Page 53 of 399 FirstFirst ... 343515253545563103153 ... LastLast
Results 521 to 530 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #521
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,

    எனக்கு இன்று காலை 11.00 மணி முதல் மாலை வரை ஒரு முக்கிய மீட்டிங் இருந்தது. அதற்காக சில ஸ்லைடுகளை தயார் செய்து கொண்டிருந்தேன்.
    இருப்பினும், பொறுக்க முடியாமல் இந்த சிறிய பதிவினை பாதி எழுதி மீட்டிங்கிற்குச் சென்று மீதியை எழுதிப் பதிகிறேன்.

    "ஞான ஒளி" - இது உங்கள் உள்ளத்தில் எந்த அளவிற்கு ஊடுருவி இருக்கிறது என்பது தங்கள் "கொடைக்கானல்" பதிவு சாட்சி.

    இது தங்களுக்கு மட்டுமல்ல. எனக்கும் அதே தான். நான் ஏற்கனவே "நடிகர் திலகத்தின் படங்கள் - அசல் தமிழில் - மொழியாக்கம் வேறு மொழிகளில்" என்ற தலைப்பில், பத்து படங்களைப் பற்றி விரிவாக எழுதியதில் "ஞான ஒளி" பற்றி மூன்று பாகங்களாக எழுதியிருந்தேன். மறுபடி ஒரு சிறிய பதிவு.

    ஒரு முறை என் வீட்டிற்கு முக்கிய விருந்தினர் வந்திருக்கும் போது, (1996) அப்போது தான் ரொம்ப நாளைக்கப்புறம் அந்தப் படத்தை டிவியில் பார்க்கிறேன்.

    அந்தோணி கைதாகி, பின்னர், பரோலில், லாரன்சுடன் மறுபடி, அடைக்கலம் பாதிரியாரின் விருப்பத்தின் பேரில் (அவர் இறக்கப் போகிறார் என்று அவருக்கே தெரிந்து அதற்கு முன், தான் எடுத்து வளர்த்த முரட்டுப்பயலை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டுமென்று மேஜரிடம் சொல்லியதால்), வீட்டிற்கு வர, வாயிற்படியருகே நின்று கொண்டிருக்கும், முரட்டுப் பயலை, "ஏண்டா அங்கேயே நிக்கிற? வாடா!" என்று பாதிரியார் அழைக்க, ஒரு குழந்தை போல் ஓடோடிச் சென்று, உட்கார்ந்து கொண்டிருக்கும் பாதிரியாரின் மடியில் முகத்தைப் புதைத்து குலுங்கிக் குலுங்கி அழுவாரே!! என் கண்களில் அருவி போல் கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது!!! என் மனைவி என்னருகே வந்து "விருந்தினர் இருக்கிறார்கள்" என்று காதோரம் கிசு கிசுத்த பின்னரும், என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. மேலே பார்க்க முடியவில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கும்போது, இடைவேளைக்குப் பின்னர் (முன்னர் சொன்ன காட்சியை மறுபடி பார்க்கும்போது மறுபடியும் தொண்டை அடைக்க அழுதாகியாயிற்று), அதே போல் அழுது விட்டேன் - மகள் மேரி தந்தை அந்தோணியைப் (இப்போது அருண்) பார்க்க அவர் வீட்டிற்குப் போகும் போது, மகளைப் பார்த்து, "அம்மா உன்னை உனது வீட்டில் பார்த்தபோது, உன்னை மகளே என்று கூட சொல்ல முடியவில்லை - லாரன்ஸ் உடனே வந்துட்டான் - இப்போ" என்று கூறி, மகளை பாசத்துடன் தழுவும் காட்சி! ஏக்கம், நெடு நாள் கழித்துப் பார்க்கும் போது தொனிக்கும் பாசம், விதி நம்மை இத்தனை நாள் பிரிந்து விட்டதே எனும் சோகம் இன்னும் எத்தனையோ எண்ணங்கள்... அத்தனையையும் வெளிப்படுத்தி, பின்னர் பிரிஜ்ஜைத் திறந்து பழங்களை எடுத்து (இரண்டு கைகளிலும் பொருட்களை எடுத்துக் கொண்டு, பிரிஜ்ஜைக் காலால் மூடும் சமயோசிதம் கலந்த ஸ்டைல்! வாவ்!!) மேசையில் வைத்து, இவர் மட்டும் கஞ்சியை சாப்பிடும் போது, மகளைப் பார்த்து "உனக்கும் வேண்டுமா" என கேட்டு, அவருக்கும் பரிமாறும் போது, கண் கலங்குவாரே - மகளுடன் சேர்ந்து! இதயம் என்ற ஒன்று இருக்கும் எந்த மனிதனும் அழாமல் இருக்க முடியுமா? இதோ இப்போது இதை டைப் செய்யும் போதும், கண்களில் கண்ணீர் பீறிடுகிறது!

    சிறு வயதில் "ஞான ஒளி"யைப் பார்க்கும் போது இடைவேளைக்குப் பின், ஸ்டைலில் பின்னும், "அருணை"தான் ரசித்திருக்கிறேன் (றோம்?). புத்தி தெளியத் தெளிய, வாழ்க்கை புரியப் புரிய, இது போன்று எத்தனையோ படங்களில் (நடிகர் திலகத்தின் படங்கள் தான்!), எத்தனையோ காட்சிகளை ரசிக்கத் துவங்குகிறேன் (றோம்?)

    ஒன்று கவனித்தீர்களா? (நானே கவனிக்கவில்லை!) மேலே எங்கேயாவது, நடிகர் திலகம் என்று எழுதியிருக்கிறேனா என்று! அந்தோணி என்று தான் எழுதியிருக்கிறேன். கதாபாத்திரமாகவே அல்லவா மாறியிருக்கிறார்!

    என் இதயத்தை ஊடுருவிய படங்களில் என்றும் "ஞான ஒளி" முதல் இடத்தில் தான் எப்போதும் இருக்கும்.

    எனக்குத் தெரிந்து அவருடைய most intense பங்களிப்புகளில், முதல் இரண்டு இடம் "ஞான ஒளி" மற்றும் "ஆலய மணி"க்கே கிடைக்கும்.

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி
    Last edited by parthasarathy; 14th June 2013 at 04:42 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #522
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,

    நீங்களும் என்னை பலத்த அலுவலுக்கிடையில், எழுத வைத்து விட்டீர்கள்.

    ரொம்ப நாளைக்கப்புறம் "ஆண்டவன் கட்டளை" உங்களை இங்கு பெரிய அளவில் வரவழைத்திருக்கிறது. அற்புதம்.

    முதலில், தியேட்டரில் இந்தப் படத்தை "ராம்" தியேட்டரில் 1982-ல் என் நண்பனுடன் பார்த்த போது, அரங்கில் எழுந்த ஆர்ப்பரிப்பு இன்னும் நினைவில் இருக்கிறது. எல்லா முக்கிய காட்சிகளையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மேலும் ஒரு காட்சி. அவர் மனதில் காதல் பிறந்தவுடன் உடை, சிகை அலங்காரம் மாறி, கல்லூரிக்கு கையில் குடை இல்லாமல் இரண்டு புத்தகங்களை மட்டும் (அதை அவர் பிடித்துக் கொண்டிருக்கும் ஸ்டைல் - 1964-ல்!) வைத்துக் கொண்டு, வகுப்பறைக்குள் வந்து அந்தப் புத்தகங்களை மேஜையில் லாகவமாக போட்டு விட்டு, மாணவர்களைப் பார்த்த ஸ்டைல் - எனக்குத் தெரிந்து, ஆபரேட்டர் கூட படம் ஓட்டுவதை மறந்து கைத் தட்டி இருப்பார்!.

    படம் பார்த்து விட்டு வீட்டிற்கு வந்து hang over போகாமல், டைரியில் "இன்று ஆண்டவன் கட்டளை பார்த்தேன். இந்தப் படத்தில், நடிகர் திலகம் தான் நடிக்க வேண்டும் என்பது ஆண்டவன் இட்ட கட்டளை போலும்!" என்று எழுதி வைத்தேன். இன்னும், அதை பத்திரமாக வைத்திருக்கிறேன்.

    நினைவுகளை அசை போட வைத்ததற்கு நன்றிகள் பல.

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி

  4. #523
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    ஆண்டவன் கட்டளை பதிவைப் பாராட்டிய வாசுதேவன் சார், (இரண்டாவதாகப் பாராட்டிய) கோபால் சார், கல்நாயக் சார், சந்திரசேகர் சார், சித்தூர் வாசுதேவன் சார், பார்த்தசாரதி சார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

    கோபால் சார், இப்போது துப்பறிய வந்தால் தங்களுக்கு எந்த தடயமும் கிடைக்காது. ஏனென்றால் இப்போது பிரபாத் தியேட்டரும் இல்லை. அந்த ஏரியாவில் இருந்த சிறுவனும் இப்போது கர்நாடகாவில் ரெய்ச்சூர் மாவட்டத்தில்.

  5. #524
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள வாசுதேவன் சார்,

    நடிகர்திலகத்தின் உடையலங்காரம் தொடர் முதல் பதிவே களைகட்டுகிறது. ஒவ்வொரு ஸ்டில்லுக்கும் நீங்கள் தரும் விளக்கம் அருமை. போகப்போக எப்படி அசத்த்ப்போகிறது என்பதற்கு முதல் பதிவே அத்தாட்சியாக அமைந்துள்ளது.

    நாயகியர் தொடர், ஸ்டண்ட் காட்சிகள் தொடர் இவற்றோடு ஆடையலங்காரத் தொடரும் சேர்ந்து திரியை (எங்களையும்) ஒரு வழி பண்ணப்போகிறது.

    தொடர் சிறக்க வாழ்த்துக்கள்.

  6. #525
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள பார்த்தசாரதி சார்,

    'ஞானஒளி' ஒரு அற்புத சுரங்கம், தோண்டத் தோண்ட வந்துகொண்டேயிருக்கும். ஒரு அருமையான காட்சியை விவரித்துள்ளீர்கள். மகள் கூழ் குடிக்கும் காட்சியைப் பார்த்து நடிகர்திலகம் கண்களில் பாசம் பொங்க ரசிக்கும் காட்சி பார்க்கப்பார்க்க திகட்டாதது. முன்பு நானும் இக்காட்சி பற்றிய குறிப்பொன்றை எழுதியிருந்தேன். வேலைப்பளுவுக்கு நடுவில் தங்களின் பங்களிப்புக்கு நன்றி.

    ஆண்டவன் கட்டளையில் நீங்கள் சொன்ன அக்காட்சி முக்கிய தருணங்களில் ஒன்று. புரொபஸரிடம் கணப்படும் மாற்றத்தை, மாணவர்களில் ஒருவரான சந்திரபாபு சந்தேகம் கலந்த வியப்போடு பார்ப்பார். நடை உடைகளில் மாற்றம் மட்டுமல்லாது, வகுப்பிலும் காதலின் உயர்வு பற்றிப் பாடமெடுப்பார்.

  7. #526
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by NTthreesixty Degree View Post

    பாகம் - 2 : அனைவராலும் காப்பியடிக்கப்பட்ட நடிகர் திலகத்தின் ஸ்டைல் மற்றும் உடை அலங்கார நளினம்..!


    "நடிகர் திலகம் - நடிப்பிற்கும் மேல் !! திரி நண்பர்கள் அனைவரும் இது எப்படி இருக்கிறது என்ற உங்களுடைய மேலான கருத்தினை, மற்றும் இந்த முயற்சியின் நிறை குறைகள் இருப்பின் அதனையும் சுட்டிக்காட்டினால் இன்னும் நன்றாக இதுபோல விஷயங்களை மேம்படுத்தமுடியும் என்று நம்புகிறோம். !




    கோபால் சார்
    இடும் பதிவுக்கு கருத்து சொல்ல சொன்னால் ஒன்னும் சொல்றதில்ல ....ஆனா நீங்க போடற பதிவுக்கு மட்டும் நாங்க பதில் சொல்லனுமா?

    என்ன ஞ்யாயம் சார் இது !!

  8. #527
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி முரளி சார். ஞான ஒளி நம்மிடையே ஏற்படுத்தியிருக்கும் தா(க்)கத்தை தணித்துக் கொள்ள அருமையானதொரு வழியை சொல்லி மிகக் குஷியடையச் செய்து விட்டீர்கள். நம் நமது NT FAnS அமைப்பின் சார்பாக ஞான ஒளியை தரிசனம் செய்வதற்கு தாங்கள் முயற்சி செய்வதாகக் கூறியிருப்பதைக் கண்டு என்னைவிட சந்தோஷப் படுபவர்கள் இருக்கவே முடியாது. அதற்காக தங்களுக்கு என் கோடானுகோடி நன்றிகள். சித்தூராரும் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அவருக்கும் என் நன்றிகள். எனதருமை செல்லமும் வியட்நாம் விட்டு தற்காலிக விடுதலை பெற்று ஒளியின் ஜோதியில் கலக்க இருப்பதாய் சொல்லி இருக்கிறது. ராகவேந்திரன் சார், பம்மலார் பற்றி சார் கேட்கவே வேண்டாம். அமர்க்களப் படுத்தி விடுவோம் நமது NT FAnS அமைப்பின் சார்பாக திரையிடப்பட்ட படங்களில் இப்படி ஒரு படத்திற்கு இதுவரை இம்மாதிரி ஒரு அமர்க்களம் நடக்கவில்லை என்று சொல்லுமளவிற்கு. காத்துக் கிடக்கிறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #528
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆ.பி.ஆணழகன் தொடருக்கு உற்சாக வரவேற்பு தந்த அருமை நண்பர் வினோத் சார், கோபால்ஜி, கல்நாயக் சார், சித்தூர் வாசுதேவன் சார், பார்த்தசாரதி சார், கார்த்திக் சார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #529
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கல்நாயக் சார்,

    நிச்சயம் தாங்கள் கூறியபடி முயற்சி செய்கிறேன் சார். நேரம்தான் பெரும் பிரச்சனை. ஒவ்வொரு பதிவிற்கும் நிறைய நேரம் பிடிக்கிறது. ஒரு சண்டைக் காட்சி தொடருக்கோ, நாயகியர் தொடருக்கோ அல்லது ஆடைகள் தொடருக்கோ அதை முழுமையாய் பதிவிட குறைந்தது மூன்று மணி நேரமாவது பிடிக்கிறது. இந்தத் தொடர்கள் அல்லாது நிறைய பதிவுகள் அதாவது ஆய்வுப் பதிவுகள், ஸ்டில் பதிவுகள், வீடியோப் பதிவுகள், நம் நண்பருடன் ஒரு ரிலாக்ஸுக்காக சில அரட்டைப் பதிவுகள், கருத்துப் பரிமாற்றங்கள் என்று ஒரு நாளின் பெரும்பான்மையான நேரத்தை நமது திரிக்காக சந்தோஷத்துடன் செலவிட்டு வருகிறேன். இதுவல்லாமல் filmography, school of acting திரிகளில் வேறு பதிவிட வேண்டியுள்ளது. ஆபிஸ் போய்விட்டு வரும் நேரம் போக, தூங்கும் நேரம் போக மீதி பெரும்பான்மையான நேரங்களை நமது திரியே ஆக்கிரமித்துக் கொள்கிறது. இதில் எனக்கு பூரண மனதிருப்தியே!
    Last edited by vasudevan31355; 15th June 2013 at 03:35 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #530
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பார்த்த சாரதி சார்,

    நன்றி! 'ஞானஒளி' யின் அற்புதக் காட்சிகளை எழுதி ஏகத்துக்கும் டென்ஷனை ஏற்படுத்தி விட்டீர்கள். அதுவும் அந்த பிரிட்ஜை மூட முடியாமல் கால்களால் மூட முயற்சிக்கும் கண்கொள்ளாக் காட்சி. நேற்று பலமுறை அந்தக் காட்சியையே போட்டுப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன். தங்களைப் போலதான் எனக்கும். பாசமலருக்குக் கூட அழாத கல்லுளிமங்கன் என்னை ஆண்டனி அரைநொடியில் கரைத்து விடுவான். கதற வைத்து விடுவான். அவனுக்குள்ள சக்தியே தனி. சக்தியே தனி. சக்தியே தனி. அவனைக் கண்டால், அவன் பட்டதையெல்லாம் நினைத்தாலே போதும். கண்களில் கங்கை வழிந்தோடும். முரட்டுப் பயல் மட்டுமல்ல எதற்குமே கொடுத்து வைக்காத பாவி. அவனைப் போல வேதனைப் பட்டவனை உலகத்தில் எங்கும் காண முடியாது. அவனுக்கு யாருமே இல்லை. மகளே இருந்தும் இல்லை. தனி மரமாய்த் தவித்தவன்.

    ஆனால் அவனுக்கு நான் இருக்கிறேன். நீங்கள் இருக்கிறீர்கள். நாம் எல்லோருமே இருக்கிறோம். அதை அவனும் உணர்ந்தே இருக்கிறான்.

    இருந்தாலும்

    கண்களில் கண்ணீருடன் அவனையே நினைத்து உருகும் அவன் பக்தனான பித்தன்.

    நெய்வேலி வாசுதேவன் இல்லை இல்லை கடலூர் வாசு(தேவன்)
    Last edited by vasudevan31355; 15th June 2013 at 04:26 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •