Page 285 of 401 FirstFirst ... 185235275283284285286287295335385 ... LastLast
Results 2,841 to 2,850 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #2841
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=RavikiranSurya;1133247]பாராளுமன்ற தேர்தல். - இந்திய நாடு தமிழகத்திடம் இருந்து காப்பாற்றப்பட்டது !

    Ravikiran Sir you are 100% TRUE.

    Clear Majority Given by People of All over India to ONE AND ONLY HERO OF INDIAN POLITICS THIRU. MODI

    NO MONEY - NO FREE GIFTS - BUT BJP GOT INDIVIDUAL MAJORITY - ONLY BECAUSE OF MODI'S GREAT EFFORT

    WE SALUTE OUR PRIME MINISTER MODI

  2. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes Subramaniam Ramajayam liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2842
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இங்கு வரும் நண்பர்கள் filmography திரியை தொடருங்கள்.ராகவேந்தர் மிகவும் பிரயத்தனம் எடுத்து அழகாக மாலை போல் தொடுக்கிறார்.
    இன்று என்னை மிக கவர்ந்த irene hastings பார் மகளே பார் பதிவு(பாகம்-5)போட பட்டுள்ளது.படித்தே ஆக வேண்டிய முன்னோடி பதிவுகளில் ஒன்று.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #2843
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு குளிர்சாதன(ஏ.சி.)டீலக்ஸ் திரையரங்கில்(சாந்தி) வெள்ளி விழாக் கண்ட முதல் திரைப்படம் பாவமன்னிப்பு. 1961-ம் ஆண்டின் ஈடு, இணையற்ற வசூல் சாதனைப் படமான பாவமன்னிப்பு, சாந்தியில் 177 நாட்கள் ஓடி இமாலய வெற்றி கண்டது. பாவமன்னிப்பு தொடங்கி சாந்தியில் வெளியான அனைத்து நடிகர் திலகத்தின் திரைக்காவியங்களும் நிகழ்த்திய சாதனைகளை தொடர்ந்து வரும் பட்டியலில் காணலாம்.
    (திரைக்காவியம் - வெளியான தேதி - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்)


    1. பாவமன்னிப்பு - 16.3.1961 - 177 நாட்கள்

    2. பாலும் பழமும் - 9.9.1961 - 127 நாட்கள்

    3. பார்த்தால் பசி தீரும் - 14.1.1962 - 75 நாட்கள்

    4. வளர்பிறை - 30.3.1962 - 35 நாட்கள்

    5. பலே பாண்டியா - 26.5.1962 - 49 நாட்கள்

    6. செந்தாமரை - 14.9.1962 - 43 நாட்கள்

    7. பந்தபாசம் - 27.10.1962 - 55 நாட்கள்

    8. சித்தூர் ராணி பத்மினி - 9.2.1963 - 20 நாட்கள்

    9. அறிவாளி - 1.3.1963 - 28 நாட்கள்

    10. இருவர் உள்ளம் - 29.3.1963 - 105 நாட்கள்

    11. பார் மகளே பார் - 12.7.1963 - 64 நாட்கள்

    12. இரத்தத்திலகம் - 14.9.1963 - 81 நாட்கள்

    13. கர்ணன் - 14.1.1964 - 100 நாட்கள்

    14. பழநி - 14.1.1965 - 42 நாட்கள்

    15. சாந்தி - 22.4.1965 - 100 நாட்கள்

    16. திருவிளையாடல் - 31.7.1965 - 179 நாட்கள்

    17. மோட்டார் சுந்தரம் பிள்ளை - 26.1.1966 - 78 நாட்கள்

    18. சரஸ்வதி சபதம் - 3.9.1966 - 133 நாட்கள்

    19. நெஞ்சிருக்கும் வரை - 2.3.1967 - 71 நாட்கள்

    20. திருவருட்செல்வர் - 28.7.1967 - 63 நாட்கள்

    21. ஊட்டி வரை உறவு - 1.11.1967 - 107 நாட்கள்

    22. திருமால் பெருமை - 16.2.1968 - 56 நாட்கள்

    23. கலாட்டா கல்யாணம் - 12.4.1968 - 106 நாட்கள்

    24. தில்லானா மோகனாம்பாள் - 27.7.1968 - 132 நாட்கள்

    25. அன்பளிப்பு - 1.1.1969 - 30 நாட்கள்

    26. தங்கச்சுரங்கம் - 28.3.1969 - 78 நாட்கள்

    27. குரு தட்சணை - 14.6.1969 - 41 நாட்கள்

    28. தெய்வமகன் - 5.9.1969 - 100 நாட்கள்

    29. வியட்நாம் வீடு - 11.4.1970 - 110 நாட்கள்

    30. ராமன் எத்தனை ராமனடி - 15.8.1970 - 75 நாட்கள்

    31. எங்கிருந்தோ வந்தாள் - 29.10.1970 - 100 நாட்கள்

    32. தங்கைக்காக - 6.2.1971 - 83 நாட்கள்

    33. சவாலே சமாளி - 3.7.1971 - 107 நாட்கள்

    34. பாபு - 18.10.1971 - 102 நாட்கள்

    35. பட்டிக்காடா பட்டணமா - 6.5.1972 - 146 நாட்கள்

    36. வசந்த மாளிகை - 29.9.1972 - 176 நாட்கள்

    37. பாரத விலாஸ் - 24.3.1973 - 100 நாட்கள்

    38. எங்கள் தங்க ராஜா - 15.7.1973 - 102 நாட்கள்

    39. கௌரவம் - 25.10.1973 - 102 நாட்கள்

    40. தங்கப்பதக்கம் - 1.6.1974 - 176 நாட்கள்

    41. அவன் தான் மனிதன் - 11.4.1975 - 113 நாட்கள்

    42. மன்னவன் வந்தானடி - 2.8.1975 - 114 நாட்கள்

    43. பாட்டும் பரதமும் - 6.12.1975 - 69 நாட்கள்

    44. உத்தமன் - 26.6.1976 - 70 நாட்கள்

    45. தீபம் - 26.1.1977 - 135 நாட்கள்

    46. அண்ணன் ஒரு கோயில் - 10.11.1977 - 114 நாட்கள்

    47. தியாகம் - 4.3.1978 - 104 நாட்கள்

    48. ஜெனரல் சக்கரவர்த்தி - 25.6.1978 - 105 நாட்கள்

    49. திரிசூலம் - 27.1.1979 - 175 நாட்கள்

    50. இமயம் - 21.7.1979 - 48 நாட்கள்

    51. பட்டாக்கத்தி பைரவன் - 19.10.1979 - 56 நாட்கள்
    Last edited by Gopal.s; 17th May 2014 at 04:54 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #2844
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சாந்தியில் வெளியான அனைத்து நடிகர் திலகத்தின் திரைக்காவியங்களும் நிகழ்த்திய சாதனை

    52. ரிஷிமூலம் - 26.1.1980 - 104 நாட்கள்

    53. ரத்தபாசம் - 14.6.1980 - 83 நாட்கள்

    54. விஸ்வரூபம் - 6.11.1980 - 102 நாட்கள்

    55. சத்திய சுந்தரம் - 21.2.1981 - 105 நாட்கள்

    56. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு - 3.7.1981 - 49 நாட்கள்

    57. கீழ்வானம் சிவக்கும் - 26.10.1981 - 103 நாட்கள்

    58. வா கண்ணா வா - 6.2.1982 - 104 நாட்கள்

    59. தீர்ப்பு - 21.5.1982 - 105 நாட்கள்

    60. தியாகி - 3.9.1982 - 72 நாட்கள்

    61. பரீட்சைக்கு நேரமாச்சு - 14.11.1982 - 73 நாட்கள்

    62. நீதிபதி - 26.1.1983 - 141 நாட்கள்

    63. சந்திப்பு - 16.6.1983 - 100 நாட்கள்

    64. மிருதங்க சக்கரவர்த்தி - 24.9.1983 - 100 நாட்கள்

    65. திருப்பம் - 14.1.1984 - 105 நாட்கள்

    66. சரித்திர நாயகன் - 26.5.1984 - 35 நாட்கள்

    67. சிம்ம சொப்பனம் - 30.6.1984 - 46 நாட்கள்

    68. எழுதாத சட்டங்கள் - 15.8.1984 - 30 நாட்கள்

    69. வம்ச விளக்கு - 23.10.1984 - 46 நாட்கள்

    70. பந்தம் - 26.1.1985 - 105 நாட்கள்

    71. நீதியின் நிழல் - 13.4.1985 - 69 நாட்கள்

    72. முதல் மரியாதை - 15.8.1985 - 177 நாட்கள்

    73. ஆனந்தக்கண்ணீர் - 7.3.1986 - 63 நாட்கள்


    74. வீரபாண்டியன் - 14.4.1987 - 32 நாட்கள்

    75. அன்புள்ள அப்பா - 16.5.1987 - 34 நாட்கள்

    76. ஜல்லிக்கட்டு - 28.8.1987 - 70 நாட்கள்

    77. கிருஷ்ணன் வந்தான் - 28.8.1987 - 49 நாட்கள் (பகல் காட்சியில்)

