Page 21 of 399 FirstFirst ... 1119202122233171121 ... LastLast
Results 201 to 210 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #201
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆஹா!!! இந்த திரியில்தான் எத்தனை பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கின்றன? அவருடைய 90 ஆவது பிறந்த நாளுக்குள்ளாவது நாம் இந்த பெரும் அறிவு செல்வங்களை தொகுத்து பம்மலார் மூலம் ,ஒரு பிரம்மாணடமான மையம் திரி மலர் மாலை கொண்டு வர வேண்டும்.
    எனது சகோதர கண்மணிகளே, உதட்டளவில் ஆதரவு கொடுக்காமல், சட்டை பைக்குள்ளும் இருப்பதை சிறிது கொடுப்பீர்களா? 2018 க்குள் நான் இந்தியா வந்து விட்டால், ஒரு ரூபாய் தருவதாக சொன்னாலும், வீட்டுக்கே வந்து வசூலிக்க தயார். தமிழகத்தின் ஆறு கோடி சிவாஜி ரசிகர்களும் ஆளுக்கு பத்து ரூபாய் தந்தால் கூட போதுமே. அசத்தி விடலாமே?

    அது சரி ஒரு படத்தின் negative மீட்கப்பட்டு சீர்திருத்த பட்டு ,digitise பண்ண பட பத்து லட்சம் போதுமா? நூறு படங்களுக்கு பத்து கோடிதானே ஆகும்?

    அவர் வாழ்க்கையை, திரையுலக சாதனையை சொல்லும் ஒரு அழகான Documentary .

    செவாலியர் விருது நிகழ்ச்சி DVD மீட்பு. அவர் சிவாஜி ஓரங்க நாடகம் DD யில் வந்தது.

    இவ்வளவும் 2018க்குள் சாதிக்க முடியுமா? (அவர் பிறந்தது 1927 ஆ? 1928 ஆ?)
    Last edited by Gopal.s; 5th June 2013 at 10:29 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #202
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    ஆஹா!!! இந்தி திரியில்தான் எத்தனை பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கின்றன?
    இது தமிழ் திரி...அதுவும் நடிகர் திலகம் திரி ராஜா... 'இந்தி' யெல்லாம் இங்கே ஏன் வந்தது?
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #203
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Vasudevan Sir,

    Thanks for the rare photos of NT and especially Mr Thyagu Photo super.

  5. #204
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார், பேசும்படம் ஆலயமணி நிழற்படம் சூப்பர். அரிய பொக்கிஷங்களை அள்ளி வழங்குவதில் பம்மலாருக்கு தாங்கள் சற்றும் சளைத்தவரல்லர் என்பதற்கு மற்றுமோர் உதாரணம். அதே போல் அந்த டிஸ்னிலேண்ட் கலர் நிழற்படமும். பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #205
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அபூர்வ நிழற்படங்கள்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #206
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி-வாணிஸ்ரீ- The Ultimate Pair in Tamil Screen .

    நடிகர்திலகத்தின் காதல் காட்சிகள் , Duets என்று எல்லாவற்றையும் அலசி விட்டேன்.

    1952 முதல் 1960 வரை அவர் பலதரப்பட்ட கதைகள் , படங்கள், பாத்திரங்கள், நடிப்பு முறைகள் என்று அவர் focus சென்று விட்டதால் ,இந்த கால கட்டத்தில் பத்மினியோடு அவர் நடித்த ராஜாராணி,புதையல்,உத்தம புத்திரன்,தெய்வ பிறவி காதல் காட்சிகள் சிறந்தவையாகின்றன. ஆனால் இந்த கால கட்டத்தில் romance ,intimacy ,chemistry (தெய்வ பிறவியில் ஒரு காட்சியில் கழுத்தில் சொறிந்து கொள்ளும் சிவாஜியின் குறிப்பறிந்து பத்மினி சொறிந்தே விடுவார்.) இருக்குமே அன்றி erotism அன்றைய காலகட்டங்களில் யார் படத்திலும் இல்லை.ஜமுனா, மாலினி,வைஜயந்தி, சாவித்திரி ,கிரிஜா போன்றோருடன் ஒன்றிரண்டு காதல் காட்சிகள்,காதல் பாடல்கள் மிக நன்றாக இருக்கும்.

    1961-1965- அவர் உடல் அமைப்பு ஒத்து வராததால் காதல் காட்சிகள் மிக அபூர்வம். அப்படி வந்தவை தேவிகா,சரோஜாதேவி, ஜமுனா சம்பத்த பட்ட நிச்சய தாம்பூலம், பலே பாண்டியா, இருவர் உள்ளம்,கல்யாணியின் கணவன்,அன்னை இல்லம்,ஆண்டவன் கட்டளை,புதிய பறவை,நவராத்திரி,சாந்தி,நீலவானம் படங்களில் இடம் பெற்றவை.

    அதற்கு அடுத்த காலகட்டமான இளைத்து இளமை மீண்ட திராவிட மன்மதனின் இளமை திருவிழா காலமான 1966-1974. இந்த கால கட்டத்தில் அவரின் குறிப்படும் இளம் ஜோடிகளாக (அப்போதும் அவர் எங்கே பத்மினியையும்,சரோஜாதேவியையும் விட்டார்?)கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா,வாணிஸ்ரீ, பாரதி,காஞ்சனா,உஷா நந்தினி,மஞ்சுளா போன்றோரை குறிப்பிடலாம். உங்களுக்கே தெரியும் பாரதி,காஞ்சனா ஆகியோர் one movie wonders .கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா நடித்த பெரும்பாலானவை performance oriented not romance centric . ஆனாலும் கே.ஆர்.வியின் செல்வம்,ஊட்டி வரை உறவு, ஜெயலலிதாவின் கலாட்டா கல்யாணம், தெய்வ மகன், எங்க மாமா ,சுமதி என் சுந்தரி , ராஜா போன்ற படங்களில் romance பாடல்கள்,காட்சிகள் நன்கு வந்திரூக்கும். உஷாவின் பொன்னூஞ்சல் படத்தை பாடல்கள், காதல் காட்சிகளுக்காக பல முறை பார்த்திருக்கிறேன். அந்த காலகட்டத்தில் மஞ்சுளாவுடன் இரண்டே படங்கள் எங்கள் தங்க ராஜா,என் மகன் என்ற இரண்டு. எங்கள் தங்க ராஜாவின் கல்யாண ஆசை, இரவுக்கும் cute duets என்ற அளவில் சரி.

    இங்கேதான் நம் வாணி வருகிறார். இணைகிறார்.இசைகிறார்.பிணைகிறார், பின்னுகிறார்,என் தூக்கத்தை கெடுத்த அத்தனை பட காட்சிகளின் ஜோடி.
    1968- 1974 -உயர்ந்த மனிதன்,நிறை குடம், வசந்த மாளிகை, சிவகாமியின் செல்வன்,வாணி ராணி .
    பின்னால் 1975-1979- ரோஜாவின் ராஜா, இளைய தலைமுறை ,நல்லதொரு குடும்பம்.(பாவ பூமியை மறப்போம்,மன்னிப்போம்) என்று அப்பப்பா!!!
    என்னை ஏன் இந்த ஜோடி இத்தனை ஆட்கொண்டது?

    1)Best physical compatibility in features (மூக்கு ),உடலமைப்பு,நிறம்,உயரம் என்று பிரம்மா சிவாஜிக்காக தயார் பண்ணிய pair .
    2) நடிப்பிலும் ,ஓரளவு குறை சொல்ல முடியாமல் ஈடு கொடுத்தவர்.
    3) நடித்த அத்தனையிலும் romance,erotism முன்னிலை படுத்த பட்டு, ultimate romantic sivaji classic வசந்த மாளிகை ஜோடி.
    4)பாடல்கள் (வெள்ளி கிண்ணந்தான்,கண்ணொரு பக்கம்,மயக்கமென்ன ,இனியவளே,மேளதாளம்,எத்தனை அழகு,அலங்காரம்,ரோஜாவின் ராஜா, சிந்து நதிக்கரை )மட்டுமின்றி ,காட்சிகள் உயர்ந்த மனிதன் மர காட்சி,நிறைகுடம் வர்ணனை காட்சி,வசந்த மாளிகை plum காட்சி, வாணி ராணி உருளல், ரோஜாவின் ராஜா தியேட்டர் காட்சி, இளைய தலைமுறை பத்து நிமிட முத்த காட்சி, நல்லொதொரு குடும்பம் படுக்கை காட்சி என காட்சிகளுக்கும் குறைவே வைக்காத காதல்.
    5) வாணிஸ்ரீ ,நடிகர்திலகத்திடம் தன்னை ஒப்படைத்து மெய் மறப்பார்.
    6)அவர் அடுத்து என்ன பண்ணுவார் என அறிந்து தயாராய் reaction காட்டுவார். நல்லதொரு குடும்பத்தில் உதடு துடிப்பும், சிவகாமியின் செல்வனின் காது கடியும், உதாரணங்கள் .
    7)நடிகர்திலகமும் 100% involvement ,interest எடுத்து காதல் காட்சிகளில் நடித்தவை வாணிஸ்ரீ சம்பத்த பட்ட படங்களிலேயே. (மன்னிக்க வேண்டுகிறேன்,மடி மீது, நெஞ்சத்திலே,பத்து பதினாறு முத்தம் முத்தம் -OK ,ஆனால் வாணியுடன் special )
    8)இருவருமே காமெராவை மறந்து ஒருவருக்கொருவர் வாழ்வது போல ரசிகர்களின் (அனைத்து வயதினரும்)உணர் நிலை.
    9)நடிகர்திலகத்தின் மிக சிறந்த இளமை நாட்களில் அமைந்த மிக சிறந்த ஜோடி.
    10)வாணிஸ்ரீ ,சிவாஜியின் best admirer ,ரசிகை என்பதால் அவருடன் நடிப்பதை பெருமையாக உணர்ந்து அவருக்கு அனைத்திலும் ஈடு கொடுத்தவர்(சிவாஜிக்கும் ,வாணிஸ்ரீயின் grace &elegant poise,dressing sense பிடிக்கும்.).

    என் உணர்வில் கலந்த அற்புதமான ஜோடிக்கு என்னுடைய இந்த ஆயிரமான landmark பதிவு சமர்ப்பணம்.
    Last edited by Gopal.s; 5th June 2013 at 12:53 PM.

  8. #207
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Thanks Go, Raghavendran sir and Vasu sir.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #208
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    சிவாஜி-வாணிஸ்ரீ- The Ultimate Pair in Tamil Screen .
    ஓட்றா...ஓட்றா...ஓட்றா...
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #209
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ithukkuthaaane avvalavu aarppaattam?

    நடிகர் திலகமே தெய்வம்

  11. #210
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Rojavin rajaa...mullum illai kallum undu allik kollungal.

    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •