Originally Posted by DINA-MALAR
* சிரத்தை (அக்கறை) தான் நமக்குத் தேவை. மனிதன் தன் நிலையிலிருந்து வளர்வதற்கும் தேய்வதற்கும் சிரத்தை தான் முக்கியகாரணமாக இருக்கிறது.
* பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல. மாறாக வலிமையை குறித்துச் சிந்திப்பது தான்.
* சுதந்திரமானவனாக இருங்கள். எவரிடத்தும் எந்தச் சிறு உதவியும் எதிர்பார்க்காதீர்கள்.
* இல்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். என்னால் முடியாது என்று சொல்லாதீர்கள். உண்மையில் நாம் வரம்பில்லா வலிமையும் ஆற்றலும் கொண்டவர்கள்.
* சிங்கங்களே! எழுந்து வாருங்கள். செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். அமரத்துவம் பெற்றவர்கள் நாம். அழியாத திருவருளைப் பெற்றவர்கள்.
* சுயநலமற்ற தன்மையோடு பணிகளைச் செய்யுங்கள். எந்தஇடத்திலும் வெற்றியை நிர்ணயிப்பது சுயநலமின்மையே.
* சுயநலம், சுயநலமின்மை இரண்டுக்கும் உள்ள வேறுபாடு கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் போன்றது.
-விவேகானந்தர்