    78. என் தமிழ் என் மக்கள் - 2.9.1988 - 35 நாட்கள்

    79. புதிய வானம் - 10.12.1988 - 100 நாட்கள்

    80. ஞான பறவை - 11.1.1991 - 21 நாட்கள்

    81. பசும்பொன் - 14.4.1995 - 56 நாட்கள்

    குறிப்பு:
    ஒரு நடிகரின், இரு புதிய திரைப்படங்கள், ஒரே நாளில் ஒரே திரையரங்கில் (அதுவும் மிகப் பெரிய திரையரங்கமான சாந்தி திரையரங்கில்) பகல் காட்சியாகவும், ரெகுலர் காட்சிகளாகவும் வெளியானது எமக்குத் தெரிந்த வரை நமது நடிகர் திலகம் ஒருவருக்கே.
    (தேதி : 28.8.1987, திரைப்படங்கள் : கிருஷ்ணன் வந்தான்(பகல் காட்சி), ஜல்லிக்கட்டு(3 காட்சிகள்))

    சிங்கத்தமிழனின் சாந்தி சாதனைகளின் புள்ளி விவரங்கள்:

    பாவமன்னிப்பு முதல் பசும்பொன் வரை வெளியான புதிய தமிழ்த் திரைக்காவியங்கள் : 81

    இதில் வெள்ளி விழா கண்டவை : 6

    20 வாரங்கள் முதல் 24 வாரங்கள் வரை ஓடியவை : 2

    100 நாட்கள் முதல் 139 நாட்கள் வரை ஓடியவை : 33

    10 வாரங்கள் முதல் 14 வாரங்கள் வரை ஓடியவை : 12

    50 நாட்கள் முதல் 69 நாட்கள் வரை ஓடியவை : 9

    43 நாட்கள் முதல் 49 நாட்கள் வரை : 7

    6 வாரங்கள் வரை : 12

    சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு, நிரந்தர சக்கரவர்த்தி, சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !

    சாந்தி சாதனைகள் நிறைவு.

    சிங்கத்தமிழனின் சாந்தி சாதனை விளக்கங்கள் விரைவில் ...

    அன்புடன்,
    பம்மலார்.
    Last edited by Gopal.s; 17th May 2014 at 04:58 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #2845
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    37. பாரத விலாஸ் - 24.3.1973 - 100 நாட்கள்

    38. எங்கள் தங்க ராஜா - 15.7.1973 - 102 நாட்கள்
    Bharatha Vilas - 114 Days

    (No movies screened at Shanti in between BV and ETR)

    There is a Shield in Shanti for Bharatha Vilas 114 days, given by the distributer A.P.Films.

  8. #2846
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Dear Muarli sir,

    Wonderful cover-up about ‘Endhan pon vaNNamE’ from Naan Vaazha VaipEn’.

    Your detailed writing has took me to the past, and I am still there, even after finished reading of your article / analysis / history.

    Because, for the previous songs you have covered earlier, all the incidents which you have described are heard (from various sources) and read (from various books and magazines).

    But for these incidents what you have described in this song analysis, I am the living witness for all those happenings. Yes from Thangai film to 100th Day function of Naan Vaazha VaippEn, I am the witness, and was watching all those happenings in those period, especially initial period of NT – IR relationship. Wow, what a golden memory they are. I already told here and there in out NT thread about the happenings at Chennai during Thiyaagam, Kavariman, Andhaman Kaadhali releases.

    I have attended the 100th day function of ‘Naan Vaazha VaippEn’ which was held on 102nd day at Chennai Chitra Theatre, during the interval of its evening show. It was not arranged in any star hotel, but celebrated in the theatre itself. (I strongly hope, Mr. Raghavendhar might be there. He already told he was in 100th days function of Viswaroopam at Shanthi).

    NT, K.R.Vijaya, Rajinikanth, D.Yoganand, Jaiganesh, Thengai Srinivasan, and other artists and technical crews were participated and awarded 100th day shields. When the show was started, all of us waiting for the interval (we already saw the movie in several number of times, but this time mainly for the function). After interval, the function started and nearly one and half hour the speeches and award function took place. They were the happiest moments in life, watching our idols in real.

    Let me live for some more moments there. Even though there were many films for Deepavali 1978, the main competition was between Pilot Premnath (Alankar) and Sigappu RojaakkaL (Devi Paradise). Other movies are Thaai Meedhu Sathiyam (Wellington) , Vandikaran Magan (Gaiety), Thanga Rangan (Plaza), Kannamoochi (Midland) and Thappu ThaalangaL (Pilot)… wow what a golden period it was.

    Thanks a lot Murali sir.
    Your service always Priceless.

  9. #2847
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks Sarathy Sir.(Your old posting)


    நடிகர் திலகமும் ரீமேக் படங்களும்



    இதுவரையில் பலரும் நடிகர் திலகத்தின் ரீமேக் படங்களைப்பற்றி அலசி வந்துள்ளதால், என்னால் உங்கள் அளவிற்குப் பெரிதாக அலச முடியுமா என்று தெரியவில்லை.

    இருந்தாலும், எனது எண்ணங்களை இங்கு பதிகிறேன்.



    பொதுவாக, 1967-இல் இருந்துதான், நடிகர் திலகம் சில ரீமேக் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. 1952-இல் துவங்கி, 1967-வரை, அநேகமாக, எல்லா கதாசிரியர்களும் / இயக்குனர்களும், அவரை கிட்டத்தட்ட எழுபது சதவிகிதம் முழுவதுமாக அவருடைய நடிப்பாற்றலுக்கு தீனி போடும் வேடங்களைக் கொடுத்து, இனி மேல் அவர் நடிப்பதற்கு ஒன்றுமில்லை என்னும் நிலை மெதுவாக வந்திருக்கலாம். மெதுவாக, சிறந்த கதாபாத்திரங்களில் அவர் நடித்தது போக அவருக்கென்று கதை எழுத ஆரம்பித்து, கற்பனைப் பஞ்சம் மெதுவாக தலை காட்டவும் ஆரம்பிதிருந்ததும் ஒரு காரணமாயிருக்கலாம். இன்னொன்று, எப்போதும் அவரது ரசிகர்கள் ஏங்குவது, அவர் வயுதுக்கேற்றார்ப் போல் (அப்போதைய வயது! 38 தானே!) அல்லாமல், எப்போதும் முதிர்ந்த அல்லது, கனமான கதாபாத்திரங்களையே ஏற்று நடிக்கிறாரே என்று. அதற்கேற்றார்ப் போல், 1966-இல் typhoid காய்ச்சல் வந்து அவர் ரொம்ப மேளிந்துவிடவும், மறுபடியும் (உத்தமபுத்திரனுக்குப் பிறகு), அவர் இளமையாக, முன்னைவிடவும், வசீகரமாக மறுபடியும் தோற்றமளிக்க ஆரம்பித்து விட்டார். உன்னிப்பாகப் பார்த்தோமேயானால், செல்வம் படத்தில் இருந்துதான் அவரது மேலும் இளமையான மற்றும் பொலிவான தோற்றம் ஆரம்பித்திருக்கும்.



    I. நடிகர் திலகம் நடித்த ரீமேக் படங்கள்




    நான் இங்கு எல்லா படங்களையும் தொடப் போவதில்லை. ஒரு பத்து படங்கள் மட்டும். எல்லோரும் பத்து பத்து என்கிறோமே. இதுவே பத்து என்றால், இது போல், இன்னும் எத்தனை பத்து? சொல்லப் போனால், அவரது அதனை படங்களையும் நாம் இனம் பிரிதி ஆய்வு செய்திட முடியும்.



    தங்கை:- இது தேவ் ஆனந்த் நடித்து 1951-இல் வந்து வெற்றி பெற்ற Baazi-என்ற படத்தின் தழுவல். எல்லோரும் அறிந்தார்ப் போல், நடிகர் திலகம் இன்னொரு புதிய பாட்டை / பாதையில் (ஒரிஜினல் பாதையை அவர் விடவே இல்லை அது வேறு விஷயம்) பயணம் செல்ல வித்திட்ட படம். Dev Aanand-ஐ விடவும், style-ஆக, ஆனால், ஒரு இடத்தில கூட, அவரைப் போல் அல்லாமல், முற்றிலும் வேறுவிதமாக நடித்தார். அதிலும், குறிப்பாக, அந்த முதல் சண்டை (ஒரு மாதிரி இரண்டு கைகளையும் தட்டுவது போல் சேர்த்து பின் ஸ்டைல்-ஆக தாக்க ஆரம்பிக்கும் அந்த தெனாவட்டான ஸ்டைல்), கேட்டவரெல்லாம் பாடலாம் பாடலில் காட்டும் அந்த முக பாவங்கள் மற்றும் ஸ்டைல் அதை விடவும் இனியது இனியது பாடல் (ஒவ்வொரு முறை இந்த பாடலை திரை அரங்கத்தில் பார்க்கும் பொழுதும் முதல் சரணத்தில் வரும் ஒரு வரி "ரசிகன் என்னும் நினைவோடு...." உடனே, நாங்கள் எல்லோரும் கோரசாக "நாங்க என்னிக்கும் சிவாஜி ரசிகர்கள்டா! என்று அலறுவோம்). ஒரு டிபிகல் மசாலா மற்றும் gangster படத்தை நடிகர் திலகம் முற்றிலும் வேறு விதமாக ஆனால், பொழுதுபோக்கு அம்சம் கொஞ்சமும் குறையாத வண்ணம் அணுகிய விதம், அன்று முளைக்க ஆரம்பித்த இளம் action நடிகர்களான ஜெய் ஷங்கர் மற்றும் ரவிச்சந்திரன் போன்றோரையே திகைக்க வைத்தது எனலாம்.



    என் தம்பி
    :- இது, A. நாகேஸ்வர ராவும் (ANR), ஜக்கையா-வும் நடித்து VB ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் 1967-இல் வெளி வந்து வெற்றி பெற்ற “ஆஸ்தி பருவுலு” என்ற தெலுங்கு படம். (ஒன்று தெரியுமா, இந்த ஜக்கைய்யா தான், நடிகர் திலகம் நடித்து தெலுங்கில் மொழி மாற்றம் seyyap பட்ட பெரும்பான்மையான படங்களுக்கு, டப்பிங் குரல் தெலுங்கில் கொடுத்தவர் – ஏனென்றால், அவரது குரலும் கெட்டியாக, நம் நடிகர் திலகம் அளவுக்கு இல்லை என்றாலும், ஓரளவிற்கு, சிம்ம கர்ஜனை போலிருக்கும். அவர் All India Radio-விலும் அறிவிப்பாளராக வேறு பணியாற்றி வந்தவர்). இந்தப் படத்தின் original-ஐயும் நான் பார்த்தேன். ANR-உம் முதல் பாதியில், அந்த அமைதியான பாத்திரத்தில் நன்றாகத் தான் செய்திருந்தார். இண்டர்வலுக்கு அப்புறம்தான், அவரை, பல லட்சம் படிகள் பெட்டராக நடிகர் திலகம் புகுந்து விளையாடியிருப்பார். அதிலும், “தட்டட்டும் … கை தழுவட்டும்” பாடலில் ஆரம்பித்து, கத்தி சண்டை முடியும் வரை (அதிலும், சண்டை தொடங்குவதற்கு முன் அந்தக் கதியை ஸ்டைல்-ஆக வளைத்து நிற்கும் விதம் ... ஆஹா!”), அரங்கம் திருவிழாக் கோலத்தில் இருக்கும். நூல் முனை கிடைத்தால் நூல் கண்டே பண்ணி விடுபவர் ஆயிற்றே!



    திருடன் – ஒரிஜினல் படத்தை நான் பார்க்கவில்லை. அதனால் பெரிதாக எழுதவில்லை. இருந்தாலும், இதிலும், எப்படியும், நூறு சதவிகிதம் வேறு மாதிரி தான் செய்திருப்பார். இந்தப் படத்தில், எங்கள் குழுவிற்கு மிகவும் பிடித்தது, ஓபனிங் ஷாட் கருப்பு சட்டையும் கருப்பு பான்ட்-உம் போட்டுக்கொண்டு ஜெயில்-இல் கம்பிகளுக்கு மேல் நடந்து வரும் காட்சி, அவர் train-இல் முதலில் போடும் சண்டை, அப்புறம், ஒவ்வொரு முறை பாலாஜி-யை சந்திக்கும் போதும், சிகரெட்டை அவர் வாயில் இருந்து எடுத்து, பாலாஜி ஏதோ கேட்டவுடன் “டன்” என்று சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டே சொல்லும் அந்த அழகு மற்றும் ஸ்டைல். அதிலும், அந்த, வெள்ளை கலர் சட்டை, முழங்கை வரைதான் இருக்கும். அது ஒரு வகையான ஸ்டைல். அவருக்கு மட்டும் அவ்வளவு அழகாக செட்டாகும். அந்த கெட்டப்புடன் ரிவால்வரை கையில் வைத்து ஒவ்வொரு இலக்கையும் சுடும் அந்த ஸ்டைல். இதுவும் அந்தக் கால இளம் நடிகர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது எனலாம். இந்தப் படத்துக்கு நடிகர் திலகத்தின் விமர்சனம் "இந்த திருடன் ஏராளமான பணத்தைத் திருடி திரு பாலாஜி அவர்களுக்குக் கொடுத்து விட்டான்." அந்த அளவிற்கு வசூல் செய்த படம். என் தந்தை சொன்னார் - இந்த படம் வந்தவுடன் அன்றிருந்த அத்தனை action நடிகர்கள் பயப்பட ஆரம்பித்தனர் என்று.



    எங்க மாமா:- இது எல்லோரும் அறிந்தது தான். ஷம்மி கபூரும் ராஜஸ்ரீ (ஹிந்தி நடிகை) மற்றும் ப்ரானும் நடித்து 1967-இல் வெளிவந்து வெற்றி அடைந்த பிரம்மச்சாரி படம். என்னவென்று சொல்வது, எனக்குத் தெரிந்து, இந்தப் படத்தில் தான், அவர் ரொம்ப ரொம்ப அழகாகவும், ஸ்டைல்-ஆகவும், இளமையாகவும் இருப்பார். அதாவது, ரொம்ப. அவருடைய உடை அலங்காரமும் இந்தப் படத்தில் பிரமாதமாக இருக்கும் (கலர் படம் வேறு!). ஒரிஜினல்-இல் இரண்டு மிகப் பெரிய பாப்புலர் பாடல்கள் “Aaj kal their meri pyaari …..” தமிழில், “சொர்க்கம் பக்கத்தில்” மற்றும் “Dhil ke jaroke mein…” தமிழில், “எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்”. முதல் பாடலின் போது, அவரது தோற்றம், டான்ஸ் மூவ்மெண்டுகள் மற்றும் ஸ்டைல் அரங்கை அதிர வைத்தது (இப்போதும் தான்) என்றால், இரண்டாவது பாடல், அரங்கத்தில் இருந்த ஒவ்வொருவரையும், மௌனமான ஒரு நிலைக்கு இட்டுச் செல்லும் – அதாவது – பின் டிராப் சைலன்ஸ் என்பார்களே. அரங்கில் உள்ள அனைவரையும் வழக்கம்போல் கட்டிப்போட்டு விடுவார். மறுபடியும், முற்றிலும் வேறு விதமான நடிப்பு.



    எங்கிருந்தோ வந்தாள்
    :- சஞ்சீவ் குமார் நடித்து வெற்றி பெற்ற “கிலோனா”. இதுவும் 1970-இல் தான் வந்தது. சூட்டோடு சூடாக, பாலாஜி அவர்கள் ரீமேக் செய்தார். இந்தப் படத்திலும், ஒரிஜினலை விட அற்புதமாக வித்தியாசமாக செய்திருப்பார். "ஏற்றி வாய்த்த தீபம் ஒன்று என்னிடத்தில் வந்ததென்று பார்த்து மகிழ்ந்ததென்னவோ பின் பாராமல் போனதென்னவோ") நிறைய பேர் இந்தப் படத்தைப் பற்றி அலசியதால், நான் சொல்வது “ஒரே பாடல்” பாடலைப் பற்றி. இந்தப் பாடலை அவர் சோகமாக இருக்கும்பொழுது (ஆம் அவரது காதலியின் மணவிழாப் பாடல் (காதலி மற்றொருவருக்கு மனைவியானால், பின் எப்படி சோகம் இல்லாமல்?) பாடச் சொல்லி வற்புறுத்துவார்கள். முதலில் முடியாது என்பவர், கடைசியில், வேறு வழியில்லாமல் ஆரம்பிப்பார். எப்படி?, ... ஆ ஆ. . என்று ஆலாபனை செய்து கொண்டே – சரி சரி பாடுகிறேன் என்று – அந்த ஆலாபனையும் அவர் சரி சரி என்பதும் அவ்வளவு அழகாக இழைந்து வரும். அதுவும் அந்த இரண்டாவது சரணம் தான் ரொம்பவே எல்லோரையும் உருக்கி விடும். இந்தப் பாடலைப் பாடித் தான் நான் 1992-இல் எனது அலுவலகத்தில் முதல் பரிசைத் தட்டிச் சென்றேன் என்பதை பெருமையோடு நினைவு கூர்கிறேன்.



    வசந்த மாளிகை
    :- A. நாகேஸ்வர ராவ் (ANR) நடித்து தெலுங்கில் 1971-இல் வந்து பெரும் வெற்றி பெற்ற “பிரேம நகர்” ஆம் தெலுங்கில் ப்ரேம என்றுதான் உச்சரிக்க வேண்டும். நம் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டு முழுமையாக ஆக்கிரமித்த படம். இதன் ஒரிஜினலையும் நான் பார்த்தேன். ஒன்று, நடிகர் திலகம் ஒவ்வொரு காட்சியையும் வேறு விதமாக செய்தது. மற்றொன்று அவர் காட்டிய அந்த grace மற்றும் ஸ்டைல். படம் முழுவதும் ஒரு விதமாக சன்னமான தொனியில்தான் பேசியிருப்பார் (பெண்களின் மனது எப்போதும் ஆண்களின் பலத்தை எடை போட்டபடிதான் இருக்குமா அதன் பெயர்தான் பெண்மையா? போன்ற பல வசனங்களை அவர் உச்சரிக்கும் விதம்! – வசந்த மாளிகைக்கு அழைத்துச் சென்று அவர் பேசும் அந்த மெய் சிலிர்க்க வாய்த்த வசனங்களையும் சேர்த்து. ஒரிஜினலில் ஒரு மாதிரியான டப்பாங்குத்துப் பாட்டு வரும். தமிழில், பாடலை பதிந்து மட்டும் விட்டிருந்தனர் “அடியம்மா ராசாத்தி சங்கதி என்ன?” என்று துவங்கும். தெலுங்கில், கதாநாயகன் அவரது பண்ணைக்குப் போயிருக்கும் போது, அங்குள்ள, பெண்கள் நாற்று நட்டுக்கொண்டும் தலையில் சுமையை சுமந்துகொண்டும் போவதைப் பார்த்து, கதாநாயகனுக்கு கனவில் இந்தப் பாடல் வருவதாக வரும். தெலுங்கில், ANR நடித்தால், ஒரு பாட்டாவது, அவரது பிரத்யேக டான்ஸ் மூவ்மெண்டுகளுடன் கண்டிப்பாக இருந்தாக வேண்டுமாம். அங்கு அவரது செல்லப் பெயர் “நட சாம்ராட்” அங்கு நட என்றால் நடனம், நடை அல்ல. தமிழில், நடிகர் திலகம் இந்தப் பாடலை வேண்டாம் என்று சொல்லி இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த கதாபாத்திரம், முதலில் இருந்தே ஒரு விதமான graceful நடை, உடை, பாவனையுடன் விளங்கும். (ஏன் ஏன் பாடல் உட்பட..). இது கிராமத்து மெட்டில் அமைந்த … ஒரு மாதிரியான டப்பாங்குத்துப் பாடல் வேறு… இந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை சிதைத்து விடும் என்பதால்தான் இந்தப் பாடல் படத்தில் இடம் பெறாது போயிருக்கும். அதற்கு பதிலாகத்தான், அந்த நாடோடிக் கூட்டத்தினருடன் அவரும் வாணிஸ்ரீ -யும் சேர்ந்து ஆடுவதுடன் வரும் அந்த கட்டம் வரும் (இதற்கு ஹிந்தியில் பாடலும், இதற்குப் பின் வரும் அந்த குடிசையில் வரும் காட்சி தெலுங்கில் பாடலாகவும் வரும். இதிலும், தமிழில் வித்தியாசமாகதான் செய்திருப்பார் நம் நடிகர் திலகம். இதில், ஒரு நடை piece ஒன்று – NT- ரசிகர்களுக்காகவே இருக்கும். அதிலும், அந்த grace-ஐ maintain பண்ணியிருப்பார். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும், குறிப்பாக, அவரது டிரெஸ்ஸிங் சென்ஸ்-ஐ பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம்.

    நீதி
    :- இது ராஜேஷ் கன்னா நடித்து வெற்றியடைந்த துஷ்மன் என்ற இந்தி படம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. முதலில் இருந்து கடைசி வரையிலும் (ஒரு சில காட்சிகளைத் தவிர) ஒரே உடையை (ஒரு மாதிரியான மிலிடரி கிரீன் கலர்) அணிந்து கொண்டு ஒரு நிஜ லாரி டிரைவராய் வாழ்ந்து காட்டிய படம். இந்தப் படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்பொழுதும், ஒவ்வொரு முறையும், அவரை மற்றவர்கள் (சௌகார் வீட்டில் இருப்பவர்கள்) ஒதுக்கும்போதும், எப்போது தான் அவரை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களோ என்று மனம் கிடந்து எங்கும். குறிப்பாக, சௌகார் அவரை கடைசி காட்சிக்கு முன் வரை, அவரை அந்த அளவிற்கு வெறுப்பார் (என்ன இருந்தாலும், அவரது கணவரையல்லவா நடிகர் திலகம் தவறுதலாக லாரியால் கொன்றிருப்பார்). கடைசியில், மனோகரை அடித்து நொறுக்கியவுடன், சௌகார் அவரை தம்பி! என்று அழைத்தவுடன், நடிகர் திலத்தின் reaction அனைவரையும் அழ வைத்து விடும். மேலும், "எங்களது பூமி காக்க வந்த சாமி" பாடலில், கடைசியில், கோவை சௌந்தரராஜன் குரலில், " பல்லாண்டு பாடுகின்ற ..." என்று ஆரம்பித்து பாடும் போது அவர் காட்டுகின்ற subtle முக பாவங்கள், ஜெய கௌசல்யா திருமணம் முடிந்து அவரை வழியனுப்பும்போது கூடவே குழந்தை போல் ஓடிக்கொண்டே பாசத்துடன் அவரிடம் பேசும் பேச்சுக்கள்.... இந்தப் படத்திற்கும், நீலவானம் மற்றும் பாபு படங்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இந்த மூன்று படங்களிலும், அவரது கதாபாத்திரம் இடையில் ஒரு சந்தர்ப்பத்தில் தான் வந்து இணைந்து கொள்ளும். ஆனால், போகப்போக, அந்த கதாபாத்திரம் அந்த வீட்டின் சூழலோடு இணைந்து / இழைந்து கொண்டு கடைசியில், அந்த கதாபாத்திரம், அந்த வீட்டிலே ஒருவராக தன்னை ஐக்கியப்படுதிக்கொள்வதோடு மட்டுமல்லாமல், அந்த வீட்டில் உள்ள இன்றியமையாத உறுப்பினராகவே மாறிவிடும். ஆம். இந்த மூன்று படங்களிலும் (இவைகளில் மட்டும் தானா?), அவர் அந்த கதாபாத்திரமாகவே மிக மிக இயல்பாக மாறி விட்டிருப்பார். இவைதானே இயல்பான நடிப்பு!



    எங்கள் தங்க ராஜா
    :- இது VB ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் தெலுங்கில் சோபன் பாபு இரட்டை வேடத்தில் நடித்து வெற்றி அடைந்த “மானவுடு தானவுடு" என்ற படம். சோபன் பாபு பெரும்பாலும், அமைதியான கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார். இந்தப் படமும் சோக்காடு என்ற மற்றொரு படமும் அவரை வித்தியாசமான நிறைய வேடங்களை ஏற்க வழி வகுத்தது என்று என் கசின் (பெரியம்மா மகன் - அவர்களது குடும்பம் நெல்லூரில் இருக்கிறது) சொல்லுவான். இந்தப் படத்திலும், நடிகர் திலகம் வித்தியாசமான இரண்டு கெட்-அப் மற்றும் கதாபாத்திரங்களில் கலக்கினார். அநேகமாக அனைவரும் இந்தப் படத்தைப் பற்றி அலசோ அலசு என்று அலசிவிட்டதால், என்னால் முடிந்த சிறு துளிகள். "இரவுக்கும் பகலுக்கும்" பாடலில், நடிகர் திலகத்தின் graceful டான்ஸ் மூவ்மெண்டுகளும் சின்ன சின்ன நடை piece -களும், அரங்கை அதிரவைத்தது. இந்த டாக்டர் கதாபாத்திரத்தில், அவருக்கு பெரிதாக ஸ்டைலாக நடிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லாது போனாலும், இந்தப் பாடலை முழுவதுமாக பயன்படுத்தி, கதாபாத்திரத்தின் தன்மையை சிதைக்காமல், மெலிதான ஒரு ஸ்டைலையும் graceful டான்ஸ் மூவ்மெண்டுகளும் கொடுத்திருப்பார்.



    அவன் தான் மனிதன்
    :- இது Dr. ராஜ்குமார் நடித்து கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற கஸ்தூரி நிவாசா என்ற படம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ராஜ்குமார் ஒரு மிகச் சிறந்த நடிகர் மற்றும் பாடகரும் கூட. எனக்குத் தெரிந்து, 1975/76-க்கு பிறகு, அவரது படங்களில் வரும் பாடல்களுக்கு, அவரே குரல் கொடுக்க ஆரம்பித்தார். அதற்கு முன்பு வரை, திரு P B ஸ்ரீனிவாஸ் அவர்கள்தான் அவருக்கு பாடி வந்தார். எனது இன்னொரு கசின், ராஜ்குமார் அவர்களின் சொந்த production கம்பெனி-இல் அப்போது வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அந்த பட நிறுவனம், ஏவிஎம் ஸ்டூடியோவில் ஒரு ரூமை வாடகைக்கு எடுத்து ராஜ்குமார் படங்களை மட்டும் எடுத்துக் கொண்டிருந்தது. என்னுடைய இந்தக் கசினும் நடிகர் திலகம் ரசிகன்தான். இந்தப் படத்தின் ஒரிஜினல்-இல் ராஜ்குமார் மிக அற்புதமாக செய்திருந்தார். மேலும், இந்தப் படம் கன்னடத்தில் பெரும் வெற்றியடைந்த படம் என்பதால், (எனது நண்பர் (எதிர் வீடு வேறு) கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும், சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவரும், இவரது இரு அண்ணன்களும் - மூவரும் நடிகர் திலகம் ரசிகர்கள். இவருக்கு ராஜ்குமாரையும் மிகவும் பிடிக்கும். அவர் கூறிய தகவலையும் வைத்து இந்த கன்னடப் பட தகவலை சொல்கிறேன்). இந்த கன்னட படத்தையும் நான் பார்த்திருக்கிறேன். நடிகர் திலகத்திற்கு இந்த படம் ஒரு சவாலாகவே அமைந்தது. (உயர்ந்த மனிதன் மற்றும் தெய்வ மகன் ஆகிய படங்களும் ரீமேக் செய்யப்பட படங்கள் மற்றும் அந்த படங்களும் நடிகர் திலகத்துக்கு சவாலாக அமைந்தவைதான் எனினும் அந்தப் படங்களின் ஒரிஜினல் அந்த அளவிற்கு நாடு முழுவதும் புகழ் அடைந்தவை என்று கூற இயலாது. அதனால் இந்த படங்களை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, இந்த பத்து படங்களும் ஓரளவிற்கு எல்லா விதமான மக்களும் பார்த்து விட்ட படங்கள் ஆதலால், ரீமேக் செய்யப்படும்போது ஒரிஜினலை நிறைய பேர் compare செய்து பார்ப்பார்கள் அதனால், நடிகர் திலகம் எப்படியும் ஒரிஜினலை விட நன்றாக செய்ய வேண்டும் என்று முனைவார். எல்லா படங்களுக்கும் அவருடைய முனைப்பு இருக்கும் என்றாலும், இந்த மாதிரி ஆரோக்கியமான போட்டி அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று.) இருந்தாலும், இந்த சவாலையும் ஏற்று, நடிகர் திலகம் தன் தனித்தன்மையை நிரூபித்தார் - அதுவும், அந்த சோக உணர்வை விழிகளாலேயே காண்பித்து அனைவரையும் நெக்குருக வைத்தார். சோகத்தை எந்த விதமான அதிகபட்ச சிரத்தையும் எடுத்துக் கொள்ளாமல், இரு விழிகளாலேயே வெளிப்படுத்தும் கலை அவருக்கு மட்டுமே சாத்தியம். (மேஜர் ஒரு பேட்டியில், நடிகர் திலகத்தைப் பற்றி கூறும் போது "சிவாஜி ஒருவர்தான் கண்களில் பெருகும் கண்ணீரை கண்களுக்குள்ளேயே, தேக்கி வைத்து கேமராவை நோக்கி பார்த்து, கண்ணீர் கீழே சிந்தி விடாமல், அந்த கண்ணீரை மக்களுக்கு காண்பித்து நடிப்பவர்" என்றார்). உடலை பெரிதாக வருத்திக் கொள்வாரே தவிர பட்டினி கிடந்து தோற்றத்தை மாற்றிக் கொள்ள மாட்டார். நடிப்பினாலேயே அத்தனை உணர்வுகளையும் காட்டத்தான் தலைப்படுவார். (அப்பர் ஒரு சிறந்த உதாரணம்). இந்தப் படத்தின் flashback காட்சிகள்தான், நம் அனைவரையும் நிறைய கவர்ந்தது. குறிப்பாக, ஊஞ்சலுக்குப் பூச்சூட்டி பாடல் (முரளி சார் கூறிய அந்த கடைசி சரணத்தில் நடிகர் திலகம் அந்த புல்மேட்டின் மேலிருந்து கீழே இருக்கும் மஞ்சுளாவைப் பார்த்து, ஒரு மாதிரி நடை நடந்து பின் மறுபடியும் பாடும் அந்த ஸ்டைல் அரங்கத்தை எப்போதும் அதிர வைக்கும்). அன்பு நடமாடும் பாடலும், மிகச் சிறப்பாக இருக்கும். மெல்லிசை மன்னரின் மெட்டுக்கு கேட்கவே வேண்டாம். இந்தப் படத்தில் நடிகர் திலகம் வைத்திருந்த ஹேர் ஸ்டைலைதான் நான் சிறிது காலம் வரை வைத்திருந்தேன். இப்போது இல்லை. முடி சிறிது கொட்டி விட்டது. அந்த அளவிற்கு என்னை முழுமையாக ஆக்கிரமித்த படம். Grouch-070 இந்தப் படத்தை விரிவாக மிக அற்புதமாக அலசி இருந்தார்.



    பாபு:- ஆஹா! இந்தப் படத்தைப் பற்றி பேச, பகிர்ந்து கொள்ள இந்த ஒரு ஜென்மம் போதுமா - தெரியவில்லை. ஓடையில் நின்னு - சத்யன் என்கிற அற்புதமான நடிகர் நடித்த மிகச் சிறந்த மலையாளத் திரைப்படம் ஆயிற்றே இது. இந்தப் படத்தில் நடித்ததற்காக சத்யனும், இதே படத்தின் ஹிந்திப் பதிப்பான “Aashirvaad” படத்திற்கு அசோக் குமாரும் அடுத்தடுத்த வருடங்களில் பாரத் அவார்ட் வாங்கினர். தமிழிலும், நடிகர் திலகத்திற்கு கிடைத்திருக்க வேண்டியது - கை நழுவிப் போன கதை ஏற்கனவே அலசப் பட்டு விட்டது. இந்தப் படத்தில், எப்போதும் எல்லோர் மனதிலும் நிழலாடும் காட்சி - அவர் பாலாஜி வீட்டில் உணவு உண்ணும் காட்சி. பாலாஜியும், அவரது மனைவி சௌகாரும், குழந்தை ஸ்ரீதேவியும் அவர்களது கார் வழியில் நின்றுவிடுவதால், சாலையில் நின்று கொண்டிருக்கும்போது, வழியில் போகும் நடிகர் திலகம் அவர்களை தனது கை ரிக்க்ஷா மூலம் அவர்களது வீட்டிற்குக் கொண்டு விடுவார். பாலாஜி, நடிகர் திலகத்திற்கு பணம் கொடுப்பதோடு நின்று விடாமல், மழையில் நனைந்து விட்ட அவருக்கு, துண்டைக் கொடுத்து மேலும், ஒரு சட்டையும் கொடுப்பார். இது போதாதென்று, அவரை வீட்டிற்குள் அழைத்து, சாப்பாடும் போடுவார். பாலாஜியும், சௌகாரும் ஸ்ரீதேவியும் அவரை பந்தா இல்லாமல் கனிவோடும், அன்போடும் நடத்தும் விதம் மெய் சிலிர்க்க வைக்கும். நடிகர் திலகம் கீழே உட்கார்ந்து இருப்பார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று ஸ்ரீதேவி கீழே போய் அவர் அருகே உட்கார்வதோடு மட்டுமின்றி, அவரது இலையில் இருந்து ஒரு கத்தரிக்காய் துண்டையும் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளப் போவார். நடிகர் திலகம் பதறிப் போய், ஸ்ரீதேவி கையைப் பிடித்து, சௌகாரையும் பாலாஜியையும் பார்த்து, "குழந்தையை ஒன்றும் சொல்லாதீர்கள். தெரியாமல், என் இலையில் இருந்து எடுத்து விடடாள்" என சொல்வார். ஆனால், அதற்கு மாறாக, பாலாஜியோ சௌகாரை பார்த்து "பரவாயில்லையே. இவள் கத்தரிக்காய் சாப்பிடுகிறாள். குட்" என்று சொல்லவும், சௌகார் அதையே ஆமோதிப்பார். உடனே, நடிகர் திலகம் காட்டும் மின்னலென வெட்டிச் செல்லும் அந்த உணர்வுகள் - ஆம் - ஒன்றல்ல - ஆச்சரியம், ஆனந்தம், மகிழ்ச்சி கலந்த அந்த கண்ணீர் மற்றும் நன்றிப்பெருக்கு - அப்பப்பா - எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கும் அனைவரையும் ஒருசேர கலங்கவைத்து விடும். Of course, பாலாஜி, சௌகார் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்தக் காட்சி அற்புதமாக அமைந்திருக்கும். இதுபோல், இன்னும் எத்தனையோ காட்சிகள். இந்தப் படத்தின் ஒரிஜினலில், சத்யன் அவர்கள் கதாபாத்திரம் ஒரு மாதிரியான முரட்டுத்தன்மை உடையதாக சித்தரிக்கப்பட்டிருக்கும். தமிழில், அதனை இலேசாக, மாற்றி, படம் முழுவதும், கனிவு, நன்றிப் பெருக்கு மற்றும் எளிமை மூலம் மிக மிக வேறுமாதிரியான கதாபாத்திரமாக மாற்றி இருந்தார் நமது நடிகர் திலகம்.


    அது எப்படி, நடிகர் திலகம் மட்டும், எப்போதும் ஒரிஜினலை விட நன்றாக செய்கிறார். அதே சமயம், அவரது படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப் படும் போது இவர் நடித்த அளவுக்கு மற்றவர்களால் நடிக்க முடிவதில்லை - அந்த கதாபாதிரங்களுக்கு உயிர் ஊட்ட முடிவதில்லை? (இந்த ஆய்வு - அதாவது நடிகர் திலகத்தின் படங்கள் மற்ற மொழியில் - இந்த ஆய்வு முடிந்த பிறகு துவங்குகிறது). ஏற்கனவே கூறியது போல் - அதாவது – நடிகர் திலகம் மேஜர் அவர்களிடம் கூறியது போல் - ஒவ்வொரு ஒரிஜினலையும், குறைந்தது பத்து தடவையாவது பார்த்து ஆழமாக study செய்து முழுக்க முழுக்க வேறு மாதிரி - சிறிதளவு சாயல் கூட ஒரிஜினலில் இருந்து வந்து விடக் கூடாது - என்று நடிகர் திலகம் எடுக்கும் அந்த கர்ம சிரத்தை - மற்றும் அந்த தணியாத தாகம் மற்றும் வெறி.



    நான் மேற்கூறிய படங்கள் அல்லாமல், இன்னும் பல நல்ல பத்து படங்கள் ரீமேக் வரிசையில் உண்டு. மோட்டார் சுந்தரம் பிள்ளை, உயர்ந்த மனிதன், தெய்வ மகன், (ஏன் இதில் சேர்க்க வில்லை என மேலே கூறியிருக்கிறேன்), தியாகம், அண்ணன் ஒரு கோவில் உள்பட
    Last edited by Gopal.s; 18th May 2014 at 11:13 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #2848
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks Abhkhlabhi Sir.Your Old posting.


    உங்களுடைய நடிகர் திலகத்தின் ரீமேக் படங்களை பற்றி ஆய்வு அருமை. பிறமொழிகளில் வந்த படங்களை நடிகர் திலகம் தமிழில் நடித்த படங்கள் ஏராளம். ஒரு சில படங்களை தவிர , எல்லாமே வெற்றி படங்களே. உதாரணம் பாலாஜி தயாரித்த படங்கள். உனக்காக நான் தவிர மற்ற படங்கள் வெற்றியே. பாலாஜியை தவிர மற்ற தயாரிப்பாளர்கள் எடுத்த படங்களில் நடிகர் திலகம் நடித்த படங்கள் எல்லாமே வெற்றி தான். உதாரணம் , வசந்த மளிகை, திரிசூலம், அவன்தான் மனிதன், அண்ணன் ஒரு கோவில்.

    பிற மொழிகளில் வெளி வந்து தோல்வி அடைந்த படங்களை யாரும் முன் வந்து தயாரிப்பதில்லை. ஆனால் நம் நடிகர் திலகம் மட்டுமே பிற மொழி தோல்வி படத்தையும் தமிழில் வெற்றி அடைய செய்தார். உதாரணம், அண்ணன் ஒரு கோவில், அவன் தான் மனிதன். கன்னடத்தில் சுமாராக ஓடிய கஸ்தூரி நிவஸா என்ற படத்தை , தமிழில் அவன் தான் மனிதனாக வந்து வெற்றி பெற்றது . ( ATM நடிகர் திலகத்தின் 175 படம் , அதனால் ஓடியது என்று சிலர் சொல்லல்லாம்).

    ஆனால் கன்னடத்தில் பெரிய தோல்வி அடைந்த படமான தேவர கண்ணு என்ற படத்தை தமிழில், அண்ணன் ஒரு கோவில் படத்தை தன் சொந்த தயாரிப்பு கம்பெனி முலம் தயாரித்து வெற்றி அடைந்தார். ஆனால் 250 படமும் கன்னடம் முலம். தோல்வி அடைந்தது. காரணம், நடிகர் திலகத்தின் 250 படம், பெரிய எதிர்பார்ப்பு (200 படத்தை போல - இதுவும் கன்னடம் முலம்) பிரபுவிற்கு முக்கியத்தும் , வலுவான கதை இல்லை.

    நடிகர் திலகம் நடித்து தமிழில் வெளி வந்த படங்கள், பிற மொழிகளில் தயாரித்து வெளியான படங்கள் தமிழை போல் வெற்றி பெறவில்லை. (பல படங்கள் தோல்வி அடைந்தன).
    தமிழில் - பிற மொழிகளில் வந்து தோல்வி
    vietnam veedu , கெளரவம், - கன்னடம்
    சவாலே சமாளி - கன்னடம், தெலுங்கு, ஹிந்தி
    தெய்வ மகன் - (முலம் ஹிந்தி ?) - கன்னடம், தெலுங்கு
    பட்டிகாட பட்டணமா - தெலுங்கு ( கன்னடத்தில் வெற்றி)
    நவராத்திரி - தெலுங்கு, ஹிந்தி
    பாசமலர் (முலம் மலையாளம் ?) - தெலுங்கு, ஹிந்தி
    ராஜா (முலம் ஹிந்தி) - கன்னடம் (கல்லடி படும் என்று பயந்து 100 நாள் ஒட்டினார்கள்)
    தியாகம் - தமிழில் சில்வர் ஜூப்ளி (தெலுகில் சுமார் வெற்றி)
    எங்க ஊர் ராஜா - தெலுங்கு
    Last edited by Gopal.s; 18th May 2014 at 08:30 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #2849
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks. Who else? Saratha Madam.

    உள்ள உணர்வுகளின் பகிர்வுகளுக்கு மிக்க நன்றி. எப்போது யார் 'ராஜா'வைப்பற்றிப் பேசினாலும் அதில் உடனே நானும் கலந்துகொள்ள வேண்டும் என்ற வேட்கை எழும். அந்த அளவுக்கு என் மனதுக்கு மிக நெருங்கிய படங்களில் ஒன்று. (பார்த்தசாரதி சார், நான் சொன்னேனே 'கேட்டகரி நம்பர்: 3' படங்கள் எனக்கு நெருக்கமானவை என்று. அவற்றில் ராஜா, தங்கச்சுரங்கம், என்னைப்போல் ஒருவன், சுமதி என் சுந்தரி... இப்படி நிறைய).

    முரளி, சுமார் ஆறு மாதங்களுக்கு முன் உங்களைப்போலவே ரிமோட்டால் சேனல்களை கிண்டிக்கொண்டிருந்தபோது ஒரு இந்தி சேனலில், பள்ளியில் சிறுவர்களின் பாக்ஸிங் போட்டி நடந்துகொண்டிருந்தது. அடடே இது ஜானி மேராநாம் படத்துவக்கம்போலிருக்கிறதே என்று கூர்ந்து பார்க்க, அடுத்த காட்சியிலேயே அது உறுதியானது. தாய் பூஜை செய்துகொண்டிருக்க, பையன்கள் பள்ளியில் வாங்கிய 'கப்'புக்காக சண்டையிட்டுக்கொள்ள, காட்சி மாறி இரண்டு போலீஸ் அதிகாரிகளும் பேசிக்கொண்டே மாடிப்படியில் இறங்கி வரும் காட்சி. ரிமோட்டை எடுத்து சோபாவின் கீழே வைத்துவிட்டேன். (எதிர்பார்த்தபடியே சிறிது நேரத்தில் என் பையன் வந்து, 'ரிமோட்டைக் கொடும்மா, இன்னைக்கு முக்கியமான கிரிக்கெட் மேட்ச் பார்க்கனும்' என்று கேட்க, 'போய் அப்பா ரூம்ல சின்ன டிவில பாரு' என்று அனுப்பிவிட்டேன்).

    படம் ஓட ஓடத்தான், தமிழில் 'ராஜா'வை சி.வி.ஆர். எவ்வளவு சுவாரஸ்யப் படுத்தியிருந்தார் என்பது தெரிந்தது. தேவ் ஆனந்தின் அறிமுகக்காட்சி, ஆரஞ்சுகலர் முடி வைத்த கடத்தல் கையாளுடன் அவர் போனில் பேசும் காட்சி எல்லாம் சப்பென்றிருந்தது. டென்னிஸ் ராக்கெட் டீப்பாயின் மீது கிடக்க ஜஸ்ட் ஒரு சோபாவில் உட்கார்ந்துகொண்டு, டீப்பாயின் மேல் கால்களைநீட்டி வைத்துக்கொண்டு 'மேராநாம் ஜானி' என்று பேசும்போது நம் நினைவுக்கு வருவது, கையில் டென்னிஸ் ராக்கெட்டுட்ன் சுழல்நாற்காலியில் அமர்ந்து 'என் பெயர ராஜா' என்று ஆரம்பித்து, ஒவ்வொரு பதிலுக்கும் ஒவ்வொரு மாதிரி சுழன்று சுழன்று ஸ்டைல் காட்டும் நடிகர்திலகமும், அவ்வாறு செய்ய வைத்த சி.வி.ஆரும்.

    அதே போலத்தான் 'ஓ..மேரி ராஜா' பாடல் காட்சியும். மலைப்பிரதேசத்தில் படமாக்கப்பட்டதால் நீங்கள் சொன்னதுபோல தேவ்ஜியும் Hema-வும் ரோப்காரில் போக, போலீஸ் ஆபீஸர் இன்னொரு ரோப்காரில் துரத்தும் காட்சி. 'ராஜா'வில் இப்பாடல் கேரளாவில் எடுக்கப்பட்டதால், கடலோர பாறைப்பகுதிகளில் போலீஸாரால் பின்தொடரப்பட, நடிகர்திலகத்தின் சேட்டைகளால் எரிச்சலுறும் ஜெயலலிதா, அவர் கையைத்தட்டிவிட, 'சுற்றிலும் போலீஸ் பார்த்துக்கொண்டிருக்கிறது' என்று இவர் ஜாடை காட்ட, உடனே அவர் தட்டிவிட்ட கையைக் கன்னத்தில் தேய்த்துக்கொள்ள, இவர் அந்தக்கைக்கு முத்தம் கொடுக்க, அதைப்பார்த்துக்கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் 'சாந்திகுமார்' பொறாமையில் உதட்டைக்கடிக்க.... எவ்வளவு ரம்மியமான காட்சி. அத்ற்கேற்றாற்போல காஸ்ட்யூம். மெரூன்கலர் சாரி, மெரூன்கலர் புல்ஸ்லீவ் ஜாக்கெட்டில் கலைச்செல்வி கொள்ளை அழகென்றால், அத்ற்கு ஈடு கொடுத்து, வெள்ளை பேண்ட், கிரீம்கலர் ஷர்ட், ஒருமாதியான மஞ்சளும் பிரௌனும் கலந்த கோட், வெளிர் நீல நிற ஸ்கார்ப் என்று நடிகர்திலகமும் அசத்துவார். கொச்சின் ஏர்போர்ட்டில், 'வைரங்கள் எங்கே' என்று கேட்கும் செல்விடம் 'கோட்டில் இருக்கு' என்று கோட்டைக்கழற்றி அவருக்குப் போர்த்திவிடும் இடத்தில் பேண்ட், 'டக்-இன்' செய்யப்பட்ட ஷட்டில் படு ஸ்மார்ட் எங்க அண்ணன்.

    அதுபோலவே, தன்னை ஏமாற்றி விட்டு பணத்துடன் தப்பியோடப்பார்க்கும் ரந்தாவாவைப்பிடிக்க காரில் தேவ்ஜியும், பிரானும் போகும் கட்டமும் ரொம்பவே படுசுமார். அதையே தமிழில் கற்பனை செய்து பாருங்கள்.
    'பாபு, நான் கொண்டுவந்த பெட்டியை இன்னைக்கு ஒருத்தர் கையில பார்த்தேன்'
    'யெஸ், குமார் எடுத்திட்டுப்போயிருக்கான். உரிய இடத்துல சேர்த்துடுவான்'
    'உங்களுக்கு நம்பிக்கை அதிகம்'
    'அவன்கிட்டே நாணயம் அதிகம்'
    'அந்த நாணயத்துக்கு குறுக்கே ஒரு பொண்ணு வந்தா...?'
    'ராஜா, என்ன சொல்றே? குமாருக்கு...'
    'காதலிக்க வேண்டிய வயசுதானே..?'
    'யெஸ், அவன் அடிக்கடி ஒரு டான்ஸ் பொண்ணைப்பார்க்கப்போவான்'.
    'மை டியர் சார், எனக்குத்தெரிஞ்சவரைக்கும் அள்ளிக்கொடுக்கும் முதலாளியைவிட அள்ளி அணைக்கும் காதலியின் பேச்சுக்குத்தான் மதிப்பு அதிகம்'
    'ராஜா, உனக்கு கார் ஓட்டத்தெரியுமா?'
    'எக்ஸ்பர்ட்'
    பாலாஜி கார் சாவியைத்தூக்கிப்போட (அதுக்கும் ஒரு சவுண்ட் கொடுப்பார் MSV), சாவி நடிகர்திலகம் கையில் கிடைத்த அடுத்த வினாடி, நீலநிறக்கார் போய்க்கொண்டிருக்கும் (அதுதான் சி.வி.ஆர்). மஸ்தானின் அற்புத ஒளிப்பதிவில், கார் குறுகலான சந்தில் போகும் காட்சி டாப் ஆங்கிளில் காட்டப்பட, மெல்லிசை மன்னர் சும்மாயிருப்பாரா?. தனது அதிரடி சவுண்டோடு Vocal Humming ஐயும் கலந்து அசத்துவார்.............

    (சுஜாதா சினி ஆர்ட்ஸ் எம்ப்ளத்தில் துவங்கி, கிருஷ்ணன் தலையில் கிரீடம் சூட்டப்படும் கடைசிக்காட்சி வரை, அணு அணுவாக இப்படத்தை பிரிச்சு மேயணும்போல இருக்கு. என்ன செய்வது? பத்து பக்கம் ஆகுமே)
    Last edited by Gopal.s; 18th May 2014 at 08:31 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. #2850
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks Pammalar(Old Postings)


    சகோதரி சாரதாவுக்கு "ராஜா"வைப் பற்றி எழுத 10 பக்கம் வேண்டும் என்றால், அடியேனுக்கு "வசந்த மாளிகை" குறித்து எழுத ஒரு தனித்திரியே தேவை. அடியேன் பூமிக்கு வந்த எட்டாவது நாளில்(29.9.1972) வெளிவந்த காவியம். அடியேன் நடத்திய (நடத்தப் போகிற) - முழுக்க முழுக்க வாழ்வியல் திலகத்தின் புகழ் பாடுகின்ற - பத்திரிகைக்கும் (வசந்த மாளிகை) பெயராக அமைந்தது. 'Hai Handsome!' என்று யாரைக் கூப்பிட முடியும் "வசந்த மாளிகை" ஆனந்தைத் தவிர. படம் முழுமையுமே - இன்பத்தில் மிதந்தாலும் சரி, துன்பத்தில் திளைத்தாலும் சரி - the most handsome heroவாகக் காட்சியளிப்பார். படத்தின் நடுவில் வரும் ஒரு காட்சியில், அவரது அறையில் நாற்காலியில் அமர்ந்தபடியே எதிரில் இருக்கும் மேஜையின் மேல் இருக்கும் வசந்த மாளிகையின் வரைபடத்தை வனப்புடன் பார்த்து, பின் நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே சற்று அண்ணாந்து "வசந்த மாளிகை" என்பாரே, கோடி கொடுக்கலாம் அந்த ஒரு சீனுக்கு. மழை சோவென்று ஜோராகக் கொட்டிக் கொண்டிருக்க, ஒரு குடிசையில் சொட்ட சொட்ட ஜோடியாக நுழைவர் ஆனந்தும், லதாவும். நனைந்த முந்தானையை லதா ஒட்டப் பிழிய, ஆனந்தின் பற்கள் plumsஐ சாறு பிழியும். காதலி லதாவின் இளமையை, அழகை ஆனந்தின் காந்தக்கண்கள் சுவைத்து ரசிக்க, கண்களுக்கு போட்டியாக அவரது வாய் plumsஐ சுவைத்து மகிழும். பின்னர் அங்கு 'எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்லக் கொள்ளி?!' (Sorry Joe) என எடுத்து அந்தக் கொள்ளிக்கட்டையால் சிகரெட்டைப் பற்ற வைக்கும் ஸ்டைல் இருக்கிறதே, அப்பப்பா... கொள்ளிக்கட்டையால் சிகரெட்டை ஸடைலாக பற்ற வைத்தவர் உலகிலேயே நமது ஸ்டைல் சக்கரவர்த்தி ஒருவராகத்தான் இருக்க முடியும்.

    தெலுங்கில் "பிரேம நகர்(1971)" இமாலய வெற்றி என்றால், தமிழில் "வசந்த மாளிகை(1972)" விண்ணைத் தொடும் வெற்றி! இந்தியாவில் 200 நாட்களும், வெளிநாடான இலங்கையில் 287 நாட்களும் ஓடி மெகாமகாஹிட். இப்படி நம் நாட்டிலும், அயல் நாட்டிலும் 200 நாட்களைக் கடந்த இரண்டாவது படம் "வசந்த மாளிகை". முதல் படம், நடிகர் திலகத்தின் முதல் படம் "பராசக்தி(1952)". இந்தியாவில் 245 நாட்களும், இலங்கையில் 294 நாட்களும் ஓடியது. "வசந்த மாளிகை"யின் விண்ணை வீழ்த்திய வெற்றி, தெலுங்கு படத் தயாரிப்பாளர்களையெல்லாம் தமிழ்ப்படவுலகின் பக்கம் திருப்பியது. அவர்கள் நடிகர் திலகத்தை வைத்து படம் தயாரிக்கலானார்கள். 1931- ம் ஆண்டு தொடங்கிய தமிழ் சினிமாவிற்கு தற்பொழுது முத்துவிழா ஆண்டு [80வது ஆண்டு]. இந்த 80 ஆண்டுகளில், மறுவெளியீடுகளில், தென்னகமெங்கும் பட்டிதொட்டியெல்லாம் "வசந்த மாளிகை" ஓடியிருப்பதைப் போல் வேறு எந்தப்படமும் ஓடியதில்லை என அடித்துக் கூற முடியும். வெள்ளித்திரையில் மட்டுமா, சின்னத்திரையிலும் சரி, VCD-DVD விற்பனையிலும் சரி, மாளிகைக்கு நிகர் மாளிகையே. சிவாஜி அவர்களை நேரில் பார்க்காத கண்கள் இருக்கலாம். ஆனால் "வசந்த மாளிகை" திரைக்காவியத்தை திரையில் காணாத கண்கள் இருக்க முடியாது, இருக்கவே முடியாது.

    ஆடல்-பாடல் இல்லாத படத்தில் நடிப்பார், காலில் செருப்பு அணியாமல் படம் முழுமையும் நடிப்பார், ஜோடியை நாடுவோரிடையே ஜோடியில்லாமல் நடிப்பார், படத்தில் பாட்டிருக்க தான் மட்டும் பாடாமல் நடிப்பார், வெறும் வேட்டி-சட்டையில் மட்டுமே மைல்கல்லை(150)த் தாண்டுவார்,

    ஓரே பேண்ட்-ஷர்டிலும் படம் முழுவதும் வலம் வருவார், "நீதி(1972)"யை வாழ வைப்பதற்காக. நீதியைப் பொறுத்தவரை அதில் பங்கு கொண்ட எல்லோருமே நன்றாகச் செய்திருப்பார்கள். நடிகர் திலகத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ! சிறந்த கலைஞரான சந்திரபாபு போன்றோரெல்லாம் சிதிலமடைந்துவிடக்கூடாது என்கின்ற நல்லெண்ணத்தில் அவருக்கு தொடர்ந்து நல்ல ரோல் கொடுக்கச் செய்திருப்பார். "நீதி" - 100 நாள் பெருவெற்றிப்படம்.

    அமைதியையும், அதிரடியையும் ஓரே படத்தில் காண வேண்டுமா?! பாருங்கள் "எங்கள் தங்க ராஜா(1973)". பட்டாக்கத்தி பைரவன் அதிரடியின் உச்சம்! டாக்டர் ராஜா அமைதியின் உச்சம்! ஒரே நபர் இரு வேடங்களில் உச்சங்களைத் தொடும் போது மற்றவர்க்கு ஏது மிச்சம்?! "எங்கள் தங்க ராஜா" - 100 நாள் இமாலய வெற்றிப்படம். பாரிஸ்டர் மட்டும் சற்று தாமதித்திருந்தால், பைரவன் தனது பட்டாக்கத்தியை வெள்ளிவிழா வரை வீசியிருப்பார். ("பாரிஸ்டர் தாமதமாக வரணுமா, சொல்வது யார் பம்மலாரா, யோவ் பம்மலாரே, உடம்பு எப்படி இருக்கு?!" என பாரிஸ்டரின் மெய்க்காப்பளர் மோகனரங்கன் முணுமுணுப்பது காதில் விழுகிறது).

    அகம் அழும், புறம் சிரிக்கும் : "அவன் தான் மனிதன்(1975)" ரவிகுமார். படம் முழுமையும் அவரது முகத்தில் கம்பீரமும், மிடுக்கும் சிலிர்த்தோடும். அதனூடே ஒரு மெல்லிய சோகமும் இழைந்தோடும். நூலின் மேல் நடப்பது போன்ற கடினமான கதாபாத்திரம். 'ஃப்பூ' என அதை ஊதித் தள்ளியிருப்பார் நடிகர் திலகம். இப்படம் தங்களின் மூன்றாவது பிரிவில் தான் சேர வேண்டும். ஏனெனில், இன்றளவும் பற்பல ரசிகர்கள் அவரது 288 திரைப்படங்களில் மிகவும் பிடித்த படமாக மட்டுமல்ல, தங்களுக்கு பித்து பிடித்த படமாகவும் கூறுவது இந்தப்படத்தைத்தான். 100 நாள் சூப்பர்ஹிட் காவியம் என்பதில் மாற்றுக் கருத்தும் உண்டோ!

    'நன்றி' என்ற மூன்றெழுத்தின் உதாரண புருஷன் இரண்டெழுத்து "பாபு(1971)". இறைத்தன்மை கொண்ட ஒரு மனிதனின் பாத்திரத்தை, அந்த இரு தன்மைகளையும் ஒருங்கே கொண்ட அண்ணலைத் தவிர வேறு யாரால் தத்ரூபமாக சித்தரித்து காட்ட முடியும். BABU is purely a ONE-MAN SHOW. உடன் வந்த வண்ணங்களையெல்லாம் தவிடுபொடியாக்கிய 100 நாள் சுப்ரீம்ஹிட்.

    "எங்கிருந்தோ வந்தாள்" குறித்து இன்னொரு அபூர்வ தகவலையும் இங்கே பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன். கடந்த வருடம்(2010) ஜனவரி மாத இறுதியில் ஒரு இனிய மாலை வேளையில் சென்னை சாந்தி திரையரங்கிற்கு சென்றிருந்த போது, எதேச்சையாக சாந்தி திரையரங்க நிர்வாகி-மேலாளர் மாப்பிள்ளை திரு.வேணுகோபால் அவர்களை சந்திக்க நேர்ந்தது. எப்பொழுதும் நன்றாகப் பேசும் அவர், அன்றும் அதே போல் நன்றாக உரையாடி சில அரிய தகவல்களைக் கூறினார். அதில் ஒன்று "எங்கிருந்தோ வந்தாள்" படம் பற்றியது. அதை அவர் கூறியவாறே தருகிறேன்:

    "இங்கே 'சாந்தி'யில் "எங்கிருந்தோ வந்தாள்" ஓடிக் கொண்டிருந்த சமயம், ஹிந்தி நடிகர் சஞ்சீவ் குமார் சென்னை வந்திருந்தார். சஞ்சீவ் குமார் சிவாஜியின் மிகப் பெரிய ரசிகர். அது மட்டுமல்ல, சிவாஜியை தனது குருநாதராக வரித்துக் கொண்டவர். ஹிந்தி ஒரிஜினலான "கிலோனா(1970)"வின் ஹீரோ. அவர் சென்னை வந்த அன்று, 'சாந்தி'யில் "கிலோனா"வின் தமிழ்ப்பதிப்பான "எங்கிருந்தோ வந்தாள்" வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதை அறிந்து, மாலைக் காட்சி இங்கே படம் பார்க்க வந்தார். அவருடன் இன்னும் சிலரும் வந்திருந்தனர். அவரையும், அவருடன் வந்தவர்களையும் வரவேற்று அதன் பின்னர் இருக்கைகளுக்கு அழைத்து சென்று அமர வைத்தேன். நானும் அவர்களுடன் அமர்ந்து இன்னொரு முறை படம் பார்த்தேன். படம் ஆரம்பிக்கும் வரை நன்றாகப் பேசிக் கொண்டிருந்த சஞ்சீவ் குமார், படம் தொடங்கியதும் யாருடனும் எதுவும் பேசாமல், மிகுந்த ஆர்வத்துடன் கவனமாக படத்தைப் பார்த்து அதனூடே ஐக்கியமாகிக் கொண்டிருந்தார். இடைவேளை வந்தது. சஞ்சீவ் குமார் யாருடனும் எதுவும் பேசவில்லை. இறுக்கமாகக் காணப்பட்டார். இருக்கையை விட்டு வெளியே எழுந்து செல்லவும் இல்லை. இடைவேளை முடிந்து படம் தொடர்ந்தது. சில மணித்துளிகள் தான் ஆகியிருக்கும். சஞ்சீவ் குமார் இருக்கையை விட்டு எழுந்து என்னையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தார். அவருடன் வந்தவர்கள் மட்டும் இன்னும் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். என் கையைப் பற்றிக் கொண்ட சஞ்சீவ் குமார் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தார். படம் தொடங்கியதிலிருந்து அது வரை எதுவும் பேசாமலிருந்த அவர், என்னிடம் தனது மௌனத்தைக் கலைத்து ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். 'Saab, I feel very much guilty. Whatever Shivaji saab has done in this film, in that, I have not done even 10 percent. I did the original & I am the hero in it. But after watching this film, I certainly feel Shivaji saab is the real hero and this film is the original. Once again I feel really guilty & Sorry Sir, I am leaving' எனக் கூறி திரையரங்கை விட்டு புறப்பட்டுச் சென்று விட்டார்."
    Last edited by Gopal.s; 18th May 2014 at 08:32 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •