வைரமுத்து
இத்திரியில் கவிஞர், திரையிசைப் பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளர் வைரமுத்துவின் கவிதைகள், பாடல்கள் மற்றும் நூல்களைப் பற்றிய உங்களது பார்வைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Printable View
வைரமுத்து
இத்திரியில் கவிஞர், திரையிசைப் பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளர் வைரமுத்துவின் கவிதைகள், பாடல்கள் மற்றும் நூல்களைப் பற்றிய உங்களது பார்வைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வைரமுத்து:ஆளுமைச்சித்திரம்
-- ஜெயமோகன்
Tgood thread.
thanniir desam..all time favourite.
Kavirajan kathai is another one.
Will discuss in detail tomorrow.
எனக்கும் பிடிக்கும் ஹமித். ஆரம்பமே அழகா இருக்கும். கடலைப் பற்றிய விவரணையோடு நூலை இவ்வாறு தொடங்குகிறார்.Quote:
Originally Posted by hamid
கடல்.
உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.
வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜம்.
கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை.
தண்ணீர் தேசத்தில் பல உவமைகள் கவர்ந்தவை. அவற்றுள் சில..
நிலவைப் பெற்றெடுப்பதற்கு பிரசவ
வலியில் சிவந்து கொண்டிருக்கும் கிழக்கு.
தண்ணீரில் எடையிழக்கும் பாரம்போல்
துன்பம் எடையிழந்தது.
வாடைக் காற்றுக்கு
தூக்கத்தில் நடக்கிற வியாதி
போலும். தட்டுத் தடுமாறி
வீசிக்கொண்டிருந்தது.
பொறுமையாயிருந்தால் தண்ணீரைக் கூடச்
சல்லடையில் அள்ளலாம் - அது பனிக்
கட்டியாகும்வரை பொறுத்திருந்தால்.
உணவைப் போலவே
உரையாடலும் மெள்ள மெள்ள
சுருங்கிவிட்டது.
நகைச்சுவையும் அங்கங்கே..
ஒவ்வொரு வரியையும் வெவ்வேறு சுதியில்
சமையலறையிலுருந்து சலிம் பாடினான்.
மீன்களுக்கு மட்டும் காது கேட்குமானால்
அவன் அறுப்பதற்கு முன்பே மரித்திருக்கும்.
(குறிப்பு: ஏப்பிரல் - மே 2009 -வாக்கில் வைரமுத்துவால் எழுதப்பட்டது - தினத்தந்தியிலும் இக்கவிதை மே 2009 -இல் வெளிவந்தது)
இனம் தின்னும் ராஜபட்சே
---------------------------------
சொந்தநாய்களுக்குச்
சொத்தெழுதிவைக்கும் தேசங்களே!
ஓர் இனமே
நிலமிழந்து நிற்கிறதே
நெஞ்சிரங்க மாட்டீரா?
பூனையொன்று காய்ச்சல் கண்டால்
மெர்சிடீஸ் கார் ஏற்றி
மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!
ஈழத்து உப்பங்கழியில்
மரணத்தின் வட்டத்தில்
மனித குலம் நிற்கிறதே!
மனம் அருள மாட்டீரா?
வற்றியகுளத்தில் செத்துக்கிடக்கும்
வாளை மீனைப்போல்
உமிழ்நீர் வற்றிய வாயில்
ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு
ரொட்டி ரொட்டி ரொட்டியென்று
கைநீட்டும் விரல்கள்
கண்குத்தவில்லையோ அமெரிக்க அதிபரே!
தமிழச்சிகளின் மானக்குழிகளில்
துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்
சிங்களவெறிக் கூத்துகளை
அறிந்தும் அறியாயோ ஐ.நாவே?
வாய்வழி புகட்டிய தாய்ப்பால்
காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு
கண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்
கதறும் தாய்மார் மறந்தொழிந்தாயோ
அழத்தெரியாத ஐரோப்பாவே!
அடுக்கிவைத்த உடல்களில்
எந்த உடல் தகப்பன் உடல் என்று தேடி
அடையாளம் தெரியாத ஒரு பிணத்துக்கு
அழுது தொலைக்கும் பிள்ளைகளின்
பெருங்குரல் கேட்டிலையோ பிரிட்டிஷ் அரசே!
எனக்குள்ள கவலையெல்லாம்
இனம் தின்னும்
ராட்சசபக்ஷே மீதல்ல
ஈழப்போர் முடிவதற்குள்
தலைவர்கள் ஆகத்துடிக்கும்
தலையில்லாப் பேர்வழிகள் மீதல்ல
எம்மைக்
குறையாண்மை செய்திருக்கும்
இறையாண்மை மீதுதான்
குரங்குகள் கூடிக்
கட்டமுடிந்த பாலத்தை
மனிதர்கள் கூடிக்
கட்ட முடியவில்லையே
ஆனாலும்
போரின் முடிவென்பது
இனத்தின் முடிவல்ல
எந்த இரவுக்குள்ளும்
பகல் புதைக்கப்படுவதில்லை
எந்த தோல்விக்குள்ளும்
இனம் புதைக்கப்படுவதில்லை
அங்கே
சிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்
பீரங்கி ஓசையில்
தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்
ஈழப்பனைமரத்தில்
என்றேனும் கூடுகட்டும்.
========================
சற்றே கூர்ந்து கவனித்தால் தெரியும் - வைரமுத்து, அவருடைய "இனத் தலைவரை" - இதில் விளிக்கவேயில்லை!
"அவரை" விளிப்பது பொருத்தமில்லை / பயனில்லை என்றுதான் - அய்ரோப்பாவே, அமெரிக்காவே - என்று நன்றாகவே கூவுகிறாரோ?.
இந்தக் "கிராமத்துப் பறவையை" - சில பல கடல்கள் தாண்டி அழைத்துப் போன ஈழத்தவர்களுக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்.
இவர், முதலில் தனக்கு வழங்கப்பட்ட "பத்ம சிறீ" விருதைத் திருப்பித் தந்துவிடட்டும்; அல்லது இதுபோல மாய்மாலக் கவிதைகள் எழுதாமல் சும்மா கிடக்கட்டும்.
இவருடைய தலைவருடன் அதிகாலைத் தொலைபேசிப் பொழுது போக்கட்டும்; தமிழர்களை மடையர்களென்று இவர் இன்னமும் நினைக்க வேண்டியதில்லை.
" தனது லட்சியங்களுக்கு எதிரான திசையில் காலில் குருதி வடிய" (அவருடைய சொல்லாடல்தான்!) ஓடிக்கொண்டிருக்கும் வைரமுத்து - தனது பேனா முனையை ஒடித்து விடுவது நல்லது.
கவிராஜன் கதை.
கள்ளிக்காட்டு இதிகாசம்
சிகரங்கள் நோக்கி
தண்ணீர் தேசம்.
வில்லோடு வா நிலவே
கருவாச்சி காவியம்
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
so many wonderful literary works கவிஞர் வைரமுத்து has given us
கொஞ்சம் தேநீர் நிறைய வானம் is a wonderful collection of கவிதைகள்.
EVER SINCE I READ முதன் முதலாய் அம்மாவுக்கு....கவிதை , WHENEVER I PREPARE கொத்தமல்லிச் சட்னி .. MY HEART AUTOMATICALLY WONDER 'இன்னிக்கு வைரமுத்து சார்'S அம்மா மாதிரி செய்யலாமா OR GRIND WITH TOMATOES OR VARIATION PREPARATION'.. SIMPLY I CAN 'T AVOID THAT THOUGHT ...பழகிப்போச்சு.
பெய்யெனப் பெய்யும் மழை புத்தகத்தில் மழைக்குருவி என்ற கவிதை எனக்கு ரொம்ப பிடித்தமானது...
HIS LOVE FOR NATURE .
கொஞ்சம் தேநீர் நிறைய வானம் புத்தகத்தில் ஒரு காலத்தில் ஒரு குளம் இருந்தது.....makes me think always .
மனுசப் பயகூடி
மண்ண ஏமாத்த
மழையெல்லாம் கூடி
மனுசன ஏமாத்த ..
so true .
when I first moved to அமெரிக்கா, best thing I loved is running WATER .
I grew up in a middle class family , my mom used wake me up to carry water or wait for our turn with the clock in a ஒண்டுக்குடுத்தனம் ஏரியா.
கடிகாரம் வைச்சு ஒவ்வொரு குடித்தனமும் 5 mins பிடிப்பாங்க , குடம், வாளி வைச்சு or tube போட்டு .. you needed to be ready for your turn or you lost இட்..இல்லைன்னா பக்கத்து வீட்டுலே சொல்லணும், morning வேலை இருக்கு, நீங்க பிடிங்க நான் உங்க turn லே பிடிக்கறேன் என்று . :(
She was working too . She needed her children and hubby co -operation to carry out the household chores . Every day a working class lady had this taxing chore. Poor lady, பாவம் எங்க அம்மா.
Everyday after my walk or come inside from outside when i wash my legs in my yard water tap here , my heart automatically wishes "GOD BLESS AMERICA ".மனசு உண்மையா சொல்லிக்கும்.
தேங்க்ஸ் TO மேடம்.ஜெயலலிதா for THE WONDERFUL PROGRAM -RAIN WATER HARVESTING SCHEME TO RELIEF WATER SHORTAGE .
HOPE IT HELPS REGULAR FOLKS . Basic need - WATER .
வினதா.
மனதில் கொஞ்சமாவது ஈரம் இருப்பதனாலேயே இப்படிப்பட்ட கவிதைகளை எழுதினார். ஒரு எழுத்தாளர் என்ற முறையில் தன் கோபத்தை எழுத்தில் வடித்திருக்கிறார். இந்த கவிதை மட்டுமல்ல, விடை கொடு எங்கள் நாடே! என்ற கன்னத்தில் முத்தமிட்டால் படப் பாடலும் உண்டு.Quote:
Originally Posted by geno
உங்கள் தார்மீக கோபத்தினை ஈழத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் வாழ்ந்த அப்துல் கலாமிடம் காட்டுங்கள். அரசியல் வாதிகளிடம் காட்டுங்கள். அதை விட்டு கலைஞர்களை, புலவர்களை "விருதுகளை திருப்பிக் கொடுங்கள்!" எனச் சொல்வதில் விவேகமே இல்லை. கமலிடம் இதுபோன்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஒரு பதில் நச்சென்று சொல்லியிருந்தார். இப்போ ஞாபகம் வரமாட்டேஙுது.
couple of poetry on காதல், காதலன்-காதலி பிரிந்து பின்னாளில் வாழ்க்கையில் சந்திக்கும் போது போன்ற situations etc ..
ரொம்ப அருமையாக இருக்கும்.
இப்படி எத்தனை காதல் கதைகளோ...... பெய்யென பெய்யும் மழை புத்தகம்.
'சிதைந்தது மனது
கருவேல மரத்தில் சிக்கிய பட்டமாய்...'
இலையில் தங்கிய துளிகள்....கொஞ்சம் தேநீர் நிறைய வானம் புத்தகம்.
கவிஞரின் private works ரொம்ப அருமையாக இருக்கும்.
வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் வாங்கிவிட்டேன், அய்யா.
I need to organize myself , உக்காந்து படிப்பேன்.
There is வைரமுத்து கவிதைகள் - பெரிய தடியான 885 பக்கங்கள் உள்ள BOOK FROM EARLY 70S TO LATE 90 .. OH WHAT A FEAST.
I love it.
vinatha.
ஊழி.
நிலையாமை ஒன்றே நிலையானது என்பது நிலைத்த உண்மை. ஆனால், இந்தக் கவிதையில் நான் நிலையாமை பேசியிருப்பது மானுடத்தை மாயாவாதத்தில் தள்ள அல்ல. இருக்கும் பூமிக்கு இன்னொரு சிறகு கட்ட; அழிவை உழுது அன்பு விதைக்க.
கடைசியாய் ஒருமுறை
கூவிக்கொள்க குயில்களே!
கடைசியாய் ஒருமுறை
வான்பாருங்கள் மலர்களே!
இப்போது வழங்கும் முத்தத்திலிருந்து
இதழ்பிரிக்காதீர் காதலரே!
மார்புகுடிக்கும் மழலைகளைத்
தள்ளிவிடாதீர் தாயர்களே!
எது நேரக்கூடாதோ
அது நேரப்போகிறது
சிறிது நேரம்தான்...
பூமி சிதறப்போகிறது
நாலரைக்கோடி ஆண்டுகளின்
அடையாளச் சின்னம்
அழியப் போகிறது
சூரியக்குயவன் செய்த
பெரிய மண்பானை
உடையப் போகிறது
* * * * *
திட்டுத்திட்டாய் பூமிக்குள்ளிருக்கும்
தட்டுக்கள் எழும்
ஒன்றன்மீதொன்று படையெடுக்க...
பூமியின் வயிற்றெரிச்சலாய்க்
காலங்காலமாய்க் கனன்றுகிடந்த
அக்கினிக்குழம்புகள் விடுதலைகேட்க...
வெறிகொண்ட மேகங்கள்
விரைவதைப்போலப்
பாறைகள் பூமிக்குள்
பயணப்பட...
தொடங்கிவிட்டது தொடங்கிவிட்டது
பூமிக்குள் ஒரு குருட்சேத்திரம்
* * * * *
பறவைகளுக்கு மூக்குவேர்த்தது
விலங்குகளுக்கு விளங்கிவிட்டது
குஞ்சுபிறக்கத் திறக்கும் முட்டைபோல்
பொத்துக்கொண்டது பூமியின் ஓடு
ஜீசஸ்! ஈஸ்வரா! அல்லா! முருகா!
காற்றில் சமாதியாயின கதறல்கள்
* * * * *
வான் நடுங்கியது
பூமியின் இடியில்
மேகம் நனைந்தது
கடல்களின் அலையில்
பூமியின் வயிற்றில்
புகுந்தன தேசங்கள்
கடல்களை எரித்தது
அக்கினிக் குழம்பு
குன்று பெயர்த்துக்
கோலி ஆடியது காற்று
* * * * *
பாளம்பாளமாய்
பூமி பிளக்க...
பூகம்ப அளவை சொல்லும்
ரிக்டர் வெடிக்க...
ஊழித்தீயின் உச்சிப்பொறிகள்
கண்டம் விட்டுக் கண்டம் குதிக்க...
அவரவர் வீடு அவரவர் கல்லறை
* * * * *
மலையைப் பறித்துக் கடலில் எறிந்தது
மலை பறித்த பள்ளத்தில்
கடல் அள்ளி ஊற்றியது
பூகோளம் தெரியாத பூகம்பம்!
தன் சுற்று வட்டம்
இடவலமா வல இடமா
முதன்முதலில் பூமிக்குச் சந்தேகம் வந்தது
பட்டாசு கொளுத்திய புட்டியாய்
பூமிப்பந்து பொடியாதல் கண்டு
விசும்பியது விசும்பு
எல்லா மேகங்களையும் இழுத்துத்
தன் ஒற்றைக்கண்ணை மூடிக்கொண்டது
* * * * *
பூகோளம் அறியா பூகம்பத்திற்குச்
சரித்திரம் எங்கேதெரியப்போகிறது
பிரமிடுகளைப் பிய்த்துப்பிடுங்கி
மம்மிகளை எல்லாம் வெளியேற்றியது
உள்ளே
புதிய பிணங்களைப் போட்டுப்போனது
பசிபிக்கின் கன்னத்தில்
மச்சங்களாயிருந்த ஹவாய்த் தீவுகள்
பருக்காய் உதிர்ந்தனவே!
மூவாயிரம் ஆண்டு மூத்தமரங்கள்
வேரில்லாத பென்சில்களாய்
வீழ்ந்து கழிந்தனவே!
நிமிர்ந்ததெல்லாம்
சாய்ந்து போனதில்
சாய்ந்த ஒன்று நிமிர்ந்துகொண்டது
பைசா கோபுரம்!
* * * * *
அட்லாண்டிக் தூக்கியெறிந்த
அலையன்று விழுந்ததில்
சகாப்த உறக்கம் கலைந்தது - சகாரா
விழுந்த அலை எழுவதற்குள்
சகாரா பாவம் சமுத்திரமானது
சீனப் பெருஞ்சுவர் எடுத்துப்
பாக்குப் போட்டுக்கொண்ட பூகம்பம்
தாஜ்மகாலைச் சுண்ணாம்பாய்த்
தகர்த்துக்கொண்டு
வெற்றிலைபோட ஓடியது
ஆப்பிரிக்கக் காட்டுக்கு.
இன்னொரு கிரகம் ஏகக் கருதி
ஆக்சிஜன் தாண்டிய உயரம் பறந்து
இறந்து விழுந்தன இந்தியப் புறாக்கள்
உறுப்புகள் இடம்மாறிப்போன பூமி கேட்டது :
இது இறப்பா?
இன்னொரு பிறப்பா?
* * * * *
எது நைல்? எது தேம்ஸ்?
எது கங்கை? எது அமேசான்?
எது காவிரி? எது வால்கா?
பிரித்துச் சொல்ல நதிகள் இல்லை
பெயர்கள் வைத்தவன் எவனுமில்லை
எது சீனா? எது ரஷ்யா?
எது இந்தியா? எது அமெரிக்கா?
எது ஈரான்? எது லெபனான்?
பிரித்துச் சொல்ல தேசம் இல்லை
பிரஜை என்று யாருமில்லை
சுவாசிக்க ஆள்தேடி
அலைந்தது காற்று
துள்ள ஒரு மீனில்லை
துடித்தது அலை
* * * * *
வெறுமை...வெறுமை...
தோன்றியபோது
தோன்றிய வெறுமை
மீண்டும் அமீபா...
மீண்டும் பாரமேசியம்...
மனிதா!
வருகின்ற பூகம்பம்
வரட்டும் என்றாவது
போர்களை நிறுத்து
புன்னகை உடுத்து
பூமியை நேசி
பூக்களை ரசி
மனிதரை மதி
மண்ணைத் துதி
இன்றாவது.
* * * * *
:clap: :clap: :clap:Quote:
Originally Posted by geno
பாட்டமி? பகுத்தறிவுக்கு இடிக்கிறதே!
விடை கொடு எங்கள் நாடே, கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்கக எழுதப்பட்டது.Quote:
Originally Posted by venkkiram
நண்பா உனக்கொரு வெண்பா என்ற தலைப்பில் உயிர்க்கொல்லி நோயாம் எய்ட்ஸ் பற்றி சில வெண்பாக்களை எழுதியிருக்கிறார்.
*******
ஊரைக் குடிக்கும் உயிர்க்கொல்லி நோயொன்று
பாரைக் குடித்துவிடப் பார்க்கிறதே - பாரடா
வையத்தில் மானுடம் வாழுமோ என்னுமோர்
அய்யத்தில் உள்ளோம் அடா!
*******
போதை மருந்தில் பொருந்தாத இன்பத்தில்
பாதை வழுவிய பாலுறவில் - காதைக்
கழுவாத ஊசி கழிவுரத் தத்தில்
நுழையும் உயிர்க்கொல்லி நோய்!
*******
இடைகாட்டி மெல்ல இளைய தனத்தின்
எடைகாட்டி இன்பம் இழைப்பாள் - மடையா
கொலைமகள் ஆகியே கொல்லுவாள் உன்னை
விலைமகள் ஆசை விடு!
*******
கண்ணுக்குத் தோன்றாத காமக் கிருமிகளோ
புண்ணுக்குள் சென்று புலன்கொல்லும் - கண்ணா
முறையோடு சேராத மோகம் பிறந்தால்
உறையோடு போர்செய்தே உய்!
*******
கரைமீறிச் சேர்ந்தாடும் காமக் கலப்பில்
உறைமீறி நோய்சேர்வ துண்டே - உறைநம்பிக்
கம்மாக் கரையோ கடற்கரையோ தேடாமல்
சும்மா இருத்தல் சுகம்!
*******
தோகைமார் தந்த சுகநோயோ உன்கட்டை
வேகையிலும் விட்டு விலகாதே - ஆகையினால்
விற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு
கற்பனையை வீட்டுக்குள் காட்டு!
*******
கலவிக்குப் போய்வந்த காமத்து நோயைத்
தலைவிக்கும் ஈவான் தலைவன் - கலங்காதே
காவலனாய் வாய்த்தவனே கண்ணகிக்கு நோய்தந்தால்
கோவலனைக் கூசாமல் கொல்!
*******
ஓரினச் சேர்க்கை உறவாலே மானுடத்துப்
பேரினச் சேர்க்கையே பிய்ந்துவிடும் - பாரில்
இயற்கை உறவென்னும் இன்பம் இருக்கச்
செயற்கை உறவென்ன சீ!
*******
தேன்குடிக்கப் போன திருவிடத்தில் உன்னுடைய
ஊன்குடிக்க ஒட்டும் உயிர்க்கொல்லி - ஆண்மகனே!
உல்லாச நோய்சிறிய ஓட்டையிலும் உட்புகுமே
சல்லாப வாசலைச் சாத்து!
*******
மோகக் கிறுக்கில் முறைதவறிப் போனவர்கள்
தேகம் இளைத்தபடி தேய்கின்றார் - ஆகப்
பொறுப்பற்ற வாழ்வில் புகுந்தபலர் இங்கே
உறுப்பற்றுப் போவார் உணர்!
*******
பெண்ணின் சதைமட்டும் பேணுகின்ற ஏடுகளைக்
கண்ணைக் கெடுக்கும் கலைகளை - இன்றே
எரியூட்ட வேண்டும் இளைய குலம்வாழ
அறிவூட்ட வேண்டும் அறி!
*******
துணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்(கு)
இணையாக வேறுமருந் தில்லை - மனைவியெனும்
மானிடத்து மட்டுமே மையல் வளர்த்திந்த
மானுடத்தை வாழ்விப்போம் வா!
*******
நன்றி. பிழை திருத்தி விட்டேன்.Quote:
Originally Posted by jaiganes
ஒத்தையடிப் பாதையிலே
ஊர்வலமாப் போறவளே
வெட்டரிவா வச்சவளே
விந்திவிந்திப் போறதெங்கே?....
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல ...புத்த்கத்திலிருந்து
ஒரு நாட்டுப்புற கவிதை எனக்கு ரொம்ப பிடித்தமானது.
I love this collection not only for கவிஞரின் கவிதைகள், it is extra special.
முன்னுரை, கவிஞரின் மனைவி ரொம்ப அழகாக எழுதி இருக்காங்க.
அவங்களே பெரிய கவிஞர், எழுத்தாளர்.
முன்னுரை படிக்கும் போதே அவங்களுக்கு அவங்க கணவரின் மீதான காதல் , பெருமை, admiration பளிச்சுன்னு தெரியும்.
very intimate & proud thoughts from her heart .
மனதிற்கு நிறைவான முன்னுரை , எத்தனையோ தடவை நான் முன்னுரை மட்டுமே படித்து , சந்தோஷமா புத்தகத்தை
மேலேயே வைத்துக்கொண்டு தூங்கிருக்கேன்....beautiful
I just melt. :)
very happy for them .
love ,
வினதா.
last book fairla enakku entha vairamuthu book irukku, ethu illennu kozappama irukkum..
Thannir desam is the best I have read.. naraiya lines supera irukkum.. like
"Thanthi vanthaal iranthu pokum uLLangkaL padaiththu vittoom"
time to recollect and enjoy them.. :)
காதலிக்கும்போதும் கம்பீரம் குறையாதவன்.
அவள் மல்லிகைக்கரம் தொட்டு
மணிக்கட்டில் முத்தமிட்டான்.
நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது
நம்ப முடியவில்லை.
உண்மைக்கு உலகம் வைத்த
புனைப்பெயர் அதுதான்
சொன்தத்தில் விமானம் வாங்கலாம்..
அனுபவம் வாங்க முடியுமா?
enkitta irukkira PDF-la copy paste panna mudiyala.. anybody have a better copy which can be copy pasted here too?
Venki,
I fully agree with you that for everytime when there is some problem asking an artist to return back his / her awards is ridiculous. This has been happening too often.
At the same time, there is some merit in what geno says about the people left out in that poem by VM. Especially when he left out some people who were / are in power and who could have made a difference. What use calling the US and UN when you can't get your own ruler to do something about the tragedy? That aspect of being close to some people compromises his poetry as is evident in that poem. I have to accept it though I personally consider him the best film lyricist around. Wish he was more independent but then not all our wishes are granted, are they?
:clap: :clap: :clap: Suresh, you have echoed my exact opinion!I too admire his poetry, a regular fan indeed. But geno has a point, it must be conceded.
Venki, thanks for dedicating a thread for Vairamuthu :D :thumbsup:
And I like the title "Vadugapatti Vairamuthu" :)
Hamid,
Glad that you love Thanneer Dhaesam, one of my all time favourites. It's just difficult to quote one or two lines from it - the whole book is a great read in terms of poetic marvel and content. It's an experience !
Keep writing about it, it will be useful for those who have not experienced it. Naanum appappO contribute paNRaen :)
Vinatha, ஒத்தையடிப் பாதையிலே poetry is again a great one that showcases VM's mastery skills in "graamiya kavithaigaL" (he is a master with village/folk song lyrics too). I remember some lovely discussions on this particular poetry, steered mainly by geno in ulagam enbathu ethanai paer thread few years back. Will find and quote it here soon :)
Great, Please do. :)
கவிஞரின் கிராமியப்பாடல்கள் - From early 80s முதல் மரியாதை to current தென்மேற்குப் பருவக்காற்று (2011 ) FANTASTIC. :musicsmile:
remember all those compositions in தமிழ் films
ஆச கேப்ப களிக்காச
ஆச கெளுத்தி மீனுக்காச
அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக.....
ஆவாரம்பூவு ஆறேழு நாளா
நீ போகும் பாதையில் காத்திருக்கு....பாலா & ஜானு.
அச்சமில்லை அச்சமில்லை பாடல்கள்
காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே..... title song of மலையூர் மம்பட்டியான்
கண்ணான பூ மகனே......
கருத்தம்மா பாடல்கள்.
:musicsmile:
vinatha.
Hi Vinatha, I though I'd first post the poetry and then geno's post. So here we go...
விறகு
அவன்
ஒத்தையடிப் பாதையிலே
ஊர்வலமாப் போறவளே
வெட்டரிவா வச்சவளே
விந்திவிந்திப் போறதெங்கே?
கொண்டையில் பூமணக்கக்
கொசுவத்தில் நான்மணக்கத்
தண்டையில ஊர்மணக்கத்
தங்கமயில் போறதெங்கே?
தூக்குச் சட்டியில்ல
தொணைக்குவர யாருமில்ல
காலுக்குச் செருப்புமில்ல
காட்டுவழி போறதெங்கே?
அவள்
தூண்டிமுள்ளுக் கண்னழகா
தூரத்தில் பேரழகா
போறவளக் கேலிசெய்யும்
புளியவிதைப் பல்லழகா
முருக மலைமேல
முள்விறகு நானெடுக்க
பொழப்பு நடக்கணுமே
புறப்பட்டேன் கால்கடுக்க
ஒம்பொழப்பு தரையோட
எம்பொழப்பு மலையோட
நெத்திவெயில் பொழுதாச்சு
நேரமில்லை விளையாட
எட்டுமேல எட்டுவச்சு
எட்டுமைல் நான்நடந்தா
உச்சிப் பொழுதுவரும்
உள்நாக்கில் தாகம்வரும்
செத்தஎலி மிதந்தாலும்
செல்லாத்தா சுனைத்தண்ணி
உள்நாக்க நனைக்கையிலே
உசுருக்கு உசுருவரும்
கோடைவெயில் சுட்டதிலே
கொப்புளந்தான் மெத்தவரும்
கொப்புளத்தக் கற்பழிச்சுக்
குச்சிமுள்ளு குத்தவரும்
இண்டம் புதர் இழுக்கும்
எலந்தமரம் கைகிழிக்கும்
பொத்தக் கள்ளிமுள்ளு
பொடவையில நூலெடுக்கும்
பொசுக்கென்று மழைவருமோ?
போகையிலே புயல் வருமோ?
காஞ்சமரம் வெட்டையிலே
ரேஞ்சர் வருவானோ?
எங்கிருந்தோ பயம்வந்து
எச்சில் உலந்திவிடும்
மாத விலக்கானாலும்
பாதியில் நின்னுவிடும்
வேறகு வெட்டும் அரிவாளோ
வேறகவிட்டு வெரலுவெட்டும்
கத்தாழை நார்தானே
கடைசியிலே கயிறுகட்டும்
கட்டிவச்ச வேறகெடுத்து
நட்டுவச்சு நான்தூக்க
நலுங்காமத் தூக்கிவிட
நானெங்கே ஆள்பார்க்க?
இடுப்புப் புடிக்க
எங்கழுத்துக் கடுகடுக்க
மந்தைவந்து நான்சேர
மாலை மசங்கிவிடும்
மந்தையில வெறகவச்சா
மங்கையைத்தான் பாப்பாக
பச்சை விறகாச்சேன்னு
பாதிவெலை கேப்பாக
கேட்ட வெலைக்குவித்துக்
கேழ்வரகு வாங்கிக்கிட்டு
முந்தாநாள் கத்தரிக்கா
முந்தியில ஏந்திக்கிட்டுக்
குடிசைக்கு நான்போனாக்
குடிதண்ணீர் இருக்காது
என்வீட்டு அடுப்பெரிக்க
எனக்கு விறகிருக்காது
Good.
I prefer not to post the entire poetry.
These books are available, I think those of us genuinely interested should buy and enjoy them.
We highlight few stanzas, that's enough.
vinatha.
This is the post of geno. This has been written as a response to a hubber who was not very much fluent in thamizh. You can check this link for the detail discussion ; http://www.mayyam.com/hub/viewtopic....=asc&start=165
Quote:
Originally Posted by geno
Yes, I agree with you on this. Will follow it henceforth :)Quote:
Originally Posted by baroque
And I would like to re-produce my post (posted almost 6 years ago) on Kavinjar's kaLLikaattu ithigaasam;
ரொம்ப நாட்களாகத் தேடிய பிறகு அண்மையில்தான் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி - 2003ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பான 'கள்ளிக்காட்டு இதிகாசம்' கைய்யில் கிடைத்தது.
அதை படித்துமுடித்துவிட்டு இன்னும் அந்த பாதிப்பிலிருந்து மீளவில்லை நான். ஓர் ஏழை விவசாயின் வாழ்க்கையை இவ்வளவு யதார்தத்துடன் யாராவது வடித்திருப்பார்களா என்பது சந்தேகமே!
'பேயத்தேவர்' எனும் அந்த ஏழை விவசாயின் போராட்டம் நிறைந்த வாழ்க்கையை பக்கத்திலிருந்து பார்ப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது படிக்கும்போது. ஒவ்வொரு கதாபாத்திரத்தத்தையும் அதன் உணர்வுகளையும் மிக யதார்த்தமாக வடித்திருக்கிறார்.
இந்த அற்புதமான படைப்பில் ஒவ்வொரு வரியையும் அருமையாக, கவி ரசனையுடன் எழுதி இருக்கிறார். இந்த -இந்த வரிகள்தான் சிறந்தவை என்று வித்தியாசப்படுத்த முடியாத இந்தப் படைப்பில் - இடையிடையே அவர் குறிப்பிடும் வாழ்வியல் தத்துவங்களை இங்கே நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்போல் இருக்கிறது எனக்கு.
* இயற்கைதான் மனிதனின் ஆசான். தன் இருப்பு அசைவு இரண்டிலும் அறிவு போதிக்கிறது அது. வானமும் பூமியும் வகுப்பறைகளாய் யுகந்தோறும் யுகந்தோறும் அது பாடம் நடத்திக்கொண்டேயிருக்கிறது. புத்தியுள்ளவன் புரிந்து கொள்கிறான்; வலியுள்ளவன் அறிந்து கொள்கிறான். மனிதனின் படைப்பென்று பூமியில் எதுவும் இலலை; மனிதன் வெறும் கண்டுபிடிப்பாளனே தவிரப் படைப்பாளன் அல்லன். அப்படிப் பார்த்தால் மொழி ஒன்றுதான் மனிதனின் படைப்பு. மொழிகூட ஒலியின் வடிவம்தான். ஒலி மனிதனின் படைப்பல்ல; கண்டுபிடிப்புதான். ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் பின்னால் ஏதோ ஒரு வலி இருந்தே தீரும். வலி சொல்லிக் கொடுக்கும்; வலி கண்டவன் அறியக்கடவன்.
* மனிதனுக்கு மனிதர்கள் மட்டுமே தேவை என்பது இரண்டு பருவத்தில்: ஒன்று வாழத்தெரியாத இளம்பருவம்; இன்னொன்று வாழ்ந்து முடிந்த முதுபருவம். இரண்டிலும் தனிமைப்படுத்தப்படுவதுதான் வாழ்வின் சாபம்.
* சிலபேர்தான் பிள்ளைகளைப் பெறுகிறார்கள்; பலபேர் பத்துமாதம் சுமந்து பிரச்சினைகளைப் பெறுகிறார்கள்.
* வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் உதிர்ந்தாலும், மரத்திலிருந்து ஒரு பூ உதிர்ந்தாலும் இழப்பு இழப்புதான். மழைத்துளியில் எறும்பு மூழ்கினாலும், கடலுக்குள் கப்பல் மூழ்கினாலும் வலி வலிதான். அதனதன் நிலையில் அவரவர் துயரம் பெரியதுதான். துன்பத்தில் 'சிறுசு-பெருசு' என்பதெல்லாம் இடம் பொருள் ஏவல் குறித்த ஒப்பீடுகளல்லாமல் வேறென்ன?
* மாறிவரும் சமூகத்தில் மணவாழ்க்கை என்பது, ஆணால் கிட்டும் சௌகரியங்களைப் பெண்ணும், பெண்ணால் கிட்டும் சௌகரியங்களை ஆணும் சட்டப்படி திருடிக்கொள்ளும் சம்பிரதாயமாக இருக்கிறது.
* தாமத்தியத்தின் தேவை தீர்ந்த பிறகுதான் ஒரு குடும்பத்தில் உண்மையான கணவனும் உண்மையான மனைவியும் பிறக்கிறார்கள். உடல் தேவை என்னும் சாம்பல் உதிர்ந்த பிறகுதான் உள்ளிருக்கும் அன்பின் கங்கு துலக்கமாகிறது.
பெற்றவர்கள் மறைந்துபோக - உடன் பிறந்தவர்கள் அவரவர் பிழைப்புத்தேடி ஒதுங்கிபோக - நல்லது கெட்டதுகளுக்கு மட்டுமே சுற்றங்கள் வந்து சூழ்ந்து விலகிபோக - பெற்று வளர்த்த பிள்ளைகள் 'கெழவன் கெழவி செத்தாச் சொல்லிவிடுங்க' என்று கண்ணுக்குத் தெரியாத தங்களின் இன்னொரு தொப்பூழ்க் கொடியையும் அறுத்து கொண்டோட, உடம்பிலுள்ள உறுப்புக்கள் ஒவ்வொன்றாய் 'ஆளவிடு சாமி' என்று அதனதன் செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும்போது மனைவியின் மடிசாய்கிறான் கணவன்; கணவனின் மடிசாய்கிறாள் மனைவி.
* பால் திரியுத் தொடங்கும் நேரம் பாத்திரத்துக்குத் தெரியாது என்பதுபோல், பிள்ளைகள் கெடத் தொடங்கும் நேரமும் பெற்றவர்களுக்குத் தெரிவதில்லை.
* மனித வாழ்க்கையில் நல்ல இடம் சுடுகாடுதான். மனசு மட்டுப்படுவது அங்கேதான். செத்துப்போனவனுக்கு நிரந்தரமான நிம்மதியும் வீடு திரும்புகிறவனுக்கு 'இத்துனூண்டு' ஞானமும் தருகிற பழைய்...ய பள்ளிக்கூடம் அதுதான்.
* பொதுவாகவே மனிதர்களுக்கு ஒரு குணமிருக்கு. அவனவன் குற்றம்குறை பூசணிக்காய் அளவு இருந்தாலும் அதைச் சுண்டக்காய் என்று சொல்லித் திரிவது. அடுத்தவர்களின் குறை சுண்டைக்காய் அளவு இருந்தாலும் அதைப் பூச்ணிக்காய் என்று புலம்பித் திரிவது. அதில் ஒரு சுகமும் பாதுகாப்பும் இருப்பதாக நாலுகால் மனசு நம்புகிறது.
சுடுகாட்டைக் கடந்து போகிறவன் தன் பயத்தை மறைக்கச் சத்தம் போட்டுக் கோண்டேபோவது மாதிரி தன் குறையை மறைக்க அடுத்தவர்களின் குறைகளையே அசைபோடுகிறது மனுசக் கூட்டம்.
இது ஊர் ஊருக்கு - ஆள் ஆளுக்கு - தேசத்துக்கு தேசம் முன்னபின்ன இருக்குமே தவிர முற்றிலும் ஒழிக்க முடியாத குரங்குக் குணம்.
* சனநாயகம் மாதிரி தெரிகிற சர்வாதிகாரம்தான் அரசாங்கம் !
* மனுச வாழ்க்கையை ருசியா வச்சிருக்கிறதே ரெண்டே ரெண்டு விசயந்தான்; ஒண்ணு இன்பம்; இன்னொண்ணு துன்பம். துன்பம் இல்லேன்னு வச்சுகுஙக... இன்பத்துக்கு என்னா மதிப்புன்னே தெரியாது மனுசப் பயலுக்கு. இருட்டுன்னு ஒண்ணு இல்லேன்னா வெளிச்சம் வெள்ளையா கருப்பான்னு யசனையே பெறந்திருக்காது.
வேணும்; மனுசனுக்கு துன்பம் வேணும். பிரச்சினையும் அப்பப்ப வந்து பிடறியைப் பிடிச்சு ஒரு உலுக்கு உலுக்கணும். பிரச்சினை இல்லாத ஆளு உலகத்துல யார்ரான்னு கேட்டா பூமிக்குக் கீழ பொணமாப் போனவன் மட்டுந்தான்.
ஒரு மனுசன் உசுரோட இருக்கான்னா பிரச்சினைன்னு ஒண்ணு இருக்கும். வேறமாதிரியும் சொல்லலாம்; பிரச்சினைன்னு ஒண்ணு இருந்தாத்தான் மனுசன் உசுரோடயே இருப்பான்.
Good.
Great man has put his children through college, he may need money to buy pattam, panju mittai Ruskin bond's The room on the roof - book to WII SPORTS video games for his grandsons & jewels to his
great grandaughters... or may be second/ third honeymoon trip around the world with his loving wife. :D :bluejump: :redjump:
vinatha.
Geno, wonderful job!
thanks Roshan.
vinatha.
kallikattu idhikasam....is a great novel by kavingar.
all about village life.
very emotional novel.
moving feelings about love, sufferings etc..
rich in intricate varnanaigal & very elaborate.
thanks ..... I pull my copy from my bookshelf and drench myself in the impact of emotional pathos.
vinatha.
Absolutely ! Again from my post;Quote:
Originally Posted by baroque
கிராமிய வாழ்க்கையை ஓரளவேனும் அனுபவித்தவர்களுக்கு இந்தக் கதையின் யதார்த்தம் நன்றாகவே புரியும். பாராட்டப்பட வேண்டிய மற்றோரு அம்சம் கதைக்கு உயிர் கொடுப்பதற்காக அவர் செய்திருக்கும் ஆய்வுகள்.
கஞ்சிக்கு துவையல் அரைப்பது, கோழியை அடித்து குழம்பு வைப்பது, மாட்டுக்கு பிரசவம் பார்ப்பது, முடி வெட்டுவது, சுடுகாட்டில் பிணம் எரிப்பது, கிணறு தோண்டுவது , சாராயம் காய்ச்சுவது, அணைக்கட்டு கட்டுவது என்று ஒவ்வொன்றுக்கும் மிகத்தெளிவான செய்முறை விளக்கம் கூறியிருப்பதை படித்தபோது தெரிந்தது இந்தக் கதைக்கான கவிஞரின் உழைப்பு.
oh.... his style of poetic touches, vivarangal with stunning visual imagery of the land- rural area.
He totally earned the award. Justice done.
எப்பவுமே வார்த்தைகளால் ஓவியம் வரைந்து கண் முன்னால் நிறுத்துவார் , கவிஞர். :thumbsup:
கீழ்வானம் எங்கும் தீயின் ஓவியம்
கண்கள் போதைக்கொள்ளும் காலை காவியம் :musicsmile: in shri.Ilayaraja's sangeetham.
cinema paadalukkey ippadi ezhudhiyavar.
vinatha.
இன்னொரு முறை மீள்வாசிப்பு தண்ணீர் தேசத்தை. ஹமித்திற்கு நன்றி. நல்லதொரு வாசிப்பு அனுபவம். பல இடங்களில் நாம் பார்த்திருந்த காட்சிகளை இவர் எழுத்து வடிவில் பார்க்கும் போது பரவசம். உதாரணமாக கடல் பயணத்தின் ஆரம்ப இடங்களில் இப்படி..
ததும்பும் தண்ணீர்
ஊஞ்சல்மேலே அழகுப்
பறவைகள் ஆடுவது பார்.
இந்த வரிகளை கடக்கும் போது, அந்தக் காட்சி அப்படியே மனதில் ஓடுகிறது. நாமும் ஒரு பார்வையாளனாக விசைப்படகில் அவர்களோடு பயணிக்கத் தொடங்குகிறோம்.
தமிழ்(கதையில் வரும் பெண்ணின் பெயர்) கடல் ஒவ்வாமையால் மயக்கம்,வாந்தி வரும் நிலை..
எனக்கிது தேவைதானா?
அவள் கன்னத்தில் வழிந்த
கண்ணீர் வாயில் விழுந்ததில்
வார்த்தை நனைந்தது.
ஒரு இடத்தில் கடல் அலை விசைப்படகில் புகுந்து தமிழை நனைத்துவிடுகிறது.
தண்ணீர் சொட்டச் சொட்ட தானே
தலைதாங்கித் தமிழ்ரோஜா அழுதாள்.
அதில் கண்ணீர் எது? தண்ணீர் எது?
கடல்மீன் அழுத கதைதான்.
இன்னொரு இடத்தில் தமிழ் வாடியிருக்கும் முகத்திற்கு இப்படி ஒரு உவமை.
வாடிய கீரையைத்
தண்ணீர் தெளித்து வைப்பது
மாதிரி
வாடிய அவள் முகத்தில்
வேர்வை தெளித்தது வெயில்.
தண்ணீர் தேசம் நாவல் முழுவதும் ஏதோ ஒரு முக்கியமான க்ரிக்கட் இறுதிபோட்டியின் Highlights-ஐ தொலைக்காட்சியில் பார்த்து ரசிப்பது போல இருக்கிறது. வரிக்கு வரி கவிஞர் நான்கு, ஆறு என ரன்கள் அடித்துக்கொண்டே இருக்கிறார்.
My earliest memory of his poems should be this one.
கருகிய ரோஜாவும் கடைசிக் கேள்விகளும்
அரபியில் சொன்னாள் அம்மா
எங்கள் டைகிரிஸ் யூப்ரடீஸ்
நதிகளிரண்டும்
வீசியடித்த அலைகளிலேதான்
முதல் நாகரிகம்
முளை கட்டிற்றாம்
உங்கள் நாட்டில்
நதிகளே இல்லையா புஷ் அங்கிள்?
உங்கள் ஆயுதம்
கூர் சோதிக்க
என் பிஞ்சு மண்டை ஓடுதான்
கிடைத்ததா?
ரொட்டி சலித்த உங்கள்
குட்டி நாய்க்கு எங்கள்
குருத்தெலும்பென்றால்
கொள்ளை ஆசையா?
கனவுகள் நனைந்து
பூமிக்கு வந்தேன்
ரோஜாக்கள் வெடிக்கும்
நுண்ணொலி கேட்கவே
இராக்கில் பிறந்தேன்
பகலில் சூரியன்
இரவில் நிலவு
இரண்டையும் வெடித்தால்
எங்ஙனம் தாங்குவேன்?
மு... மு... முட்டுதே மூச்சு
சுவாசப் பையில் என்ன நெரிசல்!
காற்றில் கலந்த சதைத்தூள்
நிறைந்து
நெரிபடுதோ என் நுரையீரல்?
அலெக்சாண்டர் வாளில்
மங்கோலிய வில்லில்
பிரிட்டிஷ் பீரங்கியில்
கருகாத எங்கள் பேரீச்சங் காடுகள்
தீத்தாரைகளில் சிவ்வென்றெரியுதே!
இன்னோரு பருவம்
பேரீச்சை பழுக்குமோ?
பேரீச்சை தின்ன
நாங்கள் இருப்பமோ?
நெருப்பு மழை
அக்கினி அலை
சூரியன் உடைந்து
பூமியில் ஒழுகினால்
எப்படித் தாங்கும்
என் மெல்லிய செந்தோல்?
மொத்தப் பிணக்குழியில்
என்னையும் இழுத்து
எறியும்பொழுது
என் பிரிய பொம்மையைப்
பிரிக்க மாட்டீரே?
எங்கு நோக்கினும்
ரத்தப் படுகை
பாலைவனத்தை
நாளை தோண்டினால்
தண்ணீரின்
நிறம் சிவப்பாயிருக்குமோ?
ஏனிந்த விஷவெறி?
ஏசுவா? அல்லாவா?
அதுவல்ல கேள்வி
டாலரா? தினார?
அதுதானே கேள்வி!
இந்தியப் புறாக்கள் வாங்கி வளர்க்க
ஏழு தினார்கள் சேர்த்திருந்தேன்
அனுப்பட்டுமா புஷ் அங்கிள்
உங்கள் வேட்டு விலாசமிட்டு?
ஒரே ஒரு பிஞ்சு நிபந்தனை :
எண்ணெய்க்காடு எரியும் நெருப்பில்
நீங்கள் மூட்டிய பூதப் புகையில்
வாழ்வு தேசம் சுவாசம் எல்லாம்
கறுத்துக் கறுத்துக் கறுத்தழிந்தது
உங்கள் வீட்டுப் பெயரில் மட்டும்
இன்னும் என்ன
'வெள்ளை மாளிகை?'
வீடோ பெயரோ
மாற்றுவீர்களா?
நான் இறந்துபோயினும்
வந்து சேரும்
ஏழு தினார்!
வலைப்பதிவில் உலாவியபோது கவிஞரின் உழைப்பைக் குறித்த ஒருவரது பின்னூட்டம்..Quote:
Originally Posted by Roshan
Quote:
வைரமுத்து எனும் கவிஞனின் பேய் உழைப்பை நண்பர்கள் பலரது வாயிலாக கேட்டிருக்கிறேன். மிகச் சமீபத்தில் நாஞ்சில் நாடனுடான சந்திப்பொன்றில் 'வைரமுத்துவைக் காட்டிலும் கடுமையா உழைக்கிறேன்பா' என்று ஓப்புமைக்கு வைரமுத்துவை எடுத்துக்கொண்டார்.