரோஜாக்கள்'' படத்தை அடுத்து, நானும் பிரபுவும் சேர்ந்து நடித்த படம் "சின்னதம்பி பெரியதம்பி.'' நண்பர் மணிவண்ணன்தான் இயக்கினார். படத்தை தயாரித்தவர் அண்ணன் `மாதம்பட்டி' சிவகுமார்.
வழக்கமாக அவுட்டோர் படப்பிடிப்பு என்றால், ஓட்டலில்தான் தங்குவேன். இந்தப் படத்துக்காக அண்ணன் மாதம்பட்டி சிவகுமார் வீட்டிலேயே மொத்த ïனிட்டும் தங்கிக் கொண்டோம். அந்த அளவுக்கு கடல் மாதிரி பரந்து விரிந்தது அவர் வீடு. நான், பிரபு, கேமராமேன் சபாபதி, டைரக்டர் மணிவண்ணன் ஒரே ரூமில் தங்கிக் கொண்டோம். காலை முழுக்க படப்பிடிப்பு; மாலையானால் கிரிக்கெட், டேபிள் டென்னிஸ் என்று ஒட்டுமொத்த ïனிட்டும் விளையாட்டு வீரர்களாகி விடுவோம். இரவானால் மாதம்பட்டி சிவகுமார் அண்ணனும், பிரபுவும் வேட்டைக்கு கிளம்பி விடுவார்கள்.
மாதம்பட்டி அண்ணன் வீட்டில், அப்போது யானை வேட்டைக்கு பயன்படுத்துகிற துப்பாக்கி உள்பட விதம் விதமான துப்பாக்கிகள் இருந்தன. வேட்டையாட தடை வந்த நேரத்தில், எல்லா ரக துப்பாக்கிகளையும் மொத்தமாக சரண்டர் பண்ணிவிட்டார். இப்படி ஆட்டம், கொண்டாட்டம் என்று ஒரே குடும்பம் போல பணியாற்றிய அந்தப் படமும் வெற்றி பெற்றது.
முத்துக்கள் மூன்று
இதையடுத்து சிவாஜி சாருடன் "முத்துக்கள் மூன்று'' படம் வந்தது. இந்தப் படத்தில், சிவாஜி சாருடன் நானும் பாண்டியராஜனும் மற்ற 2 ஹீரோக்கள். படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 1-ந்தேதி குன்னூரில் தொடங்கியது. அன்று சிவாஜி சாரின் பிறந்த நாள். அதற்கு அடுத்த நாள் 2-ந்தேதி பாண்டியராஜனின் பிறந்த நாள். மறுநாள் 3-ந்தேதி என் பிறந்தநாள்! தொடர்ந்து மூன்று நாட்கள் படப்பிடிப்புடன் பிறந்த நாள் கொண்டாட்டமும் தொடர்ந்தது!
இந்த படப்பிடிப்பின் போது சிவாஜி சாருக்கு பக்கத்து ரூமை எனக்கு கொடுத் திருந்தார்கள். நான் காலையில் விழித்ததும் தண்டால், பஸ்கி போன்ற உடற்பயிற்சிகளை முடித்த கையோடு, `ஸ்கிப்பிங்'கும் செய்வேன். கயிற்றை கழற்றியபடி 2 ஆயிரம் தடவை தொடர்ந்து குதிப்பேன். அதன்படி, ரூமிலும் இந்தப் பயிற்சியை தொடர்ந்தேன். இதில் `ஸ்கிப்பிங்' குதியல் மட்டும் பக்கத்து ரூமில் தங்கியிருந்த சிவாஜி சாருக்கு `திங்... திங்...' என்று கேட்டிருக்கிறது.
கொஞ்ச நேரத்தில் பக்கத்து அறையில் இருந்து போன். எடுத்துப் பேசினால் பிரபு லைனில் வந்திருக்கிறார். "என்ன தலைவரே! ஸ்கிப்பிங் பண்றீங்களோ?'' என்று கேட்டார். "ஆமாம்'' என்றேன்.
"நீங்க குதிக்கிற சத்தம் அப்பாவுக்கு கேட்டிருக்கிறது. அப்பா எனக்குபோன் போட்டு, "சத்யராஜ் எவ்வளவு பொறுப்பா உடற்பயிற்சியெல்லாம் பண்றார். நீயும் ஏதாவது உடற்பயிற்சி செய்வதுதானே!'' என்று கேட்கிறார்'' என்றார்.
எனக்கு பாராட்டு. பிரபுவுக்கு அட்வைஸ். சிவாஜி சாரின் `பார்வை' சரிதானே!''
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
http://www.dailythanthi.com/article....ate=12/20/2007
நடிகர் சத்யராஜ் பாலுத்தேவராக வாழ்ந்த "வேதம் புதிது''
6 விருதுகளை வாங்கித்தந்த படம்
"வேதம் புதிது'' படத்தில் பாலுத்தேவராக வாழ்ந்து காட்டினார், சத்யராஜ். பாரதிராஜாவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான "வேதம் புதிது'' படம் சத்யராஜை மிகச்சிறந்த குணசித்ர நடிகராகவும் வெளிப்படுத்தியது. அவருக்கு 6 விருதுகள் கிடைத்தன.
"முதல் மரியாதை'' படத்தில் சிறு வேடத்தில் மட்டும் நடித்த சத்யராஜை, தனது கிராமத்துக் காதல் கதையான "கடலோரக் கவிதைகள்'' படத்தில் கதாநாயகன் ஆக்கினார், பாரதிராஜா. "கடலோரக் கவிதைகள்'' படத்தின் வெற்றிக்குப் பிறகு, "மதங்களை கடந்தது மனிதநேயம்'' என்ற கருத்தை வெளிப்படுத்தும் "வேதம் புதிது'' படத்திலும் சத்யராஜையே நடிக்க வைத்தார். பாலுத்தேவர் என்ற கம்பீரமான குணச்சித்திர வேடத்தில் சத்யராஜ் வாழ்ந்து, ரசிகர்களை பிரமிக்க வைத்தார். படமும் வெற்றி பெற்றது.
இந்தப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி சத்யராஜ் கூறியதாவது:-
மைல்கல்
"என் நடிப்பு வரலாற்றில் நிச்சயம் ஒரு மைல்கல் `பாலுத்தேவர்' கேரக்டர்.
பாரதிராஜாவின் "வேதம் புதிது'' கதையை என்னிடம் சொல்லும்படி சித்ரா லட்சுமணனிடம் பாரதிராஜா கூறியிருக்கிறார். அவர் என்னிடம், "கதையின் அவுட்லைனை கேட்டுக் கொள்ளுங்கள்'' என்றார்.
"நான் டைரக்டர் பாரதிராஜா சாரிடம் முதல் மரியாதை படத்தில் என் கேரக்டர் என்ன என்பது பற்றி கேட்கவில்லை. கடலோரக் கவிதைகள் படத்திலும் கதை கேட்கவில்லை. இந்தப் படத்திலும் கதை கேட்கப்போவதில்லை. நான் கதை கேட்டு முடிவு செய்கிற நிலையை கடந்தவர் அவர்'' என்று சித்ரா லட்சுமணனிடம் கூறி, கதை கேட்க மறுத்துவிட்டேன்.
இந்தப் படத்தில் நடித்த பிறகு வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மத்தியிலும், எனக்கு பெரிய அளவில் மரியாதை கிடைத்தது.
நான் அப்போது பெரியார் கொள்கைகளுக்குள் வந்திருந்த நேரம். படத்தில் வரும் பாலுத்தேவர் கேரக்டர் `நாத்திகர்' என்பது எனக்கு மிகவும் வசதியாகி விட்டது.
அருமையான வசனம்
படத்துக்கு கண்ணன் என்பவர் வசனம் எழுதியிருந்தார். இந்தப்படத்துக்கு அவர் வசனம் எழுதிய பிறகு, `வேதம் புதிது கண்ணன்' என்று அழைக்கப்பட்டார். அந்த அளவுக்கு படத்துக்கு வசனங்களும் உயிர் நாடியாக அமைந்தன.
"பராசக்தி'', "வீரபாண்டிய கட்டபொம்மன்'', "மனோகரா'' போன்ற படங்கள் வசனங்களுக்காகவும் பேசப்பட்டவை. "காக்கி சட்டை'' படத்தில் நான் இரண்டு தடவை சொன்ன `தகடு தகடு' வசனம் சினிமாவில் என் நடிப்புக்கு புதிய பாதையை உருவாக்கித் தந்தது.
இப்படி வசனங்கள் மூலம் கிடைக்கும் பெருமை, இந்தப் படத்தில் கண்ணன் வசனத்துக்கும் கிடைத்தது. கதைப்படி, என் மகன் தாமிரபரணி ஆற்றில் விழுந்து இறந்திருப்பான். அது தெரியாத உறவினர்கள், அவனைக் காணோம் என்று தேடிப்போயிருப்பார்கள். அவர்கள் வீட்டுக்கு வந்ததும் நான் பதட்டத்திலும் பரபரப்பிலும் "கிடைச்சிட்டானா?'' என்று கேட்பேன். அவர்கள் பதிலோ, "கிடைச்சிட்டுது'' என்பதாக இருக்கும்.
மகன் உயிரோடு இல்லை என்பதை இந்த வசனம் நெற்றிப்பொட்டில் அடிக்கிற மாதிரி உணர்த்தி விட்டது.
ஆளுக்குத்தானே மரியாதை!
மகன் உயிரோடு இல்லை என்பதை இந்த ஒரு வரி வசனத்தில் சொல்லி, கதைக்கே ஒரு ஜீவன் கொடுத்திருந்தார், கண்ணன். படத்தில் இந்தக் காட்சிக்கு, காட்சியின் சோகம் தாண்டியும் கைதட்டிய ரசிகர்கள் அதிகம். என் படங்களில் நான் பேசிய வசனங்களிலேயே சிறந்த வசனமாக இதைக் கருதுகிறேன்.
ரஜினி புகழாரம்
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடந்தபோது, ஊர்க்காவலன் படப்பிடிப்புக்காக ரஜினி சாரும் அங்கே வந்திருந்தார். அவர் நடித்த படப்பிடிப்பு முடிந்ததும் எங்கள் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார். 2 மணி நேரம் எங்களுடன் இருந்தார். என் `பாலுத்தேவர்' கெட்டப் அவரை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. அதுபற்றிப் பேசி பாராட்டினார்.
படத்தில் நடிகை அமலா என் மருமகளாக நடித்திருந்தார். இதே அமலா என் அடுத்த படமான "ஜீவா''வில் என் ஜோடியாக நடித்தார்! அதுமாதிரி, `மிஸ்டர் பாரத்' படத்தில் அம்பிகா எனக்கு மருமகள். அடுத்து வந்த "மக்கள் என் பக்கம்'' படத்தில் என் ஜோடி! இரண்டு விதமான வேறுபாட்டையும், ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
6 விருதுகள்
"வேதம் புதிது'' படத்தில் பாலுத்தேவராக நடித்த என் நடிப்புக்கு `பிலிம்பேர்' பத்திரிகை உள்பட 6 பத்திரிகைகள் விருது கொடுத்து சிறப்பித்தன.
மத்திய அரசின் விருது கமிட்டியில் அப்போது ஜுரியாக இருந்தவர்களில் நடிகை லட்சுமியும் ஒருவர். இந்தப்படத்தில் என் நடிப்புக்கு விருது கொடுப்பதற்கான பரிசீலனையில், சின்ன விஷயத்துக்காக `விருது' வாய்ப்பு தவறி விட்டதாக லட்சுமி என்னிடம் சொன்னார். அதாவது என் கேரக்டருக்கு `விக்' பயன்படுத்தியிருந்தது விருதுக்கு தடையாக அமைந்திருந்ததை தெரிந்து கொண்டேன். ஆனாலும் ரசிகர்களின் பாராட்டை எனக்கு கிடைத்த பெரிய விருதாக ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தேன்.
ஜெயலலிதா மேடம் முதல்-அமைச்சராக இருந்தபோது ஒரு தடவை அவர்களை சந்தித்து பேசினேன். அப்போது நான் பல படங்களில் நடித்திருந்தாலும் `பாலுத்தேவர்' கேரக்டர் பற்றியே அதிகம் பாராட்டிப் பேசினார்கள்.
படத்தில் ஒரு காட்சியில் நானே ஆடிப்போய்விட்டேன். என் வளர்ப்பு மகனாக வரும் சிறுவனை நான் தோளில் தூக்கி வைத்தபடி கதை சொல்லிக்கொண்டே வருவேன். ஆற்றைக்கடக்கும்போது அந்த சிறுவன் என்னிடம், "உங்க பெயர் என்ன?'' என்று கேட்க, "நான் பாலுத்தேவர்'' என்பேன். "பாலு உங்கள் பெயர். தேவர் என்பது நீங்கள் படிச்சு வாங்கின பட்டமா?'' என்று அந்த சிறுவன் கேட்பான்.
இந்தக் காட்சியை, தனக்கே உரிய ஆற்றலில் மிகத் திறமையாக இயக்கினார், பாரதிராஜா. இந்தக் கேள்வியால் அந்தச் சிறுவன் என்னை கன்னத்தில் அறைவதாக உணர்வேன். `ஜாதிய சமூகத்தை தாண்டியது மனித நேயம்' என்பதை சொல்லாமல் சொல்கிற அந்தக் காட்சி, என் நடிப்பிலும் மறக்க முடியாத காட்சியாகி விட்டது.
எம்.ஜி.ஆர். பார்த்தார்
படம் தயாரான பிறகு வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பிட்ட மதத்தை புண்படுத்துவதாக ஒரு தகவல் உலாவந்து படத்துக்கு பிரச்சினையாக அமைந்தது. இதுபற்றி முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சொல்லப்பட்டபோது அவர் படத்தை பார்க்க விரும்பினார். ஏவி.எம். தியேட்டரில் படம் பார்த்தபோது என்னையும் அவர் அருகே அமர வைத்துக்கொண்டார். முழுப்படத்தையும் ரசித்துப் பார்த்தவர், "இந்தப்படத்தில் சர்ச்சைக்குரிய விஷயம் எதுவும் இல்லையே!'' என்றார். என் நடிப்பையும் பாராட்டினார்.
முதல்-அமைச்சர் பாராட்டிய பிறகு, படத்தின் வெளியீட்டுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. ரசிகர்கள் உணர்ச்சி மயமாய் ரசித்ததோடு, படத்தையும் வெற்றி பெறச்செய்தார்கள்.
"வேதம் புதிது'' பாலுத்தேவர் கேரக்டர் என்னை ரசிகர்களிடம் பெரிய அளவில் வெளிப்படுத்தியதால்தான் இன்றைக்கு "பெரியார்'', "ஒன்பது ரூபாய் நோட்டு'' போன்ற படங்களிலும் நடிப்பில் என்னை நிலைநிறுத்த முடிந்தது.''
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
http://www.dailythanthi.com/article....ate=12/26/2007
I heard that Sathyraj wanted to act (without his fees) in a film related to the late Amamrar Anton Balasingham, is this true?
Sathyaraj acted with accepting any money in periyar.
He mentioned that when he was chatting with actors chandrasekhar & nizhalgal ravi, they mentioned that he resembled anton balasingham. That set him thinking.
Sathyaraj acted with accepting any money in periyar.
replace with with without
aaha.. kavidhai.. kavidhai... :)Quote:
Originally Posted by kamath
"வேலை கிடைச்சிடுச்சு'' படத்தில்
சத்யராஜ் - கதாநாயகன் சரத்குமார் - வில்லன்
பி.வாசு டைரக்ட் செய்த "வேலை கிடைச்சிடுச்சு'' படத்தில் சத்யராஜ் கதாநாயகனாகவும், சரத்குமார் வில்லனாகவும் நடித்தனர்.
பி.வாசு டைரக்ட் செய்த பல வெற்றிப் படங்களில் சத்யராஜ் நடித்தார். அந்த அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-
"என் தங்கச்சி படிச்சவ படத்தின் மூலம் பி.வாசு மிகச் சிறந்த டைரக்டராக அடையாளம் காட்டப்பட்டார். இந்த வெற்றி மூலம் ரஜினி, விஜயகாந்த் படங்களையும் இயக்கினார். "பொன்மனச் செம்மல்'' படத்தில் விஜயகாந்தையும், பணக்காரன் படத்தில் ரஜினியையும் இயக்கினார்.
டைரக்டர் பி.வாசுவைப் பொறுத்தவரையில் வேலையில் வேகம் இருக்கும். அதே அளவுக்கு தரமும் இருக்கும்.
பிரபுவை வைத்து "சின்னத்தம்பி'' படத்தை இயக்கிய அதே நேரத்தில்தான், என்னை வைத்து "வேலை கிடைச்சிடுச்சு'' படத்தையும் இயக்கினார். ஒரே நேரத்தில் 2 படங்களை இயக்குவது எவ்வளவு சிரமமானது என்பது, இயக்குனர்களுக்குத்தான் தெரியும்.
சரத்குமார்
"வேலை கிடைச்சிடுச்சு'' படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்தது. கவுதமி முதன் முதலாக எனக்கு ஜோடியாக நடித்தார்.
இந்தப் படத்தில் சரத்குமார் எனக்கு வில்லனாக நடித்தார். ஒரு நாள் படப்பிடிப்பு இடைவேளையில் அவரிடம், "சரத்! உங்களால் ரொம்ப நாள் வில்லனாக நீடிக்க முடியாது'' என்று சொன்னேன்.
நான் இப்படிச் சொன்னதும் சரத் திடுக்கிட்டார். "ஏன் சார் அப்படிச் சொல்றீங்க?'' என்று கேட்டார்.
நான் அவரிடம், "உங்க பர்சனாலிடி, நடிப்புத் திறமை இரண்டுமே சீக்கிரமே நீங்க ஹீரோ ஆயிடுவீங்கன்னு சொல்லுது. அதைத்தான் அப்படிச் சொன்னேன்'' என்றதும் சரத் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்.
நான் சொன்னது போலவே அடுத்த ஒன்றிரெண்டு படங்களைத் தொடர்ந்து, சரத் ஹீரோவாகி விட்டார்.
சண்டைக்காட்சி
சரத்தின் வளர்ச்சிக்கு தொழிலில் அவர் காட்டிய அதீத அக்கறை முக்கிய காரணம்.
"வேலை கிடைச்சிடுச்சு'' படத்துக்காக நானும் சரத்தும் ஒரு சண்டைக் காட்சியில் நடித்தபோது, ஒரு தகரம் அவரது காலை குத்திக் கிழித்து ரத்தம் கொட்டியது. நானும் டைரக்டர் பி.வாசுவும் உடனடியாக அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு சரத்தை அழைத்துப் போனோம்.
தகரம் ஆழமாகப் பதிந்து சதையை கிழித்திருந்ததால், டாக்டர் தையல் போட வேண்டும் என்றார். பொதுவாக கொஞ்சம் பெரிய அளவில் காயம் என்றால் மயக்க மருந்து கொடுத்தே தையல் போடுவார்கள். அந்த ஆஸ்பத்திரியில் அந்த அளவுக்கு வசதி இல்லாததால், வலி மரத்துப்போகிற ஊசி போட்டு, பிறகு தையல் போட்டார் டாக்டர். கண்டிப்பாக ஒரு மூன்று நாளாவது ஓய்வில் இருக்க வேண்டும் என்றும்
சொல்லியனுப்பினார்.ஆனால், சரத்தோ மறுநாளே சண்டைக் காட்சியில் நடிப்பேன் என்று அடம்பிடித்து வந்து விட்டார்! டைரக்டரும் நானும் சொல்லிப் பார்த்தும் அவர் கேட்கவில்லை. "எனக்காக படப்பிடிப்பு தள்ளிப் போகக்கூடாது'' என்று சொன்னவர், தையல் போட்ட காலுடன் சண்டைக் காட்சியில் நடித்தார். காயம்பட்ட காலுடன் நடிப்பது தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக ஏற்கனவே நடித்தபோது காட்டிய வேகத்தை விட, இம்முறை அதிக வேகத்துடன் சண்டை போட்டார்.
வலிகளையும், வேதனைகளையும் தாண்டித்தான் வெற்றி பெற முடியும் என்பதை சரத் விஷயத்திலும் உணர்ந்தேன்.
படத்தை 40 நாளில் எடுத்து முடித்தார், பி.வாசு. இந்தப் படத்துக்கு முன், என் நடிப்பு வாழ்க்கையில் ஏற்பட்ட சின்ன இடைவெளியை இந்தப்படம் சரி செய்தது. படத்தின் விளம்பரத்தில் கூட இதை உறுதிப்படுத்தும் விதத்தில் டைரக்டர் பி.வாசு, "மீண்டும் உங்கள் சத்யராஜ×க்கு வேலை கிடைச்சிடுச்சு'' என்று குறிப்பிட்டார்!
அணில் கபூர்
இந்திப் பட உலகின் பெரிய ஹீரோக்களில் ஒருவர் அணில் கபூர். அவர் இந்தப் படத்தின் கதை பற்றி தெரிந்து வைத்திருந்ததால் இந்திப் பதிப்பில் நடிக்க விரும்பினார். அவருக்கு தமிழ் தெரியாது. என்றாலும் ரசிகர்களுடன் படம் பார்க்க விரும்பினார்.
சென்னை ஆல்பட் தியேட்டரில் படம் ரீலிசான போது, அணில் கபூரும் எங்களுடன் படத்தைப் பார்க்க வந்தார். படத்தின் தயாரிப்பாளர்கள் மோகன் நடராஜன், தரங்கை சண்முகம், எனது மானேஜர் ராமநாதன் ஆகியோரும் எங்களுடன் சேர்ந்து படம் பார்த்தார்கள்.
தியேட்டர் ஹவுஸ்புல்லாகி இருந்தது. காட்சிக்கு காட்சி ரசிகர்களின் கரகோஷத்தை ரொம்பவே ரசித்தார் அணில்கபூர். சண்டைக் காட்சிகளுக்கு ரசிகர்களின் விசில் சத்தம் காதைப் பிளந்தது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அணில் கபூர், என் கைகளைப் பிடித்துக் கொண்டு, "பிறந்தால் தமிழ்நாட்டில் நடிகனாக பிறக்க வேண்டும். இப்படி உணர்ச்சிபூர்வமாய் ரசிக்கும் ரசிகர்களை வேறு எங்குமே பார்த்ததில்லை'' என்று நெகிழ்ச்சியாகக் கூறினார்.
எம்.ஜி.ஆர். போஸ்டருக்கு முத்தம்
படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியில் நான் எம்.ஜி.ஆர். போஸ்டருக்கு முத்தம் கொடுப்பேன். அந்தக் காட்சிக்கும் விசில்கள் பறந்தன.
அதுபற்றி என்னிடம் குறிப்பிட்ட அணில் கபூர், "உங்கள் தமிழ்நாட்டில் இப்படி ஒரு நடிகர் எல்லா ரசிகர்களையும் உற்சாகப்படுத்துகிறவராக கிடைத்திருக்கிறார். இந்தப் படத்தை இந்தியில் எடுக்கும்போது நாங்கள் யாரை இப்படி போஸ்டரில் போட முடியும்?'' என்று
கேட்டார்.எம்.ஜி.ஆர். என்ற மக்கள் சக்தியின் மகத்துவம் பற்றி அவருக்கு விளக்கி சொன்னபோது, எனக்குள்ளும் ஒரு பெருமிதம்.
படம் இந்தியில் மட்டுமின்றி, தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு இரண்டிலுமே வெற்றி. இதைத் தொடர்ந்து மற்ற மொழிகளிலும் தயாரிப்பதற்கு பட அதிபர்கள் முன் வந்தார்கள். எல்லா மொழிகளிலும் வெற்றி பெற்ற பெருமை இந்தப் படத்துக்கு உண்டு.
படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு ரஜினியை அழைத்திருந்தார், பி.வாசு. அவரும் விழாவுக்கு தலைமை தாங்கி படத்தையும், டைரக்டரையும் மனம் விட்டுப் பாராட்டினார்.
டைரக்டர் மணிவண்ணனுக்குப் பிறகு என் நடிப்பில் பல வெரைட்டியான விஷயங்களை கொண்டு வந்தவர் பி.வாசு. சீரியஸ் படமான "வேலை கிடைச்சிடுச்சு'' படத்தில் என்னை நடிக்க வைத்தவர், அடுத்து என்னை நடிக்க வைத்த "நடிகன்'' படத்திலோ ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கி
மாதிரியான காட்சிகள் வைத்தார். `ஒரு காமெடி படத்துக்கு இவ்வளவு செலவா?' என்று தயாரிப்பு வட்டாரத்தை ஆச்சரியப்படுத்திய படமும் இதுதான். படத்தை தயாரித்த என் மானேஜர் ராமநாதனுக்கு, "நடிகன்'' படத்தின் மீது அத்தனை நம்பிக்கை.
நகைச்சுவை படங்கள்
எப்போது பார்த்தாலும் ரசிகர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்த படங்கள், எனக்குத் தெரிந்து தமிழில் 3 படங்கள். முதல் படம் டைரக்டர் ஸ்ரீதரின் "காதலிக்க நேரமில்லை'' இப்போது பார்த்தாலும் ஆச்சரியப்படுத்தும் காட்சியமைப்புகள், அதில் சிரிப்பதற்கான இயல்பான இடங்கள் என்று ஸ்ரீதர் பிரமாதப்படுத்தியிருந்தார். அப்பா டி.எஸ்.பாலையாவுக்கு மகன் நாகேஷ் கதை சொல்கிற காட்சியை இப்போது பார்த்தாலும் சிரிக்காமல் இருக்க முடியுமா? இந்தப் படத்துக்குப் பிறகு அப்படியான பெருமை பி.வாசு இயக்கத்தில் நான் நடித்த "நடிகன்'' படத்துக்கும், கார்த்திக் நடித்த "உள்ளத்தை அள்ளித்தா'' படத்துக்கும் இருக்கிறது என்பேன்.
http://www.dailythanthi.com/article....sdate=1/1/2008
"கனம் கோர்ட்டார் அவர்களே'' படத்தில்
13 தோற்றங்களில் அசத்தினார், சத்யராஜ்
டைரக்டர் மணிவண்ணன் தயாரித்து இயக்கிய "கனம் கோர்ட்டார் அவர்களே'' படத்தில், சத்யராஜ் 13 விதமான தோற்றங்களில் நடித்தார்.
இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி சத்யராஜ் கூறியதாவது:-
"நானும், மணிவண்ணனும் நண்பர்கள். எங்கள் வெற்றி தொடர்ந்த நேரத்தில், மணிவண்ணனுக்கு தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. மணிவண்ணன் டைரக்ஷனில் நான் நடித்த படங்கள் அத்தனையும் வெற்றி என்பதால், தான் தயாரிப்பாளராக மாறி அந்தப் படத்திலும் என்னையே கதாநாயகனாக நடிக்க வைக்க விரும்பினார்.
கனம் கோர்ட்டார் அவர்களே
முதன் முதலாக தயாரிப்பாளர் ஆவதால், ஒரு அலுவலக கட்டிடத்தை விலைக்கு வாங்கி, அதை கலைஞர் கையால் திறக்க வைத்தார். இப்படி படக் கம்பெனி அலுவலகத்தை விலைக்கு வாங்கி படமெடுத்தவர் என்ற முறையில், அப்போதே மணிவண்ணன் பரபரப்பாக பேசப்பட்டார்.
சினிமாவில் என்னை வைத்து "முதல் வசந்தம்'', "பாலைவன ரோஜாக்கள்'', "விடிஞ்சா கல்யாணம்'', "ஜல்லிக்கட்டு'', "சின்னத்தம்பி பெரியதம்பி'' உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். எல்லாமே நன்றாக ஓடிய படங்கள். இத்தனை `ஹிட்'டுக்குப் பிறகு, சொந்தப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இயல்புதானே.
13 வேடங்கள்
படத்துக்கு அவர் வைத்த "கனம் கோர்ட்டார் அவர்களே'' தலைப்பும் வித்தியாசமாகவே இருந்தது. வேலை வெட்டி இல்லாமல் "கேசுக்கு'' திண்டாடும் ஒரு வக்கீலின் வாழ்க்கைப் பின்னணி தான் கதை.
இதில் கோர்ட்டில் ஜட்ஜ் தொடங்கி, டவாலி வரை நான்தான் நடித்தேன். அதாவது ஜட்ஜ், எதிர்க்கட்சி வக்கீல், அரசு வக்கீல், கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர், கொலையை பார்த்த சாட்சிகள் பால்காரர், ஈட்டிக்காரர், அய்யர், கேசை நடத்தும் போலீஸ் இன்ஸ்பெக்டர், கோர்ட் டவாலி, முப்படைத் தளபதி உள்பட மொத்தம் 13 வேடம் எனக்கு. இந்தப்படம் வளரும்போதே, என்னுடைய விதவிதமான தோற்றங்கள் பத்திரிகைகளில் வெளியாகி, பரபரப்பு ஏற்படுத்தியது.
நான் நடிக்க வரும் முன், என்னை முதன் முதலாக படமெடுத்த `ஸ்டில்ஸ்' ரவிதான் இந்தப் படத்துக்கான பல்வேறு தோற்றங்களில் என்னை படமெடுத்தார். இந்த ஸ்டில்களை மற்ற படக் கம்பெனியிலும் கேட்டு வாங்கி பார்த்து ரசித்தார்கள்.
இப்படி வித்தியாசமான கேரக்டர்கள் என்றில்லை! படத்தின் செலவு விஷயத்திலும் மணிவண்ணன் குறை வைக்கவில்லை. படத்தில் `ஹெலிகாப்டர்', `கிளைடர்' விமானம் முதலியவை இடம் பெறுகிற மாதிரியும் காட்சிகள் அமைத்திருந்தார்.
இத்தனை இருந்தும் படம் எதிர்பார்த்த மாதிரி ஓடவில்லை. படத்தின் வெற்றிக்கு பல காரணங்கள் இருக்கிற மாதிரி, தோல்விக்கு சில காரணங்களாவது இருக்கும். அப்படி தோல்விக்கு ஒரு காரணமாக நான் நினைப்பது, படத்தில் நான் சோடாபுட்டி கண்ணாடி அணிந்து, தலை வழித்து சீவிய தோற்றத்தில் நடித்ததை ரசிகர்கள் அவ்வளவாக விரும்பவில்லை என்பதே.
உயரமான நடிகைகள்
என் கதாநாயகிகள் பற்றி சொல்ல வேண்டும். நான் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கியபோது என் ஜோடியாக நடிக்க உயரமான நடிகைகள் தேவைப்பட்டார்கள். அப்போது அம்பிகா - ராதா சகோதரிகள் கதாநாயகிகளாக நடித்து கொண்டிருந்தார்கள். இருவருமே நல்ல உயரம் என்பதால் எனக்கு கதாநாயகிகள் பிரச்சினை இல்லாமல் இருந்தது. பிறகு, உயரமான அமலா வந்தார். பிறகு பானுப்பிரியா. அவரும் நல்ல உயரம். அதன் பின்னர் சுகன்யா, கவுதமி, ஷோபனா இப்படி உயரமான கதாநாயகிகள் தொடர்ந்து எனக்கு கிடைத்துக் கொண்டே இருந்தார்கள். இப்போதும் நமீதா மாதிரி உயரமான நடிகைகள் எனக்கு ஜோடியாக கிடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆபாவாணனின் "தாய் நாடு'' படத்தில்தான் ராதிகா எனக்கு ஜோடியானார். அதற்கு முன் பல படங்களில் ராதிகா கதாநாயகியாக நடித்திருக்க, அதில் நான் வில்லனாக இருந்திருப்பேன். ரஜினியுடன் ராதிகா ஜோடி சேர்ந்த "மூன்று முகம்'', எம்.பாஸ்கரின் "உறங்காத நினைவுகள்'' மணிரத்னத்தின் "பகல் நிலவு'' என ராதிகா கதாநாயகியாக தொடர, நான் வில்லனாக நீடித்துக் கொண்டிருந்தேன்.
வில்லனாக நடித்தபோதே ராதிகா எனக்கு நல்ல சிநேகிதி. கதாநாயகன் ஆன பிறகோ நட்பில் இன்னும் இறுக்கம். ராதிகா, ஸ்ரீபிரியா இருக்கிற இடத்தில் நானும் இருந்தால் அந்த இடத்தின் கலகலப்பே தனிதான். காமெடிக் கலாட்டா கச்சேரியே நடக்கும்.
"தாய் நாடு'' படத்தில் தாடி கெட்டப்பில் என் நடை, உடை, பாவனை எல்லாமே எம்.ஜி.ஆர். ஸ்டைலில் இருந்தது. எம்.ஜி.ஆர். மாதிரி நான் வேக வேகமாக மாடிப்படியில் இருந்து இறங்கி வந்ததை ரசிகர்கள் ரசித்தார்கள். எம்.ஜி.ஆர். ஸ்டைலில் இந்தப் படத்துக்காக நான் ஆடிப்பாடிய ஒரு பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
வாசு, சந்தான பாரதி
இப்படி படங்கள் வந்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு சின்ன தொய்வு ஏற்பட்டது. அப்போது பட உலகில் ஒரு புயல் மாதிரி என்ட்ரி ஆனார், டைரக்டர் பி.வாசு. அவர் டைரக்டர் சந்தான பாரதியுடன் சேர்ந்து "பன்னீர் புஷ்பங்கள்'' என்ற படத்தை இயக்கி அதன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இதே கூட்டணி "மெல்லப் பேசுங்கள்'' என்ற படத்தையும் இயக்கியது.
இந்த இரட்டையர்களில் சந்தான பாரதி, பாரதியாக பெயரை சுருக்கிக் கொள்ள, `பாரதி - வாசு' என்ற பெயரில் 2 படங்களை இயக்கினார்கள். அதன் பிறகு இவர்கள் தனித்து வெளிப்பட விரும்பி, வாசு தனியாக `பி.வாசு' என்ற பெயரில் பிரபு - ரூபினி நடித்த `என் தங்கச்சி படிச்சவ' படத்தை இயக்கினார். படம் பெரிய வெற்றி.
http://www.dailythanthi.com/article....ate=12/31/2007
"நடிகன்'' படத்தில்
மனோரமாவுக்கு ஜோடியாக சத்யராஜ்!
"நடிகன்'' படத்தில் வயோதிகர், இளைஞன் என 2 வேடங்களிலும் மாறி மாறி வரும் சத்யராஜ், வயோதிக தோற்றத்தில் நடிகை மனோரமாவின் ஜோடியாக நடித்தார்.
"நடிகன்'' படத்தில் கிடைத்த அனுபவங்கள் பற்றி சத்யராஜ் கூறியதாவது:-
"நடிகன் படத்தில் இளைஞனான நான் வயோதிக தோற்றத்துக்கும் மாறி, காமெடி பண்ணுவேன்.
குஷ்பு
இளைஞன் வேடத்தில் எனக்கு ஜோடியாக குஷ்பு நடிக்க முடிவாயிற்று. "சின்னத்தம்பி'' படத்துக்குப் பிறகு குஷ்பு ரொம்பவும் புகழ் பெற்று விளங்கினார். இந்த வகையில், குஷ்பு என்னுடன் ஜோடி சேர்ந்த முதல் படமும் இதுதான்.
ஆனால் வயதான கெட்டப்புக்குத்தான் யாரை ஜோடியாகப் போடுவது என்று தீவிரமாக பரிசீலனை நடந்தது. சீனியர் நடிகைகளில் ரசிகர்களிடம் பிரபலமாக பேசப்பட்ட வைஜயந்திமாலா, பத்மினி, சரோஜாதேவி, ஷீலா ஆகியோரில் யார் என்னுடன் முதிய கேரக்டருக்கு சரியாக இருப்பார்கள் என்று பரிசீலனை தொடர்ந்தது.
ஆனால், இவர்களெல்லாம் தங்கள் தனித்துவ நடிப்பால் சாதித்தவர்கள். காமெடிப் படத்தில் எனது ஜோடியாக இவர்களில் யாரைப் போட்டாலும் கதையின் காமெடித்தன்மை விலகிப் போக வாய்ப்பு உண்டு என்பது பலருடைய கருத்தாக இருந்தது.
மனோரமா
முடிவில் நடிப்பில் காமெடி சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டிருக்கும் மனோரமா ஆச்சியை போடலாம் என்று முடிவு செய்தார்கள். எனக்கும் இந்த யோசனை சரியாகப்பட்டது.
மனோரமா ஆச்சி காமெடியில் கரை கண்டவர். அவர் நடிகர் திலகம் சிவாஜியுடன் ஜோடி சேர்ந்த ஒரே படமான "ஞானப் பறவை''யில் கூட காமெடி செய்யவில்லை. குணசித்ரமாகவே மின்னினார். அதற்குப் பிறகு ஆச்சியுடன் ஜோடி சேர வாய்ப்புக் கிடைத்த ஒரே ஹீரோ
கவுண்டமணி
காட்சியை டைரக்டர் பி.வாசு விளக்கிக் சொல்லும்போதே எங்களுக்கு சிரிப்பு பிய்த்துக் கொள்ளும். அதிலும் கவுண்டமணி அண்ணன் காமெடியில் ரகளையே பண்ணினார். நான் குஷ்புவை கதைப்படி ஏற்கனவே பார்த்திருந்தாலும், அப்போதுதான் பார்ப்பது போல காதல் பார்வை பார்ப்பேன். இந்தக் காட்சியில் கவுண்டமணி அண்ணன் நடிக்கும்போது, "அடேய்! அடேய்! அது எப்படிடா உன் முகத்தை இப்படி குழந்தையாட்டம் மாத்திக்கிடறே? இந்த மூஞ்சை இப்பத்தான் பார்க்கிறேன்னு சொல்றியே, அது எப்படிடா? நான் இதுக்கு முன்னாடி கேப்மாரி, மொள்ளமாரி, முடிச்சவிக்கி அப்படீன்னு பல பேரை பார்த்திருக்கிறேன். ஆனா இவனுங்க அத்தனை பேரையும் மொத்தமா உன் முகத்துல தாண்டா பார்க்கிறேன்'' என்று சொல்லும்போது டைரக்டர் உட்பட அத்தனை பேருமே சிரித்து விட்டோம்.
முதலில், இந்த `கேப்மாரி' வசனத்தைப் பேச கவுண்டமணி அண்ணன் மறுத்து விட்டார். நான் அவரிடம், "அண்ணே! இது நீங்கள் என்னைப் பார்த்தா பேசுகிறீர்கள்? நான் நடிக்கிற கேரக்டரை பார்த்து பேசுவதாக நினைத்துக் கொள்ளுங்கள். அப்படியே நீங்கள் திட்டுவதாக வருகிற அந்த பாராட்டு முழுக்க என் நடிப்புக்கு கொடுக்கிற கிரடிட் மாதிரி தானே'' என்றேன். அதன்பிறகே அந்த வசனத்தை பேசி நடித்தார்.
சாரதா பாராட்டு
ஒரு முறை `நடிகன்' படத்தின் படப்பிடிப்பை பார்க்க நடிகை சாரதா வந்திருந்தார். நாங்கள் நடித்த பல காட்சிகளை பார்த்து விட்டு குலுங்கிக் குலுங்கி சிரித்தார். நடிப்புக்காக 3 முறை தேசிய விருது பெற்ற நடிகை, அவரே சிரிக்கும்போது, எங்களால் மட்டும் எப்படி சிரிப்பை அடக்க முடியும்! பல காட்சிகளில் வசனம் பேசும் போதே சிரித்து விடுவோம்.
மூன்று பேர் நடிக்கிற ஒரு காட்சியில் இப்படி மாற்றி மாற்றி மூன்று பேருமே சிரித்து வைத்தால் என்னாகும்? இப்படி ஒரு காட்சிக்கு 10 டேக் வரை எடுத்தார், டைரக்டர் பி.வாசு. அவரும் சிரித்துக் கொண்டேதான் காட்சிகளை இயக்கினார் என்பது இதில் கூடுதலான தகவல்.
படத்தின் பெரும்பகுதிக் காட்சிகளின் படப்பிடிப்பு ஐந்து நட்சத்திர ஓட்டல்களில்தான் நடந்தது. அங்கே படப்பிடிப்பு நடத்த நாள் வாடகையெல்லாம் கிடையாது. மணி வாடகை. அதாவது ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு வாடகை என்று ஒரு பெரிய தொகையை நிர்ணயித்து இருந்தார்கள். ஆனாலும் தயாரிப்பாளர் ராமநாதன் செலவை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை.
இந்தியில் நடிகர் ஷம்மி கபூர் நடித்த `புரொபசர்' என்ற படத்தை தழுவிதான் இந்தப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. என்றாலும் இந்தியை விட தமிழ்ப்படம் நன்றாக ஓடியது. காமெடிக் காட்சிகளுடன், இளையராஜாவின் பாடல்களும் "நடிகன்'' வெற்றிக்கு காரணமாய்அமைந்தன.
கமலஹாசன்
படத்தின் வெற்றி விழாவில் கமலஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "படத்தில் இரண்டு குளுமையான விஷயங்கள், ஒன்று: கொடைக்கானல். அடுத்தது: குஷ்பு'' என்று சொல்லி கைதட்டல் வாங்கினார்.
மல்லு வேட்டி மைனர்
`நடிகன்' படத்தின் வெற்றிச் சூட்டோடு எனக்கு அமைந்த படம் `மல்லுவேட்டி மைனர்', முதல் வசந்தம் படத்தில் கதை எழுதி என்னை அந்தப்படத்தின் மூலம் `குங்குமப் பொட்டு கவுண்டராக' திரை அறியச் செய்த கலைமணி, இந்தப்படத்தின் கதை வசனத்துடன் தயாரிப்பு பொறுப்பையும் ஏற்றிருந்தார். மனோபாலா டைரக்டு செய்தார். மைனர், குடும்பத் தலைவன் என இரண்டு மாறுபட்ட கேரக்டர்களில் நான் நடித்தேன். நடிகை ஷோபனாவும், சீதாவும் என் ஜோடியாக நடித்தார்கள். பி.ஆர்.விஜயலட்சுமி கேமராவை வித்தியாசமான கோணங்களில் கையாண்டர்.
முழுப்படத்தையும் 35 நாட்களில் எடுத்து முடித்து விட்டார், மனோபாலா. இதுவும் வெற்றிப்படமானது. மனோபாலா பற்றி சொல்லும்போது, "ஆலிவுட்டில் புகழ் பெற்ற `பென்ஹர்' படத்தைக் கூட 40 நாளில் எடுத்து முடித்து விடுவார்'' என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு டைரக்ஷனில் வேகமானவர் மனோபாலா.
போட்டி நடனம்
இந்தப்படத்தில் எனக்கும் ஷோபனாவுக்கும் ஒரு போட்டி நடனம் வருகிற மாதிரி காட்சி இருந்தது. கதை சொல்லும்போதே அதைச் சொல்லி விட்டார்கள் என்றாலும், நடனத்துக்கென்றே பிறந்த ஷோபனா எங்கே... நடனமே தெரியாமல் நடிக்க வந்த நானெங்கே?
போகப்போக சினிமாவுக்கேற்ற நடனங்களை, மாஸ்டர்கள் கற்றுத் தருவதை வைத்து ஆடிக் கொண்டிருந்தேன். அதாவது ஓரளவுக்கு நடனத்தில் தேர்ந்திருந்தேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதில் பெரிய கூத்து, இந்த நடனப் போட்டியில் நான்தான் ஷோபனாவை ஜெயிக்கிறேன்! மல்லு வேட்டியை மடித்துக் கட்டியபடி `அடிவாடி' என்று நான் பாடுகிற பாடல் கூட இளையராஜா இசையில் தயாராகி விட்டது.
படப்பிடிப்பு கோபிசெட்டிபாளையத்தில் நடந்தது. ஷோபனாவுக்கும் எனக்குமான நடன போட்டியை படமாக்கும் நாள் நெருங்க நெருங்க, என் மனம் `திக்..திக்..' என்று அடித்துக் கொண்டது.
கோபியில் உள்ள எமரால்டு ஓட்டலில் தான் படப்பிடிப்பு குழுவினர் தங்கியிருந்தோம். நான் டான்ஸ் மாஸ்டர் புலிïர் சரோஜாவிடம், "என்ன மாஸ்டர்! நான் ஷோபனாவை நடனப் போட்டியில் ஜெயிக்க வேண்டும்! இது எப்படி முடியும்?'' என்றேன்.
அவரோ, "கவலைப்படாதீங்க. டான்ஸ் எடுக்கிறதுக்கு மூணு நாளைக்கு முன்னாடியே உங்களுக்கு ஸ்பெஷல் டிரெயினிங் கொடுத்து விடுகிறேன்'' என்றார்.
சொன்னது போலவே ஓட்டலின் மொட்டை மாடியில் பயிற்சி கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்தபின், இரவு வேளையில் முட்டி பெயர்ந்து போகும் அளவுக்கு நடனப் பயிற்சி கொடுத்தார்!
நடனப் போட்டி படமாக்கப்படும் நாளும் வந்தது. கோபியில் உள்ள பாரிïர் கோவில் முன்பாக பக்தர்கள் நடுவில் இந்த நடனக் காட்சியை எடுத்தார்கள். படப்பிடிப்புக்கு வந்ததும் என்னைப் பார்த்து சிரித்தபடியே தலையில் அடித்துக் கொண்ட ஷோபனா, "பாருங்க சார்! உங்ககிட்ட நடனமாடி நான் தோற்கிற மாதிரி ஆகப் போகுதே!'' என்றார்.
நான் அவரிடம், "உங்க அத்தை பத்மினி நாட்டியப் பேரொளின்னு பட்டம் வாங்கினவங்க. அவங்க புரட்சி நடிகர் எம்.ஜி.ஆருடன் நடித்த `மன்னாதி மன்னன்' படத்தில் நடனப் போட்டியில் தோற்கிற மாதிரி தானே நடித்தார்கள்'' என்றேன். பதிலுக்கு அவர், "எம்.ஜி.ஆரும் நீங்களும் ஒன்றா?'' என்று கிண்டலை தொடர்ந்தார்.
இதெல்லாம் காமிரா முன் நிற்கிற வரைதான். நடனப் போட்டி ஆரம் பமானபோது, ஏற்கனவே நடனத்தில் மிகத் திறமைசாலியான ஷோபனா அற்புதமாக ஆட, நான் புலிïர் சரோஜா மாஸ்டரின் கடினப் பயிற்சியில் பெற்ற அனுபவத்தில் ஆடினேன்.
இந்த போட்டி நடனக் காட்சியை கொளுத்தும் வெயிலில் எடுத்தார்கள். வெறும்காலில்தான் ஆட வேண்டும். அப்படி ஆடினால் பாதம் வெந்து போகும். அதனால் பிளாஸ்டரை கட் பண்ணி, காலில் கட்டிக் கொண்டு ஆடினேன். இப்படி ஆடும்போது இரண்டு வசதி. ஒன்று: காலில் வெயில் சூடு ஏறாது. அடுத்தது: வெறும் காலுடன் ஆடியது போலவே தெரியும்.
நடனக் காட்சி சிறப்பாக அமைந்தது! அதைவிடச் சிறப்பு, காட்சி படமாக்கி முடிந்ததும் நடனத்தில் மேதையான ஷோபனா என்னை என் `ஆட்டத்துக்காக' பாராட்டியது தான்!''
http://www.dailythanthi.com/article....sdate=1/2/2008
In thaai nadu, TMS sung all the songs.
"Mallu vetti minor" will go down in tamil cinema history as the most vulgar film ever.
Also, it flopped at the box office